Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமையல் குறிப்புகள்
+3
சுறா
Nisha
ahmad78
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சமையல் குறிப்புகள்
எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சித் துண்டுகள் சேர்த்துக் கிளறினால் மணம் தூக்கலாக இருக்கும்.
முருங்கைப் பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். வாசனை ஊரையே கூட்டும்!
புதினா சட்னி மீந்து போய் விட்டதா? மோரில் போட்டுக் கரைத்துவிடவும். காரமாக, பிரமாதமான சுவையுடன், வாசனையாகவும் இருக்கும்.
பிளம் கேக் வாசனைக்கும் அதிலுள்ள உலர் பழங்கள், பருப்பு வகைகளின் சுவைக்கும் காரணம் அவற்றை ‘ரம்’மில் ஊற வைப்பதே! பிளம் கேக் செய்யும் போது, ரம் விரும்பாதவர்கள், அதற்கு பதிலாக ரம் எசென்ஸ் சேர்க்கலாம்.
வெண்ணெயை உருக்கும் போது சிறிது மிளகுத் தூளைச் சேர்த்தால் நெய் நல்ல வாசனையாக இருக்கும்.
கேசரி செய்யும் போது, தண்ணீர் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக அதே அளவுக்குப் பசும்பால் கலந்து செய்யலாம். பால் வாசனையோடு, புதுவித ருசியும் சுவையும் கிடைக்கும்.
காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும் போது, அரை டீஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்தால் மணமான ருசி! பொடியாக நறுக்கிய புதினாவைச் சேர்த்துப் பிசைந்து தட்டை தட்டினால் தனி மணம்... அசத்தல் ருசி!
ஒரு கரண்டி கோதுமை மாவை நெய்யில் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பிறகு தேவையான அளவு காய்ச்சிய பால், சர்க்கரை, வறுத்த முந்திரி சேர்த்தால் மணம் மிக்க கோதுமை பாயசம் தயார்.
சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காய்த் தூளுடன் சிறிது ஜாதிக்காய் பொடியை நெய்யில் பொரித்துக் கலக்கவும். சுவையும் மணமும் அள்ளும்! அதிக அளவில் பொங்கல் செய்யும் போது, மொத்த மாக நெய் விடக்கூடாது. முதலில் திட்டமாக நெய் சேர்த்து விட்டு, பரிமாறும் போது சூடாக்கி மேலே ஊற்ற வேண்டும். அப்போதுதான் நெய் பொங்கல் மணக்கும்!
அப்பளத்தின் மீது பெருங்காயத் தூளைத் தூவி, மைக்ரோவேவ் அவனில் வைத்து சுட்டு எடுத்தால் வாசனை தூக்கும்... எளிதாக ஜீரணமாகும்.
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3095
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சமையல் குறிப்புகள்
காய்கள் இல்லாத வத்தக்குழம்பு செய்யப் போகிறீர்களா? குழம்பை இறக்குவதற்கு முன் விருப்பமான வற்றலை எண்ணெயில் பொரித்துப் போடவும். வாசனையாக இருக்கும். வற்றலைப் போட்ட பின் குழம்பைக் கொதிக்க வைக்கக் கூடாது. எந்தக் காய்கறியில் பால் கூட்டு செய்வதாக இருந்தாலும் கூட்டு கொதித்து இறக்கும் போது, சிறிது தேங்காய்ப்பால் சேர்க்கலாம். சேர்த்து, லேசாக கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும். தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு, அதிக நேரம் கொதிக்கவிட்டால் பால் திரிந்து போய் சுவை மாறிவிடும்.
ரசத்தை இறக்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலைப்பொடி தூவி இறக்கினால் மணமாக இருக்கும்.
கீரை மசியலுக்கு புளி சேர்ப்பதற்கு பதிலாக பொடியாக அரிந்த மாங்காயைச் சேர்த்து, வேக வைத்து மசிக்கலாம்... அலாதி சுவை!
வெண்டைக்காய் குழம்புக்கு காயை வதக்கும் போது, சிறிது புளித்த மோரை சேர்த்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும் போது, அரைக் கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் அற்புத சுவை!
சாம்பாருக்கு பழைய புளியைப் பயன்படுத்தினால் குழம்பு கருப்பாகிவிடும். அரிசி களைந்த தண்ணீரில் பழைய புளியைக் கரைத்துப் பயன்படுத்தினால் கருப்பு நிறம் காணாமல் போய், புதுப் புளிக்கரைசல் போலவே ஆகிவிடும்.
அரிசி கழுவிய தண்ணீரில் கிழங்குகளைப் போட்டு வேக வைத்தால் சீக்கிரமே வெந்துவிடும்.
சில நேரங்களில் சிறிதளவு பொரியலுக்கு ஒரு முழுத் தேங்காயை உடைக்க வேண்டியிருக்கும். அந்த நேரங்களில் தேங்காய்க்கு பதிலாக சிறிது புழுங்கல் அரிசியை வறுத்து, பொடி செய்து பொரியலில் தூவலாம். தேங்காய் சேர்த்த சுவை கிடைக்கும்.
பிடி கருணையை வேக வைக்கும் போது, சில கொய்யா இலைகளையும் சேர்த்து வேக வைக்கவும். கொஞ்சமும் காரல் இருக்காது.
கூட்டு செய்யும் போது உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் சிறிது ரஸ்க்கை தூளாக்கிக் கலந்தால் சரியாகிவிடும்.
வெண்டைக்காய் சமைக்கும் போது ஒன்றோடு ஒன்று ஒட்டாம லிருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிது எலுமிச்சைச்சாறு தெளித்தால் போதும்.
வெந்தயக் குழம்பு கொதிக்கும் போது, இரண்டு உளுந்து அப்பளங்களை பொரித்து, நொறுக்கி சேர்க்கவும். குழம்பு வாசனையில் கமகமக்கும்.
பாகற்காய், வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு போன்ற காய்களை வறுக்கும் போது, சிறிது கார்ன்ஃப்ளோர் சேர்த்து வறுத்தால் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
துவரம் பருப்பை வேக வைக்கும் போது தேங்காய்த் துண்டு ஒன்றை நறுக்கி போடவும். பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
சாம்பார், குழம்பு, ரசம் இவற்றுக்கான மசாலா கலவையில் ஒரே ஒரு சின்ன வெங்காயத்தையும் சேர்த்து அரைத்துப் பாருங்கள்... மணமும் சுவையும் ஊரையேகூட்டும்!
வாழைப்பூவை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். அத்துடன் தேவையான அளவு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். மணமான வாழைப்பூ துவையல் தயார்.
சேனை, சேப்பங்கிழங்கு போன்ற வற்றை எண்ணெய்விட்டு வதக்கி பொரியல் செய்யும் போது, சிறிது கடலை மாவை தூவவும். பொரியல் மொறுமொறுப்பாக இருக்கும்.
http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2959&Cat=501

பனீர் சமைத்த பிறகு, கட் பண்ணிய பனீர் மீந்து விட்டதா? அதை வெந்நீரில் நனைத்து, ஃப்ரிட்ஜில் வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
4கேரட்டை நன்கு வேக வைத்து, வெண்ணெய் போல மசித்து, அதில் தேன் சேர்த்துக் கலக்கி பிரெட்டில் தடவி சாப்பிடலாம். புது ஜாம் ரெடி!
தோசைக்கு மாவு அரைக்கும் போது சிறிது சோயா பீன்ஸ் அல்லது சோயா பனீரையும் ஊற வைத்து அரைக்கவும். தோசை ருசியாக, மென்மையாக வரும். உடலுக்கும் நல்லது.
கோவைக்காய் பழுத்துப் போய்விட்டால் அதை வில்லைகளாக அரிந்து கொள்ளவும். அதை உப்பு கலந்த தயிரில் ஊற வைத்து, உலர வைத்து எடுத்து வைக்கவும். இதை வற்றல் குழம்பில் சேர்த்தால், குழம்பு ருசியாக இருக்கும்.
இரண்டு டம்ளர் கரும்புச் சாறில் வாழைப்பழத்தை மசித்துக் கலக்கவும். அதில் சிறிது உப்பு, 100 கிராம் வெல்லம் சேர்த்து, கெட்டியாகக் கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது நெய்யில் கடுகு, மிளகாய் வற்றல் தாளித்துக் கொட்டினால் கரும்புப் பச்சடி ரெடி.
காராமணி போன்ற பயறு வகைகளை வேக வைக்கும் போது, தண்ணீருடன் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால், சீக்கிரம் வெந்துவிடும்.
காய் சேர்க்காத தக்காளி அல்லது புளிக்குழம்பு செய்யும் போது சிறிது இஞ்சி, கசகசா, மராட்டி மொக்கு சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை குழம்பில் போட்டுக் கொதிக்க வைத்தால் வாசனையாக இருக்கும்.
ஃபில்டர் காபியோ, காபி மேக்கரில் போடும் காபியோ... தூளைப் போடும் போது ஒரு சிட்டிகை சுக்குத் தூள் சேர்த்துப் போடவும். சுவையும் மணமும் சூப்பரோ சூப்பர்.
பிடி சாதத்தை எடுத்து நன்றாக மசித்து, மாவில் கலந்து வடை சுட்டால் மிருதுவாக,எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
தோசைக்கல்லில் ஒரு சிறிய துண்டு பெருங்காயத்தை நறுக்கிப் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு வதக்கியெடுக்கவும். பிறகு தோசை வார்த்தால், தோசை சுலபமாக வார்க்க வரும்... மணமாகவும் இருக்கும்.
கூட்டுக்கோ, குழம்பு வகைகளுக்கோ தேங்காய் அரைக்கும்போது, 1/2 டீஸ்பூன் கசகசாவையும் 8 முந்திரிப் பருப்புகளையும் சேர்த்து அரைக்கவும். சுவை அள்ளும்.
உருளைக்கிழங்கை அரை வேக்காடாக வேக வைத்து, நன்கு வடித்தெடுக்கவும். பிறகு ரோஸ்ட் செய்தால் பாதியளவு எண்ணெய் கூட செலவாகாது. கட்லெட் செய்யும் போது உருளைக்கிழங்குக்கு பதிலாக சேனைக்கிழங்கு அல்லது பிடிகருணையை வேக வைத்து, பிசைந்து செய்யலாம். புது ருசி!
பச்சைக் காய்கறிகள் போட்டு சாலட் செய்யும் போது, அதில் இரண்டு டீஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றிக் கலக்கவும். கூடுதல் சுவை!
வெல்லம் சேர்த்து செய்யும் வேப்பம்பூ பச்சடியை இறக்கிய பின், 2 டீஸ்பூன் தேன் சேர்த்தால் அதீத ருசி.
வெள்ளரிக்காயைத் துருவி, கோதுமை மாவுடன் உப்புச் சேர்த்து, தண்ணீர் விடாமல் சிறிது நல்லெண்ணெய் மட்டும் விட்டு, கொஞ்சம் சீரகமும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்யலாம். அருமையாக இருக்கும்.
http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=3034&Cat=501

தோசைக்கல்லில் தோசை கிளம்பா விட்டால் உப்பை போட்டு உப்பு பிரவுன் ஆகும் வரை வறுத்து கொட்டி விட்டு துடைத்து மாவை வார்த்தால் தோசையாய் ஜம்மென்று கிளம்புவாராம் சார்.
குறிப்புக்கள் அத்தனையும் பயனுள்ளதே. ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தும் பெரிய எழுத்தில் வருவது ஏன் சார்?
அப்புறம் சுக நலன் விசாரித்தும் பல நாள் ஆனதே? என்னாச்சுது? எப்படி இருக்கிங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
தோசைக்கல் பிரச்சனை எங்க வீட்டிலும் உள்ளது. நன்றி அக்கா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சமையல் குறிப்புகள்
தோசை கல்லில் சப்பாத்தி சுட்டால்,அல்லது வேறெதும் பாவனைக்கு பாவித்தால் தோசை கிளம்பாது. அதனால் நான் தூள் உப்பை நாலு கரண்டி போட்டு நல்லா வறுத்து வீசிட்டு தோசை, அப்பம் ஊத்துவேன்.சூப்பராக தானாய் கிளம்பி வரும்.
வீட்டில் செய்து பார்த்திட்டு சொல்லுங்க சார்.
வீட்டில் செய்து பார்த்திட்டு சொல்லுங்க சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
தோசை உப்பாய் இருக்காதா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சமையல் குறிப்புகள்
ஹேய் லூசாப்பா நீங்க..
அந்த உப்பை வீச சொல்லி இருக்கேன்ல.. வீசி விட்டு தோசைக்கல்லை நல்லா கழுவணும் அல்லது துடைத்து எண்ணெய் தடவினால் சரி.
அந்த உப்பை வீச சொல்லி இருக்கேன்ல.. வீசி விட்டு தோசைக்கல்லை நல்லா கழுவணும் அல்லது துடைத்து எண்ணெய் தடவினால் சரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
சமைக்கும்போது இப்படி டென்சன் ஆனா நாங்க எப்படி சாப்பிடறது பயந்து பயந்து வருது... ...:)Nisha wrote:ஹேய் லூசாப்பா நீங்க..
அந்த உப்பை வீச சொல்லி இருக்கேன்ல.. வீசி விட்டு தோசைக்கல்லை நல்லா கழுவணும் அல்லது துடைத்து எண்ணெய் தடவினால் சரி.
Re: சமையல் குறிப்புகள்
நிஷா, அஹ்மத் இருவருமே அசத்தலான குறிப்புகள் கொடுத்திருக்கீங்க...என்ன காலை நேரத்துல பார்த்திருக்கவேண்டாமோனு இருக்கு. ஆமா இதையெல்லாம் சாப்பிட மனம் சொல்லுதே... :)
Re: சமையல் குறிப்புகள்
காயத்ரி வைத்தியநாதன் wrote:Nisha wrote:ஹேய் லூசாப்பா நீங்க..
அந்த உப்பை வீச சொல்லி இருக்கேன்ல.. வீசி விட்டு தோசைக்கல்லை நல்லா கழுவணும் அல்லது துடைத்து எண்ணெய் தடவினால் சரி.
சமைக்கும்போது இப்படி டென்சன் ஆனா நாங்க எப்படி சாப்பிடறது பயந்து பயந்து வருது... ...:)
நான் இந்த குறிப்பு கொடுக்கும் போது சமைச்சு சாப்பிட்டு சமிபாடடைந்தும் போனதே! அதனால் நோ டென்சன்! சமையல் நேரம் யாராவது என்னை டென்சன் ஆக்கினால் அடுப்பை அணைத்து விட்டு அட அடுப்பை மட்டும் தான் அணைப்பேன்பா.. போய் புக் படிக்க ஆரம்பிச்சிருவேன்ல.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
அப்ப அன்னிக்கு சாப்பாடு கட்...? :)Nisha wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:Nisha wrote:ஹேய் லூசாப்பா நீங்க..
அந்த உப்பை வீச சொல்லி இருக்கேன்ல.. வீசி விட்டு தோசைக்கல்லை நல்லா கழுவணும் அல்லது துடைத்து எண்ணெய் தடவினால் சரி.
சமைக்கும்போது இப்படி டென்சன் ஆனா நாங்க எப்படி சாப்பிடறது பயந்து பயந்து வருது... ...:)
நான் இந்த குறிப்பு கொடுக்கும் போது சமைச்சு சாப்பிட்டு சமிபாடடைந்தும் போனதே! அதனால் நோ டென்சன்! சமையல் நேரம் யாராவது என்னை டென்சன் ஆக்கினால் அடுப்பை அணைத்து விட்டு அட அடுப்பை மட்டும் தான் அணைப்பேன்பா.. போய் புக் படிக்க ஆரம்பிச்சிருவேன்ல.
Re: சமையல் குறிப்புகள்
காயத்ரி வைத்தியநாதன் wrote:அப்ப அன்னிக்கு சாப்பாடு கட்...? :)Nisha wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:Nisha wrote:ஹேய் லூசாப்பா நீங்க..
அந்த உப்பை வீச சொல்லி இருக்கேன்ல.. வீசி விட்டு தோசைக்கல்லை நல்லா கழுவணும் அல்லது துடைத்து எண்ணெய் தடவினால் சரி.
சமைக்கும்போது இப்படி டென்சன் ஆனா நாங்க எப்படி சாப்பிடறது பயந்து பயந்து வருது... ...:)
நான் இந்த குறிப்பு கொடுக்கும் போது சமைச்சு சாப்பிட்டு சமிபாடடைந்தும் போனதே! அதனால் நோ டென்சன்! சமையல் நேரம் யாராவது என்னை டென்சன் ஆக்கினால் அடுப்பை அணைத்து விட்டு அட அடுப்பை மட்டும் தான் அணைப்பேன்பா.. போய் புக் படிக்க ஆரம்பிச்சிருவேன்ல.
அன்னி இல்ல அண்ணன் தான் பாவம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சமையல் குறிப்புகள்
இல்லையே!
வேலை செய்யும் பையனோ என் பசங்களோ ஐஸ் வைச்சு பசிக்குது வந்து சமையுங்க என இழுத்திட்டு போய் கிச்சனில் விட்டு விட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க..
நான் தான் சமைக்கணும்பா!
நான் டென்சனாவது அதிகமாக என் ஆத்துக்காரரால் தான் என்பதால் அவர் சமையல் முடிச்சு சாப்பிடும் வரை கம்முன்னு இருந்துட்டு அப்புறம் சமாளிக்க ஆரம்பிப்பார். இடையில் வந்து சமாளிபிகேஷன் ஆரம்பித்தால் மீண்டும் டென்சன் எகிறும் என தெரியுமே..!
வேலை செய்யும் பையனோ என் பசங்களோ ஐஸ் வைச்சு பசிக்குது வந்து சமையுங்க என இழுத்திட்டு போய் கிச்சனில் விட்டு விட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க..
நான் தான் சமைக்கணும்பா!
நான் டென்சனாவது அதிகமாக என் ஆத்துக்காரரால் தான் என்பதால் அவர் சமையல் முடிச்சு சாப்பிடும் வரை கம்முன்னு இருந்துட்டு அப்புறம் சமாளிக்க ஆரம்பிப்பார். இடையில் வந்து சமாளிபிகேஷன் ஆரம்பித்தால் மீண்டும் டென்சன் எகிறும் என தெரியுமே..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
சுறா wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:அப்ப அன்னிக்கு சாப்பாடு கட்...? :)Nisha wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:Nisha wrote:ஹேய் லூசாப்பா நீங்க..
அந்த உப்பை வீச சொல்லி இருக்கேன்ல.. வீசி விட்டு தோசைக்கல்லை நல்லா கழுவணும் அல்லது துடைத்து எண்ணெய் தடவினால் சரி.
சமைக்கும்போது இப்படி டென்சன் ஆனா நாங்க எப்படி சாப்பிடறது பயந்து பயந்து வருது... ...:)
நான் இந்த குறிப்பு கொடுக்கும் போது சமைச்சு சாப்பிட்டு சமிபாடடைந்தும் போனதே! அதனால் நோ டென்சன்! சமையல் நேரம் யாராவது என்னை டென்சன் ஆக்கினால் அடுப்பை அணைத்து விட்டு அட அடுப்பை மட்டும் தான் அணைப்பேன்பா.. போய் புக் படிக்க ஆரம்பிச்சிருவேன்ல.
அன்னி இல்ல அண்ணன் தான் பாவம்
யாரு உங்க அண்ணனா பாவம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையல் குறிப்புகள்
ஹாய் பானு! நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
Nisha wrote:ஹாய் பானு! நலமா?
நலம் நிஷா நீங்க நலமா? உங்க கிட்ட பேசமாட்டேன் போங்க....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையல் குறிப்புகள்
ஏனுங்கோ மேடம்? என்னாச்சு மேடம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
Nisha wrote:
ஏனுங்கோ மேடம்? என்னாச்சு மேடம்?
ரெண்டு மூனு நாளா உங்க காணல.... எங்க போனிங்க?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையல் குறிப்புகள்
பானுஷபானா wrote:Nisha wrote:
ஏனுங்கோ மேடம்? என்னாச்சு மேடம்?
ரெண்டு மூனு நாளா உங்க காணல.... எங்க போனிங்க?
என்னது?
என்னை காணல்லையா?
இதை கேட்பார் பார்ப்பார் யாருமே இல்லையா?
எந்தூரு நியாயம் என்கின்றேன்?
என்னையா காணல்லை?
எலேய் என் தும்பி இருந்தால் என்னை யாராச்சும் இப்பூடி கேட்டியளோ? கேட்க விட்டிருப்பாரோ?
ஹாசிம்,சுறா, முஹைதீன், சம்ஸ், குமார், காயத்ரி அல்லாரும் அவங்கவங்க பொக்கை வாயத்திறந்து ஒரு வார்த்தை என்னன்னு கேளுங்கப்பூ!
மீ பாவம்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
உங்களையாவது கேட்க ஆளிருக்கே.
நான் வராமயிருந்தா கேட்கவா செய்றாங்க.
நான் வராமயிருந்தா கேட்கவா செய்றாங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சமையல் குறிப்புகள்
நான் இருக்கும்போது உங்களை காணல...முஹைதீன் தான் கருமமே கண்ணா பதிவு போட்டுகிட்டுருந்தார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையல் குறிப்புகள்
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:
ஏனுங்கோ மேடம்? என்னாச்சு மேடம்?
ரெண்டு மூனு நாளா உங்க காணல.... எங்க போனிங்க?
ஹாசிம்,சுறா, முஹைதீன், சம்ஸ், குமார், காயத்ரி அல்லாரும் அவங்கவங்க பொக்கை வாயத்திறந்து ஒரு வார்த்தை என்னன்னு கேளுங்கப்பூ!
மீ பாவம்..
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சமையல் குறிப்புகள்
ahmad78 wrote:உங்களையாவது கேட்க ஆளிருக்கே.
நான் வராமயிருந்தா கேட்கவா செய்றாங்க.
எனக்காக கேளுங்க என்றால்-- புதிதாய் கொழுத்துறிங்களா சார்?
உங்க எல்லோருக்கும் கொழுப்பு கூடிபோச்சிது. வெட்டி வெட்டி எடுக்கணும்.
எல்லோரும் இருக்கிங்க.. ஆனால் நிஷா வந்தால் தான் கலகலப்பா பதிவு போடுறிங்க.. இல்லாட்டில் கம்முன்னு காப்பி பேஸ்ட் செய்திட்டு ஏதோ கடமையே என போயிட்டிருக்கிங்க.. நான் எல்லார் மேலும் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.-
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சில குறிப்புகள் - சமையல்
» சமையல் குறிப்புகள்
» சமையல் குறிப்புகள் – மகளிர்மணி
» ஈ மெயிலில் சமையல் குறிப்புகள்
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
» சமையல் குறிப்புகள்
» சமையல் குறிப்புகள் – மகளிர்மணி
» ஈ மெயிலில் சமையல் குறிப்புகள்
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum