Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமையல் குறிப்புகள்
+3
சுறா
Nisha
ahmad78
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சமையல் குறிப்புகள்
First topic message reminder :
எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சித் துண்டுகள் சேர்த்துக் கிளறினால் மணம் தூக்கலாக இருக்கும்.
முருங்கைப் பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். வாசனை ஊரையே கூட்டும்!
புதினா சட்னி மீந்து போய் விட்டதா? மோரில் போட்டுக் கரைத்துவிடவும். காரமாக, பிரமாதமான சுவையுடன், வாசனையாகவும் இருக்கும்.
பிளம் கேக் வாசனைக்கும் அதிலுள்ள உலர் பழங்கள், பருப்பு வகைகளின் சுவைக்கும் காரணம் அவற்றை ‘ரம்’மில் ஊற வைப்பதே! பிளம் கேக் செய்யும் போது, ரம் விரும்பாதவர்கள், அதற்கு பதிலாக ரம் எசென்ஸ் சேர்க்கலாம்.
வெண்ணெயை உருக்கும் போது சிறிது மிளகுத் தூளைச் சேர்த்தால் நெய் நல்ல வாசனையாக இருக்கும்.
கேசரி செய்யும் போது, தண்ணீர் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக அதே அளவுக்குப் பசும்பால் கலந்து செய்யலாம். பால் வாசனையோடு, புதுவித ருசியும் சுவையும் கிடைக்கும்.
காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும் போது, அரை டீஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்தால் மணமான ருசி! பொடியாக நறுக்கிய புதினாவைச் சேர்த்துப் பிசைந்து தட்டை தட்டினால் தனி மணம்... அசத்தல் ருசி!
ஒரு கரண்டி கோதுமை மாவை நெய்யில் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பிறகு தேவையான அளவு காய்ச்சிய பால், சர்க்கரை, வறுத்த முந்திரி சேர்த்தால் மணம் மிக்க கோதுமை பாயசம் தயார்.
சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காய்த் தூளுடன் சிறிது ஜாதிக்காய் பொடியை நெய்யில் பொரித்துக் கலக்கவும். சுவையும் மணமும் அள்ளும்! அதிக அளவில் பொங்கல் செய்யும் போது, மொத்த மாக நெய் விடக்கூடாது. முதலில் திட்டமாக நெய் சேர்த்து விட்டு, பரிமாறும் போது சூடாக்கி மேலே ஊற்ற வேண்டும். அப்போதுதான் நெய் பொங்கல் மணக்கும்!
அப்பளத்தின் மீது பெருங்காயத் தூளைத் தூவி, மைக்ரோவேவ் அவனில் வைத்து சுட்டு எடுத்தால் வாசனை தூக்கும்... எளிதாக ஜீரணமாகும்.
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3095

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சமையல் குறிப்புகள்
ahmad78 wrote:உங்களையாவது கேட்க ஆளிருக்கே.
நான் வராமயிருந்தா கேட்கவா செய்றாங்க.
நீங்க இல்லனா கேக்கதான் செய்வோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையல் குறிப்புகள்
பானுஷபானா wrote:நான் இருக்கும்போது உங்களை காணல...முஹைதீன் தான் கருமமே கண்ணா பதிவு போட்டுகிட்டுருந்தார்.
ஞாயிறும் திங்களும் வீட்டில் உட்கார்ந்து ஜாலியா தூங்கிட்டு வந்து கேட்கிற கேள்வியை பாருங்களேன்.
நாங்க எங்கேயும் போகல்லையாக்கும். இங்கே தான் சுத்திக்கிட்டிருந்தோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
அப்படியில்ல.
வேலை வந்ததின்னா அப்படியே ஓடிருவேன்.
காப்பி பேஸ்ட்னாலும் பலனுள்ளதா இருக்கா? இல்லையா?
வேலை வந்ததின்னா அப்படியே ஓடிருவேன்.
காப்பி பேஸ்ட்னாலும் பலனுள்ளதா இருக்கா? இல்லையா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சமையல் குறிப்புகள்
சுறா wrote:
இது தான் சுறா தாத்தாவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
Nisha wrote:பானுஷபானா wrote:நான் இருக்கும்போது உங்களை காணல...முஹைதீன் தான் கருமமே கண்ணா பதிவு போட்டுகிட்டுருந்தார்.
ஞாயிறும் திங்களும் வீட்டில் உட்கார்ந்து ஜாலியா தூங்கிட்டு வந்து கேட்கிற கேள்வியை பாருங்களேன்.
நாங்க எங்கேயும் போகல்லையாக்கும். இங்கே தான் சுத்திக்கிட்டிருந்தோம்.
நான் இருக்கும்போது என குறிப்பிட்டு சொல்லி இருக்கேன் நிஷா...
வியாழன் வெள்ளி சனி உங்களைப் பார்க்கல....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையல் குறிப்புகள்
ahmad78 wrote:அப்படியில்ல.
வேலை வந்ததின்னா அப்படியே ஓடிருவேன்.
காப்பி பேஸ்ட்னாலும் பலனுள்ளதா இருக்கா? இல்லையா?
இருக்குத்தான். இல்லைன்னு சொல்லுவமா? உங்களுக்கு அதை தேடி படிக்க நேரம் இருக்குல்ல. எங்களுக்கு சில நேரம் அந்த நேரம் கூட இல்லையே!
ஒரே தடவையில் பதியணும் என இல்லாமல் இப்படி கொஞ்சம் கலகலப்பாய் பதிவுகள் செய்தால் நம்ம ஐக்கியம் அதிகமாகும்ல..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நான் இருக்கும்போது உங்களை காணல...முஹைதீன் தான் கருமமே கண்ணா பதிவு போட்டுகிட்டுருந்தார்.
ஞாயிறும் திங்களும் வீட்டில் உட்கார்ந்து ஜாலியா தூங்கிட்டு வந்து கேட்கிற கேள்வியை பாருங்களேன்.
நாங்க எங்கேயும் போகல்லையாக்கும். இங்கே தான் சுத்திக்கிட்டிருந்தோம்.
நான் இருக்கும்போது என குறிப்பிட்டு சொல்லி இருக்கேன் நிஷா...
வியாழன் வெள்ளி சனி உங்களைப் பார்க்கல....
நீங்க போன பின் வந்திருப்பேன். நான் தினம் தினம் வந்திட்டு தானே இருக்கேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
ahmad78 wrote:அப்படியில்ல.
வேலை வந்ததின்னா அப்படியே ஓடிருவேன்.
காப்பி பேஸ்ட்னாலும் பலனுள்ளதா இருக்கா? இல்லையா?
பயனுள்ளதும் பலனுள்ளதும் தான் ஆனா ஒருத்தர் இருந்தா அவுங்ககிட்ட பேசனும். சும்மா வந்து பதிவு போட்டு என்ன செய்ய
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையல் குறிப்புகள்
எனக்கும் ஆசைதான். முயற்சிக்கிறேன்.
நான் வரும்போது நீங்கள் இருப்பதில்லை.
6 மணியுடன் நான் ரூம் போய்டுவேன். அதற்கு பிறகு என்னால் வரஇயலாது.
வெள்ளி சனியும் நான் வருவது கஷ்டம்.
நான் வரும்போது நீங்கள் இருப்பதில்லை.
6 மணியுடன் நான் ரூம் போய்டுவேன். அதற்கு பிறகு என்னால் வரஇயலாது.
வெள்ளி சனியும் நான் வருவது கஷ்டம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சமையல் குறிப்புகள்
ahmad78 wrote:எனக்கும் ஆசைதான். முயற்சிக்கிறேன்.
நான் வரும்போது நீங்கள் இருப்பதில்லை.
6 மணியுடன் நான் ரூம் போய்டுவேன். அதற்கு பிறகு என்னால் வரஇயலாது.
வெள்ளி சனியும் நான் வருவது கஷ்டம்.
சரி அழாதிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையல் குறிப்புகள்
நீங்க சொன்னத கடைபிடிச்சிட்டார் நம்ம நண்பர்..பொக்க வாயத்திறந்து கேட்க சொன்னீங்க..கேட்டுட்டார்..:)Nisha wrote:சுறா wrote:
இது தான் சுறா தாத்தாவா?
Re: சமையல் குறிப்புகள்
ஏன்பா! என்னாச்சு? முன்னாடி வீட்டிலும் நெட் இருந்ததே! வெள்ளியும் வந்திங்க தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
இப்பவும் இருக்கு. இப்ப வெள்ளிகிழமை சுத்தபோய்ருவேன். அதனால வர இயலாது.
சனி காலைல தாமதா எழுந்திருப்பேன். அப்புறம் மதியத்திற்கு சமைச்சு சாப்பிட்டு முடிக்க 3 மணியாகிரும்.
சனி காலைல தாமதா எழுந்திருப்பேன். அப்புறம் மதியத்திற்கு சமைச்சு சாப்பிட்டு முடிக்க 3 மணியாகிரும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
காயத்ரி வைத்தியநாதன் wrote:நீங்க சொன்னத கடைபிடிச்சிட்டார் நம்ம நண்பர்..பொக்க வாயத்திறந்து கேட்க சொன்னீங்க..கேட்டுட்டார்..:)Nisha wrote:சுறா wrote:
இது தான் சுறா தாத்தாவா?
அவர் வாயை மட்டும் தானே திறந்தார். கேள்வியே கேட்கலலியே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
பொக்கை வாயத் திறந்து கேள்வி கேட்டா காத்து தான் வரும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையல் குறிப்புகள்
அப்படியா?
கேள்வியும் வரும்!
கேள்வியும் வரும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையல் குறிப்புகள்
சமையல் குறிப்புக்கள் அருமை...
ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றை வித்தியாசமாய் சேர்க்கும் போது அதன் மணமும் சுவையும் கூடும்... ஆஹா... அருமை.

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சமையல் குறிப்புகள்
போளிக்கு பூரணம் செய்யும் போது, அது நீர்த்துவிட்டால் அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றிக் கிளறவும். கெட்டியாகி விடும். ரசத்துக்கான பொருட்களை பொடி பண்ணும் போதே, சிறிது கடுகு சேர்த்துக் கொண்டால் தெளிந்த ரசம் கிடைக்கும். மிக்ஸியில் வெந்தயம், ஏலக்காய் போன்றவற்றை அரைத்தால், அவற்றின் வாசனை எளிதில் போகாது. அதன் பிறகு, மிக்ஸியில் ஒரு கைப்பிடி வேர்க்கடலை போட்டு அரைத்து எடுத்தால், வாசனை முற்றிலும் நீங்கிவிடும்.
எள் உருண்டை செய்வதற்கு எள்ளை தண்ணீரில் அலசினால், கையில் ஒட்டிக் கொண்டு விடும். பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளைப் போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால் எளிதாக அலசிவிடலாம். உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது, கிழங்கின் மீது சிறிது பயத்தம் பருப்பு மாவைத் தூவி, பின் பொரித்தெடுக்கவும். வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும்.
சர்க்கரையை அப்படியே காபி, டீ, ஜூஸ் போன்றவற்றில் இடும் போது கரைவதற்கு அதிக நேரம் பிடிக்கும். சில நேரங்களில் கரையாமல் இருந்து வீணாவதும் உண்டு. இதற்குப் பதிலாக சர்க்கரையை பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் நேரமும் மிச்சம்... சர்க்கரையும் வீணாகாது.
அவல் பொரியை அப்படியே பாகில் போடுவதற்கு பதில் பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடிக்கலாம். பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும். மிளகாய் பஜ்ஜி செய்யும் போது, மிளகாயை நீளவாக்கில் கீறவும். அதனுள் சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சைச்சாறு விடவும். பிறகு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்யவும். டேஸ்ட்டாக இருக்கும்... காரமும் இருக்காது.
பருப்பு வடைக்கு அரைக்கும் போது ஊற வைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள்ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கவும். மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டவும். வடை கரகரப்பாக நல்ல சுவையுடன் இருக்கும். சமோசாவைப் பொரிப்பதற்கு முன்பு ஒரு சிட்டிகை சோடா உப்பை எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரிய விடவும். பிறகு சமோசாவை பொரித்தெடுக்கவும். மொறுமொறுப்பு மாறாமல் இருக்கும்.
காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்க்ரீம் கலவையை ஊற்றி வைத்தால் ஐஸ்க்ரீம் சீக்கிரம் கெட்டியாகி விடும். தயிர் வடை அல்லது சாம்பார் வடை செய்ய உளுந்து ஊறப் போடப் போகிறீர்களா? உளுந்தின் கால் பங்கு அளவுக்கு மசூர்தால் சேர்த்துப் போடுங்கள். வடை மிகவும் மெதுவாக இருக்கும்.
பாகற்காய் பொரியல் செய்யும் போது சிறிது கேரட், வெங்காயம் துருவிப் போட்டு, நிறைய கறிவேப்பிலை சேர்த்தால் கசப்பே தெரியாது. கேரட்டில் சூப் செய்யும் போது, அதில் சிறிது சேமியாவை வறுத்துப் போடவும். சூப் திக்காக இருக்கும்... பார்க்கவும் அழகாக இருக்கும்.
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3184

ANAITHTHUM ARUMAI
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையல் குறிப்புகள்
பயனுள்ள ஆரோக்கிய குறிப்புகள்
* வேப்பிலைக் கொழுந்தை அரைத்துத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் பருத்தொல்லை நீங்கும்.
* காலையில் சத்துள்ள உணவும் இரவில் அரை வயிறு உணவும் சாப்பிட்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.
* வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமை, தலை நரைத்தல், தள்ளாமை ஆகியவை காலம் தாழ்த்தி வரும்.
* வெங்காயத்தை தினமும் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
* எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் சிறிதளவு வினிகர் கலந்து குளித்தால் தலைமுடி மிருதுவாகும்.
* காய்ச்சல் குணமாக மிளகைப் பொடி செய்து கஷாயமாகக் குடித்துவரலாம்.
* புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் பல் துலக்கும்போது அந்தப் பொடியுடன் உப்பு சேர்த்துத் துலக்கினால் பல் நோய்கள் வராது.
* வேப்பிலைக் கொழுந்தை அரைத்துத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் பருத்தொல்லை நீங்கும்.
* காலையில் சத்துள்ள உணவும் இரவில் அரை வயிறு உணவும் சாப்பிட்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.
* வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமை, தலை நரைத்தல், தள்ளாமை ஆகியவை காலம் தாழ்த்தி வரும்.
* வெங்காயத்தை தினமும் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
* எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் சிறிதளவு வினிகர் கலந்து குளித்தால் தலைமுடி மிருதுவாகும்.
* காய்ச்சல் குணமாக மிளகைப் பொடி செய்து கஷாயமாகக் குடித்துவரலாம்.
* புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் பல் துலக்கும்போது அந்தப் பொடியுடன் உப்பு சேர்த்துத் துலக்கினால் பல் நோய்கள் வராது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சமையல் குறிப்புகள்
சாறு பிழிவதற்கு முன் 15 நிமிடங்கள் எலுமிச்சைப்பழத்தை வெதுவெதுப்பான நீரில் போட்டு வைக்கவும். பிறகு எடுத்து பிழிந்தால் அதிக ஜூஸ் கிடைக்கும். வத்தக் குழம்பு வைக்கப் போகிறீர்களா? ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை மைய அரைத்து, தாளிப்பில் கொட்டவும். கொஞ்சம் வதக்கவும். பின் தேவையான அளவு புளித்தண்ணீர், மிளகாய் தூள் சேர்த்துக் குழம்பு வைக்கவும். சூப்பர் டேஸ்ட்!
முட்டையை வேக வைக்கும் போது மேல் ஓடு விரியாமல் இருக்க வேண்டுமா? தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு கலந்தால் விரியாது. அரிசிக் கொழுக்கட்டைக்கு மாவை ஆவியில் வேக வைத்து எடுத்த பிறகு, வெல்லத்தை சூடான தண்ணீரில் கரைத்து, வடிகட்டவும். அதே தண்ணீரில் மாவைப் போட்டு பிசைந்து தட்டி, உள்ளே பூரணம் வைத்து மூடி கொழுக்கட்டை செய்யவும். கலராக இருக்கும். புதுச் சுவையாக இருக்கும்.
வடாத்துக்கு பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கார விழுது அரைப்போம். இதை சிறிது கூடுதலாக அரைத்து வைத்துக் கொண்டால், மாங்காய் ஊறுகாய்க்கும் பயன்படுத்தலாம். மாங்காயை பொடிப் பொடியாக நறுக்கி, இந்த விழுதில் சிறிதை சேர்த்து நன்றாக பிசறவும். அதில் கடுகு தாளித்துச் சேர்த்தால் சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!
பெருங்காயம் தாளிக்கும் போது சில நேரங்களில் சரியாகப் பொரியாது. உள்ளுக்குள் பச்சையாக இருக்கும். ருசி குறையும். இதைத் தவிர்க்க, பெருங்காயக் கட்டியை மைக்ரோவேவ் அவனில் ஒரு கண்ணாடி தட்டில் இரண்டு நிமிடங்கள் வைத்திருக்கவும். மறுபடியும் திருப்பிவிட்டு ஒரு நிமிடம் வைக்கவும். முழுக்கட்டியும் சீராகப் பொரிந்திருக்கும். இதை மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும் போதெல்லாம் சமையலுக்கு உபயோகிக்கலாம்.
மீனில் சிறிதளவு கடுகை அரைத்துக் கலந்தால் மீன் உதிர்ந்து போகாது. கருவாட்டில் அதிக அளவு உப்பு இருந்தால் அதை கஞ்சி தண்ணீரில் அரை மணி நேரம் போட்டு வைக்கவும். உப்பு பெருமளவு குறைந்துவிடும். கிழங்குகளை வேக வைக்கும் போது, ஒரே அளவாக வெட்டி வேக வைக்கவும். அப்போதுதான் அனைத்தும் சீராக வேகும். இல்லையென்றால் ஒன்று வெந்தும் மற்றது வேகாமலும் இருக்கும். சீக்கிரம் வேக வேண்டும் என்பதற்காக அடுப்பின் தீயை அதிகரிப்பதும் சரியல்ல. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்த பிறகு கிழங்குகளை வேகப் போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
வாழைக்காயை வெளியில் வைத்தால் பழுத்துவிடும். ஃப்ரிட்ஜிலும் வைக்க முடியாது. என்ன செய்யலாம்? காயை தோல் சீவி, நறுக்கி உப்பு, காரம், மஞ்சள் தூள் சேர்த்து பிசறி ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். முருங்கைக்காய் அதிகமாக இருக்கிறதா? விரல் நீளத்துக்கு வெட்டி, ஒரு கவரில் போட்டு ஃப்ரீஸரில் வைத்துவிடவும். சமைக்கும் போது அப்படியே எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.
ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து முட்டைக்கோஸை சமைத்தால் மணமாக இருக்கும். கோஸின் தன்மை மாறாமலும் இருக்கும். வடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், ஒரு டீஸ்பூன் நெய் விடவும். மாவு இறுகி விடும்... தனிச்சுவையோடு இருக்கும். கேழ்வரகை ஊற வைத்து, அரைத்து, பால் எடுத்து கோதுமை அல்வா போலவே செய்யலாம். ருசியாக இருக்கும். மசால் வடை செய்யப் போகிறீர்களா? குக்கரில் சிறிது கருணைக்கிழங்கை வேக வைத்து, அதை மசால் வடை மாவுடன் சேர்த்து அரைக்கவும். வடை வித்தியாச சுவையில் இருக்கும்.

பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி. நானும் எப்போதாவது சமையல் எனும் முயற்சியில் இறங்குவதுண்டு. அவ்வாறு இறங்கும் போது மேற்படி தகவல்களை செயல்படுத்த முயற்சிக்கிறேன்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சமையல் குறிப்புகள்
எந்த ஊறுகாயாக இருந்தாலும் அதில் எண்ணெயைக் காய்ச்சி, ஆற வைத்து, பிறகு சேர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் நீண்ட நாட்களுக்கு ஊறுகாயில் பூசணம் பிடிக்காமல் இருக்கும். ஒரு பாட்டில் ஊறுகாய்க்கு 2 டீஸ்பூன் அளவு வினிகரை ஊற்றி வைத்தால், நீண்ட நாட்களுக்கு ஊறுகாய் கெடாமல் இருக்கும்... பூசணம் படிவதும் தடுக்கப்படும்.
மாங்காயை சீவும் போது தோலை எறிந்துவிட வேண்டாம். உளுந்து வடை மாவில் மாங்காய் தோலையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்யலாம். மாங்காய் மணம் கமழ, உளுந்து வடை வித்தியாச ருசியோடு இருக்கும். ஒரு பாட்டிலில் எண்ணெய் தடவி, அதில் சிறிது எலுமிச்சைச்சாறு, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் குலுக்கிக் கொள்ளவும். அதனுடன் தயாராக நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளைச் சேர்த்து சாலட் செய்யலாம். ருசி அருமையாக இருக்கும்.
தொக்கு வகைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். சப்பாத்தி மாவில் அதன் அளவுக்கு ஏற்றாற்போல, அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் பால் விட்டு பிசைந்தால் எண்ணெய்விட்டு சப்பாத்தி சுட வேண்டிய அவசியமே இருக்காது. சப்பாத்தியும் சாஃப்டாக இருக்கும்.
குலாப் ஜாமூனை வழக்கம் போல் உருட்டி, நெய் அல்லது எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும். ஜாமூன்களை சூடாக சர்க்கரைப் பொடியில் பிரட்டி எடுக்கவும். பிரமாதமான ‘ட்ரை குலாப் ஜாமூன்’ ரெடி! கேழ்வரகு, கம்பு, பாசிப் பயறு, பட்டாணி, தட்டைப் பயறு, கொள்ளு, வேர்க்கடலை, கோதுமை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும்.
அவற்றை முளைவிட வைத்து, நிழலில் உலர்த்தவும். உலர்ந்ததும் அவற்றை பொன்னிறமாக வறுக்கவும். அத்துடன் தேவைக்கேற்ப சுக்கு, ஏலக்காய் கலந்து, பிஸ்தா, முந்திரி, பாதாம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்து, இந்த சத்து மாவைக் கஞ்சியாகக் காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ருசியும் மணமும் அசத்தும். இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்குவதற்கு பதில், சீவல் கட்டரில் சீவி (துருவி) பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் போது சமையலில் மணமும் சுவையும் அலாதியாக இருக்கும்.
சப்பாத்தி மாவைப் பிசைந்து அதிக நேரம் ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சாஃப்டாக இருக்கும். பூரி மாவை பிசைந்தவுடன் இட வேண்டும். அப்போது தான் அதிகம் எண்ணெய் குடிக்காமல் இருக்கும். அனைத்துவிதமான பொங்கலுக்கும் அரிசி, பருப்பை வெறும் கடாயில் வறுத்துச் செய்தால், பொங்கல் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
நல்லெண்ணெய் வாங்கி வந்தவுடன், அதில் ஒரு துண்டு கருப்பட்டியைப் போட்டு வைத்துவிட்டால், நீண்ட நாட்கள் வரை ‘சிக்கு வாடை’ ஏற்படாது. செக்கில் இருந்து ஆட்டி எடுத்தது போல மணமாகவும் இருக்கும்.. கீரை மற்றும் வெஜிடபிள் கட்லெட் செய்யும் போது, சிறிதளவு சாதத்தை நன்கு மசித்துச் சேர்த்து, செய்யலாம்... மிருதுவாக இருக்கும்.
ஃப்ரைடு ரைஸோ, வெஜிடபிள் பிரியாணியோ செய்யும் போது, சிறிது வேக வைத்த சோளத்தையும் சேர்க்கலாம். பார்க்க முத்து முத்தாக அழகாக இருக்கும்... சுவை அமர்க்களப்படு

Similar topics
» சில குறிப்புகள் - சமையல்
» சமையல் குறிப்புகள்
» சமையல் குறிப்புகள் – மகளிர்மணி
» ஈ மெயிலில் சமையல் குறிப்புகள்
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
» சமையல் குறிப்புகள்
» சமையல் குறிப்புகள் – மகளிர்மணி
» ஈ மெயிலில் சமையல் குறிப்புகள்
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum