Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
4 posters
Page 1 of 1
கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
நாங்க படிக்கிற காலத்துல எங்க ஊர் வயல்களெல்லாம் பச்சைப் பசேல்லுன்னு வெளஞ்சி நிக்கும். எந்தப் பக்கம் திரும்பினாலும் பயிராகத்தான் இருக்கும். தை மாத ஆரம்பத்தில் அனைத்து வயல்களும் வெளஞ்சி நிக்கும். பாக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். இப்பல்லாம் விவசாயம் இல்லாம கருவை மண்டிக்கிடக்கிற வயல்களைப் பார்க்கும் போது ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு.
பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் விவசாயம் என்பது நாற்றங்காலில் நாற்றுப்பாவி அது வளர்ந்ததும் குறிப்பிட்ட நாட்களில் அதைப் பறித்து சிறு சிறு முடிகளாகக் கட்டி, நூறு நூறாக எண்ணி (அதை ஒரு குப்பம் என்போம்) ஒவ்வொரு வயலுக்கும் எத்தனை குப்பம் வேண்டுமோ அதை பிரித்து வைத்து மறுநாள் விடியற் காலையில் நாற்றங்காலில் தண்ணீருக்குள் இருக்கும் நாற்று முடிகளை எடுத்து வரப்பில் அடுக்கி தண்ணீர் வடிய வைத்து, அங்கிருந்து நடவேண்டிய வயலுக்கு தூக்கிச் சென்று நடுவதற்கு தோதாக நாற்று முடிகளை வயலெங்கும் வீசி வைப்போம்... அப்புறம் நடவு, கருநடை திரும்புதல், பொதி கட்டுதல், கதிர் என வளர்ந்து களம் வந்து சேரும்.
கல்லூரிக்கு வந்த சமயத்தில் நாற்றுப்பாவி நடவு செய்யும் வேலை அதிகம் இருப்பதோடு கண்மாய் நிறைந்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதால் மழை ஆரம்பித்ததும் வயலை உழுது அதில் விதையை வீசி முளைக்க வைத்து, பின்னர் களை எடுத்து, உரமிட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். இங்க விவசாயம் எப்படிப் பண்றதுங்கிறது கதையில்லை. இதை முன்னரே ஒரு கிராமத்து நினைவில் பகிர்ந்த ஞாபகம் இருக்கு. கட்டுரைத் தலைப்பு என்ன கோவில் மாடுகள்... வாங்க அதுக்குள்ள போவோம்.
எங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற தாழைக் கண்மாய் ஓரத்தில் இருக்கும் கோவில்தான் கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவில். இந்த அம்மனைப் பற்றியும் ஒரு கதை இருக்கு. அதை பின்னர் ஒரு பதிவில் பார்ப்போம். அந்தக் கோவிலில் நேர்த்திக் கடனாக விடப்படும் மாடுகள் அதிகம். அந்த மாடுகள் எல்லாம் பராமரிப்பின்றி தாங்களாகவே வாழ்வை நடத்தி வருகின்றன என்பதால் பெரும்பாலும் பகல் நேரத்தில் கோவிலுக்கு அருகிலோ அல்லது நாடகமேடையிலோ படுத்திருக்கும். அதுவும் விவசாய காலங்களில் மட்டுமே அவைகளை அப்படிப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் எங்கிருக்கின்றன எப்போ வருகின்றன என்பதெல்லாம் தெரிவதில்லை. இரவு உணவு வேட்டைக்குக் கிளம்பிவிடுவார்கள்.
இவர்களின் டார்க்கெட் என்னவென்றால் கதிர் பால் பிடித்து பொதி கட்டுகிற சமயத்தில் இருக்கும் வயல்கள்தான். வந்து இறங்கிவிட்டால் அவ்வளவுதான் அந்த வயல் சுத்தமாக அழிக்கப்படும். நாங்க பக்கத்து ஊருங்க... எங்க ஊருக்கு வரும்ன்னு சொல்லலாம்... பத்துக் கிலோ மீட்டருக்கும் அந்தப்பக்கம் கூட ஆட்டுக்காரனுங்க கெடை போடுற மாதிரி கிளம்பிப் போயி சாப்பிட்டு வருவார்கள்.
ஒரு முறை மாடுகளின் அழிவு ரொம்ப இருக்கு என்று அவற்றை பராமரிக்கச் சொல்லி கோவில் நிர்வாகத்திடம் கண்டதேவியைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பலனில்லை என்பதால் மாடுகளை விரட்டி வலை வைத்துப் பிடித்தார்கள். அதன் பின்னர் அந்த வயல்கள் எல்லாம் விளையவே இல்லை என்பது தனிக்கதை. இதை நாங்களும் பார்த்திருக்கிறோம்.
எங்க ஊர் வயல்களிலும் இவர்கள் இறங்காமல் இல்லை. நல்ல விளைஞ்சிருக்கு... இந்த வருசம் சாப்பாட்டுக்கு பஞ்சமில்லைன்னு நினைச்சிக்கிட்டு இருக்கும் போது ராவோட ராவா வந்து வேலையை முடிச்சிட்டுப் போயிருவாங்க. எங்க வயல் ஒரு கால் ஏக்கர் இருக்கும். வீடுகளுக்குப் பக்கத்துலதான் அந்த வயல்... நல்லா விளையிற வயல்... ரெண்டு வருசம் தொடர்ந்து ரெண்டு ரெண்டு முறை சாப்பிட்டுட்டுப் போயிருச்சுங்க... அப்புறம் வெறும் வைக்கோல்தான் மிச்சம். ஆனா அவங்ககிட்ட ஒரு நேர்மை உண்டு. இன்னைக்கி ராமசாமி வயல்லதான் சாப்பாடுன்னா கடந்து வரும் வயல்களில் வாய் வைக்க மாட்டார்கள். வரப்பில் வந்து வரப்பிலே சென்று விடுவார்கள். வயலில் இறங்க வேண்டிய சூழல் வந்தால் பயிரில் வாய் வைக்காமல் நடந்து சென்று விடுவார்கள்.
கோவில் மாடுகளின் தொந்தரவு அதிகம் இருந்ததால் பயிர் பால் பிடிக்கிற நேரத்துல ஆளாளுக்கு வயல்களின் ஓரத்தில் கொட்டகை போட்டு அங்கு படுத்திருப்பார்கள். எங்கப்பா எங்களின் புளியஞ்செய் ஓரத்தில் ஒரு கொட்டகைபோல் தயார் செய்து அதில் கட்டில் போட்டு வைத்திருப்பார். அதில்தான் இரவில் மாட்டுக்கு காவலாகப் படுத்து இருப்பார். அதற்கு இரண்டு செய் தாண்டித்தான் எங்க ஊர் சுடுகாடு. அவரு அங்க போயி படுக்கும் போது எங்களுக்குப் பயமா இருக்கும். ராத்திரி சாப்பிட்டுட்டு கைவிளக்கு, கையில் ஒரு மூங்கில் கம்பி, தலையில் இருக்கிக் கட்டிய மப்ளர், உடம்பில் போர்த்தியிருக்கும் கம்பளி என அவர் கிளம்பிவிடுவார்.
சித்தப்பா, ஐயா, மச்சான், மாமான்னு வீட்டுக்கு ஒரு ஆள் அவங்க அவங்க வயல்கிட்ட படுத்து இருப்பாங்க... இரவெல்லாம் திடீர் திடீர்ன்னு கையில் வைத்திருக்கும் தகரத்தை ஒருத்தர் தட்ட ஆரம்பித்தால் ஒவ்வொருத்தாராக தட்டி மொத்தமாகத் தட்டுவார்கள். இது இரவில் நாலைந்து தடவை நடக்கும். அதிலும் மீறி மாடு வரும்போது 'ஆய்... ஊய்... ' என கத்த, எல்லாப் பக்கமும் சத்தம் கேட்கும். அப்படியிருந்தும் சில நாட்களில் அதிகாலை நேரத்தில் வந்து தங்கள் வேலையைக் காண்பித்துச் சென்றுவிடுவார்கள்.
பின்னர் ஊரே சேர்ந்து எல்லா வயல்களையும் சேர்த்து சுற்றி அடைப்பதென முடிவு செய்து இரண்டு வருடம் அடைத்து விவசாயம் செய்தோம். அதிலும் முதலில் கன்றுக்குட்டியை தாவிச் செல்ல வைத்து அது உள்ளிருந்து 'அம்மே...'ன்னு கத்த ஒவ்வொருத்தரா தாவிக்குதிச்சி வர ஆரம்பிச்சாங்க... இந்தக் குரூப் ஒதுக்கிய ஒரு கோவில் காளை ஒன்று எங்கள் ஊருக்குள்ளேயே ரொம்ப நாள் திரிந்தது. ரொம்ப நல்லவரு... யாரையும் குத்தவோ விரட்டவோ மாட்டாரு... அவரு பாட்டுக்கு மாரியம்மன் கோவில் பக்கமா நிப்பாரு... படுப்பாரு... நைட்டுல வயலுக்குள்ள போயி கொஞ்சம் வேலையைக் காட்டிட்டு வருவாரு....
இப்படி கோவில் மாட்டுக்குப் பயந்து பயந்து விவசாயம் செய்த நிலமையில் வயலில் சென்று பார்க்க வயது இடங்கொடுக்காததால் பெரியவர்கள் எல்லாம் விவசாயம் செய்ய விரும்பவில்லை. இப்போ எங்க ஊரில் பெரும்பாலும் வயசானவங்க இருப்பதால் அவர்களால் இந்த மாடுகளுடன் போராட முடியவில்லை என்பதே உண்மை. இப்போ விவசாய நிலங்கள் எல்லாம் கருவை மண்டிக் கிடக்க, இப்போ ரிலையன்ஸ் மூலமாக எல்லா கருவைகளையும் வெட்டி சுத்தம் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள்.
அப்பா, ஊரில் இல்லாத இரவுகளில் நானும் தம்பியும் வயல் பார்க்க சென்ற கதை, களத்து மேட்டில் அப்பா சாப்பிட்டு வரும் வரை நானும் அவனும் அந்த இருட்டுக்குள் அமர்ந்திருந்த கதை எல்லாம் இருக்கு... நேரம் இருக்கும் போது பார்ப்போம்.
இன்னும் கோவில் மாடுகள் மற்ற ஊர்களில் இன்னும் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கோவில் நிர்வாகம் இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.
மீண்டும் வேறு ஒரு நினைப்போடு தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
ஊர் வயல், விதைப்பு, நாற்று, நடப்பு, கோயில் மாடு என மிக சுவாரஷ்யமான வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றீர்கள் என்பதை அழகாக எழுதி இருக்கின்றீர்கள் சே. குமார் .
அந்த இடங்களெல்லாம் இப்போதும் அப்படியே விளை நிலங்களாகவே இருக்கின்றதா?
இம்மாதிரி அனுபவப்பதிவுகளை கடந்து வந்த பாதை! பகுதியில் தொடராக பதியுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
கருத்துக்கு நன்றி சகோதரி.Nisha wrote:ஊர் வயல், விதைப்பு, நாற்று, நடப்பு, கோயில் மாடு என மிக சுவாரஷ்யமான வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றீர்கள் என்பதை அழகாக எழுதி இருக்கின்றீர்கள் சே. குமார் .
அந்த இடங்களெல்லாம் இப்போதும் அப்படியே விளை நிலங்களாகவே இருக்கின்றதா?
இம்மாதிரி அனுபவப்பதிவுகளை கடந்து வந்த பாதை! பகுதியில் தொடராக பதியுங்கள்.
இதை எங்கு பதிவிடுவது என்ற குழப்பத்தில்தான் இங்கிட்டேன்... இனி கடந்து வந்த பாதையில் பகிர்கிறேன்....
இன்னும் இருக்கின்றன விளையாத நிலங்களாக....
நான் அந்தத்திரியில்தான் சே.குமார் என்று இல்லாததால் நானா என்று கேட்டேன்...
தாங்கள் எப்பவும் போல் குமார் என்றே அழைக்கலாம்... அழைக்கும் போது சே.குமார் என்பது 'சே'ன்னு இருக்கு :)
நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
ஹாஹா!
சிரிச்சிட்டேன். நிஜமாக இந்த சே சேர்க்கும் போது எனக்கே இப்படித்தான்பா தோணிச்சு. சகோதரி என தூரமாய் நிற்காமல் நிஷா என்றே அழைக்கலாம் குமார்.
அல்லது எல்லோரையும் போல அக்கா எனவும் அழைக்கலாம்.
சிரிச்சிட்டேன். நிஜமாக இந்த சே சேர்க்கும் போது எனக்கே இப்படித்தான்பா தோணிச்சு. சகோதரி என தூரமாய் நிற்காமல் நிஷா என்றே அழைக்கலாம் குமார்.
அல்லது எல்லோரையும் போல அக்கா எனவும் அழைக்கலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
ஹா... ஹா...
நான் அக்கா என்றே அழைக்க எண்ணம்....
இனி அக்கா என்றே அழைக்கிறேன்...
சிலர் அக்கா என்று அழைத்த போது என்ன இவரு சின்னப்பிள்ளையாட்டம் என எதிர் கமெண்ட் போட்டதால் சிலரைத் தவிர மற்றவர்களை எல்லாமே இப்படி சகோதரி என்று சொல்லிவிடுவேன்... அக்கா, தங்கை பிரச்சினை வராதுல்ல...
வயதில் ஒரு நாள் மூத்தவங்களா இருந்தாலும் பெயர் சொல்லி அழைப்பதில்லை... ஆனா என்னைவிட இரண்டு வயது மூத்த எனது உடன்பிறப்பை அக்கா என்றே அழைத்ததில்லை... என் தம்பியும் அவரை பெயர் சொல்லித்தான் அழைப்பான்... அது வேறு.... இங்கு மரியாதை கொடுக்க நினைப்பேன்...
இனி தாங்களும் எனக்கு ஒரு அக்காதான்...

அக்கா...
சிறுகதைப் போட்டியில் கலந்துக்கலாமான்னு எண்ணம்.
எந்த மின்னஞ்சலில் அனுப்புவது?
கொஞ்சம் விவரம் கொடுங்களேன்... முயற்சித்துப் பார்க்கலாம்...

எங்க அம்மா வழி தாத்தா ஊரும் வயல் வரப்பு நிறைந்த ஊர் தான். அம்மப்பாவை நாங்கள் பார்த்ததில்லை. ஆனால் அங்கே அம்மாவின் அண்ணாக்கள் இருவர் இருப்பதால் விடுமுறைக்கு போயிருக்கோம்.
பஸ்ஸிலிருந்து இறங்கி மாட்டு வண்டியில் தான் ஊருக்கு போகணும். இலங்கையில் புகழ் பெற்ற கோணோஸ்வர கோயிலுக்கு உரிய காணியில் தான் மாமா வீடு. எங்கள் அம்மா வழி உறவினர் இந்துக்கள் என்பதோடு கோயிலில் நிர்வாக உரித்துடையவர்கள். வீட்டின் மூத்த தலைமுறைக்கு வரும் உரிமை.
மாமா வீட்டை சுத்தி நெல் வயல் தான்..தார் போட்ட பாதையே இல்லை. மண்ணை கொட்டி கிறவல் போட்டிருப்பாங்க.. மாட்டு வண்டி பயணம்தான் அங்கே.. .. ஓடும் மகாவலி கங்கை நதியில் குட்டையாய் தேங்கி இருக்கும் நதியோரமாய் தான் குளிப்போம். துணி துவைப்போம். கூடவே கொஞ்சம் தள்ளி எங்க கூட சேர்ந்து எருமைகளும் குளிக்கும். தலையை நீட்டிக்கொண்டு எருமைகள் வயலுக்குள்ளும் நீருக்குள்ளும் கிடக்கும் காட்சி பயம் தந்தாலும் சுவாரஷ்யமாய் இருக்கும்.
மாமா வீட்டில் சமையல் பகுதி நிலம் வாராவாரம் வெள்ளிக்கிழமை சாணம் போட்டு மெழுகி விடுவார்கள். சாப்பாடும் சிவப்பு குத்தரிசிசோறும் கீரை களுமாய் தானிருக்கும். அப்போ அதன் சுவாரஷ்யம் புரியல்ல. இப்ப அந்த மாதிரி வாழ்க்கைக்கு மனசு ஏங்குது.. ஆனால் வாய்ப்பில்லை.
என் வீட்டுக்காரர் வீட்டுக்கு போனாலும் நல்லா இருக்கும். சுத்திவர தென்னை, பப்பாளி, விளா, மா மரங்கள் நடுவே வீடு.. மோட்டார் போட்ட குளியல் என மனதுக்கே மகிழ்ச்சியாய் இருக்கும்.
ஆடு கோழி என வளர்ப்பதால் அதற்கேற்ப சூழலுமாய் இருக்கும்.
பணம் வந்து அனைத்தையும் பாழாக்கி விட்டது எனும் ஏக்கம் மனசடியில் தங்கி விட்டது குமார்.

Last edited by Nisha on Fri 30 Jan 2015 - 1:14; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
ஆஹா... அது அருமையான வாழ்க்கை அக்கா...
நானும் வண்டிப் பயணம் எல்லாம் ரொம்பச் சின்ன வயதில் மண் பாதையில்... அனுபவிச்சிருக்கேன்...
நீங்க எருமை குளிக்கிறது பயமா இருக்குன்னு சொல்லியிருக்கிங்க...
நான் எருமைகளோட நீந்தி அதுக மேல மொய்க்கிற அந்த சின்னச்சின்ன கொசுகளை தலையில வாங்கி அதை விரட்ட தண்ணிக்குள்ள மூழ்கி அந்தப்பக்கமா எழுந்து ..... அந்தக் காலம் எல்லாம் வரவே வராது.
கிராமத்து நினைவுகள்ல கூட எங்க நரை எருமைன்னு ஒண்ணு எழுதியிருப்பேன்...
அதுகளோட வாழ்ந்திருக்கேன்... மாடு மேச்சிருக்கேன்... ஆட்டை பிடித்து பாலை வாய்க்குள் பீச்சி விட்டு அப்படியே இளஞ்சூட்டோட குடிச்சிருக்கேன்....
அம்மா பால் பீச்சும் போது அருகே நின்று சூடாய எருமை. பசுவம் பால்களை வாங்கி குடித்திருக்கிறேன்...
இப்ப விஷாலுக்கு கிராமத்து வாழ்க்கை, ஆடு மாடு கோழி மேல ரொம்ப இஷ்டம்...
இப்ப தேவகோட்டை வீட்டில் கோழி வளர்க்கச் சொல்லி அடம்பிடித்து வளர்க்கிறான்.
அவந்தான் மாலை கோழிகளை கூட்டில் அடைப்பது... இரை இடுவது எல்லாம்....
அது எனக்கு சந்தோஷமே.,..

நேசமுடன் ஹாசிம் wrote:நினைவுகளை படித்து கருத்திடுகிறேன் அண்ணா
இங்கு பாருங்கள் அண்ணா தகவல்களை அறிந்து கொள்வீர்கள்
நன்றி ஹாசிம்...
இதில் பார்த்தேன்.. தனிமடல் என்ற இடத்தை கிளிக்கினால் போதுமான பாயிண்டுகள் இல்லை என வருகிறது... அதுதான் கேட்டேன்...
இன்னும் நாள் இருக்கிறதுதானே... இனிமேல்தான் எழுதணும்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
சே.குமார் wrote:ஹா... ஹா...
நான் அக்கா என்றே அழைக்க எண்ணம்....
இனி அக்கா என்றே அழைக்கிறேன்...
சிலர் அக்கா என்று அழைத்த போது என்ன இவரு சின்னப்பிள்ளையாட்டம் என எதிர் கமெண்ட் போட்டதால் சிலரைத் தவிர மற்றவர்களை எல்லாமே இப்படி சகோதரி என்று சொல்லிவிடுவேன்... அக்கா, தங்கை பிரச்சினை வராதுல்ல...
வயதில் ஒரு நாள் மூத்தவங்களா இருந்தாலும் பெயர் சொல்லி அழைப்பதில்லை... ஆனா என்னைவிட இரண்டு வயது மூத்த எனது உடன்பிறப்பை அக்கா என்றே அழைத்ததில்லை... என் தம்பியும் அவரை பெயர் சொல்லித்தான் அழைப்பான்... அது வேறு.... இங்கு மரியாதை கொடுக்க நினைப்பேன்...
இனி தாங்களும் எனக்கு ஒரு அக்காதான்...
நன்றி.
எனக்கு சொந்த தங்கைகள் நான்கு பேர். தம்பி ஒருவர் தான் என்பதால் ஆண் சகோதரர்கள் எனில் பாசம் சற்று அதிகம். இருந்தும் நான் அவர்களை 12 வயதில் விட்டு பிரிந்து விட்டதால் அவர்கள் எங்கோ தொலைவில் நிற்பது போன்ற உணர்வு தான் மனசில் இருக்கும்.
அதை விட வீட்டில் மூத்தவளாய் அனைத்திற்கும் பொறுப்பாய் இருந்து வளர்ந்து கடமை செய்ததால் அவர்களுக்கு அக்கா என்பதை விட அம்மா எனும் எண்ணம் என்னில் பெரிதாக சாதாரணமாய் கூட உரிமையாய் சண்டை போட மாட்டார்கள். என்ன சொன்னாலும்சரி சரி என சொல்லிட்டு போயிட்டிருப்பார்களா எனக்கே இந்த சகோதர பாசத்தில் சலிப்பு வந்திருச்சு..
அந்த நேரம் தான் இங்கே இந்த தம்பி மார் வந்தாங்க.. அக்கா அக்கா என உடன் பிறவாதோர் தரும் பாசமும், நேசமும் திட்டலும், குட்டலும் இங்கே கிடைப்பதால் எனக்கும் தம்பின்னால் ரெம்ப பிடிக்கும் குமார்.
ஆனாலும் அக்கா எனில் இன்னொரு அம்மா தான் இல்லையா.. நானும் அப்படித்தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
எனக்கு சொந்த தங்கைகள் நான்கு பேர். தம்பி ஒருவர் தான் என்பதால் ஆண் சகோதரர்கள் எனில் பாசம் சற்று அதிகம். இருந்தும் நான் அவர்களை 12 வயதில் விட்டு பிரிந்து விட்டதால் அவர்கள் எங்கோ தொலைவில் நிற்பது போன்ற உணர்வு தான் மனசில் இருக்கும்.
அதை விட வீட்டில் மூத்தவளாய் அனைத்திற்கும் பொறுப்பாய் இருந்து வளர்ந்து கடமை செய்ததால் அவர்களுக்கு அக்கா என்பதை விட அம்மா எனும் எண்ணம் என்னில் பெரிதாக சாதாரணமாய் கூட உரிமையாய் சண்டை போட மாட்டார்கள். என்ன சொன்னாலும்சரி சரி என சொல்லிட்டு போயிட்டிருப்பார்களா எனக்கே இந்த சகோதர பாசத்தில் சலிப்பு வந்திருச்சு..
அந்த நேரம் தான் இங்கே இந்த தம்பி மார் வந்தாங்க.. அக்கா அக்கா என உடன் பிறவாதோர் தரும் பாசமும், நேசமும் திட்டலும், குட்டலும் இங்கே கிடைப்பதால் எனக்கும் தம்பின்னால் ரெம்ப பிடிக்கும் குமார்.
ஆனாலும் அக்கா எனில் இன்னொரு அம்மா தான் இல்லையா.. நானும் அப்படித்தான்.///
உண்மைதான் அக்கா...
எங்கம்மாதான் சொல்லுவாங்க... உனக்கு எங்கிட்டுப் பார்த்தாலும் அக்கா, அண்ணன் தம்பி அம்மா அப்பான்னு நிறையப் பேரை பழகி வச்சிருக்கேன்னு....
அந்த உறவுகளிடம் இருக்கும் பாசம்... உடன் பிறந்தவர்களிடம் இருப்பதில்லைதானே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
சே.குமார் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நினைவுகளை படித்து கருத்திடுகிறேன் அண்ணா
இங்கு பாருங்கள் அண்ணா தகவல்களை அறிந்து கொள்வீர்கள்
நன்றி ஹாசிம்...
இதில் பார்த்தேன்.. தனிமடல் என்ற இடத்தை கிளிக்கினால் போதுமான பாயிண்டுகள் இல்லை என வருகிறது... அதுதான் கேட்டேன்...
இன்னும் நாள் இருக்கிறதுதானே... இனிமேல்தான் எழுதணும்...
சில பல பாதுகாப்புக்காக புதிய உறவுகளில் தனிமடல் தொடர்பு 100 பதிவு போட்ட பின் தான் என செட்டிங்க் குமார்.
இன்னும் கொஞ்சம் பதிவு போட்டால் நெருங்கிருவிங்க..
ஆராய்ச்சி மணி பகுதியில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்டால் பதில் தருவார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
நல்லது அக்கா...Nisha wrote:சே.குமார் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நினைவுகளை படித்து கருத்திடுகிறேன் அண்ணா
இங்கு பாருங்கள் அண்ணா தகவல்களை அறிந்து கொள்வீர்கள்
நன்றி ஹாசிம்...
இதில் பார்த்தேன்.. தனிமடல் என்ற இடத்தை கிளிக்கினால் போதுமான பாயிண்டுகள் இல்லை என வருகிறது... அதுதான் கேட்டேன்...
இன்னும் நாள் இருக்கிறதுதானே... இனிமேல்தான் எழுதணும்...
சில பல பாதுகாப்புக்காக புதிய உறவுகளில் தனிமடல் தொடர்பு 100 பதிவு போட்ட பின் தான் என செட்டிங்க் குமார்.
இன்னும் கொஞ்சம் பதிவு போட்டால் நெருங்கிருவிங்க..
ஆராய்ச்சி மணி பகுதியில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்டால் பதில் தருவார்கள்.
இன்னும் நாள் இருக்குல்ல...
சேனையில் எங்கெங்கு என்ன இருக்குன்னு படிக்கணும் போல... விடுமுறை நாட்களை உபயோகிச்சிக்கிறேன்....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
ம்ம் மெதுவாக படியுங்கள்.
கதைபோட்டியில் கலந்து கொள்ளுங்கள். தமிழ் குடில் அறக்கட்டளை சார்பில் நடந்த போட்டியில் ஜெயித்தமைக்கும் வாழ்த்துகள்.
கதைபோட்டியில் கலந்து கொள்ளுங்கள். தமிழ் குடில் அறக்கட்டளை சார்பில் நடந்த போட்டியில் ஜெயித்தமைக்கும் வாழ்த்துகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
உடன் இருப்பதனால் தான் உடன் பிறந்தோரிடம் பாசம் விடை பெற்று விட்டதோ என்னமோ?
ஒன்று போனால் பத்து கிடைக்கும் என்பது போல் உடன் பிறவாதோர் பாசம் உடன் தொடரும் போது அதை மதிக்க கற்று கொண்டால் போதும் தான்.
ஒன்று போனால் பத்து கிடைக்கும் என்பது போல் உடன் பிறவாதோர் பாசம் உடன் தொடரும் போது அதை மதிக்க கற்று கொண்டால் போதும் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
சே.குமார் wrote:ஆஹா... அது அருமையான வாழ்க்கை அக்கா...
நானும் வண்டிப் பயணம் எல்லாம் ரொம்பச் சின்ன வயதில் மண் பாதையில்... அனுபவிச்சிருக்கேன்...
நீங்க எருமை குளிக்கிறது பயமா இருக்குன்னு சொல்லியிருக்கிங்க...
நான் எருமைகளோட நீந்தி அதுக மேல மொய்க்கிற அந்த சின்னச்சின்ன கொசுகளை தலையில வாங்கி அதை விரட்ட தண்ணிக்குள்ள மூழ்கி அந்தப்பக்கமா எழுந்து ..... அந்தக் காலம் எல்லாம் வரவே வராது.
கிராமத்து நினைவுகள்ல கூட எங்க நரை எருமைன்னு ஒண்ணு எழுதியிருப்பேன்...
அதுகளோட வாழ்ந்திருக்கேன்... மாடு மேச்சிருக்கேன்... ஆட்டை பிடித்து பாலை வாய்க்குள் பீச்சி விட்டு அப்படியே இளஞ்சூட்டோட குடிச்சிருக்கேன்....
அம்மா பால் பீச்சும் போது அருகே நின்று சூடாய எருமை. பசுவம் பால்களை வாங்கி குடித்திருக்கிறேன்...
இப்ப விஷாலுக்கு கிராமத்து வாழ்க்கை, ஆடு மாடு கோழி மேல ரொம்ப இஷ்டம்...
இப்ப தேவகோட்டை வீட்டில் கோழி வளர்க்கச் சொல்லி அடம்பிடித்து வளர்க்கிறான்.
அவந்தான் மாலை கோழிகளை கூட்டில் அடைப்பது... இரை இடுவது எல்லாம்....
அது எனக்கு சந்தோஷமே.,..
எருமை மாடுகள் பார்க்கவே பெரியதாய் தலையை முன்னாடி நீட்டுக்கொண்டு கருப்பு கலரில் இருக்கும் அல்லவா? அதனால் தான் பயம். முட்டி விடுமோ என பயம்.
என் சின்ன வயதில் நாங்க குடியிருந்த வீட்டில் பட்டுப்போன தென்னை மரம் அதன் ஓலைகளை இழந்து மொட்டையாய் நின்றது. அதில் மரங்கொத்தி பறவை துளை போட அதை பொந்தாக்கி அதில் கிளி முட்டை இட்டு குஞ்சு பொரிக்க வளரும் வரை காத்திருந்து கிளிகுஞ்சை பிடித்து கூண்டில் அடைச்சு வளத்திருக்கின்றோம்.
ஆனால் கிளி வளர்ந்ததும்பறந்து போச்சு. மத்தப்படி நாய் வளர்த்தோம், கோழி வளர்த்தோம். ஆடு மாடெல்லாம் வளர்க்கல்லைப்பா!
விஷால் சின்ன வயதில் கோழி வளர்ப்பதில் ஈடு பாடு காட்டு வது போல் இங்கே என் மகளுக்கும் மகனுக்கும் கூட ஏதேனும் பிராணிகள் வளர்க்க விருப்பம் தான். நான் தான் இட வசதி, பராமரிக்க நேரமின்மை என சொல்லி மறுத்திட்டிருக்கேன். வீட்டில் தொட்டி வைத்து மீன் வளர்க்கின்றோம். அவ்வளவு தான்.
விஷால் வளர்க்கும் கோழி முட்டை போட ஆரம்பித்து விட்டதாமா? இந்த முட்டை கோழி விடயமாக என்னிடம் மிக சுவாரஷ்யமான அனுபவம் ஒன்றும் இருக்கு. அதை இன்னொரு நாளில் பதிகின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
நன்றி அக்கா.Nisha wrote:ம்ம் மெதுவாக படியுங்கள்.
கதைபோட்டியில் கலந்து கொள்ளுங்கள். தமிழ் குடில் அறக்கட்டளை சார்பில் நடந்த போட்டியில் ஜெயித்தமைக்கும் வாழ்த்துகள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
உண்மைதான் அக்கா.Nisha wrote:உடன் இருப்பதனால் தான் உடன் பிறந்தோரிடம் பாசம் விடை பெற்று விட்டதோ என்னமோ?
ஒன்று போனால் பத்து கிடைக்கும் என்பது போல் உடன் பிறவாதோர் பாசம் உடன் தொடரும் போது அதை மதிக்க கற்று கொண்டால் போதும் தான்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
////எருமை மாடுகள் பார்க்கவே பெரியதாய் தலையை முன்னாடி நீட்டுக்கொண்டு கருப்பு கலரில் இருக்கும் அல்லவா? அதனால் தான் பயம். முட்டி விடுமோ என பயம்.
என் சின்ன வயதில் நாங்க குடியிருந்த வீட்டில் பட்டுப்போன தென்னை மரம் அதன் ஓலைகளை இழந்து மொட்டையாய் நின்றது. அதில் மரங்கொத்தி பறவை துளை போட அதை பொந்தாக்கி அதில் கிளி முட்டை இட்டு குஞ்சு பொரிக்க வளரும் வரை காத்திருந்து கிளிகுஞ்சை பிடித்து கூண்டில் அடைச்சு வளத்திருக்கின்றோம்.
ஆனால் கிளி வளர்ந்ததும்பறந்து போச்சு. மத்தப்படி நாய் வளர்த்தோம், கோழி வளர்த்தோம். ஆடு மாடெல்லாம் வளர்க்கல்லைப்பா!
விஷால் சின்ன வயதில் கோழி வளர்ப்பதில் ஈடு பாடு காட்டு வது போல் இங்கே என் மகளுக்கும் மகனுக்கும் கூட ஏதேனும் பிராணிகள் வளர்க்க விருப்பம் தான். நான் தான் இட வசதி, பராமரிக்க நேரமின்மை என சொல்லி மறுத்திட்டிருக்கேன். வீட்டில் தொட்டி வைத்து மீன் வளர்க்கின்றோம். அவ்வளவு தான்.
விஷால் வளர்க்கும் கோழி முட்டை போட ஆரம்பித்து விட்டதாமா? இந்த முட்டை கோழி விடயமாக என்னிடம் மிக சுவாரஷ்யமான அனுபவம் ஒன்றும் இருக்கு. அதை இன்னொரு நாளில் பதிகின்றேன். ////
ம்... எருமை மாடுகள் பார்க்கத்தான் பயமா இருக்கும்... பழகிட்டா சாதுங்கதான்....
நாங்களும் கிளி, மைனாவெல்லாம் வளர்த்திருக்கிறோம்.
பொன்வண்டு டப்பா டப்பா பிடிச்சி வச்சி பள்ளிக்கொடத்துக்கு எல்லாம் கொண்டு போயிருக்கோம்...
விஷால் வளர்க்கும் கோழிகள் முட்டை இட்டு குஞ்சி பொறித்து விட்டன அக்கா.

ஹா... ஹா.....காயத்ரி வைத்தியநாதன் wrote:நேர்மையான கோயில் மாடுகள் அருமை...
பயிரெல்லாம் போச்சுக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
» கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
» கிராமத்து நினைவுகள் : நினைவில் மாடு
» மாடுகள் கூட்டிய மாநாடு...!
» இந்திய மக்கள் 90% மாடுகள்......கட்ஜு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum