Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
கிராமத்து வாழ்க்கையில் அனுபவித்த சந்தோஷங்களில் முக்கியமானவைகளில் மழை நாட்களும் ஒன்று. இன்று இந்த பாலைவனப் பூமியில் மழையைப் பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. ஊருக்குப் போன் பண்ணும் போது மழை பெய்கிறது என்றால் 'நல்ல மழையா..? தண்ணி நிறைந்து ஓடுதா...?' எனச் சந்தோஷமாகக் கேட்கச் சொல்கிறது. பள்ளியில் படிக்கும் காலத்தில் மழையில் நனைந்த நினைவுகளையும், அதன் பின்னான விளையாட்டுக்களையும் குறித்து கிராமத்து நினைவுகள் பகுதியில் மழைக்காலம் என்னும் தலைப்பில் முன்பே பகிர்ந்திருக்கிறேன். எனவே இப்போது மழைத் தண்ணி பற்றிப் பார்ப்போம்.
மழை பெய்ததும் மேட்டுப் பகுதியில் இருந்து தாழ்வான பகுதி நோக்கி தண்ணீர் ஓடும்... அது பார்க்க சின்ன ஆறு போல் காட்சியளிக்கும். பெருமழை பெய்து முடிந்து தண்ணீர் ஓடும்போது அதன் மீது விழும் சிறு தூறலின் துளிகள் தெறித்து எழுவது அவ்வளவு அழகாக இருக்கும். இதேதான் கண்மாய் தண்ணீர் மீது மழைத்துளி விழும்போதும்... அந்த அழகை எல்லாம் நேரில் ரசித்திருந்தால் மட்டுமே சிலாகித்துப் பேசமுடியும். மற்றபடி சினிமாவில் மழை பெய்வதைப் பார்த்தேன்... முகநூலில் மழை பெய்ததைப் பகிர்ந்திருந்தான் பாரு... செம... என்றெல்லாம் பேசத்தான் முடியுமே தவிர அதை அனுபவித்த அந்த சுகானுபவத்தை ஒருபோதும் உடம்பில் சில்லிட வைக்க முடியாது.
நகரங்களை விட கிராமங்களில்தான் மழைத்தண்ணீர் ஓடும் அழகை அதிகம் ரசிக்க முடியும். காரணம் என்னவென்றால் பத்துப் பதினைந்து வீடுகள் நெருக்கமாய் இருக்கும்... அவற்றிற்கு இடையே சந்துகள் இருக்கும்... பெய்யும் மழைத்தண்ணி வீடுகளின் ஓடுகளிலும் கூரைகளிலும் விழுந்து வெளியாகி சந்துக்களின் வழியாக தாழ்வான பகுதிகளான வயல்களை நோக்கியோ அல்லது ஊரை ஒட்டியிருக்கும் சிறு ஊரணிகளை நோக்கியோ பயணிக்கும்... சலசலவென ஓடிவரும் தண்ணீரில் குதிகால் நனைய எதிர்புறமாக ஓடுவது... குறுக்கே அணை கட்டி தண்ணீரை நிரப்பி அணையில் ஓட்டையிட்டு திறந்து விடுவது... காகிதக் கப்பல், கருவை , வேப்பமர இலைகளைப் பறித்து அதில் விடுவது... என எல்லாமுமே மழையில் நனைந்தபடியே நடக்கும். அப்படி அனுபவித்த அந்த இன்பம் அலாதியானது. இப்ப லேசா நனைந்தாலே சளி பிடிக்கும் என்கிறோம். ஒரு தும்மல் தும்மினாலே டாக்டரிடம் ஓடுகிறோம். அன்று தும்மியபடியே மழையில் ஆடிய நாட்கள் நிறைய உண்டு. ஏன் மழை விட்டதும் ஈர மணலில் கபடி விளையாடுவதும்... சண்டையிடுவதும் கூட நடக்கும்.
மழை ஓட்டு வீட்டின் மீது சடச்சடவென பெய்யும் போது அந்த வீட்டுக்குள் அமர்ந்து அந்த இசையைக் கேட்பது கூட ஒரு சுகம்தான். மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தவுடன் மழை நீர் ஓடுகளில் நெளிவான பாதையில் பயணித்து கீழே விழ ஆரம்பிக்கும். மழையின் வேகத்துக்கு ஏற்ப நீரும் ஓடுகளின் வழியே வழிந்து தரையைத் தொட்டு பயணிக்கும். அந்த மழை நீரை பாத்திரங்களில் பிடித்து வைத்து சமையலுக்கும் குடிக்கவும் பயன்படுத்துவார்கள். மழை விழ ஆரம்பித்ததும் பிடிக்க மாட்டார்கள். ஓட்டில் இருக்கும் அழுக்கெல்லாம் போகட்டும் என்று கொஞ்சம் நேரம் தண்ணீரை பிடிக்காமல் இருந்து பின்னர் பிடிப்பார்கள். அண்டா, குண்டா, அலுமினியப் பாத்திரங்கள், காசாணித் தவலைகள் என எல்லாவற்றிலும் நீரை நிரப்பி வைப்பார்கள்.
மழை நீரில் சமைத்தால் சாதம் பூப்போல இருப்பதுடன் மறுநாள் கஞ்சி குடிக்கும் போது அதில் இருக்கும் நீச்சத்தண்ணியும் (நீராகாரம்) மணமாக இருக்கும். கண்மாய்த் தண்ணீரில் சமைத்தாலும் இப்படித்தான் இருக்கும். கண்மாயில் தண்ணீர் குறைந்து தெளிவில்லாமல் கிடக்கும் நீரை மண்டித் தண்ணீர் என்போம். சமையலுக்காகவே அதைக் கொண்டு வந்து பானையில் ஊற்றி தேத்தாங்க் கொட்டையை வைத்து தண்ணீருக்குள் உரசி உரசி மண்டித் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றி சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.
மழை நாட்களைத் தொடர்ந்து வீட்டிற்கு யாராவது வந்தால் கூட மழைத்தண்ணி இருந்தா கொடுத்தா... பைப்புத்தண்ணி தாகம் நிக்கிது இல்லை என்பார்கள். கிராமங்களில் வீட்டுக்கு வீடு மணலைப் பரப்பி அதன் மீது மண்பானையில் தண்ணீர் நிரப்பி குடிக்கப் பயன்படுத்துவார்கள். அதில் மழைத் தண்ணீரை ஊற்றி வைத்தால் தொண்டைக்குள் இறங்கும் போது அப்பப்பா... என்ன... சில்லு... ஆஹா... செம்பு... செம்பா தண்ணி போய்க்கிட்டே இருக்கும். அதிலும் குறிப்பாக தண்ணீர் வாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெட்டி வேர் கொண்டு வந்து போட்டு வைப்பார்கள்.
மழைக் காலம் முடிந்தாலும் அண்டா, குண்டாக்களிலும் இருக்கும் தண்ணீரை மழைத்தண்ணி.. மழைத்தண்ணி என்று வைத்து வைத்துக் குடிப்பார்கள். அதுவும் ஓட்டில் இருந்து வழியும் இந்த மழை நீரைப் பிடிப்பதற்காகவே தகரம் வாங்கி அழகாக வளைத்து நாலைந்து ஓடுகளைச் சேர்த்து அடித்து வைத்திருப்பார்கள். அதாவது நாலைந்து ஓடுகள் வழியாக வழியும் தண்ணீரெல்லாம் அந்த தகரத்தின் வழியே வந்து மொத்தமாக குடத்தில் விழும். மேலே படத்தில் இருப்பது போல் மொத்தமாக தகரம் வளைத்து ஓரு ஓரத்தில் மட்டும் விழ வைப்பார்கள்.
எங்கள் வீட்டில் கூட ஆரம்பத்தில் ஓடுகளின் மூலம் விழும் தண்ணீரைப் பிடிக்க அம்மா, அக்காவெல்லாம் பரபரப்பாக இருப்பார்கள். நாங்கள் பாத்திரங்களை எடுத்துக் கொடுப்போம். நனைந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது கூட சுகம்தான் இல்லையா... அப்படியாவது மழையில் நனையலாமே என்ற நப்பாசைதான்... டேய் நனையாதேடா என அம்மா கத்திக் கொண்டு நின்றாலும் நாம நனையாம இருப்போமா என்ன... அப்போதுதான் எல்லா வேலையும் பாக்குறது. அப்படித்தான் இந்த தண்ணீர் பிடிக்கும் நிகழ்வும்.
கூரை வீடாக இருந்தால் அதில் தண்ணீர் பிடிக்க முடியாது. அவர்கள் எல்லாம் பக்கத்து வீடுகளில் குடம் கொடுத்துப் பிடித்துக் கொள்வார்கள். எங்கள் வீட்டில் கூட முன்னால் கிடந்த இடத்தில் ஒரு கிடுகு கொட்டகை போட்டபோது கிடுகு கொட்டகை மற்றும் ஓட்டு வீடு இணையும் இடத்தில் தகரம் அடைத்து தண்ணீர் உள்ளே விழாதவாறு வைத்துவிட்டோம். அத்தோடு மழை நீர் பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் மழைத்தண்ணி குடிக்காமல் இருக்க முடியுமா என்ன மழை பெய்ய ஆரம்பித்ததும் அருகே இருக்கும் பஞ்சம்மா வீட்டுக்கு குடங்களைக் கொண்டுக்கிட்டு ஓடுவோம். குடம் குடமாக பிடித்துத் தூக்கி வருவோம். சில நேரங்களில் பஞ்சம்மாவே பிடித்து நிறைத்து வைப்பார். மழை விட்டதும் போய் தூக்கி வருவோம். பெரும்பாலும் அக்கா தூக்கி வந்துவிடும். சில நேரங்களில் நானும் தம்பியும் உதவியாய்... மழைத்தண்ணி மீது அம்புட்டு ஆசை.
பள்ளியில் இருந்து வரும்போது செம்மண்ணில் நிறைந்து நிற்கும் மழைத்தண்ணியில் ஆட்டம் போட்டு வந்த காலம் எல்லாம் கனாக்காலம் போங்க. ம்... இப்பவும் மழையில நனைய ஆசைதான்... ஊரில் இருக்கும் வரை மழையில் நனைந்து கொண்டு வண்டியில் பயணம் செய்திருக்கிறேன். இங்க தினமும் வேர்வையில் நனைகிறேன்...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
மழைக்கால நினைவுகள் அசத்தல் குமார்!
நீங்கள் காட்டி இருக்கும் படம் போல மேல் முகடுகளில் நீர் தங்காமல் இருக்க கட்டி மழை நீர் தரையில் விழுவது போல் செய்திருப்பார்கள். ஷவர் குளியல் என்றாலே என்னவென அறியாத அக்காலத்தில் மழை பெய்யும் போது மொத்தமாக் மேலிருந்து அருவி போல் கொட்டும் போது அது தான் எமக்கு ஷவர்க்குளியல். மழையோடு சேர்ந்து குளிச்சிட்டு ஸ்கூலுக்கு புறப்படுவோம்.
ஓரிரு நாள் மழை தொடர்ந்து பெய்தால் கிணறுகள் நிறைந்து விடும். எங்கள் வீட்டு கிணறு ஆழம் அதிகம் என்பதால் அரை வாசிக்கு மேலே உயர்ந்தாலே எமக்கு குதூகலம் தான். ஆனால் அம்மம்மா வீட்டு கிணறு நிறைந்து துலா பாவிக்காமல் கையால் நீரை அள்ளி சேர்த்தி குளிக்கும் படி இருக்கும். இப்ப சுனாமிக்கு பின் கிணறெல்லாம் வற்றி நீரின் சுவை மாறி கிணறே மூடி விட்டார்களாம்.மோட்டார் போட்டு நிலத்தடி நீரை தொட்டியில் ஏத்துவதோடு... காப்ரேசன் பைப் நீரும் தான் இப்போதைய கதி! அக்காலத்தில் நீருக்கே பஞ்சமில்லை! இனிவரும் காலம் என்னாகுமோ?
அப்போதெல்லாம் தெருக்களில் கிறவல் கொட்டி பரப்பி இருப்பார்கள். அக்கிறவல்களுக்குடையில் ஒரு வகை கிழங்கு மழையை கண்டதும் முளைக்கும். அதை பிடுங்கி நெருப்பில் சுட்டு அல்லது அவித்து சாப்பிட்டால் சுப்பராக இருக்கும். எனக்கு அந்த கிழங்கும் அதன் இலைகளும் இப்போதும் நினைவில் இருக்கின்றது.
மழை எனில் இன்னொன்றும் நினைவுக்கு வரும்! கூரை வீடு வேய்ந்திருந்ததால் இரு வருடங்களுக்கு ஒரு முறை கூரை மாற்றணும். எப்பயும் ஒரு மாரிகாலம் எமக்கு வானம் பார்த்த அனுபவம் வீட்டுக்குள் இருந்தும் கிடைக்கும். மழை பெய்ய ஆரம்பித்ததும் வீடு ஒழுக ஆரம்பிக்கும் இடங்களில் சட்டி, பானை முட்டி என இருக்கும் பாத்திரங்களை கொண்டு வைத்து விட்டு பாத்திரம் வைக்காத இடம் இருந்தால் அதில் பாயை விரித்து தூங்கணும். ஆனால் இடம் இருக்காதே... பக்கத்து விட்டு நகுலேஸ் அன்ரி வீட்டு தாழ்வாரத்தில் போய் தூங்கிட்டு விட எழும்பி தலையனையும், போர்வையுமாய் கிளம்பிருவோம்.
செல்வி அன்ரி வீட்டில் தூங்கினால் விடிய வீட்ட போகும் போது அவ வீட்டு வாசலில் காய்ந்து பழுந்த்து உதிர்ந்து கிடைக்கும் நெல்லிக்காய்க்ளையும் பொறுக்கி மூட்டையாக கட்டி எடுத்துக்குவோம்.
அதிலும்.... வீடு தனியே சமைக்கும் சமையலறை தனியே என கட்டி இருந்ததால்... மழைக்காலத்தில் வீடு ஒழுகினால் சமயலறை ஒழுகாது. சமையல்றை என்பது ஓலையால் கட்டி வேய்ந்திருப்பது தான். வீடு ஒழுகினால் அம்மா சமையல் செய்யும் குடிலுக்குள் மண் போட்டு உயர்த்தி நான்கு பலகைகள் கொடுத்து கட்டில் போல் ஆக்கி விடுவா.. நாங்கள் ஆறு பிள்ளைகள் அதனுள் தூங்க முடியாது என்பதால் நானும் என் தங்கையும் பெரும்பாலும் அம்மம்மாவுடன் நகுலேஸ் அன்ரி வீட்டு தாழ்வாரத்தில் தான் தூக்கம். நகுலேஸ் அன்ரியில் தங்கை யமுனேஸ் அன்ரி தான் எனக்கு வீட்டுப்பாடங்கள் கணக்கு எல்லாம் சொல்லி தருவதால் பாடம் படிச்சிட்டு அங்கே தூங்குவோம்.
எக்காலத்திலும் மழை ரசிக்க வைக்கும் ஒன்றெனினும் முன்னர் மழையில் நனைந்தால் எதுவும் ஆவதில்லை.இப்போது சின்ன தூறலுக்கே தலையிடி தடிமன் என படுத்துது.
மழைத்தண்ணீர் குடித்ததாகவோ, சமைத்ததாகவோ நினைவில் இல்லை. ஆனால் கிணற்றில் ஊறி மேலே வரும் நீரையும் நேரடியாக குடிக்க விடாமல் வடிச்சு கொதிக்க வைச்சு ஆற வைத்து தான் அம்மா குடிக்க சொல்வா! காலையில் அது தான் முதல் வேலையாக செய்வா.. அதுக்கென தனியே தண்ணீர் பிடிச்சு கொதிக்க வைக்க பானை இருக்கும். நீர் வடிக்கவும் தனித்துணி இருக்கும். அதை பானையில் போட்டு மூடி விட்டு கிணற்று நீரை ஊற்றி வடி கட்டுவார்.
மழைக்காலத்தில் பெயர் பிரச்சனை காலில் வரும் சேற்றுப்புண் தான். விரல் இடுக்குகளில் புண்ணாகி ரெம்ப கஷ்டமாயிருக்கும். காயம் ஆற ரெம்ப நாள் எடுக்கும். ஆனாலும் மழையில் நனைவதும், மண்ணில் விளையாடுவதும் தடைப்படவே படாது.
மழைக்காலத்தில் மீன்கள் மலிவாக கிடைக்கும். மத்தப்படி காய்கறி விலை ஏறி விடும். அதனால் வீட்டோர வேலிகளில் கிடைக்கும் கீரை வகை மழைக்கு நல்லா பச்சைபசலென வளர்ந்து நிற்கும். கீரைகள், முருங்கைக்காய் என சமைத்து விட்டு.. மீனில் குழம்பு சொதி, பொரியல் என எல்லாமே மீனாக இருக்கும். ஆனாலும் சாப்பிடும் போது சலிக்கவோ அலுக்கவோ செய்யாது. இப்ப ஒரே சமையலை இரு நாள் சாப்பிட்டாலே அலுப்பாக இருக்கின்றது.
மழைக்காலத்தில் நவராத்திரி பூஜைகளும் ஆரம்பிக்கும் என்பதால் பவளமல்லி பூக்கள் மழையோடு நனைந்து உதிர்ந்து விழுந்திருக்கும் . அதை பொறுக்கி மாலையாக்கி ஸ்கூலுக்கு பூஜைக்கு கொண்டு போய் கொடுக்க காலை ஐந்துக்கே எழும்பி போய் பூ பொறுக்குவோம். லேட்டாகினால் வீட்டுக்கார அன்ரி பூவை குப்பைஎன கூட்டி அள்ளி கொட்டி விடுவா எனும் பயம்.
வீட்டு விறாந்தை,,, அதாவது தாழ்வாரத்தில் இருந்து விட்டு...வெளியே மழையால் வெள்ளம் போல் ஓடும் நீரை கையால் வாய்க்கால் போய் இழுத்து விட்டால் தாழ்வாரத்துக்குள்ளும் மழை நீர் ஓடும். அதில் காகிதகப்பல் செய்து அது கவிழாமல் எதுவரை ஓடும் என ரசிப்பதும். பள்ளிக்கூட நோட்டெல்லாம் கப்பலாகி நீரில் நனைவதும் உண்டு.
இக்காலகுழந்தைகள் இவைகளை ரசிக்கின்றார்களா என்பதே தெரியவில்லை. எனக்கு சில நேரம் தோன்றும் நாம் சிறுவர்களாக்வே என்றும் இருந்திருக்க கூடாதா? ஆறு பிள்ளைகள்... கஷ்டம் நஷ்டமெனினும் அனைத்தினையும் ஒன்றாய் அனுபவித்து பசி பட்டினி உணர்ந்தாலும் அந்த மகிழ்ச்சி இன்று பணம் கொட்டி நகை நட்டென சேர்ந்தபின்னும் கிடைப்பதில்லை.
சுவிஸிலிருக்கும் தங்கை இம்முறை தன் பெண்களுடன் சம்மர் விடுமுறைக்கு ஊருக்கு போனாள். பெரும்பாலும் கடந்த தடவைகளில் விடுமுறை என செல்வதெனில் அனைவரும் பேசி வைத்து செல்வோம். அனைவரின் பிள்ளைகள், விருந்தினர் என வீடு கலகலப்பாயிருக்கும். அலுப்பு தட்டாது. இம்முறை தனியே போய் பிள்ளைகள் இனி இலங்கைக்கு வர வே மாட்டோம் என சொல்லும் படி போரடித்ததாம்.என்னத்தை சொல்ல! வாழ்க்கையும் வரவர போரடிக்கும் ஒன்றாய் போய்கொண்டிருக்கின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
பசுமையான நினைவுகள் ஓட்டு வீட்டில் மாத்திரம் இல்லை தகர வீட்டில் இருந்து மழை பெய்யும் போது வரும் சங்கீதம் இருக்கிறதே எந்த இசையமைப்பாளராலும் உருவாக்க முடியாத ஒரு இசை
காதுக்கு இனிமையாக இருக்கும் அவ்வளவு அழகு சல சல பட பட டொக் டொக் டக் டக் என்று சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வளவு அழகு
நாங்கள் மழை நீரை சுத்தமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக வெட்டை வெளியில் பாத்திரத்தை வைத்துப் பிடிப்போம் குடிப்பதற்கு அருமையாக இருக்கும் உலகில் உள்ள நீரில் சுத்தமான நீர் மழை நீர்தானே
மற்றும் வீடுகளில் இருந்து வடிந்தோடும் நீரைப் பிடித்து போத்தில் அடைத்து வைப்போம் தீக்காயங்களுக்கு அது மருந்தாகவும் பயன் படுத்துவோம்
முன்பெல்லாம் எங்க ஏரியாவில் பாதைகள் எல்லாம் செம்மண்ணாகத்தான் இருக்கும் பாதையில் தேங்கி நிற்கும் நீரில் விழுந்து விழுந்து விளையாடிய தருணங்களும் உண்டு காலில் மழைப்புழு கடித்து சிரங்கு வந்த தருணங்களும் உண்டு
பசுமையான நினைவுகளை பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்
மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
அடடா!
இதைத்தான் எதிர்பார்த்தேன்! மழைக்கால நினைவுகள் இனிமையாய் இருக்கின்றது! இன்னும் எழுதலாம்பா!
இதைத்தான் எதிர்பார்த்தேன்! மழைக்கால நினைவுகள் இனிமையாய் இருக்கின்றது! இன்னும் எழுதலாம்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
எனக்கும் ஆசைதான் எழுதுகிறேன்Nisha wrote:அடடா!
இதைத்தான் எதிர்பார்த்தேன்! மழைக்கால நினைவுகள் இனிமையாய் இருக்கின்றது! இன்னும் எழுதலாம்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
எழுதுங்கோ! இன்னும் நிரம்ப எழுதுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
நிஷா அக்காவுக்கு...
முதல்ல கை கொடுங்க... என்ன எழுத்து...
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்...
வாவ் என்ன ஒரு அருமையான பகிர்வு... என்னோட பகிர்வுக்கு கருத்தாக மட்டுமல்லாது தங்கள் சிறுவயது நினைவுகளை எல்லாம் அழகாய் அறியத் தந்தீர்கள்...
நான் மழைக்காலம் என்று இதே கிராமத்து நினைவுகள் என்ற தலைப்பில் நிறையப் பகிர்ந்திருக்கிறேன்... அதையும் இங்கு பதிகிறேன்...
தங்கள் எழுத்து சூப்பர்... வாசிக்கும் போது நானும் தங்களுடனே பயணித்தேன்... அருமை... அருமை அக்கா...
முதல்ல கை கொடுங்க... என்ன எழுத்து...
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்...
வாவ் என்ன ஒரு அருமையான பகிர்வு... என்னோட பகிர்வுக்கு கருத்தாக மட்டுமல்லாது தங்கள் சிறுவயது நினைவுகளை எல்லாம் அழகாய் அறியத் தந்தீர்கள்...
நான் மழைக்காலம் என்று இதே கிராமத்து நினைவுகள் என்ற தலைப்பில் நிறையப் பகிர்ந்திருக்கிறேன்... அதையும் இங்கு பதிகிறேன்...
தங்கள் எழுத்து சூப்பர்... வாசிக்கும் போது நானும் தங்களுடனே பயணித்தேன்... அருமை... அருமை அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பன்...நண்பன் wrote:பசுமையான நினைவுகள் ஓட்டு வீட்டில் மாத்திரம் இல்லை தகர வீட்டில் இருந்து மழை பெய்யும் போது வரும் சங்கீதம் இருக்கிறதே எந்த இசையமைப்பாளராலும் உருவாக்க முடியாத ஒரு இசை
காதுக்கு இனிமையாக இருக்கும் அவ்வளவு அழகு சல சல பட பட டொக் டொக் டக் டக் என்று சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வளவு அழகு
நாங்கள் மழை நீரை சுத்தமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக வெட்டை வெளியில் பாத்திரத்தை வைத்துப் பிடிப்போம் குடிப்பதற்கு அருமையாக இருக்கும் உலகில் உள்ள நீரில் சுத்தமான நீர் மழை நீர்தானே
மற்றும் வீடுகளில் இருந்து வடிந்தோடும் நீரைப் பிடித்து போத்தில் அடைத்து வைப்போம் தீக்காயங்களுக்கு அது மருந்தாகவும் பயன் படுத்துவோம்
முன்பெல்லாம் எங்க ஏரியாவில் பாதைகள் எல்லாம் செம்மண்ணாகத்தான் இருக்கும் பாதையில் தேங்கி நிற்கும் நீரில் விழுந்து விழுந்து விளையாடிய தருணங்களும் உண்டு காலில் மழைப்புழு கடித்து சிரங்கு வந்த தருணங்களும் உண்டு
பசுமையான நினைவுகளை பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்
மாறா அன்புடன் நண்பன்
நிஷா அக்கா சொன்னது போல் மழை நினைவுகளில் இன்னும் நனையுங்கள்... நாங்களும் நனைகிறோம்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
நிஷா அக்காவின் கருத்தில் பொன்னெழுத்துக்கள்
இக்காலகுழந்தைகள் இவைகளை ரசிக்கின்றார்களா என்பதே தெரியவில்லை. எனக்கு சில நேரம் தோன்றும் நாம் சிறுவர்களாக்வே என்றும் இருந்திருக்க கூடாதா? ஆறு பிள்ளைகள்... கஷ்டம் நஷ்டமெனினும் அனைத்தினையும் ஒன்றாய் அனுபவித்து பசி பட்டினி உணர்ந்தாலும் அந்த மகிழ்ச்சி இன்று பணம் கொட்டி நகை நட்டென சேர்ந்தபின்னும் கிடைப்பதில்லை.
இக்காலகுழந்தைகள் இவைகளை ரசிக்கின்றார்களா என்பதே தெரியவில்லை. எனக்கு சில நேரம் தோன்றும் நாம் சிறுவர்களாக்வே என்றும் இருந்திருக்க கூடாதா? ஆறு பிள்ளைகள்... கஷ்டம் நஷ்டமெனினும் அனைத்தினையும் ஒன்றாய் அனுபவித்து பசி பட்டினி உணர்ந்தாலும் அந்த மகிழ்ச்சி இன்று பணம் கொட்டி நகை நட்டென சேர்ந்தபின்னும் கிடைப்பதில்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
சே.குமார் wrote:நிஷா அக்காவுக்கு...
முதல்ல கை கொடுங்க... என்ன எழுத்து...
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்...
வாவ் என்ன ஒரு அருமையான பகிர்வு... என்னோட பகிர்வுக்கு கருத்தாக மட்டுமல்லாது தங்கள் சிறுவயது நினைவுகளை எல்லாம் அழகாய் அறியத் தந்தீர்கள்...
நான் மழைக்காலம் என்று இதே கிராமத்து நினைவுகள் என்ற தலைப்பில் நிறையப் பகிர்ந்திருக்கிறேன்... அதையும் இங்கு பதிகிறேன்...
தங்கள் எழுத்து சூப்பர்... வாசிக்கும் போது நானும் தங்களுடனே பயணித்தேன்... அருமை... அருமை அக்கா...
ரெம்ப நன்றிப்பா!
நீங்கள் உங்கள் மழைக்கால நினைவுப்பகிர்வுகளை இங்கே தொடருங்கள். நாங்களும் தொடர்கின்றோம்.
வெறும் பாராட்டு பின்னூட்டத்தோடு இருக்காமல் படிப்பவர்களையும் எழுத தூண்டும் எழுத்து உங்களுடையதாய் இருக்கும் போது நாங்களும் சேர்ந்து எழுதுவதுக்கு என்னவாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
நண்பன் wrote:நிஷா அக்காவின் கருத்தில் பொன்னெழுத்துக்கள்
இக்காலகுழந்தைகள் இவைகளை ரசிக்கின்றார்களா என்பதே தெரியவில்லை. எனக்கு சில நேரம் தோன்றும் நாம் சிறுவர்களாக்வே என்றும் இருந்திருக்க கூடாதா? ஆறு பிள்ளைகள்... கஷ்டம் நஷ்டமெனினும் அனைத்தினையும் ஒன்றாய் அனுபவித்து பசி பட்டினி உணர்ந்தாலும் அந்த மகிழ்ச்சி இன்று பணம் கொட்டி நகை நட்டென சேர்ந்தபின்னும் கிடைப்பதில்லை.
ம்ம் நிஜத்தினை தானே சொன்னேன். பிள்ளைகளாய் நாமிருந்தால் தொல்லைகள் நம்க்கேதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
கிராமத்து நினைவுகள்: மழைக்காலம்
கிராமத்து நினைவுகள் பகுதிக்கு உங்களின் ஆராவாரமான (!!!???) வரவேற்பை முன்னிட்டு தொடரலாம் என்று நினைக்கிறேன். சிறுவயது சந்தோஷங்களை அசை போடும் போது கிடைக்கும் அந்த சுகந்தமான சந்தோஷ அனுபவம் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்பதே உண்மை.
ஊளை மூக்கோடும் அந்த மூக்கை துடைத்த புறங்கை அழுக்கோடும் இடுப்பில் நிற்க மறுக்கும் டவுசரை அரணாக்கொடியில் (நாங்க இதை பட்டுக்கயிறு என்போம்) சிறையிட்டு அப்பப்ப இழுத்து விட்டுக் கொண்டும் சந்தோஷித்த அந்த தினங்கள் மீண்டும் வரா.... ஆனால் அந்த நினைவுகளை எப்ப வேண்டுமனாலும் அசை போடலாம்... அதற்கு தடை விதிக்க முடியுமா?
சிறுவயதில் மழைக்காலம் என்றாலே சந்தோஷம்தான்... அதற்கு காரணம் நிறைய.... காலையில் பேய் மழை பெய்தால் பள்ளிக்கு செல்ல வேண்டாம், மதியம் மழை வருவது போலிருந்தால் புத்தகப்பையை பள்ளியில் வைத்துவிட்டு கிராமத்துப் பிள்ளைகள் என்ற முறையில் பள்ளி விடும் முன்னே வீடு திரும்பலாம், மழை பெய்து விட்டபின் லேசான தூரலில் நனைந்து கொண்டே வந்து இரவு முழுவதும் தும்மி காலையில் பள்ளி செல்வதை தவிர்க்கலாம்... இப்படி நிறைய....
அந்த மழைக்காலத்தில் மழை பெய்து நின்றதும் நாங்கள் முதலில் செல்வது கண்மாய்க்குத்தான்.... எவ்வளவு தண்ணீர் வந்திருக்கு... நாளை கண்மாய்க்கு குளிக்க வரலாமா? என்று பார்க்கத்தான்.. எங்கள் கண்மாயில் பெரிதும் சிறிதுமாக இரண்டு மேடான பகுதி எங்களின் அடையாளமாகும். அதில் பெரிய மேடு (பெரிய முட்டு) நீரில் அமுங்கினால் அந்த வருடம் விவசாயம் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் நல்லாயிருக்கும். அதேபோல் கண்மாய்க்குள் இருக்கும் முனீஸ்வரரின் அடிப்பீடம் தண்ணீருக்குள் அமுங்கினால் நீர் இறைக்காமல் வெளைந்து விடும். கோடை போடவும் செய்யலாம் என்பது போன்ற வழிவழி வந்த கணக்குகள் உண்டு.
நாங்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்த காலத்தில் கண்மாய்க்கு நீர் கொண்டு வர ம்ழைக்காலத்தில் பல வகைகளில் முயற்சித்து வெற்றி கண்டோம். அவை இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்றது...(அது சீக்ரெட்... நாங்கள்ளாம் யாரு... சொல்லமாட்டோமுல்ல...)
மழை நாளில் பள்ளியில் இருந்து வரும்போது வழியெங்கும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நீரில் ஆட்டம் போடுவதுடன் புத்தகப்பையும் இருக்காதல்லவா... ஓடும் நீரின் குறுக்கே அணை கட்டி, செங்கல் கற்களை வைத்து பாலம் போல் கட்டி விளையாடி வீடு வந்து சேர நேரமாகும். இதில் இரண்டு குழுக்களாய் பிரிந்து பாலம் கட்டி தண்ணீரை பாலத்தின் அடியில் இருந்து மேலே வருவது போல் செய்வதில் போட்டி வேறு. போட்டியின் முடிவில் ஏற்படும் சண்டையால் பாலம் தகர்க்கப்படும். பின்னர் சில நிமிட அமைதியான நடைக்குப்பின்னர் மீண்டும் ஓரிடத்தில் புதிய பாலத்துடன் சமாதானம் ஆரம்பிக்கும்.
சில நாட்கள் மழையில் வரும்போது குளக்காலில் பாய்ந்தோடும் நீரில் ஏத்துமீன் (அதாவது தண்ணீரின் போக்கை எதிர்த்து வரும் மீன்) வருவதை பார்த்துவிட்டால் போதும் ' டேய் மீன் ஏறுதுடா... வாங்கடா பிடிக்கலாம்...' என்றபடி எல்லோரும் இறங்கி மீன் பிடிக்க ஆரம்பித்துவிடுவோம். அதில் அயிரை, கெண்டை, கெழுத்தி மீன்களே அதிகம் ஏறும். கெழுத்தி பிடிப்பதில்தான் தனிக்கவனம் தேவை. இல்லையென்றால் முகத்தில் இருக்கும் முள்ளால் குத்திவிடும்... அது குத்தினா கடுக்கும் பாருங்க... அப்பா... என்ன வேதனைங்கிறீங்க...
நல்ல மழை பெய்து கண்மாயின் சறுக்கை (கூடுதல் தண்ணீர் வெளியாகும் பகுதி) எடுத்துக் கொண்டால் எங்களுக்கு கொண்டாட்டம்தான்.... முதலில் எங்க கண்மாய் சறுக்கையில் மணல் சாக்குகளை போட்டு அடைத்து கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்க வழி செய்வார்கள் நாங்களும் அங்கு செல்வோம்... வேலை செய்வோம். பிறகு அதற்கு மேல் நிரம்பும் நீர் குளக்கால் வழியாக அடுத்த ஊர் கண்மாய்க்குத்தான் போகும்... அந்த கண்மாயில் இருக்கும் மீன் தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டபடி வரும்.
எங்க அண்ணன் உள்பட அவர் வயது நிறைந்த அண்ணங்கள் இணைந்து தண்ணீரில் அணை வைத்து ஒரு இடத்தில் பத்தக்கட்டை (உருளை வடிவில் துவாரங்கள் இடப்பட்டிருக்கும்.... அதாங்க எப்படி சொல்றது... அட நம்ம புல்லாங்குழல் மாதிரி பெரிசுங்க போதுமா... அட நாதாரின்னு திட்டுறது கேக்குது... இப்ப நாம ஸ்கூல் பையங்க...) போட்டு அதனருகில் ஒரு பெரிய குழி வெட்டி வைத்து தண்ணீரை திறந்து விடுவார்கள். துவாரம் வழியாக செல்லும் தண்ணீரில் ஏறிவரும் மீன் குதிக்கும் பாருங்க... அப்படியே குழிக்குள் விழும்... சில சமயங்களில் நிறைய மீன் வருமா... அப்படியே குதித்து விழும் பாருங்க... ஹையோ... என்ன அழுகு... பாக்கப் பாக்க சந்தோஷங்க... எங்கண்ணன் உரச்சாக்குன்னு சொல்லுவோம் தெரியுமா... அதுல எல்லாம் பிடிச்சாந்திருக்காருன்னா பாத்துக்கங்க.
அப்புறம் மழைக்காலத்தில பாத்திங்கன்னா... கருவ மரத்துல உட்காந்து காது கிழிய கத்துமே சில் வண்டு அதையும் விடுறதில்ல்... மரத்தோட ஒட்டி இருக்கிற அதை தேடிப் பிடிச்சு நூல்ல கட்டி கத்தவிட்டு வேடிக்கை பாக்கிறது.
மழை நாட்கள்ல மாடு மேய்க்கப் போறப்போ குடை கொண்டு போறதைவிட கடையில விக்கிமே பச்சை, சிவப்பு , மஞ்சள்ன்னு பிளாஸ்டிக் பேப்பர் அதை போட்டுக்கிட்டுப் போறதுல ஒரு ஆனந்தம்தான் போங்க.வயல்ல மாட்டை விட்டுட்டு சும்மாவா இருப்போம் அங்க கிடக்கிற தண்ணியை இரண்டு வயலுக்குமிடையில் இருக்கும் வரப்புல கையில கொண்டு போற மூங்கில் கம்பால குத்திவிட்டு வேடிக்கை பாப்போம்.
இந்தப் பழக்கம் விவசாய டயத்துல அடுத்தவன் வயலுக்கு தண்ணீர் போகும் போது அவனுக்குத் தெரியாம வாய்க்கால்ல இருந்து வயலுக்குள்ள குத்திவிட்டு தண்ணீரை பாய்ச்சுறது வரைக்கும் தொடர்ந்திச்சி... என்ன செய்ய தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்குமுன்னு பழமொழியே இருக்குல்ல... நம்ம பிரண்டு வீட்டுக்கு தண்ணி போறப்போ நம்ம வயல் ஓரத்த கண்ணுல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு பாப்பாங்க... அவங்களுக்குத் தெரியுமில்ல ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதானே... சில பெரிசுங்க நண்டு சிலவுல பொத்துக்கிட்டு தண்ணி போகுதேன்னுட்டு மம்பட்டியால வெட்டி அடச்சிட்டு போகுங்க.
மாடு மேய்க்கும் போது மழை பெய்து விட்டதும் மரத்தடியில் போய் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென யாராவது ஒருவர் மரத்தின் வாதைப் பிடித்து ஆட்டி விட்டால் போதும் அதிலிருந்து சடச்சடவென விழுகும் நீரானது உடம்பில் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.
மழை பெய்து ஓயும் போது ஊருக்குள் இருந்து ஊரணிக்குப் போகும் தண்ணீரில் அம்மாவின் காட்டுக் கத்தலையும் பொருட்படுத்தாது பழைய ராணிப் புத்தகத்தில் (எங்க ஊட்ல இன்னும் ராணி வாங்குறாங்கங்க... எங்கம்மா ராணி புத்தகத்தோட நீண்ட நாள் வாசகி) சாதா கப்பல், கத்திக் கப்பல் எல்லாம் செய்து ஓட விடுறது... அதுலயும் போட்டிகள் பொறாமைகள் சண்டைகள் எல்லாம் உண்டு.
அப்புறம் மழைவிட்டதும் பனங்காட்டுக்கு ஓடி காவோலை (காய்ந்த ஓலை) பொறக்குறது.... பனம் பழம் பொறக்குறது... இதிலும் போட்டிதான்... அடுத்தவன் போறதுக்குள்ள நாம போகணும் இல்லேன்ன அவன் எல்லாத்தையும் பொறக்கிடுவான். அதனால மழை லேசா விட்டாப்புல இருக்கயில சிட்டாப் பறப்போம். ஓலைகளை எடுத்து ஒன்றுடன் ஒன்று பிண்ணி ரோட்டில் தரத்தரவென்று இழுத்து வருவோம். அடுத்த நாள் அதன் அடிப்பக்கம் அழகாக வெட்டப்பட்டு கயிரு கட்டி வண்டியாக விளையாட வரும்... வண்டிப் பந்தயம் வேறு ... வேகமா ஓடுறவன் ஜெயிப்பான்... அதுக்கு பரிசு வீட்டில் திருடிய வெள்ளக்கட்டி.
எல்லாத்துக்கும் மேல மழை நாள்ல கண்மாய்க்கரையில நின்னு விஸ்தாரமான வெளியில வானத்துல வானவில் தெரியிறதைப் பாத்து அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லைங்க...
என்னதான் சொல்லுங்க... பெய்யிற மழையில நனையிற சொகம் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதுங்க.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
Nisha wrote:நண்பன் wrote:நிஷா அக்காவின் கருத்தில் பொன்னெழுத்துக்கள்
இக்காலகுழந்தைகள் இவைகளை ரசிக்கின்றார்களா என்பதே தெரியவில்லை. எனக்கு சில நேரம் தோன்றும் நாம் சிறுவர்களாக்வே என்றும் இருந்திருக்க கூடாதா? ஆறு பிள்ளைகள்... கஷ்டம் நஷ்டமெனினும் அனைத்தினையும் ஒன்றாய் அனுபவித்து பசி பட்டினி உணர்ந்தாலும் அந்த மகிழ்ச்சி இன்று பணம் கொட்டி நகை நட்டென சேர்ந்தபின்னும் கிடைப்பதில்லை.
ம்ம் நிஜத்தினை தானே சொன்னேன். பிள்ளைகளாய் நாமிருந்தால் தொல்லைகள் நம்க்கேதாம்?
உண்மைதான் குழந்தைகளாய் இருந்து விட்டால் என்றும் கவலை இல்லையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
நண்பன் wrote:நிஷா அக்காவின் கருத்தில் பொன்னெழுத்துக்கள்
இக்காலகுழந்தைகள் இவைகளை ரசிக்கின்றார்களா என்பதே தெரியவில்லை. எனக்கு சில நேரம் தோன்றும் நாம் சிறுவர்களாக்வே என்றும் இருந்திருக்க கூடாதா? ஆறு பிள்ளைகள்... கஷ்டம் நஷ்டமெனினும் அனைத்தினையும் ஒன்றாய் அனுபவித்து பசி பட்டினி உணர்ந்தாலும் அந்த மகிழ்ச்சி இன்று பணம் கொட்டி நகை நட்டென சேர்ந்தபின்னும் கிடைப்பதில்லை.
உண்மை நண்பன்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
ரொம்ப நன்றி அக்கா...Nisha wrote:சே.குமார் wrote:நிஷா அக்காவுக்கு...
முதல்ல கை கொடுங்க... என்ன எழுத்து...
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்...
வாவ் என்ன ஒரு அருமையான பகிர்வு... என்னோட பகிர்வுக்கு கருத்தாக மட்டுமல்லாது தங்கள் சிறுவயது நினைவுகளை எல்லாம் அழகாய் அறியத் தந்தீர்கள்...
நான் மழைக்காலம் என்று இதே கிராமத்து நினைவுகள் என்ற தலைப்பில் நிறையப் பகிர்ந்திருக்கிறேன்... அதையும் இங்கு பதிகிறேன்...
தங்கள் எழுத்து சூப்பர்... வாசிக்கும் போது நானும் தங்களுடனே பயணித்தேன்... அருமை... அருமை அக்கா...
ரெம்ப நன்றிப்பா!
நீங்கள் உங்கள் மழைக்கால நினைவுப்பகிர்வுகளை இங்கே தொடருங்கள். நாங்களும் தொடர்கின்றோம்.
வெறும் பாராட்டு பின்னூட்டத்தோடு இருக்காமல் படிப்பவர்களையும் எழுத தூண்டும் எழுத்து உங்களுடையதாய் இருக்கும் போது நாங்களும் சேர்ந்து எழுதுவதுக்கு என்னவாம்?
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
ஊளை மூக்கோடும் அந்த மூக்கை துடைத்த புறங்கை அழுக்கோடும் இடுப்பில் நிற்க மறுக்கும் டவுசரை அரணாக்கொடியில் (நாங்க இதை பட்டுக்கயிறு என்போம்) சிறையிட்டு அப்பப்ப இழுத்து விட்டுக் கொண்டும் சந்தோஷித்த அந்த தினங்கள் மீண்டும் வரா.... ஆனால் அந்த நினைவுகளை எப்ப வேண்டுமனாலும் அசை போடலாம்... அதற்கு தடை விதிக்க முடியுமா?
ம்ம்! மழைக்கால நினைவுகளை சட் சடவென கொட்டி இருக்கிங்க.. மழை நீர் தோற்று விடும் போங்க.. நினைவுகள் அருவித்தண்ணீர் போல கொட்டிக்கொண்டிருக்கின்றது.என்னதான் சொல்லுங்க... பெய்யிற மழையில நனையிற சொகம் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதுங்க.
மழைக்காலத்தில் ஆறு குளம் நிறைந்தால் மீன்களும் நல்லா விளையும் , இந்த கெழுத்தி மீன் சதப்பற்று குறைவாய் இருந்தாலும் சமைத்தால் அதன் ருசி தனி தான். அதிலும் மழைக்காலத்தில் முட்டையோடு கிடைக்கும் மீன் இன்னும் சூப்பராக இருக்கும். எங்க ஊரில் பச்சைமிளகாயை முதலில் அவிச்சி கடைந்து எடுத்து விட்டு மீனையும் நல்ல புளி மாங்காயையும் வெட்டிப்போட்டு.. மஞ்சள் உப்பு, தண்ணி என சேர்த்து கொதிக்க வைத்து எடுப்பார்கள். உப்பவியல் என அதுக்கு ஸ்பெஷல் பேர். பால், எண்ணெய் என எதுவும் இருக்காது,. மஞ்சளும் உப்பும் புளிப்பும் தான் மீனில் சேர்ந்திருக்கும். சுடு சோத்தில் விட்டு சாப்பிட்டால்... அதை போல அமிர்தம் எங்கேயும் கிடைக்காது என்பார்கள்.
இன்னொரு மீன் இருக்கு ஐப்பான் மீன் என சொன்னாலும் எங்கூரில் அந்த ஆத்துமீனுக்கு பேர் செல்வன் மீன். சுப்பராக இருக்கும். நல்ல சத்து மீன் அது.
மழைக்காலத்தில் எங்க ஊரில் முகத்துவாரம் வெட்டி விட என எல்லா ஆண்களும் போயிருவாங்க.. ஊரின் போக்கே... கடலோட சேர்ந்த வாழ்க்கை தான்பா!
ஒருபக்கம் பெரிய நதி.... நடுவில் ஒரு கிலோ மீற்றருக்குள் ஊரும் வீடுகளும்... அங்கால ஒரு குளம்.. அந்த குளம் எங்க ஊரோட முடிந்தாலும்... எங்களுடன் இன்னும் நான்கைந்து கிராமங்களை சேர்த்து அணைத்து ஓடும். குளத்திலிருந்து அந்தபக்கம் பரந்த கடல்மண். ஒரு கிலோ மீற்றருக்குள் கடல்.
கற்பனை செய்து பாருங்கள். கடலிலிருந்து ஒரு கிலோ மீற்றரில் குளம்... குளத்தோட ஒட்டி ஊர் மனைகள். கோயில்கள். பள்ளிக்கூடங்கள்.
இந்தபக்கம் ஒரு கிலோ மீற்றரில் ஓடும் நதி. மழைக்காலத்தில் அந்த நதியும்.. குளமும் சேரும்... அதுக்கென பாலமெல்லாம் கட்டி ஊர் ஆரம்பத்திலும் முடிவிலும் ஊருக்குள் பாலத்தின் மேலால தான் போக்கு வரத்து. மழை கூடினால் பாலம் நிறைந்து போக்கு வரத்தும் தடைப்படும். சில நேரம் தோணி விடுவாங்க. இப்ப சுனாமிக்கு பிறகு பால்மெல்லாம் உயர்த்தி கட்டி விட்டாங்க. மழை வந்தால் பாலம் நிரம்பாது என நினைக்கின்றேன்.
ஆத்தில தண்ணீ நிறைந்தால் ஊருக்குள் வந்திரும் என்பதால் ... ஆத்துத்தண்ணியும் குளத்துத்தண்ணியும் சேருமிடத்தில் கடலுக்குள் போக வெட்டி விடுவாங்க.. அவ்விடத்தில் மீன் துள்ளி விளையாடும்.
மட்டக்களப்பு என்றாலே .. மீன் பாடும் தேனாடு தான்பா.. அதிலும் கல்லாறு என கல்வியாறில் சிறந்த ஊர்.. 100 க்கு 100 வீதம் படிப்பறிவு பெற்ற கிராமம். ஆரம்ப பாடசாலைகளே ஊரில் ஐந்திக்கும் மேல இருக்கு. ஒன்றிலிருந்து ஐந்து வரை அங்கே கல்வி கற்கலாம்.
இலங்கை வரை படத்தில் மேப்ல பார்த்தால் சட்டென ஊரும் ஆறும் குளமும்.. கடலும் தெரியும் படிதான் இருக்கு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
////மட்டக்களப்பு என்றாலே .. மீன் பாடும் தேனாடு தான்பா.. அதிலும் கல்லாறு என கல்வியாறில் சிறந்த ஊர்.. 100 க்கு 100 வீதம் படிப்பறிவு பெற்ற கிராமம். ஆரம்ப பாடசாலைகளே ஊரில் ஐந்திக்கும் மேல இருக்கு. ஒன்றிலிருந்து ஐந்து வரை அங்கே கல்வி கற்கலாம்.
இலங்கை வரை படத்தில் மேப்ல பார்த்தால் சட்டென ஊரும் ஆறும் குளமும்.. கடலும் தெரியும் படிதான் இருக்கு.
///
ஆஹா அக்கா மீன் வகைகளையும் செய்யும் வகைகளையும் சொல்லி நாக்கில் நீர் வர வைத்து விட்டீர்கள்...
மீன் குழம்புதான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
அழகான ஊரில் வசித்திருக்கிறீர்கள். இரண்டு முறை விமானத்தில் வரும்போது திருச்சி - இலங்கை-அபுதாபி மார்க்கமாக வந்ததால் அங்கு தங்கியிருக்கிறேன். கடற்கரையோரம் ஒரு ஹோட்டலில்... அருமையான ஊர் அக்கா...
இன்னும் வேலை அதிகம் இருக்கு அக்கா..
இன்று 10 மணி வரை இருக்க வேண்டிய நிலை... சொல்லிவிட்டு 7 மணிக்கு மேல் கிளம்பி வந்துவிட்டேன்...
கொஞ்சம் பிரியானதும் மற்ற பகிர்வுகளைப் படிக்கிறேன்... எனது பகிர்வுக்கு மட்டும் கருத்து இடுவதாக நண்பர்கள் நினைக்க வேண்டாம்...
அக்கா உங்களுடன் பேசுவதால்தான் தொடர்ந்து இந்தக் கருத்துப் பதிவு... அடுப்பில் மீன் கொதிக்கிறது...
அப்ப அப்ப வந்து பார்க்கிறேன்...
இலங்கை வரை படத்தில் மேப்ல பார்த்தால் சட்டென ஊரும் ஆறும் குளமும்.. கடலும் தெரியும் படிதான் இருக்கு.
///
ஆஹா அக்கா மீன் வகைகளையும் செய்யும் வகைகளையும் சொல்லி நாக்கில் நீர் வர வைத்து விட்டீர்கள்...
மீன் குழம்புதான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
அழகான ஊரில் வசித்திருக்கிறீர்கள். இரண்டு முறை விமானத்தில் வரும்போது திருச்சி - இலங்கை-அபுதாபி மார்க்கமாக வந்ததால் அங்கு தங்கியிருக்கிறேன். கடற்கரையோரம் ஒரு ஹோட்டலில்... அருமையான ஊர் அக்கா...
இன்னும் வேலை அதிகம் இருக்கு அக்கா..
இன்று 10 மணி வரை இருக்க வேண்டிய நிலை... சொல்லிவிட்டு 7 மணிக்கு மேல் கிளம்பி வந்துவிட்டேன்...
கொஞ்சம் பிரியானதும் மற்ற பகிர்வுகளைப் படிக்கிறேன்... எனது பகிர்வுக்கு மட்டும் கருத்து இடுவதாக நண்பர்கள் நினைக்க வேண்டாம்...
அக்கா உங்களுடன் பேசுவதால்தான் தொடர்ந்து இந்தக் கருத்துப் பதிவு... அடுப்பில் மீன் கொதிக்கிறது...
அப்ப அப்ப வந்து பார்க்கிறேன்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
ஹாஹா!
யாரும் ஒன்னும் நினைக்கல்லைப்பா! படித்ததும் கருத்திட மட்டுமல்லாது அடுத்தவர்களையும் எழுத வைக்கும் பதிவாய் எவர் எழுதினாலும் அவர்களை நான் வரவேற்பதுண்டு.
அவ்வகையில் நீங்கள் எப்போதும் போல் எழுதுங்கள். மீன் குழம்பையும் பாருங்கள். வேலை தான் முக்கியம். நாங்க எதையும் நினைக்கல்லை குமார்.
யாரும் ஒன்னும் நினைக்கல்லைப்பா! படித்ததும் கருத்திட மட்டுமல்லாது அடுத்தவர்களையும் எழுத வைக்கும் பதிவாய் எவர் எழுதினாலும் அவர்களை நான் வரவேற்பதுண்டு.
அவ்வகையில் நீங்கள் எப்போதும் போல் எழுதுங்கள். மீன் குழம்பையும் பாருங்கள். வேலை தான் முக்கியம். நாங்க எதையும் நினைக்கல்லை குமார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
கிராமத்து நினைவுகள் நிஷாவின் மறுமொழிகள் என்று அனைத்தும் என்னை மீண்டும் என் சிறுவயதிற்கு அழைத்துச் செல்கிறது. மழைத் துளியில் மருதாணி வைத்த பார்த்த நாள் அடுத்த வீட்டுக்கு செல்ல "ஓலைத் தட்டு ,சுளகு” என்று தலையின் மேல் பிடித்துக் கொண்டு ஓடிய வயது. பெய்த மழையால் பள்ளங்களில் தேங்கிய நீரில் தூண்டில் கட்டி மீன் பிடித்து விளையாடிய வயது.
கிடுகால் மேய்ந்த கூரை... களிமண்ணும் சாணமும் கலந்து மெழுகிய தரை.. செங்கற்கள் அடுக்கிய சுவர். அமர்வதற்கு குட்டிக் கட்டு என்று அழகிய அரன்மணை, எங்கள் வீடு.கூரையில் உள்ள சிறிய சிறிய ஓட்டையால் வானம் தெரியும் பகலில் வரும் சூரிய ஓளியை உள்ளங் கையில் பிடித்து ரசித்து மகிழ்ந்ததும்.மழை காலத்தில் பாத்திரம் வைத்து தரை நனையாமல் பாது காத்ததும் பசுமையான நினைவுகள்.
கொட்டும் மழையில் நனைந்து கயிறில் பஸ் விட்டு அப்பாவிடம் அடிவாங்கிய நாட்கள் அத்தனையும் நினைவுக்கு கொண்டு வந்தது உங்களின் பதிவு. அன்று போல் இன்று இல்லை மனம் நிறைந்த சந்தோசம் மகிழ்ச்சியான வாழ்கை மீண்டும் வருமா?
தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்னாத நல்ல உள்ளங்கள் குடியிருந்த காலம் இரவும் பகலும் ஓடி ஓடி நலன் விசாரித்த நாட்கள் என்று அத்துனையும் சிறப்பே!
அன்று மழையில் நனைவதோ ரெம்ப பிடிக்கும் இன்று மழையில் நனைந்தால் சளிபிடிக்கும். சேத்து தண்ணியில வாய்பிளந்து நீந்தும் முள்ளும் தண்ணியில் மிதக்கும் தவக்களையோ தென்னங்குச்சி பத்திரிகையில் தோனி செய்து போட்டி போட்ட நாட்கள் அது ஒரு வசந்த காலம்.
மழையால் நிறம்பிய கிணற்றில் பேணியில் வாளி கட்டி நீர் இறைத்து மகிழ்ந்ததும் அம்மா பார்த்ததும் தம்பியை மாட்டிவிட்டு ஓழிந்ததும் நினைத்துப் பார்க்கும் போதும் ஆனந்தம்.
எங்களையும் எழுத தூண்டும் உங்களின் அருமையான பதிவு தொடருங்கள் நாங்களும் பின் வருகிறோம்.அனைவரும் சேர்ந்து நனைந்திடலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
அடடடடா குமார் அண்ணா அனைவரையும் அந்தக்காலத்திற்கே அழைத்துச்சென்று விட்டீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
மரத்துப்போன மண்ணுக்கு
மகிழ்வு தரும் அதி மதுரமாய்
வானத்து வள்ளலால்
வகுந்தளிக்கும் செல்வமிது
பூமித்தாயின் மடிவளரும் குழந்தைகள்
குதூகலித்து மகிழும் கொடையிது
மழைத்தண்ணி நினைத்தாலே
அனைவரும் மகிழும் தண்ணி
அதுபற்றிய தொடர் பார்க்கும் போதே பரவசமூட்டுகிறது
அனைவருக்கும் நன்றிகள்

சென்ற விடு முறையில் நான் மழையில் நனைந்த நினைவுகள் எழுத பல பக்கங்கள் வேண்டும் அவ்வளவு ரசித்தேன் அடிக்கடி சுவிஸ் நாட்டுக்கும் அறிவித்தேன் அது பற்றி மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள்
குழந்தைகள் மட்டுமில்லை நானும் இப்போதும் இது எப்போதும் மழையில் நான் விளையாடுகிறேன்
குழந்தைகள் மட்டுமில்லை நானும் இப்போதும் இது எப்போதும் மழையில் நான் விளையாடுகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
*சம்ஸ் wrote:கிராமத்து நினைவுகள் நிஷாவின் மறுமொழிகள் என்று அனைத்தும் என்னை மீண்டும் என் சிறுவயதிற்கு அழைத்துச் செல்கிறது. மழைத் துளியில் மருதாணி வைத்த பார்த்த நாள் அடுத்த வீட்டுக்கு செல்ல "ஓலைத் தட்டு ,சுளகு” என்று தலையின் மேல் பிடித்துக் கொண்டு ஓடிய வயது. பெய்த மழையால் பள்ளங்களில் தேங்கிய நீரில் தூண்டில் கட்டி மீன் பிடித்து விளையாடிய வயது.
கிடுகால் மேய்ந்த கூரை... களிமண்ணும் சாணமும் கலந்து மெழுகிய தரை.. செங்கற்கள் அடுக்கிய சுவர். அமர்வதற்கு குட்டிக் கட்டு என்று அழகிய அரன்மணை, எங்கள் வீடு.கூரையில் உள்ள சிறிய சிறிய ஓட்டையால் வானம் தெரியும் பகலில் வரும் சூரிய ஓளியை உள்ளங் கையில் பிடித்து ரசித்து மகிழ்ந்ததும்.மழை காலத்தில் பாத்திரம் வைத்து தரை நனையாமல் பாது காத்ததும் பசுமையான நினைவுகள்.
கொட்டும் மழையில் நனைந்து கயிறில் பஸ் விட்டு அப்பாவிடம் அடிவாங்கிய நாட்கள் அத்தனையும் நினைவுக்கு கொண்டு வந்தது உங்களின் பதிவு. அன்று போல் இன்று இல்லை மனம் நிறைந்த சந்தோசம் மகிழ்ச்சியான வாழ்கை மீண்டும் வருமா?
தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்னாத நல்ல உள்ளங்கள் குடியிருந்த காலம் இரவும் பகலும் ஓடி ஓடி நலன் விசாரித்த நாட்கள் என்று அத்துனையும் சிறப்பே!
அன்று மழையில் நனைவதோ ரெம்ப பிடிக்கும் இன்று மழையில் நனைந்தால் சளிபிடிக்கும். சேத்து தண்ணியில வாய்பிளந்து நீந்தும் முள்ளும் தண்ணியில் மிதக்கும் தவக்களையோ தென்னங்குச்சி பத்திரிகையில் தோனி செய்து போட்டி போட்ட நாட்கள் அது ஒரு வசந்த காலம்.
மழையால் நிறம்பிய கிணற்றில் பேணியில் வாளி கட்டி நீர் இறைத்து மகிழ்ந்ததும் அம்மா பார்த்ததும் தம்பியை மாட்டிவிட்டு ஓழிந்ததும் நினைத்துப் பார்க்கும் போதும் ஆனந்தம்.
எங்களையும் எழுத தூண்டும் உங்களின் அருமையான பதிவு தொடருங்கள் நாங்களும் பின் வருகிறோம்.அனைவரும் சேர்ந்து நனைந்திடலாம்.
அடடடாஆஆஆ! ஏதுகை மோனை, டைமிங்கோட மழைக்கால அனுபவம். அருமை அருமை சம்ஸ். இன்னும் எழுதுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
நேசமுடன் ஹாசிம் wrote:மரத்துப்போன மண்ணுக்கு
மகிழ்வு தரும் அதி மதுரமாய்
வானத்து வள்ளலால்
வகுந்தளிக்கும் செல்வமிது
பூமித்தாயின் மடிவளரும் குழந்தைகள்
குதூகலித்து மகிழும் கொடையிது
மழைத்தண்ணி நினைத்தாலே
அனைவரும் மகிழும் தண்ணி
அதுபற்றிய தொடர் பார்க்கும் போதே பரவசமூட்டுகிறது
அனைவருக்கும் நன்றிகள்
நீங்களும் எழுதலாமே ஹாசிம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
கண்டிப்பா எழுதுகிறேன் அக்காNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மரத்துப்போன மண்ணுக்கு
மகிழ்வு தரும் அதி மதுரமாய்
வானத்து வள்ளலால்
வகுந்தளிக்கும் செல்வமிது
பூமித்தாயின் மடிவளரும் குழந்தைகள்
குதூகலித்து மகிழும் கொடையிது
மழைத்தண்ணி நினைத்தாலே
அனைவரும் மகிழும் தண்ணி
அதுபற்றிய தொடர் பார்க்கும் போதே பரவசமூட்டுகிறது
அனைவருக்கும் நன்றிகள்
நீங்களும் எழுதலாமே ஹாசிம்!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கிராமத்து நினைவுகள் : நினைவில் மாடு
» கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
» கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
» கிராமத்து ஏழை
» கிராமத்து கைமணம்...!!
» கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
» கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
» கிராமத்து ஏழை
» கிராமத்து கைமணம்...!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum