Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
4 posters
Page 1 of 1
கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊரில் இருந்து ஒரு கூட்டமாக பழனிக்கு நடைப்பயணம் செய்வார்கள். தினமும் மாரியம்மன் கோவிலில் பஜனை, அதன் பின் சுண்டலோ, பொங்கலோ அல்லது மிட்டாயோ கொடுப்பார்கள். பழனிக்கு கிளம்புவதற்கு முதல் நாள் இரவு பஜனை முடித்து இரவு சாப்பாடு முடிந்ததும் வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பி மாரியம்மன் கோவிலில் போய் படுத்திருப்பார்கள். மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்து தீபம் பார்த்து அரோகரா போட்டபடி கிளம்பிப் போவார்கள். எங்க அப்பா தொடர்ந்து பல வருடங்கள் போய் வந்தார். பஞ்சாமிர்தத்துக்காகவும் சுவாமி டாலருக்காகவும் அவர் எப்போது வருவார் என்று காத்திருப்போம். பழனிக்கு மாலை போட்டிருப்பவர்கள் எல்லாரும் மாரியம்மன் கோவிலில் தங்க முடியாது என்பதால் கோவிலை ஒட்டி கொட்டகை போட்டு படுப்பார்கள். மாலை போட்டது முதல் கோவிலில் படுக்கும் சாமிகளும் உண்டு.
தேவகோட்டையில் இருந்து ஏழு நாள் நடைப்பயணம்... முதல் நாள் தேவகோட்டையில் இருந்து கிளம்பி மாலை குன்றக்குடி செல்லும் வரை வழி நெடுகிலும் எதாவது கொடுப்பார்கள். அதை வாங்குவதற்கென்று கையில் மஞ்சள் பையுடன் குன்றக்குடி வரை நடப்பவர்களும் உண்டு. தேவகோட்டையில் இருந்து வரும் நகரத்தார் காவடிக்கு பழனியில் சிறப்பு வரவேற்பும் மரியாதையும் உண்டு. மாலையிட்டவர்கள் ஏழு நாள் நடந்து முருகனைத் தரிசித்து பின்னர் பேருந்தில் திரும்புவார்கள். ஆனால் நகரத்தார் காவடியோ போகும் போது நடப்பது போல் வரும்போதும் நடந்தேதான் ஊர் வந்து சேர்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
எங்க அண்ணன், செல்வ அண்ணன், பாண்டியண்ணன் மூவரும் பழனிக்குச் சென்று திரும்பிய ரெக்கார்டை இதுவரை எங்கள் ஊரில் யாருமே முறியடிக்கவில்லை. இனிமேலும் முறியடிக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஆம் மனுசனுங்க நாலாவது நாள் அதிகாலை ஊருக்குத் திரும்பிட்டானுங்க... ரெண்டாவது நாளே திண்டுக்கல்லுக்குப் பொயிட்டாங்களாம். அப்ப எப்படி நடந்திருப்பாங்கன்னு பாருங்க... இதுல பாண்டியண்ணந்தான் பாவம்... ரெண்டு பேருக்கும் மச்சான் வேற... சொல்லவா வேணும்.. படுத்து பத்து நிமிசத்துல ஏய் ரொம்ப நேரமாச்சு... எல்லாரும் நடக்க ஆரம்பிச்சிட்டானுங்கன்னு கிளப்பி இரவெல்லாம் நடக்க வச்சி... மூணாவது நாள் மலையேறிட்டாங்களாம். பழனியில் மூவரும் எடுத்த போட்டோ எங்க வீட்ல இன்னமும் இருக்கு. பாவம் பாண்டியண்ணன்தான் இப்போ இல்லை.
எங்க அண்ணன் பழனிக்கு போகும் போது இரவு வீட்டில் விருந்து முடிந்து சாமி கும்பிட்டு கிளம்பி கோவிலுக்குப் போக, எங்கக்கா (எனக்கு நேரே மூத்தது - இங்கதான் அக்காவெல்லாம் இதுவரை அக்கான்னு சொன்னதே இல்லை)திண்ணை நிலப்படியில் நின்றபடி வீட்டு வாரத்தில் பனங்கைகளுக்கு இடையே போடப்பட்டிருக்கும் கம்பியைப் பிடிக்க, வெளிக் கொட்டகைக்கு போன கரண்ட் வயறு கட்டாகி கம்பியை மின்சாரக் கம்பியா மாத்தியிருந்திருக்கு.... கம்பியைப் பிடிச்சபடியே கத்துது... எல்லோரும் சாமி வந்திருச்சு போலன்னு நினைக்க, அப்புறம்தான் கைபிடிச்சிருக்கதைப் பாத்து வேகமாக ஓடி லைட்டை அமத்தி அக்காவை கரண்டில் இருந்து காப்பாத்தினோம். உடனே எல்லாரும் அண்ணன் கோயிலுக்குப் போகயில இப்படி ஆயிருச்சேன்னு பயந்தாங்க. ஆனா அவரு மூணு நாள் ரெக்கார்டோட நல்லவிதமாக முருகனைத் தரிசிச்சிட்டு வந்தார்.
அவர்களுக்குப் பிறகு யாருமே பழனிக்குப் போகமல் வருடங்கள் போக, எங்க சித்தப்பாவைக் கிளப்பி நான், சேகர் சித்தப்பு, சுரேஷ் மாமு, முருகன், இளையர் வீட்டு ஐயா, மீனா அயித்தை என ஒரு குழு முதன் முதலாக மாலை போட்டோம். நாங்கள் அதிகம் பஜனை எல்லாம் வைக்கவில்லை. கடைசி நாள் பஜனை வைத்து ஊர் முறைப்படி முதல்நாள் அம்மன் கோவிலில் வந்து படுத்து அதிகாலை அரோகரா கோஷத்துடன் கிளம்ப, ஊரே எங்களை முனியய்யா கோவில் வரைக்கும் வந்து வழியனுப்பி வைத்தது.
வரிசையாக சாமிகளைக் கும்பிட்டு சிதறு தேங்காய் உடைத்து தேவகோட்டையை அடைந்து சிலம்பணி பிள்ளையாரை வணங்கி, திருப்பத்தூர் சாலையில் சாமிகளோடு சாமியாய் நடக்க ஆரம்பித்து காலை பத்து மணிக்கு மாநகரி ஊரணிக் கரையில் போய் படுத்துவிட்டோம். ,மூன்று மணி வரைக்கும் அங்கு படுக்கை, பின்னர் கிளம்பி குன்றக்குடி போய் மலையைச் சுற்றிக்கொண்டு நேரே பிள்ளையார்பட்டி நோக்கி நடையைக் கட்டினோம். வழியில் ஓரிடத்தில் கல்வெட்டி எடுத்துட்டு தாவாகக் கிடந்த இடத்தில் நல்ல தண்ணீர் நிரம்பிக்கிடக்க, அதில் அசதிபோக நீச்சல் போட்டு குளித்துவிட்டு பிள்ளையார்பட்டி போய் கற்பகவிநாயகரை தரிசிச்சிவிட்டு அங்கேயே படுக்கையைப் போட்டோம். இரண்டு நாளுக்கு தயிர்சாதம், புளியோதரை, லெமன் சாதம் கட்டிக் கொண்டு போயிருவோம். அதைச் சாப்பிட்டு மீண்டும் தூக்கம். பெரும்பாலும் முதல்நாள் தங்கல் குன்றக்குடிதான் ஆனால் நாங்கள் பிள்ளையார்பட்டியில் தங்கினோம்.
இரவு ஒரு மணிக்கெல்லாம் இளையரய்யா, கோழி கூவிருச்சு.... இன்னும் தூங்குறீங்க எந்திரிங்கன்னு கிளப்பி நடக்க விட்டுட்டாரு. திருப்பத்தூர் தாண்டிப் போனாலும் விடியலை... முதல் நாள் தெரியாத வலி இரண்டாம் நாள் இரவு படுத்து எந்திரிச்சி நடக்கும்போது காலில் தெரிந்தது. கொஞ்சத் தூரத்துக்கு தவந்துதான் நடை... அப்புறம் குதிரைக்கு வேர்க்க வேர்க்க வேகமாக ஓடும்ன்னு சொல்லுவாங்கள்ல அது மாதிரி பிக்கப் ஆயிட்டா, ஆட்டம் பாட்டம் அரட்டையின்னு நடை போறதே தெரியாது. 11, 12 மணிக்கெல்லாம் சூடு ஆரம்பித்தது கால் பொறுக்கமுடியாத நிலையில எங்காவது தங்கிவிடுவோம் பின்னர் மாலை மூணு மணிக்கு மேல் நடக்க ஆரம்பித்து எட்டு மணிவரை நடை... இரவு சாப்பாடு... உறக்கம்.. 2 மணிக்கு எழுந்து மீண்டும் நடை... இப்படியே முதல் நாள் இரவு பிள்ளையார்பட்டி... இரண்டாம் நாள் இரவு வெள்ளாளபட்டி.... மூன்றாம் நாள் இரவு திண்டுக்கல்... நான்காம் நாள் இரவு கணக்கம்பட்டி... ஐந்தாவது நாள் காலை பத்து மணிக்குள் பழனியை அடைந்து இடும்பனில் குளித்து அடிவாரத்தை அடைந்து மலையைச் சுற்றி வந்து மடத்தில் அறை எடுத்து பொருட்களை வைத்துவிட்டு சண்முகநதிக்கு பயணமானோம்.
கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் நடந்துபோய் முதல்வருடம் என்பதால் மொட்டை அடித்து சண்முகநதியில் குளித்து மீண்டும் நடந்து வந்து மலையேறி முருகனைத் தரிசிச்சி, அங்கேயே இருந்து கேரளக் காவடி ஆட்டம் பார்த்து, தங்கத் தேர் பார்த்து இரவு எட்டுமணிக்கு மேல் கீழிறங்கி, பஞ்சாமிர்தம், டாலர் உள்ளிட்ட சாமான்கள் வாங்கிக் கொண்டு பேருந்து நிலையம் சென்று ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று பேருந்து ஏறி மறுநாள் காலை வீட்டிற்குச் சென்றோம். ஏழுநாள் நடக்க வேண்டிய நடைப்பயணத்தை நாலு நாள் நடந்து ஐந்தாம்நாள் ஊருக்குத் திரும்பினோம்.
அந்த வருட நடை என்பது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது... எங்க சித்தப்பாவும் இளையரய்யாவும் அவர்கள் வயதில் இருந்து இறங்கி வந்து எங்களோடு அரட்டை அடித்தபடி வந்தார்கள். இப்பவும் சேகரிடம் சித்தப்பு கூந்தப்பனை என்றால் போதும் மகனே... அப்படின்னு சிரிக்க ஆரம்பிச்சிருவார். அதன் பிறகு தொடர்ந்து ஆறாண்டுகள் பழனிக்கு நடந்திருக்கிறோம். முருகனைத் தேடி நடந்து சென்ற அந்தத் தினங்கள் என்றும் இனிமையானவை. அதன் பிறகு எல்லாரும் திருமணம், குடும்பம். வேலை என்று சென்றுவிட முருகனை தேடிச் செல்லும் நடைப்பயணம் முற்றுப் பெற்றது.
இந்த வருடம் மீண்டும் சேகர் தலைமையில் பசங்க எல்லாம் கிளம்பி பழனிக்குப் போயிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் அடடா நம்ம இருந்திருந்தால் அந்த அணியில சேர்ந்து முருகனை தரிசிச்சிட்டு வந்திருக்கலாமே என்று நினைக்க வைத்தது.
கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
படிக்கும் போதே சுவாரஷ்யம் தரும் பயணமென தோன்ற வைக்கின்றது!
இறைவனை தேடி பக்தி வைராக்கியத்தொடு மனதை கட்டுப்படுத்தி செல்லும் யாத்திரை என்பதால் மனதோடு உடலுக்கும் ஆரோக்கியமானதாய் இருக்கும் என நினைக்கின்றேன்.
அக்காவுக்கு கரெண்ட் அடித்த தென படிக்கும் போது மனசு ஜில்லென குளிர்ந்து போனது. அடுத்த வரி படிக்க பயம் ஓடிபோனது.
தயிர்சாதம், லெமன் சாதம், புளியோதரை கட்டி எடுப்பது சரி. அங்கிருக்கும் வெயிலுக்கும் அவையெல்லாம் கெட்டுப்போகாதோ குமார்?
அனுபவங்கள் அசத்தலாய் இருக்கின்றது. பகிர்ந்தமைக்கு நன்றி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
வணக்கம் அக்கா...Nisha wrote:படிக்கும் போதே சுவாரஷ்யம் தரும் பயணமென தோன்ற வைக்கின்றது!
இறைவனை தேடி பக்தி வைராக்கியத்தொடு மனதை கட்டுப்படுத்தி செல்லும் யாத்திரை என்பதால் மனதோடு உடலுக்கும் ஆரோக்கியமானதாய் இருக்கும் என நினைக்கின்றேன்.
அக்காவுக்கு கரெண்ட் அடித்த தென படிக்கும் போது மனசு ஜில்லென குளிர்ந்து போனது. அடுத்த வரி படிக்க பயம் ஓடிபோனது.
தயிர்சாதம், லெமன் சாதம், புளியோதரை கட்டி எடுப்பது சரி. அங்கிருக்கும் வெயிலுக்கும் அவையெல்லாம் கெட்டுப்போகாதோ குமார்?
அனுபவங்கள் அசத்தலாய் இருக்கின்றது. பகிர்ந்தமைக்கு நன்றி
தங்கள் கருத்துக்கு நன்றி.
புளியோதரை, லெமன் மூன்று நாள் கூட இருக்கும்.
தயிர் முதல் நாள் மட்டுமே. ஆனால் இரண்டாம் நாளும் பயன்படுத்தலாம்.
சாதத்தில் அதற்கான செய்முறைகளுடன் வாழை இலையை தீயில் சற்றே வாட்டி நல்லெண்ணெய் தேய்து அம்மா கட்டிக் கொடுப்பார்கள். அப்படியே இருக்கும்.
எல்லாருடைய வீட்டிலும் அப்படித்தான் செய்வார்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
அட! இந்த வாழையிலையை நெருப்பில் வாட்டி சாப்பாடு கட்டினால் கெட்டுபோகாமல் இருக்குமா?
சின்ன வயதில் ஊரில் இருக்கும் போது அம்மா இந்த மாதிரித்தான் செய்வார். வாழையிலையை பறித்து இருபுறமும் நெருப்புத்தணலில் காட்டி வாட விட்டு அதில் சாப்பாடு கட்டுவார். நான் நினைப்பேன் இலை கிழிந்து போகாமல் இருக்க அப்பைட் செய்வார்கள் என! இப்போதுதான் இதன் முழு அர்த்தமும் புரிகின்றது குமார்!
வாழையிலையில் கட்டி வரும் சாப்பாடு எதுவானாலும் ருசியாக இருக்கும் அல்லவா? அதிலும் பயண நேரங்களில் அலுத்துகளைத்திருக்கும் நேரம் ருசியான வாழையிலை கட்டுச்சாதம் அமிர்தமே தான்!
படத்தில் நடக்கும் பக்தர்கள் வெறுங்காலுடன் நடக்கின்றார்களே! ஏழு நாளும் வெறுங்காலுடன் தான் பாத யாத்திரை செல்வீர்களா? கால் கொப்புளித்து வலிக்காதா?
சின்ன வயதில் ஊரில் இருக்கும் போது அம்மா இந்த மாதிரித்தான் செய்வார். வாழையிலையை பறித்து இருபுறமும் நெருப்புத்தணலில் காட்டி வாட விட்டு அதில் சாப்பாடு கட்டுவார். நான் நினைப்பேன் இலை கிழிந்து போகாமல் இருக்க அப்பைட் செய்வார்கள் என! இப்போதுதான் இதன் முழு அர்த்தமும் புரிகின்றது குமார்!
வாழையிலையில் கட்டி வரும் சாப்பாடு எதுவானாலும் ருசியாக இருக்கும் அல்லவா? அதிலும் பயண நேரங்களில் அலுத்துகளைத்திருக்கும் நேரம் ருசியான வாழையிலை கட்டுச்சாதம் அமிர்தமே தான்!
படத்தில் நடக்கும் பக்தர்கள் வெறுங்காலுடன் நடக்கின்றார்களே! ஏழு நாளும் வெறுங்காலுடன் தான் பாத யாத்திரை செல்வீர்களா? கால் கொப்புளித்து வலிக்காதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
இங்கு ஒவ்வெறு மாதமும் முதலாம் தேதி நாங்கள் வாழையிலை சாப்பாடு சாப்பிடுவோம் அதை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருகிறோம் ரொம்ப ருசியாக இருக்கும் கத்தார் ரியால் 15 க்கு கிடைக்கும்
- Spoiler:
Last edited by *சம்ஸ் on Sat 28 Feb 2015 - 9:57; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
வணக்கம் அக்கா...Nisha wrote:அட! இந்த வாழையிலையை நெருப்பில் வாட்டி சாப்பாடு கட்டினால் கெட்டுபோகாமல் இருக்குமா?
சின்ன வயதில் ஊரில் இருக்கும் போது அம்மா இந்த மாதிரித்தான் செய்வார். வாழையிலையை பறித்து இருபுறமும் நெருப்புத்தணலில் காட்டி வாட விட்டு அதில் சாப்பாடு கட்டுவார். நான் நினைப்பேன் இலை கிழிந்து போகாமல் இருக்க அப்பைட் செய்வார்கள் என! இப்போதுதான் இதன் முழு அர்த்தமும் புரிகின்றது குமார்!
வாழையிலையில் கட்டி வரும் சாப்பாடு எதுவானாலும் ருசியாக இருக்கும் அல்லவா? அதிலும் பயண நேரங்களில் அலுத்துகளைத்திருக்கும் நேரம் ருசியான வாழையிலை கட்டுச்சாதம் அமிர்தமே தான்!
படத்தில் நடக்கும் பக்தர்கள் வெறுங்காலுடன் நடக்கின்றார்களே! ஏழு நாளும் வெறுங்காலுடன் தான் பாத யாத்திரை செல்வீர்களா? கால் கொப்புளித்து வலிக்காதா?
ஆம்... வாழையிலையில் சாப்பிடுவது என்பது ரொம்ப சந்தோஷமான ஒன்று.
மாலை போட்டது முதல் கோவிலுக்குச் சென்று திரும்பும் வரை வெறுங்காலில்தான் நடக்க வேண்டும்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
ரொம்ப சந்தோஷம்...*சம்ஸ் wrote:இங்கு ஒவ்வெறு மாதமும் முதலாம் தேதி நாங்கள் வாழையிலை சாப்பாடு சாப்பிடுவோம் அதை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருகிறோம் ரொம்ப ருசியாக இருக்கும் கத்தார் ரியால் 15 க்கு கிடைக்கும்
- Spoiler:
இங்கு கிடைத்தாலும் விலை அதிகம்.... அதனால் நாங்கள் வாங்குவதில்லை... ஊருக்குச் சென்றால்தான் வாழையிலை எல்லாம்....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
*சம்ஸ் wrote:இங்கு ஒவ்வெறு மாதமும் முதலாம் தேதி நாங்கள் வாழையிலை சாப்பாடு சாப்பிடுவோம் அதை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருகிறோம் ரொம்ப ரூசியாக இருக்கும் கத்தார் ரியால் 15 க்கு கிடைக்கும்
- Spoiler:
வாழையிலையில் சாப்பாடு எனில் கடையில் போய் வாங்கி சாப்பிடுவீர்களோ? எப்பவோ யாரோ நான் வாழைஇலையில் சாப்பிட்டதே இல்லை என ஒருவருடம் முன்னாடி சொன்ன நினைவு! அது யார் என தெரியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
enaku romba naal doubt onnu kumar...
samikku malai podukiravarkal seruppu podamal nadapathen?
verum kaalil nadanthaal theruvil kanda asingaththaiyum mithika vendi varum seruppu pottu nadanthaal athu irukkathu.
saamikkaakga suththamaaga irukka ninaippavarkal intha suttham yen pena maattenguringa?

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
வணக்கம் சகோதரி...பானுஷபானா wrote:enaku romba naal doubt onnu kumar...
samikku malai podukiravarkal seruppu podamal nadapathen?
verum kaalil nadanthaal theruvil kanda asingaththaiyum mithika vendi varum seruppu pottu nadanthaal athu irukkathu.
saamikkaakga suththamaaga irukka ninaippavarkal intha suttham yen pena maattenguringa?
அது காலங்காலமாக பின்பற்றும் முறை...
இந்துக்கள் கோவிலுக்குள் செருப்பணிந்து செல்வதில்லை.
மேலும் இறைவனைக் காணப் போகும் போது கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை எனச் செல்ல வேண்டும்.
சுத்தம் பார்த்துத்தான் நடக்க வேண்டும்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை
Nisha wrote:*சம்ஸ் wrote:இங்கு ஒவ்வெறு மாதமும் முதலாம் தேதி நாங்கள் வாழையிலை சாப்பாடு சாப்பிடுவோம் அதை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருகிறோம் ரொம்ப ரூசியாக இருக்கும் கத்தார் ரியால் 15 க்கு கிடைக்கும்
- Spoiler:
வாழையிலையில் சாப்பாடு எனில் கடையில் போய் வாங்கி சாப்பிடுவீர்களோ? எப்பவோ யாரோ நான் வாழைஇலையில் சாப்பிட்டதே இல்லை என ஒருவருடம் முன்னாடி சொன்ன நினைவு! அது யார் என தெரியுமோ?
அது ஒரு வருடத்தின் முன் நான் சொல்வது கடந்த நான்கு மாதங்களாக நாங்கள் சாப்பிடுகிறோம் என்று.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி
» கிராமத்து நினைவுகள் : நினைவில் மாடு
» கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
» லாரி மோதி விபத்து: திருச்செந்தூர் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேர் பலி
» பழனி
» கிராமத்து நினைவுகள் : நினைவில் மாடு
» கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்
» லாரி மோதி விபத்து: திருச்செந்தூர் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேர் பலி
» பழனி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum