சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Khan11

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by சே.குமார் Mon 10 Aug 2015 - 21:35

First topic message reminder :

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Sembula-peyaneer

கிராமத்து வாழ்க்கையில் அனுபவித்த சந்தோஷங்களில் முக்கியமானவைகளில் மழை நாட்களும் ஒன்று. இன்று இந்த பாலைவனப் பூமியில் மழையைப் பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. ஊருக்குப் போன் பண்ணும் போது மழை பெய்கிறது என்றால் 'நல்ல மழையா..? தண்ணி நிறைந்து ஓடுதா...?' எனச் சந்தோஷமாகக் கேட்கச் சொல்கிறது. பள்ளியில் படிக்கும் காலத்தில் மழையில் நனைந்த நினைவுகளையும், அதன் பின்னான விளையாட்டுக்களையும் குறித்து கிராமத்து நினைவுகள் பகுதியில் மழைக்காலம் என்னும் தலைப்பில் முன்பே பகிர்ந்திருக்கிறேன். எனவே இப்போது மழைத் தண்ணி பற்றிப் பார்ப்போம்.

மழை பெய்ததும் மேட்டுப் பகுதியில் இருந்து தாழ்வான பகுதி நோக்கி தண்ணீர் ஓடும்... அது பார்க்க சின்ன ஆறு போல் காட்சியளிக்கும். பெருமழை பெய்து முடிந்து தண்ணீர் ஓடும்போது அதன் மீது விழும் சிறு தூறலின் துளிகள் தெறித்து எழுவது அவ்வளவு அழகாக இருக்கும். இதேதான் கண்மாய் தண்ணீர் மீது மழைத்துளி விழும்போதும்... அந்த அழகை எல்லாம் நேரில் ரசித்திருந்தால் மட்டுமே சிலாகித்துப் பேசமுடியும். மற்றபடி சினிமாவில் மழை பெய்வதைப் பார்த்தேன்... முகநூலில் மழை பெய்ததைப் பகிர்ந்திருந்தான் பாரு... செம... என்றெல்லாம் பேசத்தான் முடியுமே தவிர அதை அனுபவித்த அந்த சுகானுபவத்தை ஒருபோதும் உடம்பில் சில்லிட வைக்க முடியாது.

நகரங்களை விட கிராமங்களில்தான் மழைத்தண்ணீர் ஓடும் அழகை அதிகம் ரசிக்க முடியும். காரணம் என்னவென்றால் பத்துப் பதினைந்து வீடுகள் நெருக்கமாய் இருக்கும்... அவற்றிற்கு இடையே சந்துகள் இருக்கும்... பெய்யும் மழைத்தண்ணி வீடுகளின் ஓடுகளிலும் கூரைகளிலும் விழுந்து வெளியாகி சந்துக்களின் வழியாக தாழ்வான பகுதிகளான வயல்களை நோக்கியோ அல்லது ஊரை ஒட்டியிருக்கும் சிறு ஊரணிகளை நோக்கியோ பயணிக்கும்... சலசலவென ஓடிவரும் தண்ணீரில் குதிகால் நனைய எதிர்புறமாக ஓடுவது... குறுக்கே அணை கட்டி தண்ணீரை நிரப்பி அணையில் ஓட்டையிட்டு திறந்து விடுவது... காகிதக் கப்பல், கருவை , வேப்பமர இலைகளைப் பறித்து அதில் விடுவது... என எல்லாமுமே மழையில் நனைந்தபடியே நடக்கும். அப்படி அனுபவித்த அந்த இன்பம் அலாதியானது.  இப்ப லேசா நனைந்தாலே சளி பிடிக்கும் என்கிறோம். ஒரு தும்மல் தும்மினாலே டாக்டரிடம் ஓடுகிறோம். அன்று தும்மியபடியே மழையில் ஆடிய நாட்கள் நிறைய உண்டு. ஏன் மழை விட்டதும் ஈர மணலில் கபடி விளையாடுவதும்... சண்டையிடுவதும் கூட நடக்கும்.

மழை ஓட்டு வீட்டின் மீது சடச்சடவென பெய்யும் போது அந்த வீட்டுக்குள் அமர்ந்து அந்த இசையைக் கேட்பது கூட ஒரு சுகம்தான். மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தவுடன் மழை நீர் ஓடுகளில் நெளிவான பாதையில் பயணித்து கீழே விழ ஆரம்பிக்கும். மழையின் வேகத்துக்கு ஏற்ப நீரும் ஓடுகளின் வழியே வழிந்து தரையைத் தொட்டு பயணிக்கும். அந்த மழை நீரை பாத்திரங்களில் பிடித்து வைத்து சமையலுக்கும் குடிக்கவும் பயன்படுத்துவார்கள். மழை விழ ஆரம்பித்ததும் பிடிக்க மாட்டார்கள். ஓட்டில் இருக்கும் அழுக்கெல்லாம் போகட்டும் என்று கொஞ்சம் நேரம் தண்ணீரை பிடிக்காமல் இருந்து பின்னர் பிடிப்பார்கள். அண்டா, குண்டா, அலுமினியப் பாத்திரங்கள், காசாணித் தவலைகள் என எல்லாவற்றிலும் நீரை நிரப்பி வைப்பார்கள்.

மழை நீரில் சமைத்தால் சாதம் பூப்போல இருப்பதுடன் மறுநாள் கஞ்சி குடிக்கும் போது அதில் இருக்கும் நீச்சத்தண்ணியும் (நீராகாரம்) மணமாக இருக்கும். கண்மாய்த் தண்ணீரில் சமைத்தாலும் இப்படித்தான் இருக்கும்.  கண்மாயில் தண்ணீர் குறைந்து தெளிவில்லாமல் கிடக்கும் நீரை மண்டித் தண்ணீர் என்போம். சமையலுக்காகவே அதைக் கொண்டு வந்து பானையில் ஊற்றி தேத்தாங்க் கொட்டையை வைத்து தண்ணீருக்குள் உரசி உரசி மண்டித் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றி சமையலுக்கு பயன்படுத்துவார்கள். 

மழை நாட்களைத் தொடர்ந்து வீட்டிற்கு யாராவது வந்தால் கூட மழைத்தண்ணி இருந்தா கொடுத்தா... பைப்புத்தண்ணி தாகம் நிக்கிது இல்லை என்பார்கள். கிராமங்களில் வீட்டுக்கு வீடு மணலைப் பரப்பி அதன் மீது மண்பானையில் தண்ணீர் நிரப்பி குடிக்கப் பயன்படுத்துவார்கள். அதில் மழைத் தண்ணீரை ஊற்றி வைத்தால் தொண்டைக்குள் இறங்கும் போது அப்பப்பா... என்ன... சில்லு... ஆஹா... செம்பு... செம்பா தண்ணி போய்க்கிட்டே இருக்கும். அதிலும் குறிப்பாக தண்ணீர் வாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெட்டி வேர் கொண்டு வந்து போட்டு வைப்பார்கள்.

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Gallerye_165600847_40827


மழைக் காலம் முடிந்தாலும் அண்டா, குண்டாக்களிலும் இருக்கும் தண்ணீரை மழைத்தண்ணி.. மழைத்தண்ணி என்று வைத்து வைத்துக் குடிப்பார்கள். அதுவும் ஓட்டில் இருந்து வழியும் இந்த மழை நீரைப் பிடிப்பதற்காகவே தகரம் வாங்கி அழகாக வளைத்து நாலைந்து ஓடுகளைச் சேர்த்து அடித்து வைத்திருப்பார்கள். அதாவது நாலைந்து ஓடுகள் வழியாக வழியும் தண்ணீரெல்லாம் அந்த தகரத்தின் வழியே வந்து மொத்தமாக குடத்தில் விழும்.  மேலே படத்தில் இருப்பது போல் மொத்தமாக தகரம் வளைத்து ஓரு ஓரத்தில் மட்டும் விழ வைப்பார்கள்.

எங்கள் வீட்டில் கூட ஆரம்பத்தில் ஓடுகளின் மூலம் விழும் தண்ணீரைப் பிடிக்க அம்மா, அக்காவெல்லாம் பரபரப்பாக இருப்பார்கள். நாங்கள் பாத்திரங்களை எடுத்துக் கொடுப்போம். நனைந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது கூட சுகம்தான் இல்லையா... அப்படியாவது மழையில் நனையலாமே என்ற நப்பாசைதான்... டேய் நனையாதேடா என அம்மா கத்திக் கொண்டு நின்றாலும் நாம நனையாம இருப்போமா என்ன... அப்போதுதான் எல்லா வேலையும் பாக்குறது. அப்படித்தான் இந்த தண்ணீர் பிடிக்கும் நிகழ்வும்.

கூரை வீடாக இருந்தால் அதில் தண்ணீர் பிடிக்க முடியாது. அவர்கள் எல்லாம் பக்கத்து வீடுகளில் குடம் கொடுத்துப் பிடித்துக் கொள்வார்கள். எங்கள் வீட்டில் கூட முன்னால் கிடந்த இடத்தில் ஒரு கிடுகு கொட்டகை போட்டபோது கிடுகு கொட்டகை மற்றும் ஓட்டு வீடு இணையும் இடத்தில் தகரம் அடைத்து தண்ணீர் உள்ளே விழாதவாறு வைத்துவிட்டோம். அத்தோடு மழை நீர் பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் மழைத்தண்ணி குடிக்காமல் இருக்க முடியுமா என்ன மழை பெய்ய ஆரம்பித்ததும் அருகே இருக்கும் பஞ்சம்மா வீட்டுக்கு குடங்களைக் கொண்டுக்கிட்டு ஓடுவோம். குடம் குடமாக பிடித்துத் தூக்கி வருவோம். சில நேரங்களில் பஞ்சம்மாவே பிடித்து நிறைத்து வைப்பார். மழை விட்டதும் போய் தூக்கி வருவோம். பெரும்பாலும் அக்கா தூக்கி வந்துவிடும். சில நேரங்களில் நானும் தம்பியும் உதவியாய்...  மழைத்தண்ணி மீது அம்புட்டு ஆசை.

பள்ளியில் இருந்து வரும்போது செம்மண்ணில் நிறைந்து நிற்கும் மழைத்தண்ணியில் ஆட்டம் போட்டு வந்த காலம் எல்லாம் கனாக்காலம் போங்க. ம்... இப்பவும் மழையில நனைய ஆசைதான்... ஊரில் இருக்கும் வரை மழையில் நனைந்து கொண்டு வண்டியில் பயணம் செய்திருக்கிறேன். இங்க தினமும் வேர்வையில் நனைகிறேன்...

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down


கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 15:12

Nisha wrote:
*சம்ஸ் wrote:கிராமத்து நினைவுகள் நிஷாவின் மறுமொழிகள் என்று அனைத்தும் என்னை மீண்டும் என் சிறுவயதிற்கு அழைத்துச் செல்கிறது. மழைத் துளியில் மருதாணி வைத்த பார்த்த நாள் அடுத்த வீட்டுக்கு செல்ல "ஓலைத் தட்டு ,சுளகு” என்று தலையின் மேல் பிடித்துக் கொண்டு ஓடிய வயது. பெய்த மழையால் பள்ளங்களில் தேங்கிய நீரில் தூண்டில் கட்டி மீன் பிடித்து விளையாடிய வயது.

கிடுகால் மேய்ந்த கூரை... களிமண்ணும் சாணமும் கலந்து மெழுகிய தரை.. செங்கற்கள் அடுக்கிய சுவர். அமர்வதற்கு குட்டிக் கட்டு என்று அழகிய அரன்மணை, எங்கள் வீடு.கூரையில் உள்ள சிறிய சிறிய ஓட்டையால்  வானம் தெரியும் பகலில் வரும் சூரிய ஓளியை உள்ளங் கையில் பிடித்து ரசித்து மகிழ்ந்ததும்.மழை காலத்தில் பாத்திரம் வைத்து தரை நனையாமல் பாது காத்ததும் பசுமையான நினைவுகள்.

கொட்டும் மழையில் நனைந்து கயிறில் பஸ் விட்டு அப்பாவிடம் அடிவாங்கிய நாட்கள் அத்தனையும் நினைவுக்கு கொண்டு வந்தது உங்களின் பதிவு. அன்று போல் இன்று இல்லை மனம் நிறைந்த சந்தோசம் மகிழ்ச்சியான வாழ்கை மீண்டும் வருமா?

தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்னாத நல்ல உள்ளங்கள் குடியிருந்த காலம் இரவும் பகலும் ஓடி ஓடி நலன் விசாரித்த நாட்கள் என்று அத்துனையும் சிறப்பே!

அன்று மழையில் நனைவதோ ரெம்ப பிடிக்கும் இன்று மழையில் நனைந்தால் சளிபிடிக்கும்.  சேத்து தண்ணியில வாய்பிளந்து நீந்தும் முள்ளும் தண்ணியில் மிதக்கும் தவக்களையோ தென்னங்குச்சி பத்திரிகையில் தோனி செய்து போட்டி போட்ட நாட்கள் அது ஒரு வசந்த காலம்.
மழையால் நிறம்பிய கிணற்றில் பேணியில் வாளி கட்டி நீர் இறைத்து மகிழ்ந்ததும் அம்மா பார்த்ததும் தம்பியை மாட்டிவிட்டு ஓழிந்ததும் நினைத்துப் பார்க்கும் போதும் ஆனந்தம்.

எங்களையும் எழுத தூண்டும் உங்களின் அருமையான பதிவு தொடருங்கள் நாங்களும் பின் வருகிறோம்.அனைவரும் சேர்ந்து நனைந்திடலாம்.

அடடடாஆஆஆ! ஏதுகை மோனை,  டைமிங்கோட  மழைக்கால அனுபவம். அருமை அருமை சம்ஸ்.  இன்னும் எழுதுங்கள்!

நன்றி நன்றி ரசனைக்கும் வாழ்த்திற்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by Nisha Sat 15 Aug 2015 - 12:15

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 11826075_427247517477515_4495820263463544839_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by *சம்ஸ் Sun 16 Aug 2015 - 11:52

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Bio_paddy3

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Bio_paddy2


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by Nisha Sun 16 Aug 2015 - 14:37

ஹல்ல்ல்லோஒ சம்ஸ்! இது மழை  நீர் இல்லை.  வயல் நீர்.. ச்ச்ச்ச்ச்ச்சும்மா படம் போடாமல்  மழை நினைவுகளை எழுதுங்க!

ஏதேனும் ரகசியம் இருந்தாலும் எழுதுங்க.. நான் அதை படிச்சிட்டு யாருக்கும் சொல்ல  மாட்டேன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by சே.குமார் Sun 16 Aug 2015 - 19:05

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 35299_900
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by *சம்ஸ் Mon 17 Aug 2015 - 10:13

Nisha wrote:ஹல்ல்ல்லோஒ சம்ஸ்! இது மழை  நீர் இல்லை.  வயல் நீர்.. ச்ச்ச்ச்ச்ச்சும்மா படம் போடாமல்  மழை நினைவுகளை எழுதுங்க!

ஏதேனும் ரகசியம் இருந்தாலும் எழுதுங்க.. நான் அதை படிச்சிட்டு யாருக்கும் சொல்ல  மாட்டேன்

இதுவும் கிராமத்து நினைவுகளில் ஒன்றுதான் மேடம்.
அப்பாவிற்கு உதவியாய் வயல் வெளிக்கு சென்று ஓடையில நீர் எடுத்து தூசிகளை நீக்கி விட்டு குடித்த ஞாபகம்,நிலம் உழுதும் போது வெள்ளை வெள்ளையென பறக்கும் கொக்குகளின் அழகும்,சேத்து வாசனையும் சுண்டல் சோறும் நான் இன்றும் ரசிக்கும் பசுமையான நினைவுகள். ஒரு இடத்தில் கட்டியிருக்கு நீரை  அடுத்த இடதிற்கு அப்பா இறைக்கும் போது நீருடன் நீந்திவரும் மீன்களை பிடித்து விளையாடியதும் இன்னும் எனக்கு மறக்காதா நினைவுகள் தான்.நடு வயலில் அட்டை கட்டி அரண்மணையாய் பராமரித்து மண்சட்டியில் மணக்க மணக்க அப்பா வைத்த குளத்து மீன் கறி என்று அத்தனையும் கடந்த கால பசுமை நினைவுகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by Nisha Mon 17 Aug 2015 - 18:22

சே.குமார் wrote:கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 35299_900

இப்பவும்  இந்த ஆசை வரத்தானே செய்கின்றது. பேப்பர் கிடைச்சால் இருந்த இடத்திலிருந்து அது பட்டமாகவும் , பெட்டியாகவும், விசிறியாகவும் மாறிடத்தான் செய்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by *சம்ஸ் Mon 17 Aug 2015 - 18:42

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 7169130145_11958936a3_z

குளக்கரை குளியல்

காலை நேரம் கதிரவனின் வருகை  மெல்ல மெல்ல விடைபெரும் பனித்துளி சாரல்  குளத்து தண்ணீரால் நனைக்க முடியாத தாமரை இலைகளையும் பூக்களையும் இரவு முழுக்க பெய்த பனி துளிகள் நனைத்து வைத்திருந்தது.
ஆங்காங்கே தாமரை பூக்களும் அல்லி பூக்களுமாய் அலங்கரிக்கபட்டிருந்தன  எங்கள் ஊர் குளம் முழுவதுமாய். இவைகள் அனைத்தும் என்னமோ எங்களுக்காக செய்தவை போல் என் கண்களுக்கு காட்சி அளித்தது. 

காலை குளிரோ பற்களை பரத நாட்டிய கலைஞனாக்கியது துண்டை கட்டி கொண்டு குளிரை அடக்கிக்கொண்டும் முதல் காலை தண்ணீரில் வைக்கும் போது உச்சந்தலையில் சில முடிகள் எழுந்து நின்று வணக்கம் வைத்தன தண்ணீருக்கு. குளத்தில்  முதல் கால் வைத்ததுமே குளிரை போக்க  உடலில் சில துளி தண்ணீரை அள்ளி தீர்த்தம் போல் தெளித்ததால் துள்ளி குதித்து குனிந்து நெளிந்தே.ன் கண்ணை மூடிக்கொண்டு.அச்சத்தையும் குளிரையும் ஓரமாக மூட்டை கட்டி வைத்து விட்டு எகிறி குதித்தேன். நடுக்குளத்தில். ஒரு பெரிய நிம்மதி பெரு மூச்சு. இனி ஒரு வாரத்துக்கு குளிக்க வேண்டியதில்லை என்று நினைத்த படி தலையை நீரில் மூழ்கியும் மேல எழுப்பியவனுமாக இருக்க யாரோ நல்லவங்க இதை பார்த்து சென்று என் அப்பாவிடம் உங்க மகனும் பசங்களும் குளத்தில் நல்ல குளியல் என்று சிரித்து சொல்லியிருப்பார் போல!

இன்பத்தில் மூழ்கிய எனக்கு இதோ இங்க பாருடா உங்க அப்பா என்று சொன்னான் கூட குளித்திருந்த என் தோழன். துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓடியதும் குளக்கரை முழுதும் விரட்டி விரட்டி அப்பா அடித்ததும் காலத்தால் அழியாத நினைவுகள்.

எங்க ஊருக்கு வடக்கே குளமும் கிழக்கே கடலுமாய் இருந்தும் எனக்கு நீச்சல் தெரியாது என்று சொன்னால் நம்பவா போறீங்க!

பெரியவனாகி தொழிலுக்காய் புறப்பட்டு வந்த இடத்தில் விடுமுறை ஒன்றில் நிறுவாக உறுப்பினர்கள் அனைவரும் சென்றிருந்தோம், மகிழ்ச்சிக்காக சென்ற இடத்தில் அனைவரும் நீச்சல் குளத்தில் குளிப்பதை பார்த்ததும் எனக்கும் ஆசை பிறந்தது நானும் இறங்கி விட்டேன் குள்ளிக்க அவர்களைப் போல் நானும் செய்ய வேண்டும் என்று நினைத்து சருக்கு பலகை ஒன்றில் ஏறி வழுக்கி நீரில் விழுவதை பார்த்த நான் அப்படியே நாமும் செய்திடலாம் என்று எண்ணி ஏறி சருக்கி கொண்டு வந்த நான் நீச்சல் தடாகத்தின் அடிக்கு சென்று விட்டேன். மேலே எழுந்து வர முடிய வில்லை என் உயிர் என்னை விட்டு பிரிவது போன்று உணர்ந்தேன். கத்தினேன் இதை பார்த்து கொண்டு இருந்த என் நண்பனும் முகாமையளரின் மகனும் ஓடி வந்து என்னை தூக்கி காப்பாற்றியது ஞபாகம் வருகிறது.

நீர் என்றால் எனக்கு அம்புட்டு பயம் வேண்டாம்.தேங்கிய நீர் குளியல் என்று முடிவில் இருக்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by Nisha Mon 17 Aug 2015 - 18:49

அது சரி! இதப்பதிவை ஏன் தூக்கணும். இப்ப ஏன் திரும்ப வரணும்? அல்லிப்பூ அள்ளிப்பூவா அப்போ இருந்தது. இப்ப அல்லியாய் மலரசெய்தவர் யாரோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by *சம்ஸ் Mon 17 Aug 2015 - 18:52

அதில் இன்னும் எழுதுவதற்காக நீக்கினேன் அந்த நேரம் மீள் வாசிப்பில் பிழை தெரிந்தது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by Nisha Mon 17 Aug 2015 - 18:55

அடட்டா! சூப்பர் .. இன்னும் எழுதுங்கோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by *சம்ஸ் Mon 17 Aug 2015 - 18:57

எழுதியதற்கு பதில் எழுதுங்கோ....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by Nisha Mon 17 Aug 2015 - 19:06

குமாரின் கிராமத்து மழைத்தண்ணீர் படு வேகம்!

ம்ம் சம்ஸ் தாமரைக்குள குளியல்... அல்லிப்பூவோடு உறவாடல்.. கவிதை போல்  எழுதும் பாங்கு..... எல்லாமே அசத்தல்.. ஏனுங்கோ  நீங்க அப்பல்லாம் ஒருவாரத்துக்கு ஒருக்கா குளிக்கும் படி நீரைக்கண்டால் பயந்து ஓடுபவரோ? ஐ ஜாலி  

கிழக்கில் கடல், மேற்கில் நதி நடுவில் குளம்,, வீட்டுக்கு வீடு கிணறு இருந்தாலும் நீச்சல் தெரியாமல் தான்  நம்மூரில் பல இருக்கின்றார்கள் என்பதால் நீங்கள் சொன்னதை நம்பிட்டேன்.  

இங்கே  கடலும் இல்லை.  நதியும் இல்லை. ஏரிகளும் குளங்களையும் வைத்துக்கொண்டே நீச்சலில் ஜம்பவான்களாய் இருக்க்ன்றார்கள்.  என்னத்தை சொல்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by சே.குமார் Mon 17 Aug 2015 - 19:55

அக்கா... சூப்பரா சொல்லியிருக்கீங்க....
சம்ஸ் அருமையா எழுதியிருந்தார்....
அவருக்கு வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி - Page 2 Empty Re: கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum