Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
காது வலி குணப்படுத்த எளிய சிகிச்சை!
4 posters
Page 1 of 1
காது வலி குணப்படுத்த எளிய சிகிச்சை!
மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது. தூக்கத்தின்போது கண், மூக்கு, வாய், சருமம் என நான்கு புலன்களும் ஓய்வில் ஆழ்ந்த பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது காது. அதேபோல், விழிக்கும்போது முதலில் செயல்படத்தொடங்கும் புலனும் காதுதான்.
சத்தங்களை கேட்பதற்கு மட்டுமே நம்முடைய காதுகள் பயன்படுவது இல்லை. நாம் நிலையாக நிற்பதற்கும் கூட காதுதான் முக்கிய பங்காற்றுகிறது. காது வழியாக நாம் சத்தத்தை கேட்பதால்தான் பேச முடிகிறது. குழந்தைகளும் சத்தத்தை உணர்ந்துதான் பேசவே ஆரம்பிக்கின்றன. எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
காது மண்டலம், வெளிக்காது (புறச்செவி), நடுக்காது (நடுச்செவி), உட்காது (உட்செவி) என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சத்தம் எழுப்பும்போது, அது நம் வெளிக்காதின் வழியே ஊடுருவி காது ஜவ்வை அசைக்கிறது. இது நடுக்காதில் இருக்கும் மிகச்சிறிய எலும்புகளான ‘மெல்லன்ஸ், இன்கஸ், ஸ்டெப்ஸ்‘ என்கிற மூன்று எலும்புகளை அசைக்கும். அதில் ஸ்டெப்ஸ் எலும்பினால் அதிர்வு தரப்பட்டு உள் காதிலுள்ள திரவம் அசைகிறது. இதனால் செவி நரம்பு தூண்டப்பட்டு, அந்த ஓசை நம் மூளைக்குசென்று நமக்கு சத்தத்தை உணர வைக்கிறது.
எப்போதும் வெளிக்காது, உள்காது என இரண்டு பக்கமும் சரியான அழுத்தம் இல்லாமல் போனால், காது அடைப்பும் வலியும் ஏற்படும். விரல்களால் மூக்கை அழுத்தி பிடித்து, முடிந்த அளவுக்கு வாயை மூடி காற்றை முழுவதுமாக உள்ளிழுத்து, காது வழியாக வெளியேற்ற முயற்சிக்கலாம். இதனால், காதுக்குள் இருக்கும் ஜவ்வானது சமநிலையை அடைந்து அடைப்பு வலி குறையும். சிலர் சுத்தப்படுத்துவதாக கூறி அடிக்கடி ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றை காதில் விட்டு அழுக்கு எடுப்பது வழக்கம். காது ஒரு சென்சிடிவ் உறுப்பு.
கம்பி போன்ற பொருட்களை உள்ளே செலுத்தும்போது, உள்ளே புண்ணாகி சீழ் பிடித்துவிடும். இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது காதுக்கு நல்லது. தவிர, காதில் அடிபடுதல் மற்றும் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் காதில் சீழ்வடிதல் பிரச்னை ஏற்படலாம். சளி, பாக்டீரியா தொற்று, சுகாதாரமற்ற சூழ்நிலைகளால் கூட காதில் சீழ்வடிதல் பிரச்னையை ஏற்படுத்தும். இவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல், சீழ் வடிவதால் நாற்றம், காதுகளில் வலி போன்ற அறிகுறிகள் தென்படலாம். இவ்வாறு வலி ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
வலிக்கான காரணம்
பேற்சொத்தை, கடைவாய்ப்பல் வெளிவராதிருத்தல், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், டான்சில் சதை வளர்ச்சி, கழுத்தெலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களை பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும். தொண்டை அழற்சி காரணமாகவும், நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் காது வலி ஏற்படலாம். சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூச்சு உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம். நீர்நிலைகளில் குதித்து குளிப்பதாலும், கடல் நீரில் குளிப்பதாலும் நோய் தொற்று ஏற்பட்டு நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடும்.
பாதுகாப்பது எப்படி?
கோதை குச்சி, பட்ஸ் மூலம் சுத்தம் பண்ணுதல் கூடாது. கோதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகக் குறைந்த அளவில் சத்தத்தை வைத்துக்கேட்க வேண்டும். அதிக சப்தம் இல்லாமல், மெல்லிய இசையை மட்டுமே கேட்க வேண்டும். சுற்று வட்டாரத்தில் அதிக இரைச்சல் இருப்பது தெரிந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து செல்போனில் பேச நேரிட்டால் ஒரு காதிலிருந்து மறு காதுக்கு போனை மாற்றி வைத்து பேசுவது நல்லது.
கோதில் பூச்சி புகுந்துவிட்டால், சில துளி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம். உடனே பூச்சி செத்து வெளியே வந்துவிடும். கோதில் அடிக்கடி டிராப்ஸ்களை போடக்கூடாது. இதனால் நோய் தொற்று, அரிப்பு ஏற்படலாம். கோதிலுள்ள முடிகள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது. மூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும். எனவே மூக்கை சிந்தும்போது அதை துடைப்பது நல்லது.
குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு காது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும், பாட்டிலில் பால் தருவதும் ஆகும்.
எளிய சிகிச்சை முறை
மோதுளம் பழத்தில் சாறு எடுத்து சூடாக்கி இளம்சூடாக சில துளிகள் காதில் விட வலி குறையும். மல்லிகை இலை எண்ணெயையும் 2 சொட்டு விடலாம். நேல்லெண்ணைய்யில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து ஆற வைத்து அந்த எண்ணெய்யை காதில் விட்டால் வலி குறையலாம். முள்ளங்கி சாறோடு மருதாணி வேரை இடித்து அதன் சாற்றை காதில் விட்டு வர வலி குணமாகும். தோழம்பூவை நெருப்பு தணலில் காட்டி அதன் சாறை பிழிந்து காதில் விட வலி, இரைச்சல், காதில் தோன்றும் கட்டி குணமாகும். வோழைமர கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சிறிது சூடாக்கி துளிகளாக காதில் விடலாம்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3273
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காது வலி குணப்படுத்த எளிய சிகிச்சை!
கோதில் பூச்சி புகுந்துவிட்டால், சில துளி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம். உடனே பூச்சி செத்து வெளியே வந்துவிடும்.
மோதுளம் பழத்தில் சாறு எடுத்து சூடாக்கி இளம்சூடாக சில துளிகள் காதில் விட வலி குறையும். மல்லிகை இலை எண்ணெயையும் 2 சொட்டு விடலாம். நேல்லெண்ணைய்யில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து ஆற வைத்து அந்த எண்ணெய்யை காதில் விட்டால் வலி குறையலாம். முள்ளங்கி சாறோடு மருதாணி வேரை இடித்து அதன் சாற்றை காதில் விட்டு வர வலி குணமாகும். தோழம்பூவை நெருப்பு தணலில் காட்டி அதன் சாறை பிழிந்து காதில் விட வலி, இரைச்சல், காதில் தோன்றும் கட்டி குணமாகும். வோழைமர கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சிறிது சூடாக்கி துளிகளாக காதில் விடலாம்.
இதெல்லாம் ரெம்ப ரெம்ப தப்புப்பா. காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுவதால் நாம் நம் இஷ்டப்படி ஏதும் செய்யவே கூடாது. முக்கியமா இம்மாதிரி கைவைத்தியமும் கூடவே கூடாது.
டாக்டரிடம் போய் அவர்கள் ஆலோசனைப்படி மட்டும் தான் செய்யணும்.
தடிமன் நேரம் காது வலி வந்தால் வெங்காயத்தை உரித்து கட் செய்து வாணலியில் போட்டு இலேசாக சூடு செய்துட்டு ஒரு சுத்தமான் பருத்தி துணியில் கட்டி தலைமாட்டில் வைத்திட்டு தூங்கணும். தூக்கத்தில் அந்த வெங்காய வாடையை சுவாசிக்க சுவாசிக்க மூக்கில் இருக்கும் அடைப்புக்கள் நீங்கி காது வலி குணமாகும்.
இது என் சொந்த அனுபவம். என் பிள்ளைகளுக்கு நான் இப்படி செய்வேன். சில்ரன் ஸ்பேஷ்லிஸ்ட் டாக்டர் இப்படி சொல்லி இருக்கார்.
மத்தப்படி இஷ்டப்படி காதில் நீர், எண்ணெய் விடுவது வேண்டவே வேண்டாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காது வலி குணப்படுத்த எளிய சிகிச்சை!
தேங்காய் எண்ணெயில் பூண்டை தட்டிப் போட்டு இளஞ்சூடாக்கி ஆற வைத்து காதுவலிக்கு ஊற்றியிருக்கிறார்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: காது வலி குணப்படுத்த எளிய சிகிச்சை!
சே.குமார் wrote:தேங்காய் எண்ணெயில் பூண்டை தட்டிப் போட்டு இளஞ்சூடாக்கி ஆற வைத்து காதுவலிக்கு ஊற்றியிருக்கிறார்கள்.
இருக்கலாம்பா! அக்காலத்தில் காற்று இயற்கையும் மாசு படவில்லை என்பதால் அக்காலத்தில் வாழ்ந்தோர் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாய் இருந்தது.
மண்ணை திண்டாலும் செரிக்கும் உடம்பு என சொல்வார்கள். இக்காலத்தில் அப்படியா?
சும்மா வாடைகாத்தடிச்சால் அச்சு அச்சூ என தும்மல்... சாதுவாய் மழைச்சாரலில் நனைத்தால் வைரஸ் காய்ச்சல் , தடுக்கி விழுந்தால் எலும்பு முறிவு என வாயில் நுழையாத பெயரிலெல்லாம் நோயும் நொடியுமாய் நோஞ்சானாய் வாழும் இக்காலத்திலும் அக்காலம் போல் கடைப்பிடிப்போம் என சொல்ல முடியாது.
அதே போல் பொருட்களும் தரமாயும் சுத்தமாயும் இல்லை எனும் போது நமக்கு தெரிந்த கை வைத்தியம் செய்கின்றோம் எனும் பெயரில் சிறு வலியை பெரு வலியாக்காதிருப்பதே நல்லது.
அதிலும் இன்ன காரணம் என தெரியாமல் காதில் மூக்கில் எதையும் நுழைக்க கூடாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காது வலி குணப்படுத்த எளிய சிகிச்சை!
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எதையும் செய்யகூடாது காரணம் நாம் செய்யும் மருந்தால் வேறு பிரச்சனை வரக்கூடும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நீரிழிவு பாதிப்பை வீட்டிலேயே குணப்படுத்த 10 எளிய உணவுகள்..
» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
» பருக்கள் வராமல் தடுக்க எளிய இயற்கை சிகிச்சை
» தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்...
» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
» பருக்கள் வராமல் தடுக்க எளிய இயற்கை சிகிச்சை
» தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum