Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி முறியடிப்பு
Page 1 of 1
தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி முறியடிப்பு
தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி முறியடிப்பு
முல்லைத்தீவு கொக்கிளாயில் சம்பவம்முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி ஒன்று கடந்த செவ்வாயன்று காலை முறியடிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற தமிழ் மக்கள் மேற்படி முயற்சியை நீண்ட நேர போராட்டத்தின் பின் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்தில் பெருந்தொகையான பெரும்பான்மை மக்களும் கூடியதால் அப்பகுதியில் ஒரு முறுகல் நிலை தோன்றியது.
இது பற்றி மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை நில அளவை செய்யும் நோக்கில் நில அளவையாளர்களும் தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்களும் வருகை தந்திருந்தனர்.
ஏற்கனவே குறித்த காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் தமிழ் மக்களிடம் இருக்கிற நிலையில் சட்ட விரோதமான முறையில் இம்முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்ற தகவலை அறிந்தவுடன் முன்கூட்டியே அவ்விடத்திற்கு வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற மக்கள் நில அளவை செய்யும் முயற்சியை அனுமதிக்கவில்லை. முதலில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த நில அளவையாளரிடம் ரவிகரன் சூழ்நிலை பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார். சட்டவிரோதமான இச்செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டார்.
இதையடுத்து முல்லைத்தீவு கரைந்துரைப்பற்று பிரதேச செயலரிடம் தொடர்பு கொண்டு நில அளவையாளர் சூழ்நிலை பற்றி விளக்கினார். ஆனால் அவர் நில அளவையை மேற்கொள்ளுமாறு மீண்டும் கூறியதாக நில அளவையாளர் ரவிகரனிடமும் மக்களிடமும் தெரிவித்தார். உடனே ரவிகரன் “இது ஒரு சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான நடவடிக்கை. ஏற்கனவே தமிழ் மக்களின் பெயரில் இருக்கிற காணிகளை இவ்வாறு அதிகாரபூர்வமாக அபகரிக்க முனைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
நீங்கள் நில அளவை செய்வதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். நீங்கள் உங்கள் முயற்சியைக் கைவிடும் வரை இவ்விடத்தை விட்டு நாங்கள் நகரமாட்டோம் என்று நேரடியாக கூறிவிட்டார். பின்னர் முல்லைத்தீவு கரைந்துரைப்பற்று பிரதேச செயலரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ரவிகரன் நிலவரத்தை நேரடியாக அழுத்தமாகத் தெரிவித்தார்.
இவ்வாறிருக்க தமிழ் மக்களின் காணிகளை தங்களின் காணி என்று கூறிக்கொண்டு சில பெரும்பான்மை மக்களும் அவ்விடத்தில் கூடிவிட்டனர். அதேவேளை தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தரும் அங்கே வந்தடைந்தார். ஒரு கட்டத்தில் பெரும்பான்மை மக்கள் அந்தக் காணிகள் தங்களுடையது என்று கூற தமிழ் மக்களும் ரவிகரனும் காணி ஆவணங்களை முன்னிறுத்தி அங்கிருந்தோர் முன்னிலையில் வாதாட ஒரு முறுகல் நிலை அங்கே தோன்றியது.
எனினும் தங்கள் நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக ரவிகரனும் மக்களும் இருந்த நிலையில் நில அளவையாளர்களும் தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தரும் தங்கள் முயற்சியைக் கைவிட்டுச் சென்றனர். முற்பகல் நிகழ்ந்த இச்சம்பவத்தால் கொக்கிளாய் பகுதியில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» ரூ. 64 இலட்சம் பெறுமதி: வெளிநாட்டு கரன்ஸிகளை கடத்தும் முயற்சி முறியடிப்பு
» தமிழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றி காணிகளை அரசாங்கம் விற்கின்றது.
» தமிழ், முஸ்லீம் மக்களின் மதிப்பை பெற்ற சம்மாந்துறை மஜீத் காலமானார்!
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» ரூ. 64 இலட்சம் பெறுமதி: வெளிநாட்டு கரன்ஸிகளை கடத்தும் முயற்சி முறியடிப்பு
» தமிழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றி காணிகளை அரசாங்கம் விற்கின்றது.
» தமிழ், முஸ்லீம் மக்களின் மதிப்பை பெற்ற சம்மாந்துறை மஜீத் காலமானார்!
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum