சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

வாழ்க்கை கட்டுரைகள்  Khan11

வாழ்க்கை கட்டுரைகள்

Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 20 May 2015 - 8:39

உடன்பாடும் முரண்பாடும்
--------------------------------------

மனம் போல் தான் வாழ்க்கை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மனத்தின் தன்மை அதன் செயற்பாடுகளை எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை தரும் வகையில் செயற்படுத்துவது எப்படி? மனத்தின் இரண்டு நிலைகள் உடன்பாடும் முரண்பாடும் தான். 

நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விடயத்திலும் நாம் உடன்படுவோம் அல்லது முரண்படுவோம். உடன்பாடும் முரண்பாடும் வாழ்வியல் நகர்வின் சக்கரங்கள். உடன்பாடு மட்டுமே எமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைகின்றது. அப்படியானால் முரண்பாட்டை எப்படிக் கையாள்வது? ஒரேஒரு வழி இது தான். ஒரு விடயம் உடன்படக்கூடியதாக இருப்பின் உடன்படுங்கள்.

முரண்பாடாக இருப்பின் முரண்படுங்கள். முரண்பாட்டுக்கு எதிரான முரண்பாடும் மறைமுகமான உடன்பாடுதான். முரண்பாடுக்கு எதிரான முரண்பாடு எமது மனதளவில் மட்டுமே இருக்க வேண்டும். அதாவது பிறரைக் காயப்பப்டுத்தும் வகையில் சொல்லாகவோ அல்லது செயலாகவோ அமையக் கூடாது. பிறர் காயப்படுத்தப்பட்டால் முரண்பாடுக்கு உடன்பாடு கொடுத்தவராகி விடுவோம்.

நன்றியுடன் KG Master.
வாழ்க்கை கட்டுரைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 20 May 2015 - 8:42

ஓதுவோரும் ஊதுவோரும்
-------------------------------------------

அன்று . . . .

தகவல் பரிமாற்றமானது சமூகங்களை இலகுவாகத் தொடர்புபடுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திராத காலங்களில் ஒவ்வொரு சமூகமும் அந்தச் சமூகம் சார்ந்த விடயங்களை (சரி, தவறு என்ற பாகுபாடின்றி) முழுமையாக ஏற்டுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த விடயங்கள் அந்தந்த சமூகத்திற்கு சமூக முன்னோடிகளாக கருதப்பட்டவர்களால் நேருக்கு நேராக கதைகள், மேடை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள், வில்லுபாட்டுக்கள், போன்ற மூலங்களின் ஊடாக தொடர்ச்சியான முறையில் சொல்லபட்டு (ஓதப்பட்டு) வந்தன. 

இந்த ஓதுவோர்கள் அறிந்தோ அறியாமலோ தமது சமூக, பொருளாதார நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தாம் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை ‘குண்டுச் சட்டிக்குள் குத்திரையை ஓட்டுபவர்களாக’ உருவாக்கியர்களாவர். இந்த ஓதுவோர்களின் உதவியின்றி ஒரு அடி கூட முன்னே எடுத்து வைக்க விரும்பாத சமூக அங்கத்தவர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டுவதில் நிபுணத்துவம் பெற்று அவர்களும் ஒதுவோர்களாகி இளைப்பாறும் ஒதுவோர்களின் இடங்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலை உலகின் ஒவ்வொரு சமூகத்திற்கும் பொதுவானதாக அமைந்திருந்தது.

இன்று . . . 

தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியும் வேகமும், சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வும், ஒரு சமூகம் ஒரு நாடு என்ற எல்லைகளுக்கு அப்பால் உலகம் முழுவதிலும் பரந்து வாழ்வதற்கான வாய்ப்புக்களளையும் வசதிகளையும் உருவாகியிருக்கின்றன. இந்த விரிவாக்கம்,  குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அந்தக் குண்டுச் சட்டிக்குள் இருந்து வெளியே வருவதற்கான அரிய வாய்ப்பாகும். 

ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாம் சார்ந்துள்ள சமூகம் குண்டுச் சட்டிக்குள் இருந்து வெளியே வருமானால் தமது சுய இலாபம் பாதிக்கப்பட்டுவிடுமே என்பதால் அந்தச் சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட வைத்திருப்பதற்கு இன்றைய ஊதுவோர்கள் மிகவும் தந்திரமாகவும் வேகமாகவும் செயற்பட்டுவருகிறார்கள்.

யார் இந்த ஊதுவோர்கள்?
 

இவர்கள் வேறு யாருமல்ல.  உருமாற்றம் பெற்றுள்ள ஓதுவோர்கள்.  தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியை தமக்குச் சாதகமாக்கி கடுகளவு விடயம் ஒன்றை மலையளவு பெரிதாக ஊதி (ஊதுவதால் - ஊதுவோர்) அந்த விடயம் சரியா அல்லது தவறா என்ற சிந்தனைக்கு இடமளிக்காமல் உணர்ச்சிகளைத் தூண்டி சுய இலாபம் அடைபவர்கள். 

இந்த ஊதுவோர்களில் ஒரு பகுதியினர் பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் என்பவற்றின் ஊடாக அவர்களுக்குள் ஏற்படுகின்ற போட்டி காரணமாக குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஒட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரது உணர்வையும் தூண்டி தமது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் சுய பொருளாதார வளத்தைப் பெருக்குகிறார்கள். மறுபகுதியினர் சமூக வலைத்தளங்கள் ஊடாக எத்தனை பேர் விருப்பம் (Like) தெரிவிப்பதன் மூலம் குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிரார்கள்.

ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அன்றைய ஓதுவோர்கள் அறிந்தோ அறியாமலோ செய்ததை இன்றைய ஊதுவோர்கள் அறிந்தே செய்கிறார்கள் என்பது தான் அது.

அதுமட்டுமல்ல. ஒவ்வெரு மனிதனும் தனது தலையில் இருந்து இறங்கி இதயத்துக்குள் நுழையும் வரை குண்டுச் சட்டிக்குள் தான் குதிரையை ஒட்டிக்கொண்டிருப்பான்.

நன்றியுடன் – KG Master.
வாழ்க்கை கட்டுரை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 20 May 2015 - 8:46

ஜிம்மியும் நானும்
--------------------------

எதிர் வீட்டு நாயின் பெயர் ஜிம்மி.
என்னைக் காணும்போதெல்லாம் கண்களை உயர்த்தி
காதுகளை நிமிர்த்தி வாலை ஆட்டிக்கொள்ளும்.

முற்றத்தில் நான் விதைக்காமல் 
முளைத்திருந்த புல் பூண்டுகளை அகற்றுவதற்காக 
வெளியில் வந்தேன்

கண்களில் சோர்வு, கால்களில் தளர்ச்சி 
காதுகள் தொங்கிய நிலையில் என்னை நோக்கி 
வந்தது ஜிம்மி.

‘என்ன ஜிம்மி, உடல்நிலை சரியில்லையா?’ என்றேன்
‘இல்லையில்லை, மனநிலைதான் சரியில்லை’ என்றது ஜிம்மி

‘என்ன நடந்தது?’ என்றேன்

‘இரண்டு நாட்களுக்கு முன் எனது எஜமானின் ‘நட்பு’ பற்றிய சொற்பொழிவு என் காதில் விழுந்தது தான் காரணம்’ என்றது ஜிம்மி

‘அதற்கும் உன் மனச் சோர்வுக்கும் என்ன தொடர்பு?’ என்றேன்

‘‘எனது எஜமான், நட்பு ஒரு வரப்பிரசாதம், பகைமை உணர்வின்றி வாழும் ஒவ்வொரு கணமும்
வாழ்க்கை வசந்தமாகிறது என்றார்’ என்றது ஜிம்மி

‘அவர் சொல்வது நியாயமானது தானே! 
எதற்காக நீ சோர்வடைய வேண்டும்’ என்றேன்

சில கணங்கள் மௌனமாக இருந்துவிட்டு 
கண்களை உயர்த்தி காதுகளைத் தொங்கவிட்டு....

‘நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த பூனையை 
விரட்டி அடிக்கவில்லையாம் நான் என்று விடிந்ததில் இருந்து விடாமல் திட்டிக்கொண்டிருக்கிறார் எஜமான்’ என்றது ஜிம்மி.

நன்றியுடன் – கே.ஜி. மாஸ்டர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 May 2015 - 5:12

கடலும் வானமும்
--------------------------

தகவல். தகவல். தகவல். நாமும் ஒரு தகவல், நம்மைச் சுற்றி இருப்பவையும் தகவல். கடலும் ஒரு தகவல். வானமும் ஒரு தகவல். தகவல்களின் தெளிவு தான் வாழ்க்கையின் அழகு.

கடலின் தகவல் சுயத்தை இழக்காதே என்பதாகும். சூழல்களின் உள்ளீடுகள் எவையாக இருப்பினும் அவற்றைக் கடல் உள்வாங்கிக்கொள்ளும்,

ஆனால் சுயத்தை இழப்பதில்லை. காற்றின் மூலமும், நிலத்தில் இருந்து தன்னை அடையும் நீரின் மூலமும் செலுத்தப்படுபவையின் இயல்புக்கேற்ப தனது தன்மையை மாற்றிக்கொள்வதில்லை. 

வானத்தின் தகவலானது தன்னை அழுக்காக்க முடியாது என்பதாகும். அழுக்காக்க முடியாத தூய்மை என்பதே வானம். வானத்தை எதுவுமே, எவருமே அழுக்காக்க முடியாது. வானத்தை அசுத்தப்படுத்த முயற்சித்தால் வானம் அதை ஏற்காததால் முயற்சிப்பவரே ஏற்பவராகிறார். தூய்மையான உள்ளம் அசுத்தப்படுத்தப்பட முடியாதது. யாராவது அசுத்தமாக்க முயற்சித்தால் முயற்சிப்பவர் அசுத்தப்படுவது தவிர்க்க முடியாததாகும்.

சூழல்கள் அசுத்தத்தைத் திணித்தாலும் சுயத்தை இழக்காமல் கடல் போன்று வாழ்வதா அல்லது அசுத்தத்தை ஏற்காத வானம்போல் வாழ்வதா? எதுவாயினும் சிறந்ததே. 
                                                                                                                                                           - 
நன்றியுடன் KG Master.
வாழ்க வளமுடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 May 2015 - 5:15

சந்தேகப்படு
------------------

நண்பா! 

நீண்ட நாட்களாக உன்னிடம் ஒரு உதவி கேட்கவேண்டும் என்றிருந்தேன்' என்றான் நன்பன் 
'தாமதம் எதற்கு, உடனடியாகச் சொல்' என்றேன்
'கேட்டால் நீ சிரிப்பாய்' என்றான் நண்பன்
'சிரிக்கமாட்டேன் சொல்' என்றேன்


'சந்தேகம் ஒன்று என்னை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது' என்றான் நண்பன்

சிரிப்பை அடக்குவதற்கு முடியுமானவரை முயற்சித்தேன். முடியவில்லை

'க, கா, கி, கீ, கு, கூ ஹி ஹீ' என வாய்க்கு வந்தபடி எல்லாம் சிரித்தேன்

'ஏன் சிரிக்கிறாய்?' என்றான் நண்பன்

'உன் சந்தேகத்தை வேறொருவர் மூலம் தீர்க்க முயற்சிக்கிறாய், அதனால் தான்' என்றேன்

'எனது சந்தேகத்தை நானாகத் தீர்க்க முடியுமாயின் எப்போதே தீர்த்திருப்பேனே' என்றான் நண்பன்

' உன்னால் மட்டும்தான் உன் சந்தேகத்தைத் தீர்க்க முடியும்' என்றேன்

'எப்படி? என்றான் நண்பன்

'ஒரேயொரு வழிதான் உண்டு. உன் சந்தேகம் தொலையும் வரை சந்தேகத்தைச் சந்தேகப்படு' என்றேன்

சிந்தனையில் இறங்கினான் நண்பன். சிரித்துக்கொண்டே விடைபெற்றேன் நான்.

+
எழுத்துருவாக்கம் 
KG மாஸ்டர்
மீள் பதிவு 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 May 2015 - 5:17

பின்னோக்கிச் செல்
-----------------------------

எனக்கு ஒரு ஆலோசனை வேண்டும்' என்றான் நண்பன்
'ஆலோசனையா? எதற்கு?' என்றேன்
'எனக்கு ஒரு பிரச்சனை ....'
உடனடியாக இடைமறித்து 'நிறுத்து!' என்றேன்

'எதற்காக?' என்றான் நண்பன்

'ஆலோசனை ஒன்று தருவதற்கு' என்றேன்



'பிரச்னை என்னவென்று அறியாமலா?' என்றான் நண்பன்

'ஆம்', உன்னால் உன் பிரச்னையை முழுமையாக விபரிக்க முடியாது' என்றேன்

'ஏன் முடியாது?' என்றான் நண்பன்

'அனுபவங்களை வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாதது மட்டுமல்ல அனுபவங்களில் அடங்கியுள்ள தனிப்பட்ட அந்தரங்கமான விடயங்களையும் நீ பகிர்ந்துகொள்வதும் பொருத்தமற்றது' என்றேன்

ஒரு சில கணங்கள் மௌனமாக இருந்துவிட்டு
'உன் ஆலோசனை என்ன?' என்றான் நண்பன்

'நீ பின்னோக்கிச் செல்லவேண்டும்' என்றேன்.

'புரியவில்லை' என்றான் நண்பன்

'உன் பார்வையை உன் பிரச்சனை ஆரம்பித்த புள்ளியையும் தாண்டி பின்னோக்கிச் செலுத்து அங்கேதான் தான் தீர்வைக் காண்பாய்' என்றேன்.

கண்களால் நன்றி சொன்னான் நண்பன்.

+
எழுத்துருவாக்கம் 
KG மாஸ்டர்
மீள் பதிவு 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 May 2015 - 5:18

பார்வையும் பட்டறிவும்
----------------------------------

அண்மையில், நல்லூர் ஆலயப் பின் வீதியால் நானும் நண்பனும் சென்றுகொண்டிருந்தோம். அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்த மடத்தின் வாசலில் ஒரு கூட்டம் உள்ளே செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.


'இவர்கள் எப்படித்தான் இந்த உணவைச் சாப்பிடுகிறார்களோ தெரியவில்லை' என்றான் நண்பன்.

'எப்போதாவது சாபிட்டிருக்கிறாயா? என்றேன் 

'இல்லை இல்லை, இங்கெல்லாம் நான் சாப்பிடுவதில்லை' என்றான்.

'வா! இன்று சாப்பிடுவோம்' என்றேன்.

'உனக்காக வருகிறேன்' என்றான்.

பந்தியில் குந்தினோம். பரிமாறப்பட்டது உணவு.
ஆங்காங்கே அமர்ந்திருந்த அறிமுகமானவர்களுடன் கண்களால் கதைத்துக்கொண்டு.....

'ஐயா, இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்துங்கோ' என்றான் நண்பன்.

கைகளைக் கழுவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தோம்.
என்னிடம் ஏதோ சொல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் என்னை நெருங்கிக் கொண்டிருந்தான் நன்பன்.

உண்ட களையில் இளைப்பாறிக் கொண்டிருந்தாள் ஒரு மூதாட்டி.

'அம்மா நலமாக இருக்கிறீர்களா?' மூதாட்டியுடன் கதைக்க ஆரம்பித்தேன் நான்.

பார்வை வேறு பட்டறிவு வேறு நண்பா!

+
எழுத்துருவாக்கம் 
KG மாஸ்டர்
மீள் பதிவு 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 May 2015 - 5:20

சுதந்திரத்தின் சூத்திரம்:
-----------------------------------

பறவைகள் சுதந்திரமானவை என்பதற்குக் காரணம் சுவடுகள் எவற்றையும்  பின்பற்ற வேண்டிய தேவையோ அல்லது நிர்ப்பந்தமோ அவற்றுக்கு இல்லை என்பதுதான். மனிதனும் சுதந்திரமானவனாக இருக்கவேண்டுமானால் பறவைகள் போல் வாழ வேண்டும். மாறாக மனிதனின் சுவடுகள் பதியப்படும் வரை, பதியப்படும் சுவடுகள் பின்பற்றப்படும் வரை சுதந்திரம் என்பது மனிதனுக்கு ஒரு கனவு மட்டுமே.

+
எழுத்துருவாக்கம் 
KG மாஸ்டர்
மீள் பதிவு 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 May 2015 - 5:22

அனுபவமும் அபிப்பிராயமும்
--------------------------------------------

ஒருவரது வாழ்வியல் நகர்வானது அவரது தெரிவுகளினால் இடம்பெறுகின்றது.  இந்த நகர்வை நாம் ‘வாழ்க்கை’ என அழைக்கின்றோம்.  வாழ்க்கை என்பதை விட ‘வாழ்க்கை முறை’ என்பது தான் பொருத்தமானது.  ஏனெனில் வாழுதல் என்பது ஒருவரது வாழ்க்கை முறையே. இந்த வாழும் முறையே ஒருவரது  அடையாளமாக அமைகின்றது. இந்த அடையாளம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது.  

ஒருவரது வாழ்க்கை முறையின் அடித்தளமாக அமைவது அவரது தெரிவுகள்.  தெரிவுகளின் அடிப்படையாக அமைவது அந்தத் தெரிவுகள் சார்ந்த தகவல்கள்.  தகவல்களின் மூலங்கள் அனுபவங்களாகவும் அபிப்பிராயங்களாகவும் அமைகின்றன. அனுபவம் சார்ந்த தகவல்கள் ஒருவரது சொந்த அனுபவத்தின் மூலமோ அல்லது பிறரது அனுபவத்தின் மூலமோ கிடைக்கப் பெறுகின்றன.  ஒருவரது சொந்த அனுபவம் என்பது பிறரின் தூண்டுதல் இன்றித் தாமாக ஒரு செயலில் ஈடுபடுவதன் மூலம் பெற்றுக்கொள்வது. பிறரது அனுபவம் மூலம் பெறுவது என்பது ஒருவருடனான நேரடியான ஈடுபாட்டின் மூலம் அவரது அனுபவத்தினை உணர்வு ரீதியாகப் பெறுவது.  அதாவது உணர்வு ரீதியான பரிமாற்றம். 

அப்பிப்பிராயம் சார்ந்த தகவல்கள் ஊகங்களாகவும் ஒப்புவிப்புக்களாகவும் அமைகின்றன.  ஊகங்கள் ஒருவரது எதிர்பார்ப்புக்களாகவோ அல்லது கற்பனைகளாகவோ அமைகின்றன.  இவாறான தகவல்களுக்கு உறுதியான அடித்தளங்கள் இல்லை.  ஒப்புவிப்புக்களாக அமையும் தகவல்கள் பிறரது வார்த்தைகளின் பரிமாற்றங்களாக அமைகின்றன.  இவைகள் கருதுகோள்கள், கோட்பாடுகள், தத்துவங்கள் எனப் பரிமாற்றம் செய்யப்படுபவை.  

இவ்வாறு பரிமாற்றம் செய்யப்படும் தகவல்கள் பரிமாற்றம் செய்பவரது அனுபவத்துடன் நேரடியாகத் தொடர்புபடுவதில்லை.  ஏனெனில் இவற்றின் உரிமையாளர்கள்  எப்போதோ ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களுடனான நேரடித்தொடர்புக்கு வாய்ப்புக்கள் இல்லை. அதனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு இவர்களது அனுபவத்துடன் ஈடுபாடு கொண்டு உணர்வு ரீதியான பரிமாற்றத்தின் மூலம் தமது சுயமான அனுபவத்தைப் பெற  வாய்ப்பு இல்லை. 

இப்போது வாழ்வியலுக்குள் வருவோம்.  வாழ்வு என்பது நிகழ்வுகளின் நகர்வு.  இந்த நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானதே.  நிகழ்வுகள் தான் அனுபவங்களாகின்றன. அனுபவங்கள் உணர்வுசார்ந்தவை.  உணர்வுக்கு வடிவம் இல்லை.  அதனால் வார்த்தைகளாலோ அல்லது வரைபடங்களாலோ உணர்வை வெளிப்படுத்த முடியாது.  எனவே வார்த்தைகளாலும் வடிவங்களாலும் கொடுக்கப்படும் அபிப்பிராயங்கள் பயனற்றவை.  காலத்தை வீணடிப்பவை. அபிப்பிராயங்கள் மிக இலகுவாகவும் இலவசமாகவும் கிடைக்கின்றன.  

அவை நாமாக வேண்டாவிடினும் தாமாக எம்மை வந்தடையும் தன்மை கொண்டவை. நாம் விழிப்போடு இல்லாவிடின் எம்மை மூழ்கடித்துவிடும். அதற்குள் மூழ்கி விடுவது வாழ்வியல் தற்கொலையே. எனவே நாம் வாழும் காலத்தில் எமக்கும் பிறருக்கும் செய்யக்கூடிய மிகப் பெரும் உதவி நாமும் வாழ்வியல் தற்கொலை செய்யாமல் மற்றவர்களையும் வாழ்வியல் தற்கொலைக்குத தூண்டாமல் வாழ்வதுதான். அதற்கு அபிப்பிராயங்களைப் பெறுவதையும் கொடுப்பதையும் முழுமையாகத் தவிர்ப்பது தான் ஒரே வழி. 

+
எழுத்துருவாக்கம் 
KG மாஸ்டர்
மீள் பதிவு 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 May 2015 - 5:31

மூன்று இலக்கணங்கள்
----------------------------------

பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது என்ற தகவல் நீண்டதொரு குடும்ப பொருளாதாரப் போராட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட இடையறாத உழைப்பின் பெறுபேறாக அமைந்ததது எனக்கு.  ஒருபுறம் மகிழ்ச்சி.  மறுபுறம் அடுத்து என்ன செய்வது என்ற ஏக்கம்.  சிறு தொழிலும் படிப்புமாக கல்வியைத் தொடர்ந்த எனக்கு தலைநகர் கொழும்பு சென்று பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர வேண்டும் என்றவுடன் அதற்கான ஆரம்பச் செலவுகளுக்கு என்ன செய்வது என்பது தான் எனது முதற் கேள்வியாக இருந்தது. 

 அங்கும் இங்குமாகச் சேகரித்து வைத்திருந்த நாற்பது ரூபாவுடன் எனது தந்தையார் தந்த இரண்டு ரூபாயும் சேர்த்து நாற்பத்தியிரண்டு ரூபாக்களுடன் தொடங்கியது எனது பலகலைக்கழகப் பயணம். மனதில் ஒரு உறுதி. தொடங்குவது எதுவாயினும் முடிவு காணும் வரை முயற்சி செய்வேன் என்பது தான் அது. பல்கலைக்கழகப் படிப்பு மிகவும் வெற்றிகரமாக நிறைவேறியது.  இக்கட்டுரையின் நோக்கம் எனது பல்கலைக்கலகக் கல்வி பற்றியதல்ல.  கல்விக்கும் அப்பால் நான் கற்றுக்கொண்ட மூன்று இலக்கணங்கள் பற்றியது.  

முதலாவது இலக்கணம் எனது வகுப்பின் சக மாணவர். நாங்கள்  இருவரும் அறிமுகமானதில் இருந்து ஒரு இனம் தெரியாத இணைப்பு.  ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதெல்லாம் நட்பின் ஆழம் மேலும் ஆழமாகும்.  எனது வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களும் எனது உற்ற நண்பர்கள். எந்தவிதமான வெறுப்போ வேற்றுமையோ இன்றி அனைவரும் இயல்பாகவும் இன்பமாகவும் நட்பைத் தொடர்ந்தவர்கள், இன்றும் தொடர்பவர்கள். ஆனால் இவரிடம் எதோ ஒன்று என்னைக் கவர்ந்துகொண்டது.  அது என்ன என்பதைப் புரிந்து கொள்ள கல்வியாண்டுகள் போதாமல் இருந்தது.  ஆனாலும் அது என்ன என்பது பற்றிய எனது தேடலில் விடையைக் கண்டுகொண்டேன். அது தான் அவரது வார்த்தைகள். அவரது வார்த்தைகள் வான் மழை போல் என்றும் குளிர்ச்சியானதாக இருக்கும். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவங்களின் தாக்கத்துக்குள்ளான போதும் அவற்றைப் புறந்தள்ளி, சிறிதளவேனும் தனது வார்த்தைகள் பிறரைத் துன்புறுத்தாமல் நடந்து கொள்ளும் விதம் உண்மையில் ஒரு மிகப் பெரிய கொடையாக அமைந்திருந்தது..  ஒரு மனிதனுக்கான உயர்ந்த இலக்கணம் அவன் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் என்பதற்கு இவர் ஒரு அடையாளமாக எனக்குள் வரையப்பட்டுள்ளவர். 

இரண்டாவதாக இலக்கணம் எனது விரிவுரையாளர்.  மிகவும் சாதாரணமாக எவருடனும் பழகும் இயல்பு.  தற்பெருமையே இல்லாத ஒரு ஜீவன்.  மாணவர்களுடன் மாணவராக இணைந்து விரிவுரையை நிகழ்த்துவார்.  ஒவ்வொரு வகுப்பிலும் மேலதிகமாக உதவிக்கரம் நீட்டும் அருமையான மனித இயல்பு.  வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவனும் முழுமையாக தனது விளக்கத்தைப் புரிந்து கொள்ளும் வரை மனம் கோணாமல் உதவும் மனப்பாங்கு.  அவரை  சந்திக்கும் ஒவ்வொரு முறையும் வாழ்க்கையில் நல்ல உயரத்துக்கு வருவாய் என்று மனம் நிறைந்த ஊக்குவிப்பு.  அவரைக் காணும்போதெல்லாம் என்னை  அறியாமலேயே ஒரு முழுமையான உற்சாகம். இவருக்காகவாவது நாம் உயரத்துக்குச் செல்லவேண்டும் என்று எனக்குள் நான் பேசுவதுண்டு. மற்றவர்களது முன்னேற்றத்தில் அளவுகடந்த மகிழ்ச்சியடையும் ஒரு மனித ஜீவன்.  எனக்குக் கிடைத்த ஒரு அளப்பரிய கொடை. 

மூன்றாவது இலக்கணம்  எமது கல்விப் பகுதியின் தலைமை நிர்வாகி.   இவர் ஒரு பேராசிரியர்.  இன்னொரு வகையில் கூறுவதாயின் பேராசிரியர் என்பதை விட ஒரு அறிவியல், அனுபவவியல் கடல்.  முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்பு.  குழந்தைகளை அணைப்பது போன்ற ஒரு அரவணைப்பு.  எதையும் மிக இலகுவாகக் கொள்ளும் பண்பு.  எந்த ஒரு நிலையிலும் தன்னை மாற்றாத இயல்பு.  எப்பொழுதுமே ஒரே மாதிரியான வாழ்வியல் பிரதிபலிப்பு.  சூழ்நிலைகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் கட்டுப்படாமல் மிகவும் அமைதியான முறையில் விடயங்களைக் கையாளும் சிறப்பு.  ஒரு விடயம் பற்றி இவருடன் கலந்துரையாடியபோது ‘நிகழ்வுகள் தான் வாழ்க்கை என்பதை நீ ஏற்றுக்கொண்டால் நடப்பதெல்லாம் வாழ்க்கைக்கே’ என்றார்.  அற்புதம்!

பல்கலைக்கழகக் கல்வியை முடித்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது.  கல்வித்திட்டத்தில் நான் கற்ற பாடங்கள் புதிய முறைகளாலும் நுட்பங்களாலும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டன.  கல்வியாகக் கற்றதில் கடுகளவுதான் நினைவில் உண்டு.  ஆனால் இவர்கள் மூவரிடமும் இனங்கண்டு கொண்ட இலக்கணங்கள் அளப்பரிய கொடையாகக் கிடைத்துள்ளன. அவை முதிர்ச்சியை நோக்கிய பாதையின் அடித்தளங்களாக அமைந்துள்ளன. 

முதிர்ச்சிக்கான மூன்று இலக்கணங்கள் இவை தான். கனிவான வார்த்தை, பிறரின் முன்னேற்றத்தில் இதயபூர்வமான மகிழ்ச்சி, சூழ்நிலைகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் அடிமையாகாத வாழ்வியல் நகர்வு. இவை மூன்றையும் தன்னகத்தே கொள்ளும் மனிதன் முதிர்ச்சி அடைந்த மனிதானாகின்றான். 

+
எழுத்துருவாக்கம் 
KG மாஸ்டர்
மீள் பதிவு 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 14 Jul 2015 - 14:44

அறிந்ததும் அறியவேண்டியதும்
------------------------------------------------

அறிந்திருத்தல் சம்பந்தமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, எதை அறிந்திருக்கின்றோம், எவ்வாறு அறிந்திருக்கின்றோம், எவ்வளவு  அறிந்திருக்கின்றோம் என்பவை தான்.  எதை அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் எமது நினைவுகளின் தொகுப்பில் இருந்துதான் அடையாளம் காண முடியும். நிகழ்வுகளின்  சேகரிப்புத்தான் நினைவுகள். இந்த நிகழ்வுகள் ஐம்புலன்களின் ஊடாக எமது ஆழ்  மனதில் பதியப்படுகின்றன. தொட்டுணர்தல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என்பவற்றின் மூலம்  பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவுகளை நாம் அறிந்திருத்தல் என்கிறோம்.

 எந்தெந்த விடயங்களை நாம் அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் இலகுவாக அடையாளம் காண்பதற்கு, ஒன்றை நாம் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, நுகரும்போதோ, சுவைக்கும் போதோ அல்லது தொட்டு உணரும்போதோ உடனடியாக அதை அடையாளப்படுத்தவோ அல்லது  இனங்கண்டு கொள்ளவோ முடியுமாயின் அது ஒரு மீள் நிகழ்வாக இருப்பதனால் அந்த விடயம் ஏற்கனவே அறியப்பட்டாதாக அமைகின்றது. மாறாக,  நாம் எதிர்கொள்ளும் ஒன்றை அடையாளப்படுத்தவோ அல்லது  இனங்கண்டு கொள்ளவோ முடியாவிடின் அது இதுவரையில் அறியப்படவில்லை என்பதாகப் பொருள்படும்.

அடுத்து, எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதைப் பொறுத்தவரையில் நாம் எந்தவிதமான அளவீட்டையும் மேற்கொள்ள முடியாது.  ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று ஒரு விடயம் மீண்டும் நிகழும்போது அதை இனங்கான முடியுமாயின்  அதை அறிந்திருக்கின்றோம்   என்பதால் நிகழ்வுகளால் மட்டுமே எமது அறிதலை அளவிடமுடியும்.  ஆனால் நிகழ்வுகளின் எண்ணிக்கை வரையறையற்று இருப்பதனால் நாம் எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதை அளவிடுவதற்கு வாய்ப்பு இல்லை.

அறிந்திருத்தலில் உள்ள மிகப் பெரிய பின்னடைவு என்னவெனில்  நாம் அறிவு பூர்வமாக ஏற்றுக்கொண்டவை அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டவையாகவே அமைகின்றன. ஆனால் நம்பிக்கை அதன் தன்மையில்  பலவீனமானது ('நம்பிக்கையின் இரு பலவீனங்கள்' என்ற கட்டுரையை வாசிக்கவும்). நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் பிறரின் உள்ளீடுகளே.  இந்த உள்ளீடுகள் மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, சட்ட திட்டங்கள், சமுதாய ஒழுங்கு விதிகள் என்ற வடிவில் எமக்குள் செலுத்தப்படுகின்றன. இவ்வாறு உள்வாங்கப்பட்டவற்றை நாம் வேறுபாடுகளைக் கண்டறியும்    கருவியாக  பயன்படுத்திக் கொள்கிறோம்.  இதனால்  நாம் அறிந்திருப்பவை அனைத்தும் வேறுபாடுகளே.   எமக்கும் பிறருக்குமான  வேறுபாடுகளே.

நாம் அறிந்திருக்கும் இந்த வேறுபாடுகள் தான் எமக்குள் பிளவுகளையும், பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.    இந்த வேறுபாடுகள் அனைத்தினதும் தயாரிப்பாளர்கள் நாம் தான். இந்த வேறுபாடுகள் குடும்பத்துக்குள், குடும்பங்களுக்கிடையில், சமூகத்துக்குள், சமூகங்களுக்கிடையில், நாட்டுக்குள், நாடுகளுக்கிடையில் வெறுப்பை உருவாக்கி  அதன் மூலம் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருக்கின்றோம்.  இந்த அழிவில் இருந்து எம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு  அறிந்துகொள்ள வேண்டியது எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளைத் தான்.  அப்போது தான் மனிதன் மனிதனாக வாழ முடியும். எனவே, இதுவரை நாம் அறிந்திருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளை அறிந்து கொள்வோம். 

நன்றியுடன் -  KG Master
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 14 Jul 2015 - 14:52

உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது
---------------------------------------------------------

உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது?' என்றதும் முதலில் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது என்னவெனில் ஏதோ ஒன்று இந்த இரண்டுக்கும் தடையாக இருக்கின்றது என்பது தான். அதாவது உறவுக்கு எது தடையாக இருக்கின்றதோ அதுவே உணர்வுக்கும் தடையாக இருக்கின்றது என்பதாகும். ‘உறவுக்குத் தடையானது எது?’ என்றதும் பல விடயங்கள் எமது மனக் கண் முன் குவிந்து விடுகின்றன.. உறவுக்குத் தடையானவையாக  போட்டி, பொறாமை, சந்தேகம், அகம்பாவம், துரோகம், தற்பெருமை, பொய் பேசுதல், சுயநலம்  போன்றவை உள்ளடங்கலாகப்  பல விடயங்கள் அமைகின்றன. 

உணர்வுகளைப் பொறு த்தவரையில் அவற்றின் சிறப்பம்சம் என்னவெனில் ஒவ்வொரு உணர்வும் தனித்தே இயங்கும் என்பதாகும்.  உறவு என்பது கூட்டு அல்லது இணைப்பு என்பதை அடித்தளமாகக் கொண்டது.  ஆனால் உணர்வுகளோ ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்குவதில்லை.  அவை தனித்தனியாகவே வெளிப்படும். அதாவது ஒரே நேரத்தில் ஒருவர் கவலை கொண்டவராகவும் மகிழ்ச்சியுடையவராகவும் இருக்க முடியாது.  அதே போன்றே ஒருவர் கோபமாக இருப்பார் அல்லது சாந்தமாக இருப்பார். அதுமட்டுமன்றி உணர்வுகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உறவுக்குத்  தடையாக இருப்பதுமில்லை. உதாரணமாக, தனது பிள்ளை மீது ஒரு தாய்க்கு கோபம் ஏற்படும் போது அது உறவைப் பாதிப்பது மிகவும் அரிதானதாகவே நிகழ்கின்றது.  

இப்போது உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது என்பதைப் பார்ப்போம்.  கேள்வி அல்லது வினா (Question) என்பதே உறவுக்கும் உணர்வுக்கும் தடையானதாக அமைகின்றது. 'கேள்வியா?'  'கேள்வி இல்லாமல் எப்படி விடயங்களை அறிந்து கொள்வது?'. 'கேள்வி பிறந்ததால் தானே மனிதன்  இந்த அளவிற்கு அறிவாலும் ஆற்றலாலும் வளர்ந்திருக்கின்றான்?' என்றெல்லாம் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு காலத்தை வீணாக்காதீர்கள்.

மனைவியைப் பார்த்து 'நீ என் மனைவியா?' என்றால் பந்தம் போய்விடும். தாயைப் பார்த்து 'நீ என் தாயா? என்றால் பாசம் தொலைந்து விடும். நண்பனைப் பார்த்து 'நண்பனா நீ?' என்றால் நட்புப் போய்விடும்.     இவை எல்லாம் கேள்வியின் விளைவுகள் தான்.  அதே போன்று தான் வார்த்தைகளால் அன்றி உள்ளுணர்வால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்களில் கேள்விகளைத் தொடுப்பதன் மூலம் அதன் உண்மைத் தன்மையை நாம் உள்வாங்க முடியாமல் போய்விடுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தையின் சிரிப்பை உள்ளுணர்வால் உள்வாங்குவதற்குப்  பதிலாக அது ஏன்  சிரிக்கின்றது என்று கேட்போமாயின் குழந்தையின் சிரிப்பின் உணர்வு ரீதியான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும். 

இப்போது நாம் கேள்வி என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்வோம்.

கேள்வி என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. எது எதுவோ அதை அதுவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்மையினதும்  உள்ளதை உள்ளபடி உணர்ந்து கொள்ளவதில் (புரிதலில்) ஏற்படும் தடுமாற்றத்தினதும் வெளிப்பாடே கேள்வியாகும்.  ஏற்றுக்கொள்ளலும், புரிதலும் அதிகரிக்க அதிகரிக்க கேள்விகள் குறையும்.  கேள்விகளைக் குறைக்கக் குறைக்க ஏற்றுக்கொள்ளலும் புரிதலும் வளரும். உறவுக்கும் உணர்வுக்குமான தடைகள் அற்றுப் போகும்.

நன்றியுடன்: KG Master
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள்  Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum