சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Khan11

அதிசயமான அருமையான கட்டுரைகள்

4 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:07

சொந்த, பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள்.
அதிசயமான அருமையான கட்டுரைகள்  Sannyasi-300x186
இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..
“”பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன.
புத்திசாலியாக இருக்கும் சில சந்நியாசி நண்டுகளோ சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.
இந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.பொதுவாக சந்நியாசிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.
புண்ணிய ஸ்தலங்களில் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.
ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும். கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.
இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்சுகள் இருந்தாலும் நிரந்தர வீடில்லாமல் சங்கின் கூடுகளை சார்ந்து வாழும் வித்தியாசமான உயிரினமாக இது இருக்கிறது” என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:21

மத்திய வயதினரா நீங்கள்?
-----------------
முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பத்து ஐந்து வயதுள்ளவர்களை மத்திய வயதினர் எனலாம். இந்த வயதில் இருப்பவர்கள் பிள்ளைகளின் படிப்புக்காக, வசதியான வாழ்க்கைக்காக, வீடு கட்டும் கனவுக்காக பணம் சம்பாதிக்க நேரம், காலம், தேசம் கடந்து ஓடிக்கொண்டிருப்பார்கள். இந்தப் பரபரப்பான சூழல் ஆண்களுக்கு மட்டும் கிடையாது. பணிபுரியும் பெண்களுக்கும் இத்தகைய சுமைகள் உண்டு. இப்படி தொடர்ந்து பணிபுரியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாளடைவில் ஒருவிதமான சலிப்பு ஏற்படும். உணவில் நாட்டம் குறையும். இயந்திரத்தனமான இந்தப் பணிச் சுமையால் கணவன், மனைவிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள், குழந்தைகளின் நலனில் அக்கறையின்மை, உணவில் நாட்டமின்மை போன்றவை ஏற்படும். இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை தாக்கக் கூடும். முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் பருமன் பிரச்னையும் அதைத் தொடர்ந்து இதய நோய் பிரச்னைகளும் ஏற்படும்.

இதைத் தவிர்ப்பதற்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் வாரத்தில் இரண்டு மூன்று நாள்களுக்கு கிரிக்கெட், டென்னிஸ் போன்று ஏதாவது விளையாட்டுகளை விளையாடலாம். அல்லது நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும். வாரத்தில் ஒருநாள் குடும்பத்தினருடன் பொழுதைப் போக்கவேண்டும். வருடத்திற்கு இரண்டு முறையாவது நான்கு நாள்களுக்கு குடும்பத்தோடு, ஏதாவது புதிய இடங்களுக்கு சுற்றுலா சென்று வரவேண்டும். குடும்பத்தினரோடு நெருக்கத்தை வளர்க்கும். வருடம் முழுவதும் குடும்பத்தினரோடு அதிகம் நேரம் செலவிடாத இழப்பை, இந்தக் குறுகிய நாள்கள் ஈடுகட்டும்!

குடும்பத் தலைவியாக இருப்பவர்களுக்கு இந்த வயதில் குழந்தைகளின் மீது அதிகமான கவனம் இருக்கும். சிலநாட்கள், பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் போக மீதி இருந்தால், இரவில் ஓர் உருண்டை சோற்றை உண்டுவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு தூங்கிவிடுவார்கள். அதிகம் மீந்து போய் விட்டால், வீணாகப் போய்விடக் கூடாதே என்பதற்காக இருப்பதை எல்லாம் உண்டுவிட்டு படுப்பார்கள். இது பெரும்பாலான இந்தியப் பெண்களின் குணமாகவே ஆகிவிட்டது. இந்த இரண்டு முறைகளுமே தவறு. இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். வருடத்திற்கு புதிதாக ஏதாவது ஒரு கலையை, புதிய சமையல் வகையை, கேக் தயாரிப்பது… இப்படி ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு தங்களின் எண்ணங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:46

ஆப்பிள் பழம் சுவை மாறுவது ஏன்?
---------------------------
ஆப்பிள் பழத்தை அப்படியே கடித்து சுவைத்து சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியானால் அண்மைக் காலத்தில் அதன் சுவையில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்திருப்பீர்களே..! “”நாம் வாங்கின பழம் சரியில்லை போல இருக்கிறது, கடைக்காரன் நம்மை ஏமாற்றி விட்டான்” என உங்களை நீங்களே நொந்து கொண்டு பழத்தை வீணாக்காமல் சாப்பிட்டு முடித்திருப்பீர்கள், அப்படித்தானே?

உங்கள் சந்தேகம் சரிதான். நீங்கள் சாப்பிட்ட ஆப்பிள் பழத்தின் சுவை மாறித்தான் இருக்கிறது என்பதை அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதற்கு காரணம். இந்த பாழாய்போன “உலக வெப்பமயமாதல்’தான் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உலக வெப்பமயமாதல் காரணமாக அண்மைக் காலங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களின் சுவை மாறி வருகின்றன என்பது நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், கடந்த 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான அறிவியல் ஆய்வு உள்ளது. இந்நிறுவனம் ஆவணங்களை உற்று நோக்கும்போது அது உறுதியாகிறது.

ஜப்பான் நாட்டில் தேசிய வேளாண் மற்றும் உணவு ஆராய்ச்சி நிறுவனம், அந்நாட்டில் உலகிலேயே அதிகம் விளையக் கூடிய ஃபியூஜி ரகம் மற்றும் இரண்டாவதாக அதிகம் விளையக் கூடிய சுகரு ரகம் ஆகிய இரண்டு ஆப்பிள் ரகங்களின் சுவைகளும் கடந்த 1970 முதல் 2010 வரையில் 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தபோது, இந்த உண்மை தெரிய வந்ததாக “சயிண்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் தகவல் வெளியாகி  உள்ளது.

பழங்களில் முக்கியமானதும், சிறப்பு வாய்ந்ததுமான ஆப்பிள், உலகில் மூன்றாவதாக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பழ வகை ஆகும். ஆண்டுக்கு சுமார் 60 மில்லியன் டன் விளைவிக்கப்படும் ஆப்பிள், ஆண்டு முழுவதும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

பிஞ்சு முதல் பழமாகும் பருவம் வரையில் 5 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஆப்பிள் வகையிலும் 20 பழங்களை எடுத்து அவற்றின் மீது வெப்பநிலை, சூரிய கதிர் வீச்சு உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆப்பிள் மரமானது மொட்டு விட்டு, பூ பூக்கும் காலமாகிய மார்ச், மார்ச்-ஏப்ரல் மாதங்களில், உலக வெப்பமயமாதலால் சுற்றுப்புற வெப்பநிலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டது. இந்த வெப்பநிலை மாற்றத்தால் ஆப்பிள் பழத்தில் உள்ள சுவையூட்டும் அமிலங்களின் அளவு, உள்ளக நீரின் அளவு குறைவதும் தெரிய வந்தது.

ஆப்பிள் பழத்தில் உள்ள சுவையூட்டும் அமிலம் மற்றும் கரையும் திடப்பொருள்களின் அளவு மற்றும் தன்மையை பொருத்துதான் பழத்தின் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை உருவாகும். அதேபோல், பழத்தின் உள்ளக நீரின் அளவு மற்றும் உறுதித்தன்மையைப் பொருத்துதான் பழம் கடினமானதாகவோ, மிருதுவானதாகவோ அமையும். அப்படிப் பார்த்தால் ஆப்பிள் பழத்தில் சுவையூட்டும் அமிலமும், உள்ளக நீரின் அளவும் வெப்பத் தாக்கத்தால் குறையும்போது பழத்தின் சுவையும் மாறத்தானே செய்யும்? அதனால்தான் இப்போது நாம் சாப்பிடும் ஆப்பிள் பழத்தின் சுவை, முதலில் மாதிரி தித்திக்கவில்லை என்பது புரிகிறதா?

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பார்கள். அது “ஆரோக்கியமான’ ஆப்பிளாக இருந்தால்தானே நமக்கு ஆரோக்கியம் தரும்? உலகம் போகிற போக்கைப் பார்த்தால் வெப்பமயமாதலால் காலப்போக்கில் ஆப்பிள் பழம் கூட கசக்கும் போலிருக்கிறது!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:49

உங்க வீட்டில் இன்டக்ஷன் ஸ்டவ் இருக்கா…
-----------------------

 சமையலறையில் இன்டக்ஷன் ஸ்டவ்வை நெரிசலாக வைத்துக் கொள்ளாமல் சற்று இட வசதியோடு வைத்துக் கொள்வது நல்லது. இந்த ஸ்டவ் அருகில் மிக்ஸி, கேஸ் அடுப்பு போன்றவற்றை வைக்க வேண்டாம்.

 இன்டக்ஷன் ஸ்டவ் உபயோகப்படுத்தி முடித்த பிறகு கீழே ஸ்டவ்வில் இருக்கும் சுவிட்சை மட்டும் முதலில் ஆஃப் செய்யவும். ஸ்டவ் உட்பகுதி குளிர ஒரு சிறிய ஃபேன் இருக்கும். அதைக் குளிரச் செய்து ஆஃப் ஆன பிறகு மேலே மெயின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்தால் ஸ்டவ் நீடித்து உழைக்கும்.

 இந்த எலெக்டிரிக் அடுப்பின் கீழ்புறம்தான் சிறிய காற்றாடி (ஃபேன்) உள்ளது. அதன் சுற்றுப்புறத்தில் வலை போல இருக்கும். அதில் தூசு அடையாமல் பழைய டூத் பிரஷ் கொண்டு அவ்வப்போது வெளிப்புறத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் இந்த அடுப்பு நீண்ட காலம்  உழைக்கும்.

 இன்டக்ஷன் ஸ்டவ்வைச் சுத்தம் செய்யும்போது அதிக சோப்புத் தண்ணீர் போட்டுக் கழுவக் கூடாது. ஸ்கரப்பரில் சிறிதளவு சோப்பு எடுத்துக் கொண்டு அழுத்தாமல் லேசாக தேய்த்தால் சுத்தமாகிவிடும். பிறகு காய்ந்த துணி கொண்டு துடைத்து விட்டு மீண்டும் அலசிவிட்டு திரும்பவும் துடைத்து விட்டால் ஸ்டவ் பளிச்சென்று ஆகிவிடும்.

 இந்த ஸ்டவ்வைப் பயன்படுத்தி சமையல் வேலை செய்யும் போது பாலோ, சாம்பாரோ பொங்கி வழிந்து விட்டால் உடனே தண்ணீர் கொண்டு கழுவுவதைத் தவிர்க்கவும். டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து விட்டாலே போதுமானது.

 இந்த ஸ்டவ்வுக்கு முறையான மின் இணைப்பு கொடுக்க வேண்டும். மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் மின் இணைப்புகளுடன் சேர்த்து இன்டக்ஷன் ஸ்டவ் மின் இணைப்பை பயன்படுத்தாதீர்கள்.

 இந்த அடுப்பை “ஆன்’ செய்தவுடன் பொதுவாக ஒரு டெம்ப்ரேச்சர் (Temperature) ஒளிரும். அதனை அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. என்ன உணவுப்பொருள் சமைக்கப் போகிறோமோ? அதற்குரிய பட்டனை உபயோகப்படுத்தி சமைக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

 குக்கருக்கான காஸ்கெட்டை அடிக்கடி சரி பார்த்துக் கொள்ளவும். “காஸ்கட்’ பழசாகிவிட்டால் விசில் வருவதற்குள் நான்கு புறமும் தண்ணீர் நிறைய கொட்டி இருக்கும். அந்த தண்ணீர் அடுப்பினுள் சென்று இந்த அடுப்பினுள் இருக்கும் காயிலை பழுதாக்கிவிடும்.

 அதுபோல் இன்டக்ஷன் ஸ்டவ்வின் உபயோகம் முடிந்த பின் உடனடியாக மெயின் ஸ்விட்சை அணைக்கக்கூடாது. அடுப்பில் உள்ள ஸ்விட்சை அனைத்துவிட்ட போதும் கீழே உள்ள காற்றாடி சுற்றிக் கொண்டிருக்கும். காயில் சூடு குறைவதற்கு காற்றாடி உதவுகிறது. எனவே அது சுற்றி தானாகவே நின்ற பின் அடுப்பிலிருந்து வரும் சத்தமும் நின்றுவிடும். அதன் பிறகுதான் மெயின் ஸ்விட்சை அணைக்க வேண்டும்.

 இன்டக்ஷன் ஸ்டவ் உபயோகம் முடிந்தபின் அதன் மீது தேவையில்லாமல் பாத்திரங்களை வைப்பதைத் தவிர்க்கவும்.

 நீங்கள் வாங்கிய இன்டக்ஷன் ஸ்டவ் சரியாக இயங்கவில்லை என்றால் உடன் கம்பெனி மெக்கானிக்கை வரவழைத்து சரி செய்யவும்.

 இந்த ஸ்டவ்வை பயன்படுத்தும் போது சமையலறையில் வீட்டிலுள்ள குழந்தைகள் வருவதை தவிர்க்கவும்.

- கீதா ஹரிஹரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:51

வெள்ளி நகைகள் தங்கம் போல மின்ன
-------------------
 வெள்ளி நகைகள் வெப்பம் உண்டாக்கும் இயல்பு கொண்டவை.

 உடலில் உண்டாகும் இசிவு எனும் நோயை அகற்றக்
கூடியது.

 மனதில் மிகுந்த குதூகலத்தை உண்டாக்கக் கூடியது.

 மலச்சிக்கலை நீக்கும் ஆற்றல் பெற்றது.

 உடலின் உள்ளே உள்ள கொதிப்பை அகற்றும் தன்மை கொண்டது.

 மூளைக்கு மிகுந்த வலிமையை உண்டாக்கும் இயல்பு கொண்டது.

 பெண்களுக்கு பெரும்பாலும் கணுக்கால்களில் உள்ள மூட்டுப் பகுதிகளிலும் முழங்கை போன்ற மூட்டுப் பகுதிகளிலும் மூட்டுவலி ஏற்படுவதுண்டு. இதற்கு ருமாட்டிக் “ஆர்த்தரைட்டிஸ்’ என்று ஆங்கிலத்தில் பெயர். இதனை அகற்ற பெண்கள் கணுக்கால்களில் உள்ள மூட்டுப் பகுதிகளில் கால் விரல்களில் வெள்ளி நகை அணிய வேண்டும்.

 காலில் அணியும் மெட்டியால் வலியில்லாமல் ஈஸியான சுகப் பிரசவம் ஏற்படும் என்பது ஒரு நம்பிக்கை.

 காலில் அணியும் கொலுசு, தண்டையினால் நம்மிடம் இருந்து வெளியேறும் சக்தியை மீட்டு ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி கூடும்.

 தங்கம், வெள்ளி எந்த நகைகளாக இருந்தாலும் நெக்லஸ், செயின், கொலுசு, பிரேஸ்லெட், ஆரம் போன்றவற்றை வைக்கும்போது வளைத்துச் சுருட்டி வைக்கக்கூடாது. வளைத்தால் விரைவில் இணைப்பு விட்டு விடலாம். இதைத் தவிர்க்க நீளமான பெட்டியில் வைக்க வேண்டும்.

 வெல்வெட் துணி, நல்ல வெள்ளைத் துணிகளை இரண்டாக மடித்து அதன் மேல் நகைகளை வைத்தால் நகைகள் புதிது போல் இருக்கும்.

 உருளைக்கிழங்கு வேக வைத்த நீரில் வெள்ளி நகைகளைப் போட்டு எடுத்துக் கழுவித் துடைத்தால் பளிச்சென மின்னும்.

 திருநீறு கொண்டு தேய்த்துக் கழுவினாலும் வெள்ளி நகைகள் கறுப்பு போய் மிளிரும்.

-ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:52

பெண்கள் முதலில் தங்களை மதிக்க வேண்டும்!
---------------------------

“”வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நிறைய திறமைகள் இருக்கலாம். அறிவு இருக்கலாம். ஆனால் அவற்றை வெளிக்காட்ட முடியாதபடி வீடு அவர்களைச் சிறைப்படுத்தியிருக்கும். அவர்கள் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பார்கள்.

அப்படிப்பட்ட பெண்களை அணுகி அவர்களுடைய திறமைகளை அவர்களுக்கும் – வெளி உலகத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்” என்கிறார் சுமதி ஸ்ரீநிவாஸ். அதற்காக கடந்த 10 ஆண்டுகளாக அவர் நடத்தி வரும் நிகழ்ச்சி ஹோம்மேக்கர்.

இல்லத்தரசிகளை கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குப் பல்வேறு போட்டிகளை நடத்தி, வெல்பவர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார் சுமதி ஸ்ரீநிவாஸ்.

“”பெண்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்பதை வைத்து மதிப்பிடும் போக்கு நீண்ட காலமாக இருக்கிறது. இதற்கு மாறாக, பெண்கள் எவ்வளவு திறமையாக இருக்கிறார்கள் என்பதை வைத்து மதிப்பிடுவதுதான் என் நோக்கம். விளையாட்டு, பேச்சு, பாட்டு, நடனம், சமையல் என பல போட்டிகளைப் பெண்களுக்கு நடத்தி அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வர நான் முயன்றதன் விளைவுதான் “ஹோம்மேக்கர்’ நிகழ்ச்சி” என்கிறார் அவர்.

பெண்களுக்காக ஆங்கிலம் – தமிழ் இருமொழி இதழ் ஒன்றைக் கொண்டு வருகிறார். அதுமட்டுமல்ல, மேல்தட்டுப் பெண்களுக்கு – பெண் தொழில் முனைவோருக்கு ஒரு இதழையும் கொண்டு வருகிறார். “எலைட் வுமன் கான்ஃபிடரேஷன்’ என்ற அமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
சென்னை நந்தனத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இந்த இதழ்ப் பணிகள் மட்டும் நடைபெறவில்லை. பெரிய நிறுவனங்களின் வியாபார – தொழில் மேம்பாட்டுக்காக ஊடகங்களின் வழியே பல்வேறு பணிகளும் அங்கே நடைபெறுகின்றன.

பல ஆவணப்படங்கள், தொழில் மேம்பாட்டுக்கான திரைப்படங்கள் எடுக்கும் பணி ஒருபுறம். ஒரு பொருளின் விற்பனையைப் பெருக்குவதற்கான ஆராய்ச்சி செய்வது இன்னொரு புறம். அதற்கான பத்திரிகை விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்குவது, நிகழ்ச்சிகளை நடத்துவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்துவது என ஏகப்பட்ட பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார் சுமதி ஸ்ரீநிவாஸ்.

“”நான் எம்.ஏ., சோசியாலஜி, சைக்காலஜி படித்திருந்தாலும் எனது படிப்புக்குச் சிறிது கூடத் தொடர்பு இல்லாத, ஈவன்ட் மேனேஜ்மென்ட் துறையில்தான் முதன் முதலில் இறங்கினேன். கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல முதலில் இருந்தது. ஆனாலும் ஒவ்வொன்றாகச் சிறிது சிறிதாகக் கற்றுக் கொண்டேன். தன்னம்பிக்கை, விடாமுயற்சி இரண்டும்தான் எனக்கு எப்போதும் துணை” என்கிறார் அவர்.

“”நான் நிறையப் பெண்களைச் சந்தித்திருக்கிறேன். எல்லாருக்கும் சொந்தமாகத் தொழில்கள் செய்து முன்னேற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்காகப் பலர் உழைக்க முன் வருவதில்லை. முதலில் எந்தத் தொழிலில் இறங்குகிறோமோ, அந்தத் தொழிலில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தப் பிரச்னையையும் உணர்வுப்பூர்வமாகப் பார்க்கக் கூடாது. எதையும் அறிவுப்பூர்வமாகப் பார்க்க வேண்டும். பிறரைச் சார்ந்துதான் வாழ முடியும் என்ற மனப்பான்மையை அடியோடு தங்கள் மனதில் இருந்து பெண்கள் நீக்க வேண்டும். பெண்கள் முதலில் தங்களை மதிக்க வேண்டும். தங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவை எல்லாம் இருந்தால்தான் பெண்கள் சொந்தமாகத் தொழில் செய்து முன்னேற முடியும். முத்திரை பதிக்க முடியும்” என்கிறார் சுமதி ஸ்ரீநிவாஸ்.
“”ஊடகப் பணியோ, ஈவன்ட் மேனேஜ்மென்ட் வேலையோ இந்த நேரத்தில்தான் முடியும் என்று சொல்ல முடியாது.

வேலை முடிய நள்ளிரவு கூட ஆகிவிடும். அதனால் வேலையைப் பாதியில் விட்டுவிட்டுப் போக முடியாது. வேலை என்று வந்துவிட்ட பிறகு அதில் ஆண், பெண் என்று வேறுபாடு பார்க்கக் கூடாது. நான் நள்ளிரவு ஆனாலும் எந்தத் தயக்கமும் இன்றி என் வேலைகளைச் செய்து கொண்டு இருப்பேன். இதனால் என் டீமில் உள்ள பிறர் என்னைப் “பெண்’ என்று பார்ப்பதற்குப்  பதிலாக, டீம் லீடர் என்று பார்ப்பார்கள். மதிப்பார்கள்.
பல பெண்கள் என்னிடம் பேசும்போது, ஒரு தொழில் செய்வதற்கு முதலீடு வேண்டுமே எனத் தயக்கத்துடன் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் தைரியமும், தன்னம்பிக்கையுமே பெரிய முதலீடுகள் என்று சொல்வேன்” என்று சொல்லும் சுமதி ஸ்ரீநிவாஸ், “”தோல்விகளிலிருந்து – தவறுகளில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும்” என்கிறார்.

“”நான் முதன்முதல் செய்த ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிகழ்ச்சியை சென்னை மியூசிக் அகாதெமியில்தான் நடத்தினேன். அதற்கு ஸ்பான்சர்கள் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி என்ன என்பதையே பல ஸ்பான்சர்களுக்கு விளக்க வேண்டியிருந்தது. ஆனாலும் நான் சோர்ந்து போகவில்லை. உலகம் பரந்தது. ஒரு சிலர் ஒரு வாய்ப்பை நமக்குத் தரவில்லை என்பதாலேயே அந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்காமல் போய்விடாது. ஓரிடம் இல்லாவிட்டால் இன்னோரிடம் என்று மனம் தளராமல் முயற்சி செய்தேன். அந்த முயற்சிதான் இன்று வரை என்னை நிலை நிறுத்தியிருக்கிறது” என்கிறார் பெருமையாக.

கிராமப்புறங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.

“”எதைச் செய்தாலும் அதில் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டும் செயல்படக் கூடாது. இந்தச் சமூகத்தை முன்னேற்றுவதற்காக நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்” என்கிறார் சுமதி ஸ்ரீநிவாஸ் உறுதியாக.

- ந.ஜீவா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:18

செய்யாத தவறுக்கு சாரி கேட்ட எம்ஜிஆர்
-------------------

எம்.ஜி.ஆருக்கு கர்நாடக இசையிலும் ஈடுபாடு உண்டு என்பது அநேகருக்குத் தெரியாது.

ஒருமுறை பிரபல எழுத்தாளர் இல்லத் திருமணத்திற்குச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். மேடையில் லால்குடி ஜெயராமனின் இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். நுழைந்ததும் அங்கு ஒரே சலசலப்பு. அனைவரின் பார்வையும் எம்.ஜி.ஆரை நோக்க ஆரம்பித்துவிட்டது.

கச்சேரி கேட்டு ரசிக்க வேண்டும் எனும் ஆவலோடு வந்த எம்.ஜி.ஆருக்கு பெருத்த ஏமாற்றம் ஆகிவிட்டது. உடனே அவர் எழுந்து சென்றுவிட்டார்.

ஆனால், கச்சேரி முடிவதற்குள் லால்குடி ஜெயராமனுக்கு ஒரு கடித உறை வந்து சேர்ந்தது. அக்கடிதத்தில், “”உங்களுடைய நயமான இசையை ஒரு ரசிகனாக இருந்து கேட்டு அனுபவிக்க வந்தேன். ஆனால், என்னால் உங்களுடைய கச்சேரியே பாதிக்கப்பட்டுவிட்டது.

இப்படி குறுக்கிட நேர்ந்ததிற்கு மிகவும் வருந்துகிறேன்” என்று எம்.ஜி.ஆர். எழுதியிருந்தார்.

செய்த குற்றத்திற்கே மன்னிப்புக் கேட்க மறுக்கும் மனிதர்கள் நிறைந்த உலகில் தான் செய்யாத குற்றத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்தார் எம்.ஜி.ஆர்.

-எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு புத்தகத்திலிருந்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:19

உயிருள்ள குப்பைத் தொட்டிகள்..

கண்ணாடி முன் நின்று நீங்கள் ஏக்கப் பெருமூச்சு விடுவது புரிகிறது.

“சிட்டுப்போல இருந்த நான், இப்படி குண்டு பீரங்கி ஆயிட்டேனே’ என்று உங்கள் மனம் புலம்புவதும் தெரிகிறது.

என்னங்க செய்ய? இது உங்க பிரச்னை மட்டுமில்லீங்க, இன்று இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்களின் பிரச்னைங்க. ஆம் அதிக எடையால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் 30 சதவீதம் பெண்கள் அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எடை அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடுத்தர வயது பெண்களே அதிக எடையுடன் காணப்படுகின்றனர்.

ஏன் இப்படி? என்று குடும்பத் தலைவி ஒருவரிடம் கேட்டபோது, ஆமாங்க நாங்கதான் “உயிருள்ள குப்பைத் தொட்டி’ என்று கூறினார். நீங்க சொல்றது புரியலீங்க என்றபோது, அவர் விளக்கினார். “வீட்டில் எது மிஞ்சினாலும் அதை அந்த வீட்டு பெண்தான் சாப்பிடுகிறாள். வீணாக்க மனம் வருவதில்லை. இதனால் பிள்ளைகள் மீதி வைத்தாலும் சரி. கணவர் மீதி வைத்தாலும் சரி அதை எடுத்து வயிற்றில் கொட்டிக் கொள்கிறோம். பின்னே எடை கூடாம என்ன செய்யும்’ என்று அவர் அங்கலாய்த்தார். அதுமட்டுமல்ல காரணம். ஒரு குழந்தை பெற்றுவிட்டாலே போதும், “இனி எப்படி இருந்தா என்ன’? என்ற மனப்போக்கு  இந்தியப் பெண்களிடம் பரவலாகக் காணப்படுகிறது.

என்ன காரணம்: வாழ்க்கை முறை மாற்றம். பொருளாதார ஏற்றம், மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கம் ஆகியவை எடை கூடுவதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. முன்பு வீட்டு வேலைகளை பெண்களே செய்து வந்தனர். ஆனால் இன்று பொருளாதார ஏற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக வீட்டு வேலைகளை இயந்திரங்கள் (மிக்சி, வாஷிங் மிஷன், வெட்கிரைண்டர்) செய்கின்றன. உணவுப் பழக்கத்திலும் பெரும் மாறுதல் மேற்கத்திய பழக்க வழக்கங்கள் காரணமாக கொழும்பு, சர்க்கரை, மாவுச் சத்து அதிகம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடும் நிலை உருவாகி உள்ளது.  அதேவேளையில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகள் குறைந்துவிட்டன.

எப்படித் தெரிந்து கொள்வது?: உயரத்துக்கு ஏற்ற எடை இருக்க வேண்டும்.  நீங்கள் அதிக எடை உள்ளவரா என்று தெரிந்துகொள்ள “பாடி மாஸ் இண்டெக்ஸ்’ (பிஎம்ஐ) என்ற அளவு உள்ளது. பிஎம்ஐ அளவு 25-க்கு மேல் அதிகரித்து விட்டாலே உங்கள் எடை அதிகம் என்று தான் அர்த்தம். அந்த அளவு 30-க்கும் மேல் சென்றுவிட்டால்  நீங்கள் குண்டுப் பெண் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதை டாக்டரிடமோ அல்லது அருகில் உடற் பயிற்சி மையங்களிலோ தெரிந்து கொள்ளலாம்.

வேலைக்குப் போகும் பெண்களானாலும் சரி அல்லது வீட்டிலிருக்கும் பெண்கள் என்றாலும் சரி இனி அம்மியில் அரைக்க முடியாதுதான். அதற்குப் பதிலாக நாள்தோறும் உடல் பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். நடைபயிற்சி நல்ல உடற் பயிற்சி. தற்போது எடையைக் குறைக்க ஏராளமான சிகிச்சை முறைகள், கருவிகள், மருந்துகள் வந்துள்ளன. ஆனால் டாக்டரின் அறிவுரைப்படி உரியவர்களிடம் உரிய முறையில் சிகிச்சை பெறுவதே சிறந்தது. உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரியுங்கள். இல்லையெனில் சர்க்கரை, இதய நோய் என பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால் நீண்ட நாள்களுக்கு நீங்கள் இளமையாக இருக்கலாம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:21

இப்படியும் யோசிக்கலாமோ
----------------------
இப்போது வீட்டுக்கு வீடு வாஷிங் மெஷின் வந்துவிட்டது. வாஷிங் மெஷினை இயக்க படித்தவர்களே நிறையக் குழம்ப வேண்டியிருக்கிறது. நிறைய விதங்களில் துணிகளை ஊற வைக்க, துவைக்க, அலச, உலர்த்த வசதிகள் உள்ளன. எவ்வளவு வசதிகள் இருந்தாலும், ஏதோ ஒரு சில முறைகளில் மட்டுமே இப்போதும் பலர் துவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல உடல்நிலை உள்ளவர்களுக்கே இந்த நிலை என்றால், மாற்றுத் திறனாளிகள், காக்கை வலிப்பு நோயாளிகள், ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாஷிங் மெஷினைப் பயன்படுத்துவது எப்படி?

என்ன செய்யலாம்? என்று தீவிரமாகச் சிந்தித்தார் ஜான் மிடில்டன். இங்கிலாந்தில் உள்ள   “லாண்டரி ஸ்பெஷலிஸ்ட் ஜேடிஎம்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

இப்போதுள்ள வாஷிங் மெஷின்களில் நிறைய விதங்களில் துவைக்கும்படி புரோகிராம் செய்து வைத்திருப்பதை ஒரே ஒரு முறையில் மட்டும் துவைக்கும்படி மாற்றினால் என்ன?

செயலில் இறங்கினார்.

சில மாற்றுத் திறனாளிகளுக்கு கைகளைப் பயன்படுத்த முடியாது. சத்தம் போட்டால், வாஷிங் மெஷின் இயங்கும்படி புரோகிராம் செய்தார்.

ஆனால் அதிலும் ஒரு சிக்கல் வந்தது. சிலருக்கு வாய் பேச முடியாது. குரலில் பிரச்னை இருக்கும். அவர்கள் கத்தினாலும் பிறருக்குக் கேட்காது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த புதிய வாஷிங் மெஷின் பயன்படாதே! என்ன செய்யலாம்? மீண்டும் சிந்தனை.

அப்போது டிவியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தார். ஒரு நாய் மாற்றுத் திறனாளிகள் படுத்த படுக்கையை சுருட்டி  வைத்தது. துவைக்கப்பட வேண்டிய துணிகளை வாயால் கவ்வி அழுக்குத் துணிக் கூடையில் கொண்டு போய் போட்டது.

இப்படிப் பழக்கப்படுத்தப்பட்ட நாய்களை வைத்தே புதிய வாஷிங் மெஷினை இயக்கினால் என்ன?

புதிய வாஷிங் மெஷினில் சில மாற்றங்களைச் செய்தார்.

தனது வளர்ப்பு நாயையும் பழக்கப்படுத்தினார்.  நாய் தனது காலை வைத்து வாஷிங் மெஷினில் அழுத்தியவுடன் மெஷின் “ஆன்’ ஆகிவிடும். வாஷிங் மெஷின் கதவில் கட்டப்பட்டுள்ள கயிறை வாயால் பிடித்து இழுத்தவுடன் கதவு திறந்து கொள்ளும். அழுக்குத் துணிகளை வாயால் கவ்வி, மெஷினுக்குள் போட்டு, கதவை மூடி ஒரு குரை குரைத்தால் போதும். வாஷிங் மெஷின் இயங்க ஆரம்பித்துவிடும். துணிகளைத் துவைப்பதற்குத் தேவையான வாஷிங் பவுடர் போன்றவை முதலிலேயே நிரப்பி வைக்கப்பட்டிருப்பதால், அவற்றை மெஷினுக்குள் போட வேண்டிய அவசியமில்லை.

துணிகள் துவைக்கப்பட்டு, உலர்த்தப்பட்டதும் வாஷிங் மெஷின் தானாகவே ஆஃப் ஆகிவிடும்.

இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கு நிறைய வரவேற்பு. ஜான் மிடில்டன் இப்போது நடப்பதில்லை. பூமியிலிருந்து அரை அடி உயரத்தில் மிதந்து கொண்டு செல்கிறார்.

நமது நாட்டில் இந்த வாஷிங் மெஷின்களைப் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

நமது தெரு நாய்கள் கத்துகிற கத்தில், அந்த ஒலியைக் கேட்டு இந்த வாஷிங் மெஷின்கள், குழம்பி… செயலில்லாமல் போனாலும் போய்விடக் கூடும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:23

பெருங்காயம் என்றால் என்ன?
---------------

பெருங்காயம் என்றால் என்ன? அதன் பூர்வீகம் எங்கே? அதன் மருத்துவ குணங்கள் என்ன?
நே.சம்பத், அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரியாங்குப்பம்.

ஆயுர்வேத மருத்துவர் சுவாமிநாதன் அளிக்கும் பதில்..
பெரின்னியல் (pernnial plant)   என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.

இருவகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அவை இருக்கும். கருஞ்சிவப்பான பிசினும் கருப்பு வகையில்தான் சேர்க்கப்படும். வெள்ளை நிறமாக உள்ள பால் பெருங்காயம் நல்ல மணமும் மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டதுமாகும்.

கலப்படம் செய்து விற்கப்படும் பெருங்காயத்தை அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. இந்தப் பெருங்காயத்தைத் தண்ணீரில் போட்டால் கரையாமல் கோந்து போலக் காணும். அந்தக் கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே மிஞ்சும். கலப்படமில்லாத சுத்தமான பெருங்காயமானால் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து தண்ணீர் பால் நிறமாக மாறிவிடும். மேலும் சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக்குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம் போலப் பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும். பெருங்காயத்திலுள்ள “ஓலியோ ரெஸின்’ மிக உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டது.
பாவப் பிரகாசர் எனும் முனிவர் பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக் கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும்.

கோளங்களில் படிந்துள்ள அழுக்கை அகற்றி ருசியைத் தூண்டிவிடும்). ஸ்த்ரீபுஷ்பஜனனம் (கருப்பையைச் சார்ந்த முட்டையை நன்றாக உற்பத்தி செய்து மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அதனால்தான் பிரசவித்தவுடன் தாய்க்கு இதைப் பொரித்துப் பூண்டு, பனை வெல்லம், இஞ்சிச் சாறு இவைகளுடன் கொடுப்பது உண்டு), பவ்யம் (உடலுக்கு வலுவைக் கூட்டும் பெருங்காயத்தை நெய்யில் பொரித்துத் தசமூலாரிஷ்டம், வில்வாதி லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சிட்டிகை சேர்த்து உணவிற்குப் பின் சாப்பிட, வயிற்றில் அஜீர்ணம், அஜீர்ண பேதி, குடலோட்டம், பசியின்மை, ஜீரண சக்திக் குறைவு ஆகியவற்றைப் போக்கி, உடலுக்கு வலுவைத் தரும்), மூர்ச்சாபஸ்மாரஹ்ருத்பரம் (மூர்ச்சை எனும் மயக்கநிலை, வலிப்பு ஆகிய நோய்களில் மிகவும் உபயோகமானது) என்று கூறுகிறார்.

ஸும்ருத சம்ஹிதை எனும் நூல், பெருங்காயத்தைப் பற்றி மேலும் சில வர்ணனைகளைச் சேர்க்கிறது. சுவை மற்றும் ஜீரண இறுதியில் காரமானது, எளிதில் செரித்துவிடும். தீபனம் (பசித்தீயைத் தூண்டிவிடும்), ஸ்நிக்தம்(உடல் உட்புற நெய்ப்பைத் தரும்), ஸரம் (மலக்கட்டை உடைத்து மலத்தை வெளியேற்றும்).

சரகஸம்ஹிதை வாதகபாபஹம் என்கிறது. அதாவது வாதகபநோய்களை நீக்குகிறது. பெருங்காயத்தை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதில் விட காது வலி தீரும். இத்துடன் உளுந்து சேர்த்துத் தணலிலிட்டுப் புகைத்து அந்தப் புகையை உள்ளிழுக்க வயிற்று உப்புசத்துடன் ஏற்படும் மூச்சிரைப்பு மற்றும் இருமல் தணியும். பெருங்காயத்தைத் தண்ணீர் விட்டரைத்து மேல்பூசிச் சூடு காட்ட தேள்கடி வேதனை குறையும்.


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103  (பூந்தமல்லி அருகே)

பெருங்காயம் என்றால் என்ன? அதன் பூர்வீகம் எங்கே? அதன் மருத்துவ குணங்கள் என்ன?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:24

காரில் ஒரு ரவுண்டு வந்த காமராஜர்
--------------

காலை 8.30 மணிக்கு மேல் பார்வையாளர்கள் யார் வந்தாலும் அவர்களை முதல்வர் காமராஜர் சந்திப்பது வழக்கம். ஒருநாள் காமராஜரைப் பார்க்க முன்பின் தெரியாத ஒரு டாக்சி டிரைவர் வந்திருந்தார். “ஒரே கதவு உள்ள “கேசல்’ டாக்சியை வைத்து தான் பிழைத்து வருவதாகவும், அதனால் வண்டியில் ஏற, பயணிகள் மிகவும் சிரமப்படுவதாகவும், இரண்டு கதவுகள் உள்ள “பியட்’ வண்டி கிடைத்தால்தான் நல்லபடியாக தான் வாழ்க்கை நடத்த முடியும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

அந்தக் காலத்தில் “பியட்’ காரை பணம் கொடுத்து உடனே வாங்க முடியாது. அரசு மூலம் கோட்டா பெற வேண்டும். கார் விற்பனையில் ஒருசில சதவீதம் அலுவலர்களுக்கும், எம்.எல்.ஏக்கள் போன்றவர்களுக்கும் ஒருசில சதவீதம் டாக்சி ஓட்டுபவர்களுக்கும் ஒதுக்குவது வழக்கம். அதுபோல தனக்கு ஒதுக்கும்படி அந்த டிரைவர் கேட்டார். அந்த டிரைவரின் பெயர் கந்தசாமி.

முதல்வர் என்னை அழைத்து, “அந்த டிரைவர் சொல்வது உண்மையா? அவர் சொல்லியபடி அவரது வண்டி ஒரே கதவுள்ள வண்டியாக உள்ளதா, அது அவரது வண்டிதானா’ என்று பார்த்து வரச் சொன்னார். நானும் அவ்வாறு பார்த்து, அவர் சொல்வது உண்மையென்று சொன்னேன்.

முதல்வர் காமராஜர் உடனே என்னிடம், “”அவர் கேட்பது நியாயமாகத்தான் இருக்கிறது. உள்துறை செயலரிடம் சொல்லி அவருக்கு ஒரு பியட் கார் ஒதுக்கீடு செய்யும்படி நான் சொன்னதாகச் சொல்லவும்” என்றார்.

சில மாதங்கள் கழித்து அந்த டிரைவர், முதல்வர் வீட்டிற்கு மீண்டும் வந்தார். என்னைப் பார்த்து, “”ஐயா, தங்கள் உதவியாலும் முதல்வரின் உத்தரவுப்படியும் எனக்கு ஒரு பியட் கார் ஒதுக்கீட்டில் கிடைத்துவிட்டது. புது வண்டி வாங்கி வந்துள்ளேன். முதல்வரை இந்த காரில் அமர வைத்து சிறிது தூரமாவது சவாரி செய்ய வேண்டும் என்பது என் ஆசை. முடியுமா?” என்று கேட்டார். நான் “”சிறிது நேரம் பொறுத்திருங்கள். ஐயா கீழே வருவார்கள். அவரிடமே கேளுங்கள்” என்றேன்.

முதல்வர் வந்தவுடன் டிரைவர் அவரிடம் கேட்க, காத்திருந்த பார்வையாளர்களிடம் “”இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு சிறிதும் தயங்காமல், காரில் ஏறிக் கொண்டார் காமராஜர். சிறிது தூரம் பயணம் செய்து அந்த டிரைவரை மகிழ்வித்தார்.

பின்னர் திரும்பி வந்து காத்திருந்த பார்வையாளர்களைப் பார்த்தார். அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி. ஒரு முதல்வர் இவ்வளவு எளியவராகப் பழகுகிறாரே என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அந்த டிரைவரும் தான் ஒரு கோட்டையைப் பிடித்த பெருமிதத்தில் மகிழ்ச்சியோடு திரும்பினார்.

முதல்வர் காமராஜர் தான் ஆட்சி செய்த காலம் முழுவதும் சென்னையில் கூட அரசு வாகனத்தைப் பயன்படுத்தவில்லை. “எம்.டி.டி.2727′ என்னும் செவர்லே காரைச் சொந்தமாக வைத்து உபயோகித்து வந்தார். அதேபோல் சென்னையில் தங்குவதற்கும் அரசு கட்டடத்தை உபயோகிக்கவில்லை. வாடகை வீட்டிலேயே தங்கியிருந்தார். தான் இறக்கும்வரை காமராஜர் அந்த வீட்டிலேயே குறைந்த வாடகைக்குத் தங்கியிருந்தார்.

- பொ.க.சாமிநாதன் எழுதிய “மூன்று முதல்வர்களுடன்’ நூலிலிருந்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:26

இந்தியாவின் முதல் நூல் நிலையம்
---------------

“சென்னை இலக்கியச் சங்கம்’ Madras Literature Society) என்று அழைக்கப்படும் ஓர் அரிய நூல் நிலையத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

சென்னை கல்லூரிச் சாலையிலுள்ள பெண்கள் கிறித்துவக் கல்லூரி அருகே அமைந்துள்ள இச்சங்கம் 1812-இல் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே தொடங்கப்பட்ட முதல் நூல் நிலையம் இதுதான். ஆரம்பத்தில் இச்சங்கம், ஆங்கில இலக்கியம், வரலாறு, தத்துவம், அரசியல் முதலிய பல துறைகளில் உள்ள உயர்ந்த நூல்களை இங்கிலாந்திலிருந்தே தருவித்து உறுப்பினர்களுக்கு வழங்கியது.

202 வயதான இந்த நூலகத்தில் இரண்டு லட்சம் நூல்களுக்கு மேல் உள்ளன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்த நூலகத்தில் உறுப்பினராக இருந்து வந்தார் என்றால் உங்களுக்கு வியப்பாயிருக்கிறதல்லவா! அவர் அலிப்பூர் சிறையில் இருந்தபோது இந்த நூலகத்திலிருந்துதான் புத்தகங்களைப் பெற்று வந்தார்.

1872-இல் வெளிவந்த ரிக் வேதம், 1880-இல் வெளியான புத்த ஜாதகக் கதைகள் 1869-இல் வெளிவந்த நெப்போலியனின் கடிதங்கள். லத்தீன், கிரீக், அரபி, சிரியா, எத்தியோப்பிய மொழிகளில் வந்த பைபிள்கள் 1851-இல் வெளியான சீன மொழி அகராதி போன்றவையெல்லாம் இங்கு உள்ளன.

இந்த நூலகம் பெரும்பாலும் ஆங்கில நூல்களையே கொண்டதாயினும் தமிழகத்தின் தலைசிறந்த கருவூலமாகத் திகழ்கிறது. 19-ஆவது நூற்றாண்டின் தமிழக வரலாற்றை ஆய்வு செய்வோருக்கு இந்த நூலகம் மிகவும் உதவியாக இருக்கும். உறுப்பினர்களிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு மாதம் ஒருமுறை கூடுகிறது.

வழக்கறிஞரும், பத்திரிகை ஆசிரியரும், தொழிலதிபரும், அயல்நாட்டுத் தூதரும், முன்னாள் நீதிபதியாகவும் அமைந்துள்ள அந்தக் குழுவினர் நூலகத்துக்குப் புதிய நூல்கள் வாங்குவது பற்றி தீர்மானிக்கின்றனர். ஆங்கில நூல்கள் பற்றி விமர்சனங்கள், செய்திகள், விளம்பரங்கள் ஆகிய பலவற்றையும் ஆராய்ந்து மாதந்தோறும் சுமார் முப்பது புதிய நூல்களுக்குக் குறையாமல் வாங்குகின்றனர். வாங்கிய பிறகு அந்தப் பட்டியலை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்புகின்றனர்/
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:28

பாம்புக்கு காது கேட்குமா?
--------------

பாம்புக்கு காது கேட்குமா? தொடர்ந்து குறிவைத்து தாக்குமா? பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா? கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா? இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.

புவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

எனவே, நீலகிரி மக்களும் பாம்புகளைக் குறித்து தெரிந்து கொள்ளவும், அவை கடித்தால் உடனடி முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பாம்புகளைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் முதல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்துவோர் வரை பல்வேறு தரப்பினரும்  பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த உதகை அரசு கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியரும், சென்னை பாம்பு பண்ணையின் முன்னாள் இணை இயக்குநருமான  டாக்டர் கண்ணன் நம்மிடம் தெரிவித்ததாவது:

“”பாம்புகள் என்றாலே ஒருவித பயம் உள்ளது. அதுதான் பாம்புகளைக் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும் காரணமாகும். பயம், மூடநம்பிக்கை, குறைந்துவரும் வன வளம், வாழ்விடங்கள் குறைப்பு போன்றவை பாம்புகளின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.

பாம்புகளுக்கு மனிதர்களைப்போல வெளிப்புற செவியில்லாமல் உட்புற செவி மட்டுமே உள்ளதால் அதிர்வுகளை மட்டுமே அவை உணரும். அவற்றிற்குக் காது கேட்காது. அதிர்வுகளுக்கு ஏற்ப நகரும். அதனால், இவை துரத்திச் சென்று மனிதர்களைக் கடிக்கும் என்பது கற்பனையானதே. அதேபோல, பாம்புக்கு மூளைத்திறன் குறைவு என்பதால் அவற்றால் சிந்திக்க முடியாது. எனவே, பாம்புக்கு முட்டையும், பாலும் வைத்தால் அதை அவை குடித்து விடுகின்றன என்பது நம்பிக்கைதானே தவிர, உண்மையல்ல.

அதைப்போலவே கொம்பேறி மூக்கன் பாம்பு தான் கடித்து இறந்தவரை மயானத்தில் எரிக்கும் வரை அங்குள்ள மரத்தில் மறைந்திருந்து பார்க்கும் என கூறப்படுவதும் தவறானதாகும். கொம்பேறி மூக்கனுக்கு விஷத்தன்மையே கிடையாது. தவறான தகவல்களால்தான் பாம்புகளைக் குறித்து ஒரு பீதி நமக்குள் உள்ளது.

பாம்புகள் உழவனின் நண்பர்களாவர். சராசரியாக ஒரு ஜோடி எலி ஆண்டுக்கு தனது குடும்பத்தில் 880 குட்டிகள் உருவாக காரணமாக அமைகின்றது. இவ்வாறு நூற்றுக்கண்க்கில் பெருகும் எலிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. பாம்புகளால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியுமென்பதால் தட்டுப்பாடில்லாமல் உணவு தானியங்கள் கிடைப்பதற்கு பாம்புகள் அவசியமானவையாகும்.

குளிர் ரத்த பிராணியான பாம்புகளால் நீலகிரி போன்ற குளிரான பகுதிகளில் இருக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நீலகிரி மலைப்பகுதியிலும் பல்வேறு வகையான பாம்புகள் வசிக்கத் தொடங்கி
யுள்ளன.

இந்தியாவில் 283 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை” என்றார்.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் பூபதி கூறியதாவது:

“”பருவநிலை மாற்றங்களால் பாம்புகளில் பல வகை ஏற்கெனவே அழிந்துவிட்டன. ஒருசில வகையான பாம்புகளும் அழிவின் விளிம்பில் உள்ளன.

உலகிலுள்ள பாம்புகளில் 10 சத பாம்புகள் இந்தியாவில்தான் உள்ளன. தரையில் உள்ள பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும், கடல் பாம்புகள் விஷத்தன்மையற்றவையாகும். பொதுவாக அவை யாரையும் கடிப்பதுமில்லை. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பதும் தவறான தகவலாகும். பயத்தின் காரணமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பிற்கு ஏதுவாகிறது.

இந்தியாவில் சுனாமி ஏற்பட்ட பின்னர் நிகோபார் தீவுகள் ஒன்றரை அடி உயரம் கீழேயும், அந்தமான் ஒன்றரை அடி உயரம் உயர்ந்துவிட்டதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களும் பாம்புகளின் வாழ்விடங்களை அழிப்பதோடு அவற்றின் இடப்பெயர்ச்சிக்கும் ஏதுவாகிறது.

எனவே, பாம்புகளைக் குறித்த பீதியை போக்கிக் கொள்வதோடு அவற்றைக் குறித்தும் தெரிந்து கொண்டால் பாம்புகளை நம்மால் காப்பாற்ற முடியும். இயற்கையின் சக்கரத்தில் பாம்புகளுக்கும் பிரதான இடமுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.

ந்த கருத்தரங்கைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதைக் குறித்து வனத்துறையினருக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:30

ரயில்வே டிக்கெட்டுகள் சில ருசிகர தகவல்கள்
------------------

ரயில் பயணம் 1825 இல் துவக்கப்பட்டபோது இங்கிலாந்தில் ஒரு சிறிய பேப்பரில், பயணிப்பவரின் பெயர், பயணம் செய்யும் கோச் மற்றும் இருக்கை நம்பரை எழுத, அதில் மூன்று பிரதி எடுத்து ஒன்று பயணிப்பவரிடமும், இரண்டாவது டிக்கெட், பரிசோதகரிடமும் மூன்றாவது புக்கிங் அலுவலகத்திலும் கொடுத்து பராமரிக்கப்பட்டது.

1836 இல் ஒரு பிரிட்டிஷ் ஸ்டேஷன் மாஸ்டர் தாமஸ் டெட்மான்ட்சன்தான் முதன்முதலில், ஒரு கார்டில் டிக்கெட்டைப் பதிவுசெய்வதையும், அதில் தேதியும் ரப்பர் ஸ்டாம்பு செய்யப்பட்டு வழங்கியவர், டிக்கெட் தொகுதிகளுக்கு எண்ணிக்கையும் வழங்கப்பட்டது. இதுவே பின்னால் உலகம் முழுவதும் ஏற்கப்பட்டு அறிமுகமானது.

1973 இல் தான் கம்ப்யூட்டர் மூலம் ஒரு தடிமனான காகிதத்தில், பிரிண்ட் அடித்து டிக்கெட் அடித்து தருவது துவங்கியது. இதனால் கையால் அடித்து டிக்கெட் வழங்குவது முடிவுக்கு வந்தது. ஆனால் இன்றும் சில ஹெரிடேஜ் டிரெயின்களில் கையால் பதிவு செய்து டிக்கெட் வழங்கும் முறை உள்ளது.

2012 இல் தான் எஸ்.எம்.எஸ். மூலம் இந்திய ரயில்வே, தகவல் அனுப்ப, அதனைக்காட்டி, பரிசோதகரிடம் அனுமதி
பெறுவது துவங்கியது. மொபைல் மற்றும் எதில் அது பதிவாகியிருந்தாலும் அது ஏற்கப்பட்டது.

வடஅமெரிக்காவின் ஆம்டிராக் என்ற ரயில்வே நிறுவனம்தான் முதன்முதலில் எலெக்டிரானிக் ‘quick response’ (or) டிக்கெட்டுகளை 2012 இல் அறிமுகப்படுத்தியது.

இதனை ஸ்மார்ட் போன் மற்றும் டேபிளட் ஸ்கீரினில் காட்டினாலே டிடிஆர் ஒப்புக் கொண்டார். இதுவேகமாக ஐரோப்பா கண்டங்களிலும் பிறகு சீனா…  இந்தியா என எங்கும் பரவியது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:31

எழுத்தை நம்பி வாழ முடியும்!
---------------

காற்றைப் போல எல்லா இடத்திலும் பரவியிருப்பது எது? என்று யாராவது கேட்டால் தயக்கமின்றிச் சொல்லிவிடலாம் விளம்பரம் என்று.

ரேடியோவில், டிவியில், இதழ்களில், தெருவில் நடக்கும்போது கண்ணில்படும் பெரிய பெரிய விளம்பரப் போர்டுகளில் எல்லாம் விளம்பரம்… விளம்பரம்… விளம்பரம்…

துணிக்கடை விளம்பரம் முதல் கார் விளம்பரம் வரை எல்லா விளம்பரங்களையும் எழுதித் தரும் முன்னணி கிரியேட்டிவ் ரைட்டராக இருந்தவர் கவிஞர் தியாரூ.

நெல்லை மண்ணில் பிறந்த தியாரூ, ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.

அவரது நேர்காணல் ஒன்றில்.

“”நான் இந்தத் துறையில் 14 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் வீட்டிலிருக்கும் போது என்னால் எழுதப்பட்ட விளம்பரங்களை டிவியில் பார்க்கிறேன். ரேடியோவில் கேட்கிறேன். வீட்டைவிட்டு வெளியே வந்தாலோ அங்கங்கே தென்படுகிற ஹோர்டிங்குகளில் என் விளம்பர வாசகங்களைப் பார்க்கிறேன். என் விளம்பர வாசகங்கள் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது என்பதை நினைக்கும்போது எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.நான் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பயின்றாலும் தமிழார்வம் என் கூடப் பிறந்த ஒன்று. கவிதை அதுவும் மரபுக் கவிதைகளை எளிமையாக எழுதுவதில் சின்ன வயதில் இருந்தே ஆர்வம்.
விளம்பர வாசகங்கள் எழுதுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. முந்நூறு பக்கத்தில் சொல்ல வேண்டிய செய்திகளை ஒரு வரியில் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் சொற்கள் மக்களின் மனதைக் கவ்விப் பிடிக்க வேண்டும்.

உதாரணமாக, நான் சென்னையில் உள்ள பிரபல துணிக்கடைகளுக்கு எழுதிய விளம்பர வாசகங்கள் ரொம்பப் பிரபலமானவை.

ஒரு துணிக்கடைக்கு நான் எழுதிய “திரும்பி வருவீங்க… விரும்பி வருவீங்க’ என்ற விளம்பர வாசகங்கள் அனைவரையும் கவர்ந்தவை.

இளைஞர்களைக் கவர்ந்த விளம்பர வாசகம் என்றால், “எல்லாமே இருக்கு… நல்லாவே இருக்கு’.

இப்படி மக்களைக் கவரும்விதமாக விளம்பர வாசகங்களை எழுதும் கிரியேட்டிவ் ரைட்டர் வரிசையில் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் நான் முன்னணியில் இருப்பதற்குக் காரணம், நான் ஒரு படைப்பாளியாகவும் இருப்பதுதான்.

கவிதை எழுதும்போது என்ன உணர்வோடு, என்ன ஈடுபாட்டோடு எழுதுகிறேனோ அதே ஈடுபாட்டுடன்தான் விளம்பரங்களையும் நான் எழுதுகிறேன்.

மக்களின் மனதை விளம்பரங்கள் தொடும்விதமாக

விளம்பர வாசகங்களை எழுதுவதற்கு முதலில் மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும். மக்களைப் படிக்க வேண்டும். வாழ்க்கையைப் படிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் மொழி தெரியும்.

விளம்பர நிறுவனங்கள் ஒரு விளம்பரத்தை என்னிடம் எழுதக் கொடுக்கும்போது அது “பி’ பிரிவு மக்களுக்கா, “சி’ பிரிவு மக்களுக்கா அல்லது “ஏ’ பிரிவு எலைட் மக்களுக்கா என்பதைச் சொல்லிவிடுவார்கள். அதற்கு ஏற்ற மாதிரி நான் விளம்பர வாசகங்களை எழுதித் தருவேன்.

எந்தப் பொருளுக்கு விளம்பரம் தருகிறார்களோ அந்தப் பொருளைப் பற்றி, அதனுடைய போட்டி பொருளைப் பற்றியெல்லாம் மிக நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். விஷய ஞானம் இல்லாவிட்டால் விளம்பரத்துறையில் வெல்வது அரிது.

திரைப்படப் பாடல் எழுதும்போது மெட்டுக்குக் கட்டுப்பட்டு எழுதுவதைப் போல விளம்பரத்துறைக்கும் நிறைய வரையறைகள் உள்ளன. ஆனால் அதனால் எல்லாம் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை.

என்னுடைய விளம்பர வாசகங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே முழு விளம்பரமும் மக்களுக்கு நினைவுக்கு வர வேண்டும்.

விளம்பரம் எழுதும்போது வார்த்தைக்குப் பஞ்சம் வரக் கூடாது. புதுப்புது வார்த்தைகளில் புதுப் புது சிந்தனைகளைச் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமானது விளம்பர வாசகங்களில் தேவைக்கு மேல் ஒரு வார்த்தைகூட இருக்காது. சொற்களை வைத்து விளம்பர வாசகங்களைச் செதுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எல்லா விளம்பர நிறுவனங்களோடும் தொடர்பு வைத்திருக்கும் ஒரே கிரியேட்டிவ் ரைட்டர் அனேகமாக நான் ஒருவனாகத்தான் இருப்பேன்.

விளம்பரத்துறை என்னை வாழ வைத்திருக்கிறது. அதோடு திருப்தியடையாமல் நான் கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறேன். அவை விற்றுத் தீர்ந்து மறுபதிப்புகள் கண்டுவிட்டன.

நான் முதன்முதலில் சினிமாவுக்குப் பாடல் எழுதிய படம் “காதலே சுவாசம்’. டி.இமான் இசையில் உருவான அந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் வெளிவரவில்லை. அதற்குப் பின்பு ஜானகி விஸ்வநாதன் இயக்கிய “கனவு மெய்ப்பட வேண்டும்’ படத்துக்காக 3 பாடல்கள் எழுதினேன். அவருடைய புதிய படம் ஒன்றுக்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அவருடைய வீடியோ படம் ஒன்றுக்கும் எழுதினேன். விளம்பரங்களில் இடம் பெறும் பாடல்களும் என் கைவண்ணத்தில் உருவானவைதான். விஜய் ஆன்டனி, மணி சர்மா, பரத்வாஜ், டி.இமான், சுந்தர்பாபு, சுரேஷ் பீட்டர், பால்ஜேக்கப் ஆகிய இசையமைப்பாளர்கள் எனக்கு என்றும் நிழலாக இருப்பவர்கள்.

தொலைக்காட்சித் தொடர்களுக்கான டைட்டில் சாங் நிறைய எழுதியிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் எழுத்தை நம்பி பிழைக்க முடியாது என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தளவில் தமிழ் என்னை வாழ வைத்திருக்கிறது. எனக்கு வாழ்க்கையில் கிடைத்த சகல செüகரியங்களும் தமிழால் எனக்குக் கிடைத்தவை. தமிழ் என்னை சக்ரவர்த்தி போல வாழ வைத்திருக்கிறது. கம்பனுக்குச் சடையப்ப வள்ளல் போல எனக்கு விளம்பரத்துறை வாய்த்திருக்கிறது” என்றார் பெருமையாக.

ந. ஜீவா

தினமணி ஞாயிறு கொண்டாட்டத்தில் வெளியானவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 9:05

குழந்தை வளர்ப்பில் கவனம்
------------------
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே

அது நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பினிலே’

என்ன அற்புதமான வரிகள்; எத்தனை ஆழமான கருத்துகள். பக்கம் பக்கமாக எழுதி, விடிய விடிய பேசிப் புரிய வைக்க வேண்டியதை அழகாக இரண்டே வரிகளில் நெற்றியில் அடித்தாற்போல் சொல்லியுள்ள கவிஞரின் பாங்கு பாராட்டுக்குரியது.

childகுழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதல்ல. அது கலை, அது அறிவியல். இன்றைய சூழலில் அது பெரும் சவால். “என்னங்க பெரிய கலை; அறிவியல் – அந்தக் காலத்திலே எங்க தாத்தாவுக்கு 10 பிள்ளைகள். டாக்டர், வக்கீல்னு எல்லோரும் நல்ல நிலையிலேயே இருங்காங்க. என்கூடப் பிறந்தது 8 பேரு. நாங்க எல்லோரும் நல்லாத்தான் இருக்கோம். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. என்னமோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி குழந்தை வளர்ப்பு சவால் அது இதுன்னு சொல்லிகிட்டு என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு.

உண்மைதான். அந்தக் காலத்தில் ஏராளமான பிள்ளைகளை பெற்று நன்முறையில் வளர்த்தனர். ஆனால் இன்று காலம் மாறிப் போச்சு. வாழ்க்கை முறை மாறிப் போச்சு. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து, சிதறி தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தை வளர்ப்பு பெற்றோர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதென்பது உண்மைதான்.

 

“ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்; இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்’. அது நேற்றைய தாரக மந்திரம். தற்போது ஒருபடி மேலே சென்று பெரும்பாலானோர் ஒன்றுடன் நிறுத்திக்கொள்கின்றனர். சிலர் 5 ஆண்டுகள் 7 ஆண்டுகள் கழித்து 2-வது குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இப்படி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று தனிக்காட்டு ராஜாவாக வளரும் குழந்தைகளுக்கு மிதமிஞ்சி செல்லம் கொடுக்கிறார்கள். சக்திக்கு மீறி செலவும் செய்கின்றனர். இங்குதான் பிரச்சினை உருவாகிறது. இப்படி இஷ்டம் போல் வளர அனுமதித்துவிட்டு திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கும்போது முரண்டு பிடிக்கிறது.

இந்த அவசரகதி உலகத்தில் குழந்தை வளர்ப்பு பிரச்சினையாகி உள்ளது.

 

குழந்தைகள் வளர்ப்பு குறித்து விரிவான தகவல்கள்:-


* பிரச்சினை எங்கே தொடங்குகிறது?

“அலுவலகத்தில் சோர்ந்து திரும்பிய மனைவி சாப்பாடு தயார் செய்யும்போதுதான் “அம்மா எனக்கு கொஞ்சம் ஹோம் ஓர்க் சொல்லிக் கொடு’ என்று குழந்தை கேட்கும். “என்னங்க கொஞ்சம் ஹோம் ஓர்க் சொல்லிக் கொடுக்கக் கூடாதா’ என்று மனைவி கேட்க, “எனக்கு வேறு வேலை இல்ல பாரு’ என்று கணவர் உறும அங்குதான் உரசல் ஆரம்பிக்கும். இதுபோன்ற நேரங்களில் குழந்தையும் முரண்டு பிடிக்கும். இதனால் அம்மா தனது ஆத்திரத்தை, இயலாமையை குழந்தையிடம் வெளிப்படுத்துவாள். இந்த கலாட்டாக்களில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைதான்.

உணர்ச்சிகளைச் சமநிலையில் (Emotional Intelligence) வைத்து நிதானமாகச் செயல்படும் தன்மை பெரும்பாலான பெற்றோருக்கு இல்லை. எதிர்ப்பு இருக்காது. திருப்பிப் பேசாது என்ற தைரியத்தில் நமது ஆத்திரம், கோபம், இயலாமையை குழந்தைகளிடம் காட்டுகிறோம். நமது கோபத்தின் வடிகால் நமது குழந்தைகள் அல்ல.

* குழந்தைகள் ஒழுங்காகச் சாப்பிடுவது இல்லை என்ற குறை பரவலாக உள்ளதே?

“என் குழந்தைக்கு பால் இல்லைன்னா எதுவுமே வாய்க்குள்ள இறங்காது. டாக்டர் அவன் சாதமே சாப்பிடுறது இல்லை டாக்டர். இப்படி புலம்பும் அம்மாக்கள் பலர். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தையின் ஒவ்வொரு செயலுக்கும் நாம்தான் காரணம். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதை குழந்தை சாப்பிட்டுப் பழகும். அந்தந்த காலகட்டம், வயதுக்கு ஏற்ப எல்லா உணவுகளையும் கொடுத்துப் பழக்கவேண்டும்.

“ஐயோ என் குழந்தைக்கு அது சாப்பிட்டா பிடிக்காது, இது சாப்பிட்டா பிடிக்காது’ என்று நாமே தடுத்துவிடுகிறோம். நாம் கொடுப்பதில்லை. சாப்பிடவில்லையா விட்டுவிடுங்கள். பசி வந்தால் தானாகச் சாப்பிடும். நிறைய நொறுக்குத் தீனி கொடுத்து பழக்கிவிட்டு பிறகு சாப்பிடவில்லை என்று புலம்புவதில் பலன் இல்லை. குழந்தைப் பருவத்திலிருந்து முறையான உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.

டாக்டர், 10 வயசாகுது – இன்னும் நான்தான் ஊட்டி விடவேண்டியதிருக்கு – இது பல பெற்றோரின் புலம்பல். சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். குழந்தை தானாகச் சாப்பிடும். ஒரு நாள் அடம் பிடிக்கும்; இரண்டு நாள் அடம் பிடிக்கும். நீங்கள் உறுதியாக இருந்தால் வழிக்கு வரும். எதையும் கேட்டுச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.

 * குழந்தைகள் தவறு செய்யும் நிலையில் கண்டிக்கலாமா? அடிக்கலாமா?

கண்டித்தே ஆக வேண்டும். ஆனால் கண்டிக்கும் அணுகுமுறையில்தான் நாம் தவறு செய்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் Negative Communication செய்கிறோம். பாலைக் கொட்டிவிட்டால் “ஏய் சனியனே நீ எதுக்கு அதைப் போய் தொட்டாய்’ என்று எரிந்து விழுவதற்குப் பதிலாக “பால் கொட்டிருச்சா, சரி பரவாயில்லை, இனி பார்த்து, கவனமாக இருக்கனும் சரியா, என்று கனிவு கலந்த கண்டிப்போடு சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை பாலை எடுக்கும்போது குழந்தை கவனமாக எடுக்கும். எதையும் பாசிட்டிவாக அணுகுங்கள். தவறை உணர வைக்க (Realise) வேண்டும். அதைவிட்டு கத்துவதால் எந்தப் பலனும் இல்லை.

  * அடம் பிடிக்கும் குழந்தையைக் கட்டுப்படுத்துவது எப்படி?

குழந்தை அடம் பிடித்தால் நம்மில் பெரும்பாலோர் அடித்து, உதைத்து நம் வீர – தீரத்தைக் காட்டுகிறோம். சரி, அடிக்காவிட்டால் குழந்தை அடங்குமா என்று கேட்பீர்கள். “சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் நாம் சொல்வதை குழந்தை கேட்கும். கஷ்டப்பட்டால்தான் நாம் எதையும் அடைய முடியும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு உணர்த்துங்கள்.

100 ரூபாய் சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரியவையுங்கள். நமது வாங்கும் சக்தி இவ்வளவுதான். நமது எல்லை எதுவரை என்பதை குழந்தை தெரிந்துகொள்ளவேண்டும். சில நேரங்களில் அடிப்பதுபோல் மிரட்டவேண்டியதிருக்கும். ஆனால் அடுத்த நிமிஷத்திலேயே அன்பாகப் பேசி, அரவணைத்து, இப்படிச் செய்யலாமா? என்று பேசி தவறை உணரவைக்கவேண்டும்.


* பொத்தி பொத்தி வளர்ப்பது (Over Protection) சரியா?

இந்தப் போட்டி மிகுந்த உலகத்தை எதிர்கொள்ளும் ஆளுமை, தைரியம் குழந்தைக்கு வேண்டும். என் குழந்தையை சின்ன வேலையைக் கூட செய்ய விட்டதில்லை. அவனுக்கு அது பிடிக்காது, இது பிடிக்காது என்று பெருமை பேசும் அம்மாக்கள் உண்டு. பொத்திப் பொத்தி வளர்ப்பதால் வளர்ந்த பிறகு தனித்தன்மையோடு செயல்படும் திறன் இருக்காது. குழந்தைக்கு எல்லாவற்றையும் பழக்குங்கள். அவன் வேலையை அவனே செய்ய அனுமதியுங்கள். அப்படிச் செய்ய சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் எதிர்கால போராட்டங்களைச் சந்திக்கும் மனபக்குவம் வளரும்.


* நன்றாகப் படிப்பதில்லையே?

studentபடிப்பு என்றாலே வேப்பங்காயாகக் கசக்கிறது. எங்களுக்காகப் படிக்கிறான். ஆனா அவனுக்கு ஆர்வமே இல்லை என்பது பல பெற்றோரின் புகார். அவனைப் படிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. புத்தகத்தை எடுத்தாலே அவனுக்குத் தூக்கம் வந்துவிடுகிறது. படிப்புன்னா வேப்பங்காயா கசக்கிறது. இது பெற்றோர் பலரின் புலம்பல். குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது பெரிய கலை.  பள்ளியில் இருந்து வந்தவுடன் குழந்தைகளிடம் பாசமாகப் பேசி இளைபாற விடுங்ள். விளையாட்டு போன்ற மனதுக்குச் சந்தோஷமான செயல்களில் ஈடுபட அனுமதியுங்கள். இயந்திரத்தனமாகச் செய்வதால்தான் சுமுகமான சூழ்நிலை மாறி படிப்பு கசப்பாகிவிடுகிறது. குழந்தை முரட்டுத்தனமாக செயல்படுவதற்கு இதுதான் காரணம்.

முதலில் குழந்தையுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உனக்கு என்ன கஷ்டம் என்று அமைதியாகக் கேளுங்கள். அவனது பேச்சுக்கும் காது கொடுங்கள். கண்ணா படிப்புதான் உனக்கு வசதிகளை வாங்கித் தரும் என்று உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லுங்கள். குழந்தை 50 மதிப்பெண் வாங்கியிருந்தால். பரவாயில்லடா கண்ணா 50 மார்க் வாங்கி பாஸ் செய்திருக்க, அடுத்த முறை 80 மார்க் வாங்கனும், உன்னால முடியும். “படிக்கிறதுல உனக்கு என்னடா பிரச்சினை’ என்று கனிவோடு அணுகுங்கள்.

குழந்தையின் சின்ன, சின்ன வெற்றியைப் பாராட்டுங்கள். குழந்தை ஏதாவது படம் வரைந்தால் அதைப் பாராட்டுவதை விட்டு சனியன் படிக்க துப்பு இல்லை, படம் வரையறான் என்று திட்டி குழந்தையின் திறமையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடாதீர்கள். எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதில் அவன் திறமையை வளர்ப்பதற்கு உதவுங்கள்.

* என் மகன் டாக்டராக வேண்டும் என்று நினைப்பதில் தவறு என்ன?

நமது ஆசைகளை அல்லது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் குழந்தையைப் பார்க்கிறோம். கேட்கும்போதே நீ டாக்டரா அல்லது என்ஜீனியரா என்றுதான் கேட்கிறோம். எல்லோரும் டாக்டர், என்ஜீனியராகிவிட்டால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு ஆளில்லை. டாக்டராக வேண்டும் என்று அவன் விரும்பினால் அதற்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவனை டாக்டராக்கிக் காட்டுங்கள். அவன் விளையாட்டு வீரராக வேண்டும், இசைக் கலைஞர் ஆகவேண்டும் என்று விரும்பினால் அதற்குத் தடை போடாதீர்கள்.

5 விரல்களும் ஒன்றாக இருப்பது இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உண்டு. சில குழந்தைகளுக்குக் கற்பதில் குறைபாடுகள் (learning disablity) இருக்கும். அதைச் சரி செய்யுங்கள். எதில் திறமை உள்ளது எனக் கண்டறிந்து அதில் “நம்பர் ஒன்’ ஆக்குங்கள். அதைவிடுத்து அவனுக்குப் பிடிக்காத ஒன்றை அவனிடம் திணித்து அவனும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போய்விடும்.

நமது குழந்தைகளுக்கும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகள் உண்டு என்பதை பெற்றோர் உணரவேண்டும். அட நாங்க என்ன, அவனுக்குக் கெடுதலா பண்ணப்போறோம் என்று பல பெற்றோர் சொல்கின்றனர்.

நிச்சயமாக எந்தப் பெற்றோரும் குழந்தைக்குக் கெடுதல் செய்ய நினைப்பதில்லை. ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. குழந்தையின் அறிவாற்றல், இயல்பான திறமை, அவனது விருப்பம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப பாதை அமைத்துக் கொடுங்கள். நிச்சயமாக சாதித்துக் காட்டுவான். இதில் தவறு செய்யும்போதுதான் பல குழந்தைகள் சரியாகப் படிக்காமல் போய்விடுகின்றனர்.

குழந்தை சரியாக படிக்காத நிலையில் பெற்றோர் அதிருப்தி அடைந்து வெறுப்பைக் காண்பிக்கின்றனர். பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகத் திருத்தவில்லை என்றால் பின்னர் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர்.

தனித்துச் செயல்பட…: எல்லாக் குழந்தைகளுக்கும் தனிச்சையாக காரியங்களைச் செய்யும் திறமை உண்டு. ஆனால் நாம்தான் “என் செல்லத்தால் அதைச் செய்ய முடியுமா இதைச் செய்ய முடியுமா? என்று கூறி எதையும் செய்யவிடுவதில்லை. தனது தேவைகளை தானே செய்து கொள்ள பழக்க வேண்டும். குளிப்பது, சாப்பிடுவது, டிரஸ் போடுவது போன்றவற்றைத் தானே செய்யப் பழக்க வேண்டும். அதில் சில தவறுகள் செய்யும்போது பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும். உனக்கு ஒன்னுமே வராது. நீ உருப்பட்ட மாதிரிதான் என்று சொல்லி பிஞ்சு உள்ளத்தை காயப்படுத்தாதீர்கள்.

குழந்தையைப் பற்றி கணவர் மனைவிடமும், மனைவி கணவரிடமும் குறை கூறி பேசக் கூடாது. கணவன் – மனைவி இருவரும் ஒருமித்து செயல்பட்டு உனது நலனுக்குத்தான் எல்லாம் செய்கிறோம் என்பதை குழந்தையிடம் புரிய வைக்க வேண்டும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 9:12

சின்னச் சின்ன காரணத்தால்…
---------------
ஒரு மிகப்பெரிய அலுவலகத்துக்குள்ளோ அல்லது நிறுவனத்துக்குள்ளோ நுழைந்து பார்த்தோமானால், அங்கு பணிபுரியும் ஊழியர்களில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் கோலோச்சுகின்றனர். ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் அனைவரும் பெண்கள், மேலாளர் உள்பட என்றால் பாருங்களேன்!

இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியே வரவும், பணிபுரியவும், தனியாகத் தங்கவும் தயங்கிய பெண்களின் நிலை, இன்றைக்கு அப்படியா இருக்கிறது? எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் அத்துறை பற்றிய நுட்பமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு வெற்றிச் சிகரத்தை அடையும் பெண்கள் காலமாக உள்ளது இன்றைய சூழ்நிலை. கால நேரம் பார்க்காமல் தைரியமாக எந்த நேரத்திலும் வெளியில் செல்வதும், மேல்படிப்புக்கென்று தனித்து வாழ்வதும் இன்றைக்குச் சர்வசாதாரணமாகிவிட்ட ஒன்று.

ஆணுக்கு சரிநிகர் சமமாக இரண்டு சக்கர வாகனம், ஆட்டோ, ரயில், பேருந்து, வானஊர்தி என்று ஒன்றையும் விட்டுவைக்காமல் இயக்கும் திறனிலும், தொழில்நுட்பத் திறத்திலும் ஆண்களை விஞ்சி நிற்கின்றனர் இன்றைய பெண்கள்.

மகாகவி பாரதி கண்ட சமுதாயம் உருவாகிவிட்டதோ என்று வியக்கும் விதமாக ஒருபுறம் பெண்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும், யாருக்கும் அடிமைப்பட்டு வாழவிரும்பாத மனோபாவமும், சகிப்புத்தன்மை இன்மையும், தன்னிச்சையாகச் செயல்படும் தான்தோன்றிப் போக்கும், கவர்ச்சி ஆடை மோகமும் பெண்களிடம் அபரிமிதமாக வளர்ந்து வருவது, ஆபத்தின் அறிகுறிதான் என்பது கைப்புண்ணுக்குக் கண்ணாடியா என்பதுபோல் தெள்ளத்தெளிவாகிறது. இதுதான் பெண்களின் வளர்ச்சியா? புறவளர்ச்சி மட்டுமே ஒரு பெண்ணுக்குப் பெருமை சேர்த்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அகவாழ்க்கையான குடும்ப வாழ்விலும் பெண்கள் கோலோச்சினால்தான் இல்லறம் செம்மைப்படும். அவ்வாறு செம்மைப்பட்டாலதான் விவேகானந்தர் கண்ட கனவு நனவாகி நல்ல சிறந்த வீரத் திருமகன்களை நாட்டுக்குத் தரமுடியும். ஆனால், இன்றைக்குப் பெண்களின் அகவாழ்வின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது!

அனைத்துத் துறைகளிலும் கோலோச்சினாலும் பெண்கள் ஏனோ சிலர் குடும்ப வாழ்க்கையில் கோலோச்ச முடியாமல் கோட்டைவிட்டு, வேதனைப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இன்றைக்கு மிக அதிகமாக பலரால் விமர்சிக்கப்படுவதும், விவாதத்துக்கு உள்ளாவதும் கணவன் – மனைவி உறவுதான். நீதிமன்றங்கள் நிரம்பி வழிவதும் விவாகரத்து வழக்குகளால்தான்.

“மலரினும் மெல்லியது காமம்’ என்றார் வள்ளுவர். மலரைவிட மென்மையான கணவன்-மனைவி உறவையும் அதன் அதிமேன்மையையும் புரிந்துகொள்ள இன்றைய பெண்களுக்கு சகிப்புத்தன்மையும் இல்லை, பொறுமையும் இல்லை. ஆறஅமர உட்கார்ந்து பேச நேரமும் இல்லை என்பதுதான் உண்மை. இதுதான் பல பெண்களை நீதிமன்றம்வரை கொண்டு செல்கிறது. திருமணமாகி இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளாகவே சின்னச் சின்னக் கருத்து வேறுபாடு காரணமாக, நீதிமன்றங்களை மிதித்துவிடுகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய வேதனை. நமது கலாசாரம், பண்பாடெல்லாம் எங்கே என்று தேடிப்பிடிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் வேதனை தரும் விஷயம்.
இன்றைக்கு நீதி மன்றப் படியை தைரியமாக மிதிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது பெண்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிவேகமாக முன்னேறி வருகிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அவ்வாறு நீதிமன்றத்தின் உதவியோடு தனிமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஏற்படக்கூடிய பின்விளைவுகள் ஏராளம் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டால் இதுபோன்று தொட்டதுக்கெல்லாம் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள்.

ஆணாதிக்கம் என்பது இன்றைய நாள்வரை குறைந்தபாடில்லை என்பது உண்மைதான். அதைச் சமாளிக்கவும், சகஜமாக எடுத்துக்கொள்ளவும் பெண்களுக்கு மிகவும் தேவை, மிக அதிகமான சகிப்புத்தன்மை, பொறுமை, சட்டென முடிவெடுக்காத தீர்க்கமான அறிவு, ஆராய்ந்து பார்க்கும் மனப்பக்குவம், குடும்ப வாழ்வில் எது நடந்தாலும் இறுதிவரை போராடி சமாளிப்போம் என்ற மனவுறுதி, தன்னம்பிக்கை. இத்தனையும் இன்றைய பெண்களிடம் இருந்துவிட்டால் எந்தக் காலத்திலும், பெண்கள் அகவாழ்விலும் புறவாழ்விலும் வெற்றி அடைவது நிச்சயம்! நிச்சயம்! நிச்சயம்!

- ராதா வனமாலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 9:14

24 ஆண்டுகளில் 16 குழந்தைகள்
-------------
நமது கொள்ளுத் தாத்தா – பாட்டிகள் சொல்வார்கள்: “”நாங்க பதினாறு பிள்ளைங்களைப் பெற்றோம். ஆனால் கடைசியில் மிஞ்சினது இந்த மூணு பேர்தான்” என்று.

ஆனால் இந்தக் காலத்தில் – அதுவும் நமது நாட்டில் அல்ல – இங்கிலாந்தில் ஒரு பெண் பதினாறு குழந்தைகள் பெற்றிருக்கிறார்.

இப்போது இங்கிலாந்திலேயே  மிகப் பெரிய குடும்பம், அவர்களுடையதுதான்.

இங்கிலாந்தில் லங்காஷயர் மாகாணத்தில் உள்ள மோர்கேம்பே என்ற ஊரைச் சேர்ந்த சியூ என்ற பெண்தான் 16  குழந்தையைப் பெற்றவர்.  வயது நாற்பதைத் தாண்டியிருக்கும் என்று நினைத்தால் அது தவறு. 38 தான். இவருடைய கணவர் நோயல் ராட்ஃபோர்ட். அவருக்கு வயது 41.

ஒரு குழந்தை பிறந்து சரியாக 11 மாதத்தில் அடுத்த குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார் சியூ.

மூத்த பையனான கிரீஸூக்கு வயது 24. கடைசிப் பையனான காஸ்பருக்கு வயது 11 மாதங்கள்.

சியூவுக்கு முதல் குழந்தை பிறந்தபோது அவருக்கு வயது 14. நோயலுக்கு வயது 17. ஆனால் அப்போது அவர்களுக்குத் திருமணம் ஆகவில்லை. திருமணத்துக்கு முன்பே பிறந்த குழந்தை என்பதால் முதல் குழந்தையை யாருக்காவது தத்துக் கொடுத்துவிடலாமா என்று கூட யோசித்திருக்கின்றனர்.

முதல் குழந்தை பிறந்து 4 ஆண்டுகள் கழித்துத் திருமணம். அதற்குப் பின்புதான் 15 குழந்தைகள் 11 மாத இடைவெளியில் உலகைப் பார்க்க அணிவகுத்து வந்திருக்கின்றனர். கடைசியாகப் பிறந்த காஸ்பருக்கு ஒரு வயதாக இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் அடுத்த குழந்தை வயிற்றில். அதைத்தான் ஆரவாரமாக இங்கிலாந்தின் எல்லா ஊடகங்களுக்கும் அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

பிறக்கப் போவது ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னார்கள் சியூ – நோயல் தம்பதியினர்.

இவ்வளவு குழந்தைகளையும் எப்படி வளர்க்கிறார்கள்? எப்படிச் சமாளிக்கிறார்கள்? அவர்களுடைய சாப்பாடு, உடை, பள்ளிக் கட்டணம், போக்குவரத்து, மருத்துவம் எல்லாவற்றுக்கும் எவ்வளவு செலவாகும்?

இத்தனைக்கும் நோயல் பெரும் தொழிலதிபரோ, பணக்காரரோ அல்ல. ஒரு சிறிய பேக்கரி வைத்திருக்கிறார். அந்த பேக்கரியில் இருந்து வரும் வருமானத்தை வைத்துத்தான் இத்தனை உயிர்களும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் நேரம் போக, மீதி நேரங்களில் (அப்படி ஒரு நேரம் இருக்குமா?) சியூவும் பேக்கரியில் வேலை செய்கிறார். இந்த வருமானத்தில்தான் 16 + 2 பேரின் வாழ்க்கை ஓட வேண்டியிருக்கிறது.

இந்தப் பெரிய குடும்பத்துக்கு சாப்பாட்டுச் செலவு மட்டும் வாரத்துக்கு சுமார் ரூ.25 ஆயிரம் ஆகிறதாம்.

ஒரு நாள் இரவு உணவுக்கு மட்டும் 16 இறைச்சித் துண்டுகள், 7 கிலோ உருளைக்கிழங்கு, 3 முள்ளங்கி, 30 கேரட்கள் தேவை.

இவ்வளவு பேருக்கும் எவ்வளவு பெரிய வீடு வேண்டும்?

10 படுக்கையறைகள் இருக்கும் நான்கு மாடிக் கட்டடம்தான் இவர்களுடைய வீடு.

ஆண்டுக்கு 60 ஜோடி செருப்புகள் வாங்க வேண்டுமாம்.

“”அவர்களுடைய குடும்பம் மிகவும் அன்பான குடும்பம். அவர்களுடைய பிள்ளைகள் எல்லாரும் நல்ல பண்புள்ளவர்கள். உண்மையிலேயே சியூவும், நோயலும் மிகச் சிறந்த பெற்றோர்” என்கின்றனர் அவர்களுடைய குடும்ப நண்பர்கள்.

பதினைந்தாவது குழந்தை பெற்றபோது அங்குள்ள சேனல் 4 தொலைக்காட்சியினர் இவர்களைப் படம் பிடித்துப் பிரபலமாக்கிவிட்டார்களாம்!

பதினாறாவது குழந்தை பெற்ற போது சியூ தனது கணவரிடம், “”இன்னொரு குழந்தையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றாராம்.

அவர் நினைத்தபடியே 17 ஆவது குழந்தையும் கருக்கொண்டு விட்டது.

வரும் ஏப்ரல் மாதம் பிறக்கப் போகிறது என்று எல்லாரும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தார்கள். பிறக்கப்போகும் குழந்தையை வரவேற்க எல்லாரும் ஆயத்தமாக இருந்தார்கள்.

ஆனால், ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார்கள். கருவிலிருந்த குழந்தையின் இதயத் துடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பே நின்று போயிருந்தது.

இதயம் உடைந்து நிற்கிறார்கள், பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் சியூ – நோயல் தம்பதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 9:15

நெப்போலியனின் காதல் கடிதம்
-----------------

நெப்போலியன்
அன்பே!

நேற்று போர்க்களத்தில் கடுமையான வேலை. கொஞ்சம்கூட ஓய்வில்லை.

உணவோ உறக்கமோ இன்றி ஒரு வாரமாக இருந்தும், நான் சுறுசுறுப்பாக வேலை செய்வது கண்டு எங்கள் குழுவினர் அனைவருமே  ஆச்சரியப்பட்டனர். அது என்னால் எப்படிச் சாத்தியப்படுகிறது என்று எல்லோரும் திகைத்தனர்.

என்ன…? உனக்கு ஏதாவது புரிகிறதா?

நீ எழுதும் காதல் கடிதங்கள் என் சட்டைப் பையிலேயே இருப்பது வழக்கம். சோர்வு ஏற்படும்போது நான் அந்தக் கடிதங்களை எடுத்து ஒரு தடவை  வாசிப்பேன். அவ்வளவுதான்! சோர்வு பறந்து விடும். புத்துணர்ச்சி உடல் எல்லாம் பரவும். அப்புறம் பசியாவது தாகமாவது…

ஒரு விஷயம் என் துயரங்களைக் கண்டு நீ மனத்தை அலட்டிக் கொள்ளக் கூடாது. துன்பம் என் நண்பன். அதை நான் வெறுக்க மாட்டேன். உலகத்தில்  அபாரச் சாதனைகளைச் சாதிப்பதற்காகவே பிறந்த எனக்குத் துன்பம்தான் அரிய நண்பன்.  இன்பம் விரோதி. அது என்னைச் சோம்பேறி ஆக்கி விடும். கோழையாக மாற்றி விடும். அதை நான் வெறுக்கிறேன். இரவில் அதிக நேரம் கண்  விழிக்காதே.
உடம்பை ஜாக்கிரதையாகக்  கவனித்துக் கொள்…

ஆதாரம்: ஆர். ஷண்முகம் எழுதிய “உலக உண்மைகள்’
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 9:16

இனியும் தூங்க வேண்டாம்… விவேகானந்தர்


விவேகானந்தர்
* எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.

* கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒருபோதும் பாவம் செய்வதில்லை. மனதால்கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை.

* நீங்கள் பலவீனமானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தால் பலமற்றவர்களாகவே ஆகிவிடுகிறீர்கள். நீங்கள் பலம் பொருந்தியவர்கள் என்று எண்ணினால் பலமுடையவர்களாக ஆகிவிடுகிறீர்கள்.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதுதான் வாழ்க்கை. அதுதான் அன்பாகும். அன்புதான் வாழ்க்கையாகும். அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் ஒரே நியதியாகும்.

* நம்மைப் பற்றியே முதலில் நினைத்துக் கொள்ளும் சுயநலம்தான் மிகப் பெரிய பாவமாகும்.

* உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ ஏற்படுத்தும் எதையும் அணுகக் கூடாதென்பதே உங்களுக்கு நான் கூற விரும்பும் உபதேசம்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருத்தல் அவசியம்.

* ஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! அப்படி நினைப்பது, சமயத்துக்கு மிகப்பெரிய முரண்பட்ட கருத்தாகும்.

- கா.முருகேஸ்வரி, கோவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 9:17

சரியாக உட்காருங்கள்
-------------
முதுகுவலி என்பது நம் மூதாதையர்களுக்கு என்ன என்றே தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் இப்போதுள்ள இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்துள்ள நோயாக இருப்பது முதுகுவலிதான்.

தவறான உட்காரும் முறை, பல மணி நேரங்கள் ஒரே நிலையில் உட்கார்ந்து கிடப்பது போன்றவைதான் முதுகுவலிக்குக் காரணங்களாகின்றன. இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதுமானதாகும்.

உட்காரும் போது உங்கள் முதுகை வளைக்காமல் நேராக அமருங்கள். உங்கள் தோள்பட்டைகள் பின்புறம் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள்.

புட்டங்கள் இருக்கையின் கடைசிப் பகுதியை தொட்ட வாரு அமருங்கள். முட்டிகள் இருக்கையின் இறுதியில் முடியும் வகையில் இருக்கும்.

கால்களை மடக்கியோ, சரிவாக வைத்தோ வெகுநேரம் அமர்ந்திருக்க வேண்டாம்.

உங்கள் கால் பாதங்கள் தரையை தொட்டபடி சமமாக வைத்திருங்கள்.

ஒரே  நிலையில் 30 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருப்பதை தவிர்த்து விடுங்கள்.

உங்கள் கை முட்டிகளை நாற்காலியின் கைப்பிடிகளில் வைத்துக் கொண்டு பணியாற்றுங்கள். இதனால் தோள்பட்டைகளுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும்.

உங்கள் உடல் எடையை கவனமாக கையாளுங்கள். அதிக உடல் எடை காரணமாகக் கூட முதுகுவலி ஏற்படலாம்.
இவை அனைத்துமே உங்களுக்கு ஏற்பட்ட முதுகுவலியை நிச்சயமாக சரிபடுத்திவிடும்.

ஆனால், இந்த முறைகள் எல்லாம், சரியாக அமரால் பணியாற்றும் நபர்களுக்கு மட்டுமே தீர்வை தரும். ஆனால், நரம்பு பாதிப்பு, தசைப்பகுதியில் காயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் கூட முதுகுவலி ஏற்படலாம். எனவே, தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு வலி, இரவிலும் வலி நீடிப்பது போன்ற பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக மருத்துவரிடம் சென்று உங்கள் முதுகுவலிக்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 9:19

விளம்பரங்களுக்கு விட்டில் பூச்சியாகாதீர்..
------------------
தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையில், தற்போது பலரும் கண் விழிப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான்.

பொழுது போக்குக்காக தொலைக்காட்சி பார்த்த நிலை மாறி, தற்போது பொழுதுகளையே வீணாகக் கொல்லும் மெகா சீரியல்கள், நடன நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் என பட்டியல் நீண்டு கொண்டே… போகிறது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் தான் முதல் இடத்தில் உள்ளன.

பலரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே வீட்டு வேலைகளை செய்வார்கள். நிகழ்ச்சிகளின் இடையே விளம்பரங்கள் வரும்போது சமயலறைக்குச் சென்று சமைத்துவிட்டு வரும் பெண்களும் இருந்தார்கள்.

ஆனால் அந்த நேரத்தில் கூட பெண்களை தொலைக்காட்சி முன்பு கட்டிப் போடும் அளவுக்கு தற்போது விளம்பர நிகழ்ச்சிகள் சக்கைபோடு போடுகின்றன.

முதல் நாள் பார்த்த மெகா சீரியல்களில் வரும் காட்சிகள் பற்றித்தான் அலுவலகங்களில் கலந்துரையாடிய காலம் போய், புதிய விளம்பரங்கள் குறித்து விதவிதமாக விவாதங்கள் அரங்கேறுகின்றன. அந்த அளவுக்கு விளம்பரங்கள் நேர்த்தியாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படுகின்றன.

விளம்பர தயாரிப்பாளர்கள் புதுமையான உத்திகளைக் கையாள்வது இதற்கு முக்கிய காரணம். வித்தியாசமான கரு, படப்பிடிப்பு, உறவுகளை மையப்படுத்தி மனதைத் தொடும் விளம்பரங்கள், குழந்தைகளைக் கவரும் விளம்பரங்கள் என திணுசு… திணுசாய், புதுசு… புதுசாய் விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன.

இன்றைய முன்னணி கதாநாயகன், நாயகிகளில் பலர் விளம்பரங்களில் முகம் காட்டிய பின்புதான் திரையுலகில் கொடிநாட்டுகின்றனர்.

அது ஒரு ரகம் என்றால் விளம்பரங்களைப் பிரபலப்படுத்த பிரபலமான நபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கதாநாயகன், நாயகிகளைத் தேடிப் பிடித்து நடிக்க வைப்பது இன்னொரு ரகம். இந்தப் பிரபலங்களின் தாக்கத்தால், நிறுவனத்தின் பொருள்களை நினைவில் வைக்கும் காலம்போய், பிரபலத்தைக் கொண்டு நிறுவனத்தை நினைவு கொள்ளும் காலம் வந்தாயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.

உதாரணமாக, ஈமு கோழிப் பண்ணைகளுக்கு சில பிரபலமான நபர்கள் விளம்பரம் கொடுத்ததால்தான் ஏராளமான பொதுமக்கள் அதில் முதலீடு செய்து ஏமாந்தார்கள். அவர்களையும் வழக்கில் சேர்க்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

விளம்பரங்கள் மனதை கவரும் வகையில் இருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் வரம்பு மீறுவதுதான் கவலை அளிப்பதாக உள்ளது. அதில் சில விளம்பரங்களில் பெண்கள் மோசமாக உருவகப்படுத்தப்படுகின்றனர்.

வாசனைத் திரவியங்கள், ஆண், பெண்களின் உள்ளாடைகள், கார், பெயின்ட் என அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை அரைகுறை ஆடைகளில் காண்பிப்பது ஏன்? அதற்கு அவசியம் என்ன வந்தது? என்பதுதான் லட்சோப லட்ச மக்களின் கேள்வி.

குறிப்பிட்ட வாசனை திரவியத்தையோ அல்லது விளம்பரங்களில் காண்பிக்கப்படும் பொருளையோ, ஒரு ஆண் உபயோகிப்பதன் மூலம் அனைத்து இளம் பெண்களும் அவரது பின்னால் வருவதைப் போன்றும், அல்லது ஒரு ஆண், பெண்களை மயக்குவதற்காகவே குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருள்களை உபயோகிப்பது போலவும் காண்பிக்கப்படுகிறது.
ஒரு ஆணை அவர் பயன்படுத்தும் வாசனை திரவியத்துக்காகவே பெண்கள் அவரை விரும்புவார்களா, அல்லது அவர் பின்னே செல்வார்களா? இங்கு பெண்களின் மதிப்பு எந்த அளவுக்கு தரம் தாழ்த்தப்படுகிறது. மேலும், அந்த விளம்பரங்களைப் பார்க்கும், வளரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை சிறிதும் யோசித்துப் பார்க்க வேண்டாமா?

விளம்பரங்கள் அனைத்தும் விளம்பர கவுன்சிலின் சான்றிதழ் பெற்று வந்தாலும், அதில் எந்தவித பயனும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் பெண்களின் பொன்னான நேரம் வீணாகிறது. ஆனால், அதில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களால் பெண்களின் தன்மானமே பாதிக்கப்படுகிறது. சில மோசமான விளம்பரங்களின் தாக்கத்தால் பெண்கள் தேவையற்ற செலவுகளையும் ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மோசமான உணவு பொருட்களை மிகவும் சத்து மிக்க உணவாக விளம்பரம் செய்வதால், பிள்ளைகளுக்கு அதன் மீது நாட்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற விளம்பரங்களால் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது-
இதுபோன்ற விளம்பரங்கள் ஆரம்பத்திலேயே தடுக்கப்பட வேண்டும். விட்டில் பூச்சிகளைப் போல விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம்..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 9:20

ஆரோக்கியமே அழகு
--------------

“ஒல்லியாக இருந்தால்தான் அழகு’ என்ற தவறான கருத்தின் அடிப்படையிலும், அவசரமான காலகட்டத்திலும் இன்றைய வளர் இளம்பெண்களில் பலர் உணவில் அக்கறை இல்லாமல் உள்ளனர்.

அதிகம் சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என்ற பயத்திலும், சாப்பிட நேரமின்மையாலும் உடலுக்குத் தேவையற்றவை உணவாகவும், உடலுக்குத் தேவையான ஊட்டுச்சத்துகள் கிடைக்காமலும் போய்விடுகிறது.

இதன் காரணமாக பலருக்கும் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், ரத்த சோகை போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே “ஆரோக்கியமே அழகு’ என்பதை வளர் இளம் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காலை சிற்றுண்டி சாப்பிடாமல் பள்ளி, கல்லூரிக்கு பணிக்குச் செல்வதை பெரும்பாலான மாணவிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் தவறு. இரவு உணவு செரித்து, வயிற்றுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் “பிரேக் ஃபாஸ்ட்’ எனப் பெயரிட்டனர் என்பதை பெற்றோர் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு உதவுவது அவசியம்.

பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய காலை 7 மணிக்கே வீட்டை விட்டு புறப்பட வேண்டியிருந்தால், என்ன சாப்பிடுவது என மாணவிகள் கேட்கலாம். காபிக்குப் பதிலாக சத்துமாவுக் கஞ்சி குடியுங்கள் அல்லது  காய்றிகளை உள்ளடக்கிய பிரட் ஸாலட் சாப்பிடுங்கள்.

தினமும் கஞ்சி அல்லது “பிரட் ஸாலட்’ என்பதற்குப் பதிலாக, வாரத்தில் சில நாள்கள் இட்லி அல்லது  இடியாப்பம் அல்லது கருப்பையை வலுப்படுத்தும் உளுந்து கலந்த வடை உள்ளிட்டவற்றைச் சாப்பிடலாம். வெறும் வயிற்றோடு இருக்கக் கூடாது என்பது மட்டும் முக்கியமானது.

பள்ளி – கல்லூரியில் மதிய உணவாகச் சாப்பிட “ஃடிபன் பாக்ஸ்’-ல் எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருள் சத்தானதா என மாணவிகள் கருத்தில் கொள்வது அவசியம். பெரும்பாலான மாணவிகள் “நூடுல்ஸை’ மதிய உணவாக எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு பெற்றோரே காரணம்.

நூடுல்ஸால் உடலுக்கு எந்த பயனும் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதேபோன்று காய்கறிகளை உள்ளடக்கிய சத்தான மதிய உணவை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்புவதில் பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியம். மதிய உணவாக தயிர் சாதம் கொடுத்து அனுப்பினால்கூட, அத்துடன் சேர்த்து காய்கறி இருப்பது மிகவும் நல்லது. தயிர் சாதத்துக்கு ஊறுகாய் என்பது எந்த வகையிலும் சத்தை அளிக்காது.
பள்ளி-கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் நொறுக்குத் தீனிக்குப் பதிலாக சீசனுக்கு ஏற்ற பழத்தைச் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பப்பாளி உள்ளிட்ட நிறமி கொண்ட பழங்களைச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவும் காய்கறிகளை உள்ளடக்கிய ஊட்டச்சத்தாக இருப்பது அவசியம்.

ஊட்டச் சத்து உணவில் வளர் இளம் பெண்கள் இவ்வாறு தொடர்ந்து கவனம் செலுத்தும் நிலையில், அவர்களது அறிவுத் திறன் பெருகும். கர்ப்பப் பை, சினைப் பை உள்ளிட்ட இனப் பெருக்க உறுப்பின் ஆரோக்கியம் ஓசையின்றி பராமரிக்கப்படும். திருமணமாகும் நேரத்தில் எந்தவித உடல் நலப் பிரச்னைகளும் ஏற்படாது. இல்லறம் இன்பமாக அமையும்.

- ஜே. ரங்கராஜன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 9:21

பேன்ட் பெல்டை விட சீட் பெல்ட் முக்கியமுங்க…
--------------
இளைஞர்கள் பெரும்பாலும் தங்களது பேன்ட் பெல்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை காரின் சீட் பெல்டுக்குக் கொடுப்பதில்லை.

அமெரிக்காவில் நடக்கும் விபத்துக்களில் மட்டும் ஓராண்டுக்கு சுமார் 13,000 உயிர்களை சீட் பெல்டுகள் காப்பாற்றுவதாகக் கூறப்படுகிறது. அதில்லாமல், விபத்துக்களில் உயிரிழக்கும் பெரும்பாலானவர்கள் சீட் பெல்ட் அணியாததால் உயிரிழந்தவர்களாக இருக்கிறார்கள். இதில் இருந்தே கார் பயணத்தின போது சீட் பெல்ட் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடியும்.

சரி நாம நம்ம ஊருக்கு வருவோம்.

கார் விபத்தில் சிக்குபவர்களில் படுகாயம் அல்லது மரணம் அடைவதை சீட் பெல்டுகள் நிச்சயம் தடுக்கின்றன என்பதில் எந்த ஐயமும் இல்லை. மிக மோசமான விபத்தில் சிக்கினாலும், நீங்கள் உயிர் தப்பிப்பதற்கான வாய்ப்பை சீட் பெல்டுகள் ஏற்படுத்துகின்றன.

நிபுணர்களின் ஆய்வில், கார் விபத்துகளில் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மரணம் அடைவதை 50 விழுக்காடு வாய்ப்பினை சீட் பெல்டுகள் குறைக்கின்றன.

கார் பயணத்தின் போது மரணமா அல்லது வாழ்வா என்ற மிகப்பெரிய மாற்றத்தை அந்த சிறிய சீட்பெல்ட் எப்படி நிகழ்த்துகிறது என்பதை பார்ப்போம்.

அதாவது, கார் இருக்கையில் அமர்ந்து கொண்டு சீட் பெல்ட்டை போட்டுக் கொள்கிறீர்கள். பிறகு கார் 50 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. திடீரென உங்கள் காரின் ஓட்டம் எதிர் வினையால் தடுக்கப்படும் போது, தானாகவே உங்கள் உடல் அதே 50 கி.மீ. வேகத்தில் முன்னோக்கி பயணிக்கும். இதனால்தான் பெரும்பாலான விபத்துகளில்,  தூக்கி வீசப்பட்டு மரணம் என்ற நிகழ்வு ஏற்படுகிறது.

இந்த சமயத்தில், எதிர்வினையால் உங்கள் கார் நிறுத்தப்படும் போது நீங்கள் தூக்கி வீசப்படுவதை சீட் பெல்ட் தடுத்துவிடும்.  அதே சமயம், உங்கள் காரில் உள்ள காற்றுப் பைகள் விரிவடைந்து உங்களை நிச்சயம் காயமடைவதில் இருந்து காக்கும்.

சீட் பெல்ட் அணிந்திருந்தால், மிக மோசமான விபத்துக்களில் இருந்து கூட தப்பிக்க முடியும் என்கிறது நிபுணர்களின் கூற்று. ஆனால், வேறு விதமான விபத்துக்களால் அதாவது பின்புறமிருந்து வாகனம் நசுக்கப்படும் போது படுகாயங்களோ அல்லது உயிர் இழப்போ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

காரை ஓட்டுபவர்கள் மட்டும் இல்லை, முன் இருக்கையில் அமரும் யாரும் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டியது அவசியம்.

சிலர் பக்கத்தில் இருக்கும் இடத்துக்குத் தானே செல்கிறோம் என்று சீட் பெல்ட்டை அலசியப்படுத்துகிறார்கள். விபத்து என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எனவே எப்போதுமே சீட் பெல்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடன் பயணிக்கும் நபர்களுக்கும் அதனை வலியுறுத்துங்கள்.

பேன்ட் பெல்ட்டை போடவில்லை என்றால் அரைஞான் கயிறு…
சீட் பெல்ட் போடவில்லை என்றால் அன்றைக்கே கயிறு…

இது எதற்கும் வருத்தப்படாத வாலிபர்களின் சங்கம் சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூறும் வாக்கு…

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 9:22

அப்போதைய தலைவர்கள்
---------------
மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபட்ட ஏராளமான தலைவர்களைக் கொண்டது தமிழகம். அவர்கள் கட்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமாகாமல், அவர்கள் மூலமாகவே கட்சி அறிமுகமான காலமாகவும் அது இருந்தது.

மக்களின் நலனைக் காப்பது என்ற ஒரே உயர்வான கொள்கையைக் கொண்ட அரசியல் தலைவர்கள் மீது மக்களும் அளவற்ற அன்பை பொழிந்தனர்.

இதற்கு ஒரு உதாரணம்..

பேரறிஞர் அண்ணா அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இந்தியா திரும்ப இருந்த சமயம் தனது வளர்ப்பு மகன் பரிமளத்தை அழைத்து “எனக்கு ஒரு கறுப்பு கண்ணாடி வாங்கி வா’ எனக் கூறினார்.

விமானத்தில் புறப்படுகிற நேரம் பரிமளத்திடமிருந்து அண்ணா அந்தக் கண்ணாடியை ஞாபகமாக வாங்கி தன்னிடம் வைத்துக் கொண்டார்.

சென்னையில் விமானம் இறங்கும்போது அந்தக் கண்ணாடியை அண்ணா மாட்டிக் கொண்டார்.

வெளியே அண்ணாவை வரவேற்க ஆயிரக் கணக்கிலே திரண்டிருந்த மக்களை அண்ணா அந்தக் கறுப்புக் கண்ணாடியை அணிந்தவாறே பார்த்துக் கையை ஆட்டிக் கொண்டே வந்து தனது காரில் ஏறிப் புறப்பட்டார்.

காரில் ஏறியதும் அண்ணா அந்தக் கண்ணாடியைக் கழற்றி வைத்துக் கொண்டார். இதுவெல்லாம் பரிமளத்திற்கு ஏனென்று புரியாமல் அண்ணா முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தார். பரிமளத்தின் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டு அண்ணா பேச ஆரம்பித்தார்.

“”நான் சிகிச்சைப் பெற்றுத் திரும்புகிறேன். என் தோற்றம் சற்று மெலிவாக மக்களுக்குத் தெரியும். என்னை இத்தனை நாட்களுக்குப் பிறகு சற்று மெலிவாக பார்க்கிற மக்களுக்கு மகிழ்ச்சியை விட நெகிழ்ச்சியே அதிகமாக ஏற்படும். அதைப் பார்க்கும்போது எனக்கு என்னை அறியாமல் கண்ணீர் வடிந்து விடலாம். அப்படி நான் கண்ணீர் வடிப்பதை மக்கள் காண நேரிட்டால் அவர்களுக்குத் தாங்க முடியாத அழுகை வந்துவிடும். இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்காகத்தான் மக்களை கடக்கும் வரை என் கண்களை மறைக்க கண்ணாடி அணிந்து கொண்டேன்” என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டே வந்த பரிமளத்தின் கண்களில் கண்ணீர் கொட்டியது. இப்படி தன்னால் மக்கள் துயருற்று விடக் கூடாது என்று வாழ்ந்த உன்னதத் தலைவர்களைக் கொண்டது தமிழகம்.

இன்றைய இளைஞர்களும், அரசியலைப் பற்றி தற்போதிருக்கும் கருத்தினை மாற்றிக் கொண்டு, நமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த தலைவர்களை வழிகாட்டியாகக் கொண்டு அவர்களை பின்தொடர்வது எழுச்சி மிக்க தமிழகம் உருவாக வழிகோலும்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum