சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Khan11

அதிசயமான அருமையான கட்டுரைகள்

4 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:07

First topic message reminder :

சொந்த, பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள்.
அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Sannyasi-300x186
இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..
“”பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன.
புத்திசாலியாக இருக்கும் சில சந்நியாசி நண்டுகளோ சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.
இந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.பொதுவாக சந்நியாசிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.
புண்ணிய ஸ்தலங்களில் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.
ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும். கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.
இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்சுகள் இருந்தாலும் நிரந்தர வீடில்லாமல் சங்கின் கூடுகளை சார்ந்து வாழும் வித்தியாசமான உயிரினமாக இது இருக்கிறது” என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Nov 2015 - 12:28

சே.குமார் wrote:அம்மா முதலில் தண்ணியில் சிக்கினவனுங்களுக்கு பாதுகாப்பு வழங்கட்டும்..
அப்புறம் மலிவு விலை முட்டை கொடுக்கலாம்...
மலிவு விலைன்னு கேட்டா சரக்கு வேணுமின்னா உடனே கொடுக்கும்...
நல்ல ஆசைதான்... கிடைத்தால் சந்தோஷமே
உணமைதான் 
நடப்பது என்னவோ 
கிடைப்பது என்னவோ 
உண்மை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 17:43

நம்மால் நாம் சந்திக்கும் பிரச்னை
---------------

காடுகளை அழித்தல், நதிகளை மாசடையச் செய்தல் என மனிதன் செய்த பல தவறுகளால், சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்ப மாறுதல் ஏற்பட்டு, மனித குலம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துக் கொண்டு உள்ளது. அதில் முக்கியமானதும், மனிதனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதும் என்றால் அது தண்ணீர் பிரச்னையாகும்.

மனித வாழ்க்கைக்கு நீர் ஆதாரம் என்பது மிகவும் அவசியமானதாகும். எண்ணெயைப் போல அதற்கு எந்த மாற்றும் கிடையாது. மனிதனுக்கு மிகவும் தேவைப்படும் தண்ணீரின் ஆதாரம் தற்போது மிகவும் சுருங்கி வருகிறது. தண்ணீர் ஆதாரம் குறைந்து கொண்டே இருக்கும் அதே நேரத்தில் மக்கள் தொகை பெருக்கம் பிரச்னையை இன்னும் சிக்கலாக்குகிறது. உலக பொருளாதாரமே உயர்ந்தாலும், மனிதனின் தாகம் தணிய தண்ணீரைத்தான் நாட வேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து பணக்காரரோ, ஏழையோ, தென் பகுதியில் வசிப்பவரோ, வட பகுதியில் வசிப்பவரோ யாரும் தப்பிக்க இயலாது. பல நாடுகளில் உள்ள தண்ணீர் ஆதாரங்கள் பத்தில் ஒரு பங்காக சுருங்கி விட்டது. குறிப்பாக ஏரிகள் ஆக்ரமிக்கப்பட்டு கட்டடங்கள் வந்துவிட்டன. ஆறுகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆற்று மணலை களவாட, ஆறுகளை வற்றவிட்ட நம் மக்கள், நாளை நமக்கே தண்ணீர் கிடைக்காமல் போகப் போகிறது என்பதை இன்னமும் உணரவில்லை.

தண்ணீர் பற்றாக்குறை என்பது வெறும் குடிநீர் அல்லது பயன்பாட்டுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவது மட்டும் அல்லாமல்,  மறைமுகமாக பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் என்பது பலரும் அறியாத உண்மை. அதாவது, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சுகாதாரமற்ற தண்ணீரை ஏழை நாடுகளின் மக்கள் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, அங்கு மலேரியா, காசநோய் போன்ற நோய்கள் அதிகமாகப் பரவுவதும், உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, உணவுப் பஞ்சம் ஏற்படுவதும் தண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் பிரச்னைகளே.

சரி இதற்கெல்லாம் தீர்வு காண நம்மால் என்ன முடியும் என்று நினைக்காமல், ஒவ்வொருவரும் ஒரு அடி எடுத்துவைத்தால், நாம் நிச்சயம் இந்த பிரச்னையில் இருந்து ஒரு சில ஆண்டுகளாவது தப்பித்துக் கொள்ளலாம்.
தொழிற்சாலைகளை நடத்துவோர், அதில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்படியே நதியில் கொட்டாமல், அதனை சுத்திகரித்து வெளியேற்றுவதும், மரங்களை வெட்டாமல், இருக்கும் இடத்தில் மரங்களை வளர்ப்பதும் மனிதனின் கடமையாகிறது.

வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் தண்ணீரின் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவதும், தண்ணீர் மாசுபடுவதை தடுப்பதும், நீர் ஆதாரங்களை மேலும் சுருக்காமல் பெருக்குவதும் மனிதன் மனிதனுக்காக, அவனது வருங்கால சந்ததியினருக்காக செய்யும் கடமையாக இருக்கும்.

இன்றே அதற்கான பணிகளை துவக்குவோம்…


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 17:45

சிரிப்பை மறந்தால்… அனைத்தையும் மறக்க வேண்டி வரும்
----------------

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி… பிறர் வயிறெரியச் சிரிப்பவர்கள் மிருக ஜாதி..’ என நல்ல சிரிப்பின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கும் பழைய தமிழ்ச் சினிமாவின் பாடல் எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்கும். “சிரிக்கத் தெரிந்த மிருகம் மனிதன்’ என்பார்கள். தனியாகச் சிரித்தால் பல அர்த்தம் உண்டு.. ஆனால், குழுவாக இணைந்து கொண்டாடி சிரித்தால் மன அழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கும் என்கின்றனர் யோகா ஆசிரியர்கள்.

சிரிப்பதால் மனவலி, உடல் வலி, நோயினால் ஏற்படும் வலிகளின் தாக்கம் குறைவதோடு, மூளையில் “செரட்டின்’ சுரப்பியின் உற்பத்தி பெருகி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.  நெருக்கடி, ஆபத்துக் காலங்களில் சிரித்து சமாளித்தால் மூளையில் “கார்டிசான் ஸ்டீராய்டு’ சுரந்து மனதை இயல்பாக வைத்துக் கொள்ள உதவும் என மருத்துவ நூல்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாம் ஒவ்வொருவரும் தற்போது இயந்திரத்தனமான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கிராமங்களைவிட நகரத்தில் வாழும் மக்கள் நாள் முழுவதும் பரபரப்பாகவே இயங்கும் நிலை தவிர்க்க முடியாததாகிவிட்டது.

வேலைப் பளு, குடும்பச் சூழல், பொருளாதாரப் பிரச்னை எனப் பல்வேறு காரணங்களால் ஒவ்வொருவரும் பதற்றம், பயம், சினம், கவலை என மகிழ்ச்சியை இழந்து மன அழுத்தத்துடன் காலத்தை கழித்து வருகிறோம்.

உலகம் முழுவதும் இதே நிலைதான்! ஆனால், வெளிநாடுகளில் மனதிற்குள் இருக்கும் கவலைகளை மறக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் பல்வேறு பயிற்சிகளை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். சில நாடுகளில் தனியாக ஆற்றுப்படுத்துதல் மையங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மன அழுத்தத்தைப் போக்க ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறை கடைப்பிடிக்கப்பட்டாலும் நமது நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறைகளில் ஒன்றுதான் சிரிப்பு தியானம்.

கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் நடைமுறையில் உள்ள இந்தச் சிரிப்புப் பயிற்சியால் 40 சதம் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிரிப்புத் தியானப் பயிற்சி அளித்து வரும் யோகாசன ஆசிரியர் பெ. விஜயகுமார், வித்தியாசமான இந்தப் பயிற்சி குறித்தும், பயிற்சிக்குப் பிறகு மாணவர்களிடம் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் கூறினார்.

அவர்… “சிரிப்பு தியானத்தில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும் ஒழுக்க நெறியுடன் தன் வாழ்க்கையை அமைத்து தனக்கோ, பிறருக்கோ தீங்கு விளைவிக்காத வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

சூரியோதயத்தின் போதே கண்விழித்து, உடலை வளைத்து நெளித்து ஆயத்தம் செய்து 15 நிமிஷங்கள் சிரிக்கவேண்டும். இதனால், ஒவ்வொருவரும் அன்றைய தினத்தை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள இந்தப் பயிற்சி உதவும். சிரிப்பில் அன்புச் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, அதிகாரச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, அருள் பொழியும் சிரிப்பு, ஆத்ம சிரிப்பு, ஆரவாரச் சிரிப்பு, இகழ்ச்சி சிரிப்பு, வெற்றிச் சிரிப்பு, சாதனைச் சிரிப்பு எனப் பல வகை உண்டு.  சிரிப்பு ஒரு மனிதனின் உடல் உள் சூழலைப் பொருத்து மாறுபட்டு, உடல் நிலை நலனும் மாறுபடுகிறது. ஒரு சில வகையான சிரிப்பு உடல் நலத்துக்குச் சீர்கேட்டையும் ஏற்படுத்தும். ஆனால், இத்தகைய உணர்வு நிலைகளைச் சாராமல் எந்தவிதக் காரணமும் இன்றி சிரிப்பதுதான் சிரிப்பு தியானத்தில் சிறப்பாகும். இந்தச் சிரிப்புப் பயிற்சியால் நம்முள் உள்ள எல்லைகளும், வேறுபாடுகளும் கலைந்து சோகமான எண்ணங்கள் மறந்துவிடும்.

இதனால், மனவளம் சிறப்பாற்றல் அடைவதால் வாழ்க்கையும் சிறந்து விளங்கும். சிரிப்புத் தியானத்தை காலை அல்லது மாலை நேரத்தில் வெறும் வயிற்றில் தனியாகவோ, குழுவாக இணைந்தோ பயிற்சி செய்யலாம். பயிற்சி முடிந்ததும் நண்பர்களிடம் அன்பையும், நட்புணர்வையும் முகமலர்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதால், தங்கள் மனதில் உள்ள மன அழுத்தம், துக்கம் ஆகியவற்றை மறந்து வளமான வாழ்வை வாழமுடியும்.

தொடக்கத்தில் இந்தப் பயிற்சியில் ஈடுபட மாணவ, மாணவிகள் கூச்சப்பட்டனர். சிரிப்புத் தியானத்தின் மூலம் கிடைக்கும் பலனை அறிந்த அவர்கள் தற்போது நல்ல முறையில் பயிற்சி பெற்று வருகின்றனர். கல்லூரிகளில் ஆசிரியர்களின் பாடத்தைக் கவனிப்பதால் மாணவர்களுக்கு ஒருவகை இறுக்கம் ஏற்படுகிறது. தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை உண்டு.

ஒருவர் சிரிப்பதையே மறக்கத் தொடங்கினால் புரதம் குறைந்து மறதியை அதிகரிக்கும் “அல்ஸைமர்’ நோயும், அறிவுத் திறனைக் குறைக்கும் “டிமென்ஷியா’ நோயும், நினைவுகளை மனதில் பதியச் செய்யும் திசுக்களைப் பாதிக்கும் “ஹிப்போகம்பஸ்’ நோயும் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதையெல்லாம் போக்க செலவில்லாத ஒரே மருந்து சிரிப்புத் தியானம்தான். தற்போது கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பயிற்சியை தங்களின் மாணவர்களுக்குச்  சொல்லிக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்” என்றார்.



வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 17:46

ஆப்ரிக்க கழனிகளை காக்க கட்டெறும்புகள்?
-----------------------
ஆப்ரிக்காகட்டெறும்புகள்கழனிகள்யானைகள்
எலியைக் கண்டு அஞ்சுமாம் யானை என்பது கர்ணபரம்பரை கட்டுக்கதை. எலியைவிட உருவத்தில் மிகச்சிறிய எறும்பை கண்டுதான் அது பயப்படுகிறது என்கிறது சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று.

‘அட, அது உண்மையா’ என்றால் உண்மைதான் என்கிறது டெய்லி மெயில் என்ற பத்திரிகையில் வெளியான செய்தி.
புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்.டோட் பால்மர் என்பவர் தலைமையில் இயங்கும் விஞ்ஞானிகள் குழு கென்யாவில் ஓர் ஆய்வு நடத்தியது. ஒருவகை மரத்தின் கிளைகளை யானை மேய்ந்துவிடாது கட்டெறும்புகள் தடுக்கின்றன என்று இந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. வனவிலங்குகளில் உடலால் பெரியது யானை. அதனுடன் பலத்தால், பருத்த உடலால் ஒப்பிடவே முடியாதது கட்டெறும்பு. அப்படியிருக்க எறும்புக்கு யானை பயப்படும் ரகசியம் என்ன?. அதுதான் குழுஒற்றுமை. அது எப்படி?

யானை மரக்கிளையை ஒடிக்க முயன்றால் அந்த மரத்திலிருக்கும் கட்டெறும்புகள் வரிசையாக யானையின் துதிக்கைக்குள் புகுந்து தங்கள் வேலையைக் காட்டிவிடுகின்றன. துதிக்கைக்குள் நரகவேதனையைச் சந்திக்கும் யானைகள் அதன்பிறகு அந்த மரத்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிடுகின்றன. அப்புறம் என்ன? உருவில் சிறிது வலுவில் பெரிது என கதை மாறிவிடுகிறது.

சிறிய உருவம் கொண்டவை எப்படி உலகை ஆள்கின்றன என்பதற்கு இது மற்றொரு உதாரணம். பிராணிகளின் வாழ்வியலை பற்றி ஆய்வு நடத்தும் இந்த விஞ்ஞானிகள் குழு இந்த அரிய உண்மையை கண்டறிந்துள்ளது. குழு ஒற்றுமை ஒன்றுதான் இந்த கட்டெறும்புகளுக்கு பலம். யானை உருவத்தில் பெரியதாக இருந்தாலும் தனிமையில்தான் இந்த எறும்புக்கூட்டத்தின் சவாலை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. துதிக்கைக்குள் படையெடுக்கும் கட்டெறும்புக்கூட்டத்தின் முன் தனியொரு யானையால் என்ன செய்யமுடியும். ஒன்றும் செய்ய முடியாதுதானே!.

டாக்டர்.பால்மர், டாக்டர்.ஜேக்கப் ஹோகன் இந்த விஷயத்தை கென்யா சமவெளி பகுதியில் கண்டறிந்தனர். சூடுபட்ட பூனை பாலைக்குடிக்காது என்பது எப்படி உண்மையோ, புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது எப்படி உண்மையை அதுபோல கென்யாவில் அகோரப்பசி வந்தாலும் யானைகள் கட்டெறும்புகள் உறைவிடமாகக் கொண்ட மரத்தை அண்டவே அண்டாது என்பது நிதர்சனமான உண்மை.

சில நேரம் எறும்புகடித்து யானைகள் இறந்துவிடுவதும் உண்டு என்கிறார் பால்மர். ஆப்பிரிகாவில் உள்ள காட்டு மரங்கள், கழனியில் விளையும் நெற்பயிர் போன்றவற்றை யானைகள் கபளீகரம் செய்துவிடாமல் காக்க அவற்றில் கட்டெறும்பை விடலாம் என   இந்த விஞ்ஞானிகள் குழு யோசனை தெரிவித்துள்ளது. இதை ஏற்றால் ஆப்பிரிக்க காட்டையும், கழனியையும் கட்டிக்காக்குமாம் கென்யா கட்டெறும்பு.

வாணிஸ்ரீ சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 17:48

ஐன்ஸ்டீனின் காதல் வாழ்க்கை – நடிகை ரோகிணி
---------------------

ஐன்ஸ்டீன்காதல் வாழ்க்கைநடிகை ரோகிணி
நடிகை ரோகிணி தான் படித்த ஐன்ஸ்டீனின் புத்தகம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்… (இரண்டாவது பாகம் இது)

ஐன்ஸ்டீனின் காதல் அனுபவமாகட்டும், வேலைக்குப் போவதைப் பற்றிய அவருடைய கருத்தாகட்டும் இரண்டுமே அவருடைய வித்தியாசமான தன்மையையே காட்டுகிறது. அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்ததெல்லாம் சார்புநிலைத் தத்துவமே. “ஆத்மரீதியாகச் சிந்திப்பது இசை போன்றது; ஒருபோதும் அதை விற்க முடியாது’ என்பதே அவர் கருத்து.
அவர் ஜெர்மனியின் குடியுரிமையைத் துறந்து ஸ்விட்சர்லாந்து குடிமகன் ஆனார். அங்கு அவருக்கு உதவித் தொகை கிடைத்தது.

ஐன்ஸ்டீன் மெலீவா மேரி என்கிற பெண்ணிடம் காதலில் விழுந்தார். அவர் அவரைவிட மூன்று வயது பெரியவள். ரொம்ப அழகும் இல்லை. இருந்தும் அவளைத் தீவிரமாக நேசித்தார். காரணம் அவள் கணிதத்தில் மேதை. இவருடைய ஆராய்ச்சி, இயற்பியல் பற்றியெல்லாம் பேசக் கூடிய ஆற்றல் உள்ளவள். மனம்விட்டுப் பேச அவருக்கு ஆள் கிடைத்தது.

அப்போது விடுமுறை மாதம். ஜெர்மனுக்கு ஐன்ஸ்டீன் திரும்ப வேண்டியிருந்தது. கல்யாணத்திற்கு முன்பாகவே மெலீவா மேரி கருவுற்றார். அது அந்தக் காலத்தில் நமது நாட்டைப் போலவே அங்கேயும் மிகப் பெரிய தவறு.

பெரிய பெரிய விஞ்ஞானிகள் அவர்களுடைய ஆய்வுகளை வெளியிடுவது அப்போது வழக்கம். ஐன்ஸ்டீன் இளைஞர். அந்த ஆய்வுகளில் காணப்படும் பிழைகளை உடனே கண்டுபிடிப்பது அவருக்கு எளிதாக இருந்தது. அதைவிட எளிதாக இருந்தது, சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு அதை உடனே கடிதம் மூலம் தெரிவிப்பது. ஐன்ஸ்டீனின் கருத்தை மறுக்க முடியாமல் திணறிய விஞ்ஞானிகள் அவரை மிகவும் வெறுத்தனர். அவருக்கு வேலைக்காகச் சிபாரிசு செய்ய மறுத்தனர். அவருக்கு வேலை கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர். மனதில் பட்டதை எவ்வித ஒளிவுமறைவுமில்லாமல் கூறும் பண்பு ஐன்ஸ்டீனுக்கு இருந்தது.

இன்னொன்றும் ஐன்ஸ்டீனுக்குத் தெரியாது. காரியம் ஆக வேண்டுமென்றால் பிறரைத் தேவையில்லாமல் புகழத் தெரியாது. இதனால் அவருக்கு வேலை கிடைக்காமல் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

காப்புரிமை அலுவலகத்தில் வேலை கிடைத்த பின்பே அவர் திருமணம் செய்து கொண்டார்.

அதற்குப் பின் ஐன்ஸ்டீனுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

சுவிட்சர்லாந்தை விட்டு ஜெர்மனிக்கு வந்தார்கள். அவருடைய மனைவிக்கு அதில் வருத்தம். ஜெர்மனி வந்தபின்னால் அவர் வீட்டையும் கணவரையும் பார்த்துக் கொள்ளும் பெண்ணானார். அவருடைய அறிவு, திறமை எல்லாம் ஐன்ஸ்டீனுக்கு உதவவே பயன்பட்டன. அவருடைய கணித அறிவு கணிதத்தில் கொஞ்சம் வீக்கான ஐன்ஸ்டீனுக்கு உதவியது. அவர் இல்லாவிட்டால் ஐன்ஸ்டீன் சார்புநிலைத் தத்துவத்தையோ, க்வாண்டம் தியரியையோ கண்டுபிடித்திருக்க முடியாது என்று கூறுவர். நோபல் பரிசு கிடைத்திருக்காது என்றும் கூறுவர்.

இருந்தாலும் ஒருகட்டத்தில் ஐன்ஸ்டீன் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதற்குப் பின்பும் தொடர்ந்து செயல்பட்டு பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தார். எனவே இதில் பெரிய உண்மை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 13:05

பயிரை மேயும் வேலிகள்
------------
மாதா, பிதா, குரு, தெய்வம்… என்ற முன்னோர்கள் சொல்லி வைத்த வரிசையில் ஆசிரியர்கள் மூன்றாவதாக இடம்பிடித்துள்ளனர். ஆனால், அத்தகைய ஆசிரியர்களில், சில ஆசிரியர்களின் செயல்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்து விடுகிறதோ என்ற எண்ணத்தை பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.

நம் முன்னோர்கள் சொல்லி விட்டுச் சென்ற இந்த வரிசையில் உள்ள முக்கியத்துவத்தை மற்றவர்கள் புரிந்துள்ளனரோ என்னவோ… ஆனால் இதன் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது இன்றைய அவசியத் தேவை. இதில் அம்மாவும்(மாதா), அப்பாவும்(பிதா) ரத்தம் சார்ந்த உறவுகள். தெய்வம் என்பது கண்களால் பார்த்து  உணரப்படாத சக்தி. அத்தனையும் தாண்டி ரத்த சம்பந்தமில்லாத ஒருவரை அதாவது ஆசிரியரை இந்தப் பட்டியலில் முன்னோர்கள் இணைத்திருப்பதிலிருந்தே ஆசிரியரின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

இப்படி சமூகம், ஆசிரியர்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்து அழகு பார்த்து வரும் வேளையில் சில ஆசிரியர்களின் செயல்பாடுகள், ஆசிரியர் சமூகத்தையே இளக்காரமாகப்  பார்க்க வைக்கும் நிலையை ஏற்படுத்தி வருகிறது. பாலியல் ரீதியான தொந்தரவுகளை மாணவிகளுக்குக் கொடுத்து வரும் சில அற்ப எண்ண ஆசிரியர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் இனத்துக்கே பெரும் அவமானம் ஏற்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கடையம் அருகேயுள்ள திருமலையப்பபுரத்திலுள்ள தனியார்  பள்ளி ஒன்றில் 15 வயதான மாணவி ஒருவரை அப்பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அந்த ஆசிரியர் ஆகஸ்ட் 22-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் முன்பே தலைமையாசிரியருக்குத் தெரிந்திருந்த போதும், அதைக் கண்டுகொள்ளாமல் சம்பந்தப்பட்ட  அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற காரணத்தால் அப்பள்ளியின் தலைமையாசிரியர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மேலும், துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது என்ற செய்தி ஆக. 23-ம் தேதியிட்ட நாளிதழ்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூங்கும் நேரம், காலை, இரவு சாப்பிடும் நேரம் தவிர்த்து (அதாவது குறைந்தஅளவு நேரம் தவிர்த்து) பெரும் அளவு நேரங்களில் மாணவர்களும், மாணவிகளும் பள்ளிகளிலோ அல்லது ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வரும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளிலோதான் தங்களது நேரங்களைச் செலவிடுகின்றனர். தங்கள் மகள் அல்லது மகன் நன்கு படித்து, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் பெற்றோர்கள் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர். ஆசிரியர்கள் மீதுள்ள உயரிய மரியாதையின் காரணமாகத்தான் இருபாலரும் சேர்ந்து பயிலும் பள்ளிகளில்கூட தங்கள் மகளைப் பெற்றோர்கள் பயமின்றி அனுப்பி வைக்கின்றனர். அதனையும் தாண்டிச் சிறப்பு மாலை நேர வகுப்புகளுக்கும், இரவு நேரப் படிப்புக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

மாணவர்கள் தவறு செய்தால் அதைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பும், அதனையும் தாண்டி அந்த மாணவனை அல்லது மாணவியை நல்வழிப்படுத்த வேண்டிய கடமையும் ஆசிரியருக்கு உண்டு. இந்த நிலையில் இத்தகைய ஆசிரியர்களின் செயல்பாடுகள் ஆசிரியர் சமூகத்துக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றன என்றால் அது மிகையில்லை. பாலியல் தொல்லைக்குள்ளான மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ள செய்தியைப் படித்த, ஒவ்வொரு மாணவியினுடைய பெற்றோரின் மனநிலையும் எப்படி இருந்திருக்கும் என்பது பெண் குழந்தைகளைப் பெற்றுள்ள பெற்றோர்களுக்குத்தான் புரியும்.

இதில் வேதனை என்னவென்றால், சம்பந்தப்பட்ட மாணவிக்கு, அந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவரம் அப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு முன்னரே தெரிந்திருந்தும்கூட அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதுதான். கடமை தவறும் ஆசிரியரைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த தலைமையாசிரியருக்கு உண்டு என்பதை அவர் மறந்தது எப்படி எனப் புரியவில்லை. இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சிலர்தான் இந்த கீழ்த்தர செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றாலும், அது மாணவச் சமுதாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதானே உண்மை.

மாணவர்களுக்கு நீதிபோதனையையும், வாழ்க்கைக் கல்வியையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே  இதுபோன்ற பாதகச் செயலைச் செய்தால் அதன் தாக்கம் எதிர்கால இளைஞர்களையும் தவறான பாதைக்குக் கொண்டு செல்லுமே என்று நினைக்கும்பொழுது மனம் குமுறுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால். ஆசிரியர் நியமனத்தில் பள்ளிகள், தங்கள் நலனைக் கவனத்தில் கொள்வதுடன் மாணவ, மாணவிகளின் நலனையும் கவனத்தில் கொண்டு ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான்.

ஏற்கெனவே ஊடகங்களும், திரைப்படங்களும் ஆசிரியர்களை கேலிப்பொருளாகச் சித்திரித்து வரும் நிலையில் தங்களின் மேன்மையை சமூகத்துக்கு உணர்த்துவதற்காக அரும்பாடுபட்டு வரும் நல்லாசிரியர்கள் மத்தியில் நிச்சயமாக இந்த வகையான ஆசிரியர்கள் கருப்பாடுகள்தான். அதைவிட சரியாகச் சொன்னால் இவர்கள் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போலத்தான்.

வி. குமாரமுருகன்


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 13:07

எதற்கும் தலையாட்டுபவரா நீங்கள்?
-------------
எதற்கும் கீழ்ப்படியாமல் நடப்பவர்களை விட, எல்லாவற்றையுமே ஏற்றுக் கொள்ளும் நபர்களிடம் தான் பிரச்னை அதிகம். அதெப்படி, எதற்கும் கீழ்ப்படியாமல் இருப்பவர்களுக்குத்தானே பிரச்னைகள் அதிகம் என்று கேட்டால் அதற்கு பதில், இல்லை என்பதுதான்.

பொதுவாக ஒருவர் யார் சொல்வதையும் கேட்காமல், தான்தோன்றித் தனமாக நடப்பதாக வைத்துக் கொள்வோம். அதனால் அவர் செய்யும் எந்த செயலுக்கும் அவர் மட்டுமே காரண கர்த்தாவாகிறார்.  அவர் செய்யும் காரியத்தால் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பு. எனவே, அவர் தான் செய்யும் காரியம் மீது மிகுந்த அக்கறை காட்டுவார். அதில் சறுக்கல்கள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்றும் சிந்தித்து வைத்திருப்பார்.

ஆனால், யார் எது கூறினாலும் அதை தனது மனதுக்குப் பிடிக்காவிட்டாலும், தனது மூளை அது தவறு என்று கூறினாலும் ஒருவர் கூறிவிட்டார் என்பதாலேயே அதனை செய்யும் நபருக்குத்தான் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அதற்குக் காரணமும் இருக்கிறது.

ஒருவர் தனக்குப் பிடிக்காத காரியத்தை மற்றவர்களின் தூண்டுதல் காரணமாக செய்யும் போது அதனை ஆர்வத்துடன் செய்ய இயலாது. மேலும், அதன் சாதக, பாதகம் குறித்து ஆராய்ந்திருக்க மாட்டார். அதே சமயம் அதில் ஏதேனும் தவறு நேர்ந்தால் உடனடியாக, அதை செய்யச் சொன்னவரின் பேரில் பொறுப்பை போட்டுவிடலாம் என்ற அலட்சியமும் இருக்கும்.

இந்த சூழ்நிலையில்தான், ஒருவருக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன.  மேலும், தனக்குப் பிடிக்காத காரியத்தை செய்யும் போது, அவரது மனம் அவரை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கும். அவரது மனம் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்.

எனவே, ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக அதனை மறுத்துவிடுங்கள். உங்களை செய்யச் சொல்லும் விஷயத்தில் சாதக பாதகங்களை அலசி ஆராயந்து, அதில் சாதகம் இல்லை என்று உங்களுக்குத் தெரிந்தால், அதனை செய்ய முடியாது என்று உறுதியாகக் கூறி விடுங்கள்.
உங்கள் நண்பர்கள் உங்களை சினிமாவுக்கு அழைக்கிறார்கள். உங்களுக்குப் போக விருப்பமில்லை. ஆனால் நண்பர்களுக்காக செல்வீர்கள். இது ஒரு சாதாரண காரியமாக இருக்கலாம். ஆனால், உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நீங்கள் செய்வதால், காலம், பணம் விரயம் தான் ஏற்படுமேத் தவிர, அது உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்காது.

இது எல்லா விஷயத்துக்குமே பொருந்தும். ஒரு விஷயத்தை நீங்கள் வேண்டாம் என்று நினைத்தால், அதனை தெளிவாக உறுதியாக வேண்டாம் என்று கூற வேண்டியது மிகவும் அவசியமாகும்.




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 13:08

அக்கா பெண்ணும், தாய்மாமனும் வேண்டவே வேண்டாம்
----------------

அக்கா பெண்ணையும், தாய் மாமனையும் உறவினராக இருக்க வேண்டாம் என்று சொல்லவில்லை… அண்ணா பெண்ணையோ அல்லது தாய் மாமனையோ திருமணம் செய்து கொள்வது தான் வேண்டவே வேண்டாம் என்கிறோம்.
உறவுகளுக்குள் திருமணம் முடித்தால், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவ உலகமே ஒன்று சேர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

உறவுகளுக்குள் திருமணம் முடிந்தால் ஏற்படும் தலசீமியா எனப்படும் ரத்த அழிவு சோகை நோய் பற்றி தெரிந்தால், யாரும் அதுபோல உறவுகளுக்குள் திருமணம் முடிக்க நினைக்கவே மாட்டோம்.

அது என்ன ரத்த அழிவு சோகை?

சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற புரதம் தான் ஆக்ஸிஜனை சுமந்து கொண்டு உடல் முழுக்க எடுத்துச் செல்கிறது. அந்த ஹீமோகுளோபினுக்குள் ஆல்ஃபா குளோபின், பீட்டா குளோபின் என இரண்டு உட்பொருட்கள் உள்ளன.

இந்த ஹீமோகுளோபின் அமைப்பில் ஒட்டுமொத்தமாக கோளாறு ஏறப்பட்டு, அதன் விளைவாக ரத்த சிவப்பு அணுக்கள் அழிக்கப்படுவதே ரத்த அழிவு சோகை. இதனால், ரத்தத்தின் மூலமாக உடலுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் பணி தடைபட்டு, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

இந்த குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு, அம்மா, அப்பாவிடம் இருந்து குறைபாடுள்ள மரபணு சென்றதே பாதிப்புக்குக் காரணமாகிறது. இந்த நோயுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு வயிறு வீக்கம், கல்லீரலிலும், எலும்பு மஞ்ஜையிலும் வீக்கம், தலை வீக்கம், இதயம், சிறுநீரகத்தோடு செயல்பாடு குறைவு என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

இந்த நோய் ஏற்பட்டால், மாதம் தோறும் அந்த குழந்தைக்கு ரத்தத்தை ஏற்ற வேண்டியது ஏற்படும். இது ஒன்று மட்டுமே தற்காலிகத் தீர்வாகும். அப்படி ரத்தம் ஏற்றவதாலும் சில குழந்தைகளுக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனை போக்க மாத்திரைகளையும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டியது வரும்.

உறவுக்குள் திருமணம் முடிந்த தம்பதிக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு இந்த பிரச்னை இருந்தால், அடுத்து பிறக்கும் குழந்தைக்கும் இதே பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, இரண்டாவது குழந்தை உருவானதுமே, அந்த குழந்தைக்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அந்த குழந்தைக்கும் இந்த பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால், கருவைக் கலைப்பதுதான் ஒரே வழி.

நெருங்கிய உறவுகளுக்குள் மணம் முடிப்பதால், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கவே முடியாது. அதனால், உறவுகளுக்குள் திருமணம் செய்வதைத்தான்  தவிர்க்க வேண்டும் என்கிறது மருத்துவ உலகம்.




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 13:10

தொலைக்காட்சிகளில் இருந்து விடுதலையாவது எப்போது?
--------------

அப்பப்பா மூச்சு முட்டுகிறது… தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்காக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சானல்களின் பெயர்களை ஒரு முறை சொல்லிப்பார்க்கும் போதுதான் நமக்கு இந்தப் பிரச்னை. சன்,கே டிவி, ஆதித்யா, ஜெயா, ராஜ், கலைஞர், ஜீ, ஸ்டார் விஜய், பொதிகை, வசந்த், பாலிமர், மெகா, தமிழன், கேப்டன், மக்கள் தொலைக்காட்சி என இன்று சுமார் 35-க்கும் அதிகமான சானல்கள் தமிழில் ஒளிபரப்பு செய்கின்றன.

இவற்றின் எண்ணிக்கை விரைவில் லிம்கா அல்லது கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு உயரும் என நம்பலாம்.

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் இத்தனை சானல்கள் தமிழில் ஒளிபரப்பாகின்றன என்றால், அந்தப் பெருமையைச் சொல்லி சிலாகிக்காமல் இருக்க முடியாது.

முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ஒலியும், ஒளியும் பார்க்கவும், வாரத்தில் ஒரு முறை ஞாயிறன்று போடும் ஒரு திரைப்படத்தைப் பார்க்கவும், அதுவும் அடுத்த வீட்டுக்குச்  சென்று பார்ப்பதற்கு சங்கடப்பட்டு தவிர்த்து விடுவதும் நம் பழக்கமாக இருந்தது. பிறகு தனியார் தொலைக்காட்சி சானல்கள் உருவாக்கப்பட்டு கேபிள் இணைப்பு கொடுத்த வீடுகளில் எப்போதும் தமிழ் சினிமாக்களின் ராஜ்ஜியம் தலை தூக்கியதும், தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. தமிழ் தொலைக்காட்சி சானல்கள் அதிகரித்த பிறகு தொலைக்காட்சியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமானது.

முந்தைய காலத்தில் மதிப்புமிக்க ஒரு கருவியாகப் பார்க்கப்பட்ட இந்தத் தொலைக்காட்சி, பிறகு பொழுதுபோக்கு அம்சமாக மாறி, இன்று கேளிக்கைப் பொருள்களில் ஒன்றாக மாறிப்போனது. இது எப்படி நடந்தது?
அரசியல் கட்சியோடு தொடர்புடையவர்களால் தொடங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி சானல்கள் முதலில் பொதுவான அம்சங்களோடு, திரைப்படங்களை ஒளிபரப்பி வந்தன.

தொடக்கத்தில் தங்களுக்குத் தேவையான நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கத் தொடங்கிய மக்கள், பிறகு ஓய்வுநேரங்களை முழுக்க முழுக்க தொலைக்காட்சியின் முன் கழிக்கத் தொடங்கினர். இதுதான் சானல்களைத் தொடங்கியவர்களின் எதிர்பார்ப்பும்கூட.

பிறகு தொடங்கியதுதான் கருத்துத் திணிப்பு. இதில் அவர்கள் பெற்ற வெற்றியே, இன்று வரை தொடங்கப்படும் புதிய சானல்களின் அடித்தளம். இதன் விளைவாக வேறு பல சானல்கள் தமிழில் உருவாகவும், மொழிமாற்று சானல்கள் வரவும் அது வழிகோலியது.

இதன் தொடர்கதைதான் பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. குறிப்பாக குழந்தைகளில் தொடங்கி, இளைஞர்களில் வளர்ந்து, முதியோரில் முடியும் வரை இன்று அனைவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு வெளி உலகமே தெரியாத நிலை. ஒற்றுமை, ஒருமைப்பாடு, கலாசாரம் என்ற பொதுபுத்திக்கான விஷயங்களே தெரியாதவர்களாக  அவர்கள் வளர்ந்து வருகின்றனர்.

பொதிகை தொலைக்காட்சியைத் தவிர, குழந்தைகளுக்கான   மற்ற சானல்கள் உள்ளிட்ட எவையும் மோசமான, விபரீதமான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்ப்பதில்லை.

இந்தியாவில் பாலியல் கல்வி இன்னமும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில், அதுகுறித்த அடிப்படை அறிவுகூட குழந்தைகளுக்கும், வளர்இளம்பருவத்தினரிடையேயும் இல்லாத நிலையில், இந்தியாவில் பாலியல் உறவுகொள்ளும் திரைப்படங்கள் வெளிநாட்டு தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. இந்தியாவில் இந்த ஒளிபரப்புக்கான அவசியம் என்ன? மக்கள் விரும்பிக் கேட்டுத்தான் அரசு அனுமதித்துள்ளதா?

பொதுவாக அனைத்து வயதினரையும் அவர்களது வேலைகளை குறித்தநேரத்தில்  செய்யவிடாமல், பொன்னான நேரத்தை கிரகித்துக்கொள்ளும் இந்த ஒளிபரப்புகள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும் (இதிலும் விதிவிலக்கு உண்டு). ஆனால், அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி, பிபிசி போன்ற சானல்கள் கட்டண ஒளிபரப்புகளாகத் தொடர்கின்றன.

இதுபோன்ற சானல்களை மைய அரசு குறைந்த கட்டணத்தில் பெற்று மக்களின் நன்மையைக் கருதி இலவசமாக ஒளிபரப்பினால் மாதக் கட்டணமாவது குறையும்.

குறிப்பாக, தமிழகத்தில் இன்று கல்வி நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தொடங்கப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், அவர்களின் பாடங்களோடு தொடர்புடைய காட்சிகளோடும், இளைஞர்களுக்கு சர்வதேச அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்தும், சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்க்கைக் கல்விக்கான ஒரு முழுநேரச் சானலை தொடங்க எவரும் முன்வரவில்லை.

செல்வந்தர்களோ, அறக்கட்டளைகளோ, தொண்டு நிறுவனங்களோ, கல்வி நிறுவனங்களோ, ஏன் இலவசங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகளோ இதுகுறித்து சிந்திக்காதது ஏன் என்ற காரணம் தெரியவில்லை.

இந்தியாவின் அதீத வளர்ச்சியைப் பொறாமைக் கண்களோடு பார்த்துக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு மத்தியில், பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை விழுங்கக் காத்திருக்கும் நிலையில், இந்திய இளைஞர்களுக்கு கிடைத்துவரும் வேலைவாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் வளர்ந்த நாடுகளுக்கு மத்தியில் இன்னும் பழங்கதைகள் பேசி, தொலைக்காட்சியில் தோன்றும் பொய்யான தோற்றங்களில் மயங்கி, அதன் கேளிக்கை நிகழ்ச்சிகளே கதியாகக் கிடந்தால், இந்தியர்களின் வாழ்வில், குறிப்பாக தமிழர்களின் வாழ்வில், “இன்னொரு இருண்ட காலம்’ என்ற வரலாற்றை வருங்காலம் படிக்கும்.
இரா. மகாதேவன்


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 13:11

நன்றி சொல்லும் நாள்
-------------
 ஓர் ஆண்டு என்பது 365 நாள்களைக் கொண்டது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 365.25 நாள்கள் என்பதுதான் வானவியல் கணக்கு. வேதகால பாரத வானவியல் சாஸ்திரம் 32 பகுதிகளை ரகஸ்ய வித்தைகளாகக் கொண்டது.

தை மாதம் தொடங்கி ஆனி மாதம் முடிய உள்ள ஆறுமாத காலமும், ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறுமாத காலமும் சமகால அளவு இல்லை. உத்தராயணம், தக்ஷிணாயணம் ஆறு ஆறு மாதங்கள் என்றாலும் கால வித்தியாசம் உள்ளது.

அதாவது சூரியன் நகர்வதாகத் தோன்றுகிற பயண காலம் வடதுருவமுனைக் கோட்டிலிருந்து தென் துருவமுனைக் கோட்டிற்கு வருகிற காலம் 186.50 நாள்கள். தென் துருவ முனைக் கோட்டிலிருந்து வட துருவ முனைக் கோட்டிற்கு வருகிற காலம் 178.75 நாள்கள். மொத்தம் 365.25 நாள்கள் (ஓராண்டு).

தை தொடங்கி உத்தராயணம் ஆரம்பமாகிறது. தை மாதத்திற்கு தனி விசேஷத்தன்மை உண்டு. பூமியில் வாழும் மானுடருக்கான ஓராண்டு என்பது வானுலக தேவர்களுக்கு ஒரு நாள் பொழுது என்பது மனு ஸ்மிருதியின் வாசகம்.

தக்ஷிணாயணத்தில் ஆடி தொடங்கி மார்கழியின் காலம் தேவர்களின் முன் விடியல். உத்தராயணத்தில் தொடங்குகிற தைமாதம் தேவர்களின் விடியற்காலம். தேவர்களின் விடியலை அதாவது தைமாதத்தை விசுவாமித்திர மகரிஷி போற்றியுள்ளார்.

தேவர்களின் அந்த விடியல்தான் மனிதகுல வாழ்வுக்கு உணவு தருகிற உழவர்களின் தைத்திருநாள். உலகம் முழுவதும் உழவுத் தொழிலை போற்றியுள்ளது.

ரோமானியக் கவிஞர் வெர்ஜில் எழுதியுள்ள 12 பகுதிகள் உடைய ஏஉசஉஐஈ (ஹெனைட்) காவியம் உழவின் பெருமையைப் பேசும். லத்தீன் மொழியிலுள்ள எஉஞதஎமஇந (கார்கஸ்) காவியம் உழவுக்காக இயற்றப்பட்டது.

கவிச் சக்கரவர்த்தி கம்பரின் ஏர் எழுபது பிரசித்தம். திருவள்ளுவரும், இளங்கோ அடிகளும் உழவர்களைப் போற்றியுள்ளதை தமிழகம் அறிந்ததே. கம்பன், இளங்கோ, வள்ளுவரைப் போற்றிய மகாகவி பாரதி சுதந்திரப் பாட்டை, பள்ளர்களின் களியாட்டம் என்றே பாடி உழவர்களை உயர்த்தி உள்ளார்.

தை மாதத்தை கொண்டாடுவது, ஒளி தந்த கதிரவனுக்கும் உணவு தந்த உழவர்களுக்கும் நன்றி கூறுவதற்காகவே.கதிரவனை சூரிய நாராயணனாக கருதுவது ஏனென்றால், சூரியனின் பால் வட்டத்தின் மத்தியில் சூரிய நாராயணர் இருப்பதாக பாரத ஸ்மிருதிகள் கூறுகின்றன.

வானில் சூரியனைச் சுற்றி பல கோள்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்டு முழுவதும், பன்னிரு மாதங்களும் கோள்கள் சுழல்கின்றன. அவ்வாறு கோள்கள் சுழல்கிற பாதைகளும், அவை சந்திப்பதும் ராசிகள் என்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு வருவதை சங்கராந்தி என்று கூறுவது வழக்கம்.

மகர ராசி என்று சொல்லப்படுகிற பாதைக்கு கதிரவன் நெருங்குவதை மகர சங்கராந்தி என்று புராணங்களில் கூறியுள்ளார்கள். அதையே தைப்பொங்கல் திருநாள் என்பது மரபு. உணவு தந்த கதிரவனுக்கும் உழவனுக்கும் பொங்கலைத் தந்து மகிழும் நாளே மகர சங்கராந்தி – தைத் திருநாள்.

வான் மழைக்கும், வளம் மிகுந்த பூமிக்கும், ஒளி தரும் சூரியனுக்கும், இயற்கையுடன் பாடுபட்ட விவசாயிக்கும் மனிதகுலம் கொண்டாடுகிற நன்றித் திருநாள், தெய்வத் திருநாள், புராணத் திருநாள், வானவியலைப் போற்றும் பெருநாள் என்பதை உலகுக்குத் தெரிவிக்கிற பாரத ஸம்ஸ்கிருதியின் (கலாசாரத்தின்) சின்னமே தைத் திங்கள் பொங்கல் ஆகும்.

நமது முன்னோர்கள் விஞ்ஞான ரீதியான – வானவியல் ரீதியான நுட்பங்களைக் கண்டறிந்து நமக்கு வழங்கி உள்ளார்கள்.

ஆனால், அனேகமாக எல்லாவற்றையும் தெய்வீகம் } வேதம் } இதிகாசம் } புராணம் என்ற அடிப்படையில் கூறியிருக்கிறார்கள் என்கிற பேருண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். எதையும் மேலோட்டமாகக் கண்டு, பாரத நாட்டு தெய்வீகத்தை, வேத இதிகாச புராணத்தை அறிவியல் குறைத்து பேசுகிற அரசியல் ஒன்றுக்குமே நிலைக்காது.

மஞ்சள் குலைகளும், இஞ்சிக் குலைகளும், கரும்புகளும், பசுக்களும் மாட்சியுடன் பவனிவர, இயற்கையைத் தொழுது போற்றி உணவளித்த சாதாரண மானுடர்க்கு நன்றி பாராட்டி பால் பொங்க, அரிசி பொங்க, மனம் பொங்கிப் பொங்கித் ததும்பும் நாளே தைப் பொங்கல்.

பாரத நாட்டு மகரிஷிகளும், வானவியல் விற்பன்னர்களும் கண்ட நுட்பங்களின் பாண்மைகள் நிறைந்த மேன்மைகளே பாரத நாட்டு விசேஷப் பண்டிகைகளும் திருநாட்களும் என்கிற சத்யங்களைப் புரிந்து கொண்டு வேதங்கள் சொன்னபடி மனிதரை மேன்மைப்படுத்திக் கவிபாடிய பாரதியின் வாசகமான “வானவியல் தேர்ச்சி கொள்’ என்ற புதிய ஆத்தி சூடியை உணர்ந்து நடப்போம்.

- பாரதி காவலர் கே.  ராமமூர்த்தி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 17:54

செல்போன் அழைப்பை வீணாக்காமல் தவிர்க்க..
------------
பொதுவாக தண்ணீரை செலவு செய்வது போல பலரும் செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம். இப்போதெல்லாம் தண்ணீரும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டதால், தண்ணீரை விட அதிகமாக செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம்.

செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம் என்றால் என்னவென்று புரியவில்லை. அதாவது, ஒரு தொலைபேசியிலோ அல்லது செல்போனிலோ ஒருவரை அழைத்துவிட்டு, எதையும் சொல்லாமல் வீணாக்குவதாகும்.

அதாவது, அவர் இல்லையா.. அப்புறம் பேசுகிறேன்.. பேச வந்ததை மறந்து விட்டேனே… மாற்றி உங்களுக்கு போன் செய்து விட்டேனா என்பது போன்ற வாக்கியங்களோடு எத்தனையோ செல்போன் அழைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இவற்றை எல்லாம் தவிர்க்க..

பேசுவதற்கென்று சில பண்பான முறைகள் இருக்கின்றன. வழக்கமாகப் பேசுகிறவர்களாக இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது நல்லது. புதியவர்களாக இருந்தால் அழைத்தவர் தன்னுடைய பெயர், ஊர், தொழில் ஆகியவற்றைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்ட பிறகு, தான் தொடர்பு கொள்ள விரும்புகிறவர் பெயர், ஊர், தொழில் போன்றவற்றைச் சொல்லி விசாரிப்பதே பண்பாடு.

மிகவும் அந்தரங்கமான விஷயமாக இல்லாமல் அலுவலக வேலை தொடர்பானது என்றால், இன்ன விஷயத்துக்காகத் தொடர்பு கொண்டேன் என்று கோடிட்டு காட்டிவிட்டால் செல்போன் அழைப்பை ஏற்கும் குடும்பத்தார் அதைத் தங்களுடைய குடும்பத் தலைவருக்குச் சொல்லி உரிய நேரத்தில் கவனிக்கப்பட உதவிகரமாக இருக்கும். “அவர் இல்லையா, சரி அப்புறம் பேசிக்கொள்கிறேன்’ என்றால் அழைப்பு வீணாகிவிடும்.

செல்போனை இனி கையில் எடுக்கும்போதே என்ன பேச வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொள்வது நல்லது.

அலுவலகத்தாருடன் பேசுவதாக இருந்தாலும் கடைகளில் அல்லது சேவை அமைப்புகளிடம் சேவையைப் பெற விரும்பினாலும் முதலில் நமக்குத் தேவைப்படும் விடைகளுக்கு ஏற்ப வரிசையாகக் கேள்விகளைக் குறித்துக் கொண்டு பேசுவதும் நல்ல பலனைத் தரும். இதை மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று நினைக்கக்கூடாது.

செல்போனைத் தொடர்ந்து நெடுநேரம் கன்னத்தோடு வைத்துக்கொண்டு பேசினால் அந்தப் பகுதியில் புற்றுநோய் வரும் என்கிறார்கள். அத்துடன் அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தால் கண்களும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர்.

செல்போனை எந்த நேரமும் வைத்திருப்பதும், செல்போனில் எப்போதும் வீண் அரட்டை அடிப்பதும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. அதில் இருந்து 24 மணி நேரமும் கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக செல்போனில் பேசும் போது, அந்த கதிர்வீச்சு அதிகப்படியாக உடலை பாதிக்கிறது.

செல்போனைக் கூடியவரை குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தாமலே இருப்பது என்ற முடிவை இப்போது எடுப்போம், அதைச் செயல்படுத்துவோம். சுருக்கமாகச் சொன்னால் “வார்த்தைச் சிக்கனம் செல்போனின் இலக்கணம்’.

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 17:56

செல்போனில் பேசுவதும் வன்முறையே
-----------------------
இருபது வருடங்களுக்கு முன்பு செல்போன் என்ற ஒரு கருவி உலகையே ஆட்டிப்படைக்கப் போகிறது என்று யாராவது விளையாட்டுக்காகக் கூறியிருந்தால்கூட அதை யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். இன்று மக்களை இது அடிமைப்படுத்திவிட்டது. உலகின் எந்த மூலையில் யார் இருந்தாலும் அவர்களோடு நேரடியாக மணிக்கணக்காக பேசும் வசதி இருப்பதால் இது மிகவும் இன்றியமையாத சாதனமாகிவிட்டது.

செல்போன் (கைப்பேசி) பயனுள்ள சாதனம் என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது. கல்வி, தொழில், வியாபாரம், அரசு அலுவலகங்களுடன் தொடர்பு, சேவைகள் ஆகியவற்றைப் பெறவும் உறவினர்கள், நண்பர்களுடனான தொடர்புக்கும் இது மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

ஆனால் இதைப் பயன்படுத்துவதில்தான் மக்களிடையே சுய கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. செல்போனில் தொடர்ந்து நீண்ட நேரம் பேசுவது கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளாக்கும் என்ற மருத்துவ எச்சரிக்கையைப் பலர் மனதிலேயே கொள்வதில்லை. அதே சமயம் அவசியத் தேவைகளுக்கு மட்டும் சுருக்கமாகப் பேச வேண்டும் என்ற இங்கிதம் தெரியாமல்  மணிக்கணக்காகப் பேசி தங்களுடைய நேரத்தையும் வீணடித்து எதிராளியின் நேரத்தையும் வீணடிக்கும் வேலையைச் செய்கின்றனர்.

வீட்டில் நோயாளிகளைக் கவனிக்க வேண்டியவர்கள், சமையல் வேலையைத் தொடர வேண்டியவர்கள், அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கட்டளைப்படி அவருக்கு உதவி செய்ய வேண்டியவர்கள், சாலைகளில் வாகனங்களில் செல்வோர், வெளியூர் பயணங்களுக்குத் தேவைப்படும் பொருள்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருப்போர்,
குறிப்பிட்ட வேலை நேரத்துக்குள் அலுவலகங்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் சென்று தங்களுக்குத் தேவைப்படுவதை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியவர்கள் என்று பலர் எதிர் முனையில் இருக்கலாம்.

தாட்சண்யம் கருதியோ, வம்பு வளருமே என்று அஞ்சியோ அவர்கள் தங்களுடைய அடுத்த வேலையைச் சொல்லாமலும் இருக்கலாம். நம்மைப் போலவே அவரும் வெட்டியாகத்தான் இருக்கிறார் என்று நினைத்து பேச்சை வளர்த்துவது வீணான செயல் மட்டுமல்ல மறைமுகமான வன்முறையுமாகும்.

பள்ளி, கல்லூரிகளில் ஜூனியராக இருப்போர், அலுவலகங்களில் நமக்குக் கீழே வேலை பார்ப்போர், கட்சி அல்லது அமைப்புகளில் நம்முடைய தயவை நாடுவோர், புதிதாகத் திருமணமாகி வந்த மணப்பெண் என்று இளைத்தவர்கள் பலரை ஆதிக்கம் செலுத்தும் வகையில் பலர் இப்படிப் பேசுவது உண்டு.

இன்னும் சில வசதியான வீட்டுப் பெண்மணிகள் தங்களைவிட வசதிக் குறைவான உறவுப் பெண்களை செல்போனில் அழைத்து சொந்த பந்தங்களைப் பற்றிய “லேட்டஸ்ட்’ தகவல்களைச் சொல்லச் சொல்லி துருவித்துருவி கேட்கும் அநாகரிகங்களும் உண்டு.

அக்கம் பக்கத்தில் குடியிருப்போர், அலுவலகத்தில் வேலை செய்வோர், உறவினர்கள் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வம்பு பேசும் வழக்கத்துக்கும் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. யாரோ சொன்ன ஆதாரமற்ற வதந்திகளை மீண்டும் மீண்டும் பலரிடம் சொல்லி அதை உண்மைபோல சித்திரிப்பதற்கும் செல்போன் பயன்படுகிறது.
கட்சிகளின் தலைவர்கள், முன்னணி நடிகர்கள் போன்றவர்களின் உடல் நிலை குறித்து அடிக்கடி திடுக்கிடும் எஸ்.எம்.எஸ். தகவல்களும் செல்போன் மூலம் பரவுகிறது.

அழைத்துப் பேசுவது நாம்தான் என்பதால் கட்டணச் சுமை நமக்குத்தானே எதிரில் இருப்பவர் சும்மாதானே பேசுகிறார் என்றும் பலர் நினைப்பது உண்டு. வம்பு பேசுவதற்கான கட்டணத்தை அவர் செலுத்தினாலும் எதிர்முனையில் இருப்பவர் தன்னுடைய விலைமதிப்பற்ற நேரத்தை அல்லவா இழக்கிறார்?

சில சந்தர்ப்பங்களில் இயற்கையின் அழைப்புக்குச் செல்லக்கூட முடியாத நிலையில் எதிர் முனையில் இருப்பவரை இழுத்துவைத்துப் பேசும் சித்திரவதைகளும் உண்டு.

வீட்டுவேலைகளை முடித்துக் கொண்டு ஓய்வெடுப்போர், உடல் நலமில்லாததால் மாத்திரை சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க நினைப்போர் எதிர் முனையில் இருக்கக்கூடும். இதைக்கூட அனுமானிக்க முடியாமல் மணிக்கணக்கில் பேசுவதை என்னவென்று சொல்வது?

எனவே, முக்கியமான விஷயங்களை சுறுக்கமாக போனில் பேசுங்கள். அவசியமில்லாமல், போர் அடிக்கிறது.. யாரிடமாவது பேசலாம் என்று தோன்றினால், நாம் அழைத்த நபர், சாவகாசமாக இருக்கிறாரா, பேசத் தயாராக இருக்கிறாரா நேரம் இருக்கிறதா என்பதை கேட்டறிந்து கொண்டு பேச்சைத் தொடருங்கள். அப்போதும் வீணாகப் பேசி நேரத்தை வீணடிக்காமல் சுருக்கமாகப் பேசி முடித்துக் கொள்ளுங்கள். இது உங்களது ஆரோக்கியத்துக்கும், பொன்னான நேரத்துக்கும் நல்லது.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 17:58

தவிர்க்கவே கூடாத விஷயம் இது…
----------
உணவு சாப்பிடுவதற்கு தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையை வகுத்துள்ளோம். இதற்கிடையில், மாலை நேரத்தில் சிறிய அளவிலான உணவுவகைகளை (நொறுக்குத் தீனி) சாப்பிடுகிறோம். மற்ற மூன்று நேரங்களில்… குறிப்பாக, உடலுக்கு புத்துணர்வைத் தரும் காலை உணவை சரியான அளவோடும், ஊட்டச்சத்து நிறைந்ததுமாய் சாப்பிடுகிறோமா என்பதுதான் கேள்வி.

காலையில், பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை, பொங்கல் என்பது எழுதப்படாத “மெனு’வாகிவிட்டது. இதில் என்ன ஊட்டச்சத்து உள்ளது? இதுபோன்ற உணவு வகைகள் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். ஆனால், அன்றைய தினம் உடலுக்குத் தேவையான புத்துணர்வு என்பது கிடைக்காது. இதற்கு மாற்றாக கேழ்வரகு இட்லி, சம்பா தோசை, கோதுமை ரவா உப்புமா, போன்ற தானியங்களை கொண்டு, பல்வேறு வகையான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

அரிசியில்தான் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அரிசியும் தானிய வகைதான், ஆனால், வாரத்துக்கு ஓரிரு நாள் தவிர, மற்ற நாள்களில் அரிசி தவிர்த்த தானியங்களை கொண்டு சமைத்த உணவைச் சாப்பிடலாமே. முடிந்தால், பழங்களில் ஏதாவது ஒன்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வகை உணவுகளைச் சாப்பிடுவதால் சரியான உடலமைப்பும், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி, இ போன்ற ஊட்டசத்துடன், அன்றைய தினத்துக்குத் தேவையான புத்துணர்வும் கிடைக்கும்.

இது ஒருபுறம் இருந்தாலும், காலை உணவையே தவிர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பலர் உண்டு. எப்படி தெரியுமா, வீட்டுவேலைப் பளு, சுவாமிக்கு பூஜை செய்யாமல் சாப்பிடுவதில்லை, காலை நேர பரபரப்பு போன்ற காரணங்களால் பெண்களில் பலரும், அலுவலகம், வியாபார விஷயமாக அவசரமாகச் செல்லும்போது ஆண்களும், அவசர அவசரமாக எழுந்து பள்ளிக்குப் புறப்படும் குழந்தைகளில் பலரும், நோய் காரணமாக முதியோர்களில் சிலரும் காலை உணவைத் தவிர்க்கின்றனர்.

இதுமட்டுமின்றி, உடல் எடையைக் குறைப்பதற்காக சிலரும் காலை உணவு சாப்பிடுவதையே தவிர்க்கின்றனர். இதனால், வயிற்றில் சுரக்கும் “ஹைட்ரோ குளோரிக்’ அமிலம் வயிறு, குடல் பகுதிகளில் உள்ள திசுக்களை பாதிக்கத் தொடங்கி, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்தான் வருமே தவிர, உடல் எடை குறையாது.

வயிற்றில் உள்ள இரைப்பைக்குத் தேவையான உணவை குறிப்பிட்ட நேரங்களில் கொடுக்க வேண்டும். இல்லையெனில், இரைப்பை சுருங்கத் தொடங்கிவிடும்.

ஒருநேரம் பட்டினி கிடந்து, மற்றொரு நேரம் சேர்த்து சாப்பிடலாம் என நினைப்பதும் தவறு. இந்த தவறை வெளியூர்களில் தங்கி படிக்கும், பணிபுரியும் ஆண்களில் பலர் செய்கின்றனர். கால தாமதமாக தூங்கி எழுந்து நேரடியாக மதிய உணவுக்கு செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

மருத்துவர்கள், மருந்து சாப்பிடும்போது மூன்று, நான்கு வேளை என குறிப்பிடுவதுபோன்று, நாமும் உணவு சாப்பிடுவதில் கடைபிடித்தால் அஜீரணக் கோளாறு நோய்களிலிருந்து தப்பலாம்.

இடையிடையே நொறுக்குத்தீனி என்ற பெயரில் கிடைப்பதெல்லாம் சாப்பிடுவதும், சுகாதாரமற்ற எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களைச் சாப்பிடுவதால் உணவுக் குழாயில் எரிச்சல் ஏற்படுவதுடன், நோய் தாக்குதலுக்கான ஆரம்ப நிலையை உருவாக்குகிறது.

அண்மையில், “இந்தியர்களின் காலை உணவு பழக்கம்’ என்ற தலைப்பில் கெலாக்ஸ் நிறுவனம் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையில் 3,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் நான்கு பேரில் ஒருவர் காலை உணவைத் தவிர்ப்பதாகவும், நாடு முழுவதும் 72 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைவாக உள்ள காலை உணவைச் சாப்பிடுவதாகவும் தெரியவந்தது. மேலும், பெண்களிடம் ஊட்டச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடுவதோடு, காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் அதிகம் காணப்படுவதாகத் தெரிவித்தனர்.

ஊட்டச்சத்து குறைவான காலை உணவை சாப்பிடுவதில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு சாப்பிடுவதில் தில்லி முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும், சென்னை மூன்றாவது இடத்திலும் (38 சதவீதம் பேர்) உள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவைச் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை பெரும்பாலானோர் அலட்சியப்படுத்துவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

உடலுக்கு எப்படி ஓய்வு தேவையோ? அதேபோல் நமது இரைப்பைக்கும் ஓய்வு தேவை. அதற்காக பட்டினி கிடக்க வேண்டியதில்லை. இரவு நேரத்தில் குறைவாக சாப்பிட்டு, இரைப்பைக்கு ஓய்வு கொடுப்போம்.

நம்முடைய உடல் ஆரோக்கியம் நம் குடும்பத்துக்கு முக்கியம் என்பதை உணர்ந்து, காலை உணவைத் தவிர்க்காமல் அளவோடும், ஊட்டச் சத்தோடும் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது.

இதில் நீங்கள் எந்த வகையில் இருக்கிறீர்கள்…

 வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 18:00

உங்கள் கையில் இருப்பது கள்ள நோட்டா?
-----------
பெரும்பாலும் நாம் நோட்டுகளை கிழிந்திருக்கிறதா என்று மட்டுமே பார்த்து வாங்குவோம். ஆனால் இப்போதெல்லாம் நாம் வாங்கும் நோட்டு உண்மையான நோட்டா என்று பார்த்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த அளவுக்கு கள்ள நோட்டின் புழக்கம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வெறும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான் கள்ள நோட்டுகளாக வந்தன. தற்போது 10 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளில் கூட கள்ள நோட்டுகள் வருகின்றன.

எனவே, பொதுவாக நமது ரூபாய் நோட்டுகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதை வைத்துத்தான், கள்ள நோட்டுகளை கண்டறிய முடியும்.

• நோட்டின் முன்பக்கத்தில் ரூபாய் நோட்டின் மைய உச்சியில் “ரிசர்வ் வங்கி’ என இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். அதற்குக்கீழ் “கியாரண்டி பை தி சென்ட்ரல் கவர்மென்ட்’ என்ற வாக்கியம் இரு மொழிகளிலும் இருக்கும்.

•  ரூபாய் நோட்டின் மேல் வலது மூலையிலும் கீழ் இடது மூலையிலும் ரூபாய் நோட்டின் எண் குறிக்கப்பட்டிருக்கும்.
•  நடுப்பகுதியில் எவ்வளவு ரூபாய் என்பது எண்ணாலும் எழுத்தாலும் இருக்கும். அதற்கு கீழே ரிசர்வ் வங்கி கவர்னர் (ஆங்கிலம், இந்தியில்) கையெழுத்திருக்கும்.

• இடது கீழ் மூலையில் அசோக சக்கரம். வலது கீழ் மூலையில் ரிசர்வ் வங்கிச் சின்னம். வலப்புறம் தேசத் தந்தை காந்தியடிகளின் உருவம், எதிர்ப்புற வெள்ளைப் பகுதியிலும் நிழலாகத் தெரியும்.

• வெளிச்சத்தில் பார்த்தால் சங்கேதக் குறியீடுகள் அடங்கிய கோடு போன்ற நூலிழை தெரியும்.

•  பின்பக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி என (இந்தியில்) குறிப்பிட்டு கீழ்ப்பகுதியில் வலது- இடது மூலைகளில் ரூபாய் மதிப்பு எழுத்தால் (இந்தியில்) எழுதப்பட்டிருக்கும்.

•  இடது புறத்தில் 15 இந்திய மொழிகளில் ரூபாய் மதிப்பு எழுத்தால் குறிப்பிடப்பட்டிருக்கும். வலதுபுறம் வெள்ளைநிற வெற்றிடப் பகுதி.

• ரூபாயின் கனம் சீரான விகிதத்திலேயே இருக்கும். தாளின் கனத்தில் லேசான சந்தேகம் வந்தாலே புகார் செய்யப்படவேண்டும்.

• புதிதாக வரும் ரூபாய் நோட்டுகளில் ரூபாய்க்கான புதிய சிம்பல் இடம்பெற்றிருக்கும். நோட்டு புதிதாக இருந்து, அதில் அந்த சிம்பல் இல்லை என்றாலும், ரூபாய் நோட்டின் நடுவில் கீழே, நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு இல்லாமல் இருந்தாலும் அதனை நல்ல நோட்டா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 18:03

இணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்
--------------
தற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும், அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால், அதன் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது, பார்க்க முடியாத விஷயங்களே இல்லை, எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இணையம் வாயிலாக படிப்புகளை வழங்கி வருகிறது, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும், பேச முடியும், எங்கோ ஒரு தலைவர் பேசுவதை இணையத்தின் மூலமாக உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என இணையத்தைப் பற்றிய நல்ல விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால், இந்த நல்ல விஷயங்களில் ஒன்றையாவது நமது இளைய சமுதாயம் பயன்படுத்திக் கொள்கிறதா? செல்பேசியில் சிக்கி சீரழிந்த நமது இளைஞர்கள், தற்போது, செல்பேசியில் இணைய சேவையைப் பெற்று மேலும் வேகமாக அழிவுப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இணையமும், தொலைத்தொடர்பும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படும் என்ற எண்ணம் தற்போது மறுக்கப்பட்டு, இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கே இதுதான் காரணமாக உருமாறிவிட்டது.
படிப்புக்காகவும், செய்திகளை அறிந்து கொள்ளவும், செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் எத்தனை இளைஞர்கள் கம்ப்யூட்டரையோ, மொபைலையோ பயன்படுத்துகிறார்கள்.. மிகச் சிலரே. அதற்கு பதிலாக பேஸ்புக் எனப்படும் இணையத்தில் அல்லவா தங்களது வாழ்நாளை எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பொறியியல் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு படிப்புகளில் படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து வேலை செய்யும் இளைஞர்களிடம் சமுதாயத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. தற்போது சமுதாயம் சந்திக்கும் அவலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்த விஷயம் பூஜ்யமாகத்தான் இருந்தது.

இது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டால் சாதாரணம் தான். ஆனால், நமது இளைய சமுதாயத்தின் பொது அறிவுக்கு இவர்கள் ஒரு உதாரணம் என்று எடுத்துக் கொண்டால் அது சமுதாயத்தின் அசாதாரண விஷயம் என்பது தெரிய வரும்.

சமுதாயத்தில் தற்போதிருக்கும் ஒரு அவல நிலை குறித்துக் கூட இளைஞர்கள் தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. இதற்கு உடனடி காரணத்தையும் பலர் வைத்திருக்கிறார்கள். அதாவது, அதிகப்படியான கல்விச் சுமையை காரணம் கூறுகிறார்கள். கல்விக் சுமை காரணமாக செய்தித் தாள் படிக்க முடியாமல் போகும் அதே இளைய சமுதாயம், மொபைலில் பேசவோ, பேஸ்புக் அப்டேட் செய்யவோ தவறுவதில்லை.

நூறில் 25 சதவீதத்தினர் செய்தித்தாள் படித்தால், நூற்றுக்கு நூற்று ஐம்பது பேர் பேஸ்புக் தொடர்பில் இருக்கிறார்கள். பேஸ்புக்கிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் யார் பார்ப்பது? நமக்குத் தேவையானது, நமது நண்பர்களைப் பற்றி கிண்டல் செய்வதும், நமது அழகான புகைப்படங்களை அப்டேட் செய்து அதற்கு பல நூறு லைக் பெறுவதுமே.

இதெல்லாம் இளைய சமுதாயத்தின் பொழுதுபோக்கு அம்சங்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் இது ஒரு போதையாக மாறிவிடக் கூடாது. இதனால் எதிர்காலமே சூன்யமாகிவிடக் கூடாது என்பதுதான் தற்போதைய கவலை.
இணையத்தின் மூலம் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு செய்தியையாவது படிப்பதையும், ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்வதையும், படிப்பு மற்றும் பணி நிமித்தமான விஷயங்களை படித்து உங்களை அதற்கேற்ற வகையில் உருவாக்கிக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் படித்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து உங்களை அறிவுஜீவியாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வழி பின்பற்றி உங்கள் நண்பர்களும் வருவார்கள்.

பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் கல்லூரி படிப்பு மட்டுமே வாழ்க்கையின் லட்சியத்தை அடைய போதுமானதாகாது என்பதை நினைவில் கொண்டு இனியாவது இணையத்தை முன்னேற்றப் பாதையில் பயன்படுத்துவோம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 18:10

வயிறு நிரம்புகிறது, உடம்போ பட்டினி கிடக்குது
--------------

ஆரோக்கியமான உணவுஉணவுசத்தான உணவுசாப்பாடு
மனித இனத்தின் முதல் எதிரி நாக்குதான். பலரும் நாக்கு ருசிக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டா மனசும் வயிறும் நிரம்பிவிடும். ஆனா உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைக்கிறதா என்று பலரும் யோசிப்பதே இல்லை.

நம் முன்னோர்கள் ரொம்பப் புத்திசாலிகள். எல்லாச் சத்துகளும் உரிய அளவில் கிடைக்கும் வகையில்தான் உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தனர். ஆனால் காலப் போக்கில் மேற்கத்திய நாகரீகத் தாக்கம், பொருளாதார, சமூக நிலையில் ஏற்படுள்ள அதிவேக மாற்றங்களால் நமது உணவுப் பழக்க வழக்கத்திலும் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மண் பானையில் சாதம் வடித்தால் நல்லதுதான். அதற்காக தற்போது மண் பானையைத் தேடி அலைய முடியாது. மண் பானைச் சமையல் நடைமுறைக்கும் ஒத்துவராது.

ஆனால் நாம் என்ன சாப்பிடுகிறோம். அதில் என்னென்ன சத்து இருக்கிறது. உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சத்து நம் உணவில் இடம் பெற்றுள்ளதா என்பதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. ஏதோ “வெந்ததைத் தின்னு விதி வந்தால் சாவோம்’ என்ற நிலையில்தான் காலத்தைத் தள்ளிக்கொண்டு இருக்கிறோம். ”

கையில வருது; வாயிலே போகுது; வயிறு ரொம்புது ஆனா உடம்பு மட்டும் பட்டினி கிடக்கு’. நம்மில் பெரும்பாலானோரது நிலை இதுதான். பிடித்ததை விரும்பி வயிறு முட்டச் சாப்பிடுகிறோம். உடலுக்குத் தேவையான சத்து அதில் உள்ளதா. அதனால் உடல் நலத்துக்கு நன்மையா? கெடுதலா எனக் கவலைப்படுவதில்லை. இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் உரிய விகிதத்தில் கிடைப்பதில்லை.

ரோடு மோசமாக இருக்கும்போது காரை எவ்வளவு சிறப்பாக சர்வீஸ் செய்தாலும் பயன் இல்லை. அதுபோல் நோய் வந்து எவ்வளவு சிறப்பாகச் சிகிச்சை அளித்தாலும் சமச்சீரான உணவு சாப்பிட்டு உடல் நலத்தைப் பேணிக் காக்காவிட்டால் உரிய பலன் இல்லை. நோய் திரும்பவும் தாக்கும்.

உடலின் தேவையின் அடிப்படையில் ஊட்டச் சத்துகள் இரு வகையாகப் பிக்கப்பட்டுள்ளது. அவை பெரிய ஊட்டச்சத்துகள் (Macro Nutrients). சிறிய ஊட்டச்சத்துகள் (Micro Nutrients). கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), புரதம், கொழுப்பு ஆகியவை பெரிய ஊட்டச்சத்துகளாகும். பெரிய ஊட்டச் சத்துகள் உடலுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது. உடல் இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எரிசக்தியாக இவை செயல்படுகின்றன. வைட்டமின் மற்றும் தாதுப்பொருள்கள் சிறிய ஊட்டச்சத்துகள் ஆகும். இவை உடலுக்குச் சிறிதளவே தேவை என்றாலும் உடல் இயக்கத்துக்கு மிக மிக அவசியமானது.

சத்துகள் அல்லாத பிற பொருள்கள்: நமது உணவில் ஊட்டச்சத்துகள் அல்லாத பிற பொருள்களை வாசனை, ருசி, செரிமானத்துக்காகச் சேர்க்கிறோம். பூண்டு, சீரகம், வெந்தயம் போன்ற பொருள்கள் ஊட்டச்சத்துகள் ஆகாது. ஆனால் இப் பொருள்களில் வாசனை மட்டுமின்றி சில மருத்துவக் குணங்களும் உள்ளன.

உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்: புரதச் சத்து அடங்கிய உணவுகள் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. (உதாரணம்) பருப்பு, பயறு வகைகள் பால், இறைச்சி, மீன், பறவை இறைச்சி, போன்றவற்றில் புரதச் சத்து அதிகமாக உள்ளது.

உடலுக்குச் சக்தி அளிக்கும் உணவுகள்: கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவுகள் உடலுக்கு சக்தி அளித்து செயலாற்றச் செய்கின்றன. அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகள், சர்க்கரை, கிழங்கு வகைகள் ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது.

உடலைப் பராமரித்து பாதுகாக்கும் உணவுகள்: வைட்டமின்கள், தாதுப் பொருள் அடங்கிய உணவுகள் உடலைப் பாதுகாத்து பராமரிக்கின்றன. காய், கனிகள் மற்றும் பால் போன்றவற்றில் வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் உள்ளன.
இந்த உணவு வகைகள் உரிய விகிதத்தில் கலந்திருப்பதே சமச்சீரான உணவு. சத்துகள் சமவிகிதத்தில் கிடைக்கும் வகையில் நமது அன்றாட சாப்பாடு அமைய வேண்டும்.

எனவே, சாப்பிடும் உணவை சத்தான உணவாக இருக்கும்படி அமைத்துக் கொள்வோம்.. ஆரோக்கியத்தை காப்போம்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 18:12

தாயின் மனநிலையை கருவிலேயே அறியும் குழந்தை
-------------------

பொதுவாக நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதை நம்முடன் நெருங்கிப் பழகியவர்கள்தான் எளிதில் கண்டறிய முடியும். சில சமயங்களில் அவர்களால் கூட நமது கோபத்தையோ, அழுகையையோ புரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது.

ஆனால் ஒரு தாய் எந்த மனநிலையில் இருக்கிறாள் என்பதை, அவளது கருவில் உள்ள குழந்தை நன்கு அறிந்திருக்கும். இது பழங்காலத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. அதனால்தான், கர்ப்பிணிகள் அழக் கூடாது. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக பூ முடிப்பு, வளைகாப்பு போன்ற சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

குழந்தையை கருவில் சுமந்திருக்கும் போது தாயின் மனநிலை எவ்வாறு இருந்ததோ அதனை பிறந்த குழந்தை பிரதிபலிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஏதோ ஒரு வகையில் தனது தாயின் மனநிலையை அறிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தைக்கு, தனது தாய் ஏதேனும் மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தால் அந்த நேரத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சியிலும் சற்று மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அழுது கொண்டே இருப்பது, ஒரு விஷயத்தை நினைத்து பயப்படுவது, மகிழ்ச்சியாக இருப்பது, தைரியமாக பிரச்சனையை எதிர்கொள்வது போன்று எந்த விதமான உணர்வை தாய் அதிகமாகக் கொண்டிருந்தாலோ, அந்த உணர்வின் பாதிப்பு குழந்தை பிறந்த பிறகு ஓராண்டு வளர்ச்சியில் தெரியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கருவுற்ற காலத்தில் மிகவும் மகிழ்ச்சியான நாட்களுடன் கழித்த பெண்ணிற்குப் பிறகும் குழந்தைக்கும், மிகவும் மன அழுத்தத்துடன் கர்ப்ப காலத்தை சந்தித்த பெண்ணிற்கும் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் அதிக வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால்தான் கர்ப்பக் காலத்தில் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள். மேலும், தாயின் மன நிலையை குழந்தை எவ்வாறு தெரிந்து கொள்கிறது என்று ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

வாணிஸ்ரீ சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 18:13

ராஜாஜியின் அதிரடி
-------------
தண்டி யாத்திரையைக் காந்தியடிகள் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் “வேதாராண்யம்’ நோக்கி உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தத் தொண்டர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை யாரும் வரவேற்கவோ, உபசரிக்கவோ கூடாது என ஆங்கில அரசு தடை விதித்திருந்தது. அப்படியும் ஒரு காந்தியவாதி ஓர் இரவு தன் வீட்டில் அனைவருக்கும் உணவு அளித்தார்.

பசியோடிருந்த தொண்டர்கள் ஆவலுடன் உணவு உண்டனர். அப்போது ஒரு தொண்டர், “”இந்தப் பாயசத்தில் இன்னும் கொஞ்சம் இனிப்பு சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார்.

அவரருகே இருந்த ராஜாஜி சட்டென அவரைப் பார்த்து, “”இப்படி நாக்கு ருசி உடையவர்களெல்லாம் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தேவையில்லை” எனக் கூறி அவரை வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 18:14

பேச்சைக் குறைத்து ஆயுளைக் கூட்டுவோம்
-----------------
பேசுவதைக் குறைத்துக் கொண்டால் எவ்வாறு கதிர்வீச்சில் இருந்து தப்பிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம். ஆம். செல்போனில் பேசுவதைக் குறைத்துக் கொண்டால் கதிர்வீச்சில் இருந்து நிச்சயம் தப்பித்துக் கொள்ளலாம்.

அதாவது, செல்போன் பேசும் போது அதில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்குகின்றன. இதனால் மூளை மற்றும் தலைப் பகுதிகளில் ஏராளமான பிரச்னைகளும், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதுபோன்ற அபாயத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் செல்பேசியில் மணிக்கணக்கில் பேசுவதைத் தவிர்க்கலாம்.

ஆனால், நீங்கள் செல்போன் பயன்படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் கையில் வைத்திருக்கும் செல்பேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் நம்மை பாதிக்கவே செய்யும்.

நம்மூர்களில் அதிகரித்து வரும் செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் தான் சின்னஞ்சிறு குருவி வகைகள் காணாமல் போய்விட்டன என்பதை மனிதன் மிக தாமதமாகவே அறிந்து கொண்டுள்ளான். ஆனாலும், அதற்காக எந்த முயற்சியையும் அவன் எடுக்கப்போவதில்லை.

எப்படியாகினும், செல்போன் கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழி முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
செல்பேசியில் பேசுவதை முடிந்த அளவுக்கு தவிருங்கள். அலுவலகம் மற்றும் வீடுகளில் லேண்ட்லைனைப் பயன்படுத்தலாம். மேலும், ஹெட் போன் போன்றவற்றையும் பயன்படுத்துவதால் பாதிப்பு குறையும்.

நண்பர்களுடன் வீண் அரட்டை அடிக்க வேண்டும் என்றால், அதற்கு குறுஞ்செய்தி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளிடம் செல்போனைக் கொடுக்க வேண்டாம்.

செல்பேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேச வேண்டாம். அவ்விடங்களில் கதிர் வீச்சு பாதிப்பு அதிகம் ஏற்படும்.

தூங்கும் பொழுது போனை அருகிலேயோ, தலைக்கு அருகிலோ வைத்து கொண்டு தூங்கும் பழக்கத்தை உடனடியாக விட்டுவிடுங்கள். செல்பேசி என்றில்லை, எந்த எலக்ட்ரானிக் பொருளையும் தலைக்கு அருகில் வைக்காதீர்கள்.
ஒருவரை நாம் செல்பேசியில் அழைக்கும் போது அவர் பேச எடுத்தவுடன் காதில் வையுங்கள். ரிங் போகும் போது கையில் வைத்து அதனை பார்த்துக் கொண்டிருப்பது நல்லது. ரிங் போகும் போதுதான் அதிக கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுகிறது.
கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

செல்பேசியில் பேசும் பொழுது கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். அதிகம் மூடியபடி பேசினால், கதிர்வீச்சு அதிகமாகத் தேவைப்படும் நிலை ஏற்படலாம்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 18:16

குழந்தைகளையும் தாக்கும் மனச்சோர்வு
---------------
மனச்சோர்வு என்பது பெரியவர்களை மட்டும் அல்ல, சிறார்களையும், இளம் வயதினரையும் கூட தாக்குகிறது. ஆனால், மனச்சோர்வுக்கான அறிகுறிகள் தெரிந்தும், பெற்றோரும், ஆசிரியர்களும், அவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள், அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படாது என்று தவறாக கருதி விடுகின்றனர்.

ஆனால், உண்மை அவ்வாறு இருப்பதில்லை. பல்வேறு காரணிகளால் சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் கூட மனச்சோர்வு ஏற்படுகிறது.

மனச்சோர்வுற்ற சிறாருக்கும், பதின்மவயதினருக்கும் பரிவு நிச்சயமாகத் தேவை. ஆனால் அது மட்டுமே போதாது. மேலும், வீட்டில் உள்ள பிரச்னைகள் சில நேரங்களில் மனச்சோர்வுக்கு காரணமாக இருக்கலாம். பெரும்பாலான இளைஞர்களுக்கு வெளிவட்டார பழக்க வழக்கம், சுற்றுச்சூழல் காரணமாகவும் மனச்சோர்வு ஏற்படுகிறது. எனவே, நமது வீட்டில் இருந்து கிளம்பும் குழந்தைகள் சந்திக்கும் நபர்கள், அவர்களது அனுபவங்களை நாம் காது கொடுத்து கேட்க வேண்டும்.

சிறுவருக்கோ, இளைஞருக்கோ மனச்சோர்வு இருப்பது தெரிய வந்தால், அதற்கான காரணங்களை கண்டுபிடித்து அதனை மாற்ற முயற்சிகள் எடுத்தால் மனச்சோர்வில் இருந்து விடுபட நாம் உதவுவதற்கு வழி ஏற்படும். மனச்சோர்வு என்றதும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.

அன்பாகப் பேசி, அவர்களது குறையை எடுத்துக் கூறாமல், அவர்களது நிறைகளை எடுத்துச் சொல்லி, அவர்களிடம் இருக்கும் நற்பண்புகளையும், அதனால் அவர்களை மிகவும் பிடிக்கும் என்பது போன்ற வார்த்தைகளையும் இதமாகப் பேச வேண்டும்.

மனச்சோர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகக் கூறி அவர்களுக்கு நாம் பெரிய பிரச்னையாகிவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Dec 2015 - 15:01

3 பிஸினெஸ் தந்திரங்ள்
கொஞ்சம் பெருசுதான் படியுங்கள்
ஒரு 5 நிமிடம்!!
******★*****************************************-**

1⃣ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன. கூட்டம் கூடி விட்டது.வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?" அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.
அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார். அதோடு " தம்பி 
இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார். மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.
முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைது சென்று விட்டனர். அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார். 
பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"

2⃣.பிசினஸ் தந்திரம்

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.
அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

3⃣பிஸினெஸ் ரகசியம்

சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாயகேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித். அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!
கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹாரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார். ஹாரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். சித் உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹாரி பதிலுக்கு கத்துவார். சித் கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!
நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மகா சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு. அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by சுறா Thu 10 Dec 2015 - 11:22

அடடா கடைசி மூன்று பிசினஸ் தந்திரங்களும் அருமை அருமை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 10 Dec 2015 - 12:33

சுருக்கமாக ஏமாத்தி வியாபாரம் செய்யச் சொல்றிங்க இது அனியாயமாகும் யாரும் பின்பற்றாதிங்கப்பா


அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 17:31

இன்றைய உண்மைகள்...!!!

1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு.

8. சாராயம் நிறைந்து கிடக்கு. குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.

9. முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் நண்பர்களே அதிகம்.

10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 17:45

இன்றைய உலகில் மாணவர்களின் உளவியல் நிலை பற்றி ஓர் பார்வை
---------------------------------
இன்றைய எமது சமுதாயத்தில் அரங்கேறிவரும் சமுகவிரோதச் செயல்கள் பற்றி அலசி ஆராய்வோம் எனில், எம் அனைவருக்கும் சங்கடம் தரும் நிலையே தோற்றம் பெற்றிருக்கின்றது. இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என வெற்றிக் களிப்புடன் கோஷமிட்டுக் கொண்டிருக்கும்  அனைவருக்கும் பேரதிர்ச்சி தரக் கூடிய நிலையையே இன்றைய இளம் சமுதாயம் எதிர்நோக்கி  உள்ளது. ஆழிவின் விளிம்பில் நின்ற வண்ணம் செய்வதறியாது நிலைதடுமாறி நிற்கின்றார்கள் எம் நாளைய தலைவர்கள். இந்த அவல நிலை தோற்றம் பெற அடிப்படைக்காரணி எதுவென ஆராய முனைகையில் என் மனதில் நிழலாடிய அனுமாணமே மாணவர் சமதாயத்தின் உளவியல் சார் தாக்கங்கள்.ஆம் இன்று நாம் வாழும் பூமி குற்றம் தனின் உறைவிடமாக உருப்பெற்றுள்ள இந்த அவல நிலையிலே அக்குற்றங்களுக்கு தூண்டிகளாகவும் பொறுப்பாளிகளாகவும் எம் மாணவர் சமுதாயம் மாறியுள்ள நிலை எம்மை அச்சத்திலும் மீளாத் துயரிலும் ஆழத்தியுள்ளது. இந்நிலை பலரால் விமர்சனத்திற்கு உள்வாங்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதன்று என மறுக்கப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டாலும் இதுவொரு நிதர்சனமான உண்மை. 

இக்கசப்பான உண்மை தன் பின்னணி வலுப்பெற ஏதுவாய் அமைந்த களமே மாணவ சமுதாயம் எதிர்நோக்கியிருக்கும் உளவியல் சார் பாதிப்புக்கள். இன்றைய இலத்திரனியல் உலகமானது தொழில்நுட்பம்தனின், இராஜாங்கமாக விளங்குகின்றது. இன்றைய உலகின் ஒவ்வொரு மாணவனும் எளிதில் இவ் இலத்திரனியல் உலகினுள் உள்வாங்கப்பட அவனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் வசதிகள் யாவும் அவர்கள் பெற்றோர்களாலேயே உருவாக்கிக் கொடுக்கப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான வசதிகள் செய்து தரப்படுவது தமக்கான சமுக அந்தஸ்தை நிலைநாட்டும் ஓர் விடயமாகவும் உணரப்படுவது யாம் அறிந்ததே. அதன் விளைவு இன்று ஆரம்பக்கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் கைகளில் கூட தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டிருக்கும் வகை வகையான செல்லிடத் தொலைபேசிகள் தவழ்வதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. பெற்றோர் தம் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்த இணையம் என்னும் புரட்சி உலகம் உசாத்துணை நூல்களாக விளங்கும் என அனுமானித்தே இவ்வாறான இலத்திரனியல் வசதிகள் அனைத்தையும் தம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இணையம் என்ற பாரிய உலகின் வாசல்கள் மாணவருக்குத் திறக்கப்படுகின்றன. 

சூழ்நிலைகளை சரியாக கைக் கொள்ளும் ஓர் முதிர்ச்சியடைந்த மனப்பக்குவம் மாணவரிடையே தோற்றம் பெறாத பருவத்திலேயே அவர்கள் இப்பரந்த உலகிற்குள் உள்வாங்கப்படுவதால் பெரும்பாலான மாணவர்கள் இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் ஆக்கத்திற்கான பாதையை விட்டு அழிவிற்கான பாதையை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர், விளைவு தாம் ஆட்சி செய்ய வேண்டிய விஞ்ஞான உலகம் தம்மை  ஆட்சி செய்யும் அவல நிலைக்கு வித்திட்டு அதற்கு அடிமையாகும் நிலைக்கு ஆழாகின்றனர். தவறான நிலையில் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தும் மாணவருக்கு புதிய புதிய பிரச்சனைகள் தோற்றம் பெறகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அவற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவோ,பாதுகாத்துக் கொள்ளவோ தேவையான முதிர்ச்சி நிலையானது போதுமற்றதாக மாறிவிடும் பட்சத்திலும் பெறியவர்களிடம் இதைப்பற்றி ஆலோசிக்க தலைமுறைப் பாகுபாடு, அவர்களின் பிரச்சனைகளை பெரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவர அவர்களை மட்டுப்படுத்தும் வேளையிலும் அவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.தனிமையெனும் இருள் அவர்களை சூழ்ந்து கொள்கின்றது. 

தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும், அவற்றின் பாதிப்புக்களையும் பற்றி அவர்கள் இடைவேளை இல்லாது மீண்டும் மீண்டும் சிந்தித்துக் கொண்டிருப்பதன் விளைவு அவர்கள் முயற்சிக்கும் காரியங்கள் அனைத்திலும் கவனச்சிதறல்களால் தோல்விகளை வழமையாக்கிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் மனதில் விரக்தி தோற்றம் பெறும். விளைவு அவர்கள் சமுக விரோத செயல்கள், வன்முறைகள் வழிச்சென்று தத்தம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முனைவர் அல்லது அதீத விரக்தியால் தம்மை அழித்துக் கொள்ள முயல்வார்கள். இவ்விரண்டில் எவ்வழி  தெரிவு செய்யப்பட்டாலும் இழப்பு சமுதாயத்திற்கே. நாளை எம் நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரு பிரஜையை – தலைவனை நாம் இழந்து விடுகின்றோம்.

இன்றைய எம் சமுதாயத்தில் பொருளாதாரரீதியில் பல நெருக்கடிகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக அநேகர் தம் வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் உழைப்பு மற்றம் பணம் போன்றவற்றை முதன்மைப்படுத்தி போட்டி உலகில் தம் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முனைகின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காகவும் தம் குடும்பத்திற்காகவும் ஒதுக்கும் நேரத்தை மிகச் சொற்பமாக மட்டுப்படுத்துகின்றனர். இன்னும் சிலர் அவ்வாறு சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் விளைவு பெற்றோர் தம் பிள்ளைகளுடன் தங்கள் நேரத்தை செலவிட்டு அவர்கள் தேவைகள், பிரச்சனைகள் என்பவற்றிற்கு செவிமடுத்து அவர்களின் நல்ல நண்பர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டிய தம் கடமைமையில் இருந்து தவறுகிறார்கள். ஒரு குழந்தைக்கு கிடைக்க வேண்டிய  அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு என்பன அவர்களுக்கு எட்டாக் கனியாகிவிடுகின்றன.

இன்றைய கல்விச் சமுகமானது சிறந்த பெறபேறுகளையும் உயர்ந்தபட்ச மதிப்பெண்களையும் மாத்திரமே ஏக குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்ற பரிதாபகரமான சூழ்நிலையை காணமுடிகின்றது. கல்வியினை ஒரு நிலையான செல்வமாக கருதும் நிலை மாறி தமது சமுக அந்தஸ்தினை மதிப்பிடும் ஓர் காரணியாகவே இன்றைய காலகட்டத்தில் கல்விச் சமுகத்தாலும் பெற்றோராலும் உணரப்படுவது,மிகவும் விசனம் தரக்கூடிய ஒரு விடயமாகும். இதன் காரணமாக மாணவர்கள் தம் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களை இலக்காக்கிக் கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். மேலும் பலரது அபிப்பிராயப்படி கல்வியானது மாணவர்கள் மேல் திணிக்கப்படுகின்றது. இதனால் கல்வி கசப்பான அனுபவமாகவே மாணவர்களால் நோக்கப்படுகின்றது.

பாடசாலை விட்டு வீடு வந்தவுடன் தனியார் வகுப்புக்களும் தம் கைவரிசையை வெளிக் கொணரத் தவறுவதில்லை. தனியார் வகுப்புக்களில் ஆண்,பெண் என இருபாலரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்புக் கிட்டுகின்றது. இந்த சூழ்நிலைக்கேற்ப தம்மை சரிவர இசைவாக்கம் செய்யத் தவறும் மாணவருக்கு பிரச்சனைகள் தோற்றம் பெறுகின்றன. தொடர்ச்சியான தனியார் வகுப்புக்கள் காரணமாக பெற்றோருடன் உறவாட போதிய நேரம் இல்லாமையாலும், பாடசாலையில் கடைப்பிடிக்கப்படும் கடுமையான சட்ட திட்டங்களுக்குப் பயந்தும் தம் பிரச்சனைகளை பெரியோருக்கு தெரிவிப்பதில் மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். வீட்டில் பெற்றோருடனான ஓர் குழந்தையின் உறவும; பாடசாலையில் ஆசிரியர் ஒருவருடனான ஓர் மாணவனின் உறவும் தளர்வடைந்த நிலையில் காணப்படுவதை இன்று பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இது விமர்சனத்திற்குரிய ஒரு விடயமாகும்.ஒரு மாணவனின் தனிப்பட்ட முன்னேற்றத்திலும், ஒரு சமுகத்தின் முன்னேற்றத்திலும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திலும் கல்வியானது அத்தியவசியமானதொன்று என்பதை மறுக்க முடியாது. ஆனால் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேயளவு ஓர் மாணவனின் உளநலமும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றே.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் அதே போல் ஒரு மாணவனின் உள நலம் விருத்தியடைந்திருந்தால் தான் அவனால் நாளை நாட்டிற்குத் தேவைப்படும் ஒரு நல்ல தலைவனாக உருவாக முடியும். ஓவ்வொரு மாணவனும் தனித்துவம் வாய்ந்தவன். ஆதலால் ஒவ்வொரு மாணவனின் திறமையறிந்து அதற்கேற்ப அவனை தயார் செய்ய வேண்டும். சமுக அந்தஸ்து மற்றும் பல்வேறு சமுகப்பிரிவினைகளை மையமாகக் கொண்டு மாணவர்கள் கையாளப்படும் விதம் இன்றும் இலைமறைகாயாக ஆங்காங்கே அரங்கேறி வருகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலே மாணவர்கள் மனதில் தாழ்வு மனப்பாங்கு மற்றும் விரக்தி வித்திடப்படுகின்றது. அவர்களின் ஆளுமைவிருத்தி மழுங்கடிக்கப்படுகின்றது. இது விரும்பத்தக்க விடயமன்று, சீர் செய்யப்பட வேண்டிய விடயம். இவ்வாறான மாற்றத்தை உருவாக்க கல்விச் சமுகம், பெற்றோர்; பெரியோர் அனைவரும் ஒருமனதினராய் செயற்பட வேண்டும்.

 

' சரியாகும் சமுதாயம் தனியொருவன் கையில்

 தனிமனிதன் தான் தன்னை சரிசெய்யும் நிலை வேண்டும்' 

ஆதலால் சமுதாயத்தின் அங்கங்களான நாம் அனைவரும் எங்கள் தவறுகளை இனங்கண்டு அவற்றை சீர் செய்வதோடு சமுதாயத்தின் வளர்ச்சியிலும், நாளைய தலைவர்களான இன்றைய மாணவ சமுகத்தின் உருவாக்கத்திலும் அக்கறை கொண்டவர்களாய் எம் கடமைகளை சரிவர ஆற்றி விஞ்ஞானத்தை ஆக்கத்திற்கு வித்திட்டு வடுக்களும் - வலிகளும் நிறைந்த எம் கடந்த கால கசப்பான நினைவுகளை அத்திவாரமாகக் கொண்டு புதியதொரு வரலாறு படைப்போம், புதியதொரு உலகினை உருவாக்குவோம்.

                                       நிக்கலின் ஸ்ரனிஷா அன்ரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum