சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Today at 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Khan11

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

+2
நண்பன்
சே.குமார்
6 posters

Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by சே.குமார் Sun 20 Sep 2015 - 17:52

சில பல நிகழ்வுகள் கொடுத்த வேதனைகளின் காரணமாக கடந்த பத்து நாட்களாகளுக்கு மேலாக வலைப்பக்கம் வரவில்லை. எதையும் வாசிக்கவும் இல்லை.... எழுதவும் இல்லை. அண்ணன் கில்லர்ஜி கூட மனசு குமார் கூட சுற்றினேன் என பதிவுகள் எல்லாம் போட்டிருக்கிறார். எனக்குத்தான் எங்கும் சுற்ற மனசே இல்லை. ஊருக்குப் போன் பேசவும்... இணையத்தில் படம் பார்க்கவும் என பொழுதைப் போக்கினேன்.  என்றோ எழுதி வைத்த ஒரு கவிதையை நேற்று தளத்தில் பகிர்ந்தேன். என்னடா இவன் நம்ம பக்கமே ஆளைக் காணோம் என்று நினைக்காமல் எப்பவும் போல் உறவுகள் அனைவரும் வந்து வாசித்து கருத்து இட்டிருந்ததைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.  நான் தங்கள் பக்கம் வரவில்லை என்று எண்ணாதீர்கள் இப்போதும் சிலரை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கருத்துக்கள் பதியும் மனநிலை இன்னும் வரவில்லை... எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையோடு நகர்கிறது வாழ்க்கை. விரைவில் மீண்டு வருவேன்...
********

பாயும் புலி பார்த்தேன்... போலீஸ் கதை... விஷால் இப்போ நடிகர் சங்கத்துக்குள் நான் தனி ஒருவன் என சவால் விட்டுக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். வந்தேறிகள் ஆளத்தானே தமிழகம் இருக்கிறது... அடுத்து இவரும் கட்சியை ஆரம்பிப்பார்... ஆட்சியைப் பிடிக்கும் ஆசையோடு காய் நகர்த்துவார் என்பதை அவரது தற்போதைய அதிரடிகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. சரி வாங்க புலி பாய்ந்ததான்னு பார்ப்போம். 
மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா 04-1441367177-paayumpuli--021-600

கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம்... போலீஸ் விஷாலுக்கும் பணக்காரர்களை மிரட்டி பணம் பறித்துக் கொல்லும் கும்பலுக்கும் இடையில் நடக்கும் போராட்டாம்... ஆரம்பக் காட்சிகள் விறுவிறுப்பாய் போனாலும் படம் நகர ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக படுத்துவிடுகிறது. அண்ணன்தான் அந்தக் கும்பலின் தலைவன் என்று தெரிய வரும் போது இன்னும் விறுவிறுப்பாகும் என்று நினைத்தால் ஒரு சாதாரண சண்டைக்காட்சியில் குடும்பமே அவனைக் கொல்லு என சொல்லிவிட இறுதிப் போராட்டத்தில் அண்ணனைக் கொன்று போலீஸ் கையில் கொடுக்காமல் பாலத்துக்கு அடியில் மறைத்து பத்தோடு பதினொன்றாக தொழிலதிபர் பணம் பறிக்கும் கும்பலால் கொல்லப்பட்டார் என முடித்து வைக்கிறார்கள். காஜல் வந்து போகிறார்... சூரி நகைச்சுவை என கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். டப்பு டப்பு என்று துப்பாக்கிச் சத்தம் மட்டும் கேட்க்கும் திரைக்கதையில் போலீசுக்கான மிடுக்கு இல்லை.
********

32ஆம் அத்தியாயம் 23ஆம் வாக்கியம் என்ற மலையாளப் படத்தை பொழுது போகாமல் டவுன்லோட் பண்ணிப் பார்த்தேன். கதைகளுக்காகவே மலையாளப் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  23 என்ற எண்ணை வைத்து வெளிவந்த ஆங்கிலப் படமான ஜிம் கேரியின் 'த நம்பர் 23' படத்தின் கதையைத் தழுவித்தான் எடுத்திருக்கிறார்கள். மாமா என்று அழைக்கப்படும் லால் தவிர காதல் தம்பதிகளான நாயகன் நாயகிக்கு உறவுகள் தொடர்பில் இல்லை. நாயகன் அநாதை இல்லத்தில் வளர்ந்தவன்... நாயகிக்கு அம்மா அப்பா இருந்தும் தொடர்பில் இல்லை. காதல் வாழ்வின் முதல் வருட திருமண நாளைக் கொண்டாட யூ.எஸ்ஸில் இருந்து வரும் நாயகன் மனைவி அலுவலகம் செல்ல பொழுது போகாமல் மனைவியின் தோழி கொடுத்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கிறான். 
மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா 32a

கதையின் நாயகன் ஜான் ரேயனாக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள் என்று ஆசிரியர் எழுதி கதையை ஆரம்பிக்க இவனும் அப்படியே நினைக்க... கதையின் நிகழ்வுகளை அவன் வாழ்வுக்குள் புகுத்திப் பார்க்கிறான். மனைவியை சர்ச்சுக்கு கூட்டிப் போகும் போது கல்லறையில் ஒரு மனிதனைப் பார்த்து போட்டோ எடுக்க, அவன் இவனிடம் சண்டைக்கு வர, அப்போது வந்து தடுத்த சிலர் அவன் அமர்ந்திருக்கும் கல்லறைக்குள் இறந்த பெண் இல்லை... அவளின் பிணம் கிடைக்கவில்லை என்று சொல்லி வைக்க, கதையோடு இறந்த பெண்ணின் கதையும் பயணிக்க, அவளது உடலைத் தேடிப் போகிறான். திரில்லராக பயணிக்கும் படத்தில் அவளைக் கொன்றது நாயகனா அல்லது வேறு யாருமா என்ற சஸ்பென்சை இறுதியில் உடைத்திருக்கிறார்கள். படம் பார்க்கலாம்.
********

ரண்டு சிறுகதைப் போட்டிக்கான கதைகளை ஒரு வழியாக அனுப்பிவிட்டேன். இன்னும் கல்கி குறுநாவல் போட்டிக்கான கதையை எழுதவில்லை.... இந்த வாரத்தில் வரும் பக்ரீத் விடுமுறையில் எப்படியும் எழுதி 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் நமது வலைப்பதிவர் விழாவுக்கான கட்டுரைப் போட்டிகளிலாவது கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மனநிலை மாறும் பட்சத்தில் வலைப்பதிவர் விழாவிற்கான கட்டுரைகளை எழுதும் எண்ணம்... பார்க்கலாம்.
********

லைப்பதிவர் மாநாடு குறித்த பகிர்வுகள் நண்பர்களின் தளங்களில் வெளியாகி வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த வேளையில் தினமணி மற்றும் தீக்கதிரில் செய்தி வெளியாகியிருக்கிறது என்ற பகிர்வை வலைப்பதிவர் விழாவுக்கான பிரத்யோக வலைப்பதிவில் பார்த்ததும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது. ஊரில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்து வெற்றி விழாவாக ஆக்க வேண்டும் என்பதே எனது ஆசை. கண்டிப்பாக சிறப்பாக நடக்கும்.... நடத்திக் காட்டுவோம். வலைப்பதிவர் விழாவுக்கான பிரத்யோக வலைப்பக்கம் வாசிக்க... BLOGGERS MEET-2015
********

சேனையின் நண்பர் திரு. ராஜசேகர் அவர்களின் முதல் படைப்பான ஜிப்பா ஜிமிக்கி படத்தின் பாடல்கள் குறித்து முன்னர் ஒரு பகிர்வு எழுதியிருந்தேன். அந்தப் பதிவை இன்னும் வாசிக்காதவர்கள் இங்கு சொடுக்கி வாசியுங்கள். மிகச் சிறப்பான பாடல்களை நீங்களும் ரசிப்பீர்கள். அந்தப் படத்தில் வரும் 'ஜிப்பா போட்ட மைனரு... ஜிமிக்கி போட்ட பெண்டிரு...' பாட்டை பானுஷபானா அக்காஅவர்கள் சேனையில் பகிர்ந்திருந்தார்கள். பாடலும் அதற்காக படப்பிடிப்பு நடத்தப்பட்ட வயல்வெளிகளும் ஆஹா... அழகு மற்றும் அருமை... ரொம்ப நல்லா வந்திருக்கு... நீங்களும் கேட்டு ரசியுங்கள்... வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் இயக்குநர் / தோழர் ராஜசேகர்.

********

லைப்பதிவர் திருவிழா-2015 இது நம்ம திருவிழா... மறந்து விடாதீர்கள்... மறந்து இருந்து விடாதீர்கள்... ஊரே வியக்கும் வண்ணம் புதுக்கோட்டையில் பூக்கட்டும் வலைப்பூக்கள்...
-------------------------------------------------------

விழா இடம்... நாள்...

ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்

பீ வெல் மருத்துவமனை எதிரில்

பழைய பேருந்து நிலையம் அருகில்

ஆலங்குடி சாலை, புதுக்கோட்டை

அக்டோபர், 11 - 2015

ஞாயிற்றுக் கிழமை.

-------------------------------------------------------

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by நண்பன் Sun 20 Sep 2015 - 18:52

உங்கள் மன நிலைக்கு என்னாச்சி குமார் அண்ணா ஏன் சோர்வாக உள்ளது? எதையும் மனதில் போட்டுக்குளப்ப வேண்டாம்  இன்றய காலத்தின் ஓட்டத்தில் நிறையவே இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது அதெற்கெல்லாம் மனதைப் போட்டுக் குழப்பாமல் மகிழ்ச்சியையும் நண்பர்களையும் என்றும் இணைத்துக்கொள்ளுங்கள்

மத்திய கிழக்கில் தனிமையில் வாழு(டு)ம் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எங்கள் மனதுக்கு முதல் ஆறுதலும் நண்பனும் நாம்தான் அந்த விசயத்தில் கவனமாக இருங்கள்

உங்கள் பொழுது போக்காக நீங்கள் சினிமா பார்க்கிறீர்கள் மகிழ்ச்சி எனக்கு அதற்கு நேரம் கிடைப்பதில்லை  

பாயும் புலி முதல் 32ஆம் அத்தியாயம் 23ஆம் வாக்கியம் என்ற மலையாளப் படம் வரை பார்க்கிறீர்கள் அதன் விமர்சனமும் எழுதியுள்ளீர்கள் பிரமாதம்   ஆசையாகத்தான் உள்ளது   படம் பார்க்க ஆனால் நேரம் கிடைப்பதில்லை

இன்னும் தொடருங்கள் நான் உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்
நன்றியுடன் நண்பன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by *சம்ஸ் Mon 21 Sep 2015 - 7:45

சார் என்னாச்சி? நான் முதல் முதல் தங்களின் இப்படியான சோகமான ஒரு பதிவை பார்க்கிறேன். என்றும் ரசனையுடன் கூடிய துள்ளலான பதிவுகள் தந்த உங்களின் மனசை வலிப்படுத்தியது யார்? 

எதுவானாலும் கவலைகளை மறப்போம் மகிழ்வாக இருப்போம் சார். மத்திய கிழக்கு என்றால் வலிதான் அதை நாம் தாங்கி கொள்ளத்தான் வேண்டும்.அடுத்தடுத்து அழகிய விமர்சனங்களையும் சிறந்த கதைகளை கொடுத்து மகிழ்ச்சியின் பக்கம் எங்களை அழைத்து செல்கின்றீர்கள்.

உங்கள் மனசை சஞ்சலப்பட வைத்து எது என்று தெரியவில்லை.மனசை ஒரு நிலைப்படுத்தி மீண்டும் சுவரசியமான பதிவுகள் தாருங்கள் உங்கள் எழுத்திற்கும் விமர்சனங்களுக்கும் நாங்கள் என்றும் ரசிகர்கள். 

அனைத்தும் சரி வரும் என்ற நம்பிக்கையுடன் தொடருங்கள் இன்ஷா அல்லாஹ் நாங்களும் தொடர்கிறோம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Sep 2015 - 8:10

காலையில் சேனைக்கு வந்தவுடன் உங்கள் பதிவில் லயித்திருந்தேன் 
அருமையான விமர்சனம் அவசியமான பதிவாகியிருந்தது 

நீங்கள் கொடுத்திருந்த லிங்கோடு சென்று வலைப்பதிவாளர் சந்திப்பு நிகழ்வுகளோடு அதன் சிறப்பினை ஆய்ந்தறிந்தேன் நன்றிகள் 

நானும் போட்டியில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் 

நன்றி தொடருங்கள்

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by Nisha Mon 21 Sep 2015 - 10:49

மனசோடு பேசியதை வெள்ளிக்கிழமையே எதிர்பார்த்தேன்.  எப்படியோ   இந்த வாரம்  மிஸ் செய்யாமல் எழுதிட்டிங்க அல்லவா அதுக்கு பாராட்டுகள் குமார். எல்லாமே சரியாகிரும் குமார். வீட்டுக்கு வீடு வாசப்படி தானே..? 

பட விமர்சனங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றது. வலைப்பூ அறிவிப்புகள்  குறித்து நானும் படித்தேன். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கட்டும். உலகம் உள்ளங்கைக்குள் அடங்கட்டும். 

ஜிப்பா, ஜிமிக்கி படப்பாடலை மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி. 

போட்டிகளில்  கலந்து கொள்ளுங்கள். கல்கி நாவல் போட்டிக்கு  எழுத மிஸ் செய்திராதிங்க.. அப்படியே  வலைப்பூக்களில் போட்டியிலும் கலந்து கொள்ளுங்க. மனசும் ரிலாக்ஸ் ஆகிரும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by பானுஷபானா Mon 21 Sep 2015 - 14:55

வேதனையான நேரத்தில் மனதை திசை திருப்ப படம் பார்க்கிறீர்கள் அது பெரிய விசயம் குமார்... எல்லாரும் அப்படிசெய்ய முடியாது. படத்தின் மேல் கண்கள் இருந்தாலும் மனது வேறு ஒன்றை சிந்திக்கும்.  எனக்கெல்லாம் இப்படியான நேரங்களில் வீட்டில் இருக்கவே முடியாது.பலர் கூடி இருக்குமிடத்தில் இருந்தால் தான் மனது ஒரு நிலைக்கு வரும்.

இதுவும் கடந்து போகும் . எல்லாம் சரியாகும்...

பட விமர்சனம் பாடல் விமர்சனம் வழக்கம் போல் அருமையிலும் அருமை குமார்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by சே.குமார் Wed 23 Sep 2015 - 17:41

நண்பன் wrote:உங்கள் மன நிலைக்கு என்னாச்சி குமார் அண்ணா ஏன் சோர்வாக உள்ளது?  எதையும் மனதில் போட்டுக்குளப்ப வேண்டாம்  இன்றய காலத்தின்  ஓட்டத்தில் நிறையவே இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது அதெற்கெல்லாம் மனதைப் போட்டுக் குழப்பாமல் மகிழ்ச்சியையும் நண்பர்களையும் என்றும் இணைத்துக்கொள்ளுங்கள்

மத்திய கிழக்கில் தனிமையில் வாழு(டு)ம் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எங்கள் மனதுக்கு முதல் ஆறுதலும்   நண்பனும்   நாம்தான் அந்த விசயத்தில் கவனமாக இருங்கள்

உங்கள் பொழுது போக்காக நீங்கள் சினிமா பார்க்கிறீர்கள்   மகிழ்ச்சி எனக்கு அதற்கு நேரம் கிடைப்பதில்லை  

பாயும் புலி முதல் 32ஆம் அத்தியாயம் 23ஆம் வாக்கியம் என்ற மலையாளப் படம் வரை பார்க்கிறீர்கள் அதன் விமர்சனமும் எழுதியுள்ளீர்கள் பிரமாதம்   ஆசையாகத்தான் உள்ளது   படம் பார்க்க ஆனால் நேரம் கிடைப்பதில்லை

இன்னும் தொடருங்கள் நான் உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்
நன்றியுடன் நண்பன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாங்க நண்பன்...
மனதுக்கு ஆறுதலான கருத்துக்கு நன்றி. 
எல்லாம் உறவுகளால்தான்... வேலை செய்யுமிடத்தில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை...
தொடர்ந்து பயணிப்போம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by சே.குமார் Wed 23 Sep 2015 - 17:43

*சம்ஸ் wrote:சார் என்னாச்சி? நான் முதல் முதல் தங்களின் இப்படியான சோகமான ஒரு பதிவை பார்க்கிறேன். என்றும் ரசனையுடன் கூடிய துள்ளலான பதிவுகள் தந்த உங்களின் மனசை வலிப்படுத்தியது யார்? 

எதுவானாலும் கவலைகளை மறப்போம் மகிழ்வாக இருப்போம் சார். மத்திய கிழக்கு என்றால் வலிதான் அதை நாம் தாங்கி கொள்ளத்தான் வேண்டும்.அடுத்தடுத்து அழகிய விமர்சனங்களையும் சிறந்த கதைகளை கொடுத்து மகிழ்ச்சியின் பக்கம் எங்களை அழைத்து செல்கின்றீர்கள்.

உங்கள் மனசை சஞ்சலப்பட வைத்து எது என்று தெரியவில்லை.மனசை ஒரு நிலைப்படுத்தி மீண்டும் சுவரசியமான பதிவுகள் தாருங்கள் உங்கள் எழுத்திற்கும் விமர்சனங்களுக்கும் நாங்கள் என்றும் ரசிகர்கள். 

அனைத்தும் சரி வரும் என்ற நம்பிக்கையுடன் தொடருங்கள் இன்ஷா அல்லாஹ் நாங்களும் தொடர்கிறோம்.
வாங்க சம்ஸ்...
வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்கள் கொடுத்த வலியின் சோகமே பதிவாய்...
தொடர்ந்து பயணிப்போம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by சே.குமார் Wed 23 Sep 2015 - 17:45

நேசமுடன் ஹாசிம் wrote:காலையில் சேனைக்கு வந்தவுடன் உங்கள் பதிவில் லயித்திருந்தேன் 
அருமையான விமர்சனம் அவசியமான பதிவாகியிருந்தது 

நீங்கள் கொடுத்திருந்த லிங்கோடு சென்று வலைப்பதிவாளர் சந்திப்பு நிகழ்வுகளோடு அதன் சிறப்பினை ஆய்ந்தறிந்தேன் நன்றிகள் 

நானும் போட்டியில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் 

நன்றி தொடருங்கள்
வாங்க ஹாசிம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by சே.குமார் Wed 23 Sep 2015 - 17:48

Nisha wrote:மனசோடு பேசியதை வெள்ளிக்கிழமையே எதிர்பார்த்தேன்.  எப்படியோ   இந்த வாரம்  மிஸ் செய்யாமல் எழுதிட்டிங்க அல்லவா அதுக்கு பாராட்டுகள் குமார். எல்லாமே சரியாகிரும் குமார். வீட்டுக்கு வீடு வாசப்படி தானே..? 

பட விமர்சனங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றது. வலைப்பூ அறிவிப்புகள்  குறித்து நானும் படித்தேன். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கட்டும். உலகம் உள்ளங்கைக்குள் அடங்கட்டும். 

ஜிப்பா, ஜிமிக்கி படப்பாடலை மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி. 

போட்டிகளில்  கலந்து கொள்ளுங்கள். கல்கி நாவல் போட்டிக்கு  எழுத மிஸ் செய்திராதிங்க.. அப்படியே  வலைப்பூக்களில் போட்டியிலும் கலந்து கொள்ளுங்க. மனசும் ரிலாக்ஸ் ஆகிரும்.

வாங்க அக்கா...
எங்கே அக்கா மனசே பேசமாட்டேங்குது... அப்புறம் எப்படி... இருந்தும் எழுதியாச்சு அக்கா...
எல்லாத்துக்கும் எழுதணும் அக்கா...
உள்ளே உண்டியல் காலியாவுல்ல இருக்கு...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by சே.குமார் Wed 23 Sep 2015 - 17:51

பானுஷபானா wrote:வேதனையான நேரத்தில் மனதை திசை திருப்ப படம் பார்க்கிறீர்கள் அது பெரிய விசயம் குமார்... எல்லாரும் அப்படிசெய்ய முடியாது. படத்தின் மேல் கண்கள் இருந்தாலும் மனது வேறு ஒன்றை சிந்திக்கும்.  எனக்கெல்லாம் இப்படியான நேரங்களில் வீட்டில் இருக்கவே முடியாது.பலர் கூடி இருக்குமிடத்தில் இருந்தால் தான் மனது ஒரு நிலைக்கு வரும்.

இதுவும் கடந்து போகும் . எல்லாம் சரியாகும்...

பட விமர்சனம் பாடல் விமர்சனம் வழக்கம் போல் அருமையிலும் அருமை குமார்...
வாங்க பானு அக்கா...
வருத்தங்களையும் வலிகளையும் வைத்துக் கொண்டு எழுதுவதென்பது ரொம்பக் கஷ்டம்... எனவே சினிமாதான் ஒரே வலி...
3 மலையாளப்படம், 3 தமிழ்ப்படம் என போய்க்கிட்டு இருக்கு. இன்று மட்டும் 1 மலையாளம் 1 தமிழ் பார்த்தாச்சு... வாசிக்கக்கூட மனதில்லாத தருணமாக நாட்கள் நகர்கிறது அக்கா....

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில்தான் பயணிக்கிறேன் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by சே.குமார் Wed 23 Sep 2015 - 17:52

நிஷா அக்கா 750 வந்தாச்சு... கிப்ட்டெல்லாம் இல்லையா... இதுவே மலையைக் கடந்த மாதிரி இருக்கே... எப்ப ஆயிரங்களைத் தாண்டி லட்சங்களைத் தொடுவது... ம்... என்னமோ போங்க...?
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by Nisha Mon 28 Sep 2015 - 17:39

ஓஹோ! ஆயிரத்துக்கு தான் கிபட்!

ஆயிரம் பதிவு போடுங்கப்பா! அதுக்கு பின்னாடி நாலைந்து  பூஜ்ஜியம் போட்டால் இலட்சமாகி விடும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by சே.குமார் Mon 28 Sep 2015 - 17:51

Nisha wrote:ஓஹோ! ஆயிரத்துக்கு தான் கிபட்!

ஆயிரம் பதிவு போடுங்கப்பா! அதுக்கு பின்னாடி நாலைந்து  பூஜ்ஜியம் போட்டால் இலட்சமாகி விடும்.

அப்ப இன்னும் 2.....5.....0.... போனாத்தான் கிப்டா...?????????????
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by Nisha Mon 28 Sep 2015 - 17:59

ஆமாமுங்க !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா Empty Re: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum