சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

வாழ்க்கை என்பது என்ன ?  Khan11

வாழ்க்கை என்பது என்ன ?

2 posters

Go down

வாழ்க்கை என்பது என்ன ?  Empty வாழ்க்கை என்பது என்ன ?

Post by நண்பன் Wed 9 Dec 2015 - 10:24

இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன? இன்று நான் படித்த சிறந்த கட்டுரை ஒன்று  அது இதுவாகத்தான் இருக்கும்.
– உயிரோடு இருப்பதா?
– மகிழ்ச்சியாக இருப்பதா?
– பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
– தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
– வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?
– தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
– தத்துவங்களின் அணிவகுப்பா?
…. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.
இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.
அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.
வாழ்க்கை என்பது என்ன ?  Models1
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.

மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.
துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.
நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?
உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.
தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.
இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.
– நம்மைவிட உடலில் பலசாலி யானை
– நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
– நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

செந்தில் படித்து senthilvayal.com ல் பகிர்ந்ததை அடியேன் படித்து சேனையில் பகிர்ந்து விட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கை என்பது என்ன ?  Empty Re: வாழ்க்கை என்பது என்ன ?

Post by நண்பன் Wed 9 Dec 2015 - 11:02

நிஜமாகவே வாழ்க்கை என்றால் என்ன..?



உயிர் உடலுக்குள் தங்கி இருக்கும் இந்த ஜென்ம வாழ்க்கையில் - எத்தனையோ எண்ணங்கள் - வாழ்க்கையைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. வாழ்க்கை ஓட்டத்தில் - வெறும் நினைவுகள் மட்டுமே ஒவ்வொருவருக்கும் எஞ்சி இருக்கிறது. அவை, நல்லதோ - கெட்டதோ..... வெறுமனே எண்ணங்கள். நினைவுகள் மட்டுமே. 

நல்லதையே நினை. நல்லதையே செய் என்று ரொம்ப சிம்பிளாக வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம். ஆனால் என்ன செய்கிறோம்..? ஆடி , அடங்கி, கடைசியில், விழிகள் நிலை குத்தி , நம் சொந்த பந்தம் சுற்றி இருக்க, விடை பெறுகிறோம்... இடையில், நம்மால் முடிந்த அளவு , நம் வாழ்க்கை சிறக்க போராடுகிறோம், நம் குழந்தை, குடும்பம் அவர்களின் நல்லது கெட்டது, கூட வாழும் சொந்த பந்தம், சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பது - இப்படித் தான் ஒட்டு மொத்த வாழ்க்கையுமே அடங்கி இருக்கிறது என நினைக்கிறோம்... நிஜமாகவே இதுதான் வாழ்க்கையா..? இல்லை இதைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்க, அதை அறியாமலேயே நம் கூடு அடங்கிவிடுகிறதா...? 

என்ன ஏது என்று தெரியாமலேயே,  வாழ்ந்து முடித்து விடும் அளவுக்கு - வாழ்க்கை ஒரு அற்ப விஷயமா? ஒரு ஜென்ம வாய்ப்பு அல்லவா? அதை நாம் உணருகிறோமா..?  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் , நாம் இப்போது வாழும் வாழ்வில் - எத்தனை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்...? அந்த விஷயங்கள் எல்லாம் நிஜமாகவே அந்த அளவுக்கு தகுதி வாய்ந்தவையா..? பக்குவம் என்ற பெயரில், இன்று அதி முக்கியமாக இருக்கும் விஷயமே, சில வருடம் கழித்து - ஒன்றும் இல்லாத விஷயமாக தோன்றுகிறதே...? எது நமக்கு நிரந்தரம்..? 

எண்ணங்கள் - எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உணர முடிகிறதா? சின்ன சின்ன விஷயங்களில் நம் ஆற்றல் வீணடிக்கிறோமே..! எத்தனை கோபம், வெறுப்பு, காழ்ப்புணர்வு , அதை ஒட்டிய நம் நேர விரயம், சக்தி விரயம்..! அவசரம், பதட்டம்..! 

 
மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களுக்காக நம் முயற்சி, நம் அன்றாட வாழ்வில் மிக மிக குறைவே...! ஏன் இப்படி? இப்படியே தான் இருக்கப் போகிறோமா..? 

உங்கள் கருத்து என்ன கொஞ்சம் சொல்லுங்க நண்பர்களே...! 

யோசித்து , உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்..! ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்... என்னுடன், நம் சக வாசக நண்பர்களும்! 


livingextra.com


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கை என்பது என்ன ?  Empty Re: வாழ்க்கை என்பது என்ன ?

Post by நண்பன் Wed 9 Dec 2015 - 11:34

மன ஆரோக்கியம் என்றால் என்ன?
மன ஆரோக்கியம் என்பது, நமது வாழ்க்கையை அனுபவிக்கவும் அன்றாட வாழ்வின் தேவைகளை சமாளிக்கவுமான நமது திறன் ஆகும்.
நல்ல மன ஆரோக்கியம் என்பது நாம் உற்பத்தித் திறன் கொண்டிருக்கவும், மற்றவர்களுடன் நிறைவான உறவுகளைக் கொண்டிருக்கவும், மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவும், சோதனையான நேரங்களை சமாளிக்கவும் உதவுகிறது.
மன ஆரோக்கியத்திற்கு பல கூறுகள் பங்களிக்கின்றன:
சுய நம்பிக்கை மற்றும் சுய அறிவு
உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி
குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் உறவுகள்
நிதிநிலைகள்
சமூக ஈடுபாடு
மனஅழுத்தத்தை நீங்கள் சமாளிக்கும் விதம்
உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தும் விதம்
குறிப்பிட்ட ஒரு நிகழ்வுக்கு நாம் முறையற்ற வகையில் எதிர்வினை காட்டுவது அல்லது விரக்தியாக அல்லது "ஊக்கம் குன்றியதாக" ("down") உணர்வது போன்றவற்றை நாம் அனைவருமே சில நேரங்களில் அனுபவிக்கிறோம். நல்ல மன ஆரோக்கியம் கொண்ட நபர், இத்தகைய நேரங்களை சமாளிக்கவும் விரைவாக அதைக் கடந்து செல்லவும் இயலும்.
புதிய நாட்டுக்குக் குடிவரவு செய்யும்போது நல்ல மன ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதாவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து தனிமைப்படுவது, நிதிநிலை உறுதிப்பாட்டை இழப்பது, புதிய மொழியைக் கற்பது, புதிய பண்பாட்டுக்கு தகவமைத்துக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறனுடையவராக நீங்கள் இருக்க வேண்டும்.

tamil.inmylanguage.org


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கை என்பது என்ன ?  Empty Re: வாழ்க்கை என்பது என்ன ?

Post by நண்பன் Wed 9 Dec 2015 - 11:52

வாழ்க்கை என்பது என்ன?
வாழ்க்கை என்பது என்ன! அதில்
எப்படி வாழ வேண்டும்! மிகவும்
சந்தோஷமாக வாழ வேண்டிய,
அமைதியாக வாழ வேண்டிய,
நிறைவுடன் வாழவேண்டிய
வாழ்வை நாம் எப்படி வாழ்கிறோம்.
வாழ்க்கை என்பது கோழைகளுக்கும்,
சோம்பேறிகளுக்கும்
சொந்தமானதல்ல, முதலில்
உங்களை சுறுசுறுப்பானவர்களாக
மாற்றிக் கொள்ளுங்கள்.
சுறுசுறுப்பு இருந்தால்தான்
செய்யும் வேலையில் ஆர்வம்
ஏற்படும். சோம்பலும்,
கோழைத்தனமும் கலந்த மனிதனால்
நிஜ உலகில் எதுவும்
சாத்தியமாகாது.
நல்ல நண்பர்களை அமைத்துக் கொள்ள
வேண்டும், நல்ல
நண்பர்களோடு சேர்ந்து யாருக்கும்
தீங்கிழைக்காமல், கூட்டாக வாழும்
வாழ்க்கை எல்லோருக்கும்
அமையாது அப்படி
அமைத்துக்கொண்டவர்கள்
பாக்கியசாலிகளே, கிடைத்த
நண்பர்களை பகைத்துக்கொள்ளாமல்
மேலும் விரும்பவைக்கும் வகையில்
நம்மை அவர்களிடம்
வெளிப்படுத்திக் கொள்ள
வேண்டும். நம்மிடமுள்ள எந்த
பழக்கம் மற்றவர்களை வெறுப்படைய
செய்கிறதோ அதை
முடிந்தவரையிலும் திருத்திக்
கொள்ள வேண்டும்.
நாம் பார்க்கும் அனைத்திலிருந்தும்
பாடங்கற்றுக்கொள்ள வேண்டும்,
சின்ன சின்ன விஷயங்கள் கூட
பெரிய
பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
பறவைகள், பட்டாம் பூச்சி,
தாவரங்கள் என்று அனைத்தும்
ஏதோ ஒன்றை நமக்கு
சொல்லிக்கொண்டிருக்கிறது.
வாழ்க்கையை கற்றுக்கொள்ள
யாரை தேடியும் போக
வேண்டியதில்லை,
கண்ணை திந்து வைத்திருந்தாலே
போதும். நாம் கூர்ந்து
கவனித்தால், எது வேண்டுமானாலும்
ஆசானாக
இருந்து வாழ்க்கை முறையினை
சொல்லிக் கொடுக்கும்
மிருகங்களிடமிருந்து கூட
அன்பை, நன்றியை கற்றுக்கொள்ள
முடியும்.
கற்றுக்கொண்ட விஷயங்களில்
நன்மை எது,
தீமை எது என்று ஆய்ந்து
நன்மையாதை தேர்ந்தெடுப்பவன்
வாழக் கற்றுக்கொள்கிறான்.
சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும்
இருந்தால் மட்டும்
போதாது அதனை தக்கவைத்துக்
கொள்ள வேண்டுமானால் நல்லவனாக
இருக்க வேண்டும்.
மகிழ்ச்சி வேண்டும் என்பதற்காக
பிறரை துன்பப்படுத்தி
மகிழக்கூடாது, முகத்திற்கு நேராக
புகழ்ந்து பின்னால்
தூற்றித்திரிந்தால்,
கெடுவது உங்கள் மகிழ்ச்சிதான்.
சுயநலத்திற்காக
பிறருக்கு தீங்கிழைக்காமல்
வாழ்ந்தால் எதற்கும் அஞ்ச வேண்டிய
தேவையில்லை, யாரை பார்த்தும்
தலைகுனிந்து நிற்க
வேண்டியதில்லை.
உண்மை என்பதை பற்றி
பிடித்துக்கொள்ள வேண்டும்.
உண்மையின்
வலிமை மிகப்பெரியது,
வாழ்க்கை முறைக்கு உண்மை பேசுவது
அல்லது பிறருக்கு உண்மையாக
நடப்பது மிகவும்
இன்றியமையாததாகும். நீங்கள்
உயரமோ குள்ளமோ,
கறுப்போ சிகப்போ அதுவெல்லாம்
முக்கியம் கிடையாது,
உங்களை நம்பலாம்,
நம்பி எதை கொடுத்தாலும்
உண்மையாக செய்து முடிப்பீர்கள்
என்ற நம்பிக்கை ஏற்படும்
வகையில் நடந்து கொள்வதுதான்
உண்மையான
அழகு அதற்கு உங்களில்
உண்மை இருக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக
இறை நம்பிக்கை இருக்க வேண்டும்.
இறைவனின் பார்வையில்
நல்லவனாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு இறை நம்பிக்கை
இல்லையென்றாலும்
உண்மையை கைவிடாதீர்கள்
ஏனெனில் உண்மைதான் கடவுள்.
அதை உறுதியுடன்
பற்றிக்கொண்டாலே போதும்
வாழ்க்கையின் விளக்க முடியாத
அனுபவங்களையெல்லாம்
கண்டு கொள்ளலாம்.
rajramshivaa.blogspot.qa


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கை என்பது என்ன ?  Empty Re: வாழ்க்கை என்பது என்ன ?

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Dec 2015 - 18:30

அருமையான கட்டுரை அவசியாமான கட்டுரை

வாழ்க்கை என்பது -பிரமானம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை என்பது என்ன ?  Empty Re: வாழ்க்கை என்பது என்ன ?

Post by நண்பன் Wed 9 Dec 2015 - 20:29

கவிப்புயல் இனியவன் wrote:அருமையான கட்டுரை அவசியாமான கட்டுரை

வாழ்க்கை என்பது -பிரமானம்
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கை என்பது என்ன ?  Empty Re: வாழ்க்கை என்பது என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum