Latest topics
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்by rammalar Yesterday at 7:45
» சிம்பல்
by rammalar Yesterday at 7:40
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
» பொறாமை வருதே...!
by rammalar Mon 20 Jun 2022 - 7:32
» நல்லதொரு குடும்பம்...!
by rammalar Mon 20 Jun 2022 - 6:14
» அன்பான அரவணைப்பு தரும் நிம்மதி
by rammalar Mon 20 Jun 2022 - 4:25
» ரத்த அழுத்தம் - எது நார்மல்
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» பரிவு
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» ரங்கா’ன்னு பெயர் வெச்சது குத்தமா...
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:18
» சிரிப்போம்...சிரிப்போம்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:11
» மூளைக்கு வேலை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:08
» அச்சமின்மையே ஆரோக்கியம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:07
» வரமா சாபமா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:02
» பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்போம்...
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» மொக்க ஜோக்ஸ்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» வீட்டுல உப்புமா…ஓடுடா ஓடீரு
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:59
» அவள் அப்படித்தான்....
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:56
» முட்டாள் அரசனும் புத்திசாலி மருத்துவனும்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:45
» ஏ.டி.எம் - கவிதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:43
» பீட்ரூட் சர்பத்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:17
» “மெடிக்கல் மிராக்கல்” என்னும் படத்தில் நாயகனாக களமிறங்கும் யோகிபாபு...!
by rammalar Fri 17 Jun 2022 - 9:26
» புஷ்கர் - காயத்ரி திரைக்கதையில் 'சுழல்' வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியீடு
by rammalar Fri 17 Jun 2022 - 9:25
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?
3 posters
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது. மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது.
அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி :
கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

http://www.tamilac.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?
பயனுள்ள தகவல் பகிர்வு
-
விரல் முத்திரைகளை படமாக விளக்கி இருந்தால்
சுலபமாக புரிந்து கொள்ள இயலும்..
-

-
விரல் முத்திரைகளை படமாக விளக்கி இருந்தால்
சுலபமாக புரிந்து கொள்ள இயலும்..
-

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20057
மதிப்பீடுகள் : 1186
Re: விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?
தலை வலிக்கு நீங்கள் கொடுத்துள்ளதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது காரணம் நான் பலன் அனுபவித்திருக்கிறேன் இன்றும் செய்து பார்த்தேன் உணர்கிறேன் நல்ல ரிசல்ட் கிடைக்கிறது பயனுள்ள தகவல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?
ஓஹோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?
Nisha wrote:ஓஹோ!
இன்று கூட 14 முறை செய்தேன் கொஞ்சம் நல்லம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?
ஓஓஓஓஒ

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?
Nisha wrote:ஓஓஓஓஒ
நான் நிறையப்பேரின் தலை வலிக்கு மருந்தாக இருந்திருக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?
அப்படியா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?
அப்படித்தான்Nisha wrote:அப்படியா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

» மருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!
» குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?
» பள்ளிக்கு காவலன் பதித்தான் விரலை!
» ஆள் காட்டி விரலை சரியா பயன்படுத்துங்க...!
» துண்டான விரலை வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்த சீன டாக்டர்கள்
» குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?
» பள்ளிக்கு காவலன் பதித்தான் விரலை!
» ஆள் காட்டி விரலை சரியா பயன்படுத்துங்க...!
» துண்டான விரலை வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்த சீன டாக்டர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|