Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
பாலாறு.. பாழ் ஆறா?
Page 1 of 1
பாலாறு.. பாழ் ஆறா?
அறுபது ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின்
வட மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு தொடர்ந்து
பால் வார்த்துக் கொண்டிருந்த ஆறு பாலாறு,
-
அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் படிப்படியாக
நீர்வரத்துக் குறைந்து, தற்போது பெருமழை வௌ்ளக்
காலங்களில் மட்டுமே தண்ணீர் ஓடிவரும் ஆறாக நீர் வரத்து
சிறுத்துப்போனது. இனி வரும் நாட்களில் அதற்குள்
வழியற்றுப்போகும் வகையில், சமீபத்தில் பாலாற்றின்
குறுக்கே ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த ஒரு தடுப்பணையின்
உயரத்தை மேலும் ஏழடி உயர்த்திக் கட்டிவிட்டது ஆந்திர அரசு.
-
வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை
மாவட்டங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் விளை
நிலங்களுக்கு, பாசன நீராகவும் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர்
ஆதாரமாகவும் இருந்து வந்துள்ளது பாலாறு.
-
பாலாறு ஒரு காலத்தில் தமிழகத்தின் வட மாவட்ட மக்களுக்கான
பால் ஆறு; தேன் ஆறு! இனி எல்லாம் பாழ்தானோ என்கிற பெரும்
அதிர்ச்சியைத் தரத் தொடங்கியுள்ளது பாலாறு.
அது குறித்தான ஒரு நேரடி ரிப்போர்ட் இது.
–
‘கர்நாடகாவின் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகிறது பாலாறு.
கர்நாடகாவில் 93 கி.மீ. தூரம், ஆந்திராவில் 33 கி.மீ., தூரம், தமிழ்
நாட்டில் 222 கி.மீ. தூரம் என மொத்தம் 348 கி.மீ. தூரத்துக்குப் பாய்ந்தோடி
வருகிறது பாலாறு.
-
கர்நாடகமும், ஆந்திராவும் 1955க்குப் பிறகு அதனதன் பகுதிகளில்
பாலாற்றின் குறுக்கே அணைகள் மற்றும் தடுப்பணைகள் பலவும்
கட்டினர்.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Re: பாலாறு.. பாழ் ஆறா?
கடந்த 1892ல் அப்போதைய மெட்ராஸ் அரசு, மைசூர் சமஸ்தானங்களுக்கு
இடையே ஓர் ஒப்பந்தம் உருவானது, ‘பாலாற்றின் மேல் பகுதியில் உள்ள
மாநிலங்கள், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நீர் தேக்கங்களின்
உயரத்தையோ, பரப்பையோ அதிகரிக்கக்கூடாது. பாலாற்றுப் பாசனத்தின்
கடைக்கோடியில் உள்ள மாநிலத்தின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே
அணை கட்டுவதோ, தண்ணீரை திருப்பி விடுவதோ கூடாது.
-
பாலாறு அல்லது அதன் உபநதிகளின் குறுக்கிலோ நதியின் ஓட்டத்தைத்
திருப்பும் வகையிலோ கட்டுமானங்கள் உள்ளிட்ட வேறு பணிகளைச்
செய்யக்கூடாது’ என மேற்கண்ட ஒப்பந்தத்தின் 2ம் பிரிவில் குறிப்பிடப்
பட்டுள்ளது. ஆனாலும் இவை எதனையுமே நடைமுறைப்படுத்துவதில்லை
கர்நாடகாவும், ஆந்திராவும்.
-
பாலாறு தமிழகத்தின் வாணியம்பாடி தாலுகா, ஆவாரங்குப்பம் எனும்
கிராமம் வழியாக உள்ளே நுழைகிறது. அதற்கும் மேலாக ஆந்திர மாநிலப்
பகுதியில் பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே முன்னர்
கட்டப்பட்டிருந்த ஐந்தடி உயரத் தடுப்பணையினை, கடந்த மாதம் மேலும்
ஏழடி உயரம் உயர்த்தி மொத்தம் பன்னிரண்டு அடி உயரத் தடுப்பணையாகக்
கட்டிவிட்டது ஆந்திர அரசு.
-
இதனால் மிகவும் கொந்தளித்துப் போயுள்ளனர் வேலூர் மற்றும் காஞ்சிபுரம்
மாவட்ட விவசாயிகள்.’
-
‘இனி வர்ற நாட்கள்ல ஆந்திர அரசின் அந்தத் தடுப்பணையினைத் தாண்டி,
தமிழக எல்லைக்குள் பாலாற்றில் தண்ணீர் ஓடிவருவது என்பது வெறும்
கனவுதான். சமீப ஆண்டுகள்ல ஓரிரு மாதங்களாவது பாலாற்றில் தண்ணீர்
ஓடிவரும். தற்போது அதற்கும் அபாயச் சங்கு ஊதிவிட்டது ஆந்திர அரசு.
முன்பெல்லாம் மூன்று போகச் சாகுபடியான வேளாண் பூமி இது.
-
பின்னர் இருபோகச் சாகுபடியாகி, தற்போது ஒரு போகச் சாகுபடியாவது
செய்ய முடியுமாங்கிற அச்சத்துல வேலூர், காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள்
உறைந்து போயுள்ளனர்’ என்கிறார் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்
கிருஷ்ணன்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கத் தேவையான தண்ணீர்,
பாலாற்றில் இருந்துதான் பெறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு சில
ஆண்டுகளுக்கு முன்பாக, குப்பம் எனுமிடத்தில் பாலாற்றில் புதிதாக அணைக்
கட்டத் திட்டமிட்டது. உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு அதனை தடுத்து
நிறுத்தியது தமிழக அரசு.
-
பாலாறு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தாக்கல்
செய்திருந்தது தமிழக அரசு. குப்பம் அணைத் திட்டத்தினைக் கைவிட்ட ஆந்திர
அரசு. தற்போது பாலாற்றில் தமிழக எல்லைக்க முன்பான தடுப்பணையினை
மேலும் உயர்த்திக் கட்டிவிட்டது.
-
தமிழ்நாட்டுக்குள் பாலாற்றில் ஓடி வரும் தண்ணீக்கு முடிவுரை எழுதி
விட்டதாகவே கருதப்படுகிறது.
-
‘பாலாத்துல கர்நாடகா தடுப்பணைகள் கட்டிடுச்சி, ஆந்திரா தடுப்பணைகள்
கட்டிடுச்சினு நாம கூப்பாடு போடுறோம். பாலாற்றின் மொத்த தூரத்துல மூணுல
ரெண்டு பங்கு தூரம் தமிழ்நாட்ல தான் ஓடிவருது.
-
இந்த 222 கி.மீ. தூரத்துக்கு, பாலாத்துல நாம எத்தனை இடஙகள்ல தடுப்பணைகள்
கட்டியிருக்கோம்? சொல்லுங்க. ஒரு ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி
1.12.2015 அன்று ஒரு வாரம் பெய்த பெருமறையில்
(நினைவுக்கு: செம்பரம்பாக்கம் ஏரி சென்னை வௌ்ளம்) வேலூர், காஞ்சிபுரம்
மாவட்டங்கள்ல பாலாத்துல இருகரை புரண்டு வௌ்ள ஓடியது.
-
அவ்வளவு தண்ணியும் கடல்ல போய்க் கலந்துடுச்சி. பாலாத்துல அங்கங்க ஒரு
அஞ்சடி உசரத்துக்க நாம தடுப்பணை கட்டியிருந்த அந்த உசரத்துக்கு
ஆத்துக்குள்ளே தண்ணிய சேமிக்க வெச்சிருக்கலாம்.
-
தடுப்பணைகள்லேந்து ஞ்சடி உசரத்துக்கு மேலதான் தண்ணி வெளியேறி
கடலுக்குப் போய் சேர்ந்திரக்கும்’ என்கிறார் செங்கல்பட்டு நகர வளர்ச்சி
மன்றச் செயலாளர் எம். ராஜூ.
-
‘பாலாற்றில் நீர்வரத்து குறைந்தவிட்டதால் வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகள்
பலவும், பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கின்றன.
-
தென்பெண்ணை – செய்யாறு – பாலாறு இணைப்புத் திட்டம் இன்னமும் கிடப்பிலே
உள்ளது.அடுத்து நெடுங்கல் அணைக்கட்டு – வாணியம்பாடி பாலாறு இணைப்புத்
திட்டமும் கிடப்பிலே .ள்ளது, மேல் இணைப்பு மற்றும் கீழ் இணைப்பு எனப்படும்
மேற்கண்ட இரு இணைப்புத் திட்டங்களையும் மத்திய மாநில அரசுகள் உடனே
மேற்கொள்ள வேண்டும்.
-
இந்த இரு இணைப்புத் திட்டங்கள் நிறைவுபெறுவதன் மூலமாகத்தான்.
பாலாற்றின் தமிழக வவசாயிகளுக்கு விடிவு பிறக்கும். இல்லாவிட்டால்
தமிழகத்தில் பாலாறு என்பது இனி பாழ் ஆறு தான்’ என்கிறார் காஞ்சிபுரம்
மாவட்டப் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவர் மு. மணி.
–
——————————
– ஸ்ரீ ரங்கம் திருநாவுக்கரசு
கல்கி செய்திகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|