சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 10:57

» கடற்கரை மணலறியும்
by rammalar Today at 10:12

» சேவைக் கலைஞன்
by rammalar Today at 10:11

» தேரீர்ப்ரியம்
by rammalar Today at 10:10

» தூதூ போ காற்றே
by rammalar Today at 10:10

» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 10:09

» இசை
by rammalar Today at 10:08

» மழை
by rammalar Today at 10:08

» வேலி
by rammalar Today at 10:07

» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49

» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48

» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32

» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54

» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30

குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள் Khan11

குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்

2 posters

Go down

குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள் Empty குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்

Post by rammalar Fri 19 Aug 2016 - 12:57

விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெரும்பாலான
பெர்சனல் கம்ப்யூட்டர்களில், குரோம் பிரவுசர் இயங்கி
வருகிறது. இதனைப் பயன்படுத்தி, இணையத்தில் உள்ள
தளங்களைப் பார்வையிடுவதுடன், பயனுள்ள வேறு பல
வசதிகளையும் அனுபவிக்கலாம்.
-
இந்த வசதிகள் பல்வேறு வகையானவை. கூடுதல்
பயன்களைத் தருவதுடன், நம்முடைய நேரத்தையும் இவை
மிச்சப்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை
இங்கு காணலாம்.
-
டேப்களை பின் செய்திடுக

குரோம் பிரவுசரில் பல இணைய தளங்களைத் திறந்து இயங்கிக்
கொண்டிருக்கையில், எந்த இணைய தளம், எந்த டேப்பில்
திறக்கப்பட்டுள்ளது என்பதை அறிவது சற்று சிரமமான
வேலையாக இருக்கும். இந்த சிக்கலிலிருந்து விடுபட,
முக்கியமான இணைய தளம் உள்ள டேப்பில் ரைட் கிளிக்
செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில், ‘Pin Tab’
என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு ஐகானாக மாற்றப்படும்.
எடுத்துக் காட்டாக, ஜிமெயில் டேப் உள்ள இடத்தில், கூகுள் ஐகான்
காட்டப்பட்டால், அதனைத் தேர்ந்தெடுப்பது எளிதுதானே.
இதனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர, அதே ஐகானில்,
ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Unpin Tab என்பதைத்
தேர்ந்தெடுத்தால் போதும்.
-
ஐகானுடன் புக்மார்க்

குரோம் பிரவுசரில், நாம் அதிகம் விரும்பிப் பயன்படுத்தும்
இணைய தளங்களின் முகவரிகளை நாம் குறித்து வைத்துக்
கொள்கிறோம். இவை ‘Bookmark’ என்ற வகையில் பட்டியலாக
அடுக்கப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன.
-
இணைய தள முகவரிகளை அமைப்பதற்குப் பதிலாக, இந்தப்
பட்டியலில், குறிப்பிட்ட இணைய தளம் குறித்த குறிப்பைத் தேடி
கிளிக் செய்து பெறலாம். இந்தக் குறிப்பு டெக்ஸ்ட்டில் அமைக்கப்
படுவதால், அவற்றை தேடிப் பெறுவதில் சிறிது நேரம் ஆகலாம்.
முந்தைய குறிப்பில் சொல்லப்பட்டது போல, இவற்றையும் ஐகான்
கொண்டு அடையாளப் படுத்தலாம்.
-
இதற்கு, குறிப்பிட்ட புக் மார்க் கட்டத்தில் உள்ள நட்சத்திர
அடையாளத்தில் கிளிக் செய்திடவும். அல்லது CTRL + D அழுத்தி,
குறிப்பில் உள்ள டெக்ஸ்ட்டை நீக்கவும். தொடர்ந்து “Finished”
பட்டனில் கிளிக் செய்திடவும். குறிப்பிட்ட புக்மார்க், அதற்கான
ஐகானுடன் சேவ் செய்யப்படும்.
-
உங்களுக்கும் அதனை அடையாளம் கொண்டு பெறுவது
எளிதானதாகவும், நேரம் மிச்சப்படுத்தும் வசதியாகவும் அமையும்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள் Empty Re: குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்

Post by rammalar Fri 19 Aug 2016 - 12:59

பி.டி.எப். கோப்பின் பாஸ்வேர்ட் நீக்க

இணையத்திலிருந்து அல்லது நண்பர்களிடமிருந்து, அரசு
அலுவலகத்திலிருந்து, பாஸ்வேர்ட் இணைந்த ஒரு பி.டி.எப்.
வடிவில் உள்ள கோப்பு ஒன்றைப் பெறுகிறீர்கள். முதல் முறை
பாஸ்வேர்ட் நினைவில் இருக்கும். திறந்து பயன்படுத்துவோம்.
பின்னர், சில நாட்கள் கழித்துத் திறந்து படிக்க எண்ணுகையில்,
பாஸ்வேர்ட் சரியாக நினைவில் இருக்காது.

அதனைப் பயன்படுத்தினால் மட்டுமே, நாம் அந்த கோப்பினைத்
திறந்து பார்க்க இயலும், இந்தச் சூழ்நிலையில், அந்தக் கோப்புடன்
இணைந்த பாஸ்வேர்டினை, குரோம் பிரவுசர் உதவியுடன் நீக்கி,
பாஸ்வேர்ட் இல்லாமலேயே படிக்க இயலும் வகையில் மாற்ற முடியும்.
இதற்கு, பாஸ்வேர்ட் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்
கோப்பினை இழுத்து வந்து, குரோம் பிரவுசரில் விடவும். பாஸ்வேர்ட்
கொடுத்து அதனைத் திறக்கவும். இனி, CTRL+P அழுத்தவும்.
உடன் பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அடுத்து
, “Destination” என்பதன் கீழ் உள்ள, Change என்பதில் கிளிக்
செய்திடவும். தொடர்ந்து “Local Destination” என்பதில்
“Save as PDF” என்பதில் கிளிக் செய்திடவும்.

இனி, இந்த கோப்பிற்கு பாஸ்வேர்ட் தேவை இருக்காது. இதனை
நீங்கள் மற்றவர்களுடன், பாஸ்வேர்ட் இல்லாமலேயே, பகிர்ந்து
கொள்ளலாம்.

அண்மையில் பார்த்த தளங்கள்
-
குரோம் பிரவுசரில், நாம் அண்மையில் பார்த்த இணைய தளப்
பக்கங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டு History என்ற
பிரிவில் கிடைக்கும். எனவே, ஏற்கனவே பார்த்த இணைய
தளங்களைப் பார்வையிட இந்தப் பிரிவு செல்ல வேண்டும்.
இதற்கு Ctrl+H அழுத்தி, அந்தப் பிரிவினைத் திறந்து, நாம்
பார்க்க விரும்பும் தள முகவரியைத் தேடி கிளிக் செய்திட
வேண்டும். இந்த வேலைகளைக் குறைத்து, எளிதாக்க,
குரோம் பிரவுசர் ஒரு வழியைத் தருகிறது. அண்மையில் திறந்து
பார்த்த இணையப் பக்கங்களைக் காண குரோம் பிரவுசரின்
பின்புறம் செல்வதற்கான பட்டனைத் தேர்ந்தெடுத்து அழுத்தவும்.
அண்மையில் பார்த்த பத்து தளங்களின் முகவரி கிடைக்கும்.
இதில் நீங்கள் பார்க்க வேண்டிய தளத்தின் முகவரியை
எளிதாகத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து பார்க்கலாம்.

டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்து தேட

குரோம் பிரவுசரில், ஏதேனும் கட்டுரை ஒன்றைப் படிக்கையில்,
அதில் குறிப்பிட்ட சொற்கள் அடங்கிய டெக்ஸ்ட் ஒன்று வேறு
எந்த இடங்களில் எல்லாம் உள்ளது என்று பார்க்க விருப்பப்
படுவோம். இதற்கு அந்த டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து,
பின் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்,
“Search Google for” என்பதைத் தேர்ந்தெடுப்போம்.

நேரத்தை மிச்சப்படுத்த, தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை இழுத்து
வந்து, குரோம் பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் விட்டுவிட்டால்,
நாம் தேடிய டெக்ஸ்ட் இருக்கும் இடங்கள் காட்டப்படும்.

கணக்கிடுதல்

குரோம் பிரவுசரில், Omnibox என அழைக்கப்படும் முகவரிக்
கட்டம், ஒரு கால்குலேட்டராகவும் செயல்படும். கூகுள் கால்
குலேட்டரைப் பெற்று, அதில் கணக்குகளைச் செயல்படுத்தாமல்,
அடிப்படைக் கணக்குகளை, குரோம் பிரவுசரின் முகவரிக்
கட்டத்திலேயே அமைத்து விடை பெறலாம்.
-
இதே போல, அலகுகளை மாற்றிக் காண்பதற்கும்
(Unit Conversion) இதனைப் பயன்படுத்தலாம். உடன் தேடல்
கட்டம் திறக்கப்பட்டு உங்களுக்கான விடைகள் கிடைக்கும்.


ஒலி வழி தேடல்
-
தேடல் கட்டத்தில், நாம் டெக்ஸ்ட் அமைத்துத் தேடுவோம்.
இதற்குப் பதிலாக, தேடல் கட்டத்தில் உள்ள மைக் ஐகானில்
கிளிக் செய்து, நாம் தேட வேண்டியதைச் சரியாகக் கூறினால்,
பதில் கிடைக்கும். ஏதேனும் ஓர் இணைய தளத்தினைத் திறக்க
வேண்டும் என்றாலும், இதில் “கேட்டுப்” பெறலாம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள் Empty Re: குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்

Post by rammalar Fri 19 Aug 2016 - 13:01

இணையப் பக்கத்தினை பி.டி.எப். பைலாக மாற்ற

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை, அப்படியே
பி.டி.எப். வடிவில் மாற்ற, அதனைக் காப்பி செய்து, பின் பி.டி.எப். வடிவில்
மாற்றித் தரும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் எல்லாம் திறந்து பயன்படுத்த
வேண்டியதில்லை.
-
குரோம் பிரவுசர் இதற்கான திறனைக் கொண்டுள்ளது. முதலில் அந்த
இணையப் பக்கத்தினைத் திறந்து கொள்ளுங்கள். பின் CTRL+P
அழுத்தவும். இனி, பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில், பிரிண்ட்
எப்படி இருக்க வேண்டும் (Print Destination) என்பதில்,
“Save as PDF” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து சேவ் பட்டன்
அழுத்தினால், நீங்கள் தேர்ந்தெடுத்த இணையப் பக்கம், பி.டி.எப். வடிவில்
சேவ் செய்யப்படும்.
-
கூகுள் குரோம் பிரவுசர், ஒவ்வொரு இணைய தளப் பக்கத்தையும் 
பதிவு செய்து “கேஷ்” பைலாக வைத்துக் கொள்கிறது. உங்கள் இணைய 
இணைப்பின் வேகத்தில் பிரச்னை ஏற்பட்டு, ஓர் இணையதளப் பக்கம் 
திறப்பதில் அதிகமான நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றால், 
கூகுள் சேவ் செய்து வைத்துள்ள கேஷ் பைலில் இருந்து பெற்றுப் பார்க்கலாம். 
இதற்கு, முகவரிக் கட்டத்தில், “cache: website” என டைப் செய்திடவும். 
Website என்ற இடத்தில், குறிப்பிட்ட இணைய தள முகவரியை அமைக்கவும். 
அந்த இணைய தளப் பக்கத்தின், அண்மைக் காலத்திய சேவ் செய்யப்பட்ட 
கேஷ் பைல் திறக்கப்பட்டு, அப்பக்கம் காட்டப்படும்.
-


பின் தொடராதே

கூகுள் குரோம் பிரவுசர் மூலம் நாம் இணைய தளங்களைப்
பார்க்கையில், நம் தேடல்கள் அனைத்தையும், குரோம் பதிவு
செய்து கொள்கிறது. அந்த அடிப்படையிலேயே, கூகுள் நீங்கள்
பயன்படுத்தும் அனைத்து தளங்களிலும், நீங்கள் தேடும்
பொருட்கள் குறித்த விளம்பரங்களை, நீங்கள் கேட்காமலேயே
காட்டுகிறது. எடுத்துக் காட்டாக,

ஒரு ‘டி.வி.’ வாங்குவதற்காக, நீங்கள் இணைய தளத்தில் தேடி இ
ருந்தால், நீங்கள் பார்க்கும் மற்ற இணைய தளங்களின் இடையே,
கூகுள் தன்னிடம் டி.வி. நிறுவனங்கள் கொடுத்த விளம்பரங்களைக்
காட்டும். இதில் என்ன வேடிக்கை என்றால், நீங்கள் ‘டி.வி.’ வாங்கிய
பின்னரும் இந்த விளம்பரங்கள் உங்கள் தேடலில் காட்டப்பட்டுக்
கொண்டே இருக்கும். இதனை நிறுத்து என்று கூகுள் நிறுவனத்திடம்
சொல்ல முடியாது, உங்களின் தேடல்களைப் பதிவு செய்து
கொள்வதனால் தானே, இந்த விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்
படுகின்றன. இந்த பதிவுகளை நிறுத்திவிட்டால் வராது அல்லவா!

அதற்காக குரோம் பிரவுசர் தரும் வழிகளைக் காணலாம்.
இதற்கு ‘Do Not Track’ என்னும் ஆப்ஷனை இயக்கி வைக்க
வேண்டும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள, வலது மேல்புறம்
உள்ள மெனு பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில்,
‘Settings’ என்பதில் கிளிக் செய்திடவும். செட்டிங்ஸ் பக்கத்தில்,
கீழாகச் சென்று, “Show advanced settings” என்பதில் கிளிக்
செய்திடவும். இங்கு காட்டப்படும் பிரிவுகளில், Privacy என்ற
பிரிவின் கீழ், Send a ‘Do Not Track’ request with your
browsing traffic என்பதன் அருகே உள்ள கட்டத்தில் டிக்
அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். பின்னர், ஓ.கே. கிளிக் செய்து
வெளியேறவும்.
-
குறிப்புகள் எழுத

கூகுள் குரோம் பிரவுசரில், இப்போது, குறிப்புகள் எழுத தனியே
எந்த ஒரு எக்ஸ்டன்ஷன் புரோகிராமினையும் பதிந்திட
வேண்டியதில்லை. உங்கள் பிரவுசரின் முகவரி கட்டத்தில்
data:text/html, என்று டைப்
செய்து என்டர் தட்டவும். உடன், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
விண்டோ நீங்கள் எடிட் செய்திடும் வகையில் கிடைக்கும். எங்கு
நீங்கள் குறிப்பு எழுத வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரைக்
கொண்டு சென்று வைத்து, எழுதலாம்.

மேலே காட்டப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தும், குரோம் பிரவுசரை
நாம் பயன்படுத்துகையில், விரைவாக நமக்குத் தேவையான
வசதிகளைப் பெறும் வகையில் தரப்பட்டவையே.

——————————–
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள் Empty Re: குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்

Post by பானுஷபானா Sat 20 Aug 2016 - 15:43

நல்ல தகவல் நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள் Empty Re: குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum