சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

சிந்துவின் எழுச்சியால் 2016-ல் இந்திய பாட்மிண்டன் மீது குவிந்த கவனம் Khan11

சிந்துவின் எழுச்சியால் 2016-ல் இந்திய பாட்மிண்டன் மீது குவிந்த கவனம்

Go down

சிந்துவின் எழுச்சியால் 2016-ல் இந்திய பாட்மிண்டன் மீது குவிந்த கவனம் Empty சிந்துவின் எழுச்சியால் 2016-ல் இந்திய பாட்மிண்டன் மீது குவிந்த கவனம்

Post by rammalar Wed 28 Dec 2016 - 4:55

சிந்துவின் எழுச்சியால் 2016-ல் இந்திய பாட்மிண்டன் மீது குவிந்த கவனம் Sindhu_3109079f

2016… இந்திய பாட்மிண்டன் விளையாட்டின் பொன்னான ஆண்டு.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னாவால் இயலாமல் போனாலும்,
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று ரசிகர்களின் பதக்க தாகம் தீர்த்தார்
சிந்து.


முன்னிலை நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் காயத்தால்
அறுவை சிகிச்சை மேற்கொள்ள, அவரது இடத்தை ஒலிம்பிக்
போட்டிகளில் சிந்து நிறைவு செய்தது சிறப்பு.


ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்துடன் உலக பாட்மிண்டன் அரங்கில்
சிந்து தன்னை சக்திவாய்ந்த ஒரு வீராங்கனையாக உருவாக்கிக்
கொண்டுள்ளார். சாய்னா நெவால் காயமடைந்ததினால் இழந்ததை
சிந்து பதிலீடு செய்தார். எனவே, இந்திய பாட்மிண்டன் வானில்
உதித்த வெள்ளித்தாரகை சிந்து என்றால் அது மிகையாகாது.


சிந்துவின் பயிற்சியாளர் புலெலா கோபிசந்த் 2 ஒலிம்பிக்
பதக்கங்களை வெல்ல காரணமாக இருந்த ஒரே இந்திய
பயிற்சியாளராக துரோணாச்சாரியார் விருது பெற்றார்.


ஆண்டின் முதல் பகுதியில் சாய்னாவின் காயங்களுடனான
போராட்டமே ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் அப்போது
ஒலிம்பிக்குக்கு சாய்னாதான் சிறந்த தேர்வு என்ற கருத்தே
பெரும்பாலும் இருந்து வந்தது. காயத்திலிருந்து மீண்ட சய்னா
ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸை வென்றார்.


சிந்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 வெண்கலம் வென்றார்.
ஆனாலும் சில போட்டித் தொடர்களில் இறுதிப் போட்டிகளில்
வெல்ல முடியாது ரன்னராக வந்ததால் ஒலிம்பிக் தங்கப் பதக்க
மங்கையாக சிந்துவை ஒருவரும் கணிக்கவில்லை.
ஆனால், ஒலிம்பிக்கில் இந்த முன் அனுமானங்களை மாற்றினார்
சிந்து.


காயம் காரணமாக முழுதும் குணமடையாத சாய்னா 2-வது சுற்றில்
வெளியேறி அதிர்ச்சி அளிக்க, சிந்து வெற்றிகளைக் குவித்து
ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை
என்ற வரலாற்றை நிகழ்த்தினார்.


இதற்குப் பிறகு சாய்னாவுக்கு மும்பையில் அறுவை சிகிச்சை நடந்தது.
அதன் பிறகு நீண்ட நாள் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள
தேவைப்பட்டது. அப்போது சிந்து தனது ஒலிம்பிக் புகழ் மழையில்
நனைந்து கொண்டிருந்தார்.


ஒலிம்பிக் புகழ் மட்டுமல்லாது சீன ஓபன் தொடரை வென்ற சிந்து
இதனை வென்ற 3-வது இந்திய வீரர் என்ற சாதனையுடன் இன்னொரு
வரலாறு படைத்தார்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிந்துவின் எழுச்சியால் 2016-ல் இந்திய பாட்மிண்டன் மீது குவிந்த கவனம் Empty Re: சிந்துவின் எழுச்சியால் 2016-ல் இந்திய பாட்மிண்டன் மீது குவிந்த கவனம்

Post by rammalar Wed 28 Dec 2016 - 4:55

2016 குறித்து பி.வி.சிந்து கூறும்போது, “இந்த ஆண்டு எனக்கு அற்புத
ஆண்டுதான். ஒலிம்பிக் பதக்கம் ஒரு பெரிய சாதனை. என் கனவு
நனவான தருணம். மேலும் சீன ஓபன் தொடரில் வெல்ல வேண்டும்
என்று நினைத்தேன்; அதுவும் நிறைவேறியது. நிச்சயமாக நம்பர் 1
இடத்தைப் பிடிப்பதே குறிக்கோள். இதுவரை சிறந்த இடமான 6-ம்
இடத்தை சாதித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.


இதே நிலை தொடரும் மேலும் முன்னேற்றமடைய 2017
கைகொடுக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.



சிந்து நட்சத்திரமாக உருவெடுத்த நிலையில், சாய்னா ஆஸ்திரேலிய
சூப்பர் சீரிசை வென்றார், கே.ஸ்ரீகாந்த் ரியோ ஒலிம்பிக்கில்
காலிறுதிக்கு முன்னேறினார்.



மேலும், சையத் மோடி சர்வதேச சாம்பியன்ஷிப்பில் லக்னோவில்
பட்டம் வென்றார். எச்.எஸ்.பிரணாய் சுவிஸ் ஓபன் கிராண்ட் ப்ரீ
வென்றார் என்று இந்திய பாட்மிண்டன் குறிப்பிடத்தகுந்த
சாதனைகளை 2016-ல் நிகழ்த்தியுள்ளது.



ஆடவர் ஒற்றையரில் சவ்ரவ் வர்மா நீண்ட கால காயத்திலிருந்து
மீண்டு சீன தைபே கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன் தொடரை
வென்றதோடு, பிட்பர்கர் ஓபனில் ரன்னர் பரிசு வென்றார்.



பி.சாய் பிரணீத் கனடா கிராண்ட் ப்ரீயை வென்று தன் முதல்
சாம்பியன் பட்டத்தை பதிவு செய்தார், சமீர் வர்மா சீனியர்
நேஷனல் சாம்பியனானதோடு, ஹாங்காங் ஓபனில் ரன்னராக
வந்தார். அஜய் ஜெயராம் நெதர்லாந்து ஓபன் கிராண்ட் பிரீயில்
ரன்னராக வந்தார்.



இரட்டையரில் மனு அட்ரி மற்றும் பி.சுமீத் ரெட்டி ஆகியோர்
கனடா ஓபனை வென்று முதன் முதலில் ஒலிம்பிக்
பாட்மிண்டனுக்கு தகுதி பெற்ற ஆடவர் இரட்டையர் என்ற
சாதனையை நிகழ்த்தினர்.



கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெரி சோப்ரா மற்றும்
சிக்கி ரெட்டி ஆகியோரும் 2016-ல் 2 கிராண்ட் பிரீக்களை பிரேசில்
மற்றும் ரஷ்யாவில் வென்றனர். ஸ்காட்லாந்து ஓபனில்
ரன்னர்களாக வந்தனர்.



இளம் ருத்விகா ஷிவானி காதே என்ற வீராஙனையும் ரஷ்யாவில்
ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றார்.



மே மாதம் உபர் கோப்பையில் சாம்பியன் சீனாவிடம் 0-3 என்று
தோற்றாலும் இந்திய மகளிர் பாட்மிண்டன் அணி வெண்கலம்
வென்றது. மற்றொரு இரட்டையர் இணையான ஜ்வாலா குட்டா,
அஸ்வினி பொன்னப்பா தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்
தகுதி பெற்றனர். ஆனால் இந்த ஜோடி இந்த ஆண்டு பிரிந்து
வெவ்வேறு வீரர்களுடன் இணைந்துள்ளனர்.



ஆடவர் பாட்மிண்டன் பிரிவுக்கு 2016-ம் ஆண்டு கடும் சவாலாக
அமைந்தது. பலர் காயமடைந்தனர், பெரிய அளவுக்கு போட்டித்
தொடர்களில் பங்கேற்றாலும் உடற்தகுதி அவர்களது
முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது.

——————————ஆர்.முத்துக்குமார்
தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum