Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அனிதாவை வாழ்த்துவோம்
2 posters
Page 1 of 1
அனிதாவை வாழ்த்துவோம்
அனிதா ராஜ்...
எண்ண ஓவியம் என்ற வலைப்பூவில் எழுதி வந்தவர்... (கவனிங்க) ஆமா இப்ப எழுதுவதில்லை. சிங்கப்பூரில் இருக்கும் போது எண்ணச் சிதறல்களை எல்லாம் எண்ண ஓவியமாய் பகிர்ந்து கொண்டவர். குட்டிக் குட்டியாய்... அழகாய்... அருமையாய்... கருத்துள்ளதாய் பதிவுகள் எழுதுவார். ஸ்கைப் மூலமாக அவருக்கு தெரிந்த ஒரு ஆசிரியரை வைத்து உலகம் முழுவதும் இருக்கும் நட்புக்களை இணைத்து வாராவாரம் வகுப்பெடுக்க வைத்தவர். நானும் சில வாரங்கள் அந்த ஜோதியில் இணைந்திருந்தேன். மிகச் சிறந்த இலக்கியவாதி. இவரின் கதைகள் மிகவும் அருமையானவை... ஆனால் அதிகம் கதைகள் எழுதுவதில்லை... சின்னச் சின்னதாய் நம்மைக் கவரும் கவிதைகள்தான் இவரின் ஸ்பெஷல்.
'வலைச்சர ஆசிரியராய்' ஒரு வாரம் சீனா ஐயாவின் அழைப்பில் எழுதிய போது முதல் பதிவான அவரைப் பற்றிய அறிமுகத்தில்....
”ஸ்ங்கீத் ராஜ் அம்மா நான்”. இதை சொல்லிக்கொள்வதில் அத்தனைப் ஆனந்தம் எனக்கு. எனது முழு உலகம் அவனை சுற்றி மற்றுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்புறம் ஒரு புத்தகப் புழு. பசியே எடுக்காது புத்தகத்தை கையில் கொடுத்துவிட்டால் போதும். பரிட்சைக்கு முன்னால் கூட நாவல் படிச்சுட்டு போகற ஆளு நான்… எதிர் கேள்வி கேட்டே பொழப்ப ஓட்டும் ஆள்... சோம்பேறித்தனத்தால் நிறைய எழுதாமல் விட்ட ஜீவன் நண்பர்களைப் பாடாய் படுத்தும் இராட்சசி(”கொடூர“ சேர்த்துக்க சொல்லி மனுதாக்கல் பண்ணியதை தள்ளுபடி செய்துட்டேன்) இப்படி என்னைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை நன்றாக தெரிந்தவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை ”பாவம் மோகன்”...
என்பதாய்த் தொடரும்... இதில் மோகன் யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். முழுப்பதிவும் படிக்க வலைச்சரம் போங்க. இங்க முழுப்பதிவும் போட்டா நான் எழுத நினைத்ததை எழுத முடியாமப் போயிடும்.
நண்பன் தமிழ்காதலன் மற்றும் காயத்ரி அக்கா மூலமாக என்னை அறிந்து இணைய அரட்டையில்தான் தொடர்பில் வந்தார். குமார் என்று அழைத்து தன் அன்பை.... பாசத்தை... நேசத்தை... முதல்நாளே எனக்குத் தெரிய வைத்தவர். வலைச்சரத்தில் நண்பர்களுக்கான பதிவில் அவர் என்னை தனது அண்ணனாகச் சொல்லியிருப்பார். இதைவிட வேறென்ன வேண்டும் இந்த எழுத்துக்கு... சொல்லுங்க... உலகம் முழுவது உறவுகளால் நிரப்பி வைத்திருக்கிறது அல்லவா இது.
சிங்கப்பூரில் இருக்கும் வரை எழுதிக் கொண்டிருந்தார் என்றாலும் அவர் சொல்லியிருப்பது போல் பெரிய சோம்பேறிதான்... முகநூலில் எழுதிய மௌனச் சிதறல்களை எல்லாம் தொகுத்துத் தரச் சொன்னார்... நானும் ரொம்பப் பொறுமையாத் தொகுத்துக் கொடுத்தேன். புத்தகமாகக் கொண்டு வரணும் குமார் என்று சொன்னார்... சொன்ன ஆண்டு 2013. பாத்துக்கங்க... என்னோடு சேர்றவங்க எல்லாம் என்னைப் போலவே சோம்பேறியாவே இருக்காங்க அதுதான் ஏன்னு தெரியலை... நிஷா அக்கா போன்ற சிலர் இதில் விதிவிலக்கு. சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு சென்ற பின்னர் முகநூலிலும் வலையிலும் அதிகம் காண முடிவதில்லை. சல்லிக்கட்டு போராட்டத்தின் போது முகநூலில் ஒரு பகிர்வு பார்த்தேன்.
சிங்கப்பூரில் 'சிங்கப்பூர் கிளிஷே' என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த போது எனது கதையையும் ஒரு முறை அதில் பிரசுரித்தார். எனது கதைகள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பல கதைகள் குறித்து பெரிய விவாதமே செய்திருக்கிறார். சிறந்த படைப்பாளி என்பதைவிட மிகச் சிறந்த படிப்பாளி... எதாவது வாசித்துக் கொண்டே இருப்பார்... அப்பல்லாம் நான் புத்தக வாசிப்பின் பக்கமே செல்வதில்லை. அதை வாசித்தேன்... இதை வாசித்தேன் என்று சொல்லி, நீங்களும் வாசிங்க என இணைய முகவரி எல்லாம் அனுப்புவார்... நான் அதெல்லாம் வாசிப்பதில்லை என்பதைத் சொல்லியா தெரியவேண்டும். அதேபோல் இப்பவும் வாசிப்பில்தான் இருப்பார் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னை வந்தியத்தேவன் மூலம் வாசிப்பிற்குள் அழைத்து வந்தவர் சகோதரர் தமிழ்வாசி. இப்ப நிறைய வாசிக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாது.
ஈரோடு கதிர் அண்ணன் அவர்களின் 'அப்பா' சிறுகதையை தனது குரலில் கதைக்கு ஏற்ப, ஏற்ற இறக்கத்தில் மிக அழகாக ஒலிப்பதிவு செய்திருப்பார். அதைக் கேட்டுவிட்டு ரொம்ப அருமையா இருக்கு என்ற போது உங்களது கருத்தப் பசு கதை என்னை ரொம்ப கவர்ந்திருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதையும் ஒருநாள் ஒலிப்பதிவு செய்து அனுப்புறேன்னு சொன்னார்.... சொன்னார்தான்... அதிகமில்லை ஒரு ஐந்து வருடத்துக்குள்தான் இருக்கும்... இன்னும் ஆவலாய்த்தான் இருக்கிறேன். அனுப்பத்தான் காணோம்.
இப்ப எப்பவாவது முகநூலில் பதிவு போடுவார்... லைக் பண்ணுவதுடன் சரி... சிங்கையில் இருக்கும் போது நிகழ்ந்த விவாதங்கள் எல்லாம் இல்லை என்றாலும்... தற்போது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தாலும் ... இன்னும் அன்புத் தங்கையாய் என் மனசுக்குள்... நானும் அண்ணனாய் அவர் மனசுக்குள் இருப்பேன் என்பது மட்டும் உண்மை.
இன்று அந்த அன்புத் தங்கை அனிதா ராஜ் அவர்களுக்கு பிறந்தநாள்.
என் இனிய வாழ்த்துக்களுடன்... உங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் அவருக்குச் சொல்லுங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
அனிதாவிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும்... அது மீண்டும் எழுதுங்கள் என்பதே...
சாதாரணமானது கூட அதீத
அழகுடன் திகழ்கிறது அன்பெனும்
கண்ணாடி வழி காணும் போது
-அனிதா ராஜ்
வாழ்க வளமுடன் நலமுடன்....
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: அனிதாவை வாழ்த்துவோம்
தங்கை அனிதாவைப் பற்றிய விமர்சனம் அருமை என் வாழ்த்தையும் சொல்லிடுங்க குமார்
இனிய பிறந்த தின வாழ்த்துகள் அனிதா....
இனிய பிறந்த தின வாழ்த்துகள் அனிதா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஓணம் பண்டிகை - வாழ்த்துவோம்...
» திருமணத்தம்பதிகளை வாழ்த்துவோம் நகைக்க மட்டும்...
» சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
» வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க !
» அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
» திருமணத்தம்பதிகளை வாழ்த்துவோம் நகைக்க மட்டும்...
» சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
» வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க !
» அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum