Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்க
Page 1 of 1
வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்க
---
-
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 2019 மக்களவைத் தேர்தலிலும்,
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் 3 சதவீதத்துக்கும் குறைவாக
வாக்குகளைத் தேமுதிக பெற்றிருப்பதால், அந்தக் கட்சியின்
நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதுவும், இந்த முறை அதிமுக aகூட்டணியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்த வேட்பாளர்களில், தேமுதிக வேட்பாளர்கள் இருவர் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று படுதோல்வியைச் சந்தித்து இருக்கின்றனர். இதுவும் அக் கட்சித் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை ஒரு கட்சி பெறுவதோடு, ஒரு மக்களவைத் தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாகும்.
2005-ஆம் ஆண்டு மதுரையில் மிகப் பெரிய மாநாட்டை நடத்தி தேமுதிக கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜயகாந்த். தமிழகத்தில் அதிமுக- திமுக ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக இருக்கும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே தேர்தலைச் சந்திக்கும் என்றும் அறிவித்தார்.
இதன் காரணமாக, அந்தக் கட்சி முதன் முதலில் சந்தித்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலிலேயே, 232 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அசத்தியது.
அதோடு, விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டும் வெற்றியைப் பெற்றார். கட்சித் தொடங்கிய ஓராண்டிலேயே தேர்தலைச் சந்தித்து 8.38 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கடுத்து வந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து களம் கண்டது. இந்தத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும், ஒட்டுமொத்தமாக 31 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. பதிவான வாக்குகளில் இது 10.3 சதவீதமாகும்.
கட்சிக்கு பெரிய வெற்றி எதுவும் இல்லாவிட்டாலும், தேமுதிக-வின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
வாக்குறுதிக்கு மாறாக கூட்டணி: இந்தச் சூழலில், 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், கட்சி ஆரம்பித்தபோது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. இதில் 29 இடங்களை அக் கட்சி கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் கட்சி பெற்ற ஒட்டுமொத்த வாக்கு 7.9 சதவீதமாக குறைந்தது.
இந்தத் தேர்தலுக்குப் பிறகு, அக் கட்சி தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. இதில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்ததோடு, கட்சியின் வாக்கு சதவீதமும் 5.1 ஆக சரிந்தது.
ஒட்டுமொத்தமாக 20 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகளை மட்டுமே தேமுதிகவால் பெற முடிந்தது. இதைத் தொடர்ந்து 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்று 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. கட்சியின் வாக்கு சதவீதமும் 2.39 ஆக சரிந்தது. அக்கட்சி வெறும் 10 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது.
இப்போது 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி, வடசென்னை ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் அக் கட்சி தோல்வியைச் சந்தித்ததோடு, அக் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 2.19 சதவீதமாக குறைந்துள்ளது.
அங்கீகாரம் ரத்தாகும் நிலை: ஒரு மாநில கட்சி அங்கீகாரம் பெற அல்லது அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அந்த மாநிலத்தில் பதிவாகியிருக்கும் ஒட்டுமொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதோடு, ஒரு மக்களவைத் தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்கவேண்டும்.
அல்லது, 6 சதவீத வாக்குகளையும், 2 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் ஒரு கட்சி பெற்றிருக்கவேண்டும். அல்லது, ஒட்டுமொத்த சட்டப்பேரவை உறுப்பினர் இடங்களில் 3 சதவீத உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 2 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
ஆனால், தொடர்ந்து இரண்டு தேர்தல்களிலும் 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கும் தேமுதிகவுக்கு, அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டிருப்பதோடு, வரும் தேர்தல்களில் அக் கட்சிக்கு முரசு சின்னம் கிடைப்பதும் சந்தேகம்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
கூட்டணியில் மிகக் குறைந்த வாக்குகள் பெற்று தோல்வி
2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட வேட்பாளர்களில், தேமுதிக வேட்பாளர்கள் இருவர் மட்டும்தான் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று படு தேல்வியைச் சந்தித்துள்ளனர்.
வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மிகக் குறைந்த அளவாக 13.55 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படு தோல்வியைச் சந்தித்துள்ளார்.
இவருக்கு அடுத்தப்படியாக திருச்சி தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 15.46 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் 17.89 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மற்ற வேட்பாளர்கள் அனைவரும் 20 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
-
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஆசிரியை வாக்கு அருள் வாக்கு!
» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
» காதலர் தின ரிலீஸ்: சோகத்தில் நடிகைகள்
» காதலர் தின ரிலீஸ்: சோகத்தில் நடிகைகள்
» படிக்காதவர்களுக்கும் தேமுதிக ஆட்சியில் வேலை
» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
» காதலர் தின ரிலீஸ்: சோகத்தில் நடிகைகள்
» காதலர் தின ரிலீஸ்: சோகத்தில் நடிகைகள்
» படிக்காதவர்களுக்கும் தேமுதிக ஆட்சியில் வேலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum