Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிறந்தநாள் பரிசு!
Page 1 of 1
பிறந்தநாள் பரிசு!
குமாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தூங்கி எழுந்திருக்கும்
போதே தலையணை அருகில் பிறந்த நாள் வாழ்த்து
அட்டை! ஒரு புதுப்பேனா! அண்ணா வைத்திருந்தார்.
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, தங்கை எல்லோரும்
அவனுக்கு வாழ்த்துச் சொன்னார்கள். அம்மா இனிப்பு
தயாரித்திருந்தார். அப்பா கேக் வாங்கி வைத்திருந்தார்.
புத்தாடைகள் வேறு!
பள்ளிக்கூடத்தில் இறைவணக்கம் முடிந்ததும் தலைமை
ஆசிரியர், “இன்றைய பிறந்த நாள் மாணவன் …குமார்!…”
எனக் கூறினார். உடனே அனைத்து மாணவர்களும் பிறந்த
நாள் கீதம் பாடி அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தலைமை ஆசிரியர் திருக்குறள் புத்தகம் ஒன்றை
அவனுக்குப் பரிசாக வழங்கினார்.
மாலையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி! தனக்கு வந்த பிறந்த
நாள் பரிசுகளைப் பிரித்து தாத்தாவிடம் காட்டிக்
கொண்டிருந்தான் குமார்!
“பயந்து கொண்டிருந்தேன் தாத்தா!…போன வருஷம்
என்னால் பிறந்த நாள் கொண்டாட முடியவில்லை.
காலையிலேயே கடுமையான வயிற்று வலி! பள்ளிக்கூடம்
போகவில்லை…டாக்டரிடம் போய் கசப்பு மருந்து
சாப்பிடும்படியாகி விட்டது!”
தாத்தா புன்னகையுடன், “குமார், எல்லோருக்கும் பிறந்த
நாள் வருகிறது! வாழ்த்துகள் பரிமாறிக் கொள்கிறோம்…,
பரிசுகள் கொடுக்கிறோம்…., பிறகு என்ன? பழைய
நிலைக்கே திரும்பி விடுகிறோம். அதோடு அது நின்று
விடலாமா? இந்த நல்ல நாளில் நாம் ஏதேனும் உறுதி
எடுத்துக் கொள்ள வேண்டும். விடாமல் அதைப்
பின்பற்ற வேண்டும்.”
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பிறந்தநாள் பரிசு!
என்ன உறுதி தாத்தா?”
“நம்மிடம் உள்ள, மற்றவர்களுக்குப் பிடிக்காத
பழக்கங்களை விட்டுவிடலாம்…, நல்ல, பயன் தரக்கூடிய
பழக்கங்களைப் பின்பற்றலாம்!…., நம்மிடம் உள்ள தனித்
திறனை வளர்த்துக் கொள்ளலாம்!”
“நீங்க அப்படி ஏதேனும் உறுதி எடுத்துக்
கொண்டிருக்கிறீர்களா?”
“நிறைய!… குரலை உயர்த்தி, இரைந்து பேசுவது இல்லை….,
மற்றவர் மனம் புண்படும்படி பேசுவதில்லை….,ஐஸ் வாட்டர்,
ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டேன். நான்
உபயோகப்படுத்திய தட்டு. தம்ளர் போன்றவற்றை நாமே
கழுவி வைப்பது…,இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு
இயன்ற வரை உதவுவது….,
நான் பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரை எழுதுவேன்
அல்லவா? வருஷத்திற்கு ஒரு புத்தகமாவது எழுத வேண்டும்
என்று முடிவு எடுத்துக் கொண்டேன்….இன்று இருபத்தைந்து
புத்தகங்களுக்கு ஆசிரியர்.”என்று முடித்தார் தாத்தா.
“யு ஆர் கிரேட் தாத்தா!…., ஆனால் நான் ஏதை விடுவது?…
எதைப் பின்பற்றுவது? என்னிடம் என்ன தனித்திறமை
இருக்கிறது?”
“நகம் கடிக்கும் கெட்ட பழக்கம் உன்னிடம் இகுக்கிறது….
போன ஆண்டு அதனால்தான் உனக்கு வயிற்று வலி!
பிறந்தநாள் கொண்டாட முடியவில்லை! பெரியவர்களிடம்
திட்டு! சிலரின் கிண்டல் வேறு! நகம் கடிக்கும் பழக்கத்தை
விட்டு விடுவது என்று உறுதி எடுத்துக்கொண்டு முயற்சி
செய்!….
வீடியோ கேம் மற்றும் தொலைக்காட்சியில் அதிக நேரம்
செலவழிக்கிறாய்! அதைக் குறைக்க உறுதி எடுத்துக்கொள்!”
“ஓ.கே. தாத்தா!…..சரி எனக்கென்ன தனித்திறமை இருக்கிறது?”
“எதைப் படித்தாலும் அப்படியே மனதில் பதிய வைத்துக்
கொள்ளும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது! அதை
உபயோகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்!”
“எப்படி?”
“அந்தப் புத்தகத்தை எடு!”என்று தலைமை ஆசிரியர்
கொடுத்திருந்த திருக்குறள் புத்தகத்தைச் சுட்டிக்
காட்டினார் தாத்தா.
குமார் எடுத்துக் கொடுத்தான்.
“இதில் எத்தனை குறட்பாக்கள் இருக்கின்றன? தெரியுமா?”
“அறம், பொருள், இன்பம், என்ற மூன்று பிரிவுகளில்
133 அதிகாரங்கள்….ஒரு அதிகாரத்திற்குப் பத்து குறள்
வீதம் 1330 குறட்பாக்கள் இருக்கின்றன தாத்தா”
“இதில் தினம் ஐந்து குறட்பாக்களை உன்னால் மனப்பாடம்
செய்ய முடியுமா?”
“நிச்சயம் முடியும் தாத்தா!”
“எப்படித் தெரியுமா?….முதல் ஐந்து குறட்பாக்கள் மனப்பாடம்
செய்தால் மறுநாள் அந்த ஐந்தையும் சேர்த்து பத்து
குறட்பாக்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். அதற்கு அடுத்த
நாள் முதலில் படித்த பத்து பாடல்களையும் சேர்த்து பதினைந்து
திருக்குறள் மனப்பாடம் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் ஒரு வருடத்தில் 1330 திருக்குறளையும்
தடங்கல் இல்லாமல் மனப்பாடம் செய்து விடலாம்!”
“இன்றைக்கே ஆரம்பித்து விடுகிறேன்….”என்று கூறிய குமார்,
அதன்படியே உற்சாகத்துடன் படிக்கத் தொடங்கினான்.
தாத்தா அவ்வப்போது பொருள் விளக்கங்களையும் கூறி சில
பயிற்சி முறைகளையும் கற்பித்தார்.
விரைவில் 1330 குறட்பாக்களையும் தடங்கலின்றி மனப்பாடம்
செய்துவிட்டான் குமார். பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும்
பாராட்டினர். அடுத்த ஆண்டு திருச்சியில் நடந்த திருக்குறள்
ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றான்
குமார். ஆட்சித் தலைவரிடமிருந்து பரிசுகள் வாங்கி வந்தான்
குமார்.
மாநில அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டான்
குமார். அதில் வெற்றியும் பெற்றான்! அதிர்ஷ்ட வசமாக அன்று
அவனது பிறந்தநாளாகவும் அமைந்து விட்டது!
“திருக்குறள் மணி’ என்ற பட்டத்தையும், கோப்பையையும்
முதலமைச்சரிடமிருந்து பெற்றான் குமார்!
இப்போது அவனிடம் நகம் கடிக்கும் பழக்கமும் இல்லை!
தன் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்த தாத்தாவை வணங்கி
ஆசியும் பெற்றான்!
-
---------------------------------------------------
-மாயூரன்
சிறுவர் மணி

Similar topics
» பரிசு சீட்டில் இலக்கங்களை மாற்றி பரிசு பெற முயற்சி
» மலருக்கு பிறந்தநாள்
» பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
» மலருக்கு பிறந்தநாள்
» பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum