Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
சின்ன சின்ன செய்திகள்
Page 1 of 1
சின்ன சின்ன செய்திகள்
மாற்றுக...
நியூயார்க் நகரத்தில் ஒரு பிரபல நாடக அரங்கில்,
ஜார்ஜ் பெர்னார்ட்ஷாவின் "செயிண்ட் ஜோன்' என்னும்
நாடகம் நடந்து கொண்டு இருந்தது.
ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து
பார்த்து, ரசித்தார்கள்.
ஆனால் நாடகம் முடிவதற்கு அரை மணி நேரம் முன்பு,
நியூயார்க் நகர கடைசி ரயில் சென்றுவிடும். நாடகம்
முடியும்வரை பார்த்துவிட்டு, அக்கம்பக்கத்து ஊர்களுக்குச்
செல்பவர்களுக்கு, வேறு வாகன வசதிகள் எதுவும் இல்லாத
காலம்.
ஆகவே செயிண்ட் ஜோன் நாடகத்தின் இறுதிக் காட்சியை
சற்றே சுருக்கி மாற்றித் தந்தால் ரயிலில் செல்பவர்களுக்கு
வசதியாக இருக்கும் என்று நாடகக் கொட்டகைக்காரர்கள்
தந்தி கொடுத்தார்கள்.
பெர்னார்ட்ஷாவிடமிருந்து உடன் பதில் தந்தி வந்தது -
"ரயில் நேரத்தை மாற்றுக!'
-
-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
தினமணி

Last edited by rammalar on Wed 12 May 2021 - 8:51; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: சின்ன சின்ன செய்திகள்
எது அழகு?
தத்துவஞானி சாக்ரடீஸிடம் ஒருவர்
"எது அழகு?'' என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
அதற்கு சாக்ரடீஸ் அளித்த பதில்:
""பானையில் உணவு இருக்கின்றது. அதை எடுக்க
உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா?
எது பயனுள்ளதாக இருக்கின்றதோ அதுவே அழகு!''
-
-நெ.இராமன்,
-தினமணி

மனிதம்...
காமராஜர் ஒரு சமயம் வெளியூர் சுற்றுப்பயணம்
முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு இடத்தில்
நீண்ட நேரமாகத் தமது கார் நிற்பதும், ஏராளமான
வாகனங்களின் ஹாரன்கள் ஒலிப்பதும் அவரது
கவனத்துக்கு வந்தது.
காரிலிருந்து வெளியே வந்து சுற்றிலும் பார்த்தார்.
சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தில்
ஏராளமான கார்களும் வண்டிகளும் நின்று
டிராஃபிக் ஜாம் ஆகியிருந்தது.
சற்றே நடந்து பார்த்தார் காமராஜர். பாலத்தின்
நடுவே ஒரு லாரி பிரேக் டவுன் ஆகி நின்றிருப்பதும்
ஒரே ஒரு டிராஃபிக் போலீஸ்காரர் போக்குவரத்தைச்
சரிபடுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
உடனே காமராஜர் அவரருகே சென்று அவருக்கு
உதவி செய்து போக்குவரத்தைச் சரிப்படுத்திவிட்டுத்
தனது காருக்குத் திரும்பி வந்து தனது பயணத்தைத்
தொடர்ந்தார். அதுமட்டுமல்லாமல் சைதாப்பேட்டை
காவல் நிலையத்துக்குச் சென்று இதுபோன்ற
இடங்களில் இன்னொருவரைக் கூடுதலாக நியமித்துப்
போக்குவரத்தைக் கட்டுப்படுத்துங்கள் என்று
கட்டைளையிட்டு விட்டுத் தமது அலுவலகம்
திரும்பினார்.
-சு.இலக்குமண சுவாமி, மதுரை.
தினமலர்

கவனம்..
இந்திய விடுதலைப் போர் நடந்த காலகட்டத்தில்
தூத்துக்குடியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம்
நடந்து கொண்டிருந்தது. அதில் கப்பலோட்டிய
தமிழன் வ.உ.சிதம்பரமும் கலந்து கொண்டார்.
முதலில் ஒரு தொண்டர் ஆவேசமாகப் பேச
ஆரம்பித்தார்.
பேச்சின் இடையே, ''வெள்ளைக்காரர்கள் மூட்டை
முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு உடனே இந்தியாவை
விட்டு வெளியேற வேண்டும்'' என்றார்.
இதைக் கேட்டதும் மேடையில் அமர்ந்திருந்த வ.உ.சி.
எழுந்தார். மைக்கின் அருகில் வந்து,
"மூட்டை முடிச்சுகள் நம்முடையவை. வெள்ளையர்கள்
வெறுங்கையுடன்தான் வெளியேற வேண்டும்'' என்றார்.
இதைக் கேட்டதும் கூட்டத்தினர் பலத்த ஆரவாரத்துடன்
கைதட்டினார்கள்.
சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் ஒவ்வொரு
பேச்சிலும் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள்
என்பது இந்நிகழ்ச்சி மூலம் தெளிவாகிறது.
-அ.கற்பூரபூபதி, சின்னமனூர்.

இரக்கம்...
நேதாஜி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட
சுபாஷ் சந்திரபோஸ் பள்ளியில் படிக்கும் காலத்தில்
நடந்த நிகழ்ச்சி இது.
அவரும் அவரது சகோதரரும் பள்ளிக்குச் செல்லும்
போது தின்பண்டங்கள் வாங்கிக் கொள்வதற்காக
அவர்களது பெற்றோர் கொஞ்சம் பணம் கொடுப்பது
வழக்கம்.
ஆனால் சுபாஷ் மட்டும் அந்தக் காசுகளுக்கு எதுவும்
வாங்கிச் சாப்பிடாமல், அதைச் சேர்த்து வைத்து
தெருவோர பிச்சைக்காரர்களுக்கு அளித்து
மகிழ்வாராம்.
இது போதாதென்று சமயங்களில் பள்ளிக்கு பஸ்ஸில்
செல்லாமல் நடந்தே சென்று அதனால் மிச்சப்படும்
பயணக்காசையும் ஏழைகளுக்குத் தானமாகக் கொடுத்து
மகிழ்வாராம்.
அந்தச் சிறுவயதிலேயே எத்தகைய ஈர மனம்..!
-
-மு.தனகோபாலன், திருவாரூர்.

தேர்வு!
காமராசர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த
நிகழ்வு இது. எம்.பி.பி.எஸ். விண்ணப்பதாரர்களுக்கான
இடங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு காமராசரிடம்,
"உங்களுடைய கோட்டா 20 சீட்கள் மிச்சமிருக்கின்றன''
என்று அதிகாரிகள் கூறினர்.
உடனே விண்ணப்பங்களை வாங்கி மளமளவென்று
20 மாணவர்களைத் தேர்வு செய்து தந்தார் காமராசர்.
எந்த அடிப்படையில் தேர்வு செய்தார் என்பதை
அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவரிடமே அதைக் கேட்டார்கள்.
அதற்கு காமராசர், "நான் தேர்வு செய்த மாணவர்களின்
பெற்றோர்கள் அனைவருமே எழுதப்படிக்கத்
தெரியாதவர்கள். எல்லோரும் விண்ணப்பத்தில் கைநாட்டு
போட்டிருக்கிறார்கள். இதைப் பாருங்கள்'' என்று கூறினார்.
அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு, காமராசரின் சமுதாய
அக்கறையை நினைத்துப் பார்த்து வியந்து போனார்கள்.
-
-மறை.மு.தருமையன், முத்துப்பேட்டை.

வீரம்!
ஒரு படைவீரனை நெப்போலியன் முன் கொண்டு
வந்து நிறுத்தினார் ஓர் உயர் அதிகாரி
. "இவன் திறமையுள்ள போர்வீரன் இல்லை. எனவே
இவனைப் படையில் இருந்து விலக்க வேண்டும்'
என்று குற்றம் சாட்டினார் உயர் அதிகாரி.
"ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?' என்று நெப்போலியன்
உயர் அதிகாரியைப் பார்த்துக் கேட்டார். அதற்கு
அவர், "எதிரிகளின் தாக்குதலில் இவன் மீண்டும்
மீண்டும் ஒன்பது முறை கீழே விழுந்து விட்டான்.
பிறகும் எழுந்து எழுந்து போரிடுகிறான்' என்றார்
அந்த அதிகாரி.
உடனே நெப்போலியன் அந்த வீரனைப் பார்த்து,
"ஒன்பது முறை கீழே விழுந்தாலும் சோர்ந்து விடாமல்
மீண்டும் மீண்டும் போரிட்டிருக்கிறாயே, நீ சிறந்த
வீரன்தான். உன்னை நான் பாராட்டுகிறேன்' என்றார்.
-
-கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோவில்.

ஏன்!
ட்வைட் மார்ரோ என்கிற புகழ்பெற்ற அமெரிக்கத்
தொழிலதிபருக்கு நினைவாற்றல் மிகவும் குறைவு.
தனது பெயரைக்கூட மறந்துவிடக் கூடிய அளவுக்கு
ஞாபக மறதி அவருக்குண்டு.
ஒருநாள் ஏதோ அலுவலாய் வெளியே கிளம்பியவர்
பாதாள ரயில் ஒன்றில் ஏறினார். வண்டி புறப்பட்டு
விட்டது. கண்டக்டர் வந்தார். ""டிக்கட்
வாங்கியிருக்கிறீர்களா, காட்டுங்கள்...'' என்றார்.
மார்ரோவுக்கு டிக்கட் வாங்கினோமா,
வாங்கவில்லையா என்ற ஞாபகம்கூட இல்லை.
எனினும் கோட்டுப் பை, சட்டைப்பை எல்லாம் தேடு
தேடு என்று தேடினார். ஆனால் டிக்கட்
அகப்படவில்லை.
கண்டக்டர் அவரை யார் என்று அடையாளம் கண்டு
கொண்டு, ""பரவாயில்லை ஐயா...'' என்றார்.
கண்டக்டர் பேச்சைக் காதிலேயே வாங்கிக்
கொள்ளாமல் டிக்கட்டைத் தேடும் வேலையில்
மும்முரமாக இருந்தார் மார்ரோ.
""நான்தான் டிக்கட் இல்லையென்றால் பரவாயில்லை
என்றேனே. ஏன் சிரமப்படுகிறீர்கள்?'' என்று கேட்டார்
கண்டக்டர்.
""நீ வேண்டாம் என்றால் போச்சா...?
எனக்கு அது முக்கியம்! அதைப் பார்த்துத்தானே எங்கே
போக வேண்டும் என்று நான் தெரிந்து கொள்ள முடியும்''
என்றாரே பார்க்கலாம்.
-
-ஜே.மகரூப், குலசேகரன்பட்டினம்.

பெருமை!
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப்
பணிபுரிந்து கொண்டிருந்த காலம் அது.
ஒரு நாள் தலை முடியை வெட்டி சீர் செய்வதற்காக
கடைவீதிக்குச் சென்றார்.
வீதியில் பெரும்பாலும் வெள்ளையர்களின் முடி அலங்கார
நிலையங்களே இருந்தன. அவர்கள் யாரும் கருப்பரான
காந்திக்கு முடி வெட்ட மறுத்தனர்.
காந்தியடிகள் ஒரு கத்திரிக்கோல் வாங்கி, தானே முடியை
வெட்டிக் கொண்டார். அவருக்குச் சரியாக முடி வெட்டத்
தெரியாததால் தலை அலங்கோலமாகக் காணப்பட்டது.
அதைப் பொருட்படுத்தாமல், காந்தியடிகள் நீதிமன்றப்
பணிக்குச் சென்றார்.
அங்கிருந்த வெள்ளைக்கார வழக்குரைஞர்கள், "காந்தி,
உமது தலையை எலி கடித்துவிட்டதா?' என்று கிண்டலடித்தனர்.
காந்தி பொறுமையாக, "நண்பர்களே, எனக்குச் சேரவேண்டிய
பெருமையை எலிக்குக் கொடுப்பதை ஆட்சேபிக்கிறேன்.
எல்லாம் என் கைவண்ணமே...' என்று சிரித்துக் கொண்டே
சொன்னார்.

Similar topics
» சின்ன சின்ன ஆன்மீக செய்திகள்
» சின்ன சின்ன சினிமா செய்திகள்..!
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» சின்ன பையன் சின்ன பெண்ணை காதலிச்சா என்னவரும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|