சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி Khan11

தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி

Go down

தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி Empty தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி

Post by rammalar Fri 10 Feb 2023 - 18:30

இந்திய ஒற்றுமைக்காக பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் அல்லவா ராகுல் காந்தி..? அப்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகியிருக்கிறது. அதில், சுவாரஸ்யமான பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவற்றின் ஹைலைட்ஸ் மட்டும் இங்கே…
தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி Main-qimg-a0a91b091fe0dc11f905aa0128890acf-lq
உணவு
அசைவ உணவுகளை அதிகம் விரும்பும் எனக்கு சிக்கன் கபாப் (Chicken kebab), ஆம்லெட், ஷீக் கபாப் (Seekh Kebab – அரைத்த இறைச்சியில் செய்யப்படும் உணவு) ஆகிய உணவுகள் பிடித்தமானவை. காலையில் மட்டும் தினமும் காபியை விரும்பிக் குடிப்பேன். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை கூடிய வரையில் தவிர்த்துவிடுகிறேன்.
அரிசி சாதம் அல்லது கோதுமை ரொட்டி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்றால் நான் ரொட்டியை தேர்ந்தெடுப்பேன். பலாப்பழம், பட்டாணி ஆகியவை பிடிக்காது.
தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி Main-qimg-04100bea0dec0850ac45af332ac265ff-lq
படிப்பு
பாட்டி இந்திரா காந்தி இறக்கும்வரை போர்டிங் ஸ்கூலில் இருந்தேன். அவரது படுகொலைக்குப் பிறகு என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிலேயே படிக்கவேண்டி வந்தது. அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் ஓராண்டு வரலாறு படித்தேன். பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பற்றி படித்தேன்.
தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி Main-qimg-480daa9850d1f2017287318a6e6b3264-lq
அப்பா ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்து மாறவேண்டி வந்தது. பின்னர் ஃப்ளோரிடாவில் உள்ள ரோலிங்ஸ் கல்லூரியில் சர்வதேச உறவுகள் மற்றும் பொருளாதாரம் படித்தேன். அதன் பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் முடித்தேன்.
தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி Main-qimg-3b1204e0f2355ecfe88c0fc21c005135-lq
முதல் சம்பளம்
லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில்தான் முதலில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எனக்கு 25 வயது. அந்த நிறுவனம் எனக்கு 3000 பவுண்ட்களை முதல் சம்பளமாக வழங்கியது. அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய சம்பளம்.
உடற்பயிற்சி
தற்காப்புக் கலைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அது மிகவும் உதவுகிறது. இந்திய ஒற்றுமை யாத்திரையின்போதுகூட தினமும் தற்காப்புக் கலை வகுப்புகளில் பங்கேற்று வந்தேன். இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது நடக்கும்போதே தியானம் செய்திருக்கிறேன்.
தாடி
இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது முடி வெட்டக்கூடாது, ஷேவிங் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதன் விளைவால் தாடி பெரிதாக வளர்ந்துவிட்டது.
இந்த தோற்றம் எனக்கு பிடித்திருக்கிறது. என்ன… சாப்பிடும்போதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது!
திருமணம்
நான் திருமணத்துக்கு எதிரானவன் அல்ல. ஆனால், என் பெற்றோரின் அழகான திருமண வாழ்க்கையைப் பார்த்து வளர்ந்ததால் என் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பாசமுள்ள, புத்திசாலித்தனமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.
படுக்கைக்கு அருகில் வைத்திருக்கும் பொருட்கள்
என் படுக்கைக்கு அருகில் உள்ள மேசையில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள், ருத்ராட்சம் உட்பட மதம் தொடர்பான பொருட்கள், செல்போன் ஆகியவற்றை எப்போதும் வைத்திருப்பேன்.
பிடித்த உணவகங்கள்
தில்லியில் உள்ள மோத்திமகால், சாகர், சுவாகத், சரவண பவன் ஆகிய உணவகங்களில் சாப்பிடப் பிடிக்கும்.
இந்தியப் பிரதமரானால்…
நாட்டின் கல்வித் திட்டத்தை மாற்றுவதில் கவனம் செலுத்துவேன். மத்தியதர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவேன். விவசாயிகள், வேலையில்லா பட்டதாரிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இருப்பேன்.
—என்.ஆனந்தி-குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» லோக்பாலுக்குள் பிரதமரை கொண்டுவரக்கூடாது : ராகுல் காந்தி
» ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி பேட்டி
» அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து
» ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம்
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum