Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
Page 1 of 1
அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
--
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன், மரத்தின்
மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கிழே இறக்கி, தன் முதுகில்
சுமந்து கொண்டு செல்லும் போது அவ்வேதாளம் விக்ரமாதித்தியனிடம்
தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும் அக்கதையின் முடிவில்
கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை விக்ரமாதித்தியன்
கூறவேண்டும் என்று கூறி,வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது…
-
ஒரு முறை சந்திரகாந்தன் என்கிற மன்னன் “சிவபுரி” என்கிற
நாட்டை ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்தவனான
அம்மன்னனின் ஆட்சியில் மக்கள் எல்லோரும் நன்றாகவே வாழ்ந்து
வந்தனர்.
ஒரு சமயம் மன்னன் சந்திரகாந்தனின் அரண்மனை வாயில்
காப்பாளன் சந்திரகாந்தனிடம் வந்து “நமது நாட்டை எதிரி நாட்டு
படைகள் தாக்கப் போவதாக” கூறினான்.
இதைக் கேட்டு திகைத்த மன்னன் “அரண்மனை வாயில் காப்பாளனான
உனக்கு இது எப்படி தெரியும்”? எனக் கேட்டான். அதற்கு பதிலேதும்
அளிக்காமல் அமைதியாக இருந்தான் அந்த வாயில் காப்பாளன்.
சில நாட்கள் கழித்து திடீரென்று எதிரி நாட்டுப் படைகள் சந்திரகாந்தனின்
சிவபுரி நாட்டை தாக்கின. ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக இருந்த
சந்திரகாந்தனும், அவனது படைகளும் மிகவும் வீரத்துடன் சண்டையிட்டு
எதிரி நாடு படைகளை நாட்டை விட்டே துரத்தினர்.
அப்போது சந்திரகாந்தனுக்கு தன் அரண்மனை காவலன் கூறிய விஷயம்
நினைவிற்கு வந்தது. மறுநாள் அவனை அழைத்து அவனுக்கு பரிசு தர
எண்ணினான் மன்னன். அதன் படியே அடுத்த நாள் அரசவையைக் கூட்டி
ஆயிரம் பொற்காசுகளை அக்காவலனுக்கு அளித்தான் மன்னன்.
சந்திரகாந்தன் அப்போது “நம் நாட்டை எதிரிகள் தாக்கப்போவது உனக்கு
எப்படி முன்பே தெரியும்? என மன்னன் கேட்டான். அதற்கு அக்காவலன்
தனக்கு சில நிகழ்வுகள் அது நிஜத்தில் நடப்பதற்கு முன்பே, தனது
தூக்கத்தில் கனவுகள் மூலம் தெரிய வந்ததாக கூறினான்.
இதைக் கேட்ட சந்திரகாந்தன் “நீ ஆயிரம் பொற்காசுகளை வைத்துக்
கொள்ளலாம், ஆனால் நீ இப்போது காவலன் பணியிலிருந்து நீக்கப்
படுகிறாய்” எனக் கூறினான்.
இங்கு இக்கதையை நிறுத்திய வேதாளம், விக்ரமாதித்தியனிடம்
“விக்ரமாதித்தியா தன் நாட்டு வெற்றிக்கு காரணமாக இருந்த தன்
அரண்மனைக் காவலனுக்கு ஆயிரம் பொற்காசுகளை கொடுத்துவிட்டு,
அவனை பணியிலிருந்து சந்திரகாந்தன் ஏன் நீக்கினான்? எனக்கேட்டது.
சற்று நேரம் சிந்தித்த விக்ரமாதித்தியன், “காவலன் தன் கனவின் மூலம்
எச்சரித்து தன் நாட்டைக் காப்பாற்றியதற்கு பரிசாக அவனுக்கு ஆயிரம்
பொற்காசுகள் தரப்பட்டது, அதே நேரத்தில் தன் அரண்மனை காவலன்
பணியின் போது அவ்வீரன் தூங்கியிருக்கிறான். அப்போதே அவனுக்கு
அக்கனவு ஏற்பட்டிருக்கிறது. தன் கடமையில் அலட்சியமாக இருந்த
காரணத்தினால் அவனை பணியில் இருந்து மன்னன் சந்திரகாந்தன்
நீக்கியது சரியே” என்று பதிலளித்தான்.
விக்ரமாதித்தியனின் இப்பதிலைக் கேட்ட வேதாளம் மீண்டும்
பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.
-
-சத்தீஷ்-தெய்வீகம்.காம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ‘நீயா நானா’ நிகழ்ச்சி தந்த அதிர்ச்சி!
» 1) தாடிக்கார அரசனுக்கு காடே சொந்தம், அவன் யார்?
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
» காவலன் - Kaavalan
» கடவுச்சொல் காவலன் ?
» 1) தாடிக்கார அரசனுக்கு காடே சொந்தம், அவன் யார்?
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
» காவலன் - Kaavalan
» கடவுச்சொல் காவலன் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum