Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
---
ஒருவர் மிக மிக நல்லவராக, தான தர்மங்களை செய்து
வாழ்பவராக, பிறர் துன்பங்களை பொறுக்க முடியாமல்
உதவிகள் செய்பவராக இருப்பார்.
ஆனால், அவருக்கு பல மன வேதனைகளும் சோதனைகளும்
வருவது உண்டு. அவர் அவற்றை பொருட்படுத்தாமல்
தன்னுடைய காரியத்திலேயே கண்ணாக இருப்பார்.
அவரின் நலம் விரும்பிகள் இந்த மனிதர் மிக நல்லவராக
இருக்கிறார். ஆனால், ஏன் இவருக்கு மட்டும் இதுபோன்ற
சோதனைகள் வருகின்றது என்று நினைப்பார்கள்.
இதை விதி என்பதா அல்லது துரதிஷ்டம் என்பதா என்று
வாதிடுவார்கள். இப்படி பலரும் நம்மிடையே வாழ்கிறார்கள்.
விதி என்றால் என்ன? அதிர்ஷ்டம் என்றால் என்ன? இந்த ச
ந்தேகம் பொதுவாக எல்லோருக்கும் எழுவதுண்டு.
அதேபோல், ராமாயண காவிய நாயகனான ராமருக்கும் இந்த
சந்தேகம் இருந்தது. அவரும் மனிதனாக பிறப்பெடுத்தவர்
அல்லவா? அவர் தனது சந்தேகத்தை தீர்ப்பதற்காக தனது
குருவை நாடினார்.
"உண்மையில், விதி என்றால் என்ன, அதிர்ஷ்டம் என்றால் என்ன?"
இந்தக் கேள்வியை ஸ்ரீராமர் ஒரு நாள் வசிஷ்டரைக் கேட்க, அவர்
பதில் கூறுகிறார்.
"ராமா! நாம் செய்த வினைகளின் பயனாக ஏற்படும் இன்ப,
துன்பங்களைத்தான் விதி என்றும், அதிர்ஷ்டம் என்றும்
கூறுகிறோம். ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எத்தனையோ
வாசனைகள் அல்லது எண்ணங்கள் உள்ளன.
அவைதான் வாக்கினால் செய்யப்படும் கர்மங்களாகவும்,
உடலினால் செய்யப்படும் கர்மங்களாகவும் பரிணமிக்கின்றன.
அவன் வாசனைகள் எப்படியோ, அது மாதிரித்தான் அவன்
செய்யும் கர்மங்களும் இருக்கும்.
எப்படி கிராமத்துக்கு போக விரும்புகிறவன் கிராமத்துக்கும்,
நகரத்திற்குப் போக விரும்புகிறவன் நகரத்திற்கும் போவானோ,
அது மாதிரி பூர்வ ஜன்மத்தில், பலன் மீது உள்ள தீவிரமான
ஆசையினால் பெருத்த முயற்சியின் பேரில் செய்யப்படும்
கர்மம்தான் இந்த ஜன்மத்தில் விதியாக மாறுகிறது.
மனிதன் தனது முயற்சியினால் இந்த உலகில் எதையும் அடைய
முடியும். விதியைக் கொண்டு முடியாது.
முன் ஜன்ம வாசனைகள் அல்லது கர்மாக்கள் என்னும் நதி
மனிதனை நல்ல வழியிலோ தீய வழியிலோ இழுத்துச்
செல்லுகிறது. ஆனால், மனிதன் முயற்சி கொண்டு அதைத் தடுத்து
நிறுத்த வேண்டும். முயற்சி என்பது ஆன்மிக நாட்டமாகவும்
இருக்கலாம்.
மனிதனுடைய மனது ஓர் குழந்தையைப் போன்று சஞ்சலமுடையது.
அதைக் கெட்ட வழியிலிருந்து நல்ல வழிக்குத் திருப்பவும் முடியும்
அதே மாதிரி நல்ல வழியிலிருந்து கெட்ட வழிக்கும் திருப்பலாம்.
ஆகவே, மனிதன் தனது முழு முயற்சியினால்தான் அதைக் கெட்ட
வழியிலிருந்து நல்ல வழிக்கு திருப்ப வேண்டும்.
உலகில் மனிதன் எந்தெந்தக் காரியங்களில் ஈடுபடுகிறானோ,
அதிலேயே தன்யமாகி விடுகிறான். ஆகவே, ராமா, நீ உன்
முயற்சியைக் கொண்டு, இந்திரியங்களை அடக்கி, துக்கம் இல்லாத
பதவியை அடை.
பிறகு, அந்த நல்ல வாசனையையும் துறந்து பிரம்மத்தோடு
ஐக்கியமாகு!" என்று கூறுகிறார் வசிஷ்டர்.
ஸ்ரீராமருக்கு மட்டுமல்ல, நமக்கும் சேர்த்து வசிஷ்டர்
சொன்னதிலிருந்து நாம் செய்யும் கர்மங்கள் மற்றும் எண்ணங்களில்
நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஏனெனில், அவைதான் பின்னர் விதியாக மாறி, நமக்கு இன்பத்தையோ,
துன்பத்தையோ கொடுக்கப்போகின்றவையாக மாறுகிறது.
-நன்றி-கல்கி & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இலங்கையின் உண்மை நிலை குறித்து விளக்கம்
» ஐஸ்வர்யா கர்ப்பம் குறித்து அமிதாப் அறிவித்தது ஏன்: அபிஷேக் விளக்கம்
» விதி எழுதப்படவில்லைப்பா
» விதி....
» விதி !
» ஐஸ்வர்யா கர்ப்பம் குறித்து அமிதாப் அறிவித்தது ஏன்: அபிஷேக் விளக்கம்
» விதி எழுதப்படவில்லைப்பா
» விதி....
» விதி !
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum