சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்? Khan11

பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்?

Go down

பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்? Empty பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்?

Post by யாதுமானவள் Sat 23 Jul 2011 - 9:54

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ள திமுகவின் செயற்குழு இன்று கோவையில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டம், திமுக தலைமையில் மாற்றம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை தீவிரப்படுத்தியது. இந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர்.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். எனவே தயாநிதிமாறன் ஸ்பெக்ட்ரம் வழக்கில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் நிலை.

இன்னொரு பக்கம் திமுக தலைமைப் பதவிக்கான மோதல் வெளிப்படையாகவே வெடித்துள்ளது, முன்னெப்போதும் இல்லாத வகையில்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்?

நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் தனக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் நேரடியாகவே தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே கடும் சண்டை மூண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ஸ்டாலினை செயல் தலைவராக்கப் போவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இதுகுறித்த கோரிக்கையை ஸ்டாலின் தரப்பில், மூத்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கூட்டத்தில் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

கருணாநிதி காலத்திலேயே தனது அடுத்த வாரிசு யார் என்பதை அவர் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் பின்னாளில் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்து திமுகவினரிடம் நிலவுகிறது.

ஆனால், அழகிரி தரப்பு இதை எதிர்த்து காய் நகர்த்தத் திட்டமிட்டுள்ளது. கருணாநிதிதான் கடைசி வரை தலைவர், அவருக்குப் பிறகுதான் அடுத்த தலைவர் யார் என்பது குறித்துப் பேச வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தப் போவதாக கூறப்படுகிறது.

இதற்குத் தோதாக ஸ்டாலினை விரும்பாத பல மூத்த தலைவர்களின் ஆதரவை அழகிரி பெற்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுபோக தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

கோவையில் திமுக தலைவர்கள்

இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் இன்று (சனிக்கிழமை) கூடுகிறது. முதலாவதாக இன்று மாலை 4 மணிக்கு தி.மு.க. செயற்குழு கூட்டம், கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள அண்ணா வளாகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் தி.மு.க. தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டுமா? வேண்டாமா என்பது பற்றி முக்கியமான விவாதங்கள் இடம் பெறும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க.வுக்கு எதிரான போராட்டம் குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட செயலாளர்களுக்கு பதில், மக்களவைக் குழுக்கள் அமைத்து அதன்கீழ் அவர்களை செயல்பட வைக்கலாமா? என்று தி.மு.க. தலைமைக்கழகத்தால் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. இது குறித்து கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

நாளை பொதுக்குழு

இதைதொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொதுக்குழு கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 1,950 பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 200 பேரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கான விரிவான ஏற்பாடுகளை கோவை மாவட்ட தி.மு.க.வினர் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து கோவை சென்றார். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அண்ணா வளாகத்திற்கு சென்று கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கருணாநிதி கோவை பயணம்

செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று இரவு 10.10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கோவை புறப்பட்டு சென்றார்.

செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கோவையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» பரபரப்பான சூழலில்...இன்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்!
» தொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ஸ்டாலின், தயாநிதி ஆஜர்!!
» திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவர் பதவி குறித்து முடிவெடுக்க வாய்ப்பு
» திமுக துணைத் தலைவர் ஸ்டாலின்?: கொ.ப.செ. கனிமொழி?
» தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum