சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம் Khan11

”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம்

Go down

”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம் Empty ”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 9:04

பொத்துவில் (Pottuvil) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள நகரம். இங்கு முஸ்லிம்களே பெரும்பான்மையாகக் குடியிருக்கின்றனர். இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமான அறுகம் குடாவில் இருந்து வடக்கே 4 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டின் படி, இந்த நகரத்தின் சனத்தொகை 33,625 ஆகும்[1].
அமைவிடம்பொத்துவில்
நகரத்தின், வடக்கே, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கேயும் மேற்கேயும் லாகுகல பிரதேச செயலகப் பிரிவும் அமைந்து காணப்படுகின்றன.

கிராம சேவகர் பிரிவுகள்
இந்த நகரமானது, 63 சிறிய கிராமங்களை தன்னகம் கொண்டுள்ளதோடு, இவற்றின் நிர்வாகம், 27 கிராம சேவகர் பிரிவுகளின் படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது[1]. 1958 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தப் பிரதேசமானது, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே காணப்பட்டது. இருந்த போதிலும், 1958 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துடன் பின்னர் இப்பிரதேசம் இணைத்துக் கொள்ளப்பட்டது.






பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம் Empty Re: ”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 9:06

பொத்துவில் பிரதேசத்தின் கிராம சேவகர் பிரிவும் அதன் குறியீடும் பின்வரும் அட்டவணையில் காட்டப்படுகிறது.


சேவகர் பிரிவு
பொத்துவில் அலகு 1 பீ/01
பொத்துவில் அலகு 2 பீ/02
பொத்துவில் அலகு 3 பீ/03
ஜலால்தீன் சதுக்கம் பீ/04
சர்வோதய புரம் பீ/05
சின்னப்புதுக்குடியிருப்பு பீ/06
பொத்துவில் 2 அலகு 2 பீ/07
பொத்துவில் 2 அலகு 2 பீ/08
குண்டுமடு பீ/09
இன்ஸ்பெக்டர் ஏற்றம் பீ/10
வட்டிவெளி பீ/11
பொத்துவில் நகரம் பீ/12
பாக்கியவத்தை 1 பீ/13
பாக்கியவத்தை 2 பீ/14
களப்புக்கட்டு பீ/15
விக்டர் தோட்டம் 1 பீ/16
விக்டர் தோட்டம் 2 பீ/17
சின்ன உல்லை பீ/18
பசறிச்சேனை பீ/19
ஹிதாயாபுரம் 1 பீ/20
ஹிதாயாபுரம் 2 பீ/21
சங்காமங்கண்டி பீ/22
கோமாரி 1 பீ/23
கோமாரி 2 பீ/24
கனகர் கிராமம் பீ/25
ஹிஜ்ரா நகரம் பீ/26
ரசாக் மௌலானா நகர் பீ/27
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம் Empty Re: ”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 9:07

வாழ்வாதாரம்பொத்துவில் நகரத்தின் அடிப்படையான பொருளாதார மார்க்கமாக காணப்படுவது, விவசாயமாகும். அத்தோடு, விலங்கு வேளாண்மை, கரையோர மற்றும் உள்ளக மீன்பிடி, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரம், சுற்றுலாத்துறை அத்தோடு வர்த்தகம் போன்ற வழிகளிலும் நகரத்தின் உள்ளக பொருளாதாரம் வலுப்படுத்தப்படுகிறது.

[தொகு] இயற்கை வளங்கள்இங்கு இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுவது வெளிப்படையானதாகும். நெல் வயல்கள், காடு, அழகிய கடற்கரைகள், ரம்மியமான மலைகள் மற்றும் குளிர்மையான நீர் ஊற்றுக்கள், தேக்கங்கள் என்பன காணப்பட்டு இந்த நகரத்திற்கு அழகு சேர்க்கின்றன.

நெற்பயிர்ச் செய்கையே இந்தப் பிரதேசத்தில் பிரதானமாக பயிரிடப்படுகிறது. இருந்த போதிலும், மறக்கறி, தென்னை மற்றும் பழங்கள் போன்றனவும் வளர்க்கப்பட்டு அவையும் உள்ளக வாழ்வாதாரத்தில் பங்களிப்பு செய்கின்றன. இதேவேளை, விலங்கு வேளாண்மை மற்றும் மீன்பிடி என்பனவும் குறிப்பிடத்தக்களவு பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்வதோடு, சுற்றுலாத் துறையானது, மிகவும் முக்கியமானதும், அபிவிருத்தி அடையக்கூடிய தகவுகளைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.

இந்தப் பிரதேசம், கடற்கரை, ஆறு மற்றும் தேக்கங்களை தன்னகம் கொண்டுள்ளதால் இது மண் வளமிக்க பூமியாக சொல்லப்படுகிறது. தென்னைப் பயிர்ச்செய்கையானது, சிறிய பரிமாணத்தில், கோமாரி, மணற்சேனை, விக்டர் தோட்டம், ஹிதாயா புரம், ஊறணி, உல்லை ஆகிய கரையோரக் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்தோடு, மறக்கறிச் செய்கையில் பிரதானமாக மிளகாய் பயிரிடப்படுகிறது.

அழகிய கடற்கரைகளைக் கொண்டு காணப்படுவதோடு, உலகிலேயே நீர்ச் சறுக்கல் விளையாட்டுக்குப் பிரசித்தமான அறுகம் குடாவும் இந்த நகரத்திலேயே காணப்படுகிறது. அருகம் குடாவை அண்டிய கடற்கரைகள், உல்லை கடற்கரை என்றும் வழங்கப்படுவதுண்டு. 2004 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் ஆழிப் பேரலையின் போது, இப்பிரதேசம் அதிகளவில் பாதிப்புக்களுக்கு உள்ளானது.

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம் Empty Re: ”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 9:09

பிரசித்தமான இடங்கள்இங்கு
குறிப்பிடத்தக்களவு பிரசித்தம் பெற்ற சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்கின்ற பல இடங்கள் காணப்படுகின்றன. அவை,

அறுகம் குடா
பொத்துவில் முனை
பொத்துவில் மண்மலை
குடாக்கல்லி
கொட்டுக்கல்
நாவலாறு
செங்காமம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம் Empty Re: ”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 9:10

பொத்துவில் கவிஞர்கள்

யுவன்
கவிவாணன்
கலையன்பன் அஸீஸ்
முதல்வனார் ஆதம்லெவ்வை
மாஸ்டர் ஏ.எல்.ஏ.முஹம்மது
பொத்துவில் ஏ.மஜீத்
பைஸல்
பொத்துவில் அஸ்மின்
யாஸீன் பாவா ஹூசைன்
தாஜஹான்
இல்ஹாமா ஏ.சுக்கூர்
அப்துல்கையும்
ரக்கிபா நியாஸ்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம் Empty Re: ”பொத்துவில்” சிறிய கண்ணோட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum