சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க  Khan11

வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க

2 posters

Go down

வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க  Empty வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Sep 2011 - 17:15

வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க  Images+%25281%2529
திருமணம் போன்ற விழாக்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பது நல்ல விஷயம் தான்.
ஒரு சிலர் இதற்காக என்று வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்களாக தேடிப்பிடித்து பரிசளிப்பது உண்டு.


சரி இத்தகைய வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி அதனை நண்பர்களுக்கு விழாக்களின் போது பரிசளிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? “விஸ்டம் ஆப் அதர்ஸ்” இணையதளம் இந்த அற்புதத்தை தான் சாத்தியமாக்குகிறது.
விஸ்டம் ஆப் கிரவுட் என்பது இப்போது இணைய உலகில் பிரபலமாக இருக்கும் கருத்தாக்கம். அதாவது இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி கொண்டு கூட்டத்தின்(மற்றவர்களின்) ஆலோசனையையும் அறிவினையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தி கொள்ளுதல் என்று பொருள்.
அதே போலவே மற்றவர்களின் வாழ்க்கை அனுபவ பாடங்களை திரட்டி அழகான வாழ்க்கை வழிகாடி புத்தகமாக உருவாக்கி அதனை பரிசளிக்க உதவுகிறது இந்த தளம்.
இந்த தளத்தின் செய்லபாட்டை பார்ப்பதற்கு முன்னர் இந்த தளம் உருவானதன் பின்னணியில் உள்ள கதையை தெரிந்து கொண்டால், இதன் நோக்கத்தையும் பயன்பாட்டையும் எளிதாக புரிந்து கொண்டுவிடலாம்.
இந்த தளத்தின் நிறுவனர்கள் கடந்த 2005 ம் ஆண்டு தங்களது நெருங்கிய நண்பர்களின் திருமணத்திற்கு பரிசளிக்க விரும்பிய போது எல்லோரும் நினைப்பது போல புதுமையான பரிசினை அளிக்க நினைத்தனர்.அதற்காக யாரும் செய்திராத ஒரு முயற்சியில் ஈடுபட்டனர்.
மண வாழ்க்கையை துவக்க உள்ள தம்பதிக்கு வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கான குறிப்புகளை பரிசளிக்க விரும்பினர். இந்த குறிப்புகளை தங்கள் வாழ்க்கையில் இருந்தும், தங்கள் நண்பர்களின் வாழ்கையில் இருந்துமே எடுக்க முற்பட்டனர்.
அதாவது தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்க்கையில் இருந்து அனுபவ சிதறலகளை சேகரித்து அதனை தொகுத்தளிக்க விரும்பி அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதினர். அந்த கடித்ததில் வெற்றிகரமான மன வாழ்க்கைக்கான வழிகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டிருந்தனர்.
அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ஆதரவு குவிந்தது. சிறு வயது நண்பர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து வெற்றிகரமான மன வாழ்கைக்கு தேவையான வழிகளை குறிப்பிட்டிருந்தனர்.
அவற்றில் சில நெகிழ வைத்தன. சில புன்னகைக்க வைத்தன. சில சிந்திக்க வைத்தன. சில அரிய ஆலோசனையாக இருந்தன, எல்லாமே அனுபவத்தின் பதிவாக அமைந்திருந்தன. இவற்றை படித்து நெகிழ்ந்து போன நிறுவனர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றை தொகுத்து புத்தகமாக்கி திருமண பரிசாக அளித்தனர்.
யாராலோ எழுதப்பட்ட வழிகாட்டி புத்தகங்களை விட இந்த புத்தகம் பயன் மிக்கதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும் இருந்தது. அதோடு நண்பர்களின் பிரத்யேக பரிசாகவும் அமைந்தது.
இந்த அனுபவத்தால் நெகிழ்ந்து போன நிறுவனர்கள் தாங்கள் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உணர்வில் இதே போன்ற வழிகாட்டி புத்தகத்தை அனைவருமே உருவாக்கி பரிசளிப்பதற்கான வாய்ப்பாக இந்த இணையதளத்தை அமைத்தனர்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவ பங்களிப்போடு புத்தகத்தை உருவாக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தின் மூலம் அதை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம். அதற்கான வழிமுறையும் அளிமையானது.
முதலில் உறுப்பினராக சேர வேண்டும். அதன் பிறகு எந்த கேள்வியின் அடிப்படையில் புத்தகம் அமைய வேண்டும் என குறிப்பிட்டு அந்த கேல்வியை பேஸ்புக், டிவிட்டர் மூலம் நண்பர்களுக்கு அனுப்பி வைத்து பதில்களை திரட்டி புத்தகத்தை உருவாக்கி கொள்ளலாம்.
புத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் பிழை திருத்தம் போன்றவற்றை எல்லாம் இந்த தளமே பார்த்து கொள்கிறது. அதன் பிறகு தேவையான பிரதிகளை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அச்சிட்ட புத்தகமாகவும் தருவித்து கொள்ளலாம். இபுத்தக வடிவிலும் பெற்று கொள்ளலாம்.
விழாக்களுக்கு பரிசளிக்க, இப்படி நாமே நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கும் வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்கள் மிகச்சிறந்த வழி தான். குழந்தை வளர்ப்பில் துவங்கி பட்டப்படிப்பு, திருமண வாழ்க்கை என எல்லா வகையான நிகழ்வுகளுக்கும் இப்படி அனுபவத்தை திரட்டி அன்போடு பரிசளிக்கலாம்.
புத்தக வடிவில் பரிசளிக்க உதவுவது தான் இந்த தளத்தின் நோக்கம் என்ற போதும் அனுபவ புத்தக்த்தை உருவாகி இணையத்திலேயே பகிர்ந்து கொள்ளும் கட்டண இல்லா வசதியும் இருந்தால் நன்றாக இருக்கும்.சென்று பாருங்கள்


வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க  Empty Re: வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 18:13

யாராலோ எழுதப்பட்ட வழிகாட்டி புத்தகங்களை விட இந்த புத்தகம் பயன் மிக்கதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும் இருந்தது. அதோடு நண்பர்களின் பிரத்யேக பரிசாகவும் அமைந்தது.

உங்கட புத்தகத்தையும் விரைவில் பார்கலாமா ஹாசிம் சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum