சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

நீண்ட நாள் வாழ, உலகின் மிகச் சிறந்த உணவு  Khan11

நீண்ட நாள் வாழ, உலகின் மிகச் சிறந்த உணவு

2 posters

Go down

நீண்ட நாள் வாழ, உலகின் மிகச் சிறந்த உணவு  Empty நீண்ட நாள் வாழ, உலகின் மிகச் சிறந்த உணவு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 8:37

நீண்ட நாள் வாழ, உலகின் மிகச் சிறந்த உணவு  Chinese-Dinner
இரண்டு குச்சியை கையில் எடுத்துக்கொண்டு அதில் நூடுல்ஸ்சையோ, பாஸ்தாவையோ
உண்ணுவதுதான் சீனர்களின் உணவு முறை என்று நினைத்தால் அது தவறு. சீனர்களின் உடல் கன கச்சிதமாய் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனர்களின் உட்கொள்ளும் உணவினால் கொழுத்த சரீரம் உருவாகாது, இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது. இந்த இரண்டு தன்மைகளும் ஒருவரிடம் தொடர்ந்து இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். என்று ஹாங்காங்கின் சீனப்பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் (Woo-Kam-Sang) தனது ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.




சோயாவும் தயிரும்

சீனர்களின் உணவு முறை வித்தியாசமானது. அவர்கள் காலை உணவாக முட்டை ஆம்லட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர். இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகள் சேர்த்துவிடுகின்றனர். இது காலை நேரத்திற்கும் பகல் உணவிற்கும் எற்ற ஒரே உணவாகும். மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர். அவ்வப்போது கோழி வறுவல் அல்லது மீன் வறுவல் ஒன்றிரண்டு துண்டுகள் மட்டும் சாப்பிடுகின்றனர்.

பால் கலக்காத கிரீன் டீ

இவர்கள் அடிக்கடி விரும்பியும் போற்றியும் குடிப்பது கிரீன் டீதான். இது முதுமை அடைவதை தடுக்கும் தேநீர். மேலும் இந்தத் தேநீரில் இளமையை நீடிப்பதுடன் இதயத்துக்குப் பாதுகாப்பையும் வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் இருக்கிறது. பால் சேர்க்காத கிரீன் டீ யை தினமும் நாலைந்து தடவை அருந்துகின்றனர்.

மேற்கண்ட அனைத்து உண்மைகளும் உலகிலேயே இதய நோயாளிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள பான்யு என்ற சீனக்கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களாகும். சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் இந்தக் கிராமம் இருக்கிறது.

மரபு வழி உணவு

மருத்துவர் ஊ சீனர்களின் மெயின்லாண்ட் பகுதி மக்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் பாதி இறைச்சியாகவும், மிகச்சிறிய அளவிலேயே பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடுவதையும் கண்டு பிடித்துள்ளார்.

“சீனர்கள் தங்களின் மரபு வழி உணவுத் திட்டத்தையே பின்பற்ற வேண்டும். சோயா மற்றும் தயிரில் உள்ள லெசித்தின் என்னும் நார்ப்பொருள் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் இதய நோய் அபாயம் இல்லை. உடலும் கொழுத்த சரீரமாக உருவாகாது” என்கிறார்.

வெளிநாடுகளில் வாழும் சீனர்கள்

ஹாங்காங், சிட்னி, சான்பிரான்ஸிஸ்கோ ஆகிய நகரங்களில் சீனர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். பத்து ஆண்டுகள் மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றிய சீனர்களை அல்ட்ரா சவுண்டு மூலம் பரிசோதித்ததில் இவர்களின் இரத்தக்குழாய்களில் 5 இல் ஒரு பங்கு என்ற விதத்தில் தடிப்பாகிவிட்டது தெரிந்தது. எனவே, இவர்கள் இதயநோய் அபாயத்தில் உள்ளனர். வெளிநாடு சென்று கடந்த பத்தாண்டுகளுக்குப்பிறகு சீனா திரும்பிய 417 பேர் இதய நோய் அபாயத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹாங்காங்கில் வறுத்த கோழிக்கறி என்ற மேற்கத்திய உணவால் இங்குள்ள சீனர்கள் குண்டாக உள்ளனர். செல்வச் செழிப்பான சிங்கப்பூரில் வாழும் சீன இளைஞர்கள் 25 வயதுக்குள்ளேயே இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இதய நோய்கள் அபாயத்தில் உள்ளனர் என்கிறார் டாக்டர் ஊ.

கிரீன் டீக்கும் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள். உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி. உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் 2000ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்.


நீண்ட நாள் வாழ, உலகின் மிகச் சிறந்த உணவு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீண்ட நாள் வாழ, உலகின் மிகச் சிறந்த உணவு  Empty Re: நீண்ட நாள் வாழ, உலகின் மிகச் சிறந்த உணவு

Post by இன்பத் அஹ்மத் Sat 1 Oct 2011 - 8:41

தகவல்களுக்கு நன்றி நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum