சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல் Khan11

'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல்

3 posters

Go down

'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல் Empty 'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல்

Post by யாதுமானவள் Fri 7 Oct 2011 - 7:33

சான்பிரான்ஸிஸ்கோ: தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான் எனப்படும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் நேற்று சான்பிரான்சிஸ்கோவில் காலமானார். அவருக்கு வயது 56.

கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஜனவரி முதல் மருத்துவ விடுமுறையில் இருந்தார். நோயின் பாதிப்பு அதிகமானதால் ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஆறு வாரங்களுக்கு முன்புதான் விலகினார். ஆப்பிள் தலைவராக மட்டும் தொடர்ந்தார்.

1955-ல் சான்பிரான்ஸிஸ்கோவில் பிறந்த ஸ்டீவ் தனது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டவர். தன்னுடைய பள்ளி நண்பரான ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து 1976-ல் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். ஸ்டீவ் வீட்டு கார் காரேஜில் ஆப்பிள் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1980 காலகட்டங்களில் இந்நிறுவனம் தயாரித்த மேக் கணினிகள் (Macintosh Computers) பிரபலம் அடைந்தன. 1985-ல் தனது தொழில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

ஆனால் நிறுவனம் சிக்கலுக்குள்ளானபோது, 1997-ல் ஐமேக் (iMac) என்ற புதிய கண்டுப்பிடிப்பு மூலம் அவர் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தைப் புதுப்பித்தார். அன்றிலிருந்து அவர் தொட்டதெல்லாம் டாலர் மழையாய்க் கொட்டியது.

கடந்த 2002-ல் ஐபாடு (iPod) என்ற வெளியீட்டின் வாயிலாக தொழில்நுட்பத் துறையில் புதுமையான புரட்சியினை ஏற்படுத்தினார். பின்னர் ஐடியூன்ஸ் ஸ்டோரை உருவாக்கினார். இன்றைக்கு 20 கோடிக்கு மேல் இதன் பயனாளர்களாக உள்ளனர்.

2007-ல் செல்போன் உலகில் நுழைந்த ஆப்பிள், புயல் வேகத்தில் முன்னேறியது. உலகின் மிக விருப்பமான மொபைல் போனாக ஐபோன் (iPhone) மாறியது. பல பதிப்புகளைக் கண்டது. அடுத்து ஸ்மார்ட் போன் சந்தையிலும் ஆப்பிள் நிறுவனம் கால்பதித்தது. முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டையும் ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், ஐடி உலகில் புதிய வரலாற்றைப் படைத்தது.

கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் ஸ்டீவ் இருந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸின் மரணச் செய்தி வெளியானதற்கு ஒரு நாள் முன்புதான், ஐஃபோனின் லேட்டஸ்ட் வர்ஷனை வெளியிட்டது ஆப்பிள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்த இந்த கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சாதனங்கள் அனைத்துமே, அனைவராலும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. 56 வயதில் இந்த சாதனையாளர் மறைந்ததை, ஒரு தொழிலதிபரின் மரணமாகப் பார்க்காமல், உலக சமூகம் ஒரு கண்டுபிடிப்பாளரை இழந்ததாகப் பார்க்கிறார்கள்.

மரணம் வரை ஆண்டுக்கு வெறும் 1 டாலர் மட்டுமே சம்பளமாக அவர் பெற்றுவந்தார். ஆனால் அவருக்கு ஆப்பிள் நிறுவனத்தில் மட்டும் 5.426 மில்லியன் பங்குகளையும், டிஸ்னியில் 138 மில்லியன் பங்குகளையும் வைத்திருந்தார்.

கூகுளுக்கும் ஆப்பிளுக்கும் கடும் வர்த்தகப் போர் நடந்தாலும், சில மாதங்களுக்கு முன் கூகுளின் சிஇஓவாக இருக்குமாறு இவரை கேட்டுக் கொண்டது நிர்வாகம். ஆனால், அதை நாசூக்காக மறுத்துவிட்டார் ஸ்டீவ். இதனை கூகுளின் இப்போதைய சிஇஓ லாரி பேஜ் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, ஸ்டீவ் மறைவுக்கு தனது ஹோம் பேஜிலேயே இரங்கல் வெளியிட்டு கவுரவித்துள்ளது கூகுள்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, "ஸ்டீவ் ஜாப்ஸ் நமது வாழ்க்கையை மாற்றியவர், ஒட்டுமொத்தமாக பல தொழில்களுக்கு புது அர்த்தம் தந்தவர். அவரது மரணம் குறித்து அவர் கண்டுபிடித்த கருவியிலேயே உலகில் பெரும்பாலோனோர் தெரிந்து கொண்டனர் என்பதைவிட அவருக்கு பெரிய அஞ்சலி எதுவும் இருக்க முடியாது," " என்று தமது அஞ்சலியில் குறிப்பிட்டார்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பர்க் என பலரும் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் சமூக வலைத் தளங்களில் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல் Empty Re: 'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 7 Oct 2011 - 9:19

உண்மையில் சோகமான செய்தி ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பென்று கூட சொல்லலாம் கணனி உலகத்திற்கு அதிகம் உழைத்த ஜாம்பவான் இவரின் மரணம் கணனி உலகத்தினர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது அனுதாபங்கள்

நன்றி அக்கா


'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல் Empty Re: 'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல்

Post by ஹம்னா Fri 7 Oct 2011 - 12:17

அவருக்கு எமது அனுதாபங்கள்.:pale:


'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல் Empty Re: 'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum