சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக.... Khan11

எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....

5 posters

Go down

எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக.... Empty எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....

Post by அப்துல்லாஹ் Mon 2 Jan 2012 - 16:17

எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக.... Abdullahs

வாப்பான்னு நான் கூப்பிட்டா என்னம்மா ன்னு கேட்டு எனக்கு வேண்டியதை அது என்னவாகிலும் நான் அனுபவிக்க தந்து அதப்பாத்து சந்தோசப்பட என்னைப் பெற்ற என் வாப்பா என் கிட்ட இப்ப இல்லை…

க லு மு அஹமது முகைதீன் ஆலிம் சாகிபுவின் மகன் க லு அ ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் சாகிபு எனும் பெயர்கொண்ட என் அன்புத்தந்தை வபாத்தாயி சில வருஷங்கள் ஆகிட்டுது….

என் தந்தை எங்களோடு வாழ்ந்து என்னில் நிகழ்த்திய வாழ்க்கை பாடம் அதன் தாக்கம் கொஞ்சம் ஆழமானது அதே நேரம் அதிசயமும் வாய்ந்தது…அந்த அளவுக்கு நான் என் மகனிடம் ஊடுருவியிருப்பேனான்னு பாத்தா நிச்சயம் இல்லை.வாப்பாவின் நாடுகடந்த பயணங்களிடைப்பட்ட இரண்டிரண்டு ஆண்டுகளை ஊரிலும் மலேசியாவிலுமாக மாறி மாறி தனது ஆயுளை எங்களோடு கழித்தார்கள்.

என் தந்தையின் திடகாத்திரமான காலங்களில் அவர்கள் எங்களோடு கழித்த மணித்துளிகள் மிகக் குறைவு…அவர்களை நாங்கள் சந்திக்கும் நேரமும் அரிது. அந்த சொற்ப நேரங்களில் எங்களோடு அவர்கள் தனது பாசத்தை பகிர்ந்து கொள்வார்கள்.

உம்மா அடிக்கடி சொல்லும் உங்களுக்கு என்ன தெரியும் பள்ளியாசலும் மதரசாவும் தான் எப்பவும். இங்கே வீட்டில் நடக்குறத பத்தி எதுவுமே தெரியாதுன்னு….

உண்மை தான் வீட்டில் நடந்த கல்யாணம் வெத்தில பாக்கு போன்ற விசேசங்களில் சமந்தார உறவுகள் அனைவரையும் அறிமுகம் செய்து உறவுகளை அவர்களுக்குச் சொல்ல வேண்டும் அப்படியும் அவர்களுக்கு அந்த உறவுகளைப் பற்றிய அறிந்து கொள்ளும் ஈர்ப்பு இயல்பாக இருந்ததில்லை. எல்லாம் வீட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தனது வழக்கமான அன்றாட அமலில் அக்கறை காட்டுவார்கள்..

காலை நான்கரை மணிக்கு எழுந்து ஊரின் மேற்குக் கோடியில் இருக்கும் மதரசா உள்ளடக்கிய ஒரு பள்ளியில் தொழுகை நடத்தி அங்குள்ள மதரசாவில் பயிலும் மாணவர்களுடன் கற்பித்தலில் கழித்து இரவு வேளை எட்டு மணி எட்டரைக்குத் தான் வீடு வருவார்கள்…

எங்களுக்கு வாப்பாவ பார்ப்பதென்பது வியாழன் மற்றும் வெள்ளி களிலும் பின்னர் நாங்கள் மதரசா சென்று ஓதத் துவங்கிய நாளில் அங்கு அந்தப் பாட சாலையிலும் தான் அவர்களை கண்ணுறுவோம்…

பெரியசர்த்து, ரஹ்மத்துல்லா அசர்த்து ன்னு தான் மேல் விலாசம் அவங்களுக்கு. எங்காவது வெளியூர் போனால் அங்குள்ள பள்ளியில் தொழுதால் தொழுகை முடிஞ்சு சந்திக்கும் அந்தப் பள்ளி பேஷ் இமாம் யாராவது ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டிருக்கும் போது எந்த ஊருன்னு கேப்பாங்க நான் கடயநல்லூருன்னு சொன்னா அங்க நீங்க எந்த தெரும்பாங்க….உடனே உங்களுக்கு கடையநல்லூரை தெரியுமான்னு கேட்டா ஆமா நான் அங்க தான் ஹிப்சு முடிச்சேன்… அல்லது ஸும்ரா பாடம் ஒதினேம்பாங்க…அங்க ரஹ்மத்துல்லாஹ் அசர்த்து தெரியுமான்னு கேட்டா தெரியும்ன்னு சொல்லிட்டு நான் அவங்க கிட்ட தான் குர் ஆன மனனம் செஞ்சேன்னு சொல்வாங்க. நான் அவர்களின் மகன்னு சொன்னா ரொம்ப மகிழ்ச்சியோடு வாங்கன்னு சொல்லி தனது அன்பை காட்ட முயற்சிப்பாங்க..

என் தந்தைக்கு நாங்கள் எட்டு மக்கள் தவிர அவர்களிடம் கல்வி கற்ற அனைத்து மாணவர்களும் அவர்களை தனது தந்தையாக நேசித்தார்கள் அது போல வாப்பாவின் பெரும்பாலான ஆயுளும் கற்பித்தலிலும் கல்பள்ளியிலும் குர்ஆனோடு மனனம் செய்ய மண்டியிட்டமர்ந்து பாடம் பயிலும் மாணவர்களோடு கழியும்…

ஒரு ரண்டு வருசத்துக்கு முந்தி நான் திருநெல் வேலி டவுனுக்கு ஒரு விசயமாக போயிட்டு தொழுகைக்காக அசர் வக்தில் டவுன் பள்ளியில் தொழுதேன். தொழுது முடிஞ்சு நான் புறப்பட எத்தனிக்கையில் ஒரு நடுத்தர வயசு தாடியுடன் கூடிய நல்ல தேஜசான முகப் பொலிவோடு ஒருவர் சலாம் சொன்னார்…

வ அலைக்குமுஸ் சலாம் .

நீங்க….ன்னு இழுத்தார் எங்கேயோ பாத்த மாதிர்யும் இருக்கு ஆனா என்னால ஒரு முடிவுக்கு வர முடியலைன்னு சொன்னவருக்கு அருகில் அவரது கோஷா அணிந்த மனைவியும் மகனும்…

கொஞ்சம் அவசரத்திலும் கிளம்பும் மூடிலும் இருந்த நான் பறக்க முற்பட

நீங்கள எந்த ஊரு ஆரம்பித்து என் தந்தையைக் கேட்ட மாத்திரம் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் எனது கைகளை தனது கைகளில் எடுத்துக்கொண்டார்

வாப்பா.. வினாவுடன் என்னை உற்று நோக்கினார்.

நான் வாப்பா இரண்டாயிரத்தஞ்சில் தவறிட்டாங்க என்றேன்.

கைகளின் பிடி இறுகியது. அவர் உள்ளங்கையில் சூடு என் கல்பு தொட அவரின் நிலை குலைதலின் காட்சியும் எனக்கு என் தந்தையின் இல்லாமையும் சேர்ந்து அவரின் முகம் காண்கையில் என்கண்ணிலும் நீர் துளிர்த்திட..

என்னை ஆரத்தழுவிய அவர் கண்களில் கண்ணீர் பெருக்கிட எங்க அசர்த்து…

எனக்கு அப்ப தான் விளங்கியது.. எனது ஒரு சகோதரன் தனது தந்தையின் இழப்பின் பிரிவை என்னிடம் பகிரும் அந்த நிகழ்வின் வீரியம்.

குலுங்கி அழுத அவரை அவரது மனைவி வண்டிக்குப் போவோமே எனச்சொல்ல தனது துண்டால் முகத்தை துடைத்த அந்த சகோதரன் மூக்கை சிந்தியவாறு தனது காரை நோக்கி நடக்கையில் என் கைகளை இறுகப் பற்றியவராக அவரது சுமோக் காரை காட்டி…

இது என் கார். நான் ஹாபீஸ் ஆலிம் முடித்து கொஞ்ச நாள் இமாமத் செய்து விட்டு இப்ப ரியல் எஸ்டேட் பிசினஸ் பன்றேன் இங்கே டவுனில் தான் இப்ப வாசம்… என்றவர் என்னை அன்று தனது இல்லத்துக்கு அழைத்துச்சென்று எனது தாய் மனைவி மக்கள் மற்றும் என் சகோதரிகள் பெயரை குறிப்பிட்டு அனைவர் பற்றி விசாரித்தார்… எனது ஒவ்வொரு வக்து தொழுகையிலும் எங்களின் பாசமிக்க உஸ்தாதுகளுக்காக நான் பிரார்த்தனை செய்ய தவறவே இல்லை என்றவர் தொடர்ந்தார்.

என் மகனுக்கு அவன் முன்பு நான் இன்று வாழ்ந்து காட்டும் என் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும் என் பால்ய கால உஸ்தாதுகளை உள்வாங்கியதன் பிரதிபலிப்பு தான் என்றார்.

நாங்கள் ஓதும போது அசர்த்து சாப்பிட்டு விட்டு எங்களுக்காக மீதி வச்சு எங்களையும் சாப்பிட சொல்வார்கள். அப்ப வீடுகளில் இருந்து வரும் உணவுகள் தான் எங்களுக்கு சாப்பாடு ஆனாலும் நாங்கள் எடுத்துவரும் அசர்த்து வீட்டு சாப்பாட்டில் தானே முழுதும் சாப்பிட்டு விடாமல் எங்களுக்கும் தருவார்கள். சில நேரம் மறைவாக காசு கொடுப்பார்கள். கிராமங்களில் பசியோடு வாழ்ந்த எங்களை அசர்த்துகளை நம்பி எங்களின் தாய் தந்தையர் விட்டு விட்டுச் சென்றாலும் எங்களின் அனைத்து தேவைகளும் பெரியசர்த்துக்கு கண்காணிப்பில் இருந்து நாங்கள் கல்வியும் ஒழுக்கமும் கற்க முடிந்தது….

எங்களின் தாய் தகப்பனிடம் நாங்கள் இருந்த காலத்தை விட அந்த உஸ்தாது மார்களின் அரவணைப்பே பெரும்பான்மையாக இருந்தது…

கிளம்புகையில் நான் அவரது குழந்தை கையில் கொஞ்சம் பணத்தை திணித்து விட்டு கிளம்பினேன்.. நிறைய அண்ணன்மார் எனக்கு இந்தப் பாரில் எல்லா இடங்களிலும் விரவி தங்களின் கைப்படம் மலர்த்தி என் அன்புத் தந்தைக்கு தனது ஒவ்வொரு பிரார்த்தனையிலும் துஆ செய்கிறார்கள் எனும் அந்த நினைவுகளுடன்….

உம்மா அடிக்கடி சொல்லும் உங்களுக்கு என்ன தெரியும் பள்ளியாசலும் மதரசாவும் தான் எப்பவும். இங்கே வீட்டுல நடக்குறத பத்தி எதுவுமே தெரியாது….

ஆமா உம்மாக்குத் தெரியுமா வாப்பாவின் குடும்பம் பெரியது அவர்களைத் தனது உயிர்போல மதித்து தந்தையாகக் கருதிக் கொண்டாடும் அவர்களின் மாணவர்கள் எனும் மகன்களின் எண்ணிக்கை வாப்பாவுக்கே சரியாகக் கணக்கிட முடியாது என்று…

http://wp.me/p1U0WZ-2b
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக.... Empty Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....

Post by kalainilaa Mon 2 Jan 2012 - 18:08

உணர்வுகனின் ஊர்வலம் உங்கள் கட்டுரை...
ஒவ்வொரு மனிதனின் பின்னும் இருக்கும்
வாப்பாவின் நினைவுகளை அழகாய்
செதுக்கிய சிற்பியின் சிறப்பு....
உம்மா அடிக்கடி சொல்லும் உங்களுக்கு என்ன தெரியும்?
இதை நானும் பல இல்லங்களில் கேட்டது உண்டு ...

எண்ணத்தை அதன் ஓட்டத்தை அற்புதமாய் சொல்லும்
நிலை உங்களுக்கே உண்டான அழகு .பாரட்டுக்கள் தோழரே.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக.... Empty Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....

Post by நண்பன் Sun 8 Jan 2012 - 11:48

முதலில் அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் மாஷா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ்.....

அன்பு ஒஸ்தாத் அவர்களின் முகத்தோற்றம் காப்பி எடுத்தாற்போல் அப்துல்லாஹ் சாரின் முகம் மாஷா அல்லாஹ்! தந்தையின் பெருமைகளை மற்றவர்கள் அதுவும் மார்க்க அறிஞ்ஞர்கள் பெருமையாக சொல்லும் போது மகன்களின் மனதில் எழுந்த மகிழ்ச்சியை சொல்லித் தீராது.

அன்புத்தந்தையின் வாழ்க்கையில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல கல்வியைக் கற்றுத்தந்துள்ளார்கள் உலகம் முடியும் வரை அவர்களும் வாழ்வார்கள் இறைவன் அவர்களுக்கு சுவனத்தைப்பரிசாகக்கொடுப்பான் இன்ஷா அல்லாஹ். அந்த முகத்தில் எவ்வளவு ஒரு தெளிவு தெரிகிறது மாஷா அல்லாஹ் அப்துல்லாஹ் சார் நீங்களும் லைட்டா தாடி வைத்துப்பாருங்கள் அத்தோடு உங்கள் தந்தையிடம் மார்க்கக் கல்வி பயின்ற மாணவர்களிடம் சென்று பாருங்கள் இன்ப அதிர்ச்சி அடைவார்கள்.

எனது தந்தையும் சிறிய வயதிலே என்னை விட்டுப்பிரிந்து விட்டார்கள் :!#: :!#:
எனது தந்தையின் நினைவுளை இன்று அதிகமாக தந்தது உங்கள் கட்டுரை ஒரு மகனுக்கு இதை விடப்பெருமை என்ன வேண்டும் உங்கள் தந்தை உயரத்தில் உள்ளார் மக்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்துள்ளார் உம்மாவிடம் சொல்லுங்கள் உங்களுக்கு நடந்த சம்பவங்களை உம்மாவும் மகிழ்ச்சியடைவார் சிறந்த ஒரு பசுமையான நினைவுகளையும் நிஜத்தையும் எங்களோடு பகிர்ந்து கொண்ட உறவுக்கு நன்றி
என்றுமா மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
மாணவன்.
:!@!:

Last edited by நண்பன் on Sun 8 Jan 2012 - 12:31; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக.... Empty Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....

Post by அப்துல்லாஹ் Sun 8 Jan 2012 - 12:30

நண்பன் wrote:முதலில் அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் மாஷா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ்.....

அன்பு ஒஸ்தாத் அவர்களின் முகத்தோற்றம் காப்பி எடுத்தாற்போல் அப்துல்லாஹ் சாரின் முகம் மாஷா அல்லாஹ்! தந்தையின் பெருமைகளை மற்றவர்கள் அதுவும் மார்க்க அறிஞ்ஞர்கள் பெருமையாக சொல்லும் போது மகன்களின் மனதில் எழுந்த மகிழ்ச்சியை சொல்லித் தீராது.

அன்புத்தந்தையின் வாழ்க்கையில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல கல்வியைக் கற்றுத்தந்துள்ளார்கள் உலகம் முடியும் வரை அவர்களும் வாழ்வார்கள் இறைவன் அவர்களுக்கு சுவனத்தைப்பரிசாகக்கொடுப்பான் இன்ஷா அல்லாஹ்.

எனது தந்தையின் நினைவுளை இன்று அதிகமாக தந்தது உங்கள் கட்டுரை இன்னும் கருத்துக்களுடன் வருகிறேன் இடையில் ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறேன் அதற்கு காரணம் நான்தான் அப்துல்லாஹ் சார் என்னை மன்னித்து விடுங்கள்.
ப்ளீஸ்.

மன்னிப்பெல்லாம் எதற்கு சும்மா தான் கேட்டேன் போட்ட பதிவு நீக்கப்பட்டதன் காரணம் ஏதாவது இருக்கலாம் என்று தான் கேட்டேன் நண்பன்.... ஒருவேளை நானே நீக்கிவிட்டேனோ என எனக்கு சந்தேகம்.இப்போது
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக.... Empty Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....

Post by முனாஸ் சுலைமான் Sun 8 Jan 2012 - 12:58

பெரியசர்த்து, ரஹ்மத்துல்லா அசர்த்து ன்னு தான் மேல் விலாசம் அவங்களுக்கு. எங்காவது வெளியூர் போனால் அங்குள்ள பள்ளியில் தொழுதால் தொழுகை முடிஞ்சு சந்திக்கும் அந்தப் பள்ளி பேஷ் இமாம் யாராவது ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டிருக்கும் போது எந்த ஊருன்னு கேப்பாங்க நான் கடயநல்லூருன்னு சொன்னா அங்க நீங்க எந்த தெரும்பாங்க….உடனே உங்களுக்கு கடையநல்லூரை தெரியுமான்னு கேட்டா ஆமா நான் அங்க தான் ஹிப்சு முடிச்சேன்… அல்லது ஸும்ரா பாடம் ஒதினேம்பாங்க…அங்க ரஹ்மத்துல்லாஹ் அசர்த்து தெரியுமான்னு கேட்டா தெரியும்ன்னு சொல்லிட்டு நான் அவங்க கிட்ட தான் குர் ஆன மனனம் செஞ்சேன்னு சொல்வாங்க. நான் அவர்களின் மகன்னு சொன்னா ரொம்ப மகிழ்ச்சியோடு வாங்கன்னு சொல்லி தனது அன்பை காட்ட முயற்சிப்பாங்க..

என் தந்தைக்கு நாங்கள் எட்டு மக்கள் தவிர அவர்களிடம் கல்வி கற்ற அனைத்து மாணவர்களும் அவர்களை தனது தந்தையாக நேசித்தார்கள் அது போல வாப்பாவின் பெரும்பாலான ஆயுளும் கற்பித்தலிலும் கல்பள்ளியிலும் குர்ஆனோடு மனனம் செய்ய மண்டியிட்டமர்ந்து பாடம் பயிலும் மாணவர்களோடு கழியும்…
அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் என்னும் உயர்தரமான சுவனம் கொடுத்தருள்வானாக....
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக.... Empty Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....

Post by நண்பன் Sun 8 Jan 2012 - 12:58

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:முதலில் அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் மாஷா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ்.....

அன்பு ஒஸ்தாத் அவர்களின் முகத்தோற்றம் காப்பி எடுத்தாற்போல் அப்துல்லாஹ் சாரின் முகம் மாஷா அல்லாஹ்! தந்தையின் பெருமைகளை மற்றவர்கள் அதுவும் மார்க்க அறிஞ்ஞர்கள் பெருமையாக சொல்லும் போது மகன்களின் மனதில் எழுந்த மகிழ்ச்சியை சொல்லித் தீராது.

அன்புத்தந்தையின் வாழ்க்கையில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல கல்வியைக் கற்றுத்தந்துள்ளார்கள் உலகம் முடியும் வரை அவர்களும் வாழ்வார்கள் இறைவன் அவர்களுக்கு சுவனத்தைப்பரிசாகக்கொடுப்பான் இன்ஷா அல்லாஹ்.

எனது தந்தையின் நினைவுளை இன்று அதிகமாக தந்தது உங்கள் கட்டுரை இன்னும் கருத்துக்களுடன் வருகிறேன் இடையில் ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறேன் அதற்கு காரணம் நான்தான் அப்துல்லாஹ் சார் என்னை மன்னித்து விடுங்கள்.
ப்ளீஸ்.

மன்னிப்பெல்லாம் எதற்கு சும்மா தான் கேட்டேன் போட்ட பதிவு நீக்கப்பட்டதன் காரணம் ஏதாவது இருக்கலாம் என்று தான் கேட்டேன் நண்பன்.... ஒருவேளை நானே நீக்கிவிட்டேனோ என எனக்கு சந்தேகம்.இப்போது
பதிவை நீக்கினால் மீண்டும் இணைக்க முடியாது அன்பு உறவே இது நீக்கப்பட வில்லை தனிமடலில் தருகிறேன் :];: :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக.... Empty Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....

Post by *சம்ஸ் Sun 8 Jan 2012 - 20:25

அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் என்னும் உயர்தரமான சுவனம் கொடுத்தருள்வானாக.

அருமையாக தந்தையின் வாழ்கையின் சிறு பகுதியை எங்களுடன் பகிர்ந்து கொண்ட எங்களின் அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

நட்புடன் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக.... Empty Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum