சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

உலக ஆசை அதிகரிப்பதனால் ஏற்படக்கூடிய விபரீதம்  Khan11

உலக ஆசை அதிகரிப்பதனால் ஏற்படக்கூடிய விபரீதம்

Go down

உலக ஆசை அதிகரிப்பதனால் ஏற்படக்கூடிய விபரீதம்  Empty உலக ஆசை அதிகரிப்பதனால் ஏற்படக்கூடிய விபரீதம்

Post by *சம்ஸ் Fri 20 Jan 2012 - 17:22

உலக ஆசை அதிகரிப்பதனால் ஏற்படக்கூடிய விபரீதம்
இப்பூலோகத்தில் அல்லாஹுதஆலா கோடான கோடிப் படைப்பினங்களைப் படைத்து, போஷித்துப் பரிபாலிக்கின்றான். மனிதன் இதுவரையில் கண்டு, கேட்டறிந்த உயிரினங்களிலும் பார்க்க அறியாத கேட்காத உயிரினங்கள் அதிகமென்றே கூறவேண்டும். இவ்வெல்லாப் படைப்புக்களிலும் மனிதனை ஒரு விசேட அமைப்புடனும் ஆற்றலுடனும் அறிவுடனும் உயர்ந்ததோர் படைப்பாக படைத்துள்ளான்.

இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவு எனும் பெறுமதிமிக்க அம்சத்தை வழங்கியுள்ளான். அவன் அதனைக் கொண்டு தன்னில் உள்ள ஆசை எனும் பிரேமையை அடக்கி மேன்மை அடைகிறான். தனது சீரிய வழியை அமைத்துக்கொள்கிறான். சில சமயங்களில் அவனது ஆசை மிகைத்து அறிவு மழுங்குகிறது. அனதால் அவன் நெறிதவறுகிறான்.

எல்லாம் வல்ல நாயன் மனிதன் தவிர்ந்த ஏனைய உயிரினங்களுக்கு பகுத்தறிவை வழங்கவில்லை. எனவே இவ்வுயிரினங்கள் தமது இச்சையின்படி வாழ்ந்து மடிகின்றன.

அல்லாஹுதஆலா எந்தவொரு ஆத்மாவையும் தான் வீணாகப்படைக்கவில்லை என தனது திருமறையில் அருளியுள்ளான். அவன் வீணாக எவரையும், எதனையும் தண்டிப்பதோ, பழிவாங்குவதோ இல்லை. அவன் மனிதனுக்கு வழங்கியுள்ள பகுத்தறிவின் நோக்கம் சீரிய வாழ்வைத் தாமே தெரிந்து நெறிமுறையுடன் இவ்வுலகில் வாழ்ந்து மறுமையில் தனது அறுவடையை அனுபவித்துக்கொள்வதற்காகும்.

பல சந்தர்ப்பங்களில் மனிதனிடமுள்ள அறிவிலும் ஆசை கனமடைகிறது. ஆதலால் அவனை அது ஆட்கொள்கிறது. அவ்வாசை பல்வேறு பரினாமங்களை எடுக்கிறது. மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை தன்னை எல்லோரும் கெளரவப்படுத்த வேண்டும் என்ற ஆசை பாராட்டுக்கள், புகழாரங்கள் பெறவேண்டும் என்ற ஆசை, ஐசுவரியங்கள் பெறவேண்டும் என்ற ஆசை, தன்னை அழகாக மற்றவர்கள் இனங்காண வேண்டும் என்ற ஆசை... எனப் பல்வேறு ஆசைகள் மனித மனதில் சதா குடி கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் இறவா ஆசைகளாகும்.

எவன் ஒருவன் தனது ஆசையை அடக்கி அறிவின் பிரகாரம் வாழ்கின்றானோ அவன் மேலான படைப்பான வானவர்களையும் மிகைக்கின்றான் என அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனினும் மனிதனை அடிமைப்படுத்தும் ஆசைகளில் ஒன்றான மண் ஆசை மனிதனை மிகவும் கீழ்த்தரமான செயல்களைச் செய்வதற்குத் தூண்டுகிறது.

நாம் இப்பரந்த பூமியில் வாழ்வதற்குத் தேவையான இல்லங்களை அமைத்துக் கொள்வதில் தப்பில்லை. ஆலமுல் அர்வாவில் ஆரம்பித்த மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு தரிப்பிடமே இவ்வுலக வாழ்வாகும்.

இங்கு நாம் எவ்வளவு காலம் தங்குவோம் என்பதை அறிந்தவன் அந்த வல்லவனேயன்றி வேறில்லை.

இந்த வாழ்வின் யதார்த்தத்தைப் புரியாத மனிதன் இவ்வுலக வாழ்வை நிரந்தரமான தொன்றாக நினைத்து, அதற்காக பொருZட்டவும், மாடமாளிகைளை அமைக்கவும் காணிநிலங்களை தமதாக்கிக் கொள்ளவும் முற்படுகின்றான். அவற்றை அடைவதற்கான முயற்சியில் பல ஹராம்களையும், அநியாயங்களையும் செய்கின்றான். ஓரடி நிலத்துக்காக அல்லது, சில அடி நிலத்துக்காக பல ஆண்டுகள் நீதிமன்றங்களில் வழக்காடவும் பின் நிற்பதில்லை. ஒரு தோட்டத்தில் விளைந்த அற்பமானதொரு விளைபொருளுக்காக பெறுமதி மிக்க ஒரு மனித உயிர்ரைப் பலிகொண்ட சம்பவங்களும் எம் சமூகம் கண்ட கறைபடிந்த தடயங்களில் ஒன்றாகும்.

“அன்றி உங்களுடைய பொருட்களும் உங்களுடைய சந்ததிகளும், (உங்களுக்குப்) பெரும் சோதனையாயிருக்கின்றன என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் விடத்தில் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 88:22-28)

நிலங்களுக்காகவும், சொத்துக்களுக்காகவும் நீதிமன்றங்களில் நீதிகேட்டு வாதாடும் வாதி, பிரதிவாதிகள் பலர் தமக்கு நீதி கிட்டும் முன்பே இவ்வுலக வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். தலைமுறை தலைமுறையாய் பல தலைமுறைகள் வாதாடி எந்த முடிவும் இன்றி, பல இலட்சங்களை இழந்தவர்களைக் காணலாம். இவர்கள் இந்த வழக்குக்காக செலவு செய்த பணத்தையும் மனித சிரமத்தின் பெறுமதியையும் ஒப்பிட்டுப் பார்த்தோமென்றால் தாம நீதி கேட்டுப் போராடும் சொத்தின் பெறுமதியிலும் அதிகமாக இருக்கும் என்றே கூற வேண்டும்.

ஆதத்துடைய மகனுக்கு தங்க வயல் ஒன்றைத் தந்தால் அவன் இன்னும் ஒன்றைப் பெற்றிட அவாவுவான். இரண்டாவது ஒன்றைக் கொடுத்தால் அவன் மூன்றாவது ஒன்றை நாடுவான். அவன் உடல் மண்ணில் அடங்கி (மக்கிப்) போகும்வரை அவனது ஆசைகள் திருப்தி அடைவதில்லை. அல்லாஹ்வின் பக்கம் திரும்பி மன்னிக்கக் கோருவோனது மன்றாட்டத்தை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான். (புஹாரி)

அல்லாஹ் நமக்கு அதிகமான செல்வங்களைத் தந்தால், அவற்றைத் தந்து நம்மை சோதிக்கின்றான் என்றே கொள்ள வேண்டும்.

மேலும் ‘ஆதத்தின் மகன் முதிர்ந்த வயதை அடைகிறான். எனினும் இரண்டு குணங்கள் அவனை விட்டும் அகலுவதில்லை. ஒன்று பேராசை, இரண்டு முடிவற்ற நிலையில் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருக்கும் (புதுப்புது) ஆசைகள் என ரஸ¤ல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவ்வுலகம் நிலையற்றது. இங்கு நாம் அனுபவிப்பவை யாவும் அற்பமானவையே. உலகையே வென்ற மாவீரன் நெப்போலியன் தனது இறுதித் தறுவாயில் தனது மரணத்தின் பின் தனது உடலை சவப் பெட்டியில் வைக்கும்போது இரு கைகளையும் வெளியில் தென்படும் விதமாகக் கிடத்தும்படி வேண்டிக்கொண்டானாம். அதற்கான காரணத்தை நண்பர்கள் வினவியதற்கு இவ்வுலகையே வென்ற நெப்போலியன் வெறுங்கைகளுடனே உலகைவிட்டும் செல்கிறான் என்பதை மக்கள் அறிவதற்கே என்றானாம். இதன் தாற்பரியத்தை நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் பல ஸஹாபாக்கள், கலீபாக்கள் தமது சொத்துக்களை இஸ்லாத்துக்காக தியாகம் செய்ததையும் பல விட்டுக் கொடுப்புக்களை புரிந்ததையும் நாம் மறக்கக்கூடாது.

மனிதன் தனக்கு நரையும், திரையும் மூப்பும் வந்தால் ஆட்சியும் அதிகாரமும் பொய்யாய் பழங்கதையாய் ஆகிவிடுவது போல் மரணம் என்ற ஒன்றின் முன் செல்வமும், சுகபோகங்களும், நிலபுலங்களும் வெறும் பூச்சியமே என்பதை நன்குணர்ந்து இவ்வுலக வாழ்வை செப்பனிட்டு மறுமை வாழ்வில் நன்மைகளை விளைச்சலாகப் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம். ஈருலகவாழ்விலும் வெற்றி பெறுவோம்.

எம். எச். இஸட். முனவ்வரா,
தும்புளுவாவ, ஹெம்மாதகம.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum