சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

லிப்ஸ்டிக் உருவான வரலாறு Khan11

லிப்ஸ்டிக் உருவான வரலாறு

3 posters

Go down

லிப்ஸ்டிக் உருவான வரலாறு Empty லிப்ஸ்டிக் உருவான வரலாறு

Post by ahmad78 Sat 21 Jan 2012 - 15:10


லிப்ஸ்டிக்
உருவான வரலாறு, லிப்ஸ்டிக் பிறந்த கதை; உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை
பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் தான், history of lipstick, indians are
the first man to produce lipstick










லிப்ஸ்டிக் உருவான வரலாறு Lipstick


மேலை நாட்டு நாகரீகம் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும்
லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்தவர்களும், உலகிலேயே முதன் முதலில் தயாரித்து
உபயோகித்தவர்களும் இந்தியர்கள் தான் என்று கூறினால் நம்புவீர்களா
நண்பர்களே, ஆம் உண்மைதான்
, பஞ்சாபிய
மக்கள் தான் உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை தயாரித்து
பயன்படுத்தியவர்கள் ஆவார். ஆச்சர்யமாக உள்ளதா வாருங்கள் அது பற்றி மேலும்
தெரிந்து கொள்வோம்.








மெசபடோமியா, எகிப்து மற்றும்
சீனா ஆகிய புகழ் பெற்ற நாகரீகங்களை போல சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
இந்திய துணைக் கண்டத்தில் மிகவும் பிரசித்திபெற்று விளங்கிய நாகரீகம்,
சிந்து சமவெளி நாகரீகம் (கி.மு.
3300 – கி.மு.1300) ஆகும்.
சிந்து சமவெளி பிரதேசம் என்பது இன்றைய பாகிஸ்தானின் பெரும்பான்மையான
பகுதிகளையும் இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய
பகுதிகளையும் உள்ளடக்கியது. சுமார்
3500
ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமண
வைபவங்களின் போது மணப்பெண்களை அலங்கரிக்க சில ஒப்பனை பொருட்களை
பயன்படுத்திஇருக்கிறார்கள், அவற்றில் ஒன்றுதான் இந்த லிப்ஸ்டிக்.







லிப்ஸ்டிக் உருவான வரலாறு Indus+valley+civiliation






பஞ்சாபிய பெண்கள் லிப்ஸ்டிக்
தயாரித்த விதம் அலாதியானது, இதற்காக அவர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்கள்
இரண்டே இரண்டுதான். ஒன்று தேன் மெழுகு மற்றொன்று தாவர நிறமிகள். தேன்
மெழுகு என்பது தேன்கூட்டிலிருந்து தேனை நீக்கியபின் கிடைக்கும் மாவு போன்ற
பொருளாகும் அதனுடன் சிலவகைத் தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட
நிரமிப்பொருட்களை கலந்து திரவ (
Liquid) வடிவில்
கிடைத்த கூழ்மத்தை தங்களது உதடுகளில் வர்ணமாக பூசிக்கொண்டனர், இதுதான்
இன்றைய நவீன லிப்ஸ்டிக் தயாரிப்பதற்கான முன்னோடி சிந்தனையாகும்.







லிப்ஸ்டிக் உருவான வரலாறு History-of-cosmetics






சில நூற்றாண்டுகளுக்கு பிறகு
வணிகர்களின் வாயிலாக உதட்டு சாயம் பற்றிய செய்திகள் மெசபடோமியப் பிரதேசத்தை
எட்டியது. ஆரம்பத்தில் மெசபடோமிய மக்கள் (கி.மு.
1500) விலையுயர்ந்த
நகைகளைத்தான் பொடியாக்கி உதட்டில் சாயமாக பூசியிருக்கிறார்கள் நாளடைவில்
சிலர் வண்ணத்து பூச்சிகளின் உடலிலுள்ள நிறத்தையும் இன்னும் சிலர் மயிலின்
இறகிலுள்ள நிறத்தையும் கொண்டு தங்களது உதட்டை அலங்கரித்துக் கொண்டார்கள்
என்று சில வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.







லிப்ஸ்டிக் உருவான வரலாறு Pigents






இஸ்லாமிய பொற்காலத்தில் (கி.பி. 936 – கி.பி. 1258) அபு அல் காசிம் (கி.பி.936 – கி.பி.1013) என்ற முஸ்லிம் மேதை, தேன்மெழுகு, மெழுகு, ஆமணக்கு எண்ணெய் மற்றும் வர்ணபசைகள் கொண்டு முதன்முதலாக தின்ம வடிவிலான (Solid-Lipstick) லிப்ஸ்டிக்கை
உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதாவது இன்று புழக்கத்தில்
இருக்கும் லிப்ஸ்டிக். இதற்க்கு முன்பு லிப்ஸ்டிக் திரவ வடிவில் தான்
தயாரிக்கப்பட்டது.







லிப்ஸ்டிக் உருவான வரலாறு Abu+Al+Qasim






கி.பி. பதினாறாம்
நூற்றாண்டு வரை பொதுமக்களிடையே லிப்ஸ்டிக்கை உபயோகிப்பதில் மிகப்பெரும்
தயக்கம் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். காரணம் ஆரம்ப காலகட்டங்களில்
அரேபியர்களுக்கு இருந்த மோகத்தினால் லிப்ஸ்டிக் தயாரிப்பதெற்க்கான
மூலப்பொருட்கள் கிடைக்காத சமயத்தில்
Rainbow Snake என்ற
பாம்பின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகளை கொண்டு தங்கள் உதடுகளை
அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாளடைவில் இவ்வகை நிரமிகளை
பயன்படுத்திய பெண்களை சில கொடிய நோய்கள் தாக்க ஆரம்பித்தன, இதன் காரணமாக
பின்விளைவுகளை ஏற்படுத்தாத லிப்ஸ்டிகை அபு அல் காசிம் கண்டறிந்த போதும் கூட
லிப்ஸ்டிக்கை உபயோகிப்பதில் மக்களிடையே அச்சம் நிலவியது என்றுதான் கூற
வேண்டும்.







பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத் (Queen Elizabeth - கி.பி.1533 – கி.பி.1603) அவர்கள் தான் லிப்ஸ்டிக்கை முதலில் பயன்படுத்திய மிகப்பெரிய பிரபலம் ஆவார். வெள்ளை நிற உடல் கொண்ட அவர்,
அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியது மிகவும் எடுப்பாக
காட்சியளித்தது. அப்போது முதல் தான் லிப்ஸ்டிக் பிரபலமடைய துவங்கியது.
இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாக உபயோகிப்பதில் தொடர்ந்து
தயக்கம் இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பெரும்பாலும் பாலியல்
தொழில் செய்பவர்களும், நடிகர்கள்/நடிகைகள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.







லிப்ஸ்டிக் உருவான வரலாறு Queen+elizabeth






1880-ஆம் ஆண்டு வாக்கில் சாரா பெர்ன்ஹார்ட் (Sarah Bernhardt – கி.பி.1844 – 1923)
என்ற புகழ் பெற்ற நடிகை பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும்,
வெளியிடங்களுக்கு செல்லும் போதும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்த துவங்கினார்.
அதைத் தொடர்ந்து பொதுமக்களில் சிலரிடையே புகைப்படங்கள் எடுக்கும் போதும்
மட்டும் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டது.







லிப்ஸ்டிக் உருவான வரலாறு Sarah+Bernhardt






1884-ஆம் ஆண்டு குர்லைன் (Guerlain) என்ற
பிரெஞ்சு நிறுவனம் வணிக நோக்கில் மிகப்பெரிய அளவில் லிப்ஸ்டிக்கை
தயாரித்து சந்தைப்படுத்தியது. தேன், ஆமணக்கு எண்ணெய், மான் மற்றும்
மாடுகளின் கொழுப்புகளை கொண்டு வணிக நோக்கிலான லிப்ஸ்டிக்கை அந்நிறுவனம்
தயாரித்தது. இதற்கு முன்பு ஆங்காங்கே குடிசை தொழில் போலத்தான் தயாரித்து
பயன்படுத்தி வந்தார்கள். ஆரம்பத்தில் லிப்ஸ்டிக் பட்டுதுணிகள் மற்றும்
பாத்திரங்களில் தான் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது, ஆகையால்
லிப்ஸ்டிக்கை தூரிகைகள் கொண்டுதான் உதட்டில் பூசிக்கொள்ள வேண்டும்.







1912-ஆம் ஆண்டு மாரிஸ் லெவி
என்பவர் இன்று நாம் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் அடைத்து விற்கப்படும்
உருளைகளை உலோகத்தில் தயாரித்து அறிமுகப்படுத்தினார். இதில் சில குறைபாடுகள்
இருந்தது, அதனைக் களைந்து
1923-ல்
திருகினால் லிப்ஸ்டிக் இருக்கும் தகடு மேலே வரும் வகையிலான உலோக உருளையை
ஜேம்ஸ் புரூஸ் பேசன் என்பவர் கண்டறிந்தார். இரண்டாம் உலக போர் நடைபெற்ற
காலத்தில் தான் லிப்ஸ்டிக் பிளாஸ்டிக் உருளைகளில் அடைக்கப்பட்டு
விற்பனைக்கு வந்தது.







லிப்ஸ்டிக் உருவான வரலாறு Levy






1930-ஆம் ஆண்டு எலிசபெத்
ஆர்டன் என்ற அலகுகலை நிபுணர் லிப்ஸ்டிக்குக்கு பல்வேறு நிறங்களை தரும்
பல்வேறு வகையான நிரமிகளை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார், அதன் பின்னர்தான்
பல்வேறு வகையான கலர்களில் லிப்ஸ்டிக் தயாரிக்கப்பட்டு கடைகளில்
விற்பனைக்கு வர ஆரம்பித்தது.







லிப்ஸ்டிக் உருவான வரலாறு Ardon







ஆகவே நண்பர்களே லிப்ஸ்டிக்
என்பது மேற்கத்திய கலாச்சாரம் அல்ல, அது நமது கலாச்சாரம் தான்.
லிப்ஸ்டிக்கை தயாரித்தவர்கள் நாமாக இருந்தாலும் அதனை உலகம் முழுவதும் உள்ள
மக்களின் பயன்பாட்டிற்கு எடுத்துச் சென்றவர்கள் ஐரோப்பியர்கள் தான்.

http://varalaatrusuvadugal.blogspot.com/2012/01/history-of-lipstick-indians-are-first.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

லிப்ஸ்டிக் உருவான வரலாறு Empty Re: லிப்ஸ்டிக் உருவான வரலாறு

Post by பானுஷபானா Sat 21 Jan 2012 - 15:46

லிப்ஸ்டிக் உருவான வரலாறு 331844 லிப்ஸ்டிக் உருவான வரலாறு 331844 லிப்ஸ்டிக் உருவான வரலாறு 331844 லிப்ஸ்டிக் உருவான வரலாறு 331844 லிப்ஸ்டிக் உருவான வரலாறு 331844

லிப்ஸ்டிக் உருவான வரலாறு 517195 லிப்ஸ்டிக் உருவான வரலாறு 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லிப்ஸ்டிக் உருவான வரலாறு Empty Re: லிப்ஸ்டிக் உருவான வரலாறு

Post by நண்பன் Sat 21 Jan 2012 - 18:21

சூப்பர் இந்த விசயத்தில் நம்பாழு முந்தி விட்டான்பா சந்தோசமாக உள்ளது தகவலுக்கு நன்றி உறவே நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிப்ஸ்டிக் உருவான வரலாறு Empty Re: லிப்ஸ்டிக் உருவான வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum