சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்! Khan11

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்!

Go down

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்! Empty ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்!

Post by *சம்ஸ் Sun 23 Jan 2011 - 23:14

மெல்லிய உடல்வாகுக் கொண்ட பெண்களை தொடர்ந்து தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் காட்டுவதால்,அத்தகைய பெண்களின் உருவகங்கள் மூளை செயல்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தி குறைந்த அல்லது ஒழுங்கற்ற சாப்பாடு முறையை பின்பற்ற வழிவகுத்துவிடுவதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ஆய்வறிக்கை ஒன்று.

பொதுவாகவே இன்றைய பெண்களுக்கு - அதுவும் டீன் ஏஜில் இருக்கும் பெண்களுக்கு - உடல் பருமன் என்பது அலற வைக்கும் சமாச்சாரம்.

ஓரிரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த குடும்ப பெண்களே ஸ்லிம்மாக, தொலைக்கட்சி விள்ம்பரத்தில் வருவது போன்று குழந்தை பெற்ற பின்னரும், கல்லூரிப் பெண் போன்று தோற்றமளிக்க வேண்டும் என்று ஏகத்திற்கு மெனக்கிடுகையில், கல்லூரிக்குப் போகும் பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

அழகு ப்ளஸ் ஸ்லிம் தோற்றத்தோடு - விளம்பர மாடல் மாதிரி - கல்லூரிக் குயினாக வலம் வரவேண்டும்; பாய் பிரண்டுகள் ஜொள்ளிட்டு தன் பின்னால் சுற்றி வர வேண்டும்; அதே சமயம் யாரையும் லவ்வி விடாமல், வசதியானவனாக பார்த்து செட்டிலாக வேண்டும்... என்றெல்லாம் ஏக கனவுகளோடு வளைய வரும் இந்த கல்லூரிப் பெண்கள் கொண்டுபோகும் டிபன் பாக்ஸ்களை சமயம் கிடைக்கும்போது திறந்துபாருங்கள். ஒன்றிரண்டு இட்லி அல்லது ஒரு சில பிரட் துண்டுகள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும்.அதையே அம்மாக்களின் ஏக கெஞ்சல்களுக்குப் பின்னர்தான் எடுத்து வந்திருப்பார்கள்.

மதிய லஞ்ச் பிரேக்கின்போது ஏதோ கொறிக்கவேண்டும் என்ற அளவிலேயே இருக்கும் அந்த உணவை உட்கொள்ளும் இத்தகைய பெண்களுக்கு, நல்லா வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிட்டு திடாகத்திரமாக இருக்கும் பெண்களைக் கண்டால் ஏகக் கேலி.வித விதமான பட்டபெயர்களை அவர்களுக்கு சூட்டி, அவர்களையும் ஒல்லிக்குச்சிக்களாக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள்.

இவர்களது இத்தகைய போக்கிற்கு காரணம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ஃபேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளில் வளைய வரும் ஒல்லிக்குச்சி பெண்களும், சினிமாவில் நடிக்கும் ஒல்லி தோற்றமுடைய அழகு நடிகைகளும்தான் முக்கிய காரணம் என்கிறது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று.

மாடல் அழகிகள் போலவும், ஒல்லி நடிகைகளையும் போல் தாங்களும் வந்துவிடலாம் என்ற வேண்டாத கற்பனையில், ஒல்லியாக இருக்க ஒரே வழி சாப்பிடாமல் இருப்பது அல்லது குறைப்பதுதான் என்ற தவறான எண்ணத்தை இவர்கள் ஏற்படுத்திக்கொள்வதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், இவர்கள் பார்க்கும் சில குறிப்பிட்ட (ஒல்லி) பெண்களால் இவர்களது மூளை செயல்பாட்டில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதாக கூறுகிறார்கள்.

இது தொடர்பாக இங்கிலாந்திலுள்ள பிரிஹாம் இளையோர் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றில், நீச்சலுடையில் வலம் வரும் மாடல் அழகிகளில் சிலர் குண்டாக உள்ளனர். சிலர் ஒல்லியாக உள்ளனர்.அவர்கள் ஒவ்வொருவரது உருவங்களையும் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களில் பார்க்கும் ஆரோக்கியமான குடும்ப பெண்கள், தாங்களையும் அந்த பெண்களில் ஒருத்தி போல் இருப்பதாக யாரோ கூறுவது போன்று கற்பனை செய்துகொள்வதாக தெரியவந்துள்ளது.

அதே சமயம் பருமனாக இருக்கும் மாடல் பெண்களின் உருவத்தை பார்த்தால் துக்கம், மகிழ்ச்சியின்மை போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய மூளையின் முன்பாகம் அதிவேகமாக தூண்டப்படுகிறதாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum