சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை! Khan11

கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை!

Go down

கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை! Empty கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை!

Post by mufees Fri 27 Apr 2012 - 23:10

இது ஒரு கொலை அச்சுறுத்தல் எச்சரிக்கை என்று கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் கண்டனம்

கனேடிய தமிழ் ஊடகங்களில் ஒன்றான ’கனடா உலகத்தமிழர்’பத்திரிகையின் ஆசிரியரும் வெளியிட்டாளருமான திரு. ந. கமலவாசன் அவர்களின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம் 2012 ஏப்ரல் 23ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் 3.00௦௦ மணியளவில் தீ மூட்டி எரிக்கப்பட்ட வன்செயலை கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் இணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-

ஊடக சுதந்திரம் முழுமையாக உள்ள கனடா நாட்டில் ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர் மீது மிகவும் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் செயலாகவே இதனை நாம் கருதுகின்றோம்.

‘கருத்துகள் புனிதமானவை, விமர்சனங்கள் சுதந்திரமானவை’ என்ற ஊடக தர்மத்தை உணர்ந்துகொள்ளாத சில விஷமிகளின் செயலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

சிங்கள தேசமான சிறிலங்காவில் ஊடகங்கள் மீதும் , ஊடகவியலாளர்கள் மீதும் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு நிகரானதாக,கனடாவிலும் தமிழ் ஊடகவியலாளர்மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு இந்தத் தீமூட்டல் இடம்பெற்றுள்ளது.

இதனை சாதாரண ஒரு நிகழ்வாகவோ, தற்செயலான ஒன்றாகவோ ஊடகவியலாளர் இணையம் கருதவில்லை. திரு. கமலவாசன் மீது கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு வகையான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தாக்குதல் முயற்சி, கொலைப்பயமுறுத்தல், கடத்தல் பயமுறுத்தல், பொது இடங்களில் தகாத வார்த்தைகளால் ஆத்திரமூட்டல் போன்ற பல சம்பவங்களையிட்டு காவல் துறையினரிடம் இவரால் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளும், சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் அவரது சொந்த வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதற்கான நோக்கம் என்ன என்பது பற்றி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதால் நாம் மேலதிகமாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் இன்றைய காலத்தையும் சூழ்நிலையையும் பயன்படுத்தி கனேடியத் தமிழ் சமூகத்தை கூறு போடவும், போர்க்குற்றம் புரிந்த சிறிலங்கா அரசாங்கத்தைக் கூண்டில் ஏற்றி குற்றவாளியாக்க கனடிய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை குழப்பியடிக்கவும், கனேடிய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இயங்கிவரும் ’கனடா உலகத்தமிழர்’ பத்திரிகையை முடக்கவுமே இவ்வாறான சம்பவம் அமைந்திருக்கலாம் என்று இணையம் கருதுகின்றது.

கடந்த சில மாதங்களுக்குள் இங்கு இடம்பெற்ற இவ்வகையான சில தாக்குதல் , அச்சுறுத்தல் முயற்சிகளையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் அவர்களுடைய வாகனம் சேதமாக்கப்பட்டது; அவர் மீது தாக்குதலும் இடம்பெற்றது. மூத்த ஊடகவியலாளர் திரு எஸ். திருச்செல்வம் மீது இரண்டு, மூன்று தடவைகள் பொது நிகழ்வுகளில் வைத்து பயமுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது; ஒரு தடவை தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வரிசையில் இப்பொழுது ’கனடா உலகத்தமிழர்’ பத்திரிகையின் ஆசிரியரது வாகனத்தை தீமூட்டி எரித்ததை அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் விடுக்கப்பட்ட கொலைப் பயமுறுத்தல் எச்சரிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.

புலம்பெயர்ந்த நாட்டில் நாம் அனைவரும் கட்டிக் காத்து வளர்க்கவேண்டிய ஊடக சுதந்திரத்தை அழித்தொழித்து, கனேடிய தமிழர் சமூகத்திற்கு முழுமையான தலைகுனிவை ஏற்படுத்தும் தீய சக்திகளைக் காவல் துறையினருக்கு அடையாளம் காட்டி, அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் சமூக உறவுகள் அனைவரையும் பணிவுடன் கனேடியத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் வேண்டுகிறது.

இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு TamilCNN இணையமும் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை! Ulahathtthamilar-1
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை! Empty Re: கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை!

Post by mufees Fri 27 Apr 2012 - 23:10

கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை! Ulahathtthamilar1
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
» கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
» யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையம் விசமிகளினால் தீக்கிரை
» மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை
» பாகிஸ்தானில் பத்திரிகை நிருபர் படுகொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum