சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Khan11

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

+5
ராகவா
ahmad78
மதி
ஜிப்ரியா
mufees
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by mufees Tue 26 Jun 2012 - 22:02

ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருப்பது கடினம். இப்படி சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை மாற்றிவிடும். இந்த நட்புறவு கெடுவதற்கு, அவர்களிடம் தோன்றும் காதல் உணர்வு அல்லது காம உணர்வே பெரும்பாலும் காரணமாக அமையும். எப்போது ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கும் போது, ஒருவரை ஒருவர் ஈர்க்க பல காரணங்களுள் ஒரு சிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அவை என்னவென்று படித்துப் பாருங்கள்!!!

* இருவருக்கும் உள்ள நட்புறவு மாறுவதற்கு முதற்காரணம் பாலினம். ஒரே பாலினத்தில் இருக்கும் நட்பானது கெடுவது சாத்தியமே இல்லை. ஆனால் வேறு வேறு பாலினத்தில் இருவருக்கு உண்டாகும் நட்பானது, இருவருக்கும் இடையில் உண்டாகும், அன்பால் ஏற்படும் ஈர்ப்பை நிறுத்த முடியாது. எப்படியோ, நட்பாக இருக்கும் இரு பாலினத்தவருக்கு உண்டாகும் நட்பானது, மனதில் நட்பையும் மீறி வேறு உலகத்திற்கு சென்றுவிடும்.

* ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உண்டாகும் நட்புறவு பெரிதும் கெடுவதற்கு உடல் அளவில் உண்டாகும் அன்பும் காரணம். இத்தகைய எண்ணம் வந்த பின்னர் அவர்களால் நீண்ட நாட்கள் கட்டுப்படுத்தி, அதனை மறந்து வாழ வேண்டும் என்று நினைத்தாலும், இருக்க முடியாது. அதிலும் அந்த எண்ணம் வந்துவிட்டால், அவர்கள் தனியாக இருந்தால் அந்த நட்புறவு போய்விடும்.

* நட்பாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், காதல் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டாலும் போய்விடும். இப்போது பெரும்பாலானோரில் நண்பர்களாக இருந்தவர்களே வாழ்க்கைத்துணை ஆகிறார்கள். ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதால், காதலானது தோன்றுகிறது.

* நண்பர்களாக இருப்பவர்கள் சில சமயம் விளையாடுவார்கள். அப்படி விளையாட்டுக்காக ‘காதல் செய்கிறேன்’ என்று சொல்லி விளையாண்டாலும், அந்த நட்புறவு கெடும். ஏனெனில் அப்போது அவர்களுக்கு மனதில் ஆசை ஏற்படும். பின் அதை மாற்ற நினைத்தாலும் முடியாது, மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும்.

* நண்பர்களாக இருப்பவர்கள் கண்டிபாக ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருப்பர். ஆனால் அந்த பாசம் சில நாட்களில் அதிகமாகி, ஒருவர் மீது ஒருவர் ஒரு புரியாத அன்பாகத் தோன்றும். ஆனால் அவர்களில் ஒருவர் மற்றொருவரை, வேறு எவரோடும் நின்று பேசுவதை பார்த்தால் தாங்க முடியாது. இவ்வாறான உணர்வு வந்துவிட்டாலே அது நட்புறவு காதலாக மாறிவிடும்.

மேற்கூறிய இத்தகைய காரணங்களாலே, ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பது கடினம் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.
ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Friendship-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by ஜிப்ரியா Wed 27 Jun 2012 - 7:48

ஆம் இது உண்மை தான்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by மதி Wed 27 Jun 2012 - 9:04

முடியும்
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by ahmad78 Wed 27 Jun 2012 - 11:13

உண்மையான கருத்துதான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by ராகவா Fri 2 May 2014 - 19:20

முடியும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by Muthumohamed Fri 2 May 2014 - 21:08

இன்றைய காலத்தில் இது சாத்தியம் இல்லை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by Nisha Sat 3 May 2014 - 0:14

இப்படி சொல்லிச்சொல்லியே இல்லாததையும் இருப்பதாய் கற்பனை பண்ண வைத்து  ஓட ஓட விரட்டிருவாங்க போல இருக்கே!

 காமாலை கண்ணுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சள் என்பது போல் இருக்கிறது இவர்கள் கதை!

படிப்பறிவில்லாத முற்காலத்தியிலேயே  ஆண் பெண் ந்ட்பு போற்றப்பட்டதாகத்தான் வரலாறுகள் சொல்கின்றது. 

 இத்தனை படித்தபின்னும் அறிவு வளர்ந்த பின்னும் இன்னும் ஆண்பெண் என பிரிந்து பார்த்து அதை குறித்த ஆராய்ச்சி செய்து கொண்டும் இருங்க.  நல்லா வருவிங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by பானுஷபானா Sat 3 May 2014 - 9:16

*# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by Nisha Sat 3 May 2014 - 9:31

ஏன் பானு ஓடறிங்க!

மேலே சொன்ன அத்தனை காரணமும்  பெண்ணுக்கு பெண் தோழியானவர்களிடமும் தோன்றும் பொஷிசிவ் குணம் தான்.

என் பிரெண்டு என்கிட்ட மட்டும் தான் பேசனூம். நான்   மட்டும்  அவளுக்கு பெஸ்ட் பிரெண்டு எனும்  உரிமை பெண் தோழிகளிடம் அதிகம் உண்டு. எதிர்பாலின நட்பில்  மட்டுமே  அப்படி என்பது இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by பானுஷபானா Sat 3 May 2014 - 9:55

Nisha wrote:ஏன் பானு ஓடறிங்க!

மேலே சொன்ன அத்தனை காரணமும்  பெண்ணுக்கு பெண் தோழியானவர்களிடமும் தோன்றும் பொஷிசிவ் குணம் தான்.

என் பிரெண்டு என்கிட்ட மட்டும் தான் பேசனூம். நான்   மட்டும்  அவளுக்கு பெஸ்ட் பிரெண்டு எனும்  உரிமை பெண் தோழிகளிடம் அதிகம் உண்டு. எதிர்பாலின நட்பில்  மட்டுமே  அப்படி என்பது இல்லை.

நான் அதுக்கு ஓடல. இந்த டாபிக் கொஞ்சம் டேஞ்சரஸ் . அவரவர் மன நிலையை பொறுத்து தான் அமையும்.

அதனால் இதைப் பற்றி பேச விருப்பமில்லை. அதனால் ஓடுகிறேன்.

ஆண் பெண் தனித்து இருந்தால் அங்கே சைத்தானும் வழி கெடுக்க இருக்கிறான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by Nisha Sat 3 May 2014 - 10:03

அப்படின்னால்   அப்பா, அண்ணா, தம்பி,  சித்தப்பா பெரியப்பா அவங்க பசங்க  என யாருடனும்  தனித்து இருந்ததில்லையா.. இவர்கள் எல்லோருமே ஆண்கள் தானே!
 
எல்லோருமே அப்படி எனவும் சொல்ல முடியாதே!
 
ஒட்டுமொத்தமாய்  நீங்கள், முஹைதீன்,  முத்துமுகமது  என எல்லோரும் எதிர்மறையாய் கூறுவதை பார்க்கும் போது  மதம் சார்ந்த  கட்டுப்பாடுகள் உங்களிடம் இவ்வாறான எண்ணத்தினை தோற்றுவித்துள்ளதோ என தோன்றுகின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by பானுஷபானா Sat 3 May 2014 - 10:13

Nisha wrote:அப்படின்னால்   அப்பா, அண்ணா, தம்பி,  சித்தப்பா பெரியப்பா அவங்க பசங்க  என யாருடனும்  தனித்து இருந்ததில்லையா.. இவர்கள் எல்லோருமே ஆண்கள் தானே!
 
எல்லோருமே அப்படி எனவும் சொல்ல முடியாதே!
 
ஒட்டுமொத்தமாய்  நீங்கள், முஹைதீன்,  முத்துமுகமது  என எல்லோரும் எதிர்மறையாய் கூறுவதை பார்க்கும் போது  மதம் சார்ந்த  கட்டுப்பாடுகள் உங்களிடம் இவ்வாறான எண்ணத்தினை தோற்றுவித்துள்ளதோ என தோன்றுகின்றது.

இஸ்லாம் மதம் அல்ல. மார்க்கம் நிஷா. மதத்திற்கும் மார்க்கத்திற்கும் வித்தியாசம் இருக்கு.

உறவு சார்ந்த ஆண்களுக்கும் மற்ற ஆணுக்கும் வித்தியாசமிருக்கு.  இவர்கள் உறவில் உள்ள பெண்ணைப் பார்க்கும் கண்ணோட்டம் வேறு. மற்ற ஆணிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

இஸ்லாம் மார்க்கம் சொல்வதையும் நாங்க கேட்டுத் தானே ஆகனும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by Nisha Sat 3 May 2014 - 10:37

மார்க்கம் சொல்வதை கேட்கத்தான் வேண்டும். உங்கள் மார்க்கம் என்ன சொல்கிறது என நான் முழுமையாக  படிக்கவில்லை என்பதால் அது குறித்து கருத்து சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும். 

உறவு சார்ந்த ஆணிடம் எல்லாமே சரியாகவா  இருக்கும், மற்றவர்களிடம் மட்டும் முழுதாக தப்புதான் இருக்குமென நினைத்து  பழக ஆரம்பிப்பது தான் தப்பு.
 
நண்பன் என எல்லோரிடமும் நட்பாய் பேசி பழக முடியாது. யாராது ஒருவர் அல்லது இருவர் மட்டுமே  முழு வாழ்க்கையிலும் இவ்வாறு நல்ல உயிர் நட்பு எனும் வரையறைக்கும் வரகூடியவர்களாக் இருப்பார்கள். அப்படியான்வர்கள் உறவை விட மேம்பட்டு  அக்கறையாய் அன்பாய் வழிகாட்டலாய் மட்டுமே இருப்பார்கள்.
 
பல சூழலில் பிற ஆடவர் தரும் பாதுகாப்பு. இரத்த சம்பந்தப்ட்டவர்கள் தருவதில்லை.  இப்படி எழுதுவதால் என் அனுபவத்தினை சொல்கிறேன் என  எண்ண வேண்டாம். என் அனுபவமும் இருக்கிறது என்பது வேற விடயம்.
 
தனித்திருக்கும் ஆண் பெண் மனதில் சைத்தான் வருவான் எனும்  ஆரம்ப புரிதலே தப்பு.அப்படிபட்ட புரிதலுடன்  இருக்கும் ஆணும்பெண்ணும் அதையே சிந்தித்துகொண்டு  பார்ப்பது, பேசுவதும் அவர்கள் மனதில் களங்கத்தை தான் தரும்.
 
கலங்கிய குட்டையாய் மனது இருந்தால் சைத்தான் குடியே புகுவான் என்பது என்  புரிதல். மிகதெளிவாக்  இது இப்படித்தான் என நாம் இருந்து விட்டால் சைத்தானுக்கு எங்கே இடம்  கிடைக்கபோகின்றது. 
 
நம்மிடம் மனக்க்ட்டுப்பாடு இல்லை என ஒப்புகொள்ளணும்.  அதை விட அப்படி  தனிமையை மிஸ்யூஸ் பண்ணும்  நட்புக்கள் எப்படி நல்ல நட்புக்கள் பட்டியலில் வரும்.   ஒருவர் பேசும் பேச்சு, செயலில் அவர் எப்படிபட்டவர் என உணராமலா நம் நட்பு லிஸ்டில் சேர்க்கிறோம்.  
 
ஆண்பெண் நட்பென்பது தாயின் புரிதலை,தகப்பனின் வழிகாட்டலை,, சகோதரியின் பாசத்தை, மகளின் அன்பை  தரும் ஒன்றாய் இருக்கணும். மனதை புரிந்துக்கணும். சந்தோஷத்தில் பங்கெடுக்கா விட்டாலும்  துன்பத்தில் துணை நிற்கணும்.
 
இங்கே பேசபடும் விடயம் ஜஸ்ட் பிரெண்ட் சிப் என  நான்கு நாள் பழகி ஐந்தாம் நாள்சண்டை போட்டு ஆறாம் நாள் எதிரியாய் பழிக்குபழி வாங்குறெனெனு  செல்லும்  உலக போலி நட்பை குறித்து  எனில்  ஐம் ஸாரி. நீங்கள் சொல்வது சரியே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by பானுஷபானா Sat 3 May 2014 - 11:11

உறவினர் நல்லவராகத் தான் இருக்கனும்னு சொல்ல முடியாது.

உறவினரிடமே எச்சரிக்கையாகத் தான் பழகனும். அதற்காக அந்நிய ஆணிடம் நட்பாய் பழகனும்னு எந்தச் சட்டமும் இல்லையே.

ஆணோ பெண்ணோ இறுதிவரை உறுதியாய் இருந்தால் தான் நட்பு நிலைக்கும். இந்த இருவரில் ஒருவர் நிலை தவறினாலும் அங்கே நட்பு கொச்சைப்படுத்தப்படுகிறது. இருவருமே பழகும் விதத்தில் தான் நம்பகத் தன்மை வெளிப்படுகிறது.

மு. மன்றத்தில் கூட நான் சொல்லி இருக்கேன் அந்தரங்கம் பேசாத வரை நட்பு நீடிக்கும் என சொன்னேன்.
அதற்காக எல்லோரையும் ஒட்டு மொத்தமாக சொல்லவில்லை. ஆணூம் பெண்ணும் கன்னியம் தவறாமல் கடைசி வரை நட்பாய் இருக்கத் தான் செய்கிறார்கள். அது அவர்களின் நட்பின் புனிதத்தை காட்டுகிறது. 100 க்கு 50 சதம் நம்பகத்தன்மை இல்லாத நட்பு தான் இருக்கு. அதிலும் இப்போதுள்ள காலகட்டத்தில் பெண் நட்பே பயம் கொள்ளத் தான் வைக்கிறது.

இதற்கு தான் ஓடினேன் நிஷா தவறாக நினைக்க வேண்டாம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 May 2014 - 11:35

இந்த திரியை இப்போததான் பார்தேன் இதபற்றி பக்கம் பக்கமாக எழுதினால்தான் புரிதல் கிடைக்கும் மார்க்கத்தின் வரையறைகளைக் கடைப்பிடித்தல் இந்த உறவில் மிக முக்கியமாக இருக்கிறது மார்க்கம் எனன சொல்லியிருக்கிறது என்றால் ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருக்கும் போது செய்த்தான் எனும் வழிகெடுப்பவன் அவர்களுடன் கூட இருக்கிறான் ஆதலால் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள் என்பதாக அறிவுறுத்தப்படுகிறது 

மனிதன் ஆசைக்கும் தவறுகளுக்கும் மத்தியில் படைக்கப்பட்டிருக்கிறான் மனிதன் ஆசைக்கு அடிமையானவன் 
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆசை என்பது அவகளுக்குள்ள குணம் 
மிக நெருக்கமான நட்பு என்னும் போது ஆண் பெண் கலந்து நட்போடு பயணிக்கும் போது தங்களுக்குள் அத்தனை தலைப்புகளையும் பரிமாறுகின்ற வளமையினைக் காண்கிறோம் நண்பர்கள்தானே அவர் என்னை தாங்குகிறார் நான் அவரைத் தாங்குகிறார் எனக்குள்ள குறைகளை அவர் நிவர்த்திப்பார் அவருக்குள்ளதை நான் நிவர்த்திப்போன் என்றெல்லாம் நெருங்கிச்செல்கின்ற நட்பினுள் தவறுகளாகத் தெரிவதில்லை இது ஈற்றில் பாவச்செயல்களில் கொண்டு விடும் என்பதில் ஐயமில்லை ஆதலால்தான் மேலே சொன்னதுபோல் மார்க்கத்துடன் பயணிக்கும் போது எமக்குள் கட்டுப்பாடுகள் நாம் விதித்து தூய்மையாக இருந்திடலாம் என்பதற்காகத்தான் இவ்வாறு தடுக்கப்படுகிறது 

தொடர்கிறேன்.....

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by Nisha Sat 3 May 2014 - 11:46

தவறாக நினைக்க என்ன இருக்கிறது.  உங்க கருத்தை சொல்கின்றீர்கள். அவ்வளவுதான். தயக்கம் வேண்டாம்.

என்க்கு புரியவில்லைத்தான் பானு.
 
தனிமையும்,அந்தரங்கமும் ஏன் பேசும் படி வரவேண்டும்.  எதற்காக அந்தரங்க பேசணும். நம் தாயிடமே நம பல விடயம் பேசுவதில்லை எனும் போது எதற்காக இந்த டாபிக் பேசணும்.
 
உங்கள் முத்தமிழ் மன்ற பதிலுக்கு ஔவை அந்தரங்கம் பேசாமலே அந்தரங்கம் புரிந்து  கொள்ளும்  என  பதில் சொன்னதாய் நினைவு.
 
எதற்காக நட்பினிடையே தனிமையையும் , அந்தரங்கத்தினையும் முடிச்சி போடுகின்றீர்கள்..  .
 
என்ன சொன்னாலும் சரி. தன் மீதே நம்பிக்கையில்லாதவர்களுக்கு நட்பு ஆணானானும் பெண்னானாலும் பிரச்சனைதான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by Nisha Sat 3 May 2014 - 12:17

நேசமுடன் ஹாசிம் wrote:இந்த திரியை இப்போததான் பார்தேன் இதபற்றி பக்கம் பக்கமாக எழுதினால்தான் புரிதல் கிடைக்கும் மார்க்கத்தின் வரையறைகளைக் கடைப்பிடித்தல் இந்த உறவில் மிக முக்கியமாக இருக்கிறது மார்க்கம் எனன சொல்லியிருக்கிறது என்றால் ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருக்கும் போது செய்த்தான் எனும் வழிகெடுப்பவன் அவர்களுடன் கூட இருக்கிறான் ஆதலால் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள் என்பதாக அறிவுறுத்தப்படுகிறது 

தனிமையில் ஏன் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும் நம் மனசில் கட்டுப்பாடு  இருந்தால்  யார் என்ன செய்ய முடியும். அப்படி உடல் ரிதியாக சலனப்படும் ஒருவரை நட்பு லிஸ்டில் எப்படி சேர்க்க முடியும்.. நான் சேர்க்க மாட்டேன்.  நிச்சயமாக சின்ன சலனம்  காட்டி பேசினாலும் நட்பென்ன அவர் அறிமுகமாவராகவே காட்ட மாட்டேன்.
 
துஷ்டனை கண்டால் தூர விலகு கதை தான்.

மனிதன் ஆசைக்கும் தவறுகளுக்கும் மத்தியில் படைக்கப்பட்டிருக்கிறான் மனிதன் ஆசைக்கு அடிமையானவன் 
ஆசைக்கும் தவறுக்கும் மத்தியில் படைக்கபட்டிருந்தாலும் சொந்தமாய் சிந்தித்து சுயமாய் முடிவெடுக்கும் ஆறறிவு ஆற்றலோடும் படைக்கப்பட்டிருக்கிறான்.  நாம் சாப்பிடுவதும், சிரிப்பதும் , தூங்குவதும் போல  தான் நம் உடல் உணர்வுகளும். அதை ஏதோ தவறானது போல் சித்தரித்து வளர்க்கப்படுவதால்  தான் இம்மாதிரி சிந்தனைகள் வரும் படி  வாய்ப்பாகின்றது. விண்ணுக்கும் மன்ணுக்கும் செல்லும் இக்காலத்திலும் இப்படித்தான் என பேசிகொண்டிருந்தால் நம்மில் நமக்கு நம்பிக்கை இல்லை என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆசை என்பது அவகளுக்குள்ள குணம் 
மிக நெருக்கமான நட்பு என்னும் போது ஆண் பெண் கலந்து நட்போடு பயணிக்கும் போது தங்களுக்குள் அத்தனை தலைப்புகளையும் பரிமாறுகின்ற வளமையினைக் காண்கிறோம்
 
எல்லாம் பேசலாம் என்பதற்கும் ஒரு வரையறை உள்ளது என்பது என் புரிதல். நான் என் தாயிடம் பேசகூடாததும் பலது உண்டு எனும் போது நட்பென வந்தாலும்  இன்னொருவரிடம் என்ன பேசலாம் பேசகூடாது எனும் வரைமுறை கட்டுபாடு எனக்குள் இருக்கணும். அதை தாண்டி எல்ல்ல்ல்ல்ல்லாம் பேசினோம் விவாதித்தோம் என்றால் அது தேவையில்லாதது தான் .  என்ன எப்படி யாரிடம், எங்கே பேசலாம் என  கட்டுபாடு தெரியாதவர்களாகவா இத்தனை படித்த பின்னும் நாம் இருக்கிறோம்.
 
மார்க்க நெறிகள் அனைத்து மதத்திலும் உண்டு அக்கால கட்டத்தில் வகுக்கப்ட்டதை எல்லாம் அப்படியேவா கடைப்பிடிக்கின்றீர்கள்.  கால கட்டத்துக்கு ஏற்ப சிலது மாறியதே இல்லையா.. .. அக்கால த்தில் அவை தேவையாயிருந்தது. பல தார மணம் அக்காலத்தில் வழமை என்பதற்காக இக்காலத்திலும் ஆளுக்கு ஐந்து திருமணம் செய்ய முடியுமா..

நண்பர்கள்தானே அவர் என்னை தாங்குகிறார் நான் அவரைத் தாங்குகிறார் எனக்குள்ள குறைகளை அவர் நிவர்த்திப்பார் அவருக்குள்ளதை நான் நிவர்த்திப்போன் என்றெல்லாம் நெருங்கிச்செல்கின்ற நட்பினுள் தவறுகளாகத் தெரிவதில்லை இது ஈற்றில் பாவச்செயல்களில் கொண்டு விடும் என்பதில் ஐயமில்லை ஆதலால்தான் மேலே சொன்னதுபோல் மார்க்கத்துடன் பயணிக்கும் போது எமக்குள் கட்டுப்பாடுகள் நாம் விதித்து தூய்மையாக இருந்திடலாம் என்பதற்காகத்தான் இவ்வாறு தடுக்கப்படுகிறது 

-- தாங்குகிறார், அன்பு செலுத்துகிறார், என்பதும் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை பொறுத்தது. பல நேரம் தாயால் மனைவியால்   புரிந்து கொள்ள முடியாதது  நட்பால் புரிந்து ஆறுதலாக்கப்டுகிறது.  அதற்காக தாயை விடுட் மனைவியை விட்டு நட்பு பாராட்ட சொல்லியா இருக்கிறது..  கட்டுபாடுகள் விதிப்பது வேறு. நட்பே தப்பென சொல்லிசெல்வது வேறு.
 
அப்பா மகள், அண்ணா தங்கை, அக்கா, தம்பி உறவு எனினும் அதற்கும் கட்டுப்பாடும் வரையரையும் உண்டு. எதை பேசலாம். பேசகூடாது என்பதும் உண்டு அப்பா என்பதுக்காக அப்பாவிடம் எல்லாம் பேச முடியுமா.. .. தம்பியிடம் பேச முடியுமா..குறித்த வயதில் பின் அண்ணன் மடியில் தூங்க முடியு்மா..  உப்பு மூட்டை தூக்கு என சொல்ல முடியுமா.. எல்லாவற்ரிக்கும் காலம் உண்டு.அதனதன் காலத்தில் மட்டும்   தான் அவை சாத்தியம். 
 
தோழமைக்கும் அப்படித்தான். சிறுவயதில்  கட்டிபிரண்டு சண்டை போட்டு  கொண்டால் வளர்ந்து திருமணமான  பின்னும் அது தொடரணும் என் இல்லை.   அப்படி ஏன் தோழமையை எடுத்து கொள்ளாமல் தனிமை,  பாவம்..என புரிந்து விலகணும்.
 
என்னை பொறுத்த வரை நட்பென பழகி காதலாக மாறினாலோ. காமமாக மாறினாலோ அது நட்பில் லிஸ்டில் சேர்த்தியும் இல்லை. .   அது நட்பே இல்லை.
 
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by பானுஷபானா Sat 3 May 2014 - 12:28

Nisha wrote:தவறாக நினைக்க என்ன இருக்கிறது.  உங்க கருத்தை சொல்கின்றீர்கள். அவ்வளவுதான். தயக்கம் வேண்டாம்.

என்க்கு புரியவில்லைத்தான் பானு.
 
தனிமையும்,அந்தரங்கமும் ஏன் பேசும் படி வரவேண்டும்.  எதற்காக அந்தரங்க பேசணும். நம் தாயிடமே நம பல விடயம் பேசுவதில்லை எனும் போது எதற்காக இந்த டாபிக் பேசணும்.
 
உங்கள் முத்தமிழ் மன்ற பதிலுக்கு ஔவை அந்தரங்கம் பேசாமலே அந்தரங்கம் புரிந்து  கொள்ளும்  என  பதில் சொன்னதாய் நினைவு.
 
எதற்காக நட்பினிடையே தனிமையையும் , அந்தரங்கத்தினையும் முடிச்சி போடுகின்றீர்கள்..  .
 
என்ன சொன்னாலும் சரி. தன் மீதே நம்பிக்கையில்லாதவர்களுக்கு நட்பு ஆணானானும் பெண்னானாலும் பிரச்சனைதான்.

நமக்கு நம் மேல் நம்பிக்கையில்லாமல் எப்படி இருக்கும். இன்னோரு பாலின் மேல் நம்பிக்கை வரமாட்டேங்குது.

நம்பிக்கை வைத்து பேச ஆரம்பித்து பின் ஏதாவது ஒன்று என்றால் தாங்க முடியாது. அதற்கு முன்னெச்சரிகையாக இருப்பது நல்லது தானே.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 May 2014 - 12:31

நீங்கள் கூறுவதும் நான் எழுதுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நட்பு எப்போதென்றால் புரிந்துணர்வுடனான அனுவத்தில் முதிந்த வயதாலும் சூழலாலும் வென்றிருக்கின்ற நண்பர்களைப்பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் நான் சொல்லவருவது வாலிப நண்பர்களைப்பற்றி இவ் இரண்டினுள்ளும் வித்தியாசங்கள் நிறைந்திருக்கிறது 

திருமணம் முடித்த பின்னர் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்ளாயிருந்தால் அவர்களுக்கு மத்தியில் சாதாரணமான ஒரு தூய நிலை நிச்யமாக இருக்கும் 
ஆனால் ஒரு வாலிப வயதில் உள்ள நண்பர்களுக்கு மத்தியில் அவ்வாறான நிலையினை நாம் எதிர்பார்க்க முடியாது 
அவற்றைத் தாண்டித்தான் வந்தோம் நான் தூய நட்புடன்தான் இருக்கிறறேன் இருந்தேன் என்றால் 
நீங்களும் நானும் விதிவிலக்காக இருக்கலாம் ஆனால் பெருவாரியான உலக நடப்பினை எடுத்து நோக்கும் போது நாம் எதிர்பார்க்கின்ற நண்பர்களைக் காண்பதரிது 
ஏதோ ஒரு வகையில் அவர்கள் பிரச்சினைகளுக்குள்ளாகி நட்பு என்பதையே கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள் என்பதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 May 2014 - 12:34

பானுஷபானா wrote:
Nisha wrote:தவறாக நினைக்க என்ன இருக்கிறது.  உங்க கருத்தை சொல்கின்றீர்கள். அவ்வளவுதான். தயக்கம் வேண்டாம்.

என்க்கு புரியவில்லைத்தான் பானு.
 
தனிமையும்,அந்தரங்கமும் ஏன் பேசும் படி வரவேண்டும்.  எதற்காக அந்தரங்க பேசணும். நம் தாயிடமே நம பல விடயம் பேசுவதில்லை எனும் போது எதற்காக இந்த டாபிக் பேசணும்.
 
உங்கள் முத்தமிழ் மன்ற பதிலுக்கு ஔவை அந்தரங்கம் பேசாமலே அந்தரங்கம் புரிந்து  கொள்ளும்  என  பதில் சொன்னதாய் நினைவு.
 
எதற்காக நட்பினிடையே தனிமையையும் , அந்தரங்கத்தினையும் முடிச்சி போடுகின்றீர்கள்..  .
 
என்ன சொன்னாலும் சரி. தன் மீதே நம்பிக்கையில்லாதவர்களுக்கு நட்பு ஆணானானும் பெண்னானாலும் பிரச்சனைதான்.

நமக்கு நம் மேல் நம்பிக்கையில்லாமல் எப்படி இருக்கும். இன்னோரு பாலின் மேல் நம்பிக்கை வரமாட்டேங்குது.

நம்பிக்கை வைத்து பேச ஆரம்பித்து பின் ஏதாவது ஒன்று என்றால் தாங்க முடியாது. அதற்கு முன்னெச்சரிகையாக இருப்பது நல்லது தானே.
நிச்சயமாக பானு சொல்லவது சரி 
அதாவது நம்மீது நம்பிக்கை இருக்கிறது என்பது உண்மை எதிர்ப்பாலார் நடந்துகொள்ளும் விதமும் நம்பக்கூடியதாக இருந்தாலும் சந்தர்ப்பமும் சூழலும் எம்மை வழி தவறச்செய்துவிடும் என்பதுதான் உண்மை 
நான் பிழையே செய்ய மாட்டேன் என்று வீம்புக்கு கூறலாம் நண்பன் அல்லது நண்பி என்று வரும் போது சில விட்டுக்கொடுப்புகள் நிர்ப்பந்திக்கவும் படலாம் அதுதான் நிதர்சனம்

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by Nisha Sat 3 May 2014 - 12:35

ஹாய் மேடம் நம்க்கு நம்பிக்கை இல்லாதவர்களை நாம் நம் நட்பு லிஸ்டில் சேர்ப்பது எப்படியாம்..    உன் நண்பனை சொல் உன்னை சொல்கிறேன் என படித்ததில்லையா.. நம் நண்பர்கள் லிஸ்டில் வரும் ஆணோ ,பெண்னோ  நம் நட்புக்கு ஏற்றவர்களா இல்லையா என வடிகட்டி தெரிந்தெடுக்காமல்   கண்டவர்களையும் நட்பென  சொல்லலாமா என  யோசியுங்க..   அப்படி சொன்னால் அது நட்பு லிஸ்டிலும் வராது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 May 2014 - 12:40

Nisha wrote:ஹாய் மேடம் நம்க்கு நம்பிக்கை இல்லாதவர்களை நாம் நம் நட்பு லிஸ்டில் சேர்ப்பது எப்படியாம்..    உன் நண்பனை சொல் உன்னை சொல்கிறேன் என படித்ததில்லையா.. நம் நண்பர்கள் லிஸ்டில் வரும் ஆணோ ,பெண்னோ  நம் நட்புக்கு ஏற்றவர்களா இல்லையா என வடிகட்டி தெரிந்தெடுக்காமல்   கண்டவர்களையும் நட்பென  சொல்லலாமா என  யோசியுங்க..   அப்படி சொன்னால் அது நட்பு லிஸ்டிலும் வராது.
அக்கா ஒரு பிரச்சினை வரும்போதான் அவர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் என்னும் போது எப்படி கழட்டிவிடுவது இப்போதெல்லாம் அனைவரும் பார்த்துப்பார்த்துப் பளகிறார்கள் ஆனால் அவர்களின் உள் நோக்கம் அறிந்துகொள்ள நாம் பழகித்தானே அறிய முடியும் அதன் முன்னர் அறிந்து கொள்ள முடியும் என்றிருந்தால் இந்த தலைப்பே தேவையில்லாததாகிவிடுமே

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by Nisha Sat 3 May 2014 - 12:43

நேசமுடன் ஹாசிம் wrote:நீங்கள் கூறுவதும் நான் எழுதுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நட்பு எப்போதென்றால் புரிந்துணர்வுடனான அனுவத்தில் முதிந்த வயதாலும் சூழலாலும் வென்றிருக்கின்ற நண்பர்களைப்பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் நான் சொல்லவருவது வாலிப நண்பர்களைப்பற்றி இவ் இரண்டினுள்ளும் வித்தியாசங்கள் நிறைந்திருக்கிறது 

திருமணம் முடித்த பின்னர் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்ளாயிருந்தால் அவர்களுக்கு மத்தியில் சாதாரணமான ஒரு தூய நிலை நிச்யமாக இருக்கும் 
ஆனால் ஒரு வாலிப வயதில் உள்ள நண்பர்களுக்கு மத்தியில் அவ்வாறான நிலையினை நாம் எதிர்பார்க்க முடியாது 
அவற்றைத் தாண்டித்தான் வந்தோம் நான் தூய நட்புடன்தான் இருக்கிறறேன் இருந்தேன் என்றால் 
நீங்களும் நானும் விதிவிலக்காக இருக்கலாம் ஆனால் பெருவாரியான உலக நடப்பினை எடுத்து நோக்கும் போது நாம் எதிர்பார்க்கின்ற நண்பர்களைக் காண்பதரிது 
ஏதோ ஒரு வகையில் அவர்கள் பிரச்சினைகளுக்குள்ளாகி நட்பு என்பதையே கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள் என்பதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை

வாலிப வயது நட்பை குறித்து என திரியில் தலைப்பில் போட்டிருக்கணும் சார்.  பொதுவாக  நட்பு அதிலும் ஆண், பெண் நட்பு என  போட்டு  முடியவே முடியாது என்றால் எப்படியாம்.
 
இந்த வாலிப வயது நட்பும் நட்பு பாராட்டும் எல்லாரிடமும்   தப்பாக மாறும் என்பதும் கொஞ்சம் கடினம் தான்..  நாம் அவர்களுக்கு சரியாக கற்பிக்கவில்லை .. ஆண் பெண் தூய்மை குறித்த புரிதலை அவர்களுக்கு புரிய செய்யவில்லை என்று  தான் ஆகின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by Nisha Sat 3 May 2014 - 12:50

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ஹாய் மேடம் நம்க்கு நம்பிக்கை இல்லாதவர்களை நாம் நம் நட்பு லிஸ்டில் சேர்ப்பது எப்படியாம்..    உன் நண்பனை சொல் உன்னை சொல்கிறேன் என படித்ததில்லையா.. நம் நண்பர்கள் லிஸ்டில் வரும் ஆணோ ,பெண்னோ  நம் நட்புக்கு ஏற்றவர்களா இல்லையா என வடிகட்டி தெரிந்தெடுக்காமல்   கண்டவர்களையும் நட்பென  சொல்லலாமா என  யோசியுங்க..   அப்படி சொன்னால் அது நட்பு லிஸ்டிலும் வராது.
அக்கா ஒரு பிரச்சினை வரும்போதான் அவர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் என்னும் போது எப்படி கழட்டிவிடுவது இப்போதெல்லாம் அனைவரும் பார்த்துப்பார்த்துப் பளகிறார்கள் ஆனால் அவர்களின் உள் நோக்கம் அறிந்துகொள்ள நாம் பழகித்தானே அறிய முடியும் அதன் முன்னர் அறிந்து கொள்ள முடியும் என்றிருந்தால் இந்த தலைப்பே தேவையில்லாததாகிவிடுமே

என்  நண்பன் என்னை போல் இருக்கணும். அப்படி இல்லையா என்னை போல் மாற்றணும். அப்படியும் இல்லையா நீ எனக்கு நண்பன  இருக்க இலாயக்கில்லை என முடிவெடுக்க தெரியணும்.
 
இணையத்தில் முகம் பாராமல் பழகியே அவர்கள் எழுத்துக்கள் வைத்து இப்படி தான் என முடிவெடுத்து தட்டி கொட்ட முடியும் போது நேரில் பார்த்து பேசும் சூழலில் பழகியா ஒருவரை தெரிந்துக்கணும்.
 
அடபோங்கப்பா.. மறைந்திருக்கும்  நுண்ணுணர்வை கொஞ்சம் வெளிக்கொண்டு வந்தால் போதும்.  நம் நட்புக்கு இவர்கள் இலாயக்கானவர்களா என  உணர..  (_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 May 2014 - 12:52

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நீங்கள் கூறுவதும் நான் எழுதுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நட்பு எப்போதென்றால் புரிந்துணர்வுடனான அனுவத்தில் முதிந்த வயதாலும் சூழலாலும் வென்றிருக்கின்ற நண்பர்களைப்பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் நான் சொல்லவருவது வாலிப நண்பர்களைப்பற்றி இவ் இரண்டினுள்ளும் வித்தியாசங்கள் நிறைந்திருக்கிறது 

திருமணம் முடித்த பின்னர் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்ளாயிருந்தால் அவர்களுக்கு மத்தியில் சாதாரணமான ஒரு தூய நிலை நிச்யமாக இருக்கும் 
ஆனால் ஒரு வாலிப வயதில் உள்ள நண்பர்களுக்கு மத்தியில் அவ்வாறான நிலையினை நாம் எதிர்பார்க்க முடியாது 
அவற்றைத் தாண்டித்தான் வந்தோம் நான் தூய நட்புடன்தான் இருக்கிறறேன் இருந்தேன் என்றால் 
நீங்களும் நானும் விதிவிலக்காக இருக்கலாம் ஆனால் பெருவாரியான உலக நடப்பினை எடுத்து நோக்கும் போது நாம் எதிர்பார்க்கின்ற நண்பர்களைக் காண்பதரிது 
ஏதோ ஒரு வகையில் அவர்கள் பிரச்சினைகளுக்குள்ளாகி நட்பு என்பதையே கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள் என்பதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை

வாலிப வயது நட்பை குறித்து என திரியில் தலைப்பில் போட்டிருக்கணும் சார்.  பொதுவாக  நட்பு அதிலும் ஆண், பெண் நட்பு என  போட்டு  முடியவே முடியாது என்றால் எப்படியாம்.
 
இந்த வாலிப வயது நட்பும் நட்பு பாராட்டும் எல்லாரிடமும்   தப்பாக மாறும் என்பதும் கொஞ்சம் கடினம் தான்..  நாம் அவர்களுக்கு சரியாக கற்பிக்கவில்லை .. ஆண் பெண் தூய்மை குறித்த புரிதலை அவர்களுக்கு புரிய செய்யவில்லை என்று  தான் ஆகின்றது.
இதற்கு சில சமுக காரணங்கள் முட்டுக்கட்டயாக இருக்கிறது அதாவது
மார்க்கம் சார்ந்த கட்டுப்பாடு ஒரு புறமிருக்க 
கலாச்சார நடைமுறை ஒன்றுமிருக்கிறது மேலைத்தேய நாடுகளுடன் எமது நாட்டினை ஒப்பிடும்போது பிள்ளைகள் வளர்க்கப்டும் விதம் வித்தியாசப்படுகிறது அதாவது ஆண் பிள்ளை பெண்பிள்ளை என்று அவர்களை வேறுபடுத்தி அவர்களின் உடை நடைகளில் அதிகமான கட்டுப்பாட்டுன் மனதளவில் கட்டுப்படுத்தியே வளர்க்கிறோம் அதனால் சாதாரணமாகவே எம் சமுகத்தில் ஆண் பெண் உறவென்பது ஒரு ஈர்ப்பாகவே கருதப்படுகிறது நடந்தேறுகிறது 
மேலைத்தேய நாடுகளில் உள்ள சுதந்திரம் இங்கு இல்லை அவர்கள் அனைத்தையும் தாண்டி வளர்கிறார்கள் இங்கு அனைத்தும் மறுக்கப்பட்டே வளர்கிறார்கள் இவர்களுக்கு கட்டுப்பாடு என்பது அதிகம் தேவைப்படுகிறது அவர்களுக்கு தேவையில்லை (அதிகமானதை வெளிப்படையாக எழுத முடியல)

அதனால்தான் இங்கு நிலவும் ஈர்ப்பு நிலை வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஆளாக்கிவிடும் என்பதால்தான் கட்டுப்பாட்டினை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…? Empty Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum