சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

முதன்மை பெறும் மூலிகைகள்…!  Khan11

முதன்மை பெறும் மூலிகைகள்…!

2 posters

Go down

முதன்மை பெறும் மூலிகைகள்…!  Empty முதன்மை பெறும் மூலிகைகள்…!

Post by ஹம்னா Wed 16 Feb 2011 - 19:49

வேக வைத்த காய்கறி, பதப்படுத்தபட்ட காய்கறி என்று நாம் சாப்பிடும் உணவுபொருள் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. இதனால், அவற்றில் உள்ள உயிர்ச்சத்துக்கள் எனபடும் வைட்டமின்கள் அழிந்து விடுகிறது. அதனால், நமக்குத் தேவையான புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை போதிய அளவிற்கு கிடைக்காமல் பலவகையான நோய்கள் வந்து விடுகிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? இதற்கு தீர்வு `பயோ புட்’ எனபடும் உணவுதான்.

அதென்ன பயோ-புட்..?

முதன்மை பெறும் மூலிகைகள்…!  Km01


முளையிட்ட தானியங்களில் இவை பெரும்பாலும் கிடைக்கிறது. அதனால், புரதம், கொழுப்பு, வைட்டமின் அதிகம் உள்ள தானியங்களை தேர்ந்தெடுத்து அவற்றை முளை கட்ட வேண்டும். இதிலிருந்து உடல் எடை அதிகரிக்க, நீரிழிவு நோய் கட்டுபட என்று நோயின் தன்மைக்கேற்ப தேவையான சத்துக்கள் அடங்கிய உணவுவகைகளை மருத்துவ நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். இந்த உணவை முறைபடி சாப்பிடுவதன் மூலம் நோயைக் கட்டுபடுத்த முடியும் என்று சொல்கிறது சித்த மருத்துவம்.

சித்த மருத்துவம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது. சிவன் பார்வதிக்கு யோகம், ஞானம், வாதம், மருத்துவம், மந்திரம், சாத்திரம், தோத்திரம் போன்றவற்றை சொல்லிக் கொடுத்தார். இவற்றை தேவி நந்திக்கும், நந்தி தன்வந்திரிக்கும், தன்வந்திரி அசுவினிக்கும், அசுவினி அகத்தியருக்கும், அகத்தியர் புலத்தியருக்கும், புலத்தியர் தேரையருக்கும், தேரையர் பல சித்தர்களுக்கும் முறையாக உபதேசித்து இறுதியாக தமிழ் மக்களிடையே வந்து சேர்ந்துள்ளது.

சித்த மருத்துவத்தின் சிறப்பை உணர வைத்தது `சித்தா-2010′ என்ற பெயரில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நடந்த கண்காட்சி.



முதன்மை பெறும் மூலிகைகள்…!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

முதன்மை பெறும் மூலிகைகள்…!  Empty Re: முதன்மை பெறும் மூலிகைகள்…!

Post by ஹம்னா Wed 16 Feb 2011 - 19:56

முதன்மை பெறும் மூலிகைகள்…!  Km03


லேகியம், மூலிகை பவுடர், மருத்துவ நூல்கள், வர்மா, யோகா உள்பட எக்ஸ்டர்னல் தெரபி சம்பந்தமாக 30 அரங்குகள், 650 மூலிகைச் செடிகள் என்று பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது கண்காட்சி.

வெண்கொடிவேலி, தொழுகணி, செம்முள்ளி, சதுரமுல்லை, பதிமுகம், பூடுநாடி, கருங்குறிஞ்சி, வாதநாராயணன், வல்லாரை, சர்பகந்தி, நாகதந்தி, அரத்தை போன்ற அரிய மூலிகைத் தாவரங்களை கண்காட்சியில் காண முடிந்தது. ஓலைபிரண்டை, தழுதாழை, ஆவிமரம், இலட்சக்கொட்டை, கீரை போன்ற தாவர இலைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான நோய்களை போக்கும் எருக்கம் இலை, சளியை போக்கும் நொச்சி இலை, குழந்தைகளின் அஜீரணத்தைக் குறைக்கும் வெற்றிலை போன்ற மூலிகை இலைகள், வீக்கத்தை போக்கும் அம்மான் பச்சரிசி, தோல்நோயை போக்கும் சீனம் அகத்தி போன்ற மூலிகை இலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இவ்வளவு மூலிகைத் தாவரங்களையும் எங்கிருந்து சேகரித்தீர்கள்?

“கொல்லிமலை, சதுரகிரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துவாழ் மலை, ஆந்திரா எல்லையில் உள்ள தடா அருவிபகுதிகளிலும் இந்த தாவரங்களை சேகரித்தோம். குறைந்த நாட்களில் சேகரித்தது எங்களுக்கு மிகபெரிய வெற்றியாக இருந்தது” என்று சிலாகித்தார், இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவர் வினோத்.

“இந்த மூலிகைச் செடிகளை வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். அதிக செலவு கிடையாது. இதன் மூலம் நீண்ட காலமாக இருந்து வரும் நோய்களையும் குணபடுத்தலாம்” என்றார், பேராசிரியர் டாக்டர் உஜீவனம்.


கண்காட்சியில் என்ன ஸ்பெஷல்?

“எக்ஸ்டர்னல் தெரபிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம். வாதகேசரி தைலம், பிண்டத்தைலம், விஷ முஷ்டி தைலம் போன்ற மூலிகை தைலங்களைக் கொண்டு தொக்கணம் (மசாஜ்), குரல் வளைய சிகிச்சை, ஒற்றடம் போன்ற சிகிச்சை செய்கிறோம்., வர்மபுள்ளிகளை அடிபடையாகக் கொண்டு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை செய்கிறோம். யோகா மூலமும் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளித்து வருகிறோம்.

ஒருவர் பிறந்த நேரம் மற்றும் நட்சத்திரங்களை சொன்னால் போதும். என்னென்ன நோய்கள் வரும்? அவர்கள் எந்த வகையான உணவை சாப்பிட வேண்டும் என்று சொல்லிவிட முடியும். இதற்கு `பஞ்சபட்சி சாஸ்திரம்’ என்று பெயர்.

நாடி பார்த்தும், சிறுநீரில் நல்லெண்ணை கலந்து அது பிரியும் நிலையைக் கொண்டும் ஒருவருக்கு எந்த வகையான நோய் உள்ளது என்றும் கண்டுபிடிக்க முடியும். வாத, பித்த, கன்மம் என்று 3 வகையான தேக நிலைகளில் எந்த வகையில் ஒருவர் இருக்கிறார்

என்பதை பரிசோதித்து, அதற்கேற்ப மருந்து கொடுக்க முடியும்.” -என்றார்கள், கல்லூரி மாணவிகள்.

மூலிகை பேனா

விபத்து மற்றும் காயம் பட்டவுடன் முதலில் ரத்தம் வெளியேறும். பின்பு மயக்கம் வரும். இதனால் உடலின் மற்ற பாகங்கள் சோர்வுறுகின்றன.சந்தான காரணி என்ற இந்த மூலிகை பவுடரை காயம் ஏற்பட்ட இடத்தில் போட்ட ஒரு நிமிடத்திற்குள் வலி நீங்கி, ரத்தம் வருவது நின்று விடுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடிய இந்த மருந்தை, எளிதில் எடுத்துச் செல்லும் அளவில் பேனா வடிவில் வடிவமைத்துள்ளது பார்பவர்களை `இது என்ன மூலிகை பேனாவா?’ என்று ஆச்சரியபட வைத்தது.



முதன்மை பெறும் மூலிகைகள்…!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

முதன்மை பெறும் மூலிகைகள்…!  Empty Re: முதன்மை பெறும் மூலிகைகள்…!

Post by ஹம்னா Wed 16 Feb 2011 - 20:19

முதன்மை பெறும் மூலிகைகள்…!  Km02
வியக்க வைத்த அட்டை

அட்டையை முதலில் மஞ்சள் நீர் கொண்டு கழுவுகின்றனர். பின்பு நோயாளியின் பாதிக்கபட்ட இடத்தை ஊசியால் கீறி ரத்தம் வர செய்கின்றனர். இந்த ரத்த வாடை அட்டைக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் இந்த ஏற்பாடு. பின்பு, அந்த இடத்தில் அட்டையை விடுகின்றனர். அந்த இடத்தில் இருந்து வரும் அசுத்த ரத்தத்தை அட்டை உறிஞ்சி விடுகிறது. பின்பு மஞ்சள் பொடியை அந்த இடத்தில் தூவி, அட்டையை எடுத்து விடுகின்றனர். இப்போது நோயின் தீவிரம் கட்டுபடுத்தபட்டு, நோயாளி குணமாகிறார். அட்டையைக் கொண்டு சிகிச்சை அளிக்கபடும் இந்த முறைக்கு `அட்டை சுத்தி’ என்று பெயர்.

***
அகத்தியர் சூடாமணி கயிறு சூத்திரம்

“வந்திருக்கும் நோயாளிக்கு எந்த நோய் என்று கேட்க வேண்டிய தேவையில்லை. எந்த நோய் என்று சொல்லி அதற்கேற்ப மருந்தும் தரமுடியும் என்கிறது இந்த அகத்தியர் சூத்திரம். நான்கு விரல்களையும் நெருக்கமாக வைத்து ஒரு நூலால் அளக்க வேண்டும். இந்த தூரத்தை மணிக்கட்டில் இருந்து முன்கையில் வைத்து அந்த இடத்தின் சுற்றளவை நூலால் அளக்க வேண்டும். இப்போது எடுத்த அளவைக் கொண்டு அந்த நபரின் விரற்கடை அளவை அடிப்படையாகக் கொண்டு எத்தனை விரற்கடை என்று கணக்கிட வேண்டும்.

அகத்தியர் சூடாமணி மணிக்கட்டை குறிபேட்டில் எத்தனை விரற்கடை வந்ததோ அதற்குரிய பலனை பார்த்து வந்திருக்கும், வரபோகும் நோய் எது என்று துல்லியமாக கணித்து விடலாம். குறைந்த பட்சமாக 5 விரற்கடை அளவு முதல் 11 விரற்கடை அளவு வரை கணிக்க முடியும். 11 விரற்கடை அளவு இருந்தால் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்கிறது இந்த சூத்திரம்.


`வருமுன் காப்பவனே அறிவாளி’ என்பதற்கேற்ப நோய் வருமுன்னே அதைக் கண்டறிந்து தவிர்க்க முடியும் என்கிறது இந்த அகத்தியர் மணிக்கட்டை. இதன் மூலம் எலும்புருக்கி, மேகம், ஆஸ்துமா, வயிற்று பொருமல் கண் எரிச்சல் உள்பட 4 ஆயிரத்து 448 வகையான நோய்களை தெரிந்து கொள்ள முடியும்” என்று நம் விழிகளை விரிய வைக்கிறார், முதுநிலை படிக்கும் மாணவர் பாபு.

நன்றி- தினத்தந்தி




முதன்மை பெறும் மூலிகைகள்…!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

முதன்மை பெறும் மூலிகைகள்…!  Empty Re: முதன்மை பெறும் மூலிகைகள்…!

Post by நண்பன் Wed 16 Feb 2011 - 23:00

கட்டுரை அருமை படங்கள் பொருந்த வில்லை நன்றி தகவலுக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதன்மை பெறும் மூலிகைகள்…!  Empty Re: முதன்மை பெறும் மூலிகைகள்…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum