சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

சண்டைகள் இல்லாத வாழ்க்கை Khan11

சண்டைகள் இல்லாத வாழ்க்கை

Go down

சண்டைகள் இல்லாத வாழ்க்கை Empty சண்டைகள் இல்லாத வாழ்க்கை

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 11:31

ஊடல், கூடல், காதல் என்பார்கள். ஊடலும், கூடலும் கலந்ததே வாழ்க்கை. ஊடல் என்றால் தம்பதியரிடையே தோன்றுகின்ற சின்னச் சின்ன சண்டைகள், கருத்து வேறுபாடுகள். வந்த வேகத்தில் காணாமல் போக வேண்டிய ஊடலானது பல குடும்பங்களிலும் உறவுகளைப் பிரிக்கும் போர்க்களமாக மாறிப் போவதுதான் வேதனை. சண்டைகள் இல்லாத தாம்பத்யம் சுவாரஸ்யமாக இருக்காது. ஆனால், சண்டையில் விடிந்து, சண்டையில் முடிகிற குடும்பங்கள் எத்தனையோ...

சண்டையே போடாதீர்கள் என்பது தம்பதியருக்கான சரியான ஆலோசனையாக இருக்காது. சில சண்டைகள், சில வேளைகளில் உபயோகமான விஷயங்களுக்குக் காரணமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.  சண்டை எப்போது பிரச்னையாகிறது தெரியுமா? உணர்ச்சிப் பெருக்கு உள்ளே நுழையும் போதுதான். உணர்ச்சிகள் உள்ளே நுழையாத நியாயமான வாக்குவாதங்கள், தம்பதியருக்கிடையிலான ஆரோக்கியமான உறவுக்கு உதவுகிறது என்பதே உண்மை.

இந்த மாதிரியான ஆரோக்கியமான சண்டைகளில் மட்டும்தான், நீங்கள் நினைப்பதை மிகச் சரியாக உங்கள் துணைக்கு உணர்த்த முடியும்.
ஆரோக்கியமான சண்டை இருக்கிறதோ இல்லையோ, பெரும்பாலான தம்பதியருக்கிடையில் அபாயமான, ஆபத்தான சண்டைகளுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் கணவன் - மனைவி சண்டைகளில் 90 சதவிகிதம் மோசமான சண்டைகளே... அவற்றால் எந்தப் பலனும் இல்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, துணையைக் காயப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படும் சண்டை இது. இருவருக்குமிடையில் நெகட்டிவ் சிந்தனைகள் வளர இதுவே அடிப்படை. பெரும்பாலும் தன் முக்கியத்துவத்தை துணைக்கு உணர்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில் கிளப்பப்படும்.

சண்டைக்கான தயாரிப்புகளும், பயிற்சிகளும் சிறு வயதிலிருந்தே நமக்குப் பயிற்றுவிக்கப்படுகின்றன. நமக்குப் பிடிக்காத யாரேனும் நம்மை ஏதாவது சொன்னால், உடனே கொந்தளிப்பது, அவரைப் பழிக்குப் பழி பேசித் தீர்க்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது, அப்படியொரு நேரம் வரும் போது பழியைத் தீர்ப்பது என சிறு வயதிலிருந்தே பழகுகிறோம். அதுதான் பெரியவர்களான பிறகும் தொடர்கிறது. சண்டையிடுவது என்பது சிலருக்கு போதைக்கு அடிமையானது மாதிரி. யாரேனும் ஏதாவது சொல்லிவிட்டால், கோபம் உச்சந்தலைக்கு ஏறும். அட்ரினல் சுரப்பி விறுவிறுவென வேகம் கொண்டு எழும். சினிமாவில் தன்னைத் தாக்க வரும் வில்லன்களை பாய்ந்து, பறந்து அடித்து வீழ்த்துகிற ஹீரோ மாதிரி உடலும் உள்ளமும் சிலிர்த்தெழும்.

மோசமான சண்டையில், தோற்றுப் போகிற நபர், தன் தோல்வியை ஏற்றுக் கொள்ளவே மாட்டார். மறுபடி அடுத்த சண்டைக்குக் காத்திருப்பார். அழிவை நோக்கிய இத்தகைய மோசமான சண்டையில் தம்பதியருக்குள் எந்த இணக்கமும் வர வாய்ப்பில்லை. பிரச்னைகளும் தீரப் போவதில்லை. சண்டை போடும்போது நினைவில் கொள்ள வேண்டிய விதிகள் சில உள்ளன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சண்டைகள் இல்லாத வாழ்க்கை Empty Re: சண்டைகள் இல்லாத வாழ்க்கை

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 11:32

அதன்படி...

- சண்டையின் போது ஏற்கனவே சொன்ன மாதிரி உணர்வுகளை உள்ளே நுழைய அனுமதிக்காதீர்கள். நீங்கள் சொல்ல நினைக்கிற விஷயங்களை, மற்றவர்களைக் குற்றம் சாட்டாமல் சொல்லுங்கள்.

- சண்டையின் போது, எல்லா பிரச்னைகளுக்கும் துணைதான் காரணம் என்றும், அவரை சரிப்படுத்துவதுதான் தீர்வு என்றும் நினைப்போம். அப்படி நினைக்கத் தொடங்குவதே சிக்கல்களுக்குத்தான் அடி போடும்.   - ஆங்கிலத்தில் ‘பிலோ தி பெல்ட்’  என்பார்கள். அதாவது, சண்டையின் போது அசிங்கமான, ஆபாசமான வார்த்தைகளைப் பிரயோகிப்பது. இது மிக மோசமானது.

- உணர்ச்சிகள் கொந்தளிக்காமல் உங்களால் சண்டை போட முடியாது என நினைக்கிறீர்களா? அப்படியானால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள். உங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கும்வரை காத்திருங்கள். அமைதியான பிறகு பிரச்னையைப் பற்றிப் பேசுங்கள். ஆனால், தம்பதியர் பலருக்கும் பிரச்னையை ஆறப்போட மனதே வராது. உடனுக்குடன் உண்டு, இல்லை என ஒரு கை பார்த்தால்தான் அடுத்த வேலையே ஓடும். இதனால் உங்கள் நிம்மதி, தூக்கம் என எல்லாம் பறிபோவதுடன், வாக்குவாதத்தில் உங்கள் உறவுகளும் நடத்தையும்கூட கொச்சைப்படுத்திப் பேசப்படலாம்.

- எதற்கெடுத்தாலும் சண்டை போடப் போட, அது ஒரு பழக்கமாகவே பற்றிக் கொள்ளும். விவாகரத்தை நோக்கிய முடிவில் இருப்பவர்களை கவனித்தோமானால், அவர்கள் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்பவர்களாகவும், சின்ன விஷயத்தையும் ஊதிப் பெரிதாக்கி, சண்டையிடுகிறவர்களாகவும் இருப்பது தெரியும். அதைத் தவிர்க்கவும்.

- சண்டையின் போது உங்கள் துணை பேசுவதை முழுவதும் கேளுங்கள். ஆனால், எந்த தம்பதியும் சண்டையிட ஆரம்பித்ததும் 18 நொடிகளுக்கு மேல் துணையின் பேச்சுக்கு காது கொடுப்பதில்லை என்கிறது அறிவியல். உடனே பதிலடி கொடுத்து, சண்டையை வளர்ப்பதில்தான் அவர்களது கவனம் இருக்கிறது.

- துணையின் கண்களால் பிரச்னைகளைப் பார்க்கப் பழகுங்கள். அவர் தரப்பு நியாயம், கோபம் என எல்லாவற்றையும் அவரது இடத்தில் இருந்து யோசித்தால், சண்டைக்கான பின்னணி புரியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சண்டைகள் இல்லாத வாழ்க்கை Empty Re: சண்டைகள் இல்லாத வாழ்க்கை

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 11:32

நல்ல சண்டையையும், மோசமான சண்டையையும் எப்படி அடையாளம் காண்பது?

நல்ல சண்டை என்பது எப்போதாவதுதான் நடக்கும். அது உறவுகளைக் கொச்சைப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ செய்யாது.மோசமான சண்டை அடிக்கடி வரும்.  உறவுகளை சிதைத்து, மோசமாக்குவதுதான் அதன் நோக்கமாக இருக்கும். நல்ல சண்டையில் ‘நான் இந்த விஷயத்தில் இப்படி நினைத்தேன். மனது சங்கடப்பட்டேன். வேதனைப்பட்டேன்‘ என சண்டையின் போதான உங்கள் உணர்வுகளை முன்னிறுத்திப் பேசுவீர்கள். அதுவே மோசமான சண்டையில், ‘நடந்த எல்லாவற்றுக்கும் நீதான் காரணம். உன்னால்தான் எனக்கு இத்தனை பிரச்னை... நீ மோசம்...

உன் போக்கே சரியில்லை‘ என துணையின் மீது குற்றங்களை அடுக்குவீர்கள். நல்ல சண்டையில் நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். மோசமான சண்டையில், சம்பந்தப்பட்ட நபர் பாதிக்கப்பட்டவராக  நின்று கொண்டு அழுவார், புலம்புவார். ‘நான் என்னிடம் மாற்றிக் கொள்ள ஒன்றுமில்லை... எல்லாவற்றுக்கும் நீயே காரணம்‘ என்பார். மோசமான சண்டையில் சிந்தனையற்ற செயல்களே பிரதானமாக இருக்கும். துணையைக் குற்றம் சொல்வதும், தன் தரப்புதான் நியாயம் என வாதிடுவதும் நடக்கும். துணையைக் கிண்டல், கேலி செய்வது, முட்டாள், சோம்பேறி, எதற்கும் லாயக்கற்றவன்(ள்) என பட்டப் பெயர்கள் வைத்து அழைப்பதும் சகஜமாக நடக்கும். கடைசி வரை ‘நான் செய்ததுதான் சரி... தவறெல்லாம் உன்மீதுதான்’ என்கிற ஆணவப் பேச்சே மேலோங்கி இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சண்டைகள் இல்லாத வாழ்க்கை Empty Re: சண்டைகள் இல்லாத வாழ்க்கை

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 11:32

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

- முடிந்தளவுக்கு சண்டைகளில் இருந்து விலகி இருக்கப் பாருங்கள்.

- திரும்பத் திரும்ப எந்த விஷயங்களுக்கு சண்டைகள் வருகின்றன என யோசியுங்கள். உதாரணத்துக்கு உங்கள் கணவர் தினமும் லுங்கியைக் கழற்றி, கண்ட இடத்திலும் போடுகிறார். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பதில்லை. நீங்களும் காலங்காலமாக சொல்லிப் பார்த்து விட்டீர்கள். பலனில்லை.

என்னதான் செய்வது?

இப்படி பிரச்னைக்குக் காரணமான விஷயங்களை 1 முதல் 10 வரை பட்டியலிடுங்கள். அவற்றை கொக்கிகள் மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள். மீனுக்குத் தூண்டில் போடுகிற கொக்கிகள் மாதிரி... அந்தப் பட்டியலில் இருந்து பிரச்னை வரும் போது, மீன், புழுவைத் தாங்கி வரும் கொக்கியைக் கடிக்கப் பாய்கிற மாதிரி உடனே சண்டைக்குத் தயாராகாதீர்கள். கோபத்தைத் தூண்டும் கொக்கிகள் அவை எனக் கடிக்காமல் தவிருங்கள். இந்த மனப் போக்கு, காலப் போக்கில் உபயோகமற்ற விஷயங்களுக்கு சண்டையிடுவதைக் குறைக்கும், பிறகு தவிர்க்கும்.

- சண்டையின் போது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள், எப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள் என கவனியுங்கள். அதில் மாற்ற வேண்டியவற்றைப் பற்றி யோசியுங்கள்.

- கோபத்தின் உச்சத்தில் இருக்கும் போது, உங்கள் துணையிடம், ‘நான் இப்போது கோபத்தில் இருக்கிறேன். பேச விரும்பவில்லை. அமைதியானதும் பேசுவோம்‘ என மனநிலையைச் சொல்லுங்கள்.

- ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் பேசியபடி அன்புப் பாதையைத் தேர்ந்தெடுத்து, புத்தர், இயேசு, காந்தி போன்றோரை அந்த இடங்களில் நிறுத்திப் பார்த்து, அவர்கள் அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வார்கள் என நினைத்து, அதே மாதிரி முயற்சி செய்யலாம்.

நன்றி : தினகரன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சண்டைகள் இல்லாத வாழ்க்கை Empty Re: சண்டைகள் இல்லாத வாழ்க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "நிம்மதி இல்லாத வாழ்க்கை,
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
» மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum