சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

சுவையான தேனீர்...!! [ கட்டுரை ] Khan11

சுவையான தேனீர்...!! [ கட்டுரை ]

3 posters

Go down

சுவையான தேனீர்...!! [ கட்டுரை ] Empty சுவையான தேனீர்...!! [ கட்டுரை ]

Post by ந.க.துறைவன் Fri 1 Aug 2014 - 7:28

*
சுவையான தேனீர்…!!
*
இந்திய தேசம் பழம்பெரும் தேசம். இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் அரசர்களின் கீழ் தான் நடைபெற்று வந்துள்ளன. அக்காலத்திய அரசர்களின் அரண்மனைக் கட்டிடங்கள் மிகுந்த கலைநய வேலைப்பாடுடன், கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி நீர் நிறைந்த அகழி, வலிமையான கற்களால் கட்டப்பட்ட மதில் சுவர்கள், நான்குப் புறமும் வாயில்கள், உள்ளே அகன்ற வீதிகள், அரசபை மண்டபம், அரசருக்காக ஆலோசனைக்கூடம், அரசர், ராணிகள் மற்றவர்க்கென்று தனித்தனி படுக்கையறைகள், தேரோடும் வீதிகள், குளிப்பதற்னெ நீராழிமண்டபங்கள், யானை குதிரை லாயங்கள், போர்பயிற்சிக் கூடங்கள், வழிப்பாட்டுக் கோயில்கள். காஜானா அறைகள்,ரகசியஆலோசனைக்கூடங்கள், சுரங்கப்பாதைகள் என சிறந்தமுறையில் கட்டப்பட்ட அரண்மனைகள், இந்து, முஸ்லிம் மன்னர்களின் நாடு பிடிக்கும் ஆசையினால் போர்கள் மூண்டுள்ளது. அதற்குப் பின்னர் வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவைத் துண்டாடி, மக்களிடையே பகைமை மூட்டி, மன்னர்களைச் சிறைப் பிடித்து, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். அப்போது, போர்களால் அரண்மனைகளை அழித்தும் சிதைத்தும் மிகுந்தச் சேதத்தை ஏற்படுத்தினர் அதன் எச்சங்களாகவே, இந்தியா முழுவதும் இன்றைக்கும் இருக்கின்ற கோட்டைகளை, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறிசில இடங்களில் அரண்மனைகளை நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து அனுமதிக்கும் காட்சிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரண்மனைகள் சிதைவுற்று யாரும் உள்நுழைந்த காணமுடியாத அளவில் உள்ளன. அங்கே மக்கள் யாவரும் பயத்தோடு தான் சென்று பார்க்கின்றனர். மக்கள் பார்வையிட முடியாத அளவிலும் பல கோட்டைகள் இருக்கின்றன. அக் கோட்டைகளின்  உள்ளே முன் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது.யாருக்கும்அனுமதியுமில்லை.இருட்டும்,செடிகொடிகள் புதர்கள் நிறைந்த அவ்விடத்தை வௌவால்களும்,சிறுபறவைகளும்,எலிகளும்,
ஒணான்களும் இன்ன பிறவிலங்குகளும்,  குறிப்பாக,  வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே,
*
“ அரண்மனைக்குள் நுழைய
அனுமதியில்லை யாருக்கும்
வண்ணத்துப்பூச்சிகள் மட்டும். ” – [ நா.விச்வநாதன் – “ முள்ளில் அமரும்
*
பனித்துளிகள் ” நூல் பக்கம் 18 ]  என தொன்மத்தை நினைவுகூறும் வகையில் ஹைக்கூ கவிதையினைப் படைத்துள்ளார் கவிஞர். ஒரு ஹைக்கூ கவிதையின் அழகியல் என்பது படைப்பாளி தேர்வு செய்யும் கருப்பொருளில் தானிருக்கின்றன என்பது இந்த ஹைக்கூ கவிதையில் அறியமுடிக்கின்றது.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சுவையான தேனீர்...!! [ கட்டுரை ] Empty Re: சுவையான தேனீர்...!! [ கட்டுரை ]

Post by Nisha Fri 1 Aug 2014 - 11:33

பகிர்வுக்கு நன்றி ஐயா!

ஆனால் இக்கட்டுரை சொல்ல வரும் கருத்து என்ன வென புரியவே இ்ல்லயே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுவையான தேனீர்...!! [ கட்டுரை ] Empty Re: சுவையான தேனீர்...!! [ கட்டுரை ]

Post by ந.க.துறைவன் Fri 1 Aug 2014 - 13:38

மீண்டும் படித்துப் பாருங்கள்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சுவையான தேனீர்...!! [ கட்டுரை ] Empty Re: சுவையான தேனீர்...!! [ கட்டுரை ]

Post by ந.க.துறைவன் Mon 4 Aug 2014 - 10:09

மழை ரசிகன்…!!
*
தமிழ்நாட்டில் இலக்கியக் கூட்டங்கள் பெரும்பாலும் சனி, ஞாயிறு காலை அல்லது மாலை வேளைகளில் தான் நடைபெறுகின்றன.. ஏனென்றால் அவ்விரு நாட்களும் விடுமுறை தினம் என்பதேயாகும். அன்று ஒய்வாக இலக்கியப் பேச்சாளர்கள், படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொள்வதற்கு வசதியாக அமைகின்றன. இலக்கியக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட சின்ன அரங்க அறைக்கு வந்து தேவையான அறை அலங்கரிப்புகள்,  மேசை நாற்காலிகள் வரிசைப்படுத்தி வைப்பது, குடிநீர் மற்றும் தேனீர்  டிரம் வைப்பதற்கான இடம் தேர்வு செய்து வைப்பது, மைக்செட் அமைப்பது, பேச்சாளர்கள் பேசுவதற்கான ஸ்டேண்ட் அமைப்பது, முன்வாசலில் உள்ளே வருபவர்களை வரவேற்று, போய் அமருங்கள் என முகமலர்ச்சியோடு பேசி மகிழ்வது, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் வரிசைப்படுத்தி வைப்பது, அதனருகில் வந்து நிற்கும் நண்பர்களிடத்தில் நலம் விசாரித்து புதியதாக வந்துள்ள புத்தகம் பற்றி பேசுவது என பல்வேறு காரியங்களை ஒருங்கிணைப்போடு கவனித்து வருவார்கள். வருகை தருபவர்கள் உள்ளே நுழைந்து காலியாக இருக்கும் இருக்கைளில் போய் அமர்ந்துக் கொள்வார்கள். கூட்டம் எப்போது தொடங்கும் என்ற ஆவல் பலரின் மனங்களில் ஓடும். கூட்ட ஏற்பட்டாளர்கள் கூட்டத்தைத் தொடங்கலாமென நினைக்கும் போது பார்த்து வெளியே மெல்ல சின்னச் சின்னத் தூறல்கள் விழத்தொடங்கும். “ அட, மழைத்தூறல் போட ஆரம்பித்து விட்டதே ” – என்று கவலைப்படுவார்கள். யாரேனும் ஒருவர் வந்து வெளியில் பார்த்துவிட்டு, பலமா வராது, லேசான தூறல்தான் கூட்டத்தை ஆரம்பியுங்க… ” என்பார். கூட்டம் ஆரம்பித்து பேசத் தொடங்குவார்கள். வருபவர்கள் வந்துக்கொண்டிருப்பார்கள். பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்று தன் ஹைக்கூ கவிதையில் இப்படிச் சொல்கின்றார்.
*
“ மாடி யறை
இலக்கியக் கூட்டம்
கலந்துக் கொள்ளும் மழை ” – [ “ ஐக்கூ அருவிகள் ” அமுதபாரதி – நூல் பக்கம் 35 ] ஆக, இலக்கிய கூட்டமென்றால் பலரும் கலந்துக்கொண்டு ரசிப்பது மட்டுமல்ல, எப்பொழுதேனும் திடீரென வரும் இயற்கைப் பொழிவான மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்கிறார். பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்துக் கொண்டு அனுபவித்த நிகழ்வுகளின் நினைவுகளை முன்னிறுத்தி, அதனை ஹைக்கூ கவிதையில் மிகத் திறம்பட சொல்லிப் பதிவு செய்துள்ளார் ஓவியக் கவிஞர்.அமுதபாரதி.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சுவையான தேனீர்...!! [ கட்டுரை ] Empty Re: சுவையான தேனீர்...!! [ கட்டுரை ]

Post by கவிப்புயல் இனியவன் Tue 5 Aug 2014 - 7:37

அருமையான பதிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சுவையான தேனீர்...!! [ கட்டுரை ] Empty Re: சுவையான தேனீர்...!! [ கட்டுரை ]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum