சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

இலங்கையின் ஜனாதிபதிகள்! Khan11

இலங்கையின் ஜனாதிபதிகள்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by Nisha Fri 9 Jan 2015 - 13:43

கடந்த காலங்களில் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் தொகுப்பு 


இலங்கையின் ஜனாதிபதிகள்! 1484268_794455803966654_619189202877955516_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 13:47

சுறா wrote:
*சம்ஸ் wrote:100 நாட்களில் புதிய யுகம் அமைபதாக சொல்லி இருக்கார் பார்கலாம்.

இவரும் மோடி போல தானா

பார்க்கலாம் அண்ணா நடப்பது நல்லதாக நடக்கட்டும்.நினைப்பதை நாம் நல்லதாக நினைப்போம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty சிறிசேனா அரசியல் வரலாறு

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 13:50

இலங்கையின் ஜனாதிபதிகள்! Evening-Tamil-News-Paper_14026606083

இலங்கையில் புதிய அதிபராக தோந்தெடுக்கப்பட்டு இருக்கும் மைத்ரிபால சிறிசேனா கடந்த 1951-ம் ஆண்டு, செப்டம்பர் 3-ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஆல்பர்ட் சிறிசேனா இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இலங்கை அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். பொல்லன்னருவாவில் கல்லூரி படிப்பையும், ரஷ்யாவில் அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பையும் முடித்த சிறிசேனா பின்னர் 1989-ம் ஆண்டு இலங்கை அரசியலுக்குள் புயலாக நுழைந்தார்.இலங்கை சுதந்திர கட்சியை நிறுவி, அதன் பொது செயலாளராக நிர்வகித்தார். 1994-ம் ஆண்டு வரை இலங்கை அரசில் பல்வேறு துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர் பல்வேறு அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டார்.

கடந்த 1989-ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பொல்லனருவா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1994-ம் ஆண்டு இலங்கை மக்கள் கூட்டணியுடன் இணைந்து, மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். மக்கள் கூட்டணி அரசில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் ஆட்சி காலத்தில் கடந்த 1997-ம் ஆண்டு கேபினெட் அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் கடந்த 2004-ம் ஆண்டு இவரது இலங்கை சுதந்திர கட்சி அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தது.

இலங்கை அதிபராக கடந்த 2005-ம் ஆண்டு ராஜபக்சே முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அமைச்சரவையில் சிறிசேனாவுக்கு விவசாயம், சுற்றுச்சூழல், நீர்ப்பாசனம் மற்றும் மாவேலி வளர்ச்சிக்கான துறைகளுக்கான அமைச்சராக பதவியேற்றார்.போரலேஸ்காமுவா பிராந்தியத்தில் பெரிவேனா பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி தாக்குதலில் சிறிசேனா உயிர் தப்பினார். இத்தாக்குதலில் இவரது பாதுகாப்புக்கு வந்த அதிகாரிகளில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சிறிசேனா வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் ராஜபக்சே அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.இந்நிலையில், தற்போது இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபராக தேர்வு செய்யப்பட் டார். - 
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty ராஜபக்சேவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 13:54

இலங்கையின் ஜனாதிபதிகள்! Z

கடந்த 1946ம் ஆண்டு  சாதாரண குடும்பத்தில் பிறந்த ராஜபக்சே, தனது தந்தை வழியில் அரசியலுக்கு வந்தார். 24வது வயதில் சுதந்திர கட்சி சார்பில் கடந்த 1970ம் ஆண்டு போட்டியிட்டு எம்பி ஆகி பாராளுமன்றத்துக்கு சென்றார். அதனை தொடர்ந்து வந்த தேர்தலில் தோல்வியை தழுவினார். பின்னர் 1989ம் ஆண்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் 1994ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சுதந்திர மக்கள் கூட்டணி அமைச்சரவையில் தொழிலாளர் அமைச்சரானார். 2001ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும் இவரது கட்சி தோல்வியை தழுவியது. இதனால் ராஜபக்சே, எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்றார். 2004ல் இலங்கையின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மறு ஆண்டே 2005ல் இலங்கையின் அதிபராகி விட்டார். 

இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பொறுப்புகளில் தனது தம்பிகளான கோத்தபய, நமல் ஆகியோரை நியமித்தார். விடுதலை புலிகளுடன் நடந்த போரில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து 2010ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட அவர், அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபரானார். இதனால் இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டனர். ஊழல் தலைவிரித்தாடியது. இதனால் பல மட்டங்களிலும் மக்களிடம் எதிர்ப்பு உருவாக ஆரம்பமானதை உணர்ந்த அவர், 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை அறிவித்தார். 

சுதந்திர கட்சியிலும், ஆட்சியிலும் 2ம் இடத்தில் இருந்த மைத்ரி பால சிறிசேனா, தனது அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். இவரை எதிர்கட்சிகள், ராஜபக்சேவை எதிர்த்து பொது வேட்பாளராக அறிவித்தது. கடந்த 4 ஆண்டு ஆட்சியில் இலங்கையில் விலைவாசி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றது. ஜனநாயகம் நசுக்கப்பட்டது. மனித உரிமைகள் மோசமானது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை பதவியில் இருந்து நீக்கி அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டது என  அனைத்து மட்டங்களில் ராஜபக்சே அரசு வீழ்ச்சியை சந்தித்தது. 
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by சுறா Fri 9 Jan 2015 - 14:01

நல்லா வளர்ந்தவரு இப்படி வீழ்த்தப்பட்டது வரலாறு தான்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by பானுஷபானா Fri 9 Jan 2015 - 15:51

என்னாச்சு?????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 15:55

எதைப் பற்றி கேட்கிறீங்க அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by பானுஷபானா Fri 9 Jan 2015 - 15:57

ரஜபக்‌ஷே முடிவு என்ன்னாசுனு கேக்குறேன்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 16:08

பானுஷபானா wrote:ரஜபக்‌ஷே முடிவு என்ன்னாசுனு கேக்குறேன்...

ராஜபக்‌ஷே அரசியலில் இருந்து வெளியில் வீசப்பட்டு  இன்று முதல்  இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால பதவிப் பிரமாணம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 16:18

பள்ளேவத்தே கமரால-லாகே மைத்ரிபால யாபா சிரிசேன அவர்கள் 1951ம் ஆண்டு ஐப்பசி மாதம் 3ம் திகதி பிறந்தார். இவர் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1989 இல் பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்தார். அக்காலம் தொடக்கம் 1994 வரை பல அமைச்சுப் பதவிகளை வகித்தார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை நீண்டகாலம் வகித்ததுடன், 2015ஆம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார். ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்தி, சகலருக்கும் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக இந்தத் தேர்தலில் இலங்கை மக்களின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

இன்றைய அரசியலில் வன்முறை அல்லது ஊழல் கறைபடியாமல், சிறந்ததொரு கடந்த கால வரலாற்றைக் கொண்ட அபூர்வமானதொரு கனவான் அரசியல்வாதியாக மைத்ரிபால சிரிசேன திகழ்கிறார். இவர் மெய்யான தேசிய சிந்தனையுள்ள அரசியல் தலைவர் ஆவார்.
ஒரு விவசாயியின் மகனாக, இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகச்சிறந்த குணாதிசயங்கள் என்று கருதப்படக்கூடிய மத்திய போக்கிலான, மிதவாத, தூய்மை அரசியல் பாரம்பரியத்தை இவர் கடைப்பிடித்தார்.
 
மைத்ரிபால சிரிசேன அரசியல் சமூக விபரக்கோவை

1967 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் அங்கத்தவராகவும், பொலன்னறுவை றோயல் மத்திய கல்லூரியில் ஜீசீஈ சாதாரண தரப் பரீட்சையை பூர்த்தி செய்த காலப்பகுதியில், அதன் பொலன்னறுவைத் தொகுதிக்கான செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். இவர் 1970 இல் ஒரு மாணவராக SLFP இன் தேர்தல் பிரசாரத்தில் ஊக்கத்துடன் பங்கேற்றார்.

1973ம் ஆண்டு குண்டசாலை விவசாயக் கல்லூரியில் ‘கமத்தொழில் டிப்ளோமா’ பட்டம் பெற்றார்.
1971ம் ஆண்டு JVP கிளர்ச்சியைத் தொடர்ந்து, மைத்ரிபால கைது செய்யபட்டார். இந்தக் கிளர்ச்சியில் இவருக்கு தொடர்பேதும் இருக்கவில்லை.
1974 – தமது முதலாவது தொழிலாக பொலன்னறுவையில் கூட்டுறவு கொள்வனவு உத்தியோகத்தராக பதவியேற்றார்.
1976 – இவர் – பிரதம அரச உத்தியோகத்தரான – கிராம உத்தியோகத்தராக கடமையேற்று, நாளாந்த நிர்வாக விடயங்களில் அயல் கிராமங்களுக்கும் சேவையாற்றினார்.
1977 – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினது மத்திய குழுவின் பொலன்னறுவைத் தேர்தல்  தொகுதி செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் 1977 தேர்தலில் முக்கிய பங்கு வகித்ததுடன், தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகள் காரணமாக பல சிரமங்களை எதிர்கொண்டார்.
1978 – இவர் வேலையை ராஜினாமா செய்து, முழுநேர அரசியலில் களமிறங்கினார். அதேவருடம் கியுபாவில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்றார்.
1979 – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொலன்னறுவை மாவட்ட செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் குடியுரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்க்கும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
1980 – மாவட்ட மட்டத்தில் SLFP வழிநடத்துவதற்காக அதன் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். ரஷ;யாவைச் சேர்ந்த மாக்ஸிம் கோர்க்கி கல்விக் கூடத்தில் அரசறிவியல் டிப்ளோமா பட்டம் பெற்றார்.
1981 – அகில இலங்கை SLFP யின் இளைஞர் ஸ்தாபனத்தின் பொருளாளராக மைத்ரி மாறினார். அதன் மூலம் SLFP யின் உயர்மட்ட தீர்மானங்களை எடுக்கும் அமைப்பான SLFP மத்திய குழுவின் அரசியல்பீடத்தின்) அங்கத்தவராகும் வாய்ப்பை அவர் பெற்றார்.
1989 இல் மைத்ரி அவர்கள் முதற்தடவையாக பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 1989ஆம் ஆண்டு மாசி மாதம் 15ம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இவர் இலங்கையில் பரவலாக அறியப்பட்ட SLFPயின்கை சின்னத்தில் போட்டியிட்டார். கை சின்னம் இலங்கை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இறுதி ஆண்டு இதுவாகும்.
1994ஆம் ஆண்டு கால பொது தேர்தலில் பொலன்னறுவ மாவட்டத்தில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, நீர்ப்பாசனப் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்
1997- இவருக்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் என்ற அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதுடன், SLFP இன் உதவிச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
2000 – மைத்ரி அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்; உபதவிசாளராக தெரிவானர்.
2001 – அவர் 12ஆவது பாராளுமன்றத்திற்குத் தெரிவானதுடன், அமைச்சர் மைத்ரிபால சிரிசேன 2001 ஆடி மாதம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.இந்தக் கட்சியின் வரலாற்றில் மிகவும் நீண்டகாலம் பதவி வகிக்கும் செயலாளர் என்ற ரீதியில், இவர் இன்னமும் இதே பதவியில் சேவையாற்றி வருகிறார்.
2004 மாசி மாதம் சிரிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP), மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகியவற்றிற்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MOU), JVP பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுடன் சேர்ந்து கைச்சாத்திட்டார். இதன் மூலம் சமகால கூட்டணி அரசாங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) உருவானது.
அவர் இலங்கையின் 13வது பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, அமைச்சரவை அந்தஸ்துடைய மகாவலி, ஆற்றுப்படுக்கை மற்றும் ரஜரட்ட அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் பாராளுமன்ற சபை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார்.
2005ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இலங்கை அரசாங்கத்தில் மைத்ரிபால சிரிசேன அவர்களுக்கு இரு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.


  • சுற்றாடல், நீர்ப்பாசன, மகாவலி அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சர்

  • சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர்


2006ஆம் ஆண்டு மைத்ரிபால சிரிசேன அவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP), ஐக்கிய தேசிய கட்சி (UNP) ஆகியவற்றிற்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MOU), ஐக்கிய தேசிய கட்சியின் அப்போதைய தவிசாளர் திரு.மலிக் சமரவிக்ரமவுடன் கைச்சாத்திட்டார். இது சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பது தொடர்பான உடன்படிக்கையாகும்.

2007 இல் இவர் விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றினார்.
இந்தக் காலகட்டத்தில் அமைச்சின் விவசாய அபிவிருத்தி முன்முயற்சியான “பயிர் வளர்ப்போம் – நாட்டைக் கட்டியெழுப்புவோம் “ (API WAWAMU – RATA NAGAMU) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த அவரால் முடிந்தது. இது இலங்கையில் விவசாயத்துறையின் நிலைபேற்றுத்தன்மையைப் பேணும் வகையிலான துரித பயிர் உற்பத்தி அடங்கலாக இலங்கை முழுவதும் விவசாய மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.

2007ஆம் ஆண்டு தை 25ஆம் திகதி மகாவலி பிரதான திட்டத்தின் கீழ் மொரகஹகந்த – களுகங்கை கருத்திட்டத்தை அமைச்சர் தொடக்கி வைத்தார். இது 90 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டமாகும். வடமத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பாசன நீரையும், குடிநீரையும் வழங்குவதற்கு அப்பால், மொரகஹகந்த திட்டத்தின் மூலம் 25 மெகாவோட் மின்வலு உற்பத்தி செய்யப்பட்டு, வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் நீண்ட நாட்கள் நிலவிய மின்வலுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்தது.

2007 ம் ஆண்டு மார்ச் மாதம் வெலிகந்த பிரசேத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சியில் இருந்து அமைச்சர் உயிர்தப்பினார். பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கத்தவர்கள் மூன்று பேர் தேடப்பட்டார்கள். தாம் கைது செய்யப்பட்ட தருணத்தில் அவர்கள் தமது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சயனைட் குப்பியை விழுங்கி தற்கொலை செய்து கொண்டார்கள்.
 
2008 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ம் திகதி LTTE இயக்கத்தால் அமைச்சர் இலக்கு வைக்கப்பட்டார். பண்டாரகம பிரதேசத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்தில் கலந்து கொண்டு திரும்பிய சமயம் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் அமைச்சர் அதிசயமாக உயிர் தப்பி நாட்டுக்கு சேவையாற்ற தமதுயிரைக் காப்பாற்றிக் கொண்டார். துரதிருஷடவசமாக, தாக்குதலில் நால்வர் பலியாகியதுடன், 15 பேர் காயமடைந்தனர்.
2009ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருந்த சமயம், திரு.மைத்ரிபால ஐந்து தடவைகள் இலங்கையின் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். போரின் இறுதி நாட்களிலும் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில், இவரே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றினார்.

2010ஆம் ஆண்டு மைத்ரிபால மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி, UPFA அரசாங்கத்தில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
‘இலங்கை – தேசிய ஓளடதக் கொள்கை சட்டம்’ 2010-2014 ஆண்டு காலப்பகுதியில் பரவலாக அறியப்பட்ட பிபிலே ‘ஒளடதக் கொள்கை சட்டத்தை’ மீள அறிமுகப்படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். இலங்கைக்கான தேசிய ஒளடதக் கொள்கை சட்டகத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில், அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இந்த சட்டம் அமைச்சரவை அனுமதிக்காக காத்துக் கிடக்கிறது.

‘சிகரட் பைக்கற்றுகளில் படங்களுடன் கூடிய எச்சரிக்கை’ – இவர் புகைத்தலின் தீமைகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு புகையிலை / சிகரட் பைக்கற்றுக்களில் ‘எச்சரிக்கைப் படங்களை’ அச்சிடும் நடைமுறையை அறிமுகப்படுத்த பாடுபட்டார். இந்த முயற்சிக்கு நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியும் விளைந்த அச்சுறுத்தல்களின் மத்தியில் பல்தேசிய புகையிலைக் கம்பனிகளுடன் போரிட்டார். இந்த ஒன்றரை வருடகாலம் நீடித்த சட்ட நடவடிக்கையில், பல மணித்தியாலங்கள் அமர்ந்து நீதிமன்ற அமர்வுகளை செவிமடுத்து, ஈற்றில் தமது முயற்சியில் வெற்றியும் பெற்றார். இதன் பிரகாரம், 2015 ஜனவரியின் பின்னர் ஒவ்வொரு சிகரெட் பைக்கற்றின் மேற்பரப்பின் 60 சதவீத மேற்பரப்பு புகைத்தலின் பாதிப்பை சித்தரிக்கும் படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கும்.

‘உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம்’ – இலங்கையில் புகைத்தலை தடுப்பதில் காட்டிய அர்ப்பணிப்பிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ‘World No Tobacco Day Award 2013′ விருதை வென்றார். இலங்கையர் ஒருவருக்கு இந்த விருது கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
‘சுகாதாரத்தில் அமைச்சுமட்ட தலைமைத்துவ ஹார்வாட் விருது’ – 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொதுச் சுகாதார ஹார்வாட் கல்லூரி மற்றும் கென்னடி அரச கல்லூரியின் ‘சுகாதாரத்துறை சார்ந்த அமைச்சு மட்ட ஹார்வாட் விருதைப்’ பெற்றார். இந்த விருது இலங்கையின் சுகாதார அமைச்சராக புதுமை மிக்க தலைமைத்துவத்தில் கொண்டிருந்த திடசங்கற்பத்திற்காக வழங்கப்பட்டது. இத்தகைய விருதின் மூலம் இலங்கையர் ஒருவர் கௌரவிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

‘ஜெனீவா உலக சுகாதார மாநாடு’ – 2013ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதாரக் கூட்டத்தில் ஜீ-15 நாடுகளுக்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சுகாதார விவகாரங்கள் தொடர்பான ஜீ-15 அறிக்கையை வாசித்தார்.
2014ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலக சுகாதார கூட்டத்தில் நான்கு உபதலைவர்களுள் ஒருவராகத் தெரிவானார்.
 
உள்ளுர் மருந்து உற்பத்தியாளர்களை வலுவூட்டல் – சுகாதார அமைச்சிற்காக உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்து வகைகளை மாத்திரம் நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேன அனுமதி பெற்றதன் மூலம் உள்ளுர் மருந்த உற்பத்தியாளர்களை வலுவூட்டக்கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் எட்டப்பட்டது.
அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கம் மருந்துப் பொருட்களை வாங்கும் முதலாவது பொறிமுறை – பங்களாதேஷ மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் திரு.மைத்ரிபால அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கம் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் பொறிமுறையை ஆரம்பித்தார். கூடிய விலை கொடுத்து மருந்து வகைகளை வாங்க முடியாதுள்ள இலங்கை மக்களுக்கு நியாயவிலையில் தரமான மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய பின்னணியை உருவாக்கியது.

2014 நவம்பர் – 2015 ஜனாதிபதி தேர்தல் – பொது வேட்பாளர் – அமைச்சர் மைத்ரிபால சிரிசேன 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு, பொது வேட்பாளராக பிரகடனப்படுத்தப்பட்டார்.
 
வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

தேர்தல் தொகுதி: பொலன்னறுவை மாவட்டம்
ஆரசியல் கட்சியின் பெயர்: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP)
பிறந்த தினம்: 03.09.1951
திருமண விபரம்: திருமணமானவர்
மனைவியின் பெயர்: திருமதி ஜயந்தி புஷபகுமாரி
பிள்ளைகள்: இரு மகள்மார், ஒரு மகன்
சமயம்: பௌத்தம்
கல்வி: 1955 லக்ஷh-உயன பாடசாலையில் ஆரம்பக் கல்வி (BOP-292) – பொலன்னறுவை – தப்போவௌ மகாவித்தியாலயம் – பொலன்னறுவை ரோயல் மத்திய கல்லூரி – நுண்கலைக் கல்வியில் திறமை (ஆடல், பாடல், கலாசார நடவடிக்கைகள்) – 1973 விவசாயத்தில் டிப்ளோமா (இலங்கை விவசாயக் கல்லூரி, குண்டசாலை) – 1980 அரசறிவியல் டிப்ளோமா, மாக்சிம் கோர்க்கி கல்விக்கூடம் ரஷயா.
தொழிற்றுறை: விவசாயி
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 9 Jan 2015 - 16:50

சுறா wrote:
*சம்ஸ் wrote:100 நாட்களில் புதிய யுகம் அமைபதாக சொல்லி இருக்கார் பார்கலாம்.

இவரும் மோடி போல தானா
இதுதான் இப்பபோத அனைவரது கேள்வியும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


இலங்கையின் ஜனாதிபதிகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 9 Jan 2015 - 16:53

இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர்  உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வு  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் ஜனாதிபதிகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 16:54

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:100 நாட்களில் புதிய யுகம் அமைபதாக சொல்லி இருக்கார் பார்கலாம்.

இவரும் மோடி போல தானா
இதுதான் இப்பபோத அனைவரது கேள்வியும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

அனைவருக்கும் அனைத்து கேள்விக்கும் காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 9 Jan 2015 - 16:55

இலங்கையின் பிரதமரமராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


இலங்கையின் ஜனாதிபதிகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 9 Jan 2015 - 16:57

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரபால சிறிசேனவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்  பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் .
நான் மைத்திரிபாலவை தொலைபேசியில்  அழைத்து வாழ்த்து தெரிவித்தேன் .இலங்கையில் அமைதியான ஜனநாயக தேர்தலை நடத்தி முடித்த இலங்கை மக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கின்றேன்.


இலங்கையின் ஜனாதிபதிகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 9 Jan 2015 - 17:05

எதிர்கால சந்ததியினரை கவனத்திற்கொண்டு செயற்படுவோம். நாட்டு மக்களுக்கு கொடுத்த 100 நாள் வேலைத்திட்டத்தினை நிறைவேற்றுவேன். அத்தோடு மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் எனக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையின் 6வது ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அவர், தனது கன்னி உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுடன் உரிமைகள் பேணப்படும் வகையில் இந்த தாய் நாடு அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லப்படும்.
என்னை வேட்பாளராகத் தெரிவு செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் இந்த நடவடிக்கையில், ஊழல் மோசடிகளை ஒழித்து, நாட்டுக்காக பாடுபடும் அரசியல் தலைமைகளை உருவாக்கும் பணிகளில் என்னை ஈடுபடுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.


இலங்கையின் ஜனாதிபதிகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by Nisha Fri 9 Jan 2015 - 17:11

நேசமுடன் ஹாசிம் wrote:இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர்  உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வு  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

6ஆவதா? ஏழாவதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 17:29

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர்  உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வு  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

6ஆவதா? ஏழாவதா?

6ஆவது ஜனாதிபதி ஏழாவது தேர்தல்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by Nisha Fri 9 Jan 2015 - 20:24

அதெப்படி வரும்? 

ஏழாவது ஜனாதிபதி. ஏழாவது தேர்தல் தான். 

ஒருவர் இருமுறை பத்வியில் அமர்த்ததை வைத்து எனில்  மகிந்த இராஜபக்‌ஷ மட்டும் தானா இரு முறை ஜனாதிபதியானார் எனும் கேள்வி வரும். 

சில செய்திகளில் மட்டும் தான் ஆறாவது ஜனாதிபதி என வருகின்றது. பெரும்பாலான செய்திகள் ஏழாவது தேர்தல் ஏழாவது ஜ்னாதிபதி எனத்தானே சொல்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 20:29

எனக்கும் ஒரு குழப்பம் உள்ளது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by Nisha Fri 9 Jan 2015 - 20:30



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by Nisha Fri 9 Jan 2015 - 20:34

*சம்ஸ் wrote:எனக்கும் ஒரு குழப்பம் உள்ளது

செய்திகளை தரும் போது நாமும் படித்து  தெளிவாக தெரிந்த பின் பகிர்ந்தால்  நல்லது.  வரலாற்றுக்குறிப்புக்காக  பாடம் சம்பந்தமாக தேடும் ஒரு பள்ளி மாணவனுக்கு இம்மாதிரி தகவல்கள்  தவறான வழி காட்டலாய் இருக்கும். 

செய்திகளை இடுவோர் ஏன் இப்படி ஆராயாமல் இருகின்றார்களோ தெரியவில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 20:44

தாங்கள் சொல்வது சரிதான் எனக்கு இலங்கையின் ஜனாதிபதி வரிசை வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 21:46

இலங்கையின் ஜனாதிபதிகள்! 1484268_794455803966654_619189202877955516_n

ரனசிங்க பிரேமதாச அவர்களின் மறைவுக்கு பின் இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க அவர்கள் நியமிக்கப் பட்டார்.அந்த வரிசையில் இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கடமையேற்ற 6 ஆவது ஜனாதிபதி.(MY 3 பால சிரிசேன)
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 22:04

1994 ஜனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா குமாரதுங்கவின் தேர்தல் அமைப்புக்குழுவில் முழு மலையகத்திற்குமான ஒரே ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர். இலங்கை அரசியல் யாப்பு பற்றியும் தேர்தல் சீர்திருத்தம் பற்றியும் தனது பல்வேறு ஆய்வுகட்டுரைகளை பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பித்தவர். இத்துறையில் சிறப்பு தகைமை கொண்ட இலங்கையின் அனைத்து புத்திஜீவிகளோடும் தொடர்பு வைத்திருந்தவர். சந்திரிகாவினால் அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழுவின் முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் பிரேரணைகளை முன்வைத்து வாதாடிய அனுபவமும் இவருக்குண்டு. ஒருதடவை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானால் ஹோட்டல் கலதாரியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கைக்கான புதிய தேர்தல்முறை தொடர்பான கருத்தரங்கிற்கு இவர் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டார். அங்கு இவர் சென்ற போது ‘இந்த கூட்டத்தின்போது இந்த கதிரையில் அமரும் தகுதி இவருக்குத்தான் உண்டு’ என்று கூறி தான் அமர்ந்திருந்த கதிரையிலிருந்து எழுந்து அதில் இவரை அமரசெய்துவிட்டு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் முன்னால் சென்றமர்ந்து இவரது கருத்தை செவிமடுத்தாராம்.

 2010 ஜனாதிபதி தேர்தல் முடிந்தோய்ந்துவிட்டது. மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது அது பற்றிய பிரேத பரிசோதனையில் சிலரும் அதன் தாக்கம் தமிழ் மக்களை மீது எவ்வாறிருக்கும் என்ற அக்கறையில் சிலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். நான் இந்த தேர்தல் முடிவை இலங்கையின் தேர்தல்முறை எவ்வாறு அதிகாரத்திலிருக்கும் ஜனதிபதிக்கு சாதகமாக இருக்கிறது என்ற கண்ணோட்டத்திலிருந்து ஆராய விழைகிறேன். அத்துடன் இத்தேர்தல் முடிவினை நிர்ணயித்த காரணிகளைகளைப் பற்றியும் எனது கருத்தையும் முன்வைக்க முனைகிறேன்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகரீதியில் நடைப்பெற்றது இதுதான் இலங்கை மக்களின் தீர்ப்பு என எவராவது கூறினால் அது அப்பட்டமான பொய்யாகத்தான் இருக்கமுடியும். உண்மை என்னவென்றால் 1994 ஜனாதிபதி தேர்தலைத்தவிர (இது ஒரு விதிவிலக்கு) இலங்கையில் நடைபெற்ற எந்த ஒரு ஜனாதிபதி தேர்தலும் நேர்மையானமுறையில் நடைபெறவில்லை அத்தேர்தல்களில் வெற்றிபெற்றவர்களிடமிருந்து வெற்றிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் இரண்டு தேர்தல்களில் வெற்றி அபகரிக்கப்பட வில்லை கொள்ளையடிக்கப்பட்டன. ஒன்று 1988 ஜனாதிபதி தேர்தலில் ஆர் பிரேமதாசவின் வெற்றி. இரண்டாவது 2010 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி. இத்தடவை நடைபெற்ற தேர்தலில் இடம்பெற்ற அதிகாரதுஷ்பிரயோகமும் ஊழலும் முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்கள் அனைத்தையும் கூட்டினால் கூட அதிகம் என்ற அளவுக்கு அப்பட்டமாக இருந்தது. தேர்தல் ஆணையாளரின் கட்டளைகளை மாத்திரமல்ல உச்ச நீதிமன்றின் தீர்ப்பைக் கூட அலட்சியம் செய்யும் அளவுக்கு அதிகாரதுஷ்பிரயோகம் இடம்பெற்றது.

அரச வளங்களும் திணைக்களங்களும் தொடர்பு சாதனங்களும் முன்னர் ஒருபோதும் இந்தளவுக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதில்லை. வெற்றி தோல்வி எதுவானாலும் எதிர்கொள்வது என்ற மனநிலைக்கு பதிலாக எப்படியாவது வெற்றி பெற்றே தீருவது என்ற முடிவிலிருந்து கொண்டு சகல முறைக்கேடுகளும் அச்சுறுத்தல்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.

‘எனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு என்னால் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாது. மற்றபடி அனைத்தையும் செய்யமுடியும்’ என்று அப்போது ஜேஆர் கூறிய வாசகங்கள் அவரது யாப்பைப் பற்றி மிகச் சரியாகவே சித்தரிக்கின்றன். இத்தேர்தலானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் தோல்வியையும் வெற்றியாக மாற்றமுடியும் என்பதை நிருபித்துள்ளது. இன்றுள்ள இலங்கையின் தேர்தல் முறையில் ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவரை தேர்தலால் பதவியிறக்க முடியாது என்பது மீண்டும் ஒருமுறை இத்தேர்தலில் நிருபிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆறு ஜனாதிபதி தேர்தல்கள் இலங்கையில் – 1982 1988 1994 1999 2005 2010 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்றுள்ளன. இதில் ஒரே ஒருதடவை மாத்திரந்தான் 1994 ல் எதிரணி வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் அத்தடவை ஜனாதிபதியாக இருந்தவர் போட்டியிடவில்லை. அத்துடன் அரசதிகாரத்தை முழுமையாக பிரயோகிக்கக் கூடிய அனுபவம் வாய்ந்த அபேட்சகர் எவரும் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடவில்லை.

இலங்கை ஜனாதிபதி ஆட்சி முறையின் தோற்றத்தையும் இதவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களையும் மேலோட்டமாக பார்ப்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

இலங்கையின நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையின் தோற்றம்:

1977 ஜுலை பாராளுமன்ற தேர்தலில் ஜேஆர் ஜயவர்தன தலைமையிலான ஐதேகட்சி அப்போது ஆட்சியிலிருந்த சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்கடித்து ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்தது. ஜேஆர் பிரதமரானார். தனக்கு பாராளுமன்றத்திலுள்ள அதீத பெரும்பான்மை பலத்தையும் எதிரணியினர் பலவீனப்பட்டிருந்த நிலைமையினையும் பயன் படுத்தி தனது புதிய அரசியலமைப்பை (constitution) 1978ல் அறிமுகப்படுத்தினார். உலகில் வேறெந்த நாட்டிலும் உள்ள ஜனாதிபதிக்கும் இல்லாதளவு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அவரது அரசியல் யாப்பு ஏற்படுத்தியது. அதுவரையிருந்த அரசியலமைப்பின் கீழ் 1947 முதல் 1972 வரை ஆளுநர் பதவி நிறைவேற்று அதிகாரமற்ற அரச தலைவர் பதவியாகத் திகழ்ந்தது.

சிறிமா அரசாங்கம் கொண்டவந்த அரசியலமைப்பின் படி 1972 முதல் 1978 வரை ஜனாதிபதி பதவி நிறைவேற்று அதிகாரமற்ற அரச தலைவர் பதவியாகத் திகழ்ந்தது.

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி 04. 02. 1978:

ஜேஆர் கொண்டுவந்த 1978 அரசியல் யாப்பு மாற்றம் அதுவரை இலங்கையிலிருந்த கொஞ்சநஞ்ச ஜனநாயக உரிமைகளையும் குழிதோண்டி புதைத்துவிட்டு சாசன சர்வாதிகாரத்தை (constitutional dictatorship) ஏற்படுத்தியது.

1978 பெப்ரவரி 4ந் திகதி – சுதந்திர தினத்தன்று – தான் கொண்டுவந்த அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவிக்கு ஜேஆர் தன்னைத்தானே நியமித்துக் கொண்டார்.

இவ்வாறு இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக வந்தவர் முறைப்படி தெரிவு செய்யப்பட்டவரல்ல அதிகாராத்தை துஷ்பிரயோகம் செய்து ஆட்சிக்கு வந்தவராவர். ஜனாதிபதியாக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்ட ஜேஆர் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்த முதலாவது வேலை தனக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியாக வரக்கூடிய சிறிமா பண்டாரநாயக்கவின் சிவில் உரிமையைப் பறித்து அவரை அடுத்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட முடியாமல் செய்ததுதான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதிகள்! Empty Re: இலங்கையின் ஜனாதிபதிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum