சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பழம் சாப்பிட விரும்பு! Khan11

பழம் சாப்பிட விரும்பு!

Go down

பழம் சாப்பிட விரும்பு! Empty பழம் சாப்பிட விரும்பு!

Post by ahmad78 Thu 22 Jan 2015 - 10:47

பழம் சாப்பிட விரும்பு! Ht3211

குழந்தைகள் பழங்களே சாப்பிடுவதில்லை என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் புலம்பல். அந்தப் பழம் சூடு... இந்தப் பழம் குளிர்ச்சி என  அவர்களாகவே சிலபல பழங்களுக்குத் தடை விதிக்க, குழந்தைகளின் விருப்பமோ ஸ்ட்ராபெர்ரி, லிச்சி, கிவி என வெளிநாட்டுப் பழங்கள் பக்கம் இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்ற பழங்கள் எவை? தவிர்க்க வேண்டிய பழங்கள் உண்டா? குழந்தைகள் நல மருத்துவர் ஜெ.கே.ரெட்டி  விளக்குகிறார்.

“குழந்தைகளுக்கு தினமும் ஒரு பழம் கொடுக்க வேண்டும். அதிக விலையில் விற்கப்படும் பழங்கள்தான் நல்லது என்கிற கண்ணோட்டம் தவறு. மற்ற  எல்லாப் பழங்களைக் காட்டிலும் வாழைப்பழத்தில்தான் அதிக அளவிலான கலோரி இருக்கிறது. குழந்தை எடை குறைவாக இருந்தால் பச்சை  வாழைப்பழம், பூவன்பழம், நேந்திரம்பழம் கொடுக்கலாம். நல்ல கலோரி கிடைப்பதோடு, மலச்சிக்கலும் நீங்கும்.  வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும்  என்கிற கருத்து தவறானது. வாழைப்பழத்துக்கும் சளிக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. 

புகை போடுவது, கற்களைக் கொண்டு பழுக்க வைப்பது என செயற்கையாக பழுக்க வைக்கப் படும் பழங்களை கொடுக்கவே கூடாது. வாழை, கொய்யா,  பப்பாளி, மாதுளை, மாம்பழம் ஆகிய பழங்களைக் கொடுக்கலாம். மாம்பழத்தில் சூடு அதிகம் என்பதால் அளவாகக் கொடுக்கவும். வேற்று மண்ணில்  விளைந்து நமக்கு இறக்குமதி செய்யப்படுகிற ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் பதப்படுத்தப் பட்டுதான் இங்கு வருகின்றன. ஆப்பிளை அழுகாமல் ஃப்ரெஷ்ஷாக கொண்டு வருவதற்காக மெழுகு பூசப்படுகிறது. திராட்சை செழித்து வளர ரசாயன உரங்களில் முக்கி எடுக்கப்படுகிறது. அந்த  ரசாயன திரவம்தான் திராட்சையில் இருக்கும் வெள்ளைப் படிமமாகத் தெரிகிறது. 

இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். எந்த ஒரு பழத்தையும் நன்றாக சுத்தப்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு பழங்களில் கலோரி குறைவு என்பதால், எடை அதிகமுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சீத்தா  பழம் போன்று விதை அதிகமுள்ள பழங்களை கொடுக்கும்போது கவனம் தேவை. குழந்தை விதையினை முழுங்கி விட்டால் அது நுரையீரல் போன்ற  பகுதிகளில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பழத்தை அப்படியே பழமாக உட்கொண்டால்தான் முழுமையான சத்துகள் கிடைக்கும். பழச்சாறாக  மாற்றும்போது அதிலுள்ள நார்ச்சத்து  கிடைக்காமல் போய் விடும். சில பழங்களை தோலுடன் சாப்பிடக் கொடுக்கலாம்.  

பழங்களால் குழந்தைக்கு எவ்வளவு கலோரி சேர்கிறதோ அதை செரிக்கும் அளவுக்கு குழந்தையின் உடல் இயக்கமும் இருக்க வேண்டும். ‘ஓடி  விளையாடு பாப்பா’ என்று பாரதியார் சொன்னது போல நம் குழந்தையும் ஓடியாடி விளையாடும்போதுதான் இந்த கலோரிகள் செரிக்கும்” என்றார்.                             

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3221


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum