Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
காரம் என்ன செய்யும்?
4 posters
Page 1 of 1
காரம் என்ன செய்யும்?
காரம் தூக்கலான உணவுகள்தான் உள்ளே இறங்கும் சிலருக்கு. இன்னும் சிலருக்கோ காரம் நாக்கில் பட்டாலே, உதடு முதல் உள்ளங்கால் வரை எரியும். காரமான உணவுகள் உண்பதால் உடலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்கிற பயம் பலருக்கும் உண்டு. தெளிவாக்குகிறார் இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தீபக் சுப்ரமணியன்.
‘‘எப்போதாவது காரமான உணவு சாப்பிடுவதால் பிரச்னை இல்லை. தொடர்ந்து கார உணவுகளையே சாப்பிட்டு வரும் ஒருவருக்கு நாளடைவில் பல்வேறு பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும். இந்த பாதிப்பு உணவுப்பாதையின் தொடக்கமான தொண்டையில் ஆரம்பித்து மலத்துவாரம் வரை எல்லா இடங்களிலும் பாரபட்சமில்லாமல் தொந்தரவுகளை உருவாக்கும்.
அதிலும், வயிற்றுப்பகுதிதான் கார உணவுகளால் அதிகம் பாதிப்படைகிறது. ஆரம்பத்தில் நெஞ்சு எரிச்சல், வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கி, பிறகு சின்னச் சின்னதாக புண்களை(Gastritis) வயிற்றில் ஏற்படுத்தும். இது நாளடைவில் பெப்டிக் அல்சராக விஸ்வரூபமெடுக்கும். இந்த பெப்டிக் அல்சர் நாளடைவில் புற்றுநோயாக மாறும் அபாயமும் உண்டு. அதனால் ஊறுகாய், மசாலா பொருட்கள் எதுவாக இருந்தாலும் அளவான காரத்தோடு தான் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு காரமாக சாப்பிட்டால்தான் சாப்பிட்டது
போலவே இருக்கும். அவர்கள் மிளகாய்க்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்தலாம்.
அதற்காக மிளகையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி விடக் கூடாது. தவிர்க்க இயலாமல் கார உணவுகளை சாப்பிட்ட நாளில் தயிர், மோர், சர்க்கரை கலந்த தயிர் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்வது அதன் பாதிப்புகளைக் குறைக்கும். பொதுவாகவே சாப்பிட்ட பிறகு 2 அல்லது 3 மணிநேரத்துக்குப் பிறகே தூங்கச் செல்ல வேண்டும். காரமான உணவுகள் சாப்பிட்ட பிறகு இந்த விதியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் கார உணவில் இருந்து கொஞ்சம் தள்ளி இருப்பதே நல்லது. கார உணவுகளினால் வயிற்றில் புண்ணோ, அல்சரோ ஏற்பட்டால் அதற்கென பிரத்யேகமாக மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும்.
இதனால் செரிமான சக்தி குறையும், வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற சிரமங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும். இது, கர்ப்பிணிகளுக்கு மேலும் சிரமத்தை உண்டாக்கும் என்பதால் கார உணவு விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியம். இது தவிர, காரமான உணவு மனிதர்களுக்கு அதிக கோபம் உட்பட பல உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்குகிறது என்றும் பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் கார உணவுகளுக்கு எப்போதும் ஸ்ட்ராங்காக ‘நோ’ சொல்லுங்கள்!’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3261
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காரம் என்ன செய்யும்?
அய்யய்யோ...
நமக்கு காரமாத்தானே கேக்குது...
அதுவும் மிளகு தூக்கலாப் போட்ட சிக்கன்தானே செஞ்சு சாப்பிடச் சொல்லுது.
நமக்கு காரமாத்தானே கேக்குது...
அதுவும் மிளகு தூக்கலாப் போட்ட சிக்கன்தானே செஞ்சு சாப்பிடச் சொல்லுது.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: காரம் என்ன செய்யும்?
நிஜம் தான்! அதீத கார உணவுகளை தவிர்க்கத்தான் வேண்டும்.
எனக்கும் இப்போது கார உணவுகள் ஒத்துப்பதில்லை.
எனக்கும் இப்போது கார உணவுகள் ஒத்துப்பதில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காரம் என்ன செய்யும்?
காரமா சாப்பிட்டா உள்ளார விகாரமாய் ஆயிடும்னு நல்லா புரியுது.இனி தவிர்ப்போம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காரம் என்ன செய்யும்?
Nisha wrote:நிஜம் தான்! அதீத கார உணவுகளை தவிர்க்கத்தான் வேண்டும்.
எனக்கும் இப்போது கார உணவுகள் ஒத்துப்பதில்லை.
அதுசரி...
காரமா இருந்தாத்தான் பிடிக்குது.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: காரம் என்ன செய்யும்?
சே.குமார் wrote:Nisha wrote:நிஜம் தான்! அதீத கார உணவுகளை தவிர்க்கத்தான் வேண்டும்.
எனக்கும் இப்போது கார உணவுகள் ஒத்துப்பதில்லை.
அதுசரி...
காரமா இருந்தாத்தான் பிடிக்குது.
ஐய்யோ அப்ப நீங்க பாவம் தம்பி. உடலை கவனியுங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காரம் என்ன செய்யும்?
நானும் முன்னாடி ரெம்ப காரமான உணவுகளை விரும்பிவேன்பா,. காரம் இல்லாட்டில் பச்சைமிளகாய் பொரித்து வைத்து சாப்பிடுவேன்.
அது இப்ப ரெம்ப பிரச்சனை தருது. நெஞ்சு எரிச்சலாய் இருக்குது. அதனால் இப்பல்லாம் காரம் எனில் தவிர்த்து விடுறேன்.
அது இப்ப ரெம்ப பிரச்சனை தருது. நெஞ்சு எரிச்சலாய் இருக்குது. அதனால் இப்பல்லாம் காரம் எனில் தவிர்த்து விடுறேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காரம் என்ன செய்யும்?
Nisha wrote:நானும் முன்னாடி ரெம்ப காரமான உணவுகளை விரும்பிவேன்பா,. காரம் இல்லாட்டில் பச்சைமிளகாய் பொரித்து வைத்து சாப்பிடுவேன்.
அது இப்ப ரெம்ப பிரச்சனை தருது. நெஞ்சு எரிச்சலாய் இருக்குது. அதனால் இப்பல்லாம் காரம் எனில் தவிர்த்து விடுறேன்.
என்னாது பச்ச மிளகாய பொறிச்சி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காரம் என்ன செய்யும்?
ஆமாங்க சார். அப்படி காரம் சாப்பிடுவோம் .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காரம் என்ன செய்யும்?
Nisha wrote:ஆமாங்க சார். அப்படி காரம் சாப்பிடுவோம் .
ஐய்யோ குடல் பாதிக்குமே? தயிர் நிறைய சாப்பிடுங்க பிறகு வெள்ளரி நிறைய சாப்பிடுங்க காரத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் விரைவில் நீங்கும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காரம் என்ன செய்யும்?
இப்போது பால் சேர்த்த உணவுகள், ஆசிட் இருக்கும் எலுமிச்சை சார் உணவுகள் சாப்பிட கூடாதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காரம் என்ன செய்யும்?
நம்ம சமையல்தானே இனி குறைச்சிப்போம்..... காரத்தைச் சொன்னேன் அண்ணா...சுறா wrote:சே.குமார் wrote:Nisha wrote:நிஜம் தான்! அதீத கார உணவுகளை தவிர்க்கத்தான் வேண்டும்.
எனக்கும் இப்போது கார உணவுகள் ஒத்துப்பதில்லை.
அதுசரி...
காரமா இருந்தாத்தான் பிடிக்குது.
ஐய்யோ அப்ப நீங்க பாவம் தம்பி. உடலை கவனியுங்கள்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: காரம் என்ன செய்யும்?
அட்டகாசம் குமார். உங்க சமையல் எப்படி இருக்கும். ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|