சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர் Khan11

தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர்

+2
நண்பன்
ahmad78
6 posters

Go down

தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர் Empty தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர்

Post by ahmad78 Thu 19 Mar 2015 - 13:39

தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர் Ht3366
உலக அளவில் தென்னை சாகுபடியில் இந்தியா 3வது இடம் வகிக்கிறது. தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. 4வது இடம் வகிக்கும் இலங்கை தென்னை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 122 ஆயிரம் கோடி இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்தி செய்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 7 ஆயிரம் கோடி தென்னை மரங்கள் வளர்கின்றன. 40 ஆயிரம் கோடி இளநீர் மற்றும் தேங்காய்கள் உற்பத்தியாகிறது. தேங்காய் 50 சதவீதம் வீட்டு உபயோகத்துக்கும், 35 சதவீதம் பூஜை, பரிசு தாம்பூலம் போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. 15 சதவீதம் மட்டுமே இளநீராக பயன்படுத்தப்படுகிறது. இளநீர் பயன்பாடு மிகவும் குறைவு. ஆனால் அதன் பயன் அதிகம். ஒரு நபர்

தினமும் ஒரு இளநீர் குடித்தால் இளநீரின் தேவை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.  தென்னை மரங்களில் பாளை (பூ) விரிந்த 2 வாரங்களில் ஆண் பூக்கள் மலர்ந்து உதிர்ந்துவிடும். 3வது வாரம் முதல் பெண் பூக்கள் கருவுறுதல் நிகழ்ந்து பிஞ்சுகளாக வளர தொடங்கும். சுமார் 150 நாட்களில் இருந்து 180 நாட்களுக்குள் இளநீர் கிடைக்கும். மே, ஜூன் மாதம் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நாட்களில் கோடைக்கு ஏற்ற இயற்கை பானமாக உள்ளது. கோடைக்காலங்களில் வெப்பநிலை மாறுபாட்டால் உடலில் பித்தநீர் அதிகரித்து பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும்.

அதிக விலை கொடுத்து பல்வேறு விதமான செயற்கை பானங்களை வாங்கி குடித்து தாகத்தை தீர்த்துக்கொள்கின்றனர். ஆனால் அந்த குளிர் பானங்களால் வரும் பின்விளைவுகளை மக்கள் அறிவதில்லை. இயற்கை அளித்த இளநீரை குடித்தால் தாகத்தை தணிப்பதுடன் புத்துணர்ச்சியை பெற்று நோயின்றியும் வாழலாம். கேரளாவில் மினரல் பாட்டில்களைவிட இளநீர் அதிகம் விற்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்.

இளநீரில் உள்ள சத்துகள்

காலையில் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கொழுப்பின் அளவு மிகவும் குறைவு. அதுவும் ரத்தத்துடன் கரையும் கொலஸ்ட்ரால் கெடுதல் செய்யாத கொழுப்பு வகையாகும். அதனால் இளநீர் குடிப்பவர்கள் எடை பாதுகாக்கப்படுகிறது.

100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான 29 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், ரத்த விருத்திக்கு தேவையான 0.1 மில்லி கிராம் இரும்புச்சத்தும் உள்ளது. இவற்றை உடல் நன்கு கிரகித்துக் கொள்ள செம்பு 0.04 மில்லி கிராமும் உள்ளது.

ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குளோரின் உப்பு 183 மில்லி கிராமும், வயிற்றில் ஹைடிரோ குளோரிக் அமிலம் சுரக்கவும் தசைப்பகுதியில் அதிகமாக சுண்ணாம்புச்சத்து தங்கிவிடாமல் தடுக்கவும் சோடியம் உப்பு மிகவும் உதவும். இது இளநீரில் அதிக அளவு உள்ளது.

கால்சியம், அயன், மாக்னீசியம், துத்தநாகம் போன்ற தாது சத்துக்கள் உள்ளது. இதனால் இளநீர் குடிப்பவர்களின் தோல் பளபளப்புடன் இளமையுடன் காணப்படும்.

மூளையும் நரம்பு மண்டலமும் கோளாறு இல்லாமல் இயங்கவும் உடலுக்கு முக்கியமாக உதவும் தாது உப்பான பாஸ்பரஸ் 37 மில்லி கிராமும் இளநீரில் உள்ளது. பற்கள் பாதுகாப்புக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான சுண்ணாம்புச்சத்து 29 சதவீதம் இளநீரில் உள்ளது.  அயன்சத்து குளோரைடு சத்துகளும் ரத்த விருத்திக்கு உதவுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர் Empty Re: தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர்

Post by ahmad78 Thu 19 Mar 2015 - 13:39

இளநீரின் பயன்கள்

வெப்ப நாடுகளில் வாழ்பவர்களின் உடல்நிலை அதன் தன்மைக்கேற்ப அமையும். மாறுபாட்டால் உடலில் பித்தநீர் அதிகரித்து, உடல் அதிக உஷ்ணமாகும். இதனால் உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும். இவை நீங்க தினமும் இளநீர் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

வயிற்றில் வாயு தொல்லை அதிகரித்து வயிற்றின் உட்புறச் சுவர்களை தாக்கி புண்களை ஏற்படுத்தும். நீண்ட பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு.

இளநீர் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும். ரத்தச் சோகையைப் போக்கும். ரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. அதனால் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். கோடை காலங்களில் அம்மை நோயின் தாக்கம் அதிகம் இருக்கும். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் கொடுத்து வந்தால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும்.

இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம். மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துகிறது. நினைவாற்றல் தூண்டப்படுகிறது. மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும். அதனை சீர்படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு. ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இருதயம் சீராக செயல்படும். இதய வால்வுகளை பலப்படுத்தும். தினமும் இளநீர் குடித்து வந்தால் இதய நோய் ஏதும் அணுகாது.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும். குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரை நன்கு உற்பத்தி செய்து, சிறுநீரகம் சீராக இயங்க செய்கிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள் காமாலை நோயாளிகள், மஞ்சள் நிற சிறுநீரை மாற்ற இளநீர் தவறாமல் குடிக்க வேண்டும். காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.

குழந்தைகள் இதை அருந்தினால் ஒடுங்கிப் போகாமல் ஓரளவு சதைப்பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் உள்ள சர்க்கரையை உடல் உடனடியாக கிரகித்துக் கொள்கிறது.  ஆண், பெண் பருவ கால முகப்பருக்கள் வராமல் தடுக்க இரவு தூங்க போகும்முன் இளநீரை வடிக்கட்டி முகத்தில் நன்கு பூசி துடைக்காமல் தூங்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் நன்கு முகத்தை கழுவி துடைத்து விடவேண்டும். 2 அல்லது 3 வாரங்கள் தொடர்ந்து இதுபோன்று செய்தால் முகப்பருக்கள் வராது. முக சுருக்கம் நீக்கி பளபளப்பாக அழகாக தென்படும், சிறுசிறு தழும்புகளும் நீங்கிவிடும். உடலில் பூசி கொண்டால் தோல் சுருக்கமின்றி அழகு தோற்றம்தரும். இளமை தோற்றம் அளிக்கும்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3376


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர் Empty Re: தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர்

Post by நண்பன் Sun 22 Mar 2015 - 11:21

இதன் பயன்கள் தெரியாமலே நான் விரும்பி சாப்பிடுகிறேன் இப்போது இதன் பயனும் தெரிந்த பிறகு சும்மா விடுவேனா ம்ம் 

நன்றி தோழா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர் Empty Re: தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர்

Post by பானுஷபானா Mon 23 Mar 2015 - 14:07

nalla thagaval nanri
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர் Empty Re: தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர்

Post by *சம்ஸ் Mon 23 Mar 2015 - 15:19

நண்பன் wrote:இதன் பயன்கள் தெரியாமலே நான் விரும்பி சாப்பிடுகிறேன் இப்போது இதன் பயனும் தெரிந்த பிறகு சும்மா விடுவேனா ம்ம் 

நன்றி தோழா
சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர் Empty Re: தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர்

Post by Nisha Mon 23 Mar 2015 - 17:11

நண்பன் wrote:இதன் பயன்கள் தெரியாமலே நான் விரும்பி சாப்பிடுகிறேன் இப்போது இதன் பயனும் தெரிந்த பிறகு சும்மா விடுவேனா ம்ம் 

நன்றி தோழா

ஆமாம் இனி இளனீரை சுற்றி இருக்கும் அதன் கோதையும் விட மாட்டிங்க தானே தும்பியே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர் Empty Re: தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர்

Post by சே.குமார் Wed 25 Mar 2015 - 19:35

பயனுள்ள பகிர்வு.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர் Empty Re: தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum