சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Khan11

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

+3
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
7 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by நண்பன் Mon 27 Jul 2015 - 20:13

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11223738_579090635562907_5241134336992629826_n

அப்துல்கலாமின் பெருமைகள்:
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி
விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த
ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான
வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும்
எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை.
‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர்
“கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க
பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின்
மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய
பொன்மொழிகளாலும், கவிதைகளாலும்,
வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்
பிடித்துள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 28 Jul 2015 - 4:07

சிற்ப்பு பதிவு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 8:02

இந்தியாவின் ராக்கெட் நாயகன்

ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்! இதுதான் கலாமின் முழுப் பெயர். அக்டோபர் 15,1931-ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை ஜெயுனுல்லாபுதீன், தாய் ஆஷியம்மா. தந்தையார் படகு கட்டும் தொழில் செய்துவந்தார். கலாம் படிக்கும் காலத்தில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் வீட்டுக்கு உதவினார். நேர்மையான பண்பை தன் அப்பாவிடம் இருந்து பெற்றதாகச் சிலாகிப்பார் கலாம்.

அக்னிச் சிறகுகள் நூலில் ”என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11811578_1003011913052179_5607845723893896635_nஅப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11752507_1003011916385512_5132824787935317237_nஅப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11800261_1003011989718838_477234690128681597_nஅப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11755678_1003011879718849_8521639580184402401_nஅப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11811407_1003011926385511_2875061171691576240_nஅப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11796402_1003011856385518_8314634492950173127_nஅப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11667443_1003011939718843_812367832849334042_nஅப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11817280_1003012286385475_4156905616338641061_nஅப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11781847_1003011996385504_179895254273628577_nஅப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11800202_1003012396385464_6328474672090851576_nஅப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11760191_1003012363052134_7903931873685670563_nஅப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11800479_1003012313052139_5495495367613114025_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 8:09

இந்தியா வல்லரசாகும் என்று அதீத கனவுகண்ட 
கடைசி நபரும் முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர்
அப்துல் கலாம் இன்று உடலநலக்குறைவால் காலமானார்..!
இந்தியா ஜனாதிபதி என்ற பதவியை கொடுத்து 12 பேரை
அழகுபடுத்தியிருக்கிறது, ஆனால் அந்த ஜனாதிபதி என்ற
பதவிக்கே அழகுபடுத்தியது இவர் ஒருவர் மட்டுமே.

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11145053_1049216555089843_5582823241534297980_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 8:12

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11800286_1872956976262250_7636935643086952788_n

அபுல் கலாமும் அப்துல் கலாமும்!

உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய இருவர். ஒருவர் அபுல் கலாம் ஆசாத். இன்னொருவர் அப்துல் கலாம்.

ஐ.ஐ.டி.யை உருவாக்கி மறைந்தவர் அபுல் கலாம்.
ஐ.ஐ.எம்.மில் உரையாற்றி மறைந்தவர் அப்துல் கலாம்.

இருவருமே மிகச் சிறந்த கல்வியாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், இறை நம்பிக்கை உடையவர்கள், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை இலக்காகக் கொண்டவர்கள்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற அபுல் கலாம், உலகத் தரத்துக்கு இந்தியக் கல்வியை உயர்த்தினார். உலகமே அழைத்த போதும் விஞ்ஞானியான அப்துல் கலாம், இந்தியாவை வளர்க்கவே தம் அறிவைப் பயன்படுத்தினார்.

சாகித்ய அகாடமி, லலித கலா அகாடமி, நாடக அகாடமி, சங்கீத அகாடமி, யு.ஜி.சி, ஆவணக் காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், அறிவியல் தொழில் நுட்ப ஆய்வுக் கூடங்கள், ஐ.ஐ.டி.கள், மருத்துவக் கல்லூரிகள் என விடுதலை இந்தியாவின் பெருமை என எவற்றையெல்லாம் சொல்கிறோமோ, அவை அனைத்துக்கும் அடித்தளமிட்டவர் அபுல் கலாம்.

அறிவியல் கண்டுபிடிப்புகள், அணு ஆயுத சோதனைகள், நவீன செயற்கைக் கோள்கள் என இன்றைய இந்தியாவின் அடையாளங்கள் பலவற்றுக்கும் முகவரி தந்தவர் அப்துல் கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 28 Jul 2015 - 10:55

அருமையான தொகுப்பு 
அபுல் கலாமும் அப்துல் கலாமும்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by Nisha Tue 28 Jul 2015 - 16:02

இருவருமே மிகச் சிறந்த கல்வியாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், இறை நம்பிக்கை உடையவர்கள், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை இலக்காகக் கொண்டவர்கள்.

அவர்கள் கற்ற கல்வி அவர்களுக்குள் மதத்தினை  நுழைத்து மதமாக்காமல் மனிதாபிமானத்தினை விதைத்தது என்பதனால் தான் இத்துணை உயர்ந்தார்கள்.  மகாத்மாக்கள் என்றும் அழிவதில்லை. அவர்கள்  செயல்கள் என்றும் நிலைத்தே இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 16:04

Nisha wrote:
இருவருமே மிகச் சிறந்த கல்வியாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், இறை நம்பிக்கை உடையவர்கள், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை இலக்காகக் கொண்டவர்கள்.

அவர்கள் கற்ற கல்வி அவர்களுக்குள் மதத்தினை  நுழைத்து மதமாக்காமல் மனிதாபிமானத்தினை விதைத்தது என்பதனால் தான் இத்துணை உயர்ந்தார்கள்.  மகாத்மாக்கள் என்றும் அழிவதில்லை. அவர்கள்  செயல்கள் என்றும் நிலைத்தே இருக்கும்.

 உண்மை தான்  (மகாத்மாக்கள் என்றும் அழிவதில்லை) சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by நண்பன் Tue 28 Jul 2015 - 16:09

தொடர்ந்து பதிந்த செய்திகளுக்கும் படங்களுக்கும் நன்றி சம்ஸ் இன்னும் இருந்தால் தொடருங்கள் கலாம் பற்றி இன்னும் கொஞ்சம் அறிந்து கொள்ள முடியும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 16:14

நான் அன்மை காலமாக அவர் பத்தின கட்டுரைகள் படித்து வருகிறேன் திடிரென மரண செய்தி கேட்டதும் என்னால் நம்ப முடியவில்லை பாஸ் அவரின் மரணம் என்னை ரெம்பவும் பாதித்து விட்டது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by நண்பன் Tue 28 Jul 2015 - 16:23

*சம்ஸ் wrote:நான் அன்மை காலமாக அவர் பத்தின கட்டுரைகள் படித்து வருகிறேன் திடிரென மரண செய்தி கேட்டதும் என்னால் நம்ப முடியவில்லை பாஸ் அவரின் மரணம் என்னை ரெம்பவும் பாதித்து விட்டது.

சரி விடு நண்பா
குல்லு நம்சு தாயிகத்தில் மௌத் அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by Nisha Tue 28 Jul 2015 - 16:29

குல்லு நம்சு தாயிகத்தில் மௌத் அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 876805

இப்படின்னால் என்ன?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 16:30

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நான் அன்மை காலமாக அவர் பத்தின கட்டுரைகள் படித்து வருகிறேன் திடிரென மரண செய்தி கேட்டதும் என்னால் நம்ப முடியவில்லை பாஸ் அவரின் மரணம் என்னை ரெம்பவும் பாதித்து விட்டது.

சரி விடு நண்பா
குல்லு நம்சு தாயிகத்தில் மௌத் அழுகை

சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by நண்பன் Tue 28 Jul 2015 - 16:33

Nisha wrote:
குல்லு நம்சு தாயிகத்தில் மௌத் அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 876805

இப்படின்னால் என்ன?

பிறந்திருந்தால் இறப்பு என்று உன்று என்பது பொருள்
அனைவரும் ஒரு நாள் மரணித்தே தீர வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 16:44

Nisha wrote:
குல்லு நம்சு தாயிகத்தில் மௌத் அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 876805

இப்படின்னால் என்ன?
"(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே" (55 : 26)

"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty அப்துல்கலாமிற்கு பிடித்த திருக்குறள் எது தெரியுமா?

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 16:52

எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா வரண். இந்த குறள்தான் தனது வாழ்விற்கு வளம் கொடுத்தது என்று அவரே ஒரு மேடையில் பேசும் போது கூறியுள்ளார். இதன் பொருள் அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து நிற்கும் என்பதாகும். பூமிக்கு மேலே, பூமிக்கு கீழே, பூமியில் என எந்த விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது உண்மை.

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 27-1438017199-abdul-kalam-1-2-600
திருக்குறள்தான் வழிகாட்டி ஒருமுறை ராமேஸ்வரம் பள்ளியில் பேசிய அவர், உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான் என்று கூறினார். எது கனவு இந்தியா 60 கோடி இளைஞர்களைப் பெற்ற நாடு. மக்கள் தொகை தான் இந்தியாவின் மிகப்பெரிய பலமே. உறக்கத்திலேயே காண்பது கனவு அல்ல. உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. கனவு காண்பது என்பது ஒவ்வொரு இளைஞர் வாழ்விலும் கடமையாகும். அந்த கனவை நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். விடா முயற்சியோடு செயல்பட வேண்டும். தோல்வியை தோல்வியடைச் செய்யுங்கள் தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா பலமான வளர்ந்த நாடாகும் என்று உறுதி படச் சொன்னவர் கலாம். வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் மகானாக முடியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by நண்பன் Tue 28 Jul 2015 - 17:26

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11816952_499815913518295_2241662613174549938_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 17:27

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பிறந்து வளர்ந்த பழைய வீட்டை படத்தில் காணலாம்.

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 11707508_415242042001105_8958999722415743650_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty கலாம் என்னும் சரித்திர நாயகனின் வாழ்க்கை பயணத்தை தெரிந்துகொள்வோம் வாருங்கள் Read more at: http://ta

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 17:42

கனவுகளை விதைத்து காலத்தை வென்ற அப்துல் கலாம் என்ற சரித்திர நாயகர் நம்மை விட்டு பிரித்திருக்கிறார். காந்தியையோ, காமராசரையோ பார்த்திராத நமக்கு எளிமையையே உருவாக ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்திருக்கிறார் திரு.அப்துல் கலாம். ஒரு விஞ்ஞானியாக திருமணம் கூட செய்யாமல் தன் வாழ்நாளையே இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கான ஆராய்ச்சியில் அர்ப்பணித்தவர். பின்னர் நாட்டின் முதல் குடிமகனாக கோடிக்கணக்கான இளைஞர்களின் நெஞ்சங்களில் கனவுகளை விதைத்தவர். தனது இறுதி மூச்சு வரை மாணவர்களை ஊக்கப்படுத்துவதிலேயே செலவிட்டவர் இன்று புவியை விட்டு பிரிந்து விண்ணுலகம் சென்று விட்டார். இப்படிப்பட்ட தருணத்தில் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்காட்டாய் திகழும் அவரின் வாழ்க்கை பயணத்தை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம் வாருங்கள். திரு.அப்துல் கலாம் அவர்களின் வாழ்கையில் திருப்புமுனையாக இருந்த இடங்களை பற்றி தெரிந்துகொள்வோம் .

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 28-1438078970-kalampti-1-0-1-0-0-0-0
அப்துல் கலாம் என்ற மகத்துவம் மிக்க மனிதர் ராமேஸ்வரத்தில் பிறந்தது தமிழகம் செய்த பெரும் பாக்கியங்களில் ஒன்று. கடலோடி நகரமான ராமேஸ்வரத்தில் எளிமையான ஒரு மீனவ குடும்பத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 தேதி பிறந்திருக்கிறார். பள்ளி நாட்களில் தன்னுடைய தந்தைக்கு உதவும் பொருட்டு சைக்கிளில் சென்று வீடுகளுக்கு செய்தித்தாள் விற்பனை செய்திருக்கிறார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 17:43

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 28-1438079201-former-president-a-p-j-abdul-kalam-house-images-photos-515ad5ebe4b05d9323643236
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் வசதி வாய்ப்புகள் இல்லாத குடும்ப சூழ்நிலை தான் திரு. அப்துல் கலாம் அவர்கள் இறுதிவரை பின்பற்றிய எளிமையை அவருக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. திரு.அப்துல் கலாம் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் தான் அவருடைய வீடு அமைந்திருக்கிறது. இங்கே அவரின் அரிய புகைப்படங்கள், அவர் வாங்கிய விருதுகள், அவரின் கண்டுபிடிப்புகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 17:46

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 28-1438079340-former-president-a-p-j-abdul-kalam-house-images-photos-515ad620e4b05d932364323b
ராமேஸ்வரம் : மசூதி வீதி என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த வீட்டை பொது மக்கள் பார்வைக்காக காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணிவரை திறந்திருக்கிறது. நுழைவுக்கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. அடுத்த முறை ராமேஸ்வரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தல் இந்த மாமனிதர் வாழ்ந்த வீட்டுக்கும் கட்டாயம் சென்று வாருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 17:46

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 28-1438085233-sreeramanathaswamytemple

ராமேஸ்வரம் : அப்துல் கலாமை தாண்டி ராமேஸ்வரம் நகரின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது ராமநாத சுவாமி கோயில் ஆகும். புராணப்படி இலங்கை தீவை ஆட்சி செய்யும் ராவணனை கொன்று கவர்ந்து செல்லப்பட்ட தன் மனைவியை மீட்க செல்லும் முன்பாக சிவ பெருமானை வழிபட்ட இடம் தான் இக்கோயில் இருக்கும் இடமென்று சொல்லப்படுகிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 17:47

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 28-1438079996-ruins
ராமேஸ்வரம் : திரு.அப்துல் கலாம் அவர்கள் பிறந்த இந்த ராமேஸ்வரம் நகரை பற்றிய மேலும் பல தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.  

 http://tamil.nativeplanet.com/travel-guide/the-life-journey-abdul-kalam-000499.html#slide7072

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 17:48

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 28-1438078944-9speechlecture1016
திருச்சி : திரு.அப்துல்கலாம் அவர்கள் இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவாக முக்கிய காரணமாக இருந்த இடம் திருச்சி ஆகும். இந்த மலைக்கோட்டை நகரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் தான் 1952 - 1954 வரையிலான காலகட்டத்தில் இளங்கலை இயற்பியல் பாடத்தை பயின்றிருக்கிறார். மறைந்த எழுத்தாளரான சுஜாதா அப்துல் கலாம் அவர்களுடன் ஒரே வகுப்பில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 17:49

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். 28-1438080490-sujatha-kalam-college-photo
திருச்சி : அப்துல் கலாம் அவர்களை பற்றிய நினைவுகளை முன்பொருமுறை பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொல்கையில் "கல்லூரி காலத்தில் வகுப்பில் பிரபலமான மாணவராக அப்துல் கலாம் இருக்கவில்லை என்றும் மிகவும் அமைதியான கூச்ச சுபாவம் உடையவராகவே இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்று கலாம் அவர்களின் மறைவை ஒட்டி அவர் படித்த கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum