சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Khan11

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

4 posters

Go down

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Empty மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

Post by சே.குமார் Mon 22 Feb 2016 - 17:57

பிரதிலிபியின் 'கொண்டாடப்படாத காதல்கள்' போட்டியில் எனது கதையும் இருக்கு. அதை நீங்களெல்லாம் கொண்டாடினால் பரிசை வெல்லும் படைப்புகளுடன் போட்டியாவது போட முடியும். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியது கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி பிரதிலிபியில் கதையை வாசித்து உங்கள் கருத்தையும் மறக்காமல் மதிப்பெண்ணையும் அளியுங்கள். கதை குறித்து உண்மையான கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Prathilipi

***
பிப்ரவரி - 16 அகல் மின்னிதழில் 'எங்கள் அமீரகம்' என்னும் தலைப்பின் கீழ் எனது கட்டுரையின் முதல் பகுதி வெளியாகி இருக்கிறது. அதன் இரண்டாம் பகுதி வரும் மார்ச் இதழில் வெளியாகும். அகலில் கட்டுரை வாசிக்க கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள். கட்டுரை குறித்து தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரையை பிரதிலிபியிலும் படிக்கலாம்.
அகலில் வாசிக்க :  எங்கள் அமீரகம் - 1

பிரதிலிபியில் வாசிக்க :  எங்கள் அமீரகம் - 1


அகல் நண்பர்கள் வட்டம் முகநூல் பக்கம் பார்க்க இங்கு கிளிக்குங்கள்


மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! 12694962_950027181744018_4333294226728711574_o

***
வேலைப்பளு கூடுதல் மற்றும் சில பல காரணங்களால் வலைப்பக்கம் அதிகமாக வருவதில்லை. நண்பர்களின் எழுத்துக்களை விடுமுறை தினங்களில் வாசித்து விடுவேன். கருத்து இடுவதில் சிக்கல் இருக்கிறது. சிலரின் பதிவுகளுக்கு பிரச்சினை இல்லை. பலரின் பதிவுகளில் 'நீ ரோபோ இல்லை'ன்னு சொல்லு என்று கேட்கிறது. சொன்னால் ரைட்டு என கருத்து இட அனுமதிக்கிறது. அதிலும் ஒரு சிக்கல் என்னன்னா நாலு பேருக்கு அந்த மாதிரி உள்ள போயி கருத்து இட்டால் ஐந்தாவது நண்பரின் தளத்தில் ரோபோ இல்லைன்னா... படங்களைக் கொடுத்து மரங்களை தேர்ந்தெடு, ஆற்றை தேர்ந்தெடு, புல்வெளியை தேர்ந்தெடு, தெருவைத் தேர்ந்தெடு, டாக்ஸியை தேர்ந்தெடுன்னு கொடுத்து சரியாச் சொன்னாத்தான் உள்ளே போகுது. இதில் கடுப்பாகி வாசிப்பதுடன் வெளியில் வந்துவிடுவதுண்டு. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டும்தானா இல்லை எல்லாருக்கும் இருக்கான்னு தெரியலை. தனபாலன் அண்ணா வேற ரொம்ப பிஸி போல, அவர் இப்போ அதிகம் வருவதில்லை இல்லேன்னா அவர்கிட்ட கேட்டுக்கலாம். தெரிந்த நண்பர்கள் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்லுங்கள்.
மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Fivcu_179874

***
பாக்யாவில் மக்கள் மனசு மற்றும் வாசகர் வாய்ஸ்-ல் தொடர்ந்து எனது கருத்துகளையும் தேர்ந்தெடுத்து வெளியிடும் பாக்யா ஆசிரியர் குழுவுக்கு நன்றி. மக்கள் மனசில் ஒரு சில வாரங்கள் தவிர்த்து ஒரு வருடமாக தொடர்ந்து எழுதியிருக்கிறேன் அதுவும் பிரசுரமாகியிருக்கிறது என்பதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Bahya_feb26_1மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! %25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25B8%25E0%25AF%258D-6

*** 
ம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மிக தீவிரம் அடைந்து நாட்டுக்காக உயிரிழந்து, தேசியக்கொடியைப் போர்த்தி மரியாதை செய்யப்பட்ட ராணுவவீரனின் மீது ஸ்டிக்கரை வைத்த ஸ்டிக்கர் பாய்ஸின் செயல் வேதனைக்குரியது... கேவலமானது. நேற்று ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது... அதில் மரணமடைந்தவரின் வீட்டில் அழுது கொண்டு நிற்கும்பெண்ணிடம் அம்மாவின் அல்லக்கைகள் காவிரித்தாயின் போட்டோவைக் காட்டி... சை... இவர்களுக்கு எப்படி மனசு வருகிறது... இப்படிப்பட்ட கேவலமான செயலை இறந்தவர்களின் வீட்டிலும் செய்ய இவர்களால் எப்படி முடிகிறது. இந்த மானங்கெட்ட பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம் அல்லக்கைஸ்... ஆணவம் பிடித்த தங்கத்தாரகை இதையெல்லாம் ரொம்ப விரும்பும் போல... புகழ் விரும்பி... மமதை பிடித்த மக்கள் தலைவி... யோசித்து வாக்களித்து வெளியில் தூக்கி வீசணும் தமிழக ஸ்டிக்கர் முதலமைச்சரை.... இல்லையேல் எல்லாருடைய வீட்டிலும்.... எல்லாப் பொருளிலும்... இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள்... அதற்கான கடன் அடுத்த ஐந்தாண்டில் மில்லியன்களின் கூட இருக்கலாம். தமிழனை கேவலப்படுத்தவே  இந்த ஈனப்பிறவிகள் பதவியில் இருக்கிறார்கள் போல.
மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! 200-4386

***
பாப்பா மதிய சாப்பாட்டை சில தினங்களாக சாப்பிடுவதே இல்லை... டிபன் பாக்ஸ் அப்படியே வருது... தினமும் கஷ்டப்பட்டு விதவிதமாச் செஞ்சு கொடுத்துவிட்டா... சாயந்தரம் கோழிக்குத்தான் கொட்ட வேண்டியிருக்குன்னு மனைவி சொல்ல, நான் பாப்பாவிடம் என்ன..? ஏன்..? என்று கேட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது விஷால், 'இவுகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டா பாவம் கோழிங்க பசியா இருக்கும்ன்னு அப்படியே கொண்டாந்துடுறாங்க... இனிமே இதுக்கு கொடுத்து விடுறதுக்குப் பதிலா காலையிலயே கோழிக்கு போட்டிடலாம்... சூடாவாச்சும் சாப்பிடுங்க' என்று சிரிக்காமல் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டான். இப்படி அப்பப்ப நிறைய டைமிங்கா பேசிக்கிட்டே இருப்பான்... எல்லாத்தையும் பதிஞ்சு வைக்கணும்.
மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Outrp_253719

***
நாம் மனசுக்குள் யோசித்து வைத்து... அதை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி ஒரு பதிவாக்கினால் காப்பி செய்யும் நபர்கள் ஏதோ தாங்கள் எழுதியது போல் பல தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். 'தேவதா தமிழ்' கீதா அக்கா, 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா என நிறையப் பேர் தங்கள் பதிவுகள் பல தளங்களில் வேறு பெயரில் பதிவாகியிருக்கு என்று சொல்லியிருந்தார்கள். அவர்கள் படைப்பு மட்டுமில்லை... பலரின் படைப்புக்கள் அப்படித்தான் வலம் வருது. ஒரு முறை 'RSS Feed' என்னும் தளத்தில் எனது பதிவுகள் இன்னும் நம் நட்பின் பதிவுகள் எல்லாம் அனுமதியில்லாமல் மொத்தமாக பதியப்பட்டிருந்தன. நான் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி எனது பதிவுகளை நீக்கினேன். நாம் பெற்ற பிள்ளைக்கு வேறொருவன் உரிமை கொண்டாடுவது எப்படி நியாயம்..? எனவே இனிமேல் மனசு தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள்எல்லாம் நிறுத்திவிட்டு  மனசில் பட்டது, மனசு பேசுகிறேன், மனசின் பக்கம், சினிமா என எழுதலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எதுக்குங்க கஷ்டப்பட்டு சிறுகதை எழுதி நாளைக்கு எவனாச்சும் அதை புத்தகமாப் போடுவான்... என்னைக்காச்சும் வாசிக்க நேர்ந்தால் என்ன இது எல்லாமே நம்மளோட கதை மாதிரி இருக்குன்னு புலம்பினாலும் அவனை ஒண்ணும் செய்ய முடியாதுதானே... எனவே இப்போ நான் தீவிர யோசனையில்... இல்லேன்னா பேசாம மனசு வலைப்பதிவுக்கு மூடுவிழா நடத்திடலாமான்னு கூட யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க..?
மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! STOP-copying%255B8%255D
***
ன்னைக்கு காலையில வேலைக்கு போகும் போது சிக்னலில் ரெண்டு மலையாளி பசங்க பேசிக்கிட்டு நின்னாங்க... ஒருத்தன் மற்றவனிடம் 'பெல்ட் போடாம இன் பண்ணக்கூடாதா என்ன?ட என்றான். 'ஏன்... பண்ணலாமே...? யார் பண்ணக்கூடாதுன்னு சொன்னா... போலீஸ்காரனா...?' மற்றவன் அப்பாவியாய்க் கேட்டான். 'அட நீ வேற... வர்றப்போ எதிரே போன பிலிப்பைனி பொண்ணுங்க ரெண்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு போகுதுங்க...'என்றான். உடனே மற்றவன் அவனை ஏற இறங்கப் பார்த்துட்டு 'மூதேவி... முதல்ல சிப்பைப் போடு... இன் பண்ணின சட்டை அதுவழியா வெளியே வந்திருக்கு பாரு... அப்புறம் சிரிக்காம என்ன பண்ணுவாளுங்க' என்றதும் 'அய்யே...' என அவன் வேகமாக ஜிப்பை இழுக்க நான் சிரித்துக் கொண்டே கடந்தேன்.
மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! 2423668179

***
ன்னைக் கவர்ந்த பாடலாக அனார்கலி படத்தில் இருந்து 'ஆ ஒருத்தி அவளோருத்தி...'  அருமையான பாடல்... இது கண்டிப்பாக உங்களையும் கவரும்... என்னது படம் குறித்தா..? அதை அடுத்த பதிவுல விரிவாச் சொல்றேன்... இப்ப பாட்டைக் கேளுங்க...

-'பரிவை' சே.குமார்.


Last edited by சே.குமார் on Tue 23 Feb 2016 - 19:52; edited 1 time in total
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Empty Re: மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 23 Feb 2016 - 8:39

உங்களது முதல் பகுதியில் உள்ள லிங் not found என்று வருகிறது அண்ணா சரி செய்யுங்கள் அத்தனையும் ஆரமையான மனசின் தடங்கள் பாராட்டுகிறேன் 

முக்கியமாக எமது எழுத்துகளை சிலர் திருடுகிறார்கள் என்னும் பிரச்சினை தொன்று தொட்டு இருந்து வருகிறது அதற்கான தீர்வு எமது எழத்தை நிறுத்துவதாக அமையக்கூடாது திருடியவன் அகப்படும் வரை அவன் கொண்டாடுவான் அகப்பட்டால் அவனே அவமரியாதைக்கு சொந்தக்காரனாகி சின்னா பின்னமாகிடுவான் எம் எழுத்து தரமாக இருப்பதால்தான் திருடுகிறார்கள் என்னும் திருப்தியுடன் பயணிப்போம் என்பது எனது கருத்து


மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Empty Re: மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

Post by சே.குமார் Mon 29 Feb 2016 - 6:16

இணைப்பு சரி பண்ணிட்டேன்....
கருத்துக்கு நன்றி ஹாசிம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Empty Re: மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

Post by Nisha Wed 2 Mar 2016 - 3:11

அப்பாடா படித்தாகி விட்டது குமார்! 

நேசம் சுமந்த வானம் பாடிக்கு அன்றே வாக்கிட்டு விட்டேன், கதை குறித்து கருத்திடவில்லை. அதையும்  எழுத வேண்டும்.வெற்றி பெற என் வாழ்த்துகள் குமார்! 

ஸ்ருதி சாப்பிடாமல் வருவதற்கு மனசும் காரணமாயிருந்திருக்கலாம், அவ கிளாஸில் ஏதேனும் சங்கடமான சூழல் இருந்தால் அந்த சோர்வில் உணவை தவிர்க்கலாம்,அத்தோடு இந்த வயதில் சில பெண் குழந்தைகள் சாப்பாட்டை தவிர்ப்பதும் இயல்பு,அவளிடம் பேசி அவளுக்கு பிடித்ததாய் செய்து கொடுக்க சொல்லுங்கள். 

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்தும் பெரியவர் நீங்களாய் இருக்க மாட்டீர்கள் என்பதால் இந்த வலைப்பூவில் இனி எழுதுவதா இலலியா எனும் கதைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு எழுதுங்கள். நம்ம எழுத்துக்கள் நாலு பேருக்கு பிடிச்சு போகத்தானே காப்பி செய்கின்றார்கள். அது நமக்கும் பெருமை தானே? விட்டு தள்ளுங்கள். 

காப்பி பேஸ்டுகளுக்கு பயந்தால் ஆகுமா? என் வீட்டுக்காரருக்கு இப்ப கவிதை படிக்கும் ஆர்வம் வந்திருக்கு குமார், ஒரிரு மாதம் முன்னால்  அவர் படிக்கும் கவிதையைஎல்லாம்  தன் பேஸ்புக் பக்கம்  காப்பி செய்து போட்டுகொண்டிருந்தார்,அதை அவர் நட்புக்களும் லைக் செய்வாங்க, ஆனால் அது அவர் எழுதியது இல்லை என எனக்கு  தெரியும், அப்படி செய்யாதிங்க,காப்பி செய்தால் எழுதியவர் பெயரையும் போடுங்க,இல்லன்னால் உங்களை திட்டுவாங்க என சொன்னேன், உடனே அப்படில்லாம் ஆகாது, பேஸ்புக்கில் நிரம்ப இடத்தில் அந்த கவிதை இருக்குது, அதனால் யாரும் திட்ட மாட்டாங்க என எனக்கு சொல்லிட்டு அவர் வேலையை அவர் அப்பப்ப செய்து கொண்டு தான் இருக்கின்றார்.

இத்தனைக்கும் வாசிப்பு எனில் அத்தனை கசப்பாய் நினைப்பார். அவருக்கே கவிதை படிக்கும் ஆர்வமும் அதை காப்பி செய்து போடும் ஆர்வமும் இருக்கும் படி கவிதை வரிகள் இருந்தால் அது எழுதியவருக்கு பெருமை தானே?

நான் சேனையில் போடும் பதிவுகளை காப்பி செய்யாமல் தடுக்கும் செட்டிங்கில் போடுவது நல்லது என முசம்மிலுடன் பேசினேன், ஆனால் அவர் அப்படி வேண்டாம் அக்கா என சொல்லி விட்டார். நாம் இணையத்தில் பதிவது நான்கு பேர் படித்து பயன் பெற வேண்டும் எனும் நோக்கத்தில் எனும் போது சில பல செய்திகளை காப்பி செய்து பந்திந்தால் என்ன அக்கா என்கின்றார். அவர் சொல்வதும் சரி தான் என எனக்கும் தோன்றியது!

கதை,கவிதை அல்லாத பொதுத்தகவல்கள்,மருத்துவவிடயங்கள், உலகம் குறித்த பகிர்வுகளை நாம் தேடி இடுவதும் ஆராய்ந்து எழுதுவதும்   அனைவரும் பயனடைய எனும் போது எதற்காக காப்பி செய்ய முடியாதபடி செட்டிங்க் செய்ய வேண்டும்! அதுவும் ஒருவகை சுய நலம் தானே?அனைவருக்கும் பயன் படவேண்டும் எனும் நினைத்தோமானால் நாம் எதையும் இலகுவாய் எடுத்துக்கொள்வோம் அல்லவா!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Empty Re: மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

Post by Nisha Wed 2 Mar 2016 - 3:18

நான் ரோபோட் இல்லை என்பதும் படங்களை குறிக்க சொல்வதும் ஒருவகை செக்ரூட்டி பாதிகாப்பு என நினைக்கின்றேன் குமார்,  நான் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அடுத்தடுத்து பலரின் பதிவுகளை திறந்து கருத்திட முனையும் போது மட்டும் தான் இம்மாதிரி காட்டுகின்றது. ஆரம்பத்தில்  ஏதேனும் வைரஸோ என பல பதிவுகளை கருத்திடாமல் தவிர்த்து விட்டேன். 

எனக்கும் இப்படித்தானே, வந்தால் ஒரேயடியாக் இங்கே வந்து குடியிருப்பேன்,இல்லாவிட்டால் மொத்தமாய் காணாமல் போய் விடுவேனே,, அடுத்த தடவை மீண்டும் இந்த ரோபோ இல்லை வந்தபோது சட்டென இதான் காரணம் என புரிந்து போனது,


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Empty Re: மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

Post by பானுஷபானா Thu 3 Mar 2016 - 11:16

எங்கே அந்த பதிவு?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Empty Re: மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

Post by பானுஷபானா Thu 3 Mar 2016 - 15:38

நேசம் சுமந்த வானம்பாடி தனி ப்திவு இருந்துச்சே எங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..! Empty Re: மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum