சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Khan11

அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை

Go down

அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Empty அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை

Post by rammalar Tue 2 May 2017 - 4:27

புதுடெல்லி,

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு 
மனநல மருத்துவ பரிசோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு 
உத்தரவிட்டது.

நீதிபதி கர்ணன்

-
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம், இவர், சக நீதிபதிகள் தன்னை சாதி அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

2014–ம் ஆண்டு ஜனவரி மாதம், நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியம்’ அமைப்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். பின்னர், சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் எழுதினார். பிறகு அவர் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

அவமதிப்பு வழக்கு

-
சக நீதிபதிகளுக்கு எதிரான நீதிபதி கர்ணனின் கடிதங்கள் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரிக்க தலைமை நீதிபதி தலைமையில் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த அமர்வு சம்மன் அனுப்பியது. ஆனால், நீதிபதி கர்ணன் ஆஜராகாததால், அவர் நீதிமன்ற பணிகள் எதையும் செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, கடந்த மார்ச் 31–ந்தேதி, சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு முன்பு நீதிபதி கர்ணன் ஆஜரானார். அப்போது, சக நீதிபதிகளுக்கு எதிரான அவரது குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் சட்ட அமர்வு விளக்கம் கேட்டது.

தனக்கு நீதிபதி அதிகாரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. அதனால், தான் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக போவதில்லை என்று நீதிபதி கர்ணன் கூறினார்.

வெளிநாடு செல்ல தடை

-
அதையடுத்து, நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். தனக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 28–ந்தேதி, தன் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அன்று யாரும் ஆஜராகாததால், அவர்கள் மே 1–ந்தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது, நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனநல மருத்துவ பரிசோதனை

-
இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–


கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனுக்கு மே 4–ந்தேதி மனநல மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். கொல்கத்தா அரசு மருத்துவமனை, இதற்கான டாக்டர்கள் குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கு உதவ போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி. அமைக்க வேண்டும்.

மருத்துவ பரிசோதனை பற்றிய அறிக்கையை மே 8–ந்தேதியோ அல்லது அதற்கு முன்போ சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர்கள் குழு சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மறுநாள் (9–ந்தேதி) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

உத்தரவை பரிசீலிக்க வேண்டாம்

-
நீதிபதி கர்ணன் விரும்பினால், இந்த உத்தரவு பற்றிய தனது கருத்தை தெரிவிக்கலாம். மே 8–ந்தேதிக்குள் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராவிட்டால், சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வருவோம்.

நீதிபதி கர்ணன், நீதித்துறை பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி நாங்கள் உத்தரவிட்டு இருந்தோம். அதன்படி, அந்த தேதிக்கு பிறகு அவர் பிறப்பித்த எந்த உத்தரவையும் நாடு முழுவதும் உள்ள எந்த கோர்ட்டோ, தீர்ப்பாயமோ, ஆணையமோ பரிசீலிக்க தேவையில்லை.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.


நீதிபதி கர்ணன் பதில் உத்தரவு

-
இதற்கிடையே, தான் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள மாட்டேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:–

நான் நிரபராதி. நல்ல உடல்நிலையுடனும், மனநிலையுடனும் இருக்கிறேன். என்னை மேலும் அவமானப்படுத்துவதற்காக, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

எனது விருப்பத்தை மீறி, என்னிடம் மருத்துவ பரிசோதனை செய்ய வந்தால், மேற்கு வங்காள போலீஸ் டி.ஜி.பி.யை இடைநீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பிப்பேன்.

எனக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளையும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்குள்ள மனநல மருத்துவர்கள் குழு முன்பு ஆஜர்படுத்துமாறு டெல்லி போலீஸ் டி.ஜி.பி.க்கு நான் உத்தரவிடுகிறேன். அங்கு 7 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி, அந்த அறிக்கையை 7–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார்.

அவர் கையெழுத்திட்ட இந்த உத்தரவு, பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» வழக்கு விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தகவல்
» நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
» சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும் 22 ம் தேதி ஜெ., ஆஜராக நீதிபதி உத்தரவு
» 900 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஹொஸ்னி முபாரக்கிடம் மறுவிசாரணை செய்யும் நீதிபதி விலகல்
» விஜய் நடித்து, தீபாவளிக்கு திரையிடப்படவுள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum