சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

 பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்! Khan11

பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!

Go down

 பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்! Empty பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!

Post by rammalar Wed 24 Apr 2019 - 21:42

 பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்! Im


இன்றைய கால சூழ்நிலையில், பெரும்பாலான பெண்கள் 
அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். 
இவர்கள், காலை நேரத்தில் அவசர அவசரமாக வீட்டுப் 
பணிகளை முடித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு நடையும்,
 ஓட்டமுமாக ஓடி, களைத்து பஸ்ஸýக்காக நிற்க, பெரும்
 கூட்டத்தை சுமந்து கொண்டு வரும், பஸ்ஸில் ஏறி
 இடிபாடுகளில் சிக்கி திணறி பஸ்ஸில் இருந்து 
இறங்குகையில் போதும்போதும் என்றாகி விடும் 


இவ்வாறு அல்லல்படும் மிடில் கிளாஸ் பெண்களுக்காகவே,
 உருவாக்கப்பட்டுள்ளது, "ஜெர்ஸி வீலர்ஸ்' என்னும் பைக் 
மற்றும் ஆட்டோ கேப் சர்வீஸ். 


இதன் மூலம் பெண்கள் இனி பஸ்ஸýக்காக கால் கடுக்க 
காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு போன் கால் 
செய்தால்போதும், அவர்களது வீட்டு வாசலிலேயே வந்து 
பெண் ஓட்டுநர், அவரது பைக்கில் அழைத்து செல்வார் 
என்கின்றனர் ஜெர்ஸி வீலர்ஸின் நிறுவனர்களான ரெக்ஸி
 மற்றும் அனு. 


இது குறித்து ரெக்ஸி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:


 "எனது பூர்வீகம் கன்னியாகுமரி. என் தந்தை தில்லியில் 
உள்ள நேஷனல் லேபரட்டரியில் பணியில் இருந்ததால், 
நான், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தில்லியில்தான். 


எனக்கு சிறு வயதிலிருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் 
என்ற கனவு இருந்தது. அதனால், ஏதாவது நிறுவனம் தொடங்கி 
பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று
 நினைத்திருந்தேன். 


ஆனால், ஒரு கட்டத்தில், எனக்கு உடல்நிலை சரியில்லாமல்
 போக, சென்னை வந்து செட்டிலானோம். தில்லியில் பி.காம் 
ஹானர்ஸ் படித்திருந்தேன். சென்னை வந்த பிறகு எம்.பி.ஏ 
படித்தேன். அதன்பிறகு இன்டீரியர் டிசைனிங் மீது ஆர்வம் 
ஏற்பட அதை படித்து சொந்தமாக ஒரு நிறுவனத்தை 
தொடங்கி நடத்தி வருகிறேன்.


 இதைதவிர, அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம், 
கௌரவப் பேராசிரியராக செல்வது, டியூசன் எடுப்பது, 
யாருக்காவது மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவர்களை 
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது இப்படி என்னால்
 முடிந்த உதவிகளை செய்து வந்தேன்.


 இந்நிலையில்தான், பெங்களூரில் இருக்கும் எனது தோழி 
ஒருவர், அங்கே "உமன்ஸ் கேப்' இருப்பதைப் பற்றி கூறி,
 "நீ ஏன் செய்யக் கூடாது'' என்று கேட்டார். எனக்கும் இந்த 
யோசனை பிடித்திருந்தது.


 சரி செய்துதான் பார்ப்போமே என்ற எண்ணம் வர, என்னைப்
 போலவே பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று 
நினைத்து கொண்டிருந்த எனது தோழி அனு எனக்கு பெரிய 
ஊக்கம் கொடுத்ததோடு, என்னுடன் பார்ட்டனராகவும் வந்தார். 


தற்போது நாங்கள் இருவரும் சேர்ந்து இந்த உமன்ஸ் கேபை 
நடத்தி வருகிறோம்.
-
-------------------------


Last edited by rammalar on Wed 24 Apr 2019 - 21:48; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்! Empty Re: பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!

Post by rammalar Wed 24 Apr 2019 - 21:45

 பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்! Mm12



ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கியது, 
தற்போது கணிசமான வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். 
காரணம், டூ வீலர் ஓட்டத் தெரியாமல், பஸ்ஸிலும் பயணம் 
செய்ய முடியாமல், கேப்பில் செல்ல பட்ஜெட்டும் இடம் 
கொடுக்காமல் தவிக்கும் வேலைக்குச் செல்லும் மிடில் கிளாஸ் 
பெண்களுக்காக, முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் 
கேப் என்பதால், பெண்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல 
வரவேற்பு கிடைத்துள்ளது. 


இதில் எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், 
எங்கள் கேபில் பயணம் செய்த பெண்கள் பலருக்கும் 
எங்களது பணி பிடித்திருக்க, அவர்களாகவே, அவர்களது 
தோழிகளுக்கு பரிந்துரை செய்வதுதான். 


அதுபோன்று, இன்றைய சூழலில் பெண் குழந்தைகளின் 
பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளதால், 
பெரும்பாலான பெற்றோர் எங்களை அழைக்கின்றனர். 


அவர்கள் எதிர்பார்ப்பது, "என் மகளை பாதுகாப்பாக 
பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அழைத்துச் செல்ல எங்களுக்கு 
பெண் ஓட்டுநர்கள்தான் வேண்டும்'' என்று கேட்கின்றனர்.


 இந்த கேபை பொருத்தவரை இது லாப நோக்கில் 
தொடங்கியது இல்லை. பெண்களுக்காக ஏதாவது ஒரு 
வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் 
தொடங்கியது.


 உதாரணமாக, தினசரி தனது இல்லத்தில் இருந்து அ
லுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் பயணம் 
செய்பவராக இருந்தால், அவர் எங்களுடன் இணைந்து
விட்டால், அவருக்கு நாங்கள் ஒரு கோட் எண்ணை 
கொடுத்துவிடுவோம். 


இதன் மூலம் அவர் வரும் வழியில், ஒன்றோ, இரண்டோ 
பிக்கப்களை எடுத்துக் கொண்டு வந்து டிராப் செய்து
விட்டு போகலாம். அதுபோன்று மாலை பணி முடிந்து வீடு 
திரும்பும்போது வழியில் உள்ள பிக்கப்களை அழைத்து 
வந்து விட்டுச் செல்லலாம். 


இதன் மூலம் அவர்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு 
15 ஆயிரம் வரை ஈசியாக சம்பாதித்து விடலாம்.


 அல்லது, முழுநேரப் பணியாக எடுத்து செய்தால், 
மேலும் கூடுதலாக சம்பாதிக்கவும் முடியும். எனவே, 
டூ வீலரோ, ஆட்டோவோ ஓட்ட தெரிந்த பெண்கள் யார் 
வேண்டுமானலும் இதில் ஓட்டுநராக வரலாம். 


இதனால், அவர்களுக்கு ஒரு உபரி வருமானமும் 
கிடைக்கும்'' என்றார்.
-
------------------------------------------------------
 - ஸ்ரீதேவி குமரேசன்
மகளிர்மணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum