சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன் Khan11

வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்

Go down

வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன் Empty வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்

Post by rammalar Tue 28 Jul 2020 - 13:49

வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன் 565911
-
வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்' எப்படி பெரிய வெற்றி
படமாக அமைந்ததோ, அது போல் சந்தானத்துக்கு
'பிஸ்கோத்' படம் இருக்கும் என்று இயக்குநர் கண்ணன்
தெரிவித்துள்ளார்.

கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள
படம் 'பிஸ்கோத்'.
மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் கண்ணனே தயாரித்து
வருகிறார். நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும்
ஸ்வாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர்.

முக்கியக் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நாயகி
செளகார் ஜானகி நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு
முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள்
மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

'பிஸ்கோத்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின்
ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே இந்தப்
படத்தில் சுமார் 30 நிமிடக் காட்சிகள் 1980-களில் நடைபெறுவது
போன்று வடிவமைத்துள்ளார் இயக்குநர் கண்ணன்.

இந்தப் பகுதியில் ராஜாவாக சந்தானம் நடித்துள்ளார்.

ராஜாவாக சந்தானம் நடித்திருப்பது குறித்து இயக்குநர்
கண்ணன் கூறியிருப்பதாவது:

"படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம்
போல் வருகிறது .அதனால்தான் படத்துக்கு 'பிஸ்கோத்' என்று
பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை
இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம். வடிவேலுவுக்கு எப்படி
'இம்சை அரசன்' அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு
'பிஸ்கோத்' படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும்
இருக்கும்.

இந்தப்படத்தில் இந்த ராஜா காலகட்ட காட்சிகள் 30 நிமிடங்கள்
வரும். இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து
வைத்துக் கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம்
அமைத்தார். இதற்கான உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு
உடை அலங்கார நிபுணர் பிரியா உடைகளை வடிவமைத்துக்
கொடுத்தார்.

இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்தார்கள்
அவ்வளவு பேருக்கும் உடைகள் தயாரிக்கப்பட்டன.

படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் வரும்
காட்சிகளுக்குத்தான் இப்படி ராஜபார்ட் வேடமும் அரங்கங்களும்
அமைக்கப்பட்டன. இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம்
பெறும் காட்சிகள் வரும். மூன்றாவது பகுதியாக சமகாலத்துக்
காட்சிகள் அதாவது இக்கால 2020-க்கான காட்சிகள்
அமைந்திருக்கும்.

இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம்
பார்த்தால் புரியும் .மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க
வைக்கும் படமாக இது இருக்கும்"

இவ்வாறு கண்ணன் தெரிவித்துள்ளார்.
--
இந்து தமிழ் திசை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2’
» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
» இளம் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் காலமானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum