சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக இசை தினம்
by rammalar Today at 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Today at 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Today at 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Today at 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Yesterday at 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Yesterday at 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Yesterday at 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Yesterday at 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Yesterday at 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Yesterday at 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Yesterday at 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Yesterday at 4:21

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Yesterday at 4:14

» அனைவரும் தெய்வத்தின் அம்சமே
by rammalar Wed 19 Jun 2024 - 18:22

» மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:15

» ’குறி’ பார்த்து சுடணுமாம்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:11

» கக்கன் & மாக்ஸிம் கார்க்கி - பிறந்த நாள்
by rammalar Wed 19 Jun 2024 - 14:10

» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Wed 19 Jun 2024 - 8:49

» துளி(அ)ப்பா
by rammalar Wed 19 Jun 2024 - 6:15

» படித்ததில் பிடித்தது-7அ
by rammalar Tue 18 Jun 2024 - 20:26

» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Tue 18 Jun 2024 - 20:20

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Tue 18 Jun 2024 - 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Tue 18 Jun 2024 - 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Tue 18 Jun 2024 - 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Tue 18 Jun 2024 - 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Mon 17 Jun 2024 - 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Mon 17 Jun 2024 - 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon 17 Jun 2024 - 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon 17 Jun 2024 - 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

மகப்பேறு Khan11

மகப்பேறு

Go down

மகப்பேறு Empty மகப்பேறு

Post by *சம்ஸ் Fri 8 Apr 2011 - 5:15

மகப்பேறு Pregnancy1மகப்பேறு Pregnancy_Image_1
மகப்பேறென்பது கர்ப்பந்தரித்து (கருத்தரித்து) குழந்தை பெற்றெடுப்பதைக் குறிக்கிறது. கருத்தரித்திலிருந்து குழந்தை, குழந்தையொன்றை (சில சமயம் இரண்டு, இரண்டிற்கும் மேற்பட்டவை) பெற்றெடுக்கும் வரையான காலம் கற்பகாலமாகும்.கருத்தரித்தலிருந்து 38 கிழமைகளின் பின்பு குழந்தை பிறக்கிறது. இது அநேகமாக கடைசியான மாதவிடாயின் 40 கிழமைகள் பின்னராகும். கர்பகாலம் (மனிதரில்) பொதுவாக ஒன்பது மாதங்களாகும். கற்பகாலம் 3 காலங்கூறாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று, நடு மூன்று, கடை மூன்று மாதங்களாக அமைகின்றன. இவை கருத்தரிப்பிற்கு முன்னைய காலத்தைக் கருதி நிற்கவில்லை. முதற் கூற்றில் கருச்சிதைவு ஏற்படக்கூடிய வாய்புகள் அதிகமாதலால் மிகவும் அவதானமாக நடந்து பௌ;ளவேண்டும். இரண்டாவது கூறில், சிசு விருத்தியை இலகுவாக அவதானிக்கவும், கண்டறியவும் கூடியதாகவும் இருக்கும். மூன்றாவதும் இறுதியுமான காலக்கூற்றில்தான’ குழந்தை சுயமாக (கருப்பையிற்கு வெளியே) வாழக்கூடிய நிலை உறுதிப்படுத்தப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மகப்பேறு Empty Re: மகப்பேறு

Post by *சம்ஸ் Fri 8 Apr 2011 - 5:15

கருத்தரித்தல்:
ஆண் பெண் புணர்ச்சி (கலவி) யின் போது ஆணிலிருந்து வரும் விந்து பெண்ணின் முட்டையுடன் கலக்கும் பொழுது கருத்தரிப்பு நடைபெறுகிறது. இயற்கையான முறையில் நடைபெற முடியாத பொழுது செயற்கையான கருத்தரிப்பும் நடைபெறலாம். கருத்தரித்தல் பெண்களின் கருப்பையின் தொடர்ச்சியாக அமைந்த பலோப்பியன் குழாயினுள் நடைபெறுகின்றது. கருக்கட்டப்பட்ட முட்டை பின்னர், சிசு வளர்ச்சியை தாங்கிகொள்ள ஆயத்தமாகவிருக்கும். கருப்பை சுவரில் தன்னை பதித்து வளர்ச்சியடையும் (இது நடைபெறாதபோது கருப்பை சுவர் சிதைவடைந்து – மாதவிடாயாக வெளியேறும்)

கர்ப்ப காலம், கருப்பையில் கரு தங்கிய நாளிலிருந்து தொடங்கிய பொழுதும், இதை வரையிட்டு கூறுவது சிலசமயம் கடினமானதாகும். குடைசியான மாதவிடாய நாளிலிருந்து கணக்கெடுக்கபட்படுகிறது. இந்த நாளை அடிப்படையாக வைத்தே குழந்தை பிறக்கப்போகும் நாள் அல்லது தேதி குறிக்கப்படுகிறது. மேலும் ஏனைய சோதனைகள் செய்யப்பட வேண்டிய தேதிகளும் குறிக்கப்படுகின்றன. கர்பகாலம் 37 – 42 கிழமைகளாக இருக்கலாம். 42 கிழமைக்கு பின்னும் குழந்தை பிறக்காவிடில், அது தாயிற்கும் சேயிற்கும் பிரச்சனையாகப் போய்விடும் அபாயமுண்டு. குழந்தை பிறக்கும் தேதியைத் மேற்படி தீர்மானிக்கும் முறை மிகவும் தீர்கமானதல்ல. இதுவொரு அண்ணளவான கபணப்பாகும் ( கருபதிந்த நாள் திட்டமாகத் தெரிவதில்லை, பல காரணிகளுண்டு).


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மகப்பேறு Empty Re: மகப்பேறு

Post by *சம்ஸ் Fri 8 Apr 2011 - 5:15

கற்பமுற்றதைத் தீர்மானித்தல்:
கருவுற்றிருப்பதை பல வழிகளில் சோதனை செய்து பார்க்கலாம். சோதனைக கூடங்களில் இரத்த, சிறுநீர் சோதனை மூலம், ஓமோன் மாற்றமடைந்திருப்பதைக் கண்டறிவதனால் கருவுற்றிருப்தை அறிந்து கொள்ளலாம். இதில் கருபதிந்த 6 – 8 நாட்களிலேயே அறியலாம். மருந்து கடைகளில் கிடைக்கும் சிறுநீரைச் சோதித்தறியும் முறையில் கருப்பதிந்த 12 -15 நாட்களின் பின்பே சோதனை செய்து பார்க்கமுடியும். மேற் கூறிய இரு முறைகளிலும் விருத்தியடையும் கருவின் வயதைக் கூறமுடியாது. சோனோகிராப் முறை மூலம் சிசுவின் வயதை பெரும்பாலும் சரியாக கூறக்கூடும். ஆயினும் கடைசியான மாதவிடாயிலிருந்து கணக்கிடும் முறையே கூடிய அளவில் பாவனையிலுள்ளது. இம்முறையில், மாதவிடாய் காலச்சக்கர நாட்களினளவு, பெண்களுக்கு வேறுபட்டிருப்பதனால், குழநi;தை பிறக்கும் தேதியைக் குறிப்பது சில கிழமைகளினால் வேறுபடும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மகப்பேறு Empty Re: மகப்பேறு

Post by *சம்ஸ் Fri 8 Apr 2011 - 5:16

கர்ப்பகால போசாக்குணவு:
ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க, கர்ப்பகாலத்தில் தாய் போசாக்குணவை உட்பொள்ளுவது மிகவும் அவசியமாகும். கர்ப்பிணிகள், ஆரோக்கியமான, நிறையுணவில் மாப்பொருள் (கபோவைதரேற்று), கொழுப்பு, புரதம் வேண்டிய அளவில் இருக்குமாறும், பழங்களுமு;, புதிய மரக்கறிகளையும் வழக்கமாக சேர்த்து வந்தால் போதியளவான போசாக்குணவு உடலுக்கு கிடைக்கும். மதநம்பிக்கை அல்லது தேகாலோக்கியம் அல்லது சில சில மூடநம்பிக்கைகள் காரணமாக உணவில் மாற்றம் அல்லது தவிர்த்தலைச் செய்வதாக இருந்தால், அவர்கள் உணவு ஆலோசகரை நாடி ஆலோசனை பெறவேண்டும்.

போலிக் அமிலம் (போலேற், உயிர்ச்சத்து பி9 எனவும் அழைக்கப்படும்). முதல் 28 நாட்களில் சிசு விருத்தியின் போது மிகவும் தேவைப்படுகிறது. இது ஸ்பைன பிவிடா என்னும் கருமையான பிறப்புக் குறைபாட்டை தவிர்க்க மிகவும் முக்கியமானதாகும். போலேற், பச்சைநிற இலைக்கறிகள் (ஸ்பினைச்), இலைக்கறி சம்பல், வர்த்தகை வகை, பழங்கள் கூமுஸ், முட்டை போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது, உயிர்ச்சத்து ‘டி’, கல்சியம் போன்றவை, என்பு வளர்ச்சிக்கு வேண்டியவையாகும். ஒமேகா – 3 போன்ற கட்டாக அமினோ அமிலங்களும் தேவைப்படுகின்றன. இவை யாவும் போதியளவு உணவினூடாக கிடைக்காத பொழுது, குறைநிரப்பிகளினூடாக எடுத்துக்கொள்ளலாம். சில உணவுகளிலும் ( முட்டை – சல்மொனெல்லர், பால் - விஸ்ரீறியா போன்ற) சமைக்காத உணவிலும் நோய்காரணிகள் காணப்படுவதனால், சமயல் வேளைகளிலும், உண்ணும் பொழுதும் சுகாதார, சுத்தமான முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். எல்லாம் நன்றாக அமையும் பொழுது தாய்மைப்பேறு சுகமான அனுகவமாகும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மகப்பேறு Empty Re: மகப்பேறு

Post by *சம்ஸ் Fri 8 Apr 2011 - 5:16

மகப்பேறின்மை:
ஒரு வருட காலமாகவோ அல்லது அதற்கு சற்று அதிகமாகவோ சூல்கொள்ளும் பெண். உடலுறவின் போது கருத்தரியாமல் போதல் மகப்பேறின்மை எனக்கொள்ளப்படும். இது கருத்தரித்த பின் பிரசவம் வரையில் சென்றடையாத நிலையையும் குறிக்கும்.

சூல்கொள்ளல், சூல் விந்தினால் கருக்கட்டப்படுதல, கருக்கட்டப்பட்ட முட்டை பலோப்பியன் குழாயினூடு நகர்ந்து கருப்பையை அடைந்து வளர்ச்சியடைதல் போன்ற சிக்கலான நிலைகளை இது கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 40வீதம் குழந்தைப்பேறற்ற தம்பதியினரில், இந்நிலைக்கு ஆணே பகுதியாகவோ முழுமையாகவோ காரணமாகின்றார். ஆண்களின் மகப்பேறின்மைக்கு குறைவான எண்ணிக்கையில் விந்து உற்பத்தி செய்யப்படடுதல் முதன்மையான காரணமாகும். இச்சமயங்களில் உடற்கூற்றமைப்பில் ஏதாவது மாறுபாடுகள் காரணமாகலாம்.

ஆண்களில் விந்து எண்ணிக்கை குறைவாக காணப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. மதுபானம் அருந்துதல், அகச்சுரக்கும் சுரப்பிகளின் குறைபாடுகள், சூழலிலுள்ள நஞ்சுப்பதார்த்தம், பதிப்பான கதிர்கள், அதிகமான சூடு ஆகியனவும், நீண்ட நாள் காய்ச்சல் அல்லது வேறேதாவது வருத்தம், விதையில் ஏற்ப்பட்ட அடிபாடு அல்லது காயம் போன்றன காரணங்களாகின்றன. விதையில் விந்தணுக்கள் தோன்றுவதற்கு குறிப்பிட்ட ஒரு வெப்பநிலையில் விதையுறையிலுள்ள விதைகள் பேணப்படவேண்டும். விதையைச் சுற்றியுள்ள நாளங்கள், சில ஆண்களில் அதிகம் விரிவடைவதனால், குருதி விதையைச் சுற்றி நில்லாமல், வடிந்தோடுவதனால், விதையில் தோன்றும் விந்தணுக்களை இது பாதிக்கின்றது.

பெண்கனில் மகப்பேறின்மைக்கு, சூலகத்திலுள்ள குறைபாடுகள், பலோப்பியன் குழாய் அடைப்புக்கள், என்டோமீற்றியோசிஸ் எனப்படும் கருப்பையில் வழமைக்கு மாறான உட்சுவர் கட்டி வளர்ச்சிகள், யுறையின் பைபுரைட் எனப்படும் கருப்பையின் உள் வெளிச் சுவர்களில் தோன்றக் கூடிய பாதகமற்ற கட்டிகள் போன்றன காரணங்களாகின்றன. சில பெண்களில் விந்தணுவை எதிரியாக கருதி எதிர்ப்பு உடலங்கள் தோற்றுவிக்கப்படுவதனால் பெண்ணின் உடலில் விந்து ஏற்றுக்கொள்ளப்படாமல் போகின்றது. சல்லமைடியா எனப்படும் உடலுறவின்போது கடத்தப்படும் நோயும் மகப்பேறின்மைக்கு ஒரு காரணமாகும். பெற்றோர் ஆகிவிடும் பயம், வாழ்;க்கைப்பழு, மகப்பேறின்மையால் ஏற்படும் வாழ்க்கைப்பழு அல்லது சமூகப்பழி ஆகியன உளவியற் காரணங்களாகின்றன.

மகப்பேறின்மைக்கான பொதுவான காரணங்களாக பின்வருவன குறிப்பிடப்படும்:
- பெண்களில் கருப்பை உட்சுவரின் கட்டி வளர்ச்சிக்ள (என்டோமீற்றியோசிஸ்).
- ஆண்களில் மாற்;றமைந்த விந்தணுக்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையில் விந்தணுக்கள் தோன்றுதல், விந்தணுக்களை பெண் குறியில் செலுத்துவதற்கு தேவையான ஆண் குறியின் விறைப்புத்தன்மை இல்லாதிருத்தல் (இறக்ரையில் டிஸ்பங்சன்).
- பெண்களில் பலோப்பியன் குழாயில் தடைகள் இருத்தல்.
- பெண்களில் சூல் தோன்றாதிருத்தல் அல்லது ஒழுங்கன்றி தோன்றுதல்.
- தம்பதியினர் முழுமையான உடலுறவை செய்ய முடியாதிருத்தல்.
- பெண்களில் கருப்பை வாயிலில் தோன்றும் சளிப்படை விந்தணுக்களைக் கொன்றுவிடுதல்.
- பெண்களில் முழுமையான கர்ப்ப காலத்தைக்கொண்டு செல்வதற்கு தேவையான புறோஜெஸ்ரோன் எனப்படும் ஓமோன் போதியளவு சுரக்கப்படாமை.
- பெண்களின் வயது முப்பதுநான்கிற்கு அதிகமாக இருத்தல்.

பொதுவாக மகப்பேறின்மைக்கு ஒன்றிற்கு மேற்ப்பட்ட காரணிகள் காரணங்களாகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மகப்பேறு Empty Re: மகப்பேறு

Post by *சம்ஸ் Fri 8 Apr 2011 - 5:17

அறிவுரைகள்:
- ஆண்கள் விந்து எண்ணிக்கையை அதிகமாக வேண்டுமானால் மதுபானம் அருந்துவதைதவிர்க்கவேண்டும், பெண்களில் முட்டை கருப்பையில் தங்கி வளர்வதை தடை செய்கிறது.

- வைத்தியர் சொல்வதைத் தவிர ஏனைய மருந்துகளை எடுக்கக்கூடாது. குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் விருப்பத்தையும் வைத்தியரிடம் கூறவேண்டும். இம்மருந்துகளில் ஏதாவது ஒன்று கருவுறுவதைத் தடைசெய்யக்கூடும்.

- புகை பீடிக்கவோ, பீடிக்கப்பட்ட புகையுள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்.

- நிறையுணவு முக்கியமானதாகும். விலங்கு கொழுப்பு, பொரித்த உணவு, சீனி கொண்ட பதார்த்தம், அவசர உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். பூசினி விதை, தேன் மா வதை அல்லது றோயல் ஜெலி உண்ண வேண்டும். தேன் மா வதை உண்ணும் போது உணவு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்ப்பட்டால் உட்கொள்வதை நிறுத்திவிடவேண்டும்.

- உடலுறவின் போது பயன்படுத்தப்படும் சில செயற்கையான உராய்வு நீக்கிகள் விந்தணுக்கள் கருப்பையின் கழுத்தை அடைவதை தடைசெய்யும். உமிழ் நீர் சில சமயம் விந்தணுவிற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

- மகப்பேறின்மை வாழ்கையில் ஒரு பழுவாகவும், வாழ்க்கையின் பழியாகவும் அமைவதால், அதை ஏற்றுக்கொண்டு, மகப்பேற்றை அடைவதற்கு வழிகாணவேண்டும்.

- மூலிகை மருந்துகள், குறைநிரப்பிகள், போசாக்குணவுகள் போன்றவற்றை ஆலோசனையுடன் பெறுவதனால் மேற்கண்ட நிலைகளில் பலவற்றை நிவர்த்திக்கலாம்.


நன்றி மருந்து.கொம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மகப்பேறு Empty Re: மகப்பேறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum