சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Khan11

அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

+8
mufees
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
ராகவா
ahmad78
பானுஷபானா
நண்பன்
Nisha
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 10:09

சேனையில் என்றும் டாப் வின்னராய் ஜொலிக்கும்
எங்கள் அன்பு நணபனின் 80000 பதிவுகளுக்காக
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Fa0ceff7-3b68-43ad-bd11-f659e79c6452_zpsd34840ec

அறிந்தோர் அறியாதோர் எவரா
யிருந்தாலும் அரணாம் என் நட்பென்று
உணரசெய்திடவே
நண்பன்
எனும்
நாமம் தரித்தவனே நீ வாழி!

குறுகிய நாட்களிலே குணத்தால்மனம்
ஜெயித்து பாலய நட்பு முதல் பருவ நட்பு
வரை பதமாய் அன்பு காட்டிஎன் உயிர்
நண்பன் இவனென போற்றபடுபவனே நீ வாழி !

உனையறியா பொழுதினிலே
உனை வாழ்த்த என்னுள்ளே
மழை போல் சொரிந்திட்ட
வார்த்தையெனும் வாழ்த்துப்பா!

உனையறிந்த  பொழுதினியே
வாழ்த்திடத்தான் வார்த்தையன்றி  
ஓடியொழிந்த மாயமென்ன
நானறியேன் அன்புறவே!

சோதரனாய் உருமாறி உணர்வுக்குள்
உயிர் கொடுத்து உலகத்து
அன்பையெல்லாம அள்ளிதந்து
என்னுள் விஸ்வரூபமானவனே !

கணம் கூட சிணுங்காது, அழைக்கும்
பொழுதிலெல்லாம் தயங்காது
வாழ்க்கையெனும் சோலையிலே
விருட்சமானவனே !

இல்லார்க்கு இல்லையென்றாது
அல்லலுறும் மாந்தர் துயர்
கண்டு மனம் இரங்குமிவன்  
மனிதரில் மாணிககமே !

அக்கரையில் மனம் கவரும் நாயகனாய்
சுட்டித்தனம் செய்திட்டதை குட்டி
குழந்தை போலே சுட்டும் எங்கள்
செல்ல அப்புக்குட்டியும் இவனே !

வெட்டிக்கதை பேசி வீணாய் போகாது
பாங்காய் நயம்படவுரைத்து நல்வார்த்தை
தனை கூறி நல்ல நண்பன் நானேயென
நட்பாய் கரம் தருவான் !

கள்ளமில்லை கபடமில்ல வன்மமில்லை
சூழ்ச்சியில்லை, வந்த வழி மறவாத
வாய்மைதனை உதறாத, வார்த்தை யென்றும்
மாறாத அன்புச்செம்மலும் இவனே !

கரும்பாய் இனிக்குமிவன் பேச்சில்
குறும்பு மிளிர்ந்தாலும் அத்தனையும்
அக்கறையாய் அகம் நிறையசெய்யும்
விந்தை தனை என்னவென்பேன்!

முன்னொரு பொழுதினிலே
இவன் யாரோ நான் யாரோ
இற்றைய நிகழ்வினிலே
இவன் வேறோ நான் வேறோ !

உன்னில் நான் எனை கண்டேன்
என் சிந்தை உனைக்கொண்டேன்
கன்றாய் எனை தொடர்ந்திட்டாலும்
குன்றாய் என்னுள் உயர்ந்து நின்றாய !

உனைபோல் உடன் பிறபொன்றை
உடன் பிறப்பாய் அடைந்திட்டவர்
செய்த வரம் தனை நான் உணர்ந்தே  
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்

இன்னும் இன்னும் வேண்டுமக்கா என்று
சொல்லி வேண்டியே யென் எணண
மெல்லாம் கொள்ளை கொண்டு சிந்தை தனை
மயக்கிவிட்ட சின்னக்கண்ணன் இவன் அல்லவோ !

இத்தனை நாள் எங்கிருந்தாய்!
ஏன் ஓடி ஒழிந்திருந்தாய்..!
மறைந்திருந்த அன்புணர்ந்த நொடி முதலாய்
என் கண்ணில் கண்ணீராய் சொரிகின்றதே !

உனை வாழ்ந்த நான் நினைத்தால்
கண்ணீர் போல் வார்த்தைகளும்
என்னுள்ளத்தில் மழை போல்
சோவெனத்தான் பொழிகின்றதே !

எத்தனைபேர் எம் வாழ்வில்
இடை நடுவே வந்திட்டாலும்
வந்த வழி சென்றிடுவர்
சொந்தமில்லை  உணர்த்திடுவர்!

இணையாத இணையத்தின்  இதமாய்
பலர்  தொடர்ந்தாலும் என் தம்பி
இவனென்று நாடறிய எவரையுமே
நான் எங்கும் சொன்னதில்லை !

இவனன்றி இன்னொருவரில்லை!
இவன் போலே யாருமில்லை!இவனுக்கு
நிகரிவனே  மனமார்ந்து செப்புகின்றேன் !
இவனே என் தம்பி என்று !

அக்காவென அழைத்து தினம்
அகம்  நிறையச்செய்து  மனம்
தனை வென்று விட்டான்  
இவன் என் தம்பியல்லோ !

அக்காவென அழைக்கும் நொடியில்
இவன் உதிரம் என்னில் இல்லாமல்
போனதேனென ஏங்க வைப்பதை
என்ன சொல்லி புரிய வைப்பேன்!

இன்னொரு பிறப்பிருந்தால என்
உடன்பிறந்து உன் அன்பை அணுவணுவாய்
நான்  ருசிக்க அருள் வேண்டும்  
வரம் கேட்டேன் இறைவனிடம் !

உந்தன் சொந்தம் எந்தன் உயிர்
உள்ளவரை எனக்கு வேண்டும்
இறைவனிடம் யாசிக்கின்றேன்
வரம் தருவானா என் இறைவன் !

வேறேதும் எனக்கு வேண்டாம்
இந்த அன்பும் அக்கறையும்
நலமாவெனும் நல் மொழி்யையுமே  
நாள்தோறும் நாடுகின்றேன் !

மனம் கோணா மாந்தனிவன்
சினம் தனை வென்றிட்டிட்ட
பதிவுகளோ எண்பதினாயிராமாய்
தனமிருந்தாலும் கனமில்லா !

குணக்குன்று இவனன்றோ
மன்னிப்பின் சிகரமிவன்
பொறுமைதனை இறைவனிடம்
கைமாறாய் வாங்கிட்டவன் !

உனை ஈன்ற தாய் வயிறும்
உன் கரம் நடத்திய தந்தை கரமும்
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த
சான்றோன் நீ என்பதை அறிவாரோ?

நானறியேன் என்றாலும்
நானுணர்ந்து வாழ்த்துகின்றேன்..
நல்லவனே நீ வாழி!
நலலுறவே உன் பணி வாழி !

சேனைத்தமிழ் உலாகொடுத்த
சொக்கத்தங்கம் நீதானப்பா!
ஆல் போலே செழித்தோங்கி
நாணல்போலோ படர்ந்திடுவாய் !

எத்தனை தான்  வாழ்த்திட்டாலும்
எந்தன் மன உணர்வினிலே
பொங்கி நிற்கும் மகிழ்வுடனே
நலமாக நீவாழ மனமாற வாழ்த்துகின்றேன் !

நீவீர் வாழ்க! உன் குலம் வாழ்க! உன்னில்
உதித்த குருத்துக்களும் குணத்திலே
குன்றாகி புகழோடும் பொருளோடும்
தரணியிலே தழைத்தென்றும் வாழ்க !

எமக்கெல்லாம் எட்டாக்கனியாம்
எண்பதினாயிரம் எண்ணச்சிதறலகளை
எம்மில் விதைத்தவனை  எண்ணம்
போல வண்ணத்தினால் வாழ்த்துகின்றோம் !

சேனையின் சிகரமிவன் சேவையென்றும்
குன்றாது நன்றே என்றும் தொடர்ந்திடத்தான்
நயமாக வேண்டி நாமும்  நல் வார்த்தை
தனை கூறி வாழ்த்திடலாம் வாருங்களேன் !

Last edited by Nisha on Sat 9 Aug 2014 - 0:52; edited 3 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 11:01

நண்பனுக்கு கிரீடம் அணிவித்து விட்டீர்கள்
இருங்கள் வருகிறேன்..

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! X1ex5l

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by பானுஷபானா Wed 9 Jul 2014 - 11:16

வாவ் அருமை நிஷா படிக்க்ம்போதே கண்ணில் நீர் நிறைகிறது. இவரின் அன்புக்கு போட்டாபோட்டி தான் நடக்குது.....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 12:26

பானுஷபானா wrote:வாவ் அருமை நிஷா படிக்க்ம்போதே கண்ணில் நீர் நிறைகிறது. இவரின் அன்புக்கு போட்டாபோட்டி தான் நடக்குது.....

நான் என்றுமே எதற்குமே எவருடனும் போட்டி இடுவதில்லை பானு! எனக்கென இறைவன் நியமித்தது எனக்கு கிடைத்தே தீரும் எனும் அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு. அதனால் பொன்னோ, பொருளோ, உறவோ எதற்கும் போட்டி, பொறாமை கொள்வதில்லை.

நண்பனுக்க்கான வாழ்த்து நான் மனம் உணர்ந்து எழுதியது. முகம் பார்க்கா விட்டாலும் நேரில் அறியா விட்டாலும் ஒரு மனிதன் அன்றிருந்து இன்று வரை வருடக்கணக்காய் அனைவரையும் நேசிப்பவனாய் , அனைவராலும் நேசிக்கபடுபவனாய் இருக்க முடியுமா எனும் ஆச்சரியம் என்னுள் இந்த தம்பி குறித்து எழுகின்றது.

பல இணைய நட்புக்கள் போல் தெரியாதுதானே அறிய மாட்டோம் தானே என எங்களுக்கு முன் வேசம் போடலாம் நடிக்கலாம் என சொன்னாலும் இவருடன் பழகி உணர்ந்த சம்ஸ், ஹாசிம் போன்றோரே இவரை வாழ்த்தி போற்றும் போது மனிதரில் மாணிக்கம் இவர் என்பதில் ஐயமே இல்லைம்மா!

நானும் கடந்த ஐந்து வருடமாய் பலரை அறிந்து அவரவர் வேசம் உணர்ந்து மனம் கசந்து போய் இருக்கின்றேன். ஏன் இப்படி என நினைத்திருக்கின்றேன்!

சேனையில் சுற்றி படித்தேன்.. நண்பன் எனும் ஒருவருக்கு எத்தனை வாழ்த்துக்கள். தேடல்கள், வேண்டல்கள் . சேனைக்கு இவர் வரவில்லை எனில் ஏன் ஏனென காரணம் கேட்டு எத்தனை பதிவுகள்... !

எப்படி சாத்தியம் பானு?

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே

அனைவரையும் அன்பால் கட்டி அரவணைத்து தன் கவலைகள் வலியை அடுத்தவர் மேல் திணிக்காது.. எதுவுமே செய்யாதது போல் அரட்டை அடித்து கொண்டு விக்ராந்தியா வாழ ஒருவரால் முடியும் என இந்த சின்ன வயதில் நிருபித்து கொண்டிருக்கும் இந்த தம்பியை நினைத்து பெருமை தான் வருகின்றது.

நானும் பலருக்கு நல்லது செய்திருக்கின்றேன் தான். என்னையும் நல்லவ, அன்பானவ என சொன்னாலும் என் கோபமும் பட்டென மனதில் தோன்றியதை சொல்லிடும் குணமும் எனக்கும் என்றுமே எதிராய் இருப்பதை நான் அறிந்திருக்கின்றேன்.

ஆனால் நண்பனோ.. எல்லாவற்றிக்கும் விதி விலக்காய் இருக்கின்றார்.இப்படிபட்ட மாந்தர்கள் இன்னும் பூமியில் இருப்பதால் தான் பூவுலகம் இன்னும் உயிப்புடன் உள்ளது.

எனக்கு இப்படி ஒரு தம்பி கிடைத்திருந்தால் நான் இன்னும் இன்னும் எத்தனையோ சாதித்திருப்பேன். வானம் தொட்டிருப்பேன்.

எனக்கு கிடைக்கல்லை ! அதே நேரம் என் மனசில் போட்டியும் இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by பானுஷபானா Wed 9 Jul 2014 - 12:43

சும்மா தான் சொன்னேன் போட்டி என்று அதற்குள் எப்படி வரிவரியாக உண்மையை சொல்லி விட்டீர்கள்...

இப்படி ஒரு அன்புக்கு போட்டி போட்டால் கூட தப்பில்லை தானே நிஷா.

நான் யாரிடமும் வலிய போய் பழகமாட்டேன் என்னை நோக்கி வந்து பேசினால் நானும் முழு அன்போடு பேசுவேன் இது எனக்கு இயற்கையாக வந்தது.

ஆரம்பத்தில் நான் சேனை வந்த புதிதிலேயே இவர்கள் எல்லோரும் அன்பு மழை பொழிந்து விட்டார்கள். எல்லோரையும் உடனே நம்பி விடுவார்கள்.

அன்பு ஒன்று அது தான் இவர்களின் ஆயுதம்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by பானுஷபானா Wed 9 Jul 2014 - 12:43

படத்தில் தமிழில் எழுதி இருக்கலாமே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 12:48

தமிழில் எழுதினால் இந்த ரியல் ஹீரோ என்பதற்காக முழு உணர்வுப்புரிதல் வராதுப்பா..

நீங்கள் தமிழில் ஒன்றை எழுதி போடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 12:54

பானுஷபானா wrote: . எல்லோரையும் உடனே நம்பி விடுவார்கள்.

அன்பு ஒன்று அது தான் இவர்களின் ஆயுதம்...

நிஜம் தான் பானு! இறை நம்பிக்கையில் காட்டும் அதீத விசுவாதம், நம்பிக்கையை, இந்த நன்றி கெட்ட மனிதர் மேலும் காட்டி அதிகம் காயபடுத்தப்படாமல் இருக்கணும். இயல்பாகவே இவர்கள் அன்பு செலுத்துவதில், அரவனைத்து செல்வதுல், மன்னிப்பதில் , பொறுத்து, விட்டுக்கொடுத்து புரிந்துகொள்தலில் சற்று அதீதமாய் இருக்கின்றார்கள்.

எல்லோரும் நலம் வாழ நினைக்கும் இந்த தம்பிகள்” எல்லோருமே நல்லா இருக்கணும். ! )((  )(( 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by ahmad78 Wed 9 Jul 2014 - 12:59

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பன்

 *_  *_  *_  *_  *_ அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Bf-rose1

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 13:05

ahmad78 wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பன்

 *_  *_  *_  *_  *_ அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Bf-rose1

ஆமாம் வந்துட்டாரு பெரிய துரை!  (_  #* #* ))&
நான் மாங்கு மாங்கென எழுதி போட்டிருக்கேன்ல அதை பத்தி ஏதாச்சும் சொல்ல தோணுதா இந்த துரைக்கு.  ))& ))& 

எப்பவும் போல சாமியார்தான். நான் முஹைதீனுடன் ஒரு வருடத்துக்கு கோபம்.  )* )* )* )* )* )* )* )* )* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by பானுஷபானா Wed 9 Jul 2014 - 13:20

Nisha wrote:
ahmad78 wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பன்

 *_  *_  *_  *_  *_ அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Bf-rose1

ஆமாம் வந்துட்டாரு  பெரிய துரை!  (_  #* #* ))&
நான் மாங்கு மாங்கென எழுதி போட்டிருக்கேன்ல அதை பத்தி ஏதாச்சும் சொல்ல தோணுதா இந்த துரைக்கு.  ))& ))& 

எப்பவும் போல சாமியார்தான். நான் முஹைதீனுடன் ஒரு வருடத்துக்கு கோபம்.  )* )* )* )* )* )* )* )* )* 

ஹா ஹா இதுவே பெரிய விசயம் நிஷா நீங்க வந்ததிலிருந்து தான் கொஞ்சம் திருந்தி இருக்கார் இனிமே முழுதாக் திருந்துவார்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 13:27

வேண்டாத பதிவுக்கு பதில் சொல்லாமல் தப்பிக்க கண்டுக்காமல் எப்படி போவது எனும் கட்டுரை கிடைக்குதா என தேடி போடுங்க முஹைதீன்!

இதுக்கு மட்டும் பதில் வராது. நிஷா நீ பாவம் நிஷா  )* )* )* )* )* )* )* )* )* )* )* )* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by பானுஷபானா Wed 9 Jul 2014 - 13:33

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! 9026wm
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by ahmad78 Wed 9 Jul 2014 - 13:34

உண்மையில் சூப்பர்.

நிஷாவிற்கு நிகர் நிஷாதான்.

இதெற்கெல்லாமா கோவப்படுவது. 2 அடிஅடிச்சிருங்கப்பா.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 13:38

நான் கெஞ்சி கேட்ட பின்னும் வெறும் மூன்று வரியில் பதில் சொன்ன கஞ்ச மகா பிரபுவே நீர் வாழ்க! அட எழுத்தில் மட்டும் தான்பா கஞ்சன் நீங்க.. ! பாடகன் 

இந்த எழுத்தில் கஞ்சத்தனம் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தானாமே! :dance: :dance: :dance: :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 14:20

சேனையில் என்றும் டாப் வின்னராய் ஜொலிக்கும்
எங்கள் அன்பு நணபனின் 80000 பதிவுகளுக்காக
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! 847506ce-75d3-48cb-86b6-01336fa53500_zps682ec210
அறிந்தோர் அறியாதோர் எவரா
யிருந்தாலும் அரணாம் என் நட்பென்று
உணரசெய்திடவே
நண்பன்
எனும்
நாமம் தரித்தவனே நீ வாழி!

நண்பன் எனும் பெயரின் மதிப்பை இப்போது உணர்கிறேன் உணரச்செய்த என் உறவே என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்

குறுகிய நாட்களிலே குணத்தால்மனம்
ஜெயித்து பாலய நட்பு முதல் பருவ நட்பு
வரை பதமாய் அன்பு காட்டி என் உயிர்
நண்பன் இவனென போற்றபடுபவனே நீ வாழி !

இதற்கு நான் பொறுப்பல்ல
என்னைச் சுற்றியுள்ள  என் அன்பு நண்பர்களின் மனம் போல் அவர்கள் வாழ்த்தும்

உனையறியா பொழுதினிலே
உனை வாழ்த்த என்னுள்ளே
மழை போல் சொரிந்திட்ட
வார்த்தையெனும் வாழ்த்துப்பா!

என்னைப் பற்றி அறியாமலே இத்தனை வாழ்த்துக்களா
நண்பா உன்னை எண்ணி எனக்கே பொறாமையாக உள்ளது
த்ரிஷ்டி சுற்றிப் போட்டிரலாம்

உனையறிந்த  பொழுதினியே
வாழ்த்திடத்தான் வார்த்தையன்றி  
ஓடியொழிந்த மாயமென்ன
நானறியேன் அன்புறவே!

இத்தனை வாழ்த்தியும் போதலியா
என்னைக் குறித்து உங்கள் உள் மனதில்
ஊற்றெடுக்கும் அன்பை எண்ணிப்பார்க்கிறேன்

சோதரனாய் உருமாறி உணர்வுக்குள்
உயிர் கொடுத்து உலகத்து
அன்பையெல்லாம அள்ளிதந்து
என்னுள் விஸ்வரூபமானவனே !

அன்பினிலே உருவானோம்
அன்பினாலே உறவானோம்
நட்போடும் அன்போடும் பயணிப்போம்
பெருமையுடன் சொல்கிறேன்
நானும் உன் உடன் பிறப்பே

கணம் கூட சிணுங்காது, அழைக்கும்
பொழுதிலெல்லாம் தயங்காது
வாழ்க்கையெனும் சோலையிலே
விருட்சமானவனே !

உங்களுக்கிருக்கும் வேலைப்பழுக்கழுக்கும்
மத்தியில் என் மீது காட்டும் பாசத்தை மிஞ்சியதா இவைகள்
என்று அழைத்தாலும் வருவேன் உரையாட உறவாட

இல்லார்க்கு இல்லையென்றாது
அல்லலுறும் மாந்தர் துயர்
கண்டு மனம் இரங்குமிவன்  
மனிதரில் மாணிககமே !

இந்த விடயத்தில் உங்களை மிஞ்சி விட முடியுமா
நீங்கள் கொடுப்பதோ ஆயிரத்தில் பத்து
நான் கொடுப்பதோ ஆயிரத்தில் இரண்டு
இரண்டு பெரிதா பத்துப் பெரிதா ம்ம்

அக்கரையில் மனம் கவரும் நாயகனாய்
சுட்டித்தனம் செய்திட்டதை குட்டி
குழந்தை போலே சுட்டும் எங்கள்
செல்ல அப்புக்குட்டியும் இவனே !

எத்தனை நாள் காத்திருநது
இத்தனை பெரிய ரகசியத்தை
போட்டு உடைத்தீர்கள்!
பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள்
பலபேர் அறிந்து விட்டார்கள்
சிதம்பர ரகசியத்தை

வெட்டிக்கதை பேசி வீணாய் போகாது
பாங்காய் நயம்படவுரைத்து நல்வார்த்தை
தனை கூறி நல்ல நண்பன் நானேயென
நட்பாய் கரம் தருவான் !

சேனை உறவுகள் எனக்கு கரம் தந்தார்கள்
நல்ல நண்பனாக என்னையும் ஏற்றார்கள்
அனைவருக்கும் நன்றிகள்.
.

கள்ளமில்லை கபடமில்ல வன்மமில்லை
சூழ்ச்சியில்லை, வந்த வழி மறவாத
வாய்மைதனை உதறாத, வார்த்தை யென்றும்
மாறாத அன்புச்செம்மலும் இவனே !

உங்கள் பெரிய மனசுக்கு நீங்கள் சொல்லுவீர்கள்
அதற்கு நான் தகுதியாக மாற வேண்டும் மாறுவேன்.

கரும்பாய் இனிக்குமிவன் பேச்சில்
குறும்பு மிளிர்ந்தாலும் அத்தனையும்
அக்கறையாய் அகம் நிறையசெய்யும்
விந்தை தனை என்னவென்பேன்!

எல்லாப்புகழும் இறைவனுக்கே

முன்னொரு பொழுதினிலே
இவன் யாரோ நான் யாரோ
இற்றைய நிகழ்வினிலே
இவன் வேறோ நான் வேறோ !

அது நட்பு இல்லாவிடின்
வாழ்க்கை வெறும் காகிதமே
வாழ்க்கை என்பது நாம் சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நாம் வாழும் வரை
இன்னும் முயற்சிப்பேன் நன்றியுள்ள நண்பன்.

உன்னில் நான் எனை கண்டேன்
என் சிந்தை உனைக்கொண்டேன்
கன்றாய் எனை தொடர்ந்திட்டாலும்
குன்றாய் என்னுள் உயர்ந்து நின்றாய !

உயர்ந்த உங்கள் உள்ளம் வாழ்க
தன்னை விட தன் சகோதரனின்
உயர்வை விரும்ப்பும் சகோதரியே
உன் மனம் போல் வாழ்க

உனைபோல் உடன் பிறபொன்றை
உடன் பிறப்பாய் அடைந்திட்டவர்
செய்த வரம் தனை நான் உணர்ந்தே  
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்

உங்களையே நீங்கள் வணங்கிக்கொள்ளுங்கள்
நீங்களும்தான் என் உடன் பிறப்பு

இன்னும் இன்னும் வேண்டுமக்கா என்று
சொல்லி வேண்டியே யென் எணண
மெல்லாம் கொள்ளை கொண்டு சிந்தை தனை
மயக்கிவிட்ட சின்னக்கண்ணன் இவன் அல்லவோ !

கரும்பு தின்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்
உங்கள் வாழ்த்தும் அப்படித்தான்
கரும்பு சாப்பிடுவது போன்று
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்.

இத்தனை நாள் எங்கிருந்தாய்!
ஏன் ஓடி ஒழிந்திருந்தாய்..!
மறைந்திருந்த அன்புணர்ந்த நொடி முதலாய்
என் கண்ணில் கண்ணீராய் சொரிகின்றதே !

இப்படியெல்லாம் எழுதி என் கண்ணிலும்
ஆனந்தக்கண்ணீர் வரவைத்து விட்டீர்கள்
என் பாசமுள்ள அக்கா  ❤  ❤ 

உனை வாழ்த்த நான் நினைத்தால்
கண்ணீர் போல் வார்த்தைகளும்
என்னுள்ளத்தில் மழை போல்
சோவெனத்தான் பொழிகின்றதே !

இப்போதே தெரிகிறதே
உங்கள் வாழ்த்து மழையில்
நனைந்து கொண்டுதான் இருக்கிறேன்

எத்தனைபேர் எம் வாழ்வில்
இடை நடுவே வந்திட்டாலும்
வந்த வழி சென்றிடுவர்
சொந்தமில்லை  உணர்த்திடுவர்!

உங்களைப்போன்ற அன்பு உள்ளத்தை
உறவாக்க கொடுத்து வைத்திருக்கனும்
அந்த பாக்கிய சாலி நானாவேன்.

இணையாத இணையத்தின்  இதமாய்
பலர்  தொடர்ந்தாலும் என் தம்பி
இவனென்று நாடறிய எவரையுமே
நான் எங்கும் சொன்னதில்லை !

இப்போது உலகறிய நான் சொல்லுவேன்
நிஷாதான் என் உடன் பிறப்பு
நிஷா தான்  என் அக்கா.. இணையாக இணையத்தில்
நாம் என்றும் இணைந்த உறவுகள்

இவனன்றி இன்னொருவரில்லை!
இவன் போலே யாருமில்லை!இவனுக்கு
நிகரிவனே  மனமார்ந்து செப்புகின்றேன் !
இவனே என் தம்பி என்று !

இன்றைய உலகில் உங்களைப் போல் கண்டதில்லை!
தான் மாத்திரம் மகிழாது பிறரையும் மகிழ்வித்து
தானும் தன்னைச் சார்ந்தோரும் பார்போற்ற
வாழ்வழித்த கொடை வள்ளல் நீங்கள்
சுக்காணி இல்லாத கப்பலைப்போல் தடுமாறிய
உள்ளங்களை சிந்தனை சிற்பியாக மாற்றி
சிறப்பான வாழ்வழித்த என் அன்புறவே
நீதான் என் அக்கா என்றும் என் அன்பும் மகிழ்வும்

அக்காவென அழைத்து தினம்
அகம்  நிறையச்செய்து  மனம்
தனை வென்று விட்டான்  
இவன் என் தம்பியல்லோ !

நிச்சியமாக நான் உன் தம்பிதான் அக்கா

அக்காவென அழைக்கும் நொடியில்
இவன் உதிரம் என்னில் இல்லாமல்
போனதேனென ஏங்க வைப்பதை
என்ன சொல்லி புரிய வைப்பேன்!

உள்ளத்தால் உருகச்செய்து விட்டாய் அக்கா
இவன் என்றும் உன் பாசம் நிறைந்த தம்பிதான்.

இன்னொரு பிறப்பிருந்தால என்
உடன்பிறந்து உன் அன்பை அணுவணுவாய்
நான்  ருசிக்க அருள் வேண்டும்  
வரம் கேட்டேன் இறைவனிடம் !

எல்லாப்புகழும் இறைவனுக்கே
ஏன் இன்னொரு பிறப்பு இதுவே
நமக்கு இறைவன் கொடுத்த சிறப்பு
நாம் என்றும் உடன் பிறப்பே

உந்தன் சொந்தம் எந்தன் உயிர்
உள்ளவரை எனக்கு வேண்டும்
இறைவனிடம் யாசிக்கின்றேன்
வரம் தருவானா என் இறைவன் !

உங்களை எனக்கு உறவாகத் தந்த அந்த
இறைவனுக்கு என்றும் நான் அடிமை
இது நிலைக்க இறைவன் துணை

வேறேதும் எனக்கு வேண்டாம்
இந்த அன்பும் அக்கறையும்
நலமாவெனும் நல் மொழி்யையுமே  
நாள்தோறும் நாடுகின்றேன் !

இன்று போல் என்றும் அன்பாய் பயணிப்போம்
என்றும் நன்றியுள்ள தம்பியாய் உன் உறவாய்
தரணியில் நானிருப்பேன்

மனம் கோணா மாந்தனிவன்
சினம் தனை வென்றிட்டிட்ட
பதிவுகளோ எண்பதினாயிராமாய்
தனமிருந்தாலும் கனமில்லா !

உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களுக்கு மத்தியில்
இதெல்லாம் சாதாரணம் இந்த உறவு நீடிக்கும் போது
பல லட்சங்கள் காண்பீர்கள் நன்றியுடன்.

குணக்குன்று இவனன்றோ
மன்னிப்பின் சிகரமிவன்
பொறுமைதனை இறைவனிடம்
கைமாறாய் வாங்கிட்டவன் !

எல்லாப்புகழும் இறைவனுக்கே
மறப்போம் மன்னிப்போம்
சொற்ப கால வாழ்க்கை
மகிழ்வோடு வாழ்வோம்

உனை ஈன்ற தாய் வயிறும்
உன் கரம் நடத்திய தந்தை கரமும்
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த
சான்றோன் நீ என்பதை அறிவாரோ?

தன் மகனுக்கு கிடைத்த உன்னத உறவொன்றை
என் அப்பாவிடம் சொல்ல என்னால் முடியாது
இப்போது என் தந்தை மண்ணறையில் இறையடியில்
என் தாயிடம் சொல்வேன் அம்மா உனக்கு இன்னொரு மகள்
உண்டென்று

நானறியேன் என்றாலும்
நானுணர்ந்து வாழ்த்துகின்றேன்..
நல்லவனே நீ வாழி!
நலலுறவே உன் பணி வாழி !

உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களுக்கு மத்தியில்
நான் வாழும் போது எனக்கென்ன கவலை
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்.

சேனைத்தமிழ் உலாகொடுத்த
சொக்கத்தங்கம் நீதானப்பா!
ஆல் போலே செழித்தோங்கி
நாணல்போலோ படர்ந்திடுவாய் !

இப்படியெல்லாம் அன்பை அள்ளிச்சொர்ந்தால்
என்னால் தாங்க முடிய வில்லை என்னுறவே
கண்ணீ்ருடன் உன் அன்புத்தம்பியிவன்

எத்தனை தான்  வாழ்த்திட்டாலும்
எந்தன் மன உணர்வினிலே
பொங்கி நிற்கும் மகிழ்வுடனே
நலமாக நீவாழ மனமாற வாழ்த்துகின்றேன் !

பட்டம் பதவி பணம்காசு இவைகள் எதுவும் வேண்டாம்
இது போன்ற அன்பே போதும் உலகில் செல்வம் செழிக்கும்
உங்கள் அன்பிற்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்

நீவீர் வாழ்க! உன் குலம் வாழ்க! உன்னில்
உதித்த குருத்துக்களும் குணத்திலே
குன்றாகி புகழோடும் பொருளோடும்
தரணியிலே தழைத்தென்றும் வாழ்க !

என்றும் இறைவன் உதவியும்
உங்கள் ஆசியும் எங்களுக்குத் தேவை
நன்றியுள்ள தம்பியாய் இருப்பேன்.

எமக்கெல்லாம் எட்டாக்கனியாம்
எண்பதினாயிரம் எண்ணச்சிதறலகளை
எம்மில் விதைத்தவனை  எண்ணம்
போல வண்ணத்தினால் வாழ்த்துகின்றோம் !

வாழ்த்து மழையில் நனைந்து
உள்ளம் குளிர்ந்து ஆனந்தக்கண்ணீரில்
நன்றி சொல்லிக்கொள்கிறேன்
..

சேனையின் சிகரமிவன் சேவையென்றும்
குன்றாது நன்றே என்றும் தொடர்ந்திடத்தான்
நயமாக வேண்டி நாமும்  நல் வார்த்தை
தனை கூறி வாழ்த்திடலாம் வாருங்களேன் !

தானும் வாழ்த்தி அடுத்தவரையும் வாழ்த்துரைக்க அழைத்த
என் அன்புறவே உன் உள்ளம் போல் நீ என்றும் உடல் ஆரோக்கியத்துடன்
வாழும் காலமெல்லாம் மகிழ்வோடு வாழ வேண்டும் அதற்கு எல்லாம் வல்ல இழறவன் அருள் புரிய வேண்டும்..
என்றும் மாறா அன்புடன் தம்பி..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 15:01

நிஷா அக்காவின் கவிதை என்னையும் கண்ணீரில் விட்டு மாமனிதர்கள் பூமியில் வாழ்ந்து வந்தனர் அவர்களில் இங்கு நிஷா,நண்பன்,பானு,அஹமத் உள்ளனர் என்று என் மனம் பாராட்டியது..

நான் பொதுவாக பலரின் அன்பையும்,நட்பையும் பெரிதும் எதிர்ப்பார்ப்பவன்..
அதனால் ஏனோ! மற்றவரின் பாராட்டு..என்னுள் பொறாமையே கொடுக்கும்..
ஆனால் இன்று பழகிய குறுகிய மாதத்தில் நிஷா அக்காவின் தெளிவான நண்பன் அண்ணாவை பற்றி எழுதியதை பார்த்தவுடன் இதற்கு சொந்தக்காரர் என் அண்ணன் தான் என்று மனம் பாராட்டியது..

பல சொந்தங்கள் பலர் என்னில் இருந்தாலும் இங்கு ஒரே குடும்பமாக  சேனையில் சொந்தங்கள் காண்பது என் கண்ணில் ஆனந்தகண்ணீர் சொரிக்குது..
சேனையில் அயராது பலவகையில் சேவையில் சிறந்த என் அண்ணனுக்கு
நிஷா அக்காவின் பாமாலை மிகவும் சிறப்பு..

வாழ்த்துக்கள் நண்பன் அண்ணா..நீங்கள் பல பில்லியன் பதிவுகள் இடுங்கள்..
நாங்கள் தொடர்ந்து வருகிறோம் வண்டுக்களாக..
நன்றி உங்கள் அன்பிற்கும்,நட்பிற்கும்....

என் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பன் அண்ணா..
நன்றிகள் நிஷா அக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Muthumohamed Wed 9 Jul 2014 - 20:32

வாழ்த்துக்கள் நண்பன் சார் சேனைக்காக வேண்டிய உங்களின் அர்பணிப்புக்கு மிக்க நன்றிகள் சார்

நான் 80000 பதிவுகள் பதியவேண்டும் என்றால் இன்னும் பல வருடங்கள் ஆகும் போல் தெரிகிறது

அருமையான வாழ்த்து கவிதை மிக்க நன்றி நிஷா அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 20:34

அனுராகவன் wrote:நிஷா அக்காவின் கவிதை என்னையும் கண்ணீரில் விட்டு மாமனிதர்கள் பூமியில் வாழ்ந்து வந்தனர் அவர்களில் இங்கு நிஷா,நண்பன்,பானு,அஹமத் உள்ளனர் என்று என் மனம் பாராட்டியது..

நான் பொதுவாக பலரின் அன்பையும்,நட்பையும் பெரிதும் எதிர்ப்பார்ப்பவன்..
அதனால் ஏனோ! மற்றவரின் பாராட்டு..என்னுள் பொறாமையே கொடுக்கும்..
ஆனால் இன்று பழகிய குறுகிய மாதத்தில் நிஷா அக்காவின் தெளிவான நண்பன் அண்ணாவை பற்றி எழுதியதை பார்த்தவுடன் இதற்கு சொந்தக்காரர் என் அண்ணன் தான் என்று மனம் பாராட்டியது..

பல சொந்தங்கள் பலர் என்னில் இருந்தாலும் இங்கு ஒரே குடும்பமாக  சேனையில் சொந்தங்கள் காண்பது என் கண்ணில் ஆனந்தகண்ணீர் சொரிக்குது..
சேனையில் அயராது பலவகையில் சேவையில் சிறந்த என் அண்ணனுக்கு
நிஷா அக்காவின் பாமாலை மிகவும் சிறப்பு..

வாழ்த்துக்கள் நண்பன் அண்ணா..நீங்கள் பல பில்லியன் பதிவுகள் இடுங்கள்..
நாங்கள் தொடர்ந்து வருகிறோம் வண்டுக்களாக..
நன்றி உங்கள் அன்பிற்கும்,நட்பிற்கும்....

என் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பன் அண்ணா..
நன்றிகள் நிஷா அக்கா...

உங்கள் அன்பிற்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன் ராகவன்
அருமையான உங்கள் கருத்துக்கு எனது பாராட்டுக்கள்.. ❤  ❤ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 20:40

Muthumohamed wrote:வாழ்த்துக்கள் நண்பன் சார் சேனைக்காக வேண்டிய உங்களின் அர்பணிப்புக்கு மிக்க நன்றிகள் சார்

நான் 80000 பதிவுகள் பதியவேண்டும் என்றால் இன்னும் பல வருடங்கள் ஆகும் போல் தெரிகிறது

அருமையான வாழ்த்து கவிதை மிக்க நன்றி நிஷா அக்கா
உங்கள் வாழ்த்துக்கு நன்றி )( )( 
முன்பு நீங்கள் காட்டிய ஆர்வம் இப்போதும் காட்டினீர்கள் என்றால் ஒரு வருடம் போதும் ஒரு லட்சம் பதியலாம் தொடர்ந்து வர முடிந்தால் வாருங்கள் உறவே )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 20:52

முதல் பக்கம் பானுவும் முஹைதினும் வாழ்த்தி இருக்காங்களே அவர்களுக்கு நன்றி கிடையாதோ நண்பன் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 21:00

அப்புறம் நான் எழுதிய வாழ்த்துக்கு உங்கள் பின்னூட்டம் கண்டேன் ப்பா ! நான் எதிர்பார்க்காத என் மனம் நிறைந்த பதில்களை ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனியே பின்னூட்டமாய் இட்டிருக்கின்றீர்கள்.

உங்களில் இந்த குணம் உங்களிடம் மட்டுமே காணக்கூடிய சிறப்பு. எத்தனை வேலைகள் இருந்தாலும் ஒருவர் வாழ்த்திடும் போது அவ்வாழ்த்தை முழுமையாக உள் வாங்கி உணர்ந்து நன்றி செலுத்துவது எல்லோராலும் முடிவதில்லை என்பதை விட பலர் கண்டுப்பதில்லை.

இதிலும் நீங்கள் வெரி வெரி கிரெட்ப்பா. சின்ன சின்ன விடயங்களை கூட உன்னிப்புடன் கவனித்து அவரவர் குணாதிசயம் புரிந்து அவர்களுக்கு ஏற்ப உறவு சொல்லி அழைப்பது இன்னொரு சிறப்பு.

உங்களிடம் காணும் சிறப்புக்களை பட்டியல் இடபோனால் இன்றும் முழு நாள் காணாது. மீதியை இன்னொரு ஆயிரம் பதிவுக்காய் சேமித்து வைக்கின்றேன் தும்பி!

உங்கள் அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 21:01

Nisha wrote:முதல் பக்கம் பானுவும் முஹைதினும் வாழ்த்தி இருக்காங்களே அவர்களுக்கு நன்றி கிடையாதோ நண்பன் சார்?
இப்போது உள்ளவர்களை இணைத்துக்கொண்டேன்
புரிதலுக்கு நன்றி அக்கா  )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:06

நண்பன் wrote:
Nisha wrote:முதல் பக்கம் பானுவும் முஹைதினும் வாழ்த்தி இருக்காங்களே அவர்களுக்கு நன்றி கிடையாதோ நண்பன் சார்?
இப்போது உள்ளவர்களை இணைத்துக்கொண்டேன்
புரிதலுக்கு நன்றி அக்கா  )( 
 சூப்பர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 21:09

இந்த விடயத்தில் உங்களை மிஞ்சி விட முடியுமா?

நீங்கள் கொடுப்பதோ ஆயிரத்தில் பத்து
நான் கொடுப்பதோ ஆயிரத்தில் இரண்டு
இரண்டு பெரிதா பத்துப் பெரிதா ம்ம்

இதென்ன கேள்வி  ஆயிரத்தில் இரண்டு தான்  பெரிதென்ன  ஒன்றாம் கிளாஸ் படிக்கும் உங்க  வீட்டு பிஸ்தா சார் கூட சொல்வாரே.

அதையே என் மருமகளிடம் கேட்டால்  இந்த அப்பாவுக்கு கணக்கே சரியாத்தெரியல்லை... ஆயிரத்தில் இரண்டு ஐந்தூறு  அப்பான்னும். ஆயிரத்தில் பத்து  நூறுன்னும்  உங்க தலையில் கொட்டியே சொல்லித்தருவாள்.

நீங்களே சொல்லிருங்க.. ஆயிரத்தில் பத்து சின்னதுதானேப்பா! :dance:  ஆயிரத்தில் இரண்டு தான் பெரிது.  ): 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum