சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Today at 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

கைம்பெண்கள் உலகெங்கிலும் சுமைதாங்கிகளாக இருக்கிறார்கள் Khan11

கைம்பெண்கள் உலகெங்கிலும் சுமைதாங்கிகளாக இருக்கிறார்கள்

Go down

கைம்பெண்கள் உலகெங்கிலும் சுமைதாங்கிகளாக இருக்கிறார்கள் Empty கைம்பெண்கள் உலகெங்கிலும் சுமைதாங்கிகளாக இருக்கிறார்கள்

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 9:54

கைம்பெண்கள் உலகெங்கிலும் சுமைதாங்கிகளாக இருக்கிறார்கள்
உலகின் கைம்பெண்கள் தினம் நேற்று நினைவு கூரப்பட்டது. உலகெங்கிலும் பரந்து வாழ்ந்து வரும் மக்களின் ஜீவாதாரமாக வும், நாடித்துடிப்பாகவும் விளங்கி, மனிதகுலம் மென்மேலும் தழைத்தோங்குவதற்கு பின்னணியிலிருந்து உந்துசக்தியாக திகழ்வது தாய்க்குலம் என்று கூறினால் எவரும் அது ஒரு தவறான கூற்று என்று எதிர்த்து வாதாடமாட்டார்கள்.

இதனால்தான் பெண்களை இல்லத்தரசி என்று எல்லோரும் அதியுன்னத கெளரவத்துடன் அழைக்கிறார்கள். இல்லத்திற்கு அரசியாக விளங் கும் ஒரு பெண் குடும்பம் என்ற கட்டுக்கோப்பின் முதுகெலும்பாக இருக்கிறார்.

ஆண்கள் மட்டுமே உள்ள ஒரு குடும்பத்தில் ஒற்று மையோ, சகோதர உணர்வோ, சீரான வாழ்க்கையோ மிகக் குறைவா கவே இருக்கும். அதற்கு காரணம் பெண்கள் தங்கள் அன்பாலும், அரவணைப்பாலும் குடும்ப அங்கத்தவர்களிடையே பாசத்தையும், அன்பையும் ஒருவர் பால் மற்றவர் கொண்டிருக்கும் மதிப்பையும் பெருக்குவதற்கு வாழ்நாள் பூராவும் பாடுபட்டு வருவதாகும்.

தாய் இல்லாமல் தந்தையின் பராமரிப்பில் மாத்திரம் உள்ள பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றியடைந்து நற்குலசீலராக மாறி, நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சாதனைகள் பொதுவாக மிகவும் குறைவா கவே இருப்பதுண்டு. ஆனால், சிறுவயதிலேயே தந்தையை இழந்து, தனித்து தாயின் பராமரிப்பின் கீழ் வாழும் பிள்ளைகள் வாழ்க்கை யில் உச்ச நிலைக்கு வந்து, தாய்க்குலத்திற்கே பெருமை தேடித் தரு வதுண்டு.

இதனால் தான் மக்களின் நல்வாழ்வுக்கும் கட்டுக்கோப்புடனான ஒரு குடும்பத்தின் நிர்வாகத்திற்கும் பின்னணியில் ஒருபெண் இருக்கிறார் என்று கூறுவார்கள். அதுபோன்று வாழ்க்கையில் சகல அதிகாரங் களையும், செல்வாக்கையும் பெற்றுள்ள ஒருவரை பார்த்து, இவரது வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறி, அவரது மனைவியின் புகழ்பாடும் நிகழ்வுகள் பலவற்றை நாம் எங்கள் சொந்த வாழ்க்கையிலேயே அவதானித்திருக்கிறோம்.

இவ்விதம் உன்னத நிலையில் இருக்கும் பெண்கள் ஏதோ ஒரு காரணத் திற்காக கைம்பெண்களாகி பூவையும், குங்குமப்பொட்டையும் இழக் கும் போது, இந்து மத சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த கைம் பெண்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட கெளரவமும், மதிப்பும் குறை ந்துவிடுவதுண்டு. இதனால், அப்பெண்ணின் மகன் அல்லது மகள் திருமணம் செய்து கொள்ளும் புனித தினத்திலும், அவர்களின் தாயா ருக்கு அந்த திருமண வைபவத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுவ தில்லை. அந்த பெண் அந்த நிகழ்வில் ஒரு மூலையில் நின்று கொணடு தனது பிள்ளைகளின் திருமணத்தை தூரத்தில் நின்று பார் த்து ஆனந்தக் கண்ணீர் வடிப்பதுமுண்டு.

இத்தகைய இந்துமத சம்பிரதாயங்கள் இப்போது பெருமளவில் நடை முறையில் இருப்பதில்லை. என்றாலும் ஒருதாய் தனது பிள்ளைகளின் மங்கள நிகழ்ச்சியில் கைம்பெண்ணாக தான் முன்னின்று நடத்து வதை பெருமளவில் தவிர்த்துக் கொள்வதுமுண்டு.

இன்று உலகில் 245 மில்லியனுக்கும் அதிகமான கைம்பெண்கள் இருக்கி றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கடுமையான வறுமையின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக உள்ளூரில் நடைபெறும் ஆயு தப் போராட்டங்கள், இரு நாடுகளிடையிலான யுத்தம் போன்ற பல தரப்பட்ட அனர்த்தங்களின் போது, முதன் முதலில் எதிரிகள் ஆண் களை குறி வைத்து அழித்துவிடுவதனால் அவர்களின் மனைவிமார் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விதவைகளாக மாறி சமூகத்திற்கு ஒருபெரும் சுமையாகி விடுகிறார்கள்.

ஒரு பெண் இவ்விதம் கைம்பெண்ணாக காலத்தின் கோரத்தினால், மாறி விடும் போது, அவள் விரும்பியோ, விரும்பாமலோ குடும்பத் தலை விகளின் சுமையை தாங்கி தன் பிள்ளைகளை அரவணைத்து வளர்க் கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

இலங்கையில் சுனாமி அனர்த்தத்தினாலும், ஆயுதப் போராட்டங்களினா லும் பல்லாயிரக் கணக்கான இளம் பெண்கள் கைம்பெண்களாகி வாழ் க்கையில் துன்பத்தில் மூழ்க்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங் கமோ, அரச சார்பற்ற அமைப்புகளோ அல்லது சமூக அமைப்பு களோ குறிப்பிடத்தக்க அளவில் பெரிதாக உதவிகள் செய்வதில்லை. சுனாமியினாலும், வன்முறைகளாலும் இவர்களில் பெரும்பாலான கைம் பெண்கள் இன்று தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும், வீடு களையும் இழந்து குடிசை வாழ்க்கை வாழக்கூடிய நிலைக்குத் தள் ளப்பட்டிருக்கிறார்கள்.

இதனால், சில கைம்பெண்கள் தவறான வழியில் சென்று குடும்பத்திற் கான வருமானத்தை தேடி பிள்ளைகளை காப்பாற்றி வளர்க்கும் அவல நிலைக்கும் தள்ளப்படுவதுண்டு. இன்று, அரசாங்கம் அவர்க ளுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு பரந்த அடிப்படையில் உதவிகளை செய்வதுடன் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுக்க உதவுமுகமாக சுயவேலை திட்டங்களை மேற்கொள்வதற் காக அவர்களுக்கு நிதி உதவியையும் வழங்கி வருகிறது.

இத்தகைய உதவிகள் கைம்பெண்களின் வாழ்க்கையில் மீண்டும் மறு மலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு ஒரு வகையில் உதவினாலும், இந்த பெண்கள் கைம்பெண்கள் என்ற வகையில் பல விடயங்களின் போது, ஓரளவுக்கு ஓரங்கட்டப்படுவதை நாம் மறுக்கமுடியாது.

சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் ஊடாக கைம்பெண்களை அனை த்து பாகுபாடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்கு தாங்கள் செயற்படப் போவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரிகள் உறுதியளித் திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒரு கூற்றாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum